Friday, November 6, 2009

கல்யாணம் பண்ணிக்கோங்க.!

முதலில் கல்யாணம் என்பது ரொம்ப அவசியமான ஒன்றுதானா? என்பதைப்பார்ப்போம்.

1. ஆம்

2. இல்லை

3. வேறு ஆப்ஷன் இல்லாததால் இருந்துவிட்டு போகட்டும்

இவ்வாறு கல்யாணமான ஒவ்வொருவரும் ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு ப‌திலைச் சொல்கிறார்க‌ள். ஆனால் க‌ல்யாண‌ம் ஆகாத‌வ‌ர்க‌ளோ ஒருவித‌ ம‌ய‌க்க‌த்துட‌ன் எப்போதும் "ஆம்" என்றே சொல்கிறார்க‌ள். (எவ்வ‌ள‌வு எடுத்துச் சொன்னாலும் புரிந்து கொள்ள‌மாட்டேன்கிற‌துக‌ள்) .

ஒரு ந‌ண்பன் (கண்ணன் அல்ல) ஒருவ‌ன் அவ‌ன் க‌ருத்தாக‌வோ அல்ல‌து விவாத‌த்திற்காக‌வோ ஒரு கேள்வியை அடிக்க‌டி கேட்ப‌துண்டு. அது 'க‌ல்யாண‌த்தினால் உருப்ப‌டியான‌ இர‌வுக‌ளைத் த‌விர ஏதாகிலும் ப‌ய‌னுண்டா?'

நான் கீழே ஒரு சாம்பிள் லிஸ்ட் த‌ருகிறேன், பாருங்க‌ள்.

புத்த‌க‌ங்க‌ள், நட்பு, ஹோட்ட‌ல், சினிமா, ஷாப்பிங், ப‌ய‌ண‌ம், காத‌ல், அழ‌குண‌ர்ச்சி, ச‌மைய‌ல், வ‌ண்ண‌ங்க‌ள், எண்ண‌ங்க‌ள், சோம்ப‌ல், தூக்க‌ம், இசை, பொறுமை, க‌ட‌வுள், சிரிப்பு, ஒழுங்கு, வேக‌ம், ச‌த்த‌ம், முத்த‌ம், ப‌ண‌ம், ப‌ய‌ம், தைரிய‌ம், வெட்க‌ம், உற‌வுக‌ள், உண‌ர்வுக‌ள், உண‌வுகள்.. என‌ இது நீண்டுகொண்டே போகிற‌து. இத்தனையையும் பற்றிய இருவரது கருத்துக்களும் மோதவேண்டிய களமே திருமணம். (என்ன‌டா சொல்ல‌ வ‌ர்ரே.. ரித‌மிக்கா லிஸ்ட் போட்டுட்டா ஆச்சா?..ங்கிறீங்க‌ளா. ஒன்றிரண்டை விளக்க அனுமதியுங்கள்).

*டிவியில் 'மதுரக்கார மச்சானுக்கு ஜாஸ்திதான்.. மஸ்து ஜாஸ்திதான்..' என்ற பாடல் ஓடிக்கொண்டிருக்கும் போது திடீரென 'எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டுங்க இது..' என்பாள். நீங்கள் என்ன செய்வீர்கள்?

*ஒரு ச‌ம‌ய‌ம் 'டூவீலரில் வ‌ர‌முடியாது, முதுகு வ‌லிக்கும். ஆட்டோ வேண்டாம், வீண்செல‌வு. ப‌ஸ்ஸில் வேண்டாம், ரொம்ப‌ கூட்டமாயிருக்கும்' என்பாள். பிறிதொரு ச‌ம‌ய‌ம் 'வீடுவீடுன்னே கிட‌க்கிறேனே.. எங்காவ‌து கூட்டிப்போயிருக்கீங்க‌ளா..?' என்பாள் நான்குபேர் இருக்கும் போது.

*'ஹோட்ட‌ல் சாப்பாடே வேண்டாம். ஹைஜீனிக் இல்லை' என்பாள். நீங்க‌ள் உள்ளூர‌ ம‌கிழ்வீர்க‌ள். ஆனால் உடல் ந‌ல‌மில்லாம‌ல் போகும்போதும், ப‌ய‌ண‌ங்க‌ளின் போதும் தெரியும் சேதி. ஒரு நாள் அவளுக்கு உட‌ல் ந‌ல‌மில்லாம‌ல் இருக்கையில் நீங்க‌ள் மிக்ஸியில் தேங்காய் அரைத்துக் கொண்டிருப்பீர்க‌ள். (சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் மூடி சரியாக நிற்காம‌ல், முக‌மெங்கும் பாதி அரைபட்ட தேங்காய்,மிள‌காய் அப்பியிருக்க‌ அல‌றுவீர்க‌ள்)

* இரண்டு வகை கறிகள், குழம்பு, ரசம், தயிர் என மதிய உணவுக்கு அடுக்கிவைப்பாள். நீங்கள் விரும்பும் வத்தலோ, அப்பளமோ அவளுக்கு நினைவே வராது.

*'இன்னிக்கு ஆடிட் இருக்குது, அவசியமில்லாமல் போன் பண்ணாதே' என்று படித்து படித்து சொல்லிவிட்டு சென்றிருப்பீர்கள். ஏதோ நீங்கள் சொல்வதைத்தான் தினமும் சமையல் பண்ணுவதைப்போல 'சாய்ங்காலம் என்ன குழம்பு வைக்கலாம்?' என்று மூன்று முறை போன் செய்து கேட்டுக்கொள்வாள்.

*உங்களுக்கு கடிதங்கள், பிரிஸ்கிரிப்ஷன்கள், ரெசிப்டுகள், முக்கிய பொருட்களின் பில்கள், பேங்க்,எல்ஐஸி,டாக்ஸ் பேப்பர்கள் முக்கியமானவைகளாக தோன்றும். அவளுக்கு அப்படித் தோன்றாது. சில சமயங்களில் கிரெடிட் கார்டு ஸ்டேட்மெண்ட் குப்பையில் காணக்கிடைக்கும்.

*முட்டையோ, நான்‍வெஜ்ஜோ எல்லாம் ஒன்றுதான் என்பீர்கள் நீங்கள். அவள் அவற்றை தனியாக ட்ரீட் செய்ய தனித் தனி பிளாஸ்டிக் தட்டுகளை வைத்திருப்பாள்.

* நீங்களும் துவைத்த மற்றும் துவைக்காத துணிகளை தனித்தனியாகத்தான் ட்ரீட் செய்வீர்கள். அவள் உங்களை விடவும் இரண்டும் தொட்டுவிடவே கூடாது என்பதில் சர்வ நிச்சயமாக இருப்பாள்.

* சில சமயங்களில் கோபத்தில் இரைந்து கத்துவாள். சமயங்களில் காதிலேயே விழாதவாறு முனங்கிக் கொண்டிருப்பாள்.

*பார்த்துப் பார்த்து எஸ்ரா புத்த‌க‌ம் ஒன்றை வாங்கி வந்திருப்பீர்க‌ள். போனில் பேசிக்கொண்டே அத‌ன் அட்டையில் கிறுக்கிவைப்பாள்.

ச‌ரி போதும்..
மேற்கூறிய‌ லிஸ்ட்டில் அதிகபட்ச விஷயங்கள் உங்க‌ளுக்கிடையே ஒத்துப்போனால் நீங்கள் அதிர்ஷ்டசாலி. இப்போது இர‌ண்டு கேள்விக‌ள்.

இவற்றுள் ஒன்று ஒத்துப் போக‌வில்லை என்றாலும் நீங்க‌ள் ம‌ன‌முடைந்து போவீர்க‌ளா?

ஒன்று கூட‌ ஒத்துப்போக‌வில்லை எனினும் ம‌ன‌ம் த‌ள‌ர‌மாட்டீர்க‌ளா?

இர‌ண்டாவ‌து கேள்விக்கு நீங்க‌ள் ஆம் என்று பதில் தந்தால், கல்யாணம் பண்ணிக்கோங்க.!

நான் த‌லையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறேன்.

.

டிஸ்கி : நேரமின்மையால் மிகப்பழைய பதிவொன்றை மீள்பதிவாக்கியுள்ளேன். ஹிஹி.. பொறுத்துக்கொள்ளுங்கள். அடுத்த வாரத்திலிருந்து புதிய பதிவுகள் படையெடுக்கும் என்று முன்னறிவிப்பு செய்துகொள்கிறேன்.

.

32 comments:

பாபு said...

மொத்த போஸ்ட்டுக்கும் ஒரு ரிபீட்டு

பாபு said...

நம்ம seniors சொன்னப்ப நாம கேட்டோமா, அது மாதிரிதான் இவங்களும் கேட்கமாட்டாங்க

ILA(@)இளா said...

//நம்ம seniors சொன்னப்ப நாம கேட்டோமா, அது மாதிரிதான் இவங்களும் கேட்கமாட்டாங்க //
அதானே..

அறிவிலி said...

//ஏதோ நீங்கள் சொல்வதைத்தான் தினமும் சமையல் பண்ணுவதைப்போல 'சாய்ங்காலம் என்ன குழம்பு வைக்கலாம்?' என்று மூன்று முறை போன் செய்து கேட்டுக்கொள்வாள்.//

பாத்துக்கோ.. பாத்துக்கோ.. பாத்துக்கோ, நானும் இதையேதான் எத்தனை நாள் சொல்லிருக்கேன்.

(ஆதி.. இந்த கமெண்ட் உங்களுக்காக இல்லை)

rajasurian said...

//டிவியில் 'மதுரக்கார மச்சானுக்கு ஜாஸ்திதான்.. மஸ்து ஜாஸ்திதான்..' என்ற பாடல் ஓடிக்கொண்டிருக்கும் போது திடீரென 'எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டுங்க இது..' என்பாள். நீங்கள் என்ன செய்வீர்கள்?
//
ராணி மங்கம்மா மனசு வெச்சா நாஸ்திதான்.... னு அப்படியே நம்ம குயில் குரலில்(!!!) பாட ஆரம்பிச்சா மறுபடியும் அந்த பாட்டு வரும்போது அலறி அடிச்சு ரிமோட்ட தேட மாட்டாளா?

//ஒரு ச‌ம‌ய‌ம் 'டூவீலரில் வ‌ர‌முடியாது, முதுகு வ‌லிக்கும். ஆட்டோ வேண்டாம், வீண்செல‌வு. ப‌ஸ்ஸில் வேண்டாம், ரொம்ப‌ கூட்டமாயிருக்கும்' என்பாள். பிறிதொரு ச‌ம‌ய‌ம் 'வீடுவீடுன்னே கிட‌க்கிறேனே.. எங்காவ‌து கூட்டிப்போயிருக்கீங்க‌ளா..?' என்பாள் நான்குபேர் இருக்கும் போது.
//
ஹி ஹி என்று கேனத்தனமா ஒரு சிரிப்ப சிரிச்சுட்டு ஆனந்த விகடனுக்குள் தலைய விட்டுக்க வேண்டியதுதான்

//ஹோட்ட‌ல் சாப்பாடே வேண்டாம். ஹைஜீனிக் இல்லை' என்பாள். நீங்க‌ள் உள்ளூர‌ ம‌கிழ்வீர்க‌ள். ஆனால் உடல் ந‌ல‌மில்லாம‌ல் போகும்போதும், ப‌ய‌ண‌ங்க‌ளின் போதும் தெரியும் சேதி. ஒரு நாள் அவளுக்கு உட‌ல் ந‌ல‌மில்லாம‌ல் இருக்கையில் நீங்க‌ள் மிக்ஸியில் தேங்காய் அரைத்துக் கொண்டிருப்பீர்க‌ள். (சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் மூடி சரியாக நிற்காம‌ல், முக‌மெங்கும் பாதி அரைபட்ட தேங்காய்,மிள‌காய் அப்பியிருக்க‌ அல‌றுவீர்க‌ள்)//

பாஸ் ரெடிமேட் வத்தக்குழம்பு, லெமன் ரைஸ் போடி, புழியோதரை பொடியெல்லாம் வந்து ரொம்ப நாள் ஆச்சே.

//இரண்டு வகை கறிகள், குழம்பு, ரசம், தயிர் என மதிய உணவுக்கு அடுக்கிவைப்பாள். நீங்கள் விரும்பும் வத்தலோ, அப்பளமோ அவளுக்கு நினைவே வராது.//

இப்ப மாதிரி அப்பவும் பக்கத்து டிபன் பாக்ஸ்ல கை வைக்க வேண்டியதுதான். இது ஒரு மேட்டரா

//ஒன்று கூட‌ ஒத்துப்போக‌வில்லை எனினும் ம‌ன‌ம் த‌ள‌ர‌மாட்டீர்க‌ளா?//

அஞ்சாநெஞ்சன் ஊருக்கு பக்கத்துக்கு ஊர்ல பொறந்தவன் இதுக்கெல்லாமா மனம் தளருவான்

//நான் த‌லையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறேன்.//

நல்ல ஆண்டி டாண்டரப் சாம்பு யூஸ் பண்ணுங்க பாசு. சும்மா மொட்ட தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டுக்கிட்டு.

வனம் said...

வணக்கம் ஆதி

இது இந்தமாதிரி தெளிவான எண்ணங்களை வைத்துக்கொண்டே என்னை திருமணம் செய்துகொள்ளச்சொன்னீர்களா ....?

கிர்ர்ர்ர்ர்ர்ர்..........

ம்ம் உங்க எண்ணம் புரிந்துவிட்டது.

இராஜராஜன்

தத்துபித்து said...

அண்ணாச்சி என்ன சொல்றியே
இத மாதிரி 1000 பதிவு , 2000 மீள்பதிவு போட்டாலும் கல்யாணம் பண்றது பண்றது தான்.ஹே ஹே இதுக்கெல்லாம் மனம் தளருவோமா ...
(எது ஒத்து போகலனாலும் பதிவு எழுத மேட்டர் கிடைக்கும்ல ..)

pappu said...

இதெல்லாம் யாராவது அனுப்ப வேண்டியவங்களுக்கு மொட்ட கடுதாசியா அனுப்புங்க பா!

Cable Sankar said...

டிஸ்கியை சொல்லியே 120 மீஸ் பதிவு போட்டாச்சு..:)

தராசு said...

// Cable Sankar said...
டிஸ்கியை சொல்லியே 120 மீஸ் பதிவு போட்டாச்சு..:)//

டபுள் ரிப்பீட்டேய், டபுள் ரிப்பீட்டேய்

அப்பாவி முரு said...

//தத்துபித்து said...
November 6, 2009 10:20 AM அண்ணாச்சி என்ன சொல்றியே
இத மாதிரி 1000 பதிவு , 2000 மீள்பதிவு போட்டாலும் கல்யாணம் பண்றது பண்றது தான்.ஹே ஹே இதுக்கெல்லாம் மனம் தளருவோமா ...
(எது ஒத்து போகலனாலும் பதிவு எழுத மேட்டர் கிடைக்கும்ல ..) //


என்னமா பீல் பண்ணி எழுதியிருக்கான் என் நண்பன்.

அப்பாவி முரு said...

எனக்கும் அதே பீலிங் தான்.

கடந்த மீள் பதிவுலையும் சொன்ன மாதிரி.,

களத்துல இறங்குறது, இறங்குறது தான்.

கிணத்துல குதிக்கிறது, குதிக்கிறது தான்.

அதனால சித்தப்பு நோ மோர் அட்வைஸ்

(மேலே இருக்கும் நோ என்பது அவரல்ல)

அமிர்தவர்ஷினி அம்மா said...

சில சமயங்களில் கோபத்தில் இரைந்து கத்துவாள். சமயங்களில் காதிலேயே விழாதவாறு முனங்கிக் கொண்டிருப்பாள்.*

:))))))))))))))

அமிர்தவர்ஷினி அம்மா said...

சில சமயங்களில் கோபத்தில் இரைந்து கத்துவாள். சமயங்களில் காதிலேயே விழாதவாறு முனங்கிக் கொண்டிருப்பாள்.*

:))))))))))))))

Vinitha said...

எப்படிங்க போரான விஷயத்தை ரசிக்கிற மாதிரி எழுதுறீங்க?

நர்சிம் said...

பாவம் தான்

(நீங்களா அவங்களா என்பது இங்கே வாசகர் பார்வைக்கு விடப்படுகிறது.)

பின்னோக்கி said...

Men Are from Mars, Women Are from Venus

அ.மு.செய்யது said...

ஹா ஹா...இப்ப இதெல்லாம் ரசிக்க முடியுது.!!!

ஆனா ஃபியூச்சரா நினைச்சா தான் கொஞ்சம் அன்கம்ஃபர்டபிளா ஃபீல் பண்றேன்.

ஆரூரன் விசுவநாதன் said...

இது தினசரி யல்லாரு வூட்லயம் நடக்கற கூத்துங்ணா.........

இதுக்கு பயந்து கண்ணாலம் வேண்டங்க முடியுங்லா.....

சரி சரி.....பொட்டிதட்னது போதும், சீக்கிர வாங்கன்னு அம்மிணி கூப்டுதுங்ணா.....வாரன்

எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன் said...

அட போங்கண்ணே,
நீங்க என்ன சொன்னாலும் கல்யாணம் பண்ணிக்கத்தான் போறேன், ஏன்னா நம்ம ஊரு அப்படி. இருந்தாலும் ஒரு உபயோகம், ஆபீஸ்ல சும்மா இருக்கும்போது படிக்க நல்லா இருந்துச்சு.

அமுதா கிருஷ்ணா said...

இருங்க நேரம் வரும் போது ரமாவை ஒரு நாள் மீட் செய்றேன்...

சுசி said...

யாம் பெற்ற (பெறும், பெறப்போகும்) இ(து)ன்பம் பெறுக இவ் வையகம்...

வாழ்க ரமா....

தாரணி பிரியா said...

ரமாவை ஒரு தரம் பார்த்து பேசணுமே ஆதி

அத்திரி said...

//நர்சிம் பாவம் தான்
நீங்களா அவங்களா என்பது இங்கே வாசகர் பார்வைக்கு விடப்படுகிறது.) //


கிகிகி.ரிப்பீட்டு

அண்ணன் சொல்றத நல்லா கேட்டுக்குங்க ஒரிஜினல் யூத்துகளே

அத்திரி said...

//தாரணி பிரியா
ரமாவை ஒரு தரம் பார்த்து பேசணுமே ஆதி//


ஏன் ஏன் எதுக்கு இந்த கொலை வெறி............. ரங்கமணிகளின் மனசாட்சியாக எங்க அண்ணன் இருப்பது பிடிக்கலையோ

shiva said...

இந்த பிரச்சனையை சமாளிக்க ஒரு வழி இருக்கு.நாமளும் அவங்க மாதிரி மாறிடணும். எப்டி ஐடியா.

கார்க்கி said...

//அடுத்த வாரத்திலிருந்து புதிய பதிவுகள் படையெடுக்கும் என்று முன்னறிவிப்பு செய்துகொள்கிறேன்.
/

intha post mathiri supera irukumaannu sollunga

Sarathguru Vijayananda said...

//டிவியில் 'மதுரக்கார மச்சானுக்கு ஜாஸ்திதான்.. மஸ்து ஜாஸ்திதான்..' என்ற பாடல் ஓடிக்கொண்டிருக்கும் போது திடீரென 'எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டுங்க இது..' என்பாள். நீங்கள் என்ன செய்வீர்கள்?
//
படிச்சு சிரிச்சு..சார்...அப்பத்தான் சாப்பிட்டு வந்தேன்...வாந்தியெடுக்க வச்சு தங்கமணிகிட்ட திட்டு வாங்க வெச்சுட்டீங்களே?

அன்புடன் அருணா said...

நர்சிம் said...

/பாவம் தான்

(நீங்களா அவங்களா என்பது இங்கே வாசகர் பார்வைக்கு விடப்படுகிறது.)/
ரிப்பீட்டு!

மங்களூர் சிவா said...

:)
பெருசா ஸ்மைலிகூட போடமுடியாத கையறு நிலையில்

மங்களூர் சிவா

ஆதிமூலகிருஷ்ணன் said...

பாபு, இளா, அறிவிலி, சூர்யன், வனம், தத்து (சொல்பேச்சு எவன் கேக்குறான் நம்மூர்ல..), கேபிள், தராசு, முரு, அமித்து, வினிதா, நர்சிம், பின்னோக்கி,

செய்யது (உன்ன மாதிரி ஒருத்தனாவது இந்த மாதிரி ஃபீல் பண்ணுவதுதான் இந்தப்பதிவின் வெற்றி. கல்யாணம் பண்ணக்கூடாது என்பதல்ல இந்தத் தொடர்பதிவுகளின் நோக்கம்.. வேறெதுவோ ஒன்றென புரிகிறதா.?)

ஆரூரன், பிரதாபன், அமுதா (அவ்வ்..), சுசி, தாரணி, அத்திரி, சிவா (உங்கள மாதிர் ஆளுங்கள.. நறநற), கார்க்கி, சரத்குரு, அருணா, சிவா..

அனைவருக்கும் நன்றி.!

ஸ்ரீமதி said...

ஏற்கனவே படிச்ச மாதிரி இருக்கேன்னு யோசிச்சேன்... :)))