Wednesday, November 4, 2009

ஸ்வீட் பண்ணியது யாரு? (முற்றிய ஒரு தொடர்)

இவ்வளவு விரைவாக தீபாவளித்தொடரைத் தொடர என்னை அழைத்த தோழி ஸ்ரீமதிக்கு என் அன்பான (கொஞ்சம் நற நற..) நன்றிகள்.! அப்படியே கேள்விகளுக்கு போய்விடலாம்.. ஐயா.. நன்றாக கேட்டுக்கொள்ளுங்கள் இங்கேயும் 10 கேள்விகள் இருக்கின்றன. இந்த பத்துக்கு நான் பொறுப்பல்ல..

1. உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு?

..முடியல..

2. தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம்?

..நாங்கள் சண்டை போட, அதைப்பார்த்து பெரியவங்களும் சண்டை போட நடக்காமலே போய்விட்ட எங்கள் தலைதீபாவளி. எதுக்காக சண்டை போட்டோம்னே இப்போ மறந்துபோச்சுது, ஹிஹி..

3. 2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள்?

..சென்னையில், முதன்முறையாக..

4. த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள்?

..குடும்ப உறுப்பினர்கள் யாரையும் மிஸ் பண்ணாததால் எந்த வித்தியாசமும் தெரியவில்லை..

5. புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?

..ஆரெம்கேவி..

6. உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள்? அல்ல‌து வாங்கினீர்க‌ள்?

..செய்யப்பட்டவை : முறுக்கு(அம்மா), வடை(மைத்துனி), பஜ்ஜி(தம்பி), சுசியம்(ரமா), குலோப்ஜாமூன்(நான்)..
..வாங்கப்பட்டவை : திருநெல்வேலி சாந்திஸ்வீட்ஸ் அல்வா மற்றும் மிக்ஸர் (அப்பா)..

7. உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை)?

..வந்த கால்களுக்குப் பதில் மட்டும். SMS-க்குக்கூட பதில் கிடையாது.. அடப்பாவி (நான் என்னைச்சொன்னேன்)..

8. தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா?

..நம்புங்க, அன்று டிவி மொத்தத்துல அரை மணி நேரம் ஓடியிருந்தாலே அதிகம்தான். அதே சமயம் வெளியே செல்லவும் இல்லை. சும்மா ஊர் வம்பு, உறவினர் வம்பு பேசிக்கொண்டிருந்தோம். அதுவே எங்களுக்கு ஜாலியான பொழுதுபோக்கு..

9. இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள்? தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம்?

..பிறந்தநாள், புத்தாண்டு, பண்டிகை தினங்கள் என உதவி செய்ய நாட்கள் ஃபிக்ஸ் செய்துகொள்வதில்லை. அதே சமயம் சில வருடங்களாக சொல்லிக்கொள்ளுமளவு எந்த உதவியும் யாருக்கும் செய்துவிடவுமில்லை..

10. நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள்?

..அடுத்த தீபாவளியே வந்துவிடும் ஆபத்திருப்பதால், யாரையும் கோர்த்துவிடாமல் சங்கிலியை இங்கே கட் செய்கிறேன்..

நன்றி.!
.

32 comments:

அ.மு.செய்யது said...

// குலோப்ஜாமூன்(நான்).. //

ரசித்தேன்..!!!

Cable Sankar said...

/.அடுத்த தீபாவளியே வந்துவிடும் ஆபத்திருப்பதால், யாரையும் கோர்த்துவிடாமல் சங்கிலியை இங்கே கட் செய்கிறேன்.//

:)

Truth said...

//குலோப்ஜாமூன்(நான்).
அட...

தராசு said...

அந்த பத்தாவது கேள்விக்கு பதில் தான் நச்.

//உதவி செய்ய நாட்கள் ஃபிக்ஸ் செய்துகொள்வதில்லை.//

அதான, எப்ப தோணுதோ அப்பல்லாம் பதிவு போட்டு கொல்றதுக்கு நாளு நேரமெல்லாமா பார்ப்பாங்க.

அமிர்தவர்ஷினி அம்மா said...

:)))))))))

இளவட்டம் said...

:))))))

எம்.எம்.அப்துல்லா said...

//அடுத்த தீபாவளியே வந்துவிடும் ஆபத்திருப்பதால், யாரையும் கோர்த்துவிடாமல் சங்கிலியை இங்கே கட் செய்கிறேன்..


//

இந்த டீலிங் எனக்கு ரொம்ப புடுச்சுருக்கு :)

துபாய் ராஜா said...

//நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள்?

..அடுத்த தீபாவளியே வந்துவிடும் ஆபத்திருப்பதால், யாரையும் கோர்த்துவிடாமல் சங்கிலியை இங்கே கட் செய்கிறேன்..//

அது.... :))

அத்திரி said...

பதிவர் சந்திப்புக்கு குளோப் ஜாமுனை எதிர்பார்க்கலாமா

நர்சிம் said...

புண்ணியமாப் போச்சு..

அமுதா கிருஷ்ணா said...

ஆரம்கேவியும்,சாந்தியும் மறக்காத அக்மார்க் நெல்லை தீபாவளி...

KVR said...

//..அடுத்த தீபாவளியே வந்துவிடும் ஆபத்திருப்பதால், யாரையும் கோர்த்துவிடாமல் சங்கிலியை இங்கே கட் செய்கிறேன்..
//

இது சூப்பர்

கார்க்கி said...

முற்றிய ஒரு தொடர் என்பதில் ஸ்ரீமதிக்கு ஏதும் உள்குத்து இல்லையே?

ராமலக்ஷ்மி said...

ஸ்வீட்டாய் ஒரு பதிவு:))!

புதுகைத் தென்றல் said...

குலோப்ஜாமுன் நீங்க செஞ்சீங்க!!!

நம்பிட்டோம். (ஆதாரமா ஒரு பதிவு நான் செஞ்ச ஸ்விட்டுன்னு போட்டோவோட போட்டிருந்தா நம்புவோம்.)

:)))))))

RAMYA said...

பதிவு இனிக்குதுங்க :)

RAMYA said...

//
கார்க்கி said...
முற்றிய ஒரு தொடர் என்பதில் ஸ்ரீமதிக்கு ஏதும் உள்குத்து இல்லையே?
//

இவருக்கு (கார்க்கிக்கு) ஒரு குத்து விடலாமா :))

ஆரூரன் விசுவநாதன் said...

:))))

சுசி said...

//அடுத்த தீபாவளியே வந்துவிடும் ஆபத்திருப்பதால், யாரையும் கோர்த்துவிடாமல் சங்கிலியை இங்கே கட் செய்கிறேன்//

இந்த நற்செயல் பதிவுலக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது....

Karthik said...

கடைசி பதிலில் வெளிப்பட்ட உங்கள் சமூக அக்கறை உண்மையில் பாராட்டப்பட வேண்டியது.. :)

ஆதிமூலகிருஷ்ணன் said...

அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் நன்றி.!

(பின்னூட்டம் போடாதவர்களின் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. அவர்கள் மீது தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்)

RAMYA said...
This comment has been removed by the author.
RAMYA said...
This comment has been removed by the author.
RAMYA said...

//
ஆதிமூலகிருஷ்ணன் said...
(பின்னூட்டம் போடாதவர்களின் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. அவர்கள் மீது தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்)
//

அப்பா! நான் தப்பிச்சேன் என்ன நடவடிக்கையோ??

எண்ட தெய்வமே :-)

பாலராஜன்கீதா said...

//(பின்னூட்டம் போடாதவர்களின் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. அவர்கள் மீது தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்) //
:-)

தத்துபித்து said...

list la irunthu en perai eduthu vidunganne.
.
10vathu pathilil ungal samooga akkarai therigirathu.
.

தத்துபித்து said...

/// 9. இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள்? தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம்?///

அடுத்த தீபாவளியே வந்துவிடும் ஆபத்திருப்பதால், யாரையும் கோர்த்துவிடாமல் சங்கிலியை இங்கே கட் செய்கிறேன்//

namma ellorukkum than. ungal udavikku nanri anna.

ஸ்ரீமதி said...

//இவ்வளவு விரைவாக தீபாவளித்தொடரைத் தொடர என்னை அழைத்த தோழி ஸ்ரீமதிக்கு என் அன்பான (கொஞ்சம் நற நற..) நன்றிகள்.!//

எனக்கே தீபாவளி முடிஞ்சு ரொம்ப நாள் கழிச்சு தான் வந்தது. அதை கவனிக்கலயா நீங்க? அவ்வ்வ்வ் :))

//குலோப்ஜாமூன்(நான்).//

நிஜமாவா?? :)))

// சும்மா ஊர் வம்பு, உறவினர் வம்பு பேசிக்கொண்டிருந்தோம். அதுவே எங்களுக்கு ஜாலியான பொழுதுபோக்கு..//

நல்ல பொழுது போக்கு.. :)))

அப்போ விருது வாங்கினதுக்கு தனிப்பதிவு வருமா அண்ணா?? (விடமாட்டோம்ல...) ;))))

ஸ்ரீமதி said...

//கார்க்கி said...
November 4, 2009 4:35 PM முற்றிய ஒரு தொடர் என்பதில் ஸ்ரீமதிக்கு ஏதும் உள்குத்து இல்லையே? //

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வந்தமா பதிவ படிச்சமான்னு போகமாட்டீங்களா???? :))

ஸ்ரீமதி said...

//RAMYA said...
//
கார்க்கி said...
முற்றிய ஒரு தொடர் என்பதில் ஸ்ரீமதிக்கு ஏதும் உள்குத்து இல்லையே?
//

இவருக்கு (கார்க்கிக்கு) ஒரு குத்து விடலாமா :))//

விட்டுட்டா போச்சு.. ;)))

மங்களூர் சிவா said...

/
..நாங்கள் சண்டை போட, அதைப்பார்த்து பெரியவங்களும் சண்டை போட நடக்காமலே போய்விட்ட எங்கள் தலைதீபாவளி.
/

இம்புட்டு இளிச்சவாயனாண்ணா நீ?
உன் மாமனார் கில்லாடிங்ணா!

குடும்பத்தில்
குண்டுவைப்போர் சங்கம்
மங்களூர் கிளை

மங்களூர் சிவா said...

/
..நாங்கள் சண்டை போட, அதைப்பார்த்து பெரியவங்களும் சண்டை போட நடக்காமலே போய்விட்ட எங்கள் தலைதீபாவளி.
/

கல்யாணம் ஆகி தலைதீவாளிக்குள்ளவே சண்டையா?
செம தில்லான ஆள்தானுங்ணா!

நமக்கெல்லாம் இன்னும் அந்த தகிரியம் வர்ல
:)))