Tuesday, November 10, 2009

கற்பனைக் குதிரை

ரு பிரபல எழுத்தாளரிடம் சமீபத்தில் பேசிக்கொண்டிருந்த போது..

'அன்னிக்கு சொன்னேனே அந்தக்கதையை படிச்சீங்களா? பிளாக்ல போட்டுருக்கேனே..' என்று நைஸாக ஆரம்பித்தேன். பதிலுக்கு விமர்சனமாக நாக்கு பிடுங்கிக்கிற மாதிரி அவர் கேட்டதை... ம்ம்ம், சை.! இங்கு எழுதமுடியாததால் இப்போது வேற எதுவாவது பேசலாம்..

ரு பிரபல பதிவரிடம் சமீபத்தில் பேசிக்கொண்டிருந்த போது..

'என்னால் பார்த்த நபர்கள், பார்த்த சம்பவங்கள் பற்றிதான் அப்படியே வர்ணிக்கமுடிகிறது. அதைத்தான் கதையாக எழுதி ஓரளவு ஒப்பேற்றிக்கொண்டிருக்கிறேன். சுத்தமாக கற்பனையே வரமாட்டேங்குது. ஒரு அவசரத்துக்கு கதையின் ஏதாவது ஒரு இடத்தைக் கற்பனை செய்து எழுதலாம்னு பார்த்தாக்கூட‌ முடிவதில்லை. நீங்கல்லாம் எப்படிப்பண்றீங்க.?' என்றார். யாரைப்பாத்து என்னக்கேள்வி சின்னப்புள்ளத்தனமானு மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டு 'நாங்கள்லாம்..'ம்னு ஆரம்பிச்சு என்னத்தையோ பேசி சமாளித்தேன்.

என்னதான் இந்தக்காலத்தில் கதை லைவ்வாக இருக்கவேண்டும் என எல்லோரும் சொல்லிக்கொண்டாலும் ஒரு எழுத்தாளன் என்று ஆகிவிட்டபடியால் (இதுவே எவ்வளவு அழகான கற்பனை இல்ல?) கற்பனை என்பது மிகவும் அவசியமாகிறது. நிஜமான வாழ்க்கை இருந்தால்தான் கதையில் ஒரு உயிரோட்டம் கிடைக்கிறது. ஆனால் அதை சுவாரசியப்படுத்த தேவையான இடங்களில் கொஞ்சம் கற்பனை கலந்தாக வேண்டும். அப்போதுதான் கதை முழுமையடைகிறது. என்ன ஒன்று, இரண்டும் தண்ணீரும் பாலும் போல இரண்டறக்கலந்து எது கற்பனை என்று கண்டுபிடிக்க முடியாதபடி இருக்கவேண்டும். (என்ன சீரியஸாக அட்வைஸ் போய்க்கொண்டிருக்கிறது? நமக்கென்ன அந்தத்தகுதி இருக்கிறது? அதுவும் ஒவ்வொரு சிறுகதைப்போட்டியிலும் லபக்கென்று மண்ணைக் கவ்விக்கொண்டிருக்கும் நமக்கு? என்கிறீர்களா.. கொஞ்சம் பொறுங்களேன்).

உங்களுக்கும் அந்த பிரபல பதிவரைப்போல அந்த மாதிரி ஏதாவது சந்தேகமிருந்தால் வாருங்கள் கொஞ்சம் டிரெயினிங் எடுத்துக்கொள்வோம். நான் கற்பனை செய்துகொண்டே போவேன். நீங்களும் உங்களைப்பற்றி கூடவே கற்பனை செய்துகொண்டே வரவேண்டும்.. சரிதானா?

நீங்கள் வழக்கம் போல வேண்டாவெறுப்பாக 8.30 மணி ஆஃபீஸுக்கு 8.50க்குப்போகிறீர்கள் (இது மட்டும் கற்பனை இல்லை). போனவுடனே மானேஜர் கூப்பிட்டு 'வாங்க கேகே, நேத்துதான் டிஸைட் பண்ணினாங்க.. உடனே கொடுக்கச்சொல்லி உத்தரவு. வழக்கமானது தவிர்த்து எக்ஸ்ட்ரா 20% விபி சாங்ஷன் ஆகியிருக்குது' என்று சொல்லி கவரை நீட்டுகிறார். அப்படியே, 'ஈஸ்டெர்ன் கன்ட்ரீஸ் 15 டேஸ் கம்பெனி டூருக்கு நம்ப பிளான்ட்லயிருந்து ரெண்டு பேர் கேட்டிருக்காங்க. நம்ப டிபார்ட்மென்ட்ல உங்க பேர குடுத்திருக்கேன். பிராஜக்ட்லாம் கிடையாது. சும்மா ரிஃப்ரெஷ்மென்ட், இந்த வருஷத்துல இருந்து ஆரம்பிச்சிருக்காங்க. கிளம்ப இன்னும் ஒரு வாரம் இருக்குது. இன்னிலிருந்தே நீங்க ஆபீஸ் வரவேண்டாம். வீட்லயிருந்தே டூர் வேலையை, விசாவைக்கவனிங்க.. அப்படியே எல்லோர் லாப்டாப்புக்கும் யுஎஸ்பி மோடம் கேட்டிருந்தோம்ல, அன்லிமிடட் 3 mbps வந்திருக்கு. உங்களோடதை வாங்கிக்குங்க..' என்கிறார் (லாப்டாப்பே நமக்கு கிடையாதே என லாஜிக்கெல்லாம் பார்க்கக்கூடாது. கற்பனைதானே.. வாங்கிக்குங்க) எல்லாத்துக்கும் சரியென்று தலையாட்டிவிட்டு ஏன் 5 mbps இன்னும் வரலையாமா என்று கேட்டுவிட்டு வாங்கிக்கொள்கிறீர்கள்.

அப்படியே கிளம்பலாம்னு பார்த்தா HR லிருந்து ஆள் வந்து உங்க‌ளை பிடித்துக்கொள்கிறான். 'சார் நம்ப கம்பெனியிலயே நீங்கள் ஒருத்தர்தான் சார் ரைட்டரா இருக்கீங்க, உங்களுக்கு 11 மணிக்கு மீட்டிங் ஹால்ல சின்ன செலிப்ரேஷன் பார்ட்டி இருக்குது. உங்களை கண்டிப்பா இருக்கச்சொன்னார் ராம், டைரக்டரே வரேன்னிருக்காராம்'. ஏன்ப்பா இதெல்லாம் பெரிசு பண்றீங்க.. நான் என் கடமையைத்தானே செய்கிறேன் என்று சொல்லிவிட்டு வேறு வழியில்லாமல் இருக்கிறீர்கள்.

சீட்டில் உட்கார்ந்ததும் போன் வருகிறது. புது நம்பராக இருக்கிறது. எடுக்கிறீர்கள். 'நாங்கள் விகடன்ல இருந்து பேசறோம், நீங்க ஒரு கதை அனுப்பினீங்கள்ல சார், 'சமூக நீதி' (ஞாபகம் இருக்கா?) அந்தக்கதையை அடுத்த வாரம் பிரசுரம் பண்றோம் சார். அதோட அந்தக்கதையை அசோகன் சார் படிச்சுட்டு உங்களை பார்க்கணும்னு வரச்சொல்லியிருக்கார். உங்களுக்கு எப்ப டைம் கிடைக்கும்னு சொன்னீங்கன்னா.. வசதியா இருக்கும்'. ஒரு டேட் சொல்லிவிட்டு வைக்கிறீர்கள்.

இன்னொரு கால்.

உங்கள் நண்பரும், திரைப்பட உதவி இயக்குனருமான பிரியன் செல்லத்துரை போன் பண்ணுகிறார். 'நாம அன்னிக்கு பேசிக்கொண்டிருந்தோம்ல கேகே, அந்த சுண்ணாம்பு விக்கிறவன் கதை. அதை ஷங்கர் பிக்சர்ஸ்ல சொன்னேன். அசந்துட்டாங்க.. உடனே பண்ணனும்னுட்டாங்க. நான் நேர்மையா டைரக்ஷன் மட்டும்தான் நான் பண்ணுவேன். கதை என் பிரண்டோடது. திரைக்கதை அவந்தான் பண்ணுவான்னு சொல்லிட்டேன். உன்னைப்பார்க்கணும்னாங்க.. நெட்ல இருந்த படத்தை காண்பிச்சேனா? திரும்பவும் அசந்துட்டாங்க, நீயே ஹீரோவா பண்ணமுடியுமான்னு கேட்குறாங்க.. உன்னைப்பார்க்கணும்னு உடனே சொல்றாங்க. நான் ஷங்கர் ஆஃபீஸ்லதான் இருக்கேன், இப்பவே கார அனுப்பவா?' என்று கேட்கிறார். கொஞ்சம் அழகா இருந்தாலே இதுதான் பிரச்சினை. எங்கே போனாலும் நொய்யி நொய்யிம்பாங்க.. வேற வழி சமாளிச்சுதான் ஆகணும். சாய்ந்தரம்தான் வரமுடியும்னு ஸ்ட்ரிக்டா சொல்லிவிடுகிறீர்கள். பின்னர் பார்ட்டியை முடித்துவிட்டு மதியமே வீட்டுக்கு வருகிறீர்கள்.

வந்ததும் விபரங்களை சொல்ல தங்கமணியிடம் வாயெடுக்கிறீர்கள். அதற்கு முன்னதாக அவர் உங்களை மடக்குகிறார், "என்ன ஆஃபீஸுக்கு பாதிநாள் மட்டும் போட்டுட்டீங்களா? சரி, அது கிடக்கட்டும். வரம்போது முட்டையும், ஊறுகாயும் வாங்கிட்டு வரச்சொன்னேனே.. வாங்கிட்டு வந்தீங்களா.?" (என்னதான் கற்பனைன்னாலும் சில விஷயங்களை மாற்றமுடியாது. அவை கற்பனைக்கும் அப்பாற்பட்டவை).

அதுக்கப்புறம் அடுத்த மாசம் வரப்போற உங்க பிறந்த நாளுக்காக உங்கள் இனிய நண்பர் ஒருவர் நீங்கள் பார்த்திராத நீங்கள் விரும்பிக்கொண்டிருந்த ஒரு 50 படங்களின் டிவிடிக்களை பரிசாக கொரியரில் அனுப்பி வைத்தது, இன்னொரு நண்பர் அதுபோல டாப் 100 புத்தகங்களை அனுப்பி வைத்தது, இன்னொரு குறும்புக்கார நண்பர் நல்ல ஸ்காட்சுனதா பார்த்து 10 ஃபுல்களை அனுப்பியது, உங்கள் பழைய (அல்லது புதிய) கேர்ள்பிரண்ட் போனில் அழைத்தது (இதை அவங்கங்க கற்பனைக்கு ஏற்றவாறு வைடாக மாற்றிக்கொள்ளலாம். சப்ஜெக்ட் ரொம்ப பெரிசு) என பட்டியல் நீண்டு கொண்டே போவதால் அவற்றையெல்லாம் சாவகாசமாக இன்னொரு பதிவில் பார்க்கலாம்..

..இப்போ.. கற்பனை போதும். மீட்டிங்குக்கு டைமாயிடுச்சு, போய் (கண்ணைத்தொடைச்சுக்கிட்டு) வேலையைப் பாக்குற வழியைப் பாருங்க.!

.

41 comments:

Muthukumar said...

parisal????

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி முத்துக்குமார்.! (மொக்கைன்னுதான் நானே போட்டிருக்கேனே.. நீங்க வேற தனியா சொல்லணுமா முத்துக்குமார்? அதென்ன பரிசல்?? புரியலையே)

Muthukumar said...

KK --> Parisalkaaran ah solreengalonu nenachen :-)

பின்னோக்கி said...

ஒரு மனுஷனுக்குள்ள எத்தனை ஆசைகள் ?

கற்பனை குதிரை கிண்டி ரேஸ்ல ஓடலை, பார்முலா ஒன்ல ஓடுற ஸ்பீடுல ஓடியிருக்கு

அமிர்தவர்ஷினி அம்மா said...

வரேன்னிருக்காராம்'. ஏன்ப்பா இதெல்லாம் பெரிசு பண்றீங்க.. நான் என் கடமையைத்தானே செய்கிறேன் என்று சொல்லிவிட்டு வேறு வழியில்லாமல் இருக்கிறீர்கள்.//

சான்ஸே இல்லங்க, இப்படியா உங்க கற்பனைக் குதிரைய ஓட்டுவீங்க. பாருங்க அது கன்னாபின்னான்னு சிரிக்க வெச்சுடுச்சு.


கொஞ்சம் அழகா இருந்தாலே இதுதான் பிரச்சினை. எங்கே போனாலும் நொய்யி நொய்யிம்பாங்க.. வேற வழி சமாளிச்சுதான் ஆகணும் //

மனுஷனுக்கு ஆசை இருக்கலாம், ஆனா பேராசை :))))))))))))))))

ஜானி வாக்கர் said...

//கொஞ்சம் அழகா இருந்தாலே இதுதான் பிரச்சினை. எங்கே போனாலும் நொய்யி நொய்யிம்பாங்க.. //

இது கொஞ்சம் ஓவர் கற்பனை தல !!

KVR said...

//கொஞ்சம் அழகா இருந்தாலே இதுதான் பிரச்சினை. எங்கே போனாலும் நொய்யி நொய்யிம்பாங்க.. //

இதைப் படிச்சிட்டு வர்றப்போ கூட முயற்சி செஞ்சு வெளி வர்ற சிரிப்பை அடக்கிக்கிட்டு ஒரு சின்ன இழையோடுற சிரிப்போட தான் படிச்சிட்டு இருந்தேன்.

// "என்ன ஆஃபீஸுக்கு பாதிநாள் மட்டும் போட்டுட்டீங்களா? சரி, அது கிடக்கட்டும். வரம்போது முட்டையும், ஊறுகாயும் வாங்கிட்டு வரச்சொன்னேனே.. வாங்கிட்டு வந்தீங்களா.?" (என்னதான் கற்பனைன்னாலும் சில விஷயங்களை மாற்றமுடியாது. அவை கற்பனைக்கும் அப்பாற்பட்டவை).//

இங்கே என்னால அப்படி முடியல. என் சிரிப்பைப் பார்த்து பக்கத்து சீட்டுக்காரன் ஒரு மாதிரியா பாக்குறான். டிபிக்கல் ஆதி டச்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

// "என்ன ஆஃபீஸுக்கு பாதிநாள் மட்டும் போட்டுட்டீங்களா? சரி, அது கிடக்கட்டும். வரம்போது முட்டையும், ஊறுகாயும் வாங்கிட்டு வரச்சொன்னேனே.. வாங்கிட்டு வந்தீங்களா.?"


கற்பனைக்குதிரை எம்புட்டு தூரம் ஓடினாலும், கடிவாளம் எங்க இருக்கு பார்த்தீங்களா.:)))

வெல்டன் ரமா மேடம்

ஜீவன் said...

நல்லாத்தான் பாயுது குதிர...........!!

ஆதிமூலகிருஷ்ணன் said...

அப்பிடியும் வச்சுக்கலாம் முத்துக்குமார்.!

நன்றி பின்னோக்கி.!

கடிவாளம் டைமிங்கை ரசித்தேன் அமித்து.!

ரொம்ப நாளாச்சு ஜானி, சொம்பு தூக்க ஆளில்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன். ஹிஹி.!

நன்றி கேவிஆர்.! (பாயிண்ட் நியாயம்தானே, என்ன சொல்றீங்க?)

பட்டிக்காட்டான்.. said...

கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்க, இப்போதான் என்ன நிலாவுல கூப்பிட்டாக, சந்திரன்ல கூப்பிட்டாக..

போயிட்டு வந்து பின்னூட்டம் போடுறேன்..

பிரசன்ன குமார் said...

பயபுள்ளைங்க எல்லாருக்கும் கிட்ட தட்ட ஒரே பாதைல தான் குதிரை ஓடும் போல :))

shiva said...

நல்லா இருக்கு. நான் கூட லாஸ்ட் வீக் மணிரத்னம் சாரோட கதை டிஸ்கசன்ல இருந்தேன்.

அனுஜன்யா said...

ஹா ஹா ஹா. அதகளம்.

//ஏன்ப்பா இதெல்லாம் பெரிசு பண்றீங்க.. நான் என் கடமையைத்தானே செய்கிறேன் என்று சொல்லிவிட்டு வேறு வழியில்லாமல் இருக்கிறீர்கள்.//

ஆதி டச்.

ஆனாலும், மனுசனுக்குள்ள இம்புட்டு ஆசைகளா? தாங்காதுப்பா.

அனுஜன்யா

விக்னேஷ்வரி said...

வேலை வெட்டி இல்லாம வெட்டியா உக்காந்து கனவு காணுறீங்கனு தெரியுது.

உங்கள் தோழி கிருத்திகா said...

உன்னைப்பார்க்கணும்னாங்க.. நெட்ல இருந்த படத்தை காண்பிச்சேனா? திரும்பவும் அசந்துட்டாங்க, நீயே ஹீரோவா பண்ணமுடியுமான்னு கேட்குறாங்க.. உன்னைப்பார்க்கணும்னு உடனே சொல்றாங்க.///////////
இதைத்தான் என்னால தாங்கவே முடியல...எப்புடிங்க இப்புடி???

இதைக்கூட சேர்த்து இருக்கலாம்...
என்ன லண்டன்ல மைக்கெல் ஜாக்சன் கூப்டாஹ
ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்டாஹ
அதெல்லாம் விட்டுப்புட்டு என் கெரகம் இங்க வந்து மாட்டிக்கிட்டேய்ன்ன்ன்ன

Cable Sankar said...

ஆட்டத்தில நானும் கலந்துக்கலாமா..?

தராசு said...

வேற பொழப்பே இல்லையா?

ஒரு மனுஷன் கனவு காணலாம் தான். அதுக்காக இப்படியா??????

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி பட்டிக்காடு, பிரசன்னா, சிவா, அனுஜன், விக்னேஷ்வரி, கிருத்திகா, கேபிள், தராசு.!

என்ன ஆச்சரியம் தமிழ்மணத்துல யாரோ ஓட்டு போட்டுருக்காங்க.. மூணு ஓட்டு இருக்குதுபா.. யாராவது ஒண்ணு போடுங்க, லிஸ்ட்ல வருதான்னு செக் பண்ணனும். இந்த மாதிரில்லாம் வந்து ரொம்ப வருஷம் ஆகுது. அதெல்லாம் ஒருகாலத்துல சூடான இடுகைன்னு ஒண்ணு இருந்தப்போ நடந்தது.. ஹூம்..!!

கும்க்கி said...

ஹி...ஹி...

கற்பனை என்றாலும் அந்த இன்ஷியல் ரொம்ப குசும்பு.

ஆரூரன் விசுவநாதன் said...

கற்பனையாக இருந்தாலும்.....ஹு....ஹூம் இருப்பதால் இனிமையாக இருக்கிறது.

கனவுகளும் கற்பனைகளும் நனவாக வாழ்த்துக்கள்......

pappu said...

கொஞ்சம் அழகா இருந்தாலே இதுதான் பிரச்சினை. எங்கே போனாலும் நொய்யி நொய்யிம்பாங்க.. ////

பாலோ பண்றோம்ல. இதெல்லாம் கேட்டுத்தான் ஆகனும்!

முரளிகண்ணன் said...

:-)))

சூரியன் said...

குதிரை கவுந்திரப்போகுது,

கதிர் - ஈரோடு said...

//வரம்போது முட்டையும், ஊறுகாயும் வாங்கிட்டு வரச்சொன்னேனே.. //

அய்யோ சாமி... முடியல

சிரிச்சு வயிறு வலிக்குதுங்க ஆதி

தமிழ்ப்பறவை said...

:-)

அன்புடன் அருணா said...

இப்போ என்னா? உங்க பிறந்த நாளுக்கு இதெல்லாம் வேணும்னு உங்க நண்பர்களுக்கு தகவல் கொடுத்திட்டீங்க! எப்போ ?

ஆதிமூலகிருஷ்ணன் said...

கும்க்கி, ஆரூரன், பப்பு, முரளி, சூரியன், கதிர், தமிழ்பறவை, அருணா.. நன்றி.!

@அருணா : நல்ல கெஸ்.! ஒரு திருட்டு சிடியாவது வருதான்னு பார்ப்போம்.

தாரணி பிரியா said...

அவ்வ்வ் நாங்கதான் இதுபோல கற்பனை செய்வோமின்னு நினைச்சுகிட்டு இருந்தேன். அந்த பக்கமும் அப்படித்தானா.

அப்புறம் கற்பனையில கூட ரமா சொன்னதை சரியா வாங்கி வர முடியலையா :) வர்ற பிறந்த நாளுல இருந்தாவது எல்லாத்தையும் சரியா வாங்கிட்டு வாங்க

RAMYA said...

//
'அன்னிக்கு சொன்னேனே அந்தக்கதையை படிச்சீங்களா? பிளாக்ல போட்டுருக்கேனே..' என்று நைஸாக ஆரம்பித்தேன். பதிலுக்கு விமர்சனமாக நாக்கு பிடுங்கிக்கிற மாதிரி அவர் கேட்டதை... ம்ம்ம், சை.! இங்கு எழுதமுடியாததால் இப்போது வேற எதுவாவது பேசலாம்..
//

இங்கே ஆரம்பிக்குது உங்க அட்டகாசத்தின் ஆரம்பம் :)

RAMYA said...

//
நீங்கல்லாம் எப்படிப்பண்றீங்க.?' என்றார். யாரைப்பாத்து என்னக்கேள்வி சின்னப்புள்ளத்தனமானு மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டு 'நாங்கள்லாம்..'ம்னு ஆரம்பிச்சு என்னத்தையோ பேசி சமாளித்தேன்.
//

ஆஹா ஆஹா! அவரு கேட்டதுலே ஒன்னும் தப்பே இல்லையே
சரியாதானே கேட்டு இருக்காரு. அதுக்கு போய் ஏன் சமாளிச்சீங்க
(நல்லா எழுதறீங்களேன்னு சொல்ல வந்தேன் :-) )

RAMYA said...

//
'சார் நம்ப கம்பெனியிலயே நீங்கள் ஒருத்தர்தான் சார் ரைட்டரா இருக்கீங்க, உங்களுக்கு 11 மணிக்கு மீட்டிங் ஹால்ல சின்ன செலிப்ரேஷன் பார்ட்டி இருக்குது. உங்களை கண்டிப்பா இருக்கச்சொன்னார் ராம், டைரக்டரே வரேன்னிருக்காராம்'. ஏன்ப்பா இதெல்லாம் பெரிசு பண்றீங்க.. நான் என் கடமையைத்தானே செய்கிறேன் என்று சொல்லிவிட்டு வேறு வழியில்லாமல் இருக்கிறீர்கள்.
//

தன்னடக்கம் தடுக்குது போல :)

RAMYA said...

//
'நாங்கள் விகடன்ல இருந்து பேசறோம், நீங்க ஒரு கதை அனுப்பினீங்கள்ல சார், 'சமூக நீதி' (ஞாபகம் இருக்கா?) அந்தக்கதையை அடுத்த வாரம் பிரசுரம் பண்றோம் சார். அதோட அந்தக்கதையை அசோகன் சார் படிச்சுட்டு உங்களை பார்க்கணும்னு வரச்சொல்லியிருக்கார். உங்களுக்கு எப்ப டைம் கிடைக்கும்னு சொன்னீங்கன்னா.. வசதியா இருக்கும்'. ஒரு டேட் சொல்லிவிட்டு வைக்கிறீர்கள்.
//


அது சரி! டேட் சொன்னீங்களா?? இல்லையா?? :)!

RAMYA said...

//
நெட்ல இருந்த படத்தை காண்பிச்சேனா? திரும்பவும் அசந்துட்டாங்க, நீயே ஹீரோவா பண்ணமுடியுமான்னு கேட்குறாங்க.. உன்னைப்பார்க்கணும்னு உடனே சொல்றாங்க. நான் ஷங்கர் ஆஃபீஸ்லதான் இருக்கேன், இப்பவே கார அனுப்பவா?' என்று கேட்கிறார்.
//

ஹையோ! ஹையோ! ஆதி நல்லா எழுதறீங்க சிரிச்சி சிரிச்சி வயறு வலிக்குது :-)

RAMYA said...

//
கொஞ்சம் அழகா இருந்தாலே இதுதான் பிரச்சினை. எங்கே போனாலும் நொய்யி நொய்யிம்பாங்க..
//

ஒண்ணுமே புரியல உலகத்துலே
என்னமோ நடக்குது மர்மமா இருக்குது :))

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி தாரணி, ரம்யா.!

என்ன நடக்குது இன்னிக்கு.? தமிழ்மணத்துல 7 ஓட்டுகள். முதல் தடவையா பரிந்துரையில வந்திருக்குது. நாம் ஏதாவது நல்லதா எழுதிருக்கோம்னு நினைச்சா ஒரு ஓட்டு கூட விழாது. சாவடிக்கிறீங்களே.. ஏன் கார்க்கில்லாம் மொக்கை போடுறான்னு இப்பதான் புரியுது.

தமிழிஷ்ல 22 ஓட்டு முதல் தடவையா.. சரிதான் நடத்துங்க.!

எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன் said...

பின்னூட்டம் போடுறதுக்கு வசதியா அந்த ஏரியாவை எல்லாம் போல்டு பண்ணி காமிச்சிருக்கிங்களோ?

என்ன ஒரு மைனஸ் ஓட்டு கூட இல்ல? அந்த அளவுக்கு நீங்க பிரபலம் இல்லையா?

திருட்டு விசிடி எதுக்கு? நல்லபடியா நான் தர்றேன்.

இதெல்லாம் கற்பனைனு சொல்றத பாத்தா....

டம்பி மேவீ said...

sir ungalai AVM la recommend panni irukken sir.... unga numberum thanthu vitten(eppudi irukka namma kuthurai)

பரிசல்காரன் said...

//வாங்க கேகே,//

திஸ் பீஸ் ஐ லைக்!

ராமலக்ஷ்மி said...
This comment has been removed by the author.
ராமலக்ஷ்மி said...

கமெண்ட், பதிவு மாறிப் போச்சு:)!