Thursday, November 19, 2009

ஆயுதம் (ஆவணப்படம்)

என்னாச்சு.. குறும்படமே நம்மக்கிட்ட சிக்கிக்கிட்டு குண்டாங்குதிரையாக பட்டுக்கொண்டிருக்கிறது.. இந்த அழகில் ஆவணப்படம் வேறேயா.? என்று அதிர்ச்சியடைய வேண்டாம் தோழர்களே. காலத்தின் கட்டாயம்.. நாம் அடுத்த கட்டத்துக்கு நகரவேண்டிய அவசியத்தில் உள்ளோம். ஆகவே இது வரை யாரும் பேசத்துணியாத இந்தப் பொருளில் இந்த அதிமுக்கியமான ஆவணப்படத்தை எடுக்கும் சூழல் எனக்குக் வாய்த்தமைக்கு நான் பெருமை கொள்கிறேன்.

பின்விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்பதால் படத்தைப்பற்றிய மேற்குறிப்புகளோ,

படத்தில் வரும் ஆயுதம் எப்படி, யாரால் செய்யப்பட்டது என்பது பற்றிய மேல் தகவல்களோ..

சொல்லமுடியாத நிலையில் நாம் இருக்கிறோம். மேலும் இந்தப்படத்திற்கு பெண்கள் பக்கத்திலிருந்து கடும் எதிர்ப்பு வரலாம். உண்மையை உரக்கக்கூற வேண்டிய கடமையும் நமக்கிருப்பதால் அதற்கெல்லாம் கவலைப்பட நமக்கு நேரமில்லை.. இனி,


.

89 comments:

குப்பன்.யாஹூ said...

seedai is so strong,

ஆயில்யன் said...

//நாம் அடுத்த கட்டத்துக்கு நகரவேண்டிய அவசியத்தில் உள்ளோம்///


பாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!

அப்படியே அலேக்கா தூக்கிட்டு போயிட்டீங்க அடுத்த கட்டத்துக்கு !!!!

sriram said...

ரொம்பத்தான் தைரியமய்யா உமக்கு.
ரமாவின் அடுத்த ஆயுதம் பூரிக்கட்டையாக இருக்கும்னு நெனைக்கிறேன்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

ஆயில்யன் said...

கடைசியில குட்டீஸ் கையில துழாவிக்கிட்டிருக்கிறது சூப்பர்

ஃபினிஷிங்க் சூப்பரேய்ய்ய்ய்!

பை தி பை எனக்கொரு ஆசை ரமாக்கா உங்கள அடிச்சு நொறுக்கி ஓட விடறதை ஒருஆவணப்படமா பாக்கோணும்!

தண்டோரா ...... said...

ஆதி..உங்க கேமராவால உடைச்சீங்கன்னா உடைஞ்சிருக்கும்..

அ.மு.செய்யது said...

இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட கிரானைட் குண்டுகள்..!!

அனுஜன்யாவின் ஒரிஜினல் ஸ்கோர் அருமை !!

நாதஸ் said...

ha ha ha :)

//seedai is so strong//
I think it is vadai or bonda. Appa seedai embuttu strongaa irukkum.
:)

Annachi unga kai romba weeka irukko? oru vadaya kooda pichu saapida mudiyaatha :P gym ponga boss ;)

நாடோடி இலக்கியன் said...

ஹா ஹா..


போட்டோவில் சுந்தர்.சி மாதிரி இருக்கீங்க.ஏன் நீங்களும் நடிக்கக் கூடாது.உங்க அடுத்த குறும்(பு)படத்தில் ஹிரோ அவதாரம் எடுக்க என் வாழ்த்துகள்.

:)

T.V.Radhakrishnan said...

:-))

தராசு said...

இந்திய ராணுவத்துக்கே சப்ளை பண்ணலாம் போலிருக்குதே,

ஆமாம் தலைவா, அடுத்த கட்டத்துக்கு போக வேண்டிய கட்டாயத்திலிருக்கிறோம்.

அறிவிலி said...

இப்புடி தரையில போடறீங்க, கிச்சன் மேடையில கடப்பா கல் (கிரானைட்?) மேல வெச்சு உடைக்கிறீங்க? டைல்ஸ் இல்லாட்டி கடப்பா கல் க்ராக் ஆயிடும்னு கொஞ்சம் கூட பயமே இல்ல உங்களுக்கு. இதுவே சொந்த வீடா இருந்தா இப்படி ரிஸ்க் எடுப்பீங்களா? :))))))

அறிவிலி said...

ஒரு வழியா தமிழ்ல டைட்டில் போட ஆரம்பிச்சுட்டீங்க போலிருக்கு. அடுத்த கட்டம் போயாச்சு.

நாதஸ் said...
This comment has been removed by the author.
அனுஜன்யா said...

சின்ன கண்ணி வெடிகுண்டுகளுக்கே இவ்வளவு பில்டப்பா? என் வீட்டுக்கு வா. Weapons of Mass Destruction (WMD) பார்க்கலாம்.

யோவ், நீயே செய்த போண்டாவோ என்னவோ ...பழி அவங்க மேலயா?

அனுஜன்யா

☀நான் ஆதவன்☀ said...

அண்ணி இதையெல்லாம் பார்க்க மாட்டாங்கன்ற தைரியத்துல போட்டுடீங்க. தெரிஞ்சா என்ன நடக்க ப்ோகுதோ :)))

Anonymous said...

சுபா கூட சவுண்டு குடுத்துருக்காரு போல இருக்கு. தைரியமா படம் எடுத்ததுக்கு பாராட்டுக்கள் :)

தத்துபித்து said...

கட்டுமான பொருட்களின் விலை ஏறிக்கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் இது போன்ற "உறுதியான" புதிய கண்டு பிடிப்புகள் அவசியம்.
வாழ்த்துக்கள் அண்ணே .

Anonymous said...

// ஆயில்யன் said...

கடைசியில குட்டீஸ் கையில துழாவிக்கிட்டிருக்கிறது சூப்பர்

ஃபினிஷிங்க் சூப்பரேய்ய்ய்ய்!

பை தி பை எனக்கொரு ஆசை ரமாக்கா உங்கள அடிச்சு நொறுக்கி ஓட விடறதை ஒருஆவணப்படமா பாக்கோணும்!//


ஆயிலு, எல்லாருக்கும் அப்படி ஒரு ஆசை இருக்கத்தான் செய்யுது :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

போண்டாவ செய்யத்தெரியாம நீங்க செஞ்சிட்டு ஆவணப்பதிவு வேறயா?

பாவம் ரமா, இப்படி போண்டா கூட ஒழுங்கா செய்யத்தெரியாத மனுசரோட எப்படித்தான் சமாளிக்கறாங்களோ?

அமிர்தவர்ஷினி அம்மா said...

நான் பூரிக்கட்டையா இருக்கும்னு ரொம்ப எதிர்பார்த்தேன்.

Jack said...

eppdi ithellam? peche varalla.
aanaalum ivlo kanmoodithanamaana thairiyam health kku aagaathu.

ஸ்ரீமதி said...

வீடியோ தெரியலையே ஆப்பீஸ்ல.. நான் தப்பிச்சிட்டேனா? இல்லையா? யாராவது சொல்லுங்களேன்.. ப்ளீஸ்.. ;)))))

விக்னேஷ்வரி said...

உங்க குறிப்புகளைப் படிச்சிட்டு டெரரா எதிர்பார்த்தா இங்கேயும் வீட்டுக்காரம்மாவை கலாய்க்குறீங்களா... ஒரு போண்டா உடைக்க இவ்ளோ பாடு. நீங்கல்லாம்..... இதுக்குக் குழந்தைய வேற கூட்டு சேர்த்துக்கிட்டு....

ம்யூசிக் சூப்பருங்கோ.

எம்.எம்.அப்துல்லா said...

//
ம்யூசிக் சூப்பருங்கோ.

//


வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஆவணப்படத்துக்கு மியூசிக் கம்போசர் நாந்தான் என்பதை சொல்லாமல்விட்ட அண்ணன் தாமிராவை....

அந்த போண்டாவாலயே அடிக்கணும்.

:)

குசும்பன் said...

யோவ் டுபுக்கு அது கீழே தரையில் போட்டு அடிச்சு பார்க்க செஞ்சது இல்லையா, ஒழுங்கா டைமுக்கு வீட்டுக்கு வராத உம்மை ”குறி”பார்த்து அடிக்க செஞ்சது! பக்கத்து வீட்டு நண்டு சிண்டு எல்லாருக்கும் கொடுத்தாச்சு நாளை வெளியில் வரும் பொழுது, தக்க கவசத்துடன் வரவில்லை என்றால், முன்விளைவுகள் பயங்கரமாக இருக்கும்!:)

கார்க்கி said...

சுமார் ஆறு மாத காலமாக பல் விலக்க மறந்த ஆதி அண்ணனுக்கு இந்த சீடை தான் சரியென்று அண்ணி நினைத்திருப்பார்கள்.. எங்கப்பா முகிலினி? சீடை செய்வது பெண்களின் வேலையா?” வந்து ஆரம்பிங்க மேடம்...

Rajeswari said...

இந்த லின்க்க அண்ணி பார்த்தாங்களா??

உங்களுக்கு எந்த ஆயுதத்தால....

சரிவிடுங்க...அப்புறம் ரகசியமா என்கிட்ட சொல்லுங்க..

சிரிப்ப அடக்க முடியல

குசும்பன் said...

ஊருல லாக்குன்னு ஒரு கேம் விளையாடுவோம் ஒரு கட்டத்துக்குள் இரண்டு கோலி குண்டை உருட்டிவிட்டு லெப்டா ரைட்டான்னு கேட்டு மோத்தி கோலியால அவன் சொல்வதை அடிக்கனும் அடிச்சா காசு, இல்லையா அவனுக்கு காசு, அதுமாதிரி நாளைக்கு உங்களை நிக்க வெச்சு லெப்டா ரைட்டான்னு கேட்டு அடிக்க போறானுங்க பசங்க!

நான் கண்ணை சொன்னேன்:)

குசும்பன் said...

யாருப்பா அது சுந்தர்.சி மாதிரி முரட்டு உருவம் ஒன்னு நர்சிமோட கூலிங்கிளாஸை எல்லாம் வாங்கி மாட்டிக்கிட்டு போஸ் கொடுப்பது!

SanjaiGandhi™ said...

//காலத்தின் கட்டாயம்.. நாம் அடுத்த கட்டத்துக்கு நகரவேண்டிய அவசியத்தில் உள்ளோம்//

படத்தை 13 முறை பார்த்துட்டேன். ஒரு கட்டமும் இல்ல போங்க.

ஆதி’முக்கிய’ ஆவணப் படம் போல :))

குசும்பன் said...

// நாடோடி இலக்கியன் said...
ஹா ஹா..


போட்டோவில் சுந்தர்.சி மாதிரி இருக்கீங்க.ஏன் நீங்களும் நடிக்கக் கூடாது.
//

எனக்கும் பார்த்ததும் அப்படிதான் தோனுச்சு, பார்த்தா நீங்களும் அப்படிதான் பின்னூட்டம் போட்டு இருக்கீங்க!


*****************

அடுத்தமுறை சந்திப்புக்கு ஒரு பாதுகாப்புக்கு இதை எடுத்து செல்லவும்.

பயன்1) யாரும் அடிக்க வந்தால் சடார் என்று எட்டி நின்னு அடிச்சுவிட்டு ஓடிவிடலாம்.

பயன்2) அப்துல்லா பாட ஆரம்பிச்சால் தைரியம் இருந்தால் அருகில் போய் அவர் வாயில் ஒன்னை போட்டு விடலாம், இல்லை என்றால் எட்டி நின்னு சரமாரியாக அடிக்கலாம்.

குசும்பன் said...

பயன்2) அப்துல்லா பாட ஆரம்பிச்சால் தைரியம் இருந்தால் அருகில் போய் அவர் வாயில் ஒன்னை போட்டு விடலாம், இல்லை என்றால் எட்டி நின்னு சரமாரியாக அடிக்கலாம்.
//

தைரியம் அவர் அருகில் செல்ல தேவை இல்லை, அவர் பாடும் பொழுது அருகில் செல்ல தைரியம் வேண்டும், இது அந்த மீனிங்கில் சொன்னது!

இராகவன் நைஜிரியா said...

அண்ணே ஆதி அண்ணே...

பாவம் அண்ணே நீங்க..

சரி குழந்தைக்கு இந்த திண்பண்டத்தை கொடுக்கிறீங்களே.. அது பாவம் இல்லையா?

உங்களைவிட குழந்தையை நினைச்சாத்தான் எனக்கு பாவமா இருக்கு

குசும்பன் said...

//சரி குழந்தைக்கு இந்த திண்பண்டத்தை கொடுக்கிறீங்களே.. அது பாவம் இல்லையா?//

அது கோலி குண்டு விளையாட கொடுக்கப்பட்டது, சாப்பிட கொடுக்கப்பட்டது இல்லை!

துளசி கோபால் said...

ஏம்ப்பா..... இது ஆணவப்படமால்லே தெரியுது!!!!!


போகட்டும், இதையும் ஆவணப்படுத்தித்தான் ஆகணும். சரித்திரம் ரொம்ப முக்கியம்.

பதிவர் சந்திப்புக்காக செஞ்ச போண்டாதானே? இல்லே சீடையா?

வாட் எவர் இட் ஈஸ்....சீக்கிரம் ரெஸிபியை அனுப்புங்க. தேவைப்படுது இங்கே:-)

வால்பையன் said...

எண்ணம்&ஆக்கம்

ஆதினு வருதே! அப்போ அந்த கொலைவெறி ஆயுதத்தை தயாரிச்சது நீங்க தானா!?

யுவகிருஷ்ணா said...

சூப்பர்! :-)

நிலாரசிகன் said...

குழந்தை பாவம்ங்க :)

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி குப்பன்.! (சீடைன்னா சின்னதா இருக்கும்ங்க..இது வடை)

நன்றி ஆயில்யன்.! (நல்ல ஆசை ஓய்.!)

நன்றி ஸ்ரீராம்.! (அவுங்க இதைப்பார்த்தாதானே.. அதெல்லாம் நடக்காதுடீ)

நன்றி தண்டோரா.! (என்னது.. காமிராவா?)

நன்றி செய்யது.! (ஒவ்வொரு படத்துலயும் ஒவ்வொரு டெக்னீஷியன்ஸ் நான் யூஸ் பண்ணுவேன். இதுல அங்கிள் பெயரை நான் யூஸ் பண்ணலையே.. ஹிஹி)

நன்றி நாதஸ்.! (கரெக்டா சொன்னீங்க, வடையே எப்படியென்றால் சீடை எப்பிடியிருக்கும்? துப்பாக்கி குண்டுக்கு இணையாக இருக்கும்)

நன்றி இலக்கியன்.! (வேற ஆளே கிடைக்கலையா ஐயா.. உங்களுக்கு?)

நன்றி டிவிஆர்.!

நன்றி தராசு.! ((உங்க வீட்ல எப்படியிருக்கும் தல.?)

நன்றி அறிவிலி.! (டைல்ஸ் இல்லாட்டி கடப்பா கல் க்ராக் ஆயிடும்னு கொஞ்சம் கூட பயமே இல்ல உங்களுக்கு??// இன்னும் சிரிச்சுக்கிட்டிருக்கேன். ROTFL..!!)

நன்றி அனுஜன்யா.! (யேய்ய்.. அனுபவம் பேசுதுடோய்..!!!!)

நன்றி ஆதவன்.! (பாத்தாதானே?)

நன்றி அம்மிணி.! (சுபா அழும் இறுதிக்காட்சி ஜஸ்ட் எடிடிங்கில் போய்விட்டது. இருந்தால் இன்னும் பிச்சுக்கிட்டிருக்கும் படம்.)

நன்றி தத்து.! (நல்ல யோசனை)

நன்றி அமித்துஅம்மா.! (எம்மேல பழியைப்போட்டு நீங்க நல்லா சமாளிக்கிறீங்க)

நன்றி ஜாக்.!

நன்றி ஸ்ரீமதி.! (டோண்ட் மிஸ்.!)

நன்றி விக்னேஷ்வரி.! (என்ன இவ்ளோ சிம்பிளா சொல்லிட்டீங்க.. கையில இப்ப மாவுக்கட்டு போட்டிருக்கேன்)

நன்றி அப்துல்.! (ஜாரிண்ணே, பேரு போட மறந்துட்டேன். ப்ரொட்யூஸரே நீங்கதானே.!)

நன்றி குசும்பன்.! (என்னது சுந்தர்.சி மாதிரியா? இதுக்கு அந்த போண்டாவாலேயே நீங்க அடிச்சிருக்கலாம்.. அவ்வ்வ்)

நன்றி கார்க்கி.! (ஏன் இந்த கொலவெறி?)

நன்றி ராஜேஸ்வரி.! (ஹிஹி)

நன்றி சஞ்சய்.! (பொதுவுல இப்பிடியா பேசுறது.:-)))
நன்றி ஸ்ரீராம்.!

பைத்தியக்காரன் said...

இதுபோன்ற ஆவணப்படங்களை தொடர்ந்து எதிர்பார்க்கிறேன் :)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி இராகவன்.! ((குசும்பன் பதிலை பாத்தீங்கதானே..)

நன்றி துளசி.! (சீக்கிரம் ரெஸிபியை அனுப்புங்க. தேவைப்படுது இங்கே// பாவம் மக்கள்ஸ்.. கோபத்தை கண்ட்ரோல் பண்ணுங்க மேடம்)

நன்றி வால்பையன்.! (இந்த நிகழ்ச்சியை படம்பிடிக்க தோணியது, எண்ணம். அதை தைரியமாக படம்பிடிச்சு போட்டது ஆக்கம், புரிஞ்சுதா? ஹிஹி)

நன்றி யுவகிருஷ்ணா.! (ஒரு வேளை சேம் பிஞ்ச்சோ?)

நன்றி நிலாரசிகன்.! (கடிச்சுப்பார்த்து தோல்வியடைஞ்சு, அதை வச்சுதான் விளையாடுகிறான் இப்போது..)

நர்சிம் said...

அட்டகாசம்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி பைத்தியக்காரன், நர்சிம்.!!

கார்ல்ஸ்பெர்க் said...

வீட்ல போய் படத்த பார்த்துட்டு சொல்றேன்..

Vijayashankar said...

ஆதியின் ஆயுதம் சூப்பர்!

rajan RADHAMANALAN said...

நான்கூட ஒரு கோவணப் படம் எடுக்கலாம்னு இருக்கேன் !

Saravana Kumar MSK said...

ராணுவ தளவாடங்களை வீட்டில் வைத்திருக்கும் உங்களை RAW, CIA, INTERPOL எல்லாம் தேடுவதாக கேள்வி.
:))))

Saravana Kumar MSK said...

அவ்வ்வ்வவ்வ்வ்வ்.. அது வடையா.. நான் கூட சீடைன்னு தான் நெனச்சேன்..

Saravana Kumar MSK said...

//இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட கிரானைட் குண்டுகள்..!!//
//இப்புடி தரையில போடறீங்க, கிச்சன் மேடையில கடப்பா கல் (கிரானைட்?) மேல வெச்சு உடைக்கிறீங்க? டைல்ஸ் இல்லாட்டி கடப்பா கல் க்ராக் ஆயிடும்னு கொஞ்சம் கூட பயமே இல்ல உங்களுக்கு. இதுவே சொந்த வீடா இருந்தா இப்படி ரிஸ்க் எடுப்பீங்களா? :))))))//
//சின்ன கண்ணி வெடிகுண்டுகளுக்கே இவ்வளவு பில்டப்பா? என் வீட்டுக்கு வா. Weapons of Mass Destruction (WMD) பார்க்கலாம். //
//கட்டுமான பொருட்களின் விலை ஏறிக்கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் இது போன்ற "உறுதியான" புதிய கண்டு பிடிப்புகள் அவசியம்.//

ROTFL :)))

Saravana Kumar MSK said...

இந்த அணு ஆயுதங்களை நீங்கள் வீட்டிலேயே எப்படி தயாரிக்கிறீர்கள் என்பதை அடுத்த பதிவில் எழுதவும்.

me the 50 ;)

பரிசல்காரன் said...

வெகுநாட்களுக்குப் பிறகு வெடிச் சிரிப்பு சிரித்தேன்...

கலக்கல் ஆதி..

(ஆமா எந்த ஆஸ்பத்திரில ட்ரீட்மெட்ல இருக்கீங்க இப்ப???)

துபாய் ராஜா said...

உங்களை மாதிரி ஆளுங்களை அடக்க இந்த மாதிரி ஆயுதங்கள் அவசியம்தான்... :))

Kathir said...

படமும் பின்னூட்டங்களும் சூப்பர்ங்க..

பதிவோட தலைப்ப பார்த்த உடனே ஏதோ சீரியஸ் ஆன பதிவு போல அப்படியே எஸ்கேப் ஆகலாம்ன்னு தான் நினைச்சேன். label பார்த்தப்புறம் தான் தைரியமா படத்தை பார்த்தேன்.

:)

மாதவராஜ் said...

சிரித்து சிரித்து ரசித்தேன்.....
ரசித்து ரசித்து சிரித்தேன்....

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி கார்ல்ஸ்.!
நன்றி விஜய்ஷங்கர்.!
நன்றி ராஜன்.!

நன்றி சரவணா.! (என்னா குதூகலம்? இருடி, உனக்கும் ஒருநாள் ஆகாமயா போகும்?)

நன்றி பரிசல்.! (மறைக்கப்பட்ட பதிவுகளில் இதுவும் ஒன்று. ஜம்முனு ஆபீஸ்லதான் இருக்கேன்.. ஹிஹி)

நன்றி துபாய்ராஜா.!
நன்றி கதிர்.!

நன்றி மாதவராஜ் அங்கிள்.!

பாலகுமார் said...

//சீடைன்னா சின்னதா இருக்கும்ங்க..இது வடை//

என்னது வடையாஆஆஆ ? :)

வெயிலான் said...

அருமையான ஆவணப்படம் ஆதி :)

பின்னோக்கி said...

என்னவோ.. எதோ.. இவரு டிஸ்கவரி ரேஞ்சுக்கு படம் எதாவது எடுத்துருக்காரு போலன்னு நினைச்சு பார்த்தா !!

ஈரோடு கதிர் said...

என்னா ஒரு வில்லத்தனம்....

ஆனாலும் சிரிக்காம இருக்க முடியல

सुREஷ் कुMAர் said...

ஆஹா.. பாவம்ங்க அந்த கொழந்த.. ஆயுதத்த எப்டி பயன்படுத்தனும்னுகூட தெரியலை..

க்ளைமாக்ஸ் என்னாச்சு.. அந்த கொயந்த ஆயுதத்த ஓபன் பண்ணிச்சா இல்லையா.. ஒரு சின்ன பீஸாச்சும் சாப்டுச்சா..

Mahesh said...

கொஞ்ச நாளைக்கு முன்னால ஒரு பூரிக்கட்டைப் பதிவு போட்டமே... ஞாபகமிருக்கா? இப்ப புரியுதுய்யா.... அந்த ஆயுதம் எதுன்னு.

அறிவிலி சொன்ன மாதிரி... வீட்டு சொந்தக்காரர் பாத்தா ரத்தக்கண்ணீர் விடுவாரு.

தமிழ்ப்பறவை said...

:-) :-)

கும்க்கி said...

அடேங்கப்பா....

உங்க பொலம்பலுக்கும் ஒரு அர்த்தம் இருக்குங்க அண்ணாச்சி..

பிரியமுடன்...வசந்த் said...

அய்யோ அம்மா முடியல சிரிச்சு சிரிச்சு வயிறு வலிச்சதுதான் மிச்சம்..

பேக்ரவுண்ட் மியூசிக்கும் ரொம்ப பொருத்தமா இருக்கு சார்...

ராமலக்ஷ்மி said...

ஆவணப் படம் அதுவும் பின்னணி இசையோடு...:))))! அருமை!

வித்யா said...

ம்ம்ம்...

cheena (சீனா) said...

பின்னணி இசை பிடித்திருக்கிறது

ஆயுதம் - இத வுடப் பெரிய ஆயுதம் எல்லாம் இருக்கு - வுடுங்க

ம்ம்ம்ம் பாவம் மக்கள்ஸ்

ஜெஸ்வந்தி said...

அது உண்மையில் என்ன? நீங்க செய்தது தானே? உண்மையைச் சொல்லுங்க?

மகேஷ் said...

செம நக்கலுங்க உங்களுக்கு. நீங்க இங்க பண்ற சேட்டையெல்லாம் அக்காவுக்கு தெரியாதுங்குற தைரியமா?

RAMYA said...

ஆதி, உங்க ஆவணப் படத்தை பார்த்து அசந்துட்டேன். எப்படி இப்படி உண்மையை எல்லாம் போட்டு டப்புன்னு உடைச்சிட்டீங்க. நீங்க ஒழுங்கா செய்யலைன்னு ரமாகிட்டே திட்டு வாங்கலை :)
ஒத்துக்கோங்க :)

படம் செம செம எப்படி இப்பூடி ஐடியா எல்லாம் வருது.....?:))

அடுத்த முறை போண்டா செய்யும்போது நல்லா செய்யனும் இப்படி எல்லாம் கஷ்டபாடாம நாங்க எல்லாரும் வந்து திங்கணும்......:))

ம்யுசிக் சூப்பர்.. இறுதியில் குழந்தைகிட்டே அதே கொடுத்து பாவம் குழந்தை சாப்பிட முடியாமல் ஏமாந்து போனது மாறி எனக்கு இருந்திச்சி :(

நல்லதா ஒன்னு செஞ்சி குழந்தைக்கு கொடுக்கச் சொல்லி ரமாகிட்டே சொல்லுங்க!!

ம்ம்ம்.. அடுத்தக் கட்டம் சினிமாதானே... போட்டோவிலே சுந்தர்.சி கணக்கா இல்லே இருக்கீங்க:)

ஹாலிவுட் பாலா said...

உங்களை.. “குழந்தைகள் சித்திரவதை” பிரிவில் கைது செய்ய சிபாரிசு பண்ணியிருக்கேன். :) :)

மணிநரேன் said...

நீங்கள் செய்ததுதானே???? அதனால்தானே தைரியமாக படம் எடுத்துள்ளீர்கள்....:)

ரசித்தேன்.

Truth said...

வயிறு வலிக்க சிரித்தேன். :-)
முடியல :-)

செந்தில் நாதன் said...

கலக்கல் சகா!! ஆனா உண்மைய சொல்லுங்க நீங்க தான பண்ணுனிங்க? :)

தாரணி பிரியா said...

படம் சூப்பர் மியூசிக்தான் கேட்க முடியலை. வீட்டுல போய் கேட்டுக்கிறேன்.

நிஜமாவே நான் ஒரு தடவை சுட்ட வடை கடைசி வரைக்கும் பிக்கவே முடியலை. திரும்ப மிக்ஸியில போட்டு உதிர்த்து சாப்பிட்டோம் :)

vanila said...

சூப்பரு.. ஆதி ஜி.. அப்புறம் நான் மலையாள ப்ளாக் செக்ஷன் தனிய ஆரம்பிசிட்டீங்களோ'ன்னுதான் முதல்ல நெனச்சேன்.. "Right side frame" ஐ முதலில் கண்ட போது.. "ஹை என்டே கம்ப்யூட்டர் கேம்ஸ் பிரியன் மார்'ந்னு",.. அப்புறம் ரெண்டாவது தடவ வாசிக்கும் போது தான்.. புரிஞ்சது.. கண்டிப்பா டிஸ்லெக்சியா இல்லை..
By the way, ஆயுதம் நல்லா இருந்துச்சு.. இதை போல "Maugier" - மைசூர்பா, "Malgier" - மாலாடு, "khryseur" - கேசரி, இப்படி நெறைய எதிர்பாக்குறோம்..

கிரி said...

ஆதி சரியான காமெடி போங்க ஹா ஹா ஹா

ஆனாலும் உங்களுக்கு ரொம்ப தில்லு தான்

ஆதிமூலகிருஷ்ணன் said...

அடப்பாவமே.. 77 பின்னூட்டம் போட்டீங்களே.! கண் திருஷ்டி படாம இருப்பதற்காவது தமிழ்மணத்துல ஒரு ஓட்டுப்போடப்பிடாதாய்யா.! நல்லாருங்கைய்யா..!!! :-))

rajan RADHAMANALAN said...

// ஓட்டுப்போடப்பிடாதாய்யா.! //

ம்க்கும் !

வார்டு எலக்சனுக்கே நாங்க முன்நூர்ருவா வாங்கிட்டு தான் போட்டோம் !
ஓசில போட நாங்க என்ன லூசுப் பயலுகளா ?

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி பாலகுமார்.!
நன்றி வெயிலான்.!
நன்றி பின்னோக்கி.!
நன்றி சுரேஷ்.!
நன்றி மகேஷ்.!
நன்றி பறவை.!
நன்றி கும்க்கி.!
நன்றி வசந்த்.!
நன்றி ராமலக்ஷ்மி.!
நன்றி வித்யா.!
நன்றி சீனா.!
நன்றி ஜெஸ்வந்தி.!
நன்றி மகேஷ்.!
நன்றி ரம்யா.!
நன்றி பாலா.!
நன்றி நரேன்.!
நன்றி ட்ரூத்.!
நன்றி செந்தில்நாதன்.!

நன்றி தாரணி.! (ஹிஹி.. மிக்ஸிக்கு ஒண்ணும் ஆவலியே)

நன்றி வனிலா.!
நன்றி கிரி.!

KVR said...

நீங்க எடுத்த ஆவணப்படத்திலேயே இது தான் சூப்பர்

angelintotheheaven said...

neenga thane antha seedai or bonda or the weapon ah senjinga


unmai solitenu enaku paratellam vendam

கடைக்குட்டி said...

கிக்க்கி... :-)

Karthik Viswanathan said...

குழந்தைக்கு இப்பவே பயிற்சியா...சூப்பர் அப்பு...

vanila said...

என்னாது சுந்தர் C 'யா... எங்க ஆதி கருப்பு M.G.R. மாதிரி கருப்பு அர்விந்த்சாமி.. ஆமாம்..

வெங்கிராஜா | Venkiraja said...

ஆவணப்படம்.. குழந்தைகள் படம் மாதிரி முடிந்ததில் சின்ன வருத்தமே. நீயா நானா கோபி ரேஞ்சில் ஒருவரை பிண்ணனியில் ஜுராசிக் பார்க் ஆரம்பத்தில் வருவது மாதிரி பேச விடுவது, அவ்வப்போது வீட்டார் அலறுவது போன்ற ஓசைகளில் ஃப்ரேமை ஃப்ரீஸ் செய்வது, கடைசி ஃப்ரேமில் லாரியடி எலுமிச்சை மாதிரி நசுங்கிய போண்டாவை எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் போட்டு வாய்ஸ் ஓவர் கொடுப்பது போன்ற 'டச்'கள் இருந்திருக்கலாம்.

நெஸ்ட்டு ஒரு யூத் சப்ஜெக்ட் செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

ரோஸ்விக் said...

எல்லாம்....கேபிளோட கொத்து பரோட்டவுல வர்ற சாப்பாட்டு கடைய நினச்சு வந்த தைரியம்னு நினைக்கிறேன்... :-) நடத்துங்க நடத்துங்க....

மகா said...

very nice film...

சரவணகுமரன் said...

இவ்ளோ நாள் கழிச்சு இன்னைக்கு தான் பார்த்தேன். அட்டகாசம் பண்ணி இருக்கீங்க.

இந்த குறும்பட விருது’ன்னு சொல்றாங்களே? அதுக்கு அனுப்ப கூடாதா?