Monday, November 30, 2009

கலர்

அரசியல்வாதிகளுக்குப் பின்னால் ரௌடிகளும், தாதாக்களும் பின்புலமாக இயங்குகிறார்கள் என்று நாம் அறிந்திருக்கிறோம். இவர்கள் அடிதடி, வெட்டுகுத்து மூலமாக எதிரிகளை போட்டியிடாமல் செய்வது, மிரட்டல், பணப்பட்டுவாடா மூலமாக மக்களை ஓட்டுப்போடச்செய்வது, கள்ள ஓட்டுப்போடுதல், பூத் கேப்சரிங், கலவரங்கள் போன்ற பல முக்கிய காரியங்களைச்செய்து அவர்களை தேர்தலில் வெற்றி பெறச்செய்து எம்பியாகவோ, எம்எல்ஏவாகவோ ஆக்குகிறார்கள். அதன் பின் என்னவாகிறது? எல்லா காரியத்துக்கும் அவர்களையே இவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதாகிறது. உழைப்பை இவர்கள் போட பணம், பதவி, அதிகாரம் எல்லாத்தையும் அவர்கள் அடைகிறார்கள். என்ன அநியாயம் இது? ஆகவே அவர்களே நேரடியாக தேர்தலில் குதிக்கிறது என்று முடிவு செய்தால் என்னவாகும்? இதைப்போல ஒரு காட்சி ஏதோ ஒரு படத்தில் வருகிறது.

இந்த தமிழ்ப்பட இயக்குனர்கள் ஹீரோவாக ஆகியே தீருவது என்று முடிவு செய்து படையெடுத்திருப்பதை நினைத்தால் எனக்கு இந்தக்கதைதான் ஞாபகம் வந்து தொலைக்கிறது. கேட்டால் இந்தக்கதைக்கேற்ற மூஞ்சி கிடைக்கவில்லை என்று விஞ்ஞானம் பேசுவது.. இந்த லிஸ்டில் லேட்டஸ்ட் ரௌடி அமீர்.

*********************************

'டீலா நோடீலா' என்று ஒரு மொக்கை நிகழ்ச்சி சன் டிவியில் வருகிறது. அதைக்கூட பார்க்கவில்லை, அதன் விளம்பரத்தைத்தான் நேற்று பார்த்தேன். ஒரு பெண்மணி குடும்பக் கஷ்டத்தில் தங்கள் காரை விற்றுவிட்டதாகவும், சாண்ட்ரோ கார் வேண்டாம்.. அதை விடவும் பெரிய்ய கார் அவருக்கு வாங்கித்தரவேண்டும் என்று புலம்பியபடி அழுதுகொண்டிருந்தார். ஆசையென்னவோ நல்ல ஆசைதான், ஆனால் என்னாங்கடா இது? இதைப்பற்றி என்ன சொல்றதுன்னே எனக்குப் புரியவில்லை. கருமம்.

*********************************

அடுத்து விஜய் டிவியில் 'அணுவளவும் பயமில்லை' என்று பெண்கள் தங்கள் வீரத்தைக்காட்டும் நிகழ்ச்சி. அனு நடத்திய முதல் பாகம் என்னவோ கொஞ்சம் ஆர்வமாகத்தான் இருந்தது. ஆனால் இப்போது 'பெப்பே பெப்பே' என லட்சுமி ராயின் அழகுத்தமிழ் சகிக்கவில்லை. இத்தனைக்கும் அவர் எனக்கு பிடித்தமான நடிகைதான். ஒரு நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து நிகழ்ச்சியை நடத்த தமிழ் தெரியாவிட்டால்கூட பரவாயில்லை, குறைந்தபட்சம் கலகலவென பேசுவதுதான் (அர்த்தமில்லாத உளறலாக இருந்தாலும் கூட) அடிப்படைத்தேவை என்ற லாஜிக் கூட இல்லாமல் இவரையெல்லாம் யார் செலக்ட் செய்தது என்றுதான் புரியவில்லை. ஜீன்ஸும், டாப்ஸும் போட்டுக்கொண்டு உயரமாக இருந்தால் போதும் என முடிவுசெய்திருக்கிறார்களோ என்னவோ?

அதோடு நேற்றைய நிகழ்ச்சியில் கண்ணாடித்தொட்டிக்குள் இடுப்பளவு குளிர்ந்த நீரில் ஒரு பெண்ணை இறக்கி விட்டு கேமை ஆரம்பித்தார்கள். அதிலிருக்கும் ஏணி வழியாக ஏறி வெளியே வந்து ஒரு ஐஸ்தூள் குவியலில் ஒளித்துவைக்கப்பட்டுள்ள கோடரியை கைகளால் ஐஸை தோண்டி வெளியே எடுத்துவிட்டு, அந்தக்கோடரியால் ஒரு பெரிய ஐஸ் கியூபை உடைத்து உள்ளிருக்கும் ஒரு கல்லை எடுக்கவேண்டும். நன்றாகத்தான் இருக்கிறது, கைகள் குளிரத்தான் செய்யும். ஆனால் இந்தப்பெண்கள் அதைச்செய்து முடித்துவிட்டு வந்து பண்ணும் அலப்பறைகள் இருக்கிறதே.. ஒருவர் தரையில் படுத்து உருளுகிறார், இன்னொருவர் உட்கார்ந்து அழுகிறார். ஏதோ அண்டார்டிகாவில் புதைந்துகிடக்கும் கப்பலை ஒத்தையாளாக வெளியே கொண்டு வந்ததைப்போல எக்ஸெலண்ட், மார்வலெஸ், இன்கிரிடிபிள் என பாராட்டி.. ஏதோ இந்தமுறை பரவாயில்லை, இனிமே உங்க வாழ்க்கையிலேயே இந்த மாதிரி ரிஸ்க் எடுக்காதீங்க என எச்சரித்து.. முடியல..

*********************************

கலர் (கவிதை)

அடிப்படை வண்ணங்கள் மூன்று
அதிலிருந்து எழுபவை ஏழு
இன்னும் இன்னுமென கூடுபவை கோடி
எங்களால் உணரமுடிவது சில நூறு
உங்களால் முடிவது சில ஆயிரம்
எது எப்படியாயினும்
சாக்லெட் கலருக்கும்
காப்பிபொடி கலருக்கும்
இடைப்பட்ட வண்ணத்தினாலான
புடவையை என்னால் கண்டுபிடிக்கவே முடிவதில்லை.

(இந்தக்கவிதைக்கும், உரையாடல் கவிதைப்போட்டி அறிவிப்புக்கும் எந்த சம்பந்தமுமில்லை. கவிதையென்றாலே காதல், தாய்மை, வறுமை, போராட்டம் என மெல்லுணர்வுகளும், வல்லுணர்வுகளும் மட்டும்தானா.. நகைச்சுவை கிடையாதா என்ற எண்ணத்தில் நான் செய்த சிறு முயற்சி இது.. ஹிஹி.!)

.

47 comments:

Anonymous said...

//சாக்லெட் கலருக்கும்
காப்பிபொடி கலருக்கும்
இடைப்பட்ட வண்ணத்தினாலான
புடவையை என்னால் கண்டுபிடிக்கவே முடிவதில்லை//

கண்டுபிடிக்க முடியாட்டி ரமா கிட்ட கேளுங்க

andal said...

அந்த நிகழ்ச்சியை பார்க்க முயற்ச்சி செய்தேன் பத்து நிமிடங்களுக்கு மேல் பார்க்க முடியல. மரண மொக்கை

அ.மு.செய்யது said...

//எக்ஸெலண்ட், மார்வலெஸ், இன்கிரிடிபிள் என பாராட்டி.. //

"மைண்ட் ப்ளோயிங் !! " இத மறந்துட்டீங்களே தல.

//சாக்லெட் கலருக்கும்
காப்பிபொடி கலருக்கும்
இடைப்பட்ட வண்ணத்தினாலான
புடவையை என்னால் கண்டுபிடிக்கவே முடிவதில்லை//

அப்படி தோல்விய ஒத்துக்கிட்டு கிளம்ப பாருங்க..!!!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

கவிதை நல்லாயிருக்கு :) :) :)

ராமலக்ஷ்மி said...

அந்த விளையாட்டு நிகழ்ச்சிகள்?
சொல்ல ஏதுமில்லை:(!

கலர்:)! நல்ல கலர்:))!

KaveriGanesh said...

ஆதி,

கல்யாணம் ஆகியும் கலர் பார்க்கிறத விடவில்லை என்று தெரிகிறது.

பாபு said...

சன் T.V mahalakshmi (அந்த குண்டு பெண் ) ஐஸ் வெட்டும் போது பார்த்தீர்களா?

குசும்பன் said...

//கவிதையென்றாலே காதல், தாய்மை, வறுமை, போராட்டம் என மெல்லுணர்வுகளும், வல்லுணர்வுகளும் மட்டும்தானா.. நகைச்சுவை கிடையாதா என்ற எண்ணத்தில் நான் செய்த சிறு முயற்சி இது.. ஹிஹி.!)//

ஆதி என்ன இது இப்படி தப்பு தப்பா தோனுது உங்களுக்கு!

நீங்க எழுதும் எல்லா கவிதையுமே நகைச்சுவைதான்!

(நீ புடுங்குற ஆணி எல்லாமே தேவை இல்லாததுதான் என்ற ஸ்டைலில் படிங்க!)

குசும்பன் said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
கவிதை நல்லாயிருக்கு :) :) :)
//

அவ்வ்வ் இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே...

குசும்பன் said...

//சாக்லெட் கலருக்கும்
காப்பிபொடி கலருக்கும்
இடைப்பட்ட வண்ணத்தினாலான
புடவையை என்னால் கண்டுபிடிக்கவே முடிவதில்லை//

சாக்லேட் கலருக்கும்,கரிக்கட்டை கலருக்கும் இடைப்பட்ட கலரில் இருக்கும் நம்மையே தேடி கண்டுபிடிச்சு இருக்காங்க வீட்டு அம்மணிங்க... அவுங்களுக்காக புடவைய கண்டுபிடிக்கமாட்டீங்களா ஆதி!:)))

நாஞ்சில் நாதம் said...

//சாக்லெட் கலருக்கும்
காப்பிபொடி கலருக்கும்
இடைப்பட்ட வண்ணத்தினாலான
புடவையை என்னால் கண்டுபிடிக்கவே முடிவதில்லை//

கவிதை ஹா ஹா

முகிலன் said...

நானும் அந்தப் பெண்மணி அழுவதைப் பார்த்தேன் கொஞ்சம் டூ மச் தான்.. (அவனவன் அடுத்த வேளை சோத்துக்கே வழி இல்லாத போது இவங்க காருக்கு அழுகுறாங்களாம்)

அப்பாவி முரு said...

//சாக்லெட் கலருக்கும்
காப்பிபொடி கலருக்கும்
இடைப்பட்ட வண்ணத்தினாலான
புடவையை என்னால் கண்டுபிடிக்கவே முடிவதில்லை//

என்ன சித்தப்பு, அடி ரொம்ப பலமோ...

எம்.எம்.அப்துல்லா said...

யோவ் அண்ணே, என்னய்யா ஆச்சு உனக்கு??!?!?

இன்னைக்கு இடுகை உண்மையிலேயே பிரமாதமா இருக்கு.

:))

Vidhoosh said...

ரீடரில் படிச்சிட்டு பேசாம போயிடலாம்னுதான் பாத்தேன்..
//சாக்லெட் கலருக்கும்
காப்பிபொடி கலருக்கும்
இடைப்பட்ட வண்ணத்தினாலான//

இது simply superb.. :))

-வித்யா

தண்டோரா ...... said...

/சாக்லெட் கலருக்கும்
காப்பிபொடி கலருக்கும்
இடைப்பட்ட வண்ணத்தினாலான
புடவையை என்னால் கண்டுபிடிக்கவே முடிவதில்லை//

யோவ்..காசு கொடுகிறது மட்டும் தான் உன் வேலை..

மண்குதிரை said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு

கார்க்கி said...

கவிதை சூப்பர்.. போட்டிக்கே அனுப்பலாம்

அமீர், முதலில் இருந்தே நான் கூவிய அதே வசனம் தான்.

அணு அளவும் பயமில்லை. இந்த நிகழ்ச்சி பெண்களின் வீரத்தை மையப்படுத்தியல்ல. பெரும்பாலும் தண்ணியிலே காட்டுவாங்க. உங்க ஸ்டைல்ல சொன்னா, லோ ஹிப் ஜீன்ஸூம், டைட்டா டாப்சும் நடுவுல் கேப்ஸும் இருக்கிற மாதிரியே டிரஸ் போடுவாங்க. இதுல அனு செட்டாகல. அதான் லட்சுமிராய்.போன சீசன்ல தாரிகாவுக்கு கவர்ச்சியா டிரஸ் பண்றதுக்காக எக்ஸ்ட்ரா தொகை கொடுத்ததாக செய்தி. விகடனில் இதை தாரிகாவிடம் கேள்வியாகவே கேட்டாங்க. அவங்க வழக்கம் போல இல்ல இல்ல. நான் பால் வாங்கவே இந்த டிரஸ்லதான் போவேன்னு சொன்னாங்க. நான் மகாலட்சுமிக்காக வேற வழி இல்லாம பார்க்கிறேன்.

கார்க்கி said...

// ஜ்யோவ்ராம் சுந்தர் said...
கவிதை நல்லாயிருக்கு :) :)//

ஆவ்வ்வ்.. அனுஜன்யாவுக்கு போட்டியா?

பிரியமுடன்...வசந்த் said...

//சாக்லெட் கலருக்கும்
காப்பிபொடி கலருக்கும்
இடைப்பட்ட வண்ணத்தினாலான
புடவையை என்னால் கண்டுபிடிக்கவே முடிவதில்லை.//

கிகிகிகி..

அறிவிலி said...

நீங்க ஒருத்தர்தான் எனக்கு புரியற மாதிரி கவிதை எழுதறீங்க, அதையும் இந்த குசும்பன் கெடுத்துருவாரு போலருக்கு...

நல்லாயிருக்கு.. :))))

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி அம்மிணி.!
நன்றி ஆண்டாள்.!
நன்றி செய்யது.!

நன்றி சுந்தர்ஜி.! (ஹிஹி)

நன்றி ராமலக்ஷ்மி.!
நன்றி காவேரி.!

நன்றி பாபு.! (ஐய்யய்யோ மிஸ் பண்ணிட்டனே, மற்ற பொண்ணுங்க பண்ணும் போதுதான் பாத்தேன், அப்படி என்ன ஆச்சுது?)

நன்றி குசும்பன்.! (சாக்லேட் கலருக்கும்,கரிக்கட்டை கலருக்கும் இடைப்பட்ட கலரில் இருக்கும் நம்மையே தேடி கண்டுபிடிச்சு இருக்காங்க வீட்டு அம்மணிங்க..// இதுக்காகவாவது நேரில் வந்து உங்கூட்டு அம்மிணியை பாராட்டணும்னு பிளான் வச்சிருக்கேன்.)

நன்றி நாஞ்சில்.! (கவிதை எப்பூடி?)

நன்றி முகிலன்.! (கரெக்டா சொன்னீங்க)

நன்றி முரு.!

நன்றி அப்துல்லா.! (அப்போ மற்ற பதிவெல்லாம்? ஸ்டாரண்ணே.. ஏன் இந்த கொலவெறி.. ஹிஹி)

நன்றி விதூஷ்.!
நன்றி தண்டோரா.!
நன்றி மண்குதிரை.!

நன்றி கார்க்கி.! (இப்போதான் புரியது. இப்பிடி இறங்கிட்டானுங்களா இப்ப? அப்ப நாம என்னாத்த சொல்றது.. நடத்தட்டும்.)

நன்றி வசந்த்.!

அமிர்தவர்ஷினி அம்மா said...

டீலாநோடீலா, அணு அளவும் பயமில்லை - ரொம்ப கடுப்பாக இருக்கிறது பார்க்க.

அதுவும் சாண்ட்ரோ கார் கேட்ட அம்மணி ரொம்பவே ஓவர். அந்த கிளிப்பிங்கை பார்க்க நேர்ந்தபோது
அக்கா பெண் அடித்த கமெண்ட், ‘நீயே ஒரு மினி நகை ஸ்டாண்ட் மாதிரிதாம்மா இருக்க, அத வித்தா கார் இல்ல கப்பலே வாங்கலாம் போல’

கவிதை - கலர் அனுபவம் கம்மியோ :)

மணிகண்டன் said...

கவிதை கலக்கல் ஆதி.

சுசி said...

//ஆசையென்னவோ நல்ல ஆசைதான், ஆனால் என்னாங்கடா இது? இதைப்பற்றி என்ன சொல்றதுன்னே எனக்குப் புரியவில்லை. //
அதே அதே... அதிலேம் அவங்க கணவர் பட்டபாடு... அடா அடா அடா...

//அண்டார்டிகாவில் புதைந்துகிடக்கும் கப்பலை ஒத்தையாளாக வெளியே கொண்டு வந்ததைப்போல//
ஹாஹாஹா.... சூப்பர்...

ரமா கேட்ட கலர் கிடைச்சதும் ஒரு போட்டாவ புடிச்சு போட்டு விடுங்க. அது என்ன கலர்னு நாங்களும் பாக்கணும்.

ஸ்ரீமதி said...

//சாக்லெட் கலருக்கும்
காப்பிபொடி கலருக்கும்
இடைப்பட்ட வண்ணத்தினாலான
புடவையை என்னால் கண்டுபிடிக்கவே முடிவதில்லை.//

வாவ் தாங்க்ஸ் அண்ணா ஞாபகப்படுத்தினதுக்கு... இந்த கலர்ல மைசூர் சில்க் ஒன்னு கேட்டிருந்தேன்... இன்னும் வரல..:)))

cheena (சீனா) said...

ஆதி கலர் கண்டுபிடிக்க முடிலன்னா ஒரு கண் டாக்டர் கிட்டே போகணும் - கலர் பிளைண்ட்னஸ் செக் பண்ணனும் - ஆமா

துபாய் ராஜா said...

த்ரிஷா ப்ளூ,சிநேகா பச்சை கலர் இருக்கிறது எல்லாம் கல்யாணத்திற்கு அப்புறம்தான் தெரிஞ்சுது ஆதி.... :))

கார்க்கி said...

//த்ரிஷா ப்ளூ//

ஒரு நிமிஷம் ஆடி போயிட்டேன்

Mahesh said...

அடப் போங்க ஆதி... கல்யாணத்துக்கு அப்பறம் கருப்பு வெள்ளைலயே நமக்கு சந்தேகம் வந்துடுது... காபியாம்.. சாக்லேட்டாம். உங்க தங்கமணி ரொம்ப நல்லவங்க போல :)

அனுஜன்யா said...

ரொம்ப ரசிச்துப் படித்தேன் ஆதி. கவிதை உண்மையிலேயே நல்லா இருக்கு. நகைச்சுவை நிச்சயம் அவசியம்.

அனுஜன்யா

க‌ரிச‌ல்கார‌ன் said...

//பாபு said...
சன் T.V mahalakshmi (அந்த குண்டு பெண் ) ஐஸ் வெட்டும் போது பார்த்தீர்களா?
ஆதிமூலகிருஷ்ணன் said... ஐய்யய்யோ மிஸ் பண்ணிட்டனே//

த‌ல‌ ந‌ம்ம‌ குல‌ வ‌ழ‌க்க‌த்தையே மாத்திருவீங்க‌ போலிருக்கே அப்ப‌டியெல்லாம் பண்ண‌ புடாது
(ஒரு குண்டு பெண் குஷ்புவுக்காக‌த்தான் த‌மிழ் நாட்டில் கோயில் க‌ட்டினோம் என்ப‌தை இங்கு நினைவு ப‌டுத்த‌ நான் க‌டைமைப் ப‌ட்டுள்ளேன்)

Rasigan said...

டிவி ப்ரோமோ பார்த்து அதிர்ச்சி. TRP படுத்தும் பாடு. விரைவில் extramarital affairs-உம் வரும். they are desperate to attract us. how to work on this kind of false attitudes! sorry for her hubby.

DD(அப்டின்னா என்னன்னு கேட்காதீங்க ப்ளீஸ்)-இல் அடிக்கடி இரவு பத்து மணிக்கு மேல் நல்ல programs வருது. தொகுப்பாளினிகள் r well infomed/improvising nicely. many such SunTV/K TV programs keep reminding of DD days. எவ்வளவு அபத்தங்களை அவர்கள் filter செய்திருக்கிறார்கள் என்று நினைக்கும்போது ஆச்சர்யமாய் இருக்கிறது.

கவிதையில் நகைச்சுவை வேண்டும். குசும்பன் அதிர்ச்சி ஆக கடவது!

அன்புடன் அருணா said...

ஓ உங்களுக்கு ..COLOUR BLINDNESS ஆ? :)

தமிழ்ப்பறவை said...

கலர் கொஞ்சம் டல்லாத்தான் இருக்கு...

sriram said...

ஆதி, நீங்க பாக்க வேண்டிய ப்ரொக்ராம் “நம்ம வீட்டு கல்யாணம்” மட்டும் தானே, நீங்க ஏன் மத்ததெல்லாம் பாக்குறீங்க
என்றும அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

இவன் said...

kavidhai nachu Sondha anubavamo Romba theduneengalo

வெங்கிராஜா | Venkiraja said...

தல! அவள் விகடன்ல கவிதை பிரசுரமாயிருந்தது. வாழ்த்துகள்.

அப்புறம், என்ன கேமர்களுடன் தொடர்பெல்லாம்? நான் விளையாடுவேன்(கிட்டிருந்தேன், போன வருஷம்) சொல்லுங்க!

வெங்கிராஜா | Venkiraja said...

பை த வே, கலர் நல்லா இருந்துச்சு. மிக்ஸ்டு ஊறுகாய்லேருந்து கலர் வரைக்கும் வந்தாச்சா?

Truth said...

நல்லா இருக்கு ஆதி.
//'அணுவளவும் பயமில்லை'
நானும் பாத்தேன். அரை மணி நேரம் சிரிச்சிகிட்டு இருந்தேன் :-)

Karthik said...

ஹாஹா கவிதை கலக்கலா இருக்கு.. :) :)

செந்தில் நாதன் said...

கலர் கவித அருமை!!

அமுதா கிருஷ்ணா said...

வித்யாவில் என்ன படம் போட்டாலும் பார்த்து விடணுமா....அனு அளவும் பயமில்லை ரொம்ப அவசியம்..ரமா கிட்ட சொல்லணும் வீட்ல ரொம்ப வேலை இல்லையா இப்பவெல்லாம்...

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி அமித்து.! (கரெக்ட்டு)

நன்றி மணிகண்டன்.!
நன்றி சுசி.!

நன்றி ஸ்ரீமதி.! (எப்பிடி இப்பிடில்லாம்?)

நன்றி சீனா.! (தேவைதான்)

நன்றி துபாய்.!
நன்றி கார்க்கி.!
நன்றி மகேஷ்.!
நன்றி அனுஜன்யா.!
நன்றி கரிசல்.!
நன்றி ரசிகன்.!
நன்றி அருணா.!
நன்றி பறவை.!
நன்றி ஸ்ரீராம்.!
நன்றி இவன்.!

நன்றி வெங்கிராஜா.! (புது ஆளுங்கதான் கேக்குறாங்கன்னா, நீங்களுமா வெங்கி.? அது நான் இல்லை. எனது படைப்புகள் ஆதிமூலகிருஷ்ணன் என்ற பெயரில் மட்டுமே வெளியாகும்)

நன்றி ட்ரூத்.!
நன்றி கார்த்திக்.!
நன்றி செந்தில்.!

நன்றி அமுதா.! (வித்யாவில் என்ன படம் போட்டாலும் பார்த்து விடணுமா..// அதுதான் பக்கத்தில இருக்குது, ஹிஹி)

வெங்கிராஜா | Venkiraja said...

சாரி தல. குழம்பிட்டேன். தெளிவுபடுத்தியதற்கு நன்றி. நான் பத்திரிக்கைகள் புத்தகங்கள் வாசிப்பது ரொம்ப குறைச்சல். அதனால் இது குறித்து தெரியவில்லை.

Truth said...

இந்த வாரம் அணுஅளவும் பயமில்லை நிகழ்ச்சில, இன்னும் பயங்கரமா பீல் பண்ணபோறாங்க போல இருக்கு. ப்ரோமோ பாத்தேன். :-(

Jack said...

டீலா நோ டீலா அம்மணி காரு வாங்கணும்னா சொந்த காசுல வாங்கணும். இப்படி மத்தவன் காசுக்கு ஒப்பாரி வைக்கலாமா?