Monday, November 9, 2009

கறுப்பு ஞாபகம் (சர்வேசன் சிறுகதைப்போட்டிக்கு)

ஏதோ கற்பனை உலகிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக திரும்பிக்கொண்டிருந்தது போல இருந்தது எனக்கு. ஏதேதோ எண்ணிக்கொண்டிருந்தவனின் நினைவுகள் அறுபட ஒரு விஷயம் உறுத்தியது. கொஞ்ச நேரமாகவே ஏதோ சரியில்லை. என்ன ஆச்சு? பேலன்ஸ் இல்லாம இழுக்குதே.. கம்ஃபர்டபிளா இல்லையே.. நாம் ஓட்டிக்கொண்டிருப்பது நமது வண்டி போல இல்லையே.. சட்.! இது நம் வண்டி இல்லை.

வேகத்தைக்குறைத்து சாலையின் ஓரமாக நிறுத்தினேன். இன்னும் தலையில் சிக்னேச்சரின் கிறுகிறுப்புக் குறையவில்லை. சுந்தருடன் போகும் போதெல்லாம் இப்படித்தான் ஆகிவிடுகிறது. போதுமென்றால் கேட்கிறானா.. அதெல்லாம் அப்புறம். முதலில் வண்டியைப்பார். இறங்கி சைட்ஸ்டான்ட் போட்டுவிட்டு சுற்றி முன்னால் வந்து முகப்பையும், நம்பரையும் பார்த்தேன். புத்தம் புதிய ஸ்ப்ளெண்டர் ப்ளஸ். சுத்தம். வேறு யாரோட வண்டியையோ எடுத்துவந்துவிட்டோம்.

என்ன பண்ணப்போறோம்.? சட்டென மனதில் பயம் கவிழ்ந்தது.

இங்கிருந்து நான்கு கிமீயில் மேலூர் போலீஸ்ஸ்டேஷன் இருக்கிறது. போய் விபரம் சொல்லிட்டால் என்ன? விளங்கிவிடும். இவ்வளவு தண்ணியடித்துவிட்டு இந்த மப்பில் ஸ்டேஷனுக்கா? என்ன நடக்கும் தெரியுமில்ல? வண்டி எங்கே கை மாறியது? பாரில் இருந்து கிளம்பும் போதே மாற்றி எடுத்துவிட்டோமா? இல்லையே.. இருக்குமோ?

ப்ளாங்க்..

சுந்தருடன் பாருக்குள் போய் ஒரு ஹாஃப் சிக்னேச்சர் சொன்னோம். இரண்டாவது ரவுன்டுக்கு சிக்கன் சொன்னோம். அப்புறம்? என்னாச்சு.. சுத்தமாக துடைத்துவிட்டதைப்போல மறந்துபோயிருந்தது. பாரில் இருக்கும் போது மணிபார்த்தோம். அப்போது மணி 7. அதற்குப்பிறகு மூணு மணிநேரம் என்ன நடந்தது? ப்ளாங்க்.. சுத்தமாக நினைவிலில்லை. சுந்தர் என்ன ஆனான்? அவன் வீடு பக்கத்தில்தானே.. போயிருப்பானா? என்னாச்சு.. நன்றாக யோசித்தும் நினைவுக்கு ஒன்றுமே வந்து தொலைய மாட்டேன்கிறது. யாரு பில் கொடுத்தது? நம் வண்டியைத்தான் எடுத்தோமா? 12 கிமீ வந்திருக்கிறோமே.. வழியில் எங்காவது நின்றோமா?

பேன்ட் பாக்கெட்டில் இருந்த சிகரெட் பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்து பற்றவைத்துக்கொண்டேன். இந்த சிகரெட் பாக்கெட் எப்படி வந்தது. பாரில் வைத்து இது நம்மிடம் இல்லையே.. சரி, இப்ப என்ன பண்றது? மணியைப் பார்த்தேன். இரவு 9.50. நல்ல இருட்டு. இது யாரு வண்டி? யாராவது வண்டி திருடுபோச்சுன்னு இதுக்குள்ள யாராவது கம்ப்ளெயின்ட் பண்ணியிருப்பாங்களோ. எடுத்துட்டு வீட்டுக்கு போனாலும் சிக்கல். வீட்டுல நம்ப வண்டியை எங்கன்னு காலையில அப்பா குடைஞ்சிருவாங்க.. எப்படி சமாளிக்கிறது? நம் வண்டி எங்கே போச்சுது? யாராவது மாற்றி எடுத்துட்டு போயிருப்பாங்களா? இல்ல, திருடு போயிருக்குமா? திருட்டு போயிருக்கும்னு நினைச்சாலே கதிகலங்குது. சுந்தருக்கு டயல் செய்தேன். ரிங் போய்க்கொண்டேயிருந்தது. எடுக்கவில்லை. ம்ஹூம், ஏதோ பிரச்சினை.

இன்னும் 6 கிமீ போகணும் வீட்டுக்கு. வண்டியை இங்கேயே போட்டுவிட்டு விலக்கு வரைக்கும் நடந்துபோய் ஏதாவது பஸ்ஸில் போயிடலாமா? ஒன்றரை கிமீ நடக்கணுமே.. லேட்டாயிருச்சே, பஸ் இருக்குமா? அப்படியே போனாலும் ட்ரேஸ் பண்ணி போலீஸ் காலையில் வீட்டுக்கு வந்திட்டாங்கன்னா.? நினைக்க நினைக்க திகில் பற்றிக்கொண்டது. என்னதான் நடந்துச்சு.. நினைக்க நினைக்க பயமாகவும் எரிச்சலாகவும் வந்தது. அதெப்படி மறக்கும்? இதுக்கு முன்னாடி எத்தனை தடவை அளவுமீறி குடிச்சு எவ்ளோ பிரச்சினை வந்திருக்குது. அப்பல்லாம் கூட இப்பிடி சுத்தமா மறந்துபோனதில்லையே. தலை சுற்றிக்கொண்டு வந்தது. திரும்பவும் சுந்தருக்கு டயல் செய்தேன். முழுசாய் ரிங் போய் கட்டானது.

எத்தனை பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டோம்? என்ன சிக்கல்னே புரியாமல் இருப்பதில் பைத்தியம் பிடிப்பது போல இருந்தது. போலீஸைக் கூட சமாளிச்சிடலாம். இந்த அப்பாவை சமாளிக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடும். வண்டியோட வீட்டுக்கு போயிடவேண்டியதுதான். காலையில்னா தண்ணியடிச்ச பிராப்ளம் கிடையாது. மறந்து போய் ஏதோ கடையில் மாற்றி வண்டியை எடுத்திட்டு வந்திட்டோம்னு போலீஸ்ல சொல்லிட வேண்டியதுதான்.

போன் அடித்தது. பரபரப்பாக போனை எடுத்தேன். சுந்தர்தான்.

விபரங்களைச் சொன்னேன்.

"லூசுப்பயலே, நேர்ல வந்தேன்னா என்ன நடக்கும்னு தெரியாது. உன் வண்டி பஞ்சர்னு பார்லயே போட்டுட்டு என் வீட்டுக்கு வந்து என் தம்பி வண்டியை எடுத்துக்கிட்டு போனதுமில்லாம, இப்ப போலீஸ்ல குடுக்கிறேங்கிறயா? நா அப்பயே சொன்னேன், அம்மா இல்ல.. இருந்துட்டு காலையில போடான்னு. போனதுமில்லாமல் ராத்திரி போல லந்து குடுத்துக்கிட்டிருக்கியா? காலையில பஞ்சர் போட்டு வச்சிருக்கேன். ஒழுங்கா மரியாதயா வந்து வண்டிய குடுத்துட்டுப்போயிரு.. வர்ற ஆத்திரத்துக்கு வந்தேன்னா மிதிச்சு நவுட்டிருவேன்.."

.

(சர்வேசன்500 நச்'09 சிறுகதைப்போட்டிக்காக)

.

46 comments:

எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன் said...

ஹி ஹி ஹி...
நல்லாயிருக்கு.

பாலகுமார் said...

நல்லா இருக்கு. :)

முரளிகண்ணன் said...

நச்சுன்னு இருக்கு

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

:) :)

குடிக்காதீங்கன்னு சொன்னா கேட்டாத்தானே :)

நல்ல திருப்பம் ஆதி.

தண்டோரா ...... said...

சுந்தர்?நம்ம குருஜியா?

ராமலக்ஷ்மி said...

ஹா ஹா, நலலாயிருக்குங்க கதை:)!
வாழ்த்துக்கள்!

☼ வெயிலான் said...

புனைவு மாதிரி தெரியலியே ஆதி...

அருமை!

நாகா said...

கதை நல்லாருக்குங்க ஆதி..

♠ ராஜு ♠ said...

அட..அடியேனும் தண்டோரா அண்ணனும் ஒரே மாதிரியாவே யோசிக்கிறோமே..!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி பிரதாபன்.!
நன்றி பாலகுமார்.!
நன்றி முரளி.!

நன்றி குருஜி.! (கதையின் நோக்கம், நச்சுன்னு ஒரு திருப்பம். அது உங்கள் வாயாலேயே ஒத்துக்கொள்ளப்பட்டுவிட்டது. பரிசே கிடைத்துவிட்ட மகிழ்ச்சி.!)

நன்றி தண்டோரா.!
நன்றி ராமலக்ஷ்மி.!
நன்றி வெயிலான்.!
நன்றி நாகா.!

Cable Sankar said...

நைஸ்...

மணிகண்டன் said...

கலக்கல் கார்க்கி. ரொம்ப இயல்பா இருந்தது கடைசி நகைச்சுவை. வெற்றிப்பெற வாழ்த்துக்கள்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி ராஜு.! (அப்படிக்கூட வச்சுக்கலாம்)

நன்றி கேபிள்.!

நன்றி மணிகண்டன்.! (கார்க்கியும், நானும் பிரெண்ட்தான். என்னையே கார்க்கி என்று சொல்லுமளவு இரண்டற எங்களைப்பார்க்கும் உங்களன்பினை என்னென்று சொல்வது?)

அன்புடன் அருணா said...

ஹஹாஹாஹா:)

Vidhoosh said...

சுந்தரை விடமாடீகளோ..

Vidhoosh said...

மணிகண்டனின் பின்னூட்டம் நச்சுனு இருக்குங்க :))

--வித்யா

வால்பையன் said...

உண்மை சம்பவம் மாதிரியே தெரியுதே தல!

ராம்குமார் - அமுதன் said...

நல்லா இருக்கு. :))))

வாழ்த்துக்கள்!

தராசு said...

அருமை தல.

உங்க தோழர்கள் எல்லாருமே இப்படித்தான் பேசுவார்களோ
"மிதிச்சு நவுட்டிருவேன்"

Saravana Kumar MSK said...

ஹா ஹா ஹா
கலக்கல்.. ரகளை பண்ணீட்டீங்க.
கதையின் தலைப்பு நல்லா இருக்கு..

Saravana Kumar MSK said...

இன்னும் பார்த்திராவிட்டால், hangover(2009) படத்தை கண்டிப்பாய் பார்க்கவும். செம சிரிப்பு உத்திரவாதம்.

ராமலக்ஷ்மி said...

மணிகண்டன்:
//கலக்கல் கார்க்கி. ரொம்ப இயல்பா இருந்தது கடைசி நகைச்சுவை.//

உங்க பின்னூட்டமும்தான் மணிகண்டன்:)))!

RAMYA said...

கதை அருமைங்க! நல்லா எழுதி இருக்கீங்க!

வாழ்த்துக்கள்!

தமிழ்ப்பறவை said...

கதை நல்லா இருந்தது ஆதி...
உங்க ஏரியாதானே..அதான் புகுந்து விளையாடிட்டீங்க...
ஆனா பாருங்க, கதையையே காலி பண்ணிடுச்சி மணிகண்டன் போட்ட பின்னூட்டம்... :-)

பின்னோக்கி said...

சூப்பருங்க. முதல் பகுதி எவ்வளவு சீரியசா இருந்துச்சோ...கடைசியில செம காமெடி... அருமை

சுசி said...

சூப்பர் நச்.

சொந்த அனுபவம் கூட சமயத்துல சிறுகதை எழுத உதவுதில்ல...

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

மங்களூர் சிவா said...

/
☼ வெயிலான் said...

புனைவு மாதிரி தெரியலியே ஆதி...
/

ரிப்பீட்டு

அருமை!

அ.மு.செய்யது said...

வாவ் !!! நல்லா இருக்கு...!!!

புனைவு ?!?!?!?!?!?

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி அருணா.!
நன்றி விதூஷ்.!
நன்றி வால்.!
நன்றி அமுதன்.!
நன்றி தராசு.!
நன்றி சரவணா.! (இன்னும் ஹேங்க் ஓவர் பார்க்கலை)
நன்றி ராமலக்ஷ்மி.!
நன்றி ரம்யா.!
நன்றி தமிழ்பறவை.!
நன்றி பின்னோக்கி.!
நன்றி சுசி.!
நன்றி சிவா.!
நன்றி செய்யது.!

இது புனைவு, இது புனைவு.. சொல்லிப்புட்டேன். இனி யாராவது ஏதாவது சொன்னால்.. அவ்ளோதான்.!

Cable Sankar said...

நான் நம்பிட்டேன்..நம்பிட்டேன்.. நம்பிட்டேன்..:)

பட்டிக்காட்டான்.. said...

//.. இது புனைவு, இது புனைவு.. சொல்லிப்புட்டேன். இனி யாராவது ஏதாவது சொன்னால்.. அவ்ளோதான்.! ..//

நீங்க இவ்ளோ தூரம் அன்பா சொல்லுரதுனால நம்பிட்டேன்.. :-)

மணிகண்டன் said...

சாரி ஆதி. ஏதோ போதைல சொல்லிட்டேன் போல :)-

மணிகண்டன் said...
This comment has been removed by the author.
விஜய் ஆனந்த் said...

சிறப்பு!!!

அனுஜன்யா said...

அட, நல்லா வந்திருக்கே. உண்மையிலேயே சிக்னேச்சர் தயவா?

கதாபாத்திரங்கள் பெயரால் நம்பகத்தன்மையும் வருது :)

ஆல் தி பெஸ்ட்.

அனுஜன்யா

தத்துபித்து said...

அப்படியே பக்கத்துக்கு கடைக்கு போய் இன்னொரு சிக்னேச்சர் அடிச்சிருந்தா பிளாங்க் எல்லாம் நினைவுக்கு வந்திருக்கும்.
"உங்க கதை" அருமை அண்ணே .

ஆதிமூலகிருஷ்ணன் said...

கேபிள், பட்டிக்காட்டான், விஜய், அனுஜன்யா, தத்து.. அனைவருக்கும் நன்றி.!

ஸ்ரீமதி said...

:)))))))

shiva said...

அண்ணே படிச்ச உடனே சனி கிழமையின் ஞாபகங்களா வருது.

shiva said...

அண்ணே படிச்ச உடனே சனி கிழமையின் ஞாபகங்களா வருது.

கும்க்கி said...

இது புனைவுதான் சந்தேகமே இல்லை.

ஆமாம்..

நல்ல கோர்வையான நடை...அனுபவித்து சொன்னது போலவே...ஹி..ஹி.

அரவிந்தன் said...

எப்படி ஆரம்பிச்சு எப்பிடி முடிச்சிட்டீங்க ! தரமான நகைச்சுவை.

ஒரு கதை போட்டிக்கு போட்டிருக்கேன். ஆனா அது போட்டிக்கு ஏற்றதானு பாத்துச் சொல்லுங்க :)

http://vennilapakkangal.blogspot.com/2009/10/500-2009.html

நாடோடி இலக்கியன் said...

நல்லாயிருக்கு ஆதி.

Mohan Kumar said...

நல்ல நடை முடிவு ஊகிக்க முடியாமல் தான் உள்ளது. ஆனால் அந்த கடைசி பாரா இன்னும் கொஞ்சம் சுருக்கினால் நச்.

கதை போட்டியில் நானும் குதித்துள்ளேன். "அடுத்த வீட்டு பெண்" கதை படிக்க எனது blog-க்கு வருகை தரவும்: http://veeduthirumbal.blogspot.com/

சாம்ராஜ்ய ப்ரியன் said...

இந்த உங்க சுந்தரின் 'புலம்பல்' ரசிக்க.. சிரிக்க வைக்கிறது.

ஆனால் எனக்கும் 'ஹாங் ஓவர்' படம் தான் நினைவில் வருகிறது.

Mohan Kumar said...

சர்வேசன் டாப் 20 லிஸ்ட் போட்டுருக்கார். அதில் உங்க கதை, Cable Shankar, அதி பிரதாபன், முரளி கண்ணன் மற்றும் என் கதையும் செலெக்ட் ஆகியிருக்கு.