Tuesday, November 24, 2009

ஹாலிடேஸ்.!

ரைமணி நேரம் தாமதமாக திருநெல்வேலி சந்திப்பை அடைந்தது நெல்லை எக்ஸ்பிரஸ். அதில் இருந்து இறங்கிய சில விநாடிகளிலெல்லாம் மறக்காமல் கேட்டான் ஹிமான்,

"ஹே.. விஜி, டோன்ட் பர்கெட் டு பை தெ ஹாட் ஹல்வா"

சசிகுமார் சிரித்துக்கொண்டிருக்கும் போதே விஜய் ஹிமானுக்கு பதிலளித்தான், "வீ 'வ் இனஃப் டைம் யார், தட் வில் பி சம் அதர் டைம். நவ் வியார் மூவிங் டு மை வில்லேஜ்"

ஹிமானின் லக்கேஜை குமார் எடுத்துக்கொள்ள நால்வரும் ரயில்நிலையம் விட்டு வெளிவந்தனர். விஜயின் வண்டி ஒன்று, குமாரின் வண்டி ஒன்றென இரண்டு டூவீலர்கள் இருந்தபோதும் கார் ஒன்றை எடுத்துக்கொள்ளலாமா என்று கேட்ட விஜயை தடுத்து டவுன் பஸ்ஸில் போகலாம் என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தான் ஹிமான். தாமதமாகி விடும் என்று சொல்லியும் பிடிவாதம் செய்தான் அவன். குமார் வண்டிகளையும் சில லக்கேஜ்களையும் தான் கொண்டு வந்துவிடுகிறதாக சொன்னதில் ஹிமானின் விருப்பப்படி தடதடவென கிளம்பிக்கொண்டிருந்த டவுன்பஸ்ஸில் ஓடி ஏறி மிச்சமிருந்த இருவர் சீட்டில் மூவராக நெருக்கியடித்துக்கொண்டு அமர்ந்து கல்லூரை நோக்கிய பயணத்தைத் தொடர்ந்தனர் அவர்கள்.

சென்னையிலிருந்து வந்த சசிகுமார், ஹிமான் இருவரையும் வரவேற்க நண்பன் குமாருடன் வந்திருந்த விஜய் அவர்களுடன் சென்னையில் பணிபுரியும் ஒரு ஸாஃப்ட்வேர் என்ஜினியர். அவன் இவர்களுக்கு முன்னதாகவே ஊருக்கு வந்துவிட்டிருந்தான். ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில் ஒரு நீண்ட விடுப்பு எடுப்பது அவனது வழக்கம். இந்த முறையும் திட்டப்படி 20 நாட்கள் லீவ் எடுத்திருந்தான். அதில் சரிபாதி கழிந்த நிலையில்தான் சசி, மற்றும் ஹிமானின் வரவு. விஜய் சென்னை வந்த ஆரம்ப காலத்திலேயே சசியுடனான நட்பு துவங்கியிருந்தது. ரசனைகள் ஒத்துப்போனதில் மெல்ல மெல்ல குடும்ப நண்பர்களாகிவிட்டிருந்தனர். பல நேரங்களில் சசியின் வீட்டிலேயே உணவு, தங்கல் என நெருங்கியிருந்தனர். சசியின் அம்மா விஜயை இன்னொரு பிள்ளையாகவே பார்த்தார்.

ஹிமான் டெல்லியிலிருந்து கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர்தான் இவர்களுடைய பிராஞ்சுக்கு வந்து இவர்களுடன் இணைந்துகொண்டிருந்தான். கூடுதலாக துவக்கத்தில் தங்குவதற்கு வசதியான அறை கிடைக்காமல் தவித்துக்கொண்டிருந்த ஹிமானுடன் தனது அறையைப் பங்கிட்டுக்கொண்டிருந்தான் விஜய். கலகலப்பான ஹிமானை இருவருக்குமே பிடித்திருந்தது. இருவர், மூவராக விஜய் அறையில் மதுவுடன் கூடிய ரசனையான இரவுகள் அவர்களது நட்பை வளர்த்ததுடன், வேலையின் இறுக்கத்தை போக்கிக்கொள்ளவும் உதவியது. அந்த நட்பின் தொடர்ச்சியாகவே இந்த விடுமுறையின் சில நாட்களை ஒன்றாக கழிக்கவே இருவரும் நெல்லை வந்திருந்தனர்.

ழிநெடுக வாய் ஓயாமல் பேசிக்கொண்டே வந்தான் ஹிமான். பக்கத்து சீட்களில் இருந்தவர்கள் இவனை வழிநெடுக வித்தியாசமாக பார்த்துக்கொண்டே வந்தனர். பஸ்ஸில் கரகரவென்ற இரைச்சலுடன் கூடிய எஃப் எம்மைவிட ஹிந்தி வாடையுடன் அவன் பேசிய ஆங்கிலம் அவர்களுக்கு சுவாரசியமாக இருந்திருக்கவேண்டும்.

கல்லூரில் அவர்கள் இறங்கியபோது நல்ல வெயில் கொளுத்தத்துவங்கியிருந்தது. வீட்டை அடைந்து காலை உணவை முடித்துக்கொண்டதும் ஓய்வெடுக்கலாமா என்ற விஜயை இருவருமே முறைத்தனர். ஹிமான் துவங்கினான்,

"நோ, வீ 'வ் ஒன்லி 5 டேஸ். விதின் தட் வீ ஷுட் ஸீ ஸோமெனி பிளேஸஸ்.. வாட்ஸ் தட் சசி? கூர்ட்டாலம்.. அன்ட்.."

நினைவுபடுத்திக்கொண்டவன் போல சசி தொடர்ந்தான், "ஆமாடா அவன் சொல்றது சரிதான், கன்யாகுமரி, குற்றாலம், பாபநாசம், கிருஷ்ணாபுரம்.. அப்புறம் கள்ளு வாங்கித்தரேன்னு சொல்லியிருக்கே.. உங்க தோப்புக்கு வேற போலாம்னு சொல்லியிருக்கே, இன்னும்.."

அது புரிந்தவன் போல ஹிமான், "ஆமாதா, யூ கமிட்டிட்" என்றான்.

"எனக்கு ஒண்ணுமில்ல, நீங்க ரெஸ்ட் எடுக்கணும்னுதான் சொன்னேன், அப்ப இப்பவே கிளம்பலாம். அப்புறம் எங்க தோப்புன்னு எப்ப சொன்னேன். எங்க காட்டுல ஒரு நாலஞ்சு மரம்தாண்டா இருக்கு. நான் சொன்னது எங்க அப்பாவோட ஃபிரெண்ட் தோப்பு. நானே சின்ன வயசுல போனது. டீப் இண்டீரியர் வில்லேஜ். மதிய சாப்பாட்டுக்கு போலாமா இன்னைக்கே? யூ ரெடி.?"

"நாங்க ரெடி. அங்க கள்ளு கிடைக்குமா?"

"ஷூ. சத்தம்போடாதே, அப்பா காதுல விழுந்துடப்போவுது. அதெல்லாம் வேற இடம். அதுவும் காலையிலயே சீக்கிரமே ஆத்துக்கு குளிக்கப்போறோம்னு சொல்லிட்டு போனாத்தான் கிடைக்கும். அதை நாளைக்கு இல்லன்னா நாளைக்கழிச்சு பாத்துக்கலாம். இப்போ இங்க போறதுக்கு எதுவும் வேண்டாம், வந்து நைட்டு பாத்துக்கலாம்."

"எனி பிராப்ளம் டு டேக் டிரிங்க்ஸ் தேர்?"

"நோ.. பட்.." என்று விஜய் முடிப்பதற்குள்

"தென், வி நீட் தெட்" என்றார்கள் இருவரும் ஒரே குரலில்.

வர்கள் அந்தப் பிரமாண்டமான கிணற்றடியிலிருந்த பம்ப் செட் கால்வாயில் உட்கார்ந்திருந்தனர். மூவருக்காகவும் இளநீர்க்காய்கள் பறித்துப்போடப்பட்டிருந்தன. ஒரு வேலையாள் வெட்டித்தந்துகொண்டிருந்தான். 70 க்கும் மேற்பட்ட தென்னைகள் இருந்த அந்தத் தோப்பின் முன்புறமாக கிணற்றைச்சுற்றிலும் பல கட்டங்களாக வாழை பயிரிடப்பட்டிருந்தது. ஹிமானும், சசியும் கிணற்றைப்பார்த்து பிரமித்திருந்தனர்.

"வீட்டுக்குப்போயி கோழிக்கறியும், சோறும் குடுத்துவிடுதேன் தம்பி. நீங்க குளிச்சுகிட்டிருங்க.. பாத்து விசய், இவுனுகளுக்கு நீச்ச தெரியுமா? இல்லன்னா குளிக்க மோட்டார போட்டுக்கிடு என்னா? எலே மாடசாமி, இவுங்க போற வரைக்கி இவுங்க கூடயே இருந்து பாத்துக்க.." என்று சொல்லிவிட்டு கிளம்பினார் துரை மாமா.

"சரி மாமா" என்று சொல்லிவிட்டு அவர் தலை மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்திருந்தான் விஜய்.

அதற்குள்ளாகவே பாட்டிலை ஓப்பன் பண்ணி இளநீருடன் கலக்கத்துவங்கியிருந்தான் சசி, "எத்தனை படத்துல பாத்துருக்கேன்."

அடுத்த ஒரு மணி நேரத்தில் சிறிது மது அருந்தி விட்டு, மரமேறுகிறேன் பேர்வழி என்று நெஞ்சில் சிராய்த்துக்கொண்டும், வாழைத்தோப்புக்குள் ஓட்டப்பந்தயம் நிகழ்த்தியும் விளையாடிவிட்டு குளிக்க ஆயத்தமாகினர். விஜய் பம்ப் செட் அறையின் சுவற்றுக்கு ஏறி அங்கிருந்து கிணற்றுக்குள் டைவ் அடித்தபோது ஹிமான் பிரமிப்பில் கூச்சலிட்டுக்கொண்டிருந்தான். சசி, ஹிமான் இருவருக்குமே கிணற்றில் இறங்க தைரியம் வரவில்லை. மாடசாமி கயிற்றில் கட்டிக்கொண்டு இறங்குங்கள், நான் பார்த்துக்கொள்கிறேன் என்ற போது துணிச்சலில்லை. மோட்டாரைப் போட்டு ஆனந்தமாக குளித்துமுடித்தபோது பசி வயிற்றைக்கிள்ள நேரம் மதியம் மூன்று மணியாகியிருந்தது.

"ஐம் ஸோ ஹங்க்ரி யார்.." என்று கத்திய ஹிமானுக்குப் பதிலாக,

"மீ ட்டூ" என்று சசி சொல்லிக்கொண்டிருக்கும் போதே விஜய் கிணற்றிலிருந்து மேலேறி வந்தான். அவனும் பசியை ஒப்புக்கொண்டு தலை துவட்டிக்கொண்டிருக்கவும் உணவு வந்துசேரவும் சரியாக இருந்தது.

ஒரு பெரிய தூக்குச்சட்டியில் சோற்றைச் சுமந்துவந்து கொண்டிருந்தாள் ஒரு இளம் பெண். எண்ணையிட்டு படிய வாரிய தலையுடன் சாதாரணத் தாவணியில் அலங்காரங்கள் ஏதுமில்லாதிருந்தாள். தெளிவான முகம், கவரும் கறுப்பு நிறம், கைகளில் கண்ணாடி வளையல், சத்தமிடும் கொலுசுக்கால்களில் ரப்பர் செருப்புகள், உறுதியான நடை, பளீர் இளமை. 'பாவாடை, சட்டையில் அப்பாவின் வேட்டியைப் பிடித்துக்கொண்டு, இடது கையில் பிளாஸ்டிக் கிளியை வைத்துக்கொண்டிருந்த அகிலாவா இது?'.. கிக் அத்தனையும் இறங்கிவிட அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் விஜய்.!

..........

(பி.கு : முடிவு நாளை. இந்தக்கதைக்கு நான் யோசித்து வைத்திருக்கும் முடிவைவிட சிறப்பான முடிவை பின்னூட்டத்தில் சொல்பவர்களுக்கு பரிசு தரலாமென்று இருக்கிறேன். நிஜமாகவேங்க.. சில பிரபல எழுத்தாளர்கள் கையொப்பமிட்ட நான் பாதுகாத்து வைத்திருக்கும் அவர்களது புத்தகங்கள், எனக்குப் பிடித்தமான முதல் மூன்று முடிவுகளுக்கு.!)

.

32 comments:

தியாவின் பேனா said...

இதுவே நல்ல முடிவுதான்

முகிலன் said...

"ஹேய் ஹு ஸ் திஸ் வில்லேஜ் ப்யூட்டி?" என்று விசிலடித்தவாறு கேட்டான் ஹிமான்.
"மே பி ஹிஸ் அங்கிள்ஸ் டாட்டர்" என்றான் சசி.
"ஆமாண்டா. சின்ன வயசில பாவாட சட்ட போட்டுட்டு மூக்கு ஒழுக நிப்பா. இப்போ எண்ணெய் வழிய நிக்கிறா" என்று ஆங்கிலத்தில் கதைத்தான் விஜய்.
"வொய் ஷுட் தீஸ் வில்லேஜ் பீப்புள் ட்ரெஸ் இண்டீசென்ட்லி?"
"நோ. திஸ் இஸ் நாட் இண்டீசென்ட். திஸ் இஸ் அவர் Traditional டிரஸ் அண்ட் தேர் இஸ் எ ஸ்பெஷல் ரீசன் வொய் வீ டிரஸ் லைக் திஸ்" என்றால் கோவையில் எஞ்சினீரிங் படிக்கும், விடுமுறையில் வீட்டுக்கு வந்திருக்கும் அகிலா

நாகா said...

தோ இட்ஸ் லெங்க்தி, கோயிங் நைஸ்யார்.. முகிலன்'ஸ் ஃபினிஷிங் ஆல்சோ குட் மேன்.. கண்டினியூ யுவர் குட் வொர்க் ஆதி

cheena (சீனா) said...

கத நல்ல இருக்கு - முடிவக் கேக்கறீஙக் - ம்ம்ம்ம் - வூட்ல அகிலாவ விஜய்க்கு மணம் செய்ய விரும்பித்தான் இப்ப இங்கே அனுப்பி இருக்காக

நல்வாழ்த்துகள் ஆதி

♠ ராஜு ♠ said...

அட போங்க அங்கிள், இந்த முடிவை வச்சு இன்னோர் கதையே எழுதலாம். முடிவாம் முடிவு..!

♠ ராஜு ♠ said...

@முகிலன்
நல்லாருக்கு பாஸ்.

நாடோடி இலக்கியன் said...

தியாவின் பேனாவை வ.மொ.

karisalkaran said...

ஆதி அங்கிள்
முடிவு நாளை
இந்தக்கதைக்கு நான் யோசித்து வைத்திருக்கும் முடிவைவிட சிறப்பான முடிவை நீங்கள் எழுதினால் உங்ககளுக்கு நான் அபுதாபில் இருந்து வரும்போது ஒரு பரிசு தரலாமென்று இருக்கிறேன். நிஜமாகவேங்க (Smirnoff or Bakardi)

லெமூரியன்... said...

கதை நல்ல இருக்குங்க....!

கார்க்கி said...

கரிசல்காரனா? ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Rajeswari said...

என்ன முடிவா இருக்கும் ம்ம்ம்ம்ம்!!!!!!!!!யோசி ராஜி...

அ.மு.செய்யது said...

முடிவோடு வருகிறேன் !!!

செந்தில் நாதன் said...

நா உங்களுக்கு ஒரு முடிவ மினஞ்சல் அனுப்பி இருக்கேன் ஆதி.

ஏனோ பின்னுட்டத்துல போட்டா பிளாக்கர் காரி துப்புது. நம்ம எழுத்து அதுக்கு கூட பிடிகல. எல்லாம் நேரம்.

முகிலன் முந்திடாருனு நினைக்குறேன். அவருக்கு முன்னாடி அடிச்சேன்னு சொன்னா நம்பவா போறீங்க...சரி விடுங்க பாஸ்.. இதெல்லாம் அரசியல்ல சகஜம்....

ஸ்ரீமதி said...

சிறப்பான முடிவு..

(சொல்லிட்டேன்... புத்தகம் எங்க வந்து வாங்கிக்கனும்???)

அ.மு.செய்யது said...

Mailed you !!!!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி தியா.!

நன்றி முகிலன்.! (முதல் போட்டியாளருக்கு வாழ்த்துகள். ஒரு பக்கக் கதைபாஃர்மெட்டில் நல்லாயிருக்குது உங்கள் முடிவு)

நன்றி நாகா.!
நன்றி சீனா.!
நன்றி ராஜு.!
நன்றி இலக்கியன்.!

நன்றி கரிசல்காரன்.! (உங்கள் ஊக்கம் மகிழ்ச்சியளிக்கிறது. :-))

நன்றி லெமூரியன்.!
நன்றி கார்க்கி.!
நன்றி ராஜி.!

நன்றி செய்யது.! (பார்த்துட்டேன். என்ன சொல்றதுன்னே புரியலை..)

நன்றி செந்தில்.! (நம்புகிறோம், ஆனாலும் முகிலனும் நீங்களும் கிட்டத்தட்ட ஒரே முடிவைத்தான் சொல்லியிருக்கிறீர்கள்)

நன்றி ஸ்ரீமதி.!

ஆதிமூலகிருஷ்ணன் said...

பாஸிடிவோ, நெகடிவோ இதுவரை ஓட்டே வாங்காமலிருந்த நான் ஆரம்பமே அதகளமாக மைனஸ் ஓட்டு வாங்கி பிரபல பதிவராகிவிட்டேன்னு நினைக்கிறேன். அவ்வ்வ்வ்வ்வ்வ்..

அ.மு.செய்யது$ said...

முடிவுகளை பிரசுரிப்பீர்களா ?? பின்னூட்டத்தில்
போட முடியவில்லையென்று தான் மின்னஞ்சல் செய்தேன்.

குப்பன்.யாஹூ said...

கல்லூர்ல இருந்து முப்பத்து ஆறாம் நம்பர் பஸ் புடிச்சு அல்லது கல்லூர் வேலாயுதம் அண்ணாச்சி கார்ல டவுன் வந்து கீழ ரத வீதி இருட்டு கடை ல அல்வா வாங்கிடாங்க்ளா,

அல்லது ஜன்க்சன் சாந்தி ஸ்வீட் புளிச்ச அல்வாதான் வாங்க முடிஞ்சுதா. என்ன க்ளைமாக்ஸ்

ஒரே சஸ்பென்சா இருக்கு

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஏதோ பிரச்சினை, முயற்சிக்கிறேன் செய்யது.!

நன்றி குப்பன்.!

ஆதிமூலகிருஷ்ணன் said...

செந்தில்நாதன், செய்யது.. தமிழ் எழுத எந்த மென்பொருளைப் பயன்படுத்துகிறீர்கள்? பின்னூட்டம் ஏற்க மறுக்கிறது.

தராசு said...

அகிலாவின் வனப்பு வசீகரிக்கும்படி இல்லையாயினும், வயது இழுத்ததில் இழுபட்ட மூவரும் வாயை மூட மறந்திருக்க,

"சாப்பாடு, உங்களுக்கு" என சொல்லிவிட்டு, லாவகமாய் சோத்துச் சட்டியையும், மணக்கும் கோழிக் குழம்பையும் இறக்கி வைத்தவள், என்ன ஏது என கேட்க நினைப்பதற்குள் மறைந்து போனாள்.

"வொய் ஷி ரேன் அவே" என்ற கேள்விக்கு,

"மச்சி, எங்க ஊர் பொண்ணுகெல்லாம் அப்படித்தான், அத்தை பையனை தனியா பார்த்தா கட்டிக்குவாளுக, அதே ரெண்டு பேரோட பார்த்தா வெட்டிக்குவாளுக" என்றான் விஜய்.

சுசி said...

எழுதிடலாம்... ஆனா இங்க இருந்து அங்க வந்து பரிச வாங்கிற டிக்கட் செலவு யோசிக்க வைக்குது ஆதி...

கதை சூப்பர்....

Anonymous said...

முகிலனோடது நல்லா இருக்கு :)

அதி பிரதாபன் said...

அதி: ஒரே முடிவை ரெண்டுபேர் சொன்னா எப்படி பரிசு குடுப்பீங்க?

ஆதி: பரிசை சமமா பிரிச்சு குடுத்துருவேன்.

அதி: அப்போ முகிலனுக்கு ரிப்பீட்டே...

Thirumathi JayaSeelan said...

படிக்க படிக்க interest ஆக இருந்தது.

sriram said...

ஆதி..
நானே மூணு விதமான முடிவுகளை எழுதி எல்லா புத்தகங்களையும் பெற முடியும், அப்புறம் மத்த எல்லாருக்கும் ரொம்ப ஏமாற்றமா போயிடுமே?? அப்புறம் உங்களுக்கும் புத்தகங்களை பாஸ்டன் அனுப்புவதற்கு ரொம்ப செலவாகும்.. என்னால எதுக்கு மத்தவங்களுக்கு ஏமாற்றமும் செலவும்... அதனால நான் ஜகா வாங்கிக்கிறேன்..
(ச்சீ இந்த பழம் புளிக்கும்னு நான் நெனைக்கவே இல்லை... நம்புங்க ஹி ஹி)

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

அன்புடன் அருணா said...

முடிவை யோசிச்சுட்டு வர்றேன்!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி தராசு, சுசி, அம்மிணி, பிரதாபன், ஜெயசீலன், ஸ்ரீராம் ,அருணா.. அனைவருக்கும் நன்றி.!!

முடிவு வெளியிட்டாச்சு..
http://www.aathi-thamira.com/2009/11/blog-post_3463.html

செந்தில் நாதன் said...

என்னோட முடிவ பார்க்க

http://blogsenthilnathan.blogspot.com/2009/11/blog-post_24.html

பா.ராஜாராம் said...

அருமையான நடை..சுவாராஸ்யமான போட்டி.வேலை கொஞ்சம் படுத்துது.இல்லாவிட்டால் ஒரு கை பார்க்கலாம்.கால நிர்ணயம் உண்டா?

விக்னேஷ்வரி said...

கிராமத்து வாசனை உணர வைக்கும் அழகான வர்ணனை.