Wednesday, November 4, 2009

பதிவர் சந்திப்பு - மழை மனதுக்குள் மட்டும்..

இப்போதுதான் அந்த மழைச்சந்திப்பு நடந்தது போல இருக்கிறது. அந்த மழையின் ஈரம் காயுமுன்னர் இதோ அடுத்தது வந்துவிட்டது. மழையில் நனைந்துகொண்டே நட்பு கொண்டாடுவதுதான் கடினம். ஒரு கோப்பை தேநீருடன் மழையை ரசித்துக்கொண்டே நட்பு கொண்டாட கசக்குமா என்ன.?

கூடுதல் நிகழ்ச்சியாக இயக்குனர் ஷண்முகப்பிரியன் தனது சினிமா அனுபவங்களை நம்முடம் பகிர்ந்துகொள்ள இருக்கிறார். மற்றொரு முக்கிய கலந்துரையாடலும் இருக்கிறது (என்னன்னு என்னைக் கேட்காதீர்கள். சஸ்பென்ஸாம்.. எனக்கும் தெரியாது. ஏற்பாடுகளைக் கவனித்துக்கொண்டிருக்கும் கேபிள்சங்கருக்கே தெரியாதுன்னா பார்த்துக்கங்களேன்).

தவறாது கலந்துகொள்ளுங்கள். விபரங்கள் கீழே..

சந்திப்பு நாள் : 07/11/09 சனிக்கிழமை மாலை 5.00 – 7.30
இடம் : Discovery Book Palace
No. 6. Mahaveer Complex
1st Floor, Munusamy salai,
West K.K. Nagar, Chennai-78


Ph; 65157525
Nearest Landmark : பாண்டிச்சேரி ஹவுஸ்

மேலும் உதவிக்கு :
பாலபாரதி: 9940203132
கேபிள் சங்கர் :9840332666
தண்டோரா :9340089989
நர்சிம் :9841888663
அகநாழிகை பொன்.வாசுதேவன்:9994541010
முரளிகண்ணன் :9444884964

.
(அப்டேட் : 07.11.09 காலை 10.30)

கடும் மழை காரணமாக மேற்கண்ட செய்தியில் திட்டமிடப்பட்ட பதிவர் சந்திப்பு கேன்சல் செய்யப்பட்டுள்ளது)
.

14 comments:

கார்க்கி said...

ஆளு எங்கிருக்கார்னே தெரியல. ஆனா சந்திப்புனா ஆஜர் ஆயிடறாரு.. முரளிக்கண்ணன சொல்றேன்

பரிசல்காரன் said...

சென்னை ஒழிக!

ஸ்ரீமதி said...

:))ம்ம்ம் நடத்துங்க நடத்துங்க...

அ.மு.செய்யது said...

// பரிசல்காரன் said...
சென்னை ஒழிக!
//

வழிமொழிகிறேன்.

பதிவர் சந்திப்பு நாள் அன்னிக்கு மட்டும்.

LOSHAN said...

வாழ்த்துக்கள்.. :)

புதுகைத் தென்றல் said...

சென்னை ஒழிக!//

எனக்கும் வயித்தெரிச்சலாத்தான் இருக்கு.
ஏதோ அவுங்களாவது சந்தோஷமா இருந்தா சரி

பிரியமுடன்...வசந்த் said...

கிருஷ்ணா அண்ணே சொன்னமாதிரியே

வாழ்த்துக்கள் பதிவர்கள் சந்திப்பில் கலந்து கொள்ளும் அனைவருக்கும்...

ஊடகன் said...

வந்துடுறோம்........

டம்பி மேவீ said...

varen...mudinthaal

எம்.எம்.அப்துல்லா said...

ஏன்டா கார்க்கி, பீச்சுலயே இருந்திருக்கலாமோ??

:))

துபாய் ராஜா said...

சென்னைப்பதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்...

ஆதிமூலகிருஷ்ணன் said...

அனைவருக்கூம் நன்றி. வாய்ப்பிருப்பவர்கள் கண்டிப்பாக வாருங்கள், சந்திக்கலாம்.!

பரிசல் : நீங்க மட்டும் அடிக்கடி மலை/காடுன்னு சுத்துறீங்களே, அதுக்கு என்னான்னு சொல்றது.?

ஆதிமூலகிருஷ்ணன் said...

பின்னூட்டம் ஃபாலோ செய்பவர்களுக்காக ஒரு செய்தி.

பதிவில் நீங்கள் கண்ட.. நிகழவிருந்த பதிவர் சந்திப்பு கடும் மழை காரணமாக கேன்சல் செய்யப்பட்டுள்ளது.

KaveriGanesh said...

பதிவர் சந்திப்பு ரத்தும், நான் எடுத்த புகைப்படங்களும்
என்ற‌ என்னுடைய‌ ப‌திவை ப‌டிக்கவும்.

http://kaveriganesh.blogspot.com