Tuesday, November 24, 2009

ஹாலிடேஸ்.! (முடிவு)


ஒத்த ரசனையின் விளைவா தெரியவில்லை. விஜயைப்போலவே மற்ற இருவருமே அவளது அழகில் பிரமித்துப்போயிருந்தனர். அவள் நெருங்கிவந்ததும் பார்வையை தழைத்துக்கொண்டு இயல்பாக கேட்பது போல விஜய் அவளது நலம் விசாரித்தான். அவள் நிஜமாகவே இயல்பாக பதிலளித்தாள். கூடுதலாக சென்னையிலிருந்து வந்தது எப்போது, மீண்டும் எப்போது திரும்புகிறான், அம்மா எப்படி இருக்கிறார் என்றெல்லாம் கேட்டுக்கொண்டாள். பிறகு அருகிலேயே சில வாழையிலைகளை அறுத்துத்தந்து சாப்பாட்டை எடுத்துப்போட்டு சாப்பிடும் படியும், சிறிது நேரம் கழித்து வந்து பாத்திரங்களை எடுத்துச்செல்வதாகவும் சொல்லிவிட்டு கிளம்பிச்சென்றாள்.

சசியின் மனது இப்போது அவனிடம் இல்லை. 'எத்தனை பேரை கல்லூரியிலும், ஆஃபீஸிலும் பார்த்திருக்கிறோம்.. இவளிடம் என்ன இருக்கிறது.. வாவ், கல்யாணம் பண்ணிக்கொண்டால் இவளைமாதிரி ஒருத்தியை பண்ணிக்கொள்ளவேண்டும்' மனதுக்குள் விசிலடித்துக்கொண்டான். சாப்பாட்டை மறந்து மூவரும் சிந்தனையில் மூழ்கியிருக்க மாடசாமி சாப்பாட்டை எடுத்து வைக்க பின்னர் நினைவு திரும்ப சாப்பிட ஆரம்பித்தனர்.

அகிலா ஒரு தளத்தில் அவர்களை மிதக்கச்செய்திருக்க அவர்கள் இது வரை பார்த்திராத சுவையில் உணவு அடுத்த தளத்தில் மிதக்கச்செய்திருந்தது.

"நெவர் டேஸ்டட் ஒன், கிரேட்" என்றவாறே காரத்தில் கண்கள் சிவக்க ஹிமான் சாப்பிட்டுமுடித்தான்.

கிளம்பலாமா என்று கேட்ட விஜயை மறித்து சிறிது நேரம் இங்கேயே ரெஸ்ட் எடுத்துவிட்டு மாலையில் செல்லலாம் என இருவருமே சொல்ல, அதையே எதிர்பார்த்திருந்த விஜயும் சரி என்றான். மீண்டும் அவளை ஒரு முறை பார்த்துவிடும் ஆசை. தென்னைமர நிழலில் படுக்க சில பாய்களை பம்ப்செட் அறையிலிருந்து எடுத்துவந்து தந்தான் மாடசாமி. இருந்த மனநிலையிலும், களைப்பிலும் மூவரும் படுத்தனர்.

"ஷெல் வீ கம் அகெய்ன் டுமாரோ, விஜி?" என்ற ஹிமானின் கேள்விக்கு, "வீ வில் ட்ரை" என பதிலளித்தான் விஜய்.

ஹிமான் கற்பனைக்கோட்டைகளை மனதில் கட்டிக்கொண்டிருந்தான். 'இவளைக் கல்யாணம் செய்துகொண்டால் எப்படியிருக்கும்? இவளைப்போன்ற ஒரு தமிழ்ப்பெண்ணை நம் பேரண்ட்ஸ் ஏற்பார்களா? இவள் சம்மதிப்பாளா முதலில்? எவ்வளவு அழகான கண்கள் அவளுக்கு.." இன்னும் பல கற்பனைகளில் மூழ்கியிருந்தவன் அப்படியே சிறிது நேரத்தில் தூங்கிப்போனான்.

ஏதோ சலசலப்பில் சட்டென விழித்துக்கொண்ட ஹிமான் எழுந்தான். விஜய், சசி இருவரையுமே காணவில்லை. மாடசாமி எங்கே? அந்த பாத்திரங்கள் இன்னும் எடுக்கப்படாமல் அங்கேயே கிணற்றடியில் கிடந்தன. எழுந்தவன் சுற்றிலும் பார்த்துவிட்டு மொபைலைத் தேடினான். பின்னர் சுற்றிலும் தோப்பினுள் கூர்ந்து கவனித்துவிட்டு பம்ப் செட் அறையைப் பார்த்துவிட்டு அங்கு யாருமில்லையென்றால் போனில் அழைக்கலாம் என்று முடிவு செய்தவன் அந்த அறையை நோக்கி இடது புறமாக சென்றான். அவன் நினைத்தது சரி. சசியும், விஜயும் அங்கே இருந்த சிறிய ஜன்னல் வழியாக அந்த அறைக்குள் எதையோ பார்த்துக்கொண்டிருந்தனர். இவனும் ஆர்வமாகி அவர்களின் அருகே சென்று எட்டிப்பார்த்தான். அதிர்ந்தான்.

அங்கே..

மாடசாமியின் மெல்லிய அணைப்பில் நின்று கொண்டிருந்த அகிலா அவனிடம் முகத்தோடு முகமாக சொல்லிக்கொண்டிருந்தாள், "எப்போதான் தைரியம் வந்து அப்பாகிட்ட பேசப்போறேனோ தெரியவில்லை. நினைச்சாலே பயம்மா இருக்குது. சரி விடுங்க முதல்ல.. அவங்க எழுந்திருச்சுக்க போறாங்க, நா கிளம்புறேன்.. நேரமாச்சு."

****************

பி.கு : சட்டியில் இருந்தாத்தானே அகப்பையில் வரும்? ஹிஹி.. எழுதுவதோ, கதை எழுதுவதோ எவ்வளவு சிரமமானது என்பதை ஒவ்வொரு முறையும் உணர்ந்துகொண்டுதான் இருக்கிறோம். ஏதோ ஒரு அழகான மெல்லிய காதல் கதையை சொல்லலாம் என எண்ணி இந்தக்கதையை எழுதத்துவங்கினேன். எங்கே ஒரு கதையை ஆரம்பிக்கக்கூடாது என்பதற்கு இந்தக்கதை ஒரு உதாரணமாக அமையலாம். தவறான துவக்கத்தால் அங்கங்கே தாவி, எங்கோ வந்து நான் சொல்லவிழைந்ததை கொஞ்சமும் சொல்லமுடியாத நிலையில் கதையை டிரமேடிக்காக முடிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. ஆகவேதான் உங்களையும் உள்ளே இழுத்து விளையாட நேரிட்டது. ஆர்வத்துடன் கதையின் முடிவைக் கண்டுபிடிப்பதில் பங்கேற்ற முகிலன், சீனா, அ.மு.செய்யது, செந்தில்நாதன், தராசு, கேபிள்சங்கர் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
.

20 comments:

sriram said...

மீ த ஃபர்ஸ்ட்டேய்...
அவ்வ்வ்வ்வ்வ் போனாப் போகுதுன்னு விட்டுக் கொடுத்த எனக்கு நன்றி இல்லயா???
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

பட்டிக்காட்டான்.. said...

உங்க முடிவ விட முகிலனோட முடிவு நல்லாருக்குன்னு தோணுது.. தராசுவோட முடிவும் பரவால்ல.. :-)

மத்தவங்க என்ன சொன்னாங்கனு தெரியல.. :-(

அ.மு.செய்யது said...

உங்க முடிவு நல்லா இருக்குண்ணே !!!

( கடைசி வரை என் முடிவை யாரையும் பார்க்க வைக்க முடியவில்லையே என்ற லேசான வருத்தம் மேலிடுகிறது.படைப்பாளி சோர்ந்து போகிறான் )

துபாய் ராஜா said...

இரண்டு பாகமும் இப்போதுதான் படித்தேன்.நல்ல வசீகரிக்கும் எழுத்து நடையில் வித்தியாச முடிவு.

//சென்னையிலிருந்து வந்த சசிகுமார், ஹிமான் இருவரையும் வரவேற்க நண்பன் குமாருடன் வந்திருந்த விஜய் அவர்களுடன் சென்னையில் பணிபுரியும் ஒரு ஸாஃப்ட்வேர் என்ஜினியர். அவன் இவர்களுக்கு முன்னதாகவே ஊருக்கு வந்துவிட்டிருந்தான். ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில் ஒரு நீண்ட விடுப்பு எடுப்பது அவனது வழக்கம். இந்த முறையும் திட்டப்படி 20 நாட்கள் லீவ் எடுத்திருந்தான். அதில் சரிபாதி கழிந்த நிலையில்தான் சசி, மற்றும் ஹிமானின் வரவு.//

ஊருக்கு வந்த மொதநாளே கீழக்கல்லூர், மேலக்கல்லூர், நடுக்கல்லூர்ன்னு சங்கன்திரடு வரை எல்லா ஊரு பொண்ணுங்களையும் சைக்கிள்ளே போய் சைட் அடிச்சுட்டு சேர்மாதேவி ஸ்காட் காலேஜ் எப்போ திறக்கும்ன்னு விசாரிக்கிற நம்ம ஆளு கண்ணுல பத்து நாளு உள்ளூர் பொண்ணு படாம இருந்தது ஆச்சரியம்தான் ஆதி... :))

முகிலன் said...

இந்த முடிவு நல்லா இருக்கு. அதெல்லாம் சரி. பரிசு யாருக்கு?

சுசி said...

இத நான் கொஞ்சம் கூ....ட எதிர்பார்த்தேன்.

செந்தில் நாதன் said...

உங்க முடிவு நல்லா இருக்கு ஆதி.

என்னோட முடிவு இங்க:

http://blogsenthilnathan.blogspot.com/2009/11/blog-post_24.html

ஏனோ ஆதியின் பின்னுட்டத்தில் போட முடியவில்லை!!

கரிசல்காரன் said...

கலக்குறிங்க தல
என்ன ஒரு கற்பனை
//உங்களையும் உள்ளே இழுத்து விளையாட நேரிட்டது//
எங்களேயும் உங்கள மாதிரி ஒரு எழுத்தாளரா ஆக்கணும்னு நினைக்கறிங்க பார்த்திங்களா அங்க நிக்கிறிங்க தல
யார் அங்கே யாருடா அங்கே
ஒரு Bakardi பார்சல் (ஆனால் 1 லிட்டர் பாட்டில் தான் கிடைக்கும் 90*11=990 ML மீதி 10 ML என்ன
பண்றது "ஏழுவுக்கு" கொடுத்திரலாம்)

பி.பி - 10 ML மிக்ஸ் பண்ண "ஏழுவுக்கு" எத்தனை லாரி தண்ணி வேணும்???

Rajeswari said...

கத முடிஞ்சிருச்சா...ம் எல்லாரும் வீட்டுக்கு கிளம்புங்க கிளம்புங்க....

cheena (சீனா) said...

அன்பின் ஆதி

இது சற்றும் எதிர்பார்க்க முடியாத முடிவு - மாடசாமியின் அறிமுகம் முதல் பகுதியில் மிகக் குறைவு. ஆனாலும் திடீர் திருப்பமாக அகிலா மாடசாமி இணைவது நல்ல முடிவுதான்

நல்வாழ்த்துகள் ஆதி

அதி பிரதாபன் said...

பி.கு. சூப்பர்.

ஸ்ரீமதி said...

ம்ம்ம்ம் :)))

அ.மு.செய்யது said...
This comment has been removed by the author.
அ.மு.செய்யது said...

வெற்றிகரமாக ஃபோன்ட் வேலை செய்து விட்டது.

ஹாலிடேஸ் கதைக்கான என்னுடைய முடிவு:

ஊர்சுற்றி said...

நல்லாயிருக்கு.

அமிர்தவர்ஷினி அம்மா said...

இரண்டு பாகமும் ஓக்கே. ஆனா உங்க கிட்ட இருந்து இன்னும் அதிகம் எதிர்ப்பார்க்கிறோம் பாஸ் :)

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஸ்ரீராம்,
பட்டிக்காட்டான்,
செய்யது,
துபாய்ராஜா,
முகிலன்,
சுசி,
செந்தில்,

கரிசல் (எழுதும் விஷயங்களைப் பார்த்தால் பழைய ஆள், புதிய பெயர் மாதிரி இல்ல இருக்குது),

ராஜி (நான் என்ன சினிமாவா காமிச்சுக்கிட்டிருக்கேன்? ஹிஹி),
சீனா,
பிரதாபன்,
ஸ்ரீமதி,
ஊர்சுற்றி,

அமித்துஅம்மா (அதானே பார்த்தேன்.!)

அனைவருக்கும் நன்றி.!!!

கரிசல்காரன் said...

//கரிசல் (எழுதும் விஷயங்களைப் பார்த்தால் பழைய ஆள், புதிய பெயர் மாதிரி இல்ல இருக்குது//

புதிய‌ ஆள் தான் தலைவ‌ரே

ரொம்ப‌ நாளா உங்க‌ள‌ படிக்கிறேன்
நீங்க‌ளா வ‌ந்து ஜீப்ல‌ ஏத்துவிங்க‌னு பார்த்தேன் யாருமே வ‌ர‌லை அதான் நானா வ‌ந்து ஏறிட்டேன்
நானும் ரவுடி தான்

க‌ரிச‌ல்

Mahesh said...

என்னவோ போங்க... எனக்கு முடிவு பிடிக்கல... சாரி :(

விக்னேஷ்வரி said...

இனி கதை முயற்சி வேண்டாம் ஆதி.