Wednesday, November 25, 2009

தங்க(மணி)மொழிகள்

முன்குறிப்பு :

தயவுசெய்து பெண்கள் எஸ்கேப்பாகி விடுங்கள். டேமேஜ் கொஞ்சம் ஜாஸ்தியாக இருக்கும், அப்புறம் கோபத்தில் என்னை டேமேஜ் ஆக்கிவிடாதீர்கள்.! சமீபத்தில் நான் ரசித்த ஒரு ஃபார்வேர்டட் மெயிலின் எனது தமிழாக்கம் இந்தப்பதிவு. சில உலகளாவிய அறிஞர்களின் தத்துவ மொழிகளை இங்கே தருகிறேன். லிஸ்டில் கடைசியாக இருக்கும் நபர் யாரென உங்களுக்கு அறிமுகம் தேவையில்லை என நினைக்கிறேன். ஹிஹி..


Socrates

கல்யாணம் பண்ணிக்கொள்ளுங்கள். ஒன்று நீங்கள் மகிழ்ச்சியாக வாழக்கூடும், அல்லது ஒரு நல்ல தத்துவவாதி உருவாகக்க்கூடும்.

Dumas

இதுவரை விடைதெரியாத ஒரு பெரிய கேள்வி என்னிடம் உள்ளது. 'இந்தப் பெண்களுக்கு என்னதான் வேண்டுமாம்?'

Sigmund Freud

என் மனனவியிடம் சில வார்த்தைகளில் கேட்டேன். அவள் பல பத்திகளில் பதிலளித்தாள்.

David Bissonette

உனது மனைவியை ஒருவன் அபகரித்துக்கொண்டானானால் நீ சும்மா இருந்துவிடுவதை விட பெரிய பழிவாங்கல் வேறெதுவுமிருக்கமுடியாது.

Sam Kinison

பணத்தை நெட் பேங்கிங்கை விடவும் மிக வேகமாக செலவு செய்யும் வழியொன்றை நான் அறிந்தேன். அது கல்யாணம் செய்துகொள்வது.

James Holt McGavran

கல்யாணத்தைப் பொறுத்த வரை நான் மிகவும் துரதிருஷ்டசாலி. என் முதல் மனைவி என்னை பிரிந்து சென்றுவிட்டாள். இரண்டாவது மனைவி அதைச் செய்யவில்லை.

Sacha Guitry

கணவனும் மனைவியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். ஒன்றாகவேதான் இருக்க நேரிடுகிறது, ஒருவரை ஒருவர் ஃபேஸ் பண்ணவே முடியாவிட்டாலும்.

Patrick Murray

மகிழ்ச்சியான மணவாழ்வுக்கு இரண்டு ரகசியங்களை நினைவில் கொள்ளுங்கள் ஆண்களே.! நீங்கள் காரியங்களில் தவறு செய்கின்ற போதெல்லாம் அதை ஒப்புக்கொண்டுவிடுங்கள். சரியாக செய்கின்ற போதெல்லாம் அமைதியாக இருந்துவிடுங்கள்.

Nash

உங்கள் மனைவியின் பிறந்தநாளை தவறாது நினைவில் கொள்ள ஒரு வழி உள்ளது. ஒரே ஒரு முறை மறந்துவிட்டால் போதும்.

Henny Youngman

நானும் என் மனைவியும் 20 வருடங்களுக்கும் மேலாக மகிழ்ச்சியாக வாழ்ந்தோம். அதன் பின்னர்தான் நாங்கள் சந்தித்துக்கொண்டோம்.

Anonymous

திருமணத்துக்கு முன்னர் நான் என்ன செய்துகொண்டிருந்தேன் என நீங்கள் அறிந்துகொள்ள விரும்புகிறீர்களா? வாழ்ந்துகொண்டிருந்தேன்.

Anonymous

சிலர் எங்கள் மணவாழ்க்கையின் வெற்றியின் ரகசியத்தைக்கேட்கின்றனர். நானும் என் மனைவியும் தவறாமல் வாரம் ஒரு முறை மகிழ்வாக வெளியே ஊர்சுற்றச் செல்கிறோம், தனித்தனியாக.!

Thamira

உங்கள் மனைவியைத் தேர்ந்தெடுக்க அவர் நல்லவரா, கெட்டவரா என்ற குழப்பமெல்லாம் உங்களுக்குத் தேவையேயில்லை. உங்களுக்கு இருப்பது அவர் பிரச்சினைக்குரியவர் என்ற ஒரே ஒரு ஆப்ஷன் மட்டும்தான்.!

.

58 comments:

Rishi said...

Good One Jee!!

Vidhoosh said...

மிக மிக மோசமான மொழிபெயர்ப்பு என்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்கிறேன். :))

-வித்யா

குசும்பன் said...

//தயவுசெய்து பெண்கள் எஸ்கேப்பாகி விடுங்கள். டேமேஜ் கொஞ்சம் ஜாஸ்தியாக இருக்கும், அப்புறம் கோபத்தில் என்னை டேமேஜ் ஆக்கிவிடாதீர்கள்.!//

இங்கயே நீங்கள் பெண்களை பற்றி தவறாக புரிஞ்சுக்கிட்டு இருக்கீங்க என்பது தெரிகிறது. பெண்கள் உண்மையை சொன்னால் எப்பொழுதும் கோச்சுக்கமாட்டாங்க! :)))

குசும்பன் said...

//ஒரு ஃபார்வேர்டட் மெயிலின் எனது தமிழாக்கம் இந்தப்பதிவு. //

ஓ அந்த அளவுக்கு போச்சா?

*******
//ஒரு நல்ல தத்துவவாதி உருவாகக்க்கூடும்.
//

தத்துவவாதி ஆதி பேரு நல்லா ரைமிங்கா இருக்குல்ல!

******

//என் மனனவியிடம் சில வார்த்தைகளில் கேட்டேன். அவள் பல பத்திகளில் பதிலளித்தாள்.
//

பெஸ்ட் மொளவிரதம் இருக்க சொல்வது, அப்பொழுதான் கொஞ்சமாக காதில் இரத்தம் வரும்:))

***********
//நாணயத்தின் இரு பக்கங்கள். ஒன்றாகவேதான் இருக்க நேரிடுகிறது, ஒருவரை ஒருவர் ஃபேஸ் பண்ணவே முடியாவிட்டாலும்.
//

ஒது இதுதான் காரணமாக பல பயபுள்ளைங்க இன்னொரு நாணயத்தின் அடுத்த பக்கத்தோடு ஒட்டி உறவாடுவது.

********

vanila said...

திருமணம் ஆகாதவர்களுக்கான எச்சரிக்கை, மும்பத்தொன்பதை தொட்டாச்சு.. அடுத்து என்ன.. பொஸ்தகமா?.. Keep Going Aathi ji..

குசும்பன் said...
This comment has been removed by the author.
கரிசல்காரன் said...

//மகிழ்ச்சியான மணவாழ்வுக்கு இரண்டு ரகசியங்களை நினைவில் கொள்ளுங்கள் ஆண்களே.! நீங்கள் காரியங்களில் தவறு செய்கின்ற போதெல்லாம் அதை ஒப்புக்கொண்டுவிடுங்கள். சரியாக செய்கின்ற போதெல்லாம் அமைதியாக இருந்துவிடுங்கள்//

உண்மையை சொல்லுங்க‌ இது யார் சொன்ன‌து ???

KVR said...

எனக்கு கடைசி தத்துவவாதியின் தத்துவம் ரொம்ப பிடிச்சிருக்கு

Anonymous said...

கொஞ்சம் பழைய ஜோக்ஸ் என்றாலும் நல்லா ரசிக்கும்படி இருந்தது...

ஆரூரன் விசுவநாதன் said...

ரொம்பத்தான் தைரியம் ஆதி உங்களுக்கு.....

அருமை....வாழ்த்துக்கள்

அன்புடன்
ஆரூரன்

cheena (சீனா) said...

வூட்ல பர்மிஷன் வாங்கியாச்சா ஆதி

நல்லாவே இருக்கு

நாணயத்தின் இரு பக்கங்கள் - குசும்பன் க்மெண்டு சூப்பர்

நல்வாழ்த்துகள் ஆதி

சங்கர் said...

//மகிழ்ச்சியான மணவாழ்வுக்கு இரண்டு ரகசியங்களை நினைவில் கொள்ளுங்கள் ஆண்களே.! நீங்கள் காரியங்களில் தவறு செய்கின்ற போதெல்லாம் அதை ஒப்புக்கொண்டுவிடுங்கள். சரியாக செய்கின்ற போதெல்லாம் அமைதியாக இருந்துவிடுங்கள்//

சுஜாதா இதை இப்படி மொழிபெயர்த்திருப்பார் (கணையாழியின் கடைசிப்பக்கங்கள்)

முதலிரு வரிகள் நினைவில் இல்லை,

"தவறென்றால் ஒத்துக்கொள்,
சரியென்றால் பொத்திக்கொள்"

நர்சிம் said...

கலக்கல்..’கல்’

ஆதிமூலகிருஷ்ணன் said...

ரிஷி,
விதூஷ் (ஹை.!),
குசும்பன் (பெண்கள் கோச்சுக்க மாட்டாங்களாம்.. ஹெஹெ..)
வனிலா,
கரிசல்,
கேவிஆர்,
தமிழரசி,
ஆரூரன்,
சீனா,
சங்கர்,
நர்சிம்.. அனைவருக்கும் நன்றி.!

டம்பி மேவீ said...

எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை....... இதையெல்லாம் படித்தால் இனிமேல் ஆகவும் ஆகாது....

எனக்கு தெரிந்து கலயாணமான பின் சந்தோஷமாக இருக்க ஒரே வலி(ழி) சரணாகதி அடைவது தான்.... இன்னொரு விஷயம் சில நேரங்களில் முளை என்று ஒன்னு இருப்பதை மறந்து விட வேணும்.

பெண்ணின் அம்மா அப்பாவை கடவுள் என்ற நிலையில் வைத்து பார்க்க வேண்டும் (நம்ம அப்பா அம்மாவை அம்மா, அப்பா என்று பார்த்தாலே போதும்)

கலயாணத்திற்கு பிறகு சுவையான உணவை தேட கூடாது.... எல்லோர் கிட்டயும் மனைவியை உயர்வாக பேச வேண்டும் ஏனென்றால் யார் எப்பொழுது போட்டு குடுப்பார்கள் என்று தெரியாது.....

அவள் விகடன், மங்கையர் மலர் போன்றவையை தான் உலகின் சிறந்த இலக்கியங்களாக கருத வேண்டும்.... மெகா சீரியல்களை சுப்பி ஞானியின் தத்துவங்களாய் எண்ண வேண்டும் ....

இது போன்று இன்னும் நிறைய இருக்கு... வேண்டுவோர் எனக்கு மெயில் அனுப்புங்க

குசும்பன் said...

பெண்கள் ஆதரவு இல்லாததால் பெரும் தோல்வியடைந்த இந்த பதிவை எழுதியதுக்காக வருத்தப்பட்டு அண்ணன் ஆதி இன்னும் ஒருவருடம் வரை எந்த பதிவும் எழுதமாட்டார் என்பதை மிகுந்த .......... தெரிவித்துக்கொள்கிறேன்!

இப்படிக்கு
ஆதி பேரவை

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி மேவீ.! (ஏன் இப்பிடீ.?)

நன்றி குசும்பன்.! (முன்குறிப்பெல்லாம் சும்மா போடுறதுதான். அதுக்காக இப்பிடியா வராம முன்குற்றிப்போடு கிளம்பிப்போவாங்க.? கூட்டமே இல்லாம கடை காத்தாடுது.. அவ்வ்வ்வ்.. ஹூம்,எல்லா இடத்துலயும் பெண்கள் சப்போர்ட் தேவைப்படுது பாருங்க, இது நாயமா குசும்பர்.?. என் கடையில கூட்டம் இல்லைன்னா சந்தோஷப்படுற ஒரே ஜீவன் நீங்கள்தான். உங்ககிட்டப்போய் நான் குறைப்பட்டுக்கிறேன் பாருங்க.. :-((((

கார்க்கி said...

//மிக மிக மோசமான மொழிபெயர்ப்பு என்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்கிறேன். :))//

ரொம்ப கம்மின்னு சொல்றாங்களோ????????

புதுகைத் தென்றல் said...

ஆட்டம் ஜாஸ்தியா இருக்கே...

என்னம்மா சொ்ல்ற?!!

இல்ல. ஆதியின் ஆட்டம் ஜாஸ்தியா இருக்கே!! கவலையே படாத ஹஸ்பண்டலாஜி புரொபசர் அவங்க ரங்கமணியை சந்திக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டாங்க.


:)))

புதுகைத் தென்றல் said...

ஹஸ்பண்டலாஜி புரொபசர்ஆதியோட ரங்கமணியை சந்திக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டாங்க.//

இப்படி இருந்திருக்கணும்.

லெமூரியன்... said...

ஹா ஹா ஹா என்னப்பு இப்டி திடீர்னு உண்மையா போட்டு உடைசிடீங்க...
அப்போ கல்யாணம் பண்ற எண்ணத்த கைவிட்டிட்றேன் இப்போவே...
நீ நல்ல இருக்கணும் அப்பு...! :-)

இராகவன் நைஜிரியா said...

அண்ணே ஆதி அண்ணே...

முடியல ...

ஸ்ரீமதி said...

//கல்யாணம் பண்ணிக்கொள்ளுங்கள். ஒன்று நீங்கள் மகிழ்ச்சியாக வாழக்கூடும், அல்லது ஒரு நல்ல தத்துவவாதி உருவாகக்க்கூடும்.//

அப்போ நீங்க தத்துவவா(வியா)தியா அண்ணா?

ஸ்ரீமதி said...

//இதுவரை விடைதெரியாத ஒரு பெரிய கேள்வி என்னிடம் உள்ளது. 'இந்தப் பெண்களுக்கு என்னதான் வேண்டுமாம்?'//

இத ரமா அண்ணிகிட்ட கேட்டிருந்தா எப்பவோ பதில் சொல்லிருப்பாங்க.. அவங்கள விட்டுட்டு இங்க வந்து கேட்டு என்ன ப்ரயோஜனம்.. கார்க்கி மாதிரி ஒரு பிரம்மச்சாரி(?!) என்ன பதில் சொல்வார்? ;))

ஸ்ரீமதி said...

//என் மனனவியிடம் சில வார்த்தைகளில் கேட்டேன். அவள் பல பத்திகளில் பதிலளித்தாள்.//

பல பத்திகாளில் சொன்னாதான் உங்களுக்கு புரியும்ன்னு நினைச்சிருக்கலாம்.. பெண்கள் இயற்கையாவே கொஞ்சம் ஷார்ப்.. அதான் நீங்க எதுக்கு அடி போடரீங்கன்னு டக்குன்னு புரிஞ்சிக்கிட்டாங்க... ம்க்கும்.. :))

ஸ்ரீமதி said...

//உனது மனைவியை ஒருவன் அபகரித்துக்கொண்டானானால் நீ சும்மா இருந்துவிடுவதை விட பெரிய பழிவாங்கல் வேறெதுவுமிருக்கமுடியாது.//

நிஜமாவே சிரிச்சிட்டேன்... :)) கொஞ்ச நாளுக்கு முன் படிச்ச ஜோக் தான் ஞாபகம் வருது...

கணவன்: (Operation theater-க்கு வெளியில்) எனக்கு எதாவது ஆச்சுன்னா நீ அந்த டாக்டர கல்யாணம் பண்ணிக்கனும்...

மனைவி: ஏன்????

கணவன்: அவர பழிவாங்க இதத்தவிர வேற வழி எனக்குத் தெரியல...

ஸ்ரீமதி said...

//பணத்தை நெட் பேங்கிங்கை விடவும் மிக வேகமாக செலவு செய்யும் வழியொன்றை நான் அறிந்தேன். அது கல்யாணம் செய்துகொள்வது.//

என்னமோ நீங்கள் எல்லாம் செலவே செய்யாதது மாதிரி :)))

ஸ்ரீமதி said...

//Thamira


உங்கள் மனைவியைத் தேர்ந்தெடுக்க அவர் நல்லவரா, கெட்டவரா என்ற குழப்பமெல்லாம் உங்களுக்குத் தேவையேயில்லை. உங்களுக்கு இருப்பது அவர் பிரச்சினைக்குரியவர் என்ற ஒரே ஒரு ஆப்ஷன் மட்டும்தான்.!//

தத்துவவாதி தாமிரா வாழ்க! வாழ்க!! :)))))))))

அறிவன்#11802717200764379909 said...

Over to Rama madam...

ஸ்ரீமதி said...

அச்சச்சோ நான் பாட்டுக்கு இத்தன கமெண்ட் போட்டுட்டேனே... :((( ஆதி அண்ணா நீங்க அழகா நன்றி ஸ்ரீமதி இதானே போட போறீங்க? நடத்துங்க.. இதயே காபி& பேஸ்ட் செஞ்சிடுங்க... ஹி ஹி ஹி வேலையாவது மிச்சம்.. ;)))))

அமிர்தவர்ஷினி அம்மா said...

கணவனும் மனைவியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். ஒன்றாகவேதான் இருக்க நேரிடுகிறது, ஒருவரை ஒருவர் ஃபேஸ் பண்ணவே முடியாவிட்டாலும்.

+

உங்கள் மனைவியின் பிறந்தநாளை தவறாது நினைவில் கொள்ள ஒரு வழி உள்ளது. ஒரே ஒரு முறை மறந்துவிட்டால் போதும்.


top :))))))))

தயவுசெய்து பெண்கள் எஸ்கேப்பாகி விடுங்கள். டேமேஜ் கொஞ்சம் ஜாஸ்தியாக இருக்கும் //

பாருங்க, இதுலயும் டேமேஜ் உங்களுக்குத்தான் :)

அ.மு.செய்யது said...

அது என்னவோ அனானிமஸ் கமெண்ட்டு மட்டும் அவ்வளவு சுவாஸியமா இருக்கு !!!! இங்க கூட !!!

Anonymous said...

ஆதி,

http://ojasviviji.blogspot.com/2009/04/blog-post_02.html

இது நான் மொழிபெயர்த்தது. :))

ஹாலிவுட் பாலா said...

நான் கேள்வியே கேட்கலைன்னா கூட.. பதில் மட்டும்... ‘பக்கம் பக்கமா’ வரும்.

சிக்மண்ட் கொடுத்து வச்சவரு.

Mahesh said...

தங்கமணி மொழிகளை விட ரங்கமணியின் மொழிபெயர்ப்பு அருமை !!

மேட்டரா? அதை விடுங்க ஆதி....இவிய்ங்க எப்பயுமே இப்பிடித்தேன் !!!

sriram said...

ஆதி..
இப்பவாவது சொல்லுங்கள், ரெண்டு பெண்டாட்டி கட்டிக்கிறவங்களப் பத்தி ஒங்க கருத்து என்ன?
"Once bitten twice shy" தவிர வேற ஏதாவது சொல்லுங்க..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

கடைக்குட்டி said...

ஹெ ஹெ.. என்னத்த சொல்ல

வால்பையன் said...

//ஒது இதுதான் காரணமாக பல பயபுள்ளைங்க இன்னொரு நாணயத்தின் அடுத்த பக்கத்தோடு ஒட்டி உறவாடுவது. //

காந்த துண்டின் இரு நேர் எதிர் துருவங்கள் என்றுமே ஒட்டி கொள்ளும்!
ஆனால் அந்த துண்டின் மறுமுனையுடன் தான் ஒட்டுவது இயலாத காரியம்!

அறிவிலி said...

:))

பினாத்தல் சுரேஷ் said...

மனிதனுக்குத் திருமணம் மீனுக்கு சைக்கிளைப் போன்று அவசியமானது :-) (இதுவும் அதே பார்வேர்டு மெயில்லே வருமே, விட்டுட்டீங்களா?)

பினாத்தல் சுரேஷ்

எங்கள் வீட்டில் எல்லா வாதங்களிலும் நான் சொல்வதுதான் கடைசி வார்த்தை. அந்த வார்த்தை: “நீ சொல்லிட்டா அப்பீல் ஏது?”

தமிழ்ப்பறவை said...

:-)
சரி அதை விடுங்க... கடைசி மூணு பொன்மொழியும் நீங்களே எழுதிட்டு,ரெண்டுக்கு anany பேரைப் போட்டது ஏன்..?

Rajalakshmi Pakkirisamy said...

//உங்கள் மனைவியின் பிறந்தநாளை தவறாது நினைவில் கொள்ள ஒரு வழி உள்ளது. ஒரே ஒரு முறை மறந்துவிட்டால் போதும். //

ha ha ha

Romeoboy said...

மனைவிகள் ஜாக்கிரதை...

விஜய் ஆனந்த் said...

// இவரது ஃ ப்ளாக்கை என் மகள் சொல்லித்தான் நான் படித்தேன் //

:-)))...

ஹய்யோ.. ஹய்யோ!!!

Anonymous said...

//Thamira

உங்கள் மனைவியைத் தேர்ந்தெடுக்க அவர் நல்லவரா, கெட்டவரா என்ற குழப்பமெல்லாம் உங்களுக்குத் தேவையேயில்லை. உங்களுக்கு இருப்பது அவர் பிரச்சினைக்குரியவர் என்ற ஒரே ஒரு ஆப்ஷன் மட்டும்தான்.!//

இந்த தத்துவவாதி யாரு??? :)

எம்.எம்.அப்துல்லா said...

//கொஞ்சம் பழைய ஜோக்ஸ் என்றாலும் நல்லா ரசிக்கும்படி இருந்தது...

//

ஹல்லோ...இன்னாது???? ஜோக்க்க்கா??????
மனுசன் சீரியசா பேசிக்கிட்டு இருக்கான்??

:))

andal said...

kavithaikku mattum aval vikatan ketkuta anyway mazhai kavithai arumai

Anonymous said...

ஆதி அப்படியே இதையும் கொஞ்சம் மொ(மு)ழி பெயர்த்துப் போடுங்கள்

woman has MAN. Mrs has Mr. Female has Male. Madam has Adam. But all women's problem starts with men. MENtal illness. MENstrual cramps, MENopause. And women have to go to a GUYnacologist to get a HIStrectomy.

Rajeswari said...

ஏன் இந்த கொலை வெறி..சும்மாவே எங்க வூட்டு தங்கராசு ஆயுதம் ஆவணபடம் பார்த்துட்டு ஒரு மிதப்பா இருக்காப்புல ..இதுல இந்த பொன்மொழிகள் வேறயா...
நடத்துங்க ராசா நடத்துங்க...

நேசமித்ரன் said...

:)

Nice

ஆதிமூலகிருஷ்ணன் said...

அதான் அவ்வளவு தெரிஞ்சிருக்கே தம்பி மேவீ.. கல்யாணம் பண்ணிக்கிறதுதானே.!

ஆதிமூலகிருஷ்ணன் said...

அதான் நானும் நினைச்சேன்.. கார்க்கி.!

அப்படியும் இருக்கக்கூடாது பிரண்ட். தங்கமணின்னு இருந்திருக்கணும்.

நீங்க புது ஸ்டூடண்டா லெமூரியன். லேபிளை கிளிக் பண்ணுங்கள்.

அதெல்லாம் முயற்சி பண்ணினா முடியும் இராகவன்.

ஒவ்வொரு கமெண்டுக்கு பதில் சொல்றப்போ சிரிக்கும் லட்சணத்துலயே உங்கள் நியாயம் தெரிகிறது. பாவம்தானே நாங்கள்.. ஸ்ரீமதி.?

நன்றி அறிவன்.

என்ன பண்றது? விதி வலியது அமித்து அம்மா.!

நன்றி செய்யது.

அதையும் படித்தேன் மயில். தெரிந்திருந்தால் இந்தப்பதிவை ட்ராப் செய்திருப்பேன். உங்களோடதை ரொம்ப நாளா படிச்சிட்டிருக்கேன். எப்படி மிஸ் பண்ணினேன் தெரியலை.

கரெக்டா சொன்னீங்க பாலா.

நன்றி மகேஷ்.

என் மூக்கை உடைக்காம என்னை விடுறதா இல்லையா ஸ்ரீராம்?

நன்றி கடைக்குட்டி.

விளங்கிரும் வால்பையன்.!

நன்றி அறிவிலி.

நீங்கள் மூத்த அறிஞராச்சே பினாத்தல். உங்கள் பொன்மொழியையும் சேர்த்துடலாமா லிஸ்டில். அப்புறம் அதென்ன மீனுக்கு சைக்கிள்.?

நன்றி தமிழ்பறவை.

நன்றி ராஜலக்ஷ்மி.

நன்றி ரோமியோ.

ஏன் விஜய் உங்களுக்கு இந்தப்பொறாமை? :-))

அவர் நம் தமிழகத்தைச் சார்ந்த ஒரு பிரபல அறிஞர் அம்மிணி.

அப்படிச்சொல்லுங்க அப்துல்.

நன்றி ஆண்டாள்.

அதை பெயர்த்தேன்னா என் முழி பிதுங்கிடும்னுதான் நீங்களே சொல்லிட்டிங்களே அண்ணே.

தங்கராசுவை எங்கள் சங்கத்ஹில் சேரவிடாம மிரட்டுறீங்களாமே ராஜி? உண்மையா.?

நன்றி நேசமித்திரன்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

@ பினாத்தல் :

நான் ஒரு லேட்பிக்கப்(ட்யூப்லைட்)னு திரும்பவும் ப்ஃரூவ் பண்ணிட்டேன்.

முந்தின கமெண்டை பப்ளிஷ் பண்ணிக்கொண்டிருக்கும்போதே மீனுக்கு சைக்கிள்னா என்னன்னு புரிந்துவிட்டது சீனியர்.

அவ்ளோ முக்கியமா நமக்கு கல்யாணம்.? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

அதி பிரதாபன் said...

தத்துவஆதி,
எல்லாத்துக்கும் நம்பர் போட்டுருந்தீங்கன்னா ஓட்டுப்போட வசதியா இருந்துருக்கும்ல... அடுத்த தடவ விட்டுறாதீங்க (இன்னும் வரும்னு எதிர்பாக்குறேன்).

angelintotheheaven said...

http://nagaichuvaii.blogspot.com/2009/11/men-and-women-02.html

ithuku poi parunga u can know all problems of women includes men

கார்க்கி said...

// கார்க்கி மாதிரி ஒரு பிரம்மச்சாரி(?!) என்ன பதில் சொல்வார்? ;)//

நீயுமாம்மா? ரைட்டு

அன்புடன் அருணா said...

இப்புடீல்லாம் அவ்வளோ ஈஸியா எங்களை டேமேஜ் பண்ண முடியாதுங்கோ!

வெற்றி said...

//மகிழ்ச்சியான மணவாழ்வுக்கு இரண்டு ரகசியங்களை நினைவில் கொள்ளுங்கள் ஆண்களே.! நீங்கள் காரியங்களில் தவறு செய்கின்ற போதெல்லாம் அதை ஒப்புக்கொண்டுவிடுங்கள். சரியாக செய்கின்ற போதெல்லாம் அமைதியாக இருந்துவிடுங்கள்.//


இதனை சுஜாதா அழகாக தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.......

இல்லற இன்பத்துக்கு
இதுமட்டும் கத்துக்கொள்
தப்பென்றால் ஒத்துக்கொள்
சரியென்றால் பொத்திக்கொள்!