Wednesday, November 11, 2009

புளிக்கும் திராட்சை (பதிவர் ஸ்பெஷல்)

சமீபத்தில் பிரபல பதிவர் அனுஜன்யாவுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போது இந்த ஃபாலோயர்ஸ் பற்றி பேச்சு வந்தது. 'என்ன அங்கிள், நம்ப கூட வந்த எல்லோரும் 500ஐத் தாண்டி போய்க்கிட்டிருக்காங்க.. நம்ப இந்த ஸ்பீட்ல போனா எப்ப அவுங்களைத் தொடுறது?' எனக்கேட்டேன்.

அதற்கு இப்படிச்சொன்னார், "இந்த ஃபாலோயர்ஸ்னால என்ன பிரயோஜன்ம்ங்கிற நீ? ஊஹூம், நோ யூஸ்.!, ஃபாலோ பண்றவங்க எல்லோருமே பதிவு படிக்கிறதில்ல.. அப்புறம், குவாலிடியா எழுதுறவங்களுக்கு ஃபாலோயர்ஸ் கம்மியாத்தான் இருப்பாங்க, பாரு.. இப்ப நாம இல்லையா?"

அதற்கு நானும் உடனடியா மண்டையை ஆட்டிக்கொண்டு சொன்னேன், "ஆமா அங்கிள், ஆமா".

அன்றைக்குத்தான் பரிசலின் சமீபத்திய பதிவில் இப்படி ஒரு பின்னூட்டம் போட்டேன்..

தமிழ்ப் பதிவுலகில் முதல்முறையாக (சரி, இவ்வளவு விரைவாக-ன்னு ஒரு வார்த்தை சேர்த்துக்கறேன்) 500 ஃபாலோயர்களை தொட்டுக்கொண்டிருக்கும் பரிசல்காரனுக்கு என் முதல் வாழ்த்துகளை பதிவுசெய்கிறேன். வாழ்த்துகள் பரிசல்.!

(அனுஜன்யா : அதோ அந்த உச்சாணிக்கிளையில் நமக்கு எட்டாம தொங்குது பாருங்க அந்த திராட்சைப்பழம். அது பயங்கரமா புளிச்சுக்கொடுவும்..
ஆதி, மகேஷ் (கோரஸாக) : ஆமா அங்கிள், ஆமா.!!)

**********

குறிப்பாக ஆங்கிலத்திரைப்படங்கள் மற்றும் விடியோ கேம்களில் சிறப்பாக பயன்படுத்தப்படும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், அனிமேஷன், கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் போன்றவற்றை ஒரு தொழில்நுட்ப மேதைமை என்று மட்டுமே பார்க்காமல் மிகச்சிறப்பான கலைவடிவமாக‌வும் நான் காண்கிறேன். அது போன்ற படங்களை ஃபிரேம் பை ஃபிரேம் நான் ரசித்துப் பார்ப்பதுண்டு.

இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பான உலக சினிமாக்களைப் பற்றி தமிழ் எழுத்துகள் பேசத்துவங்கியுள்ளன. இந்நிலையில் இது போன்ற படங்களைப்பற்றிய கட்டுரைகள் தமிழில் இல்லை என அடித்துச்சொல்லிவிடலாம். முழுமையாக இதுபோன்ற படங்களைப்பற்றி என்று இல்லாவிட்டாலும் தொடர்புடைய முக்கிய பகுதியான 'டிஸ்னி (Disney)' மற்றும் 'பிக்ஸார் (Pixar)' நிறுவனங்கள் இந்த அனிமேஷன் துறையில் எப்படி துவக்க சவால்களை சந்தித்து இன்று கோலோச்சிக் கொண்டிருக்கின்றன என்ற பெரும் வரலாற்றினை சுருக்கமான, சுவாரசியமான எழுத்தில் முக்கிய குறும்பட இணைப்புகளோடு கூடிய ஒரு கட்டுரைத்தொடராக‌ ஒரு வலைப்பூவில் கண்டேன்.


அது, நண்பர் ஹாலிவுட் பாலா எழுதிய 'தி பிக்ஸார் ஸ்டோரி'. நன்றி மற்றும் வாழ்த்துகள் பாலா.

**********

நீண்ட நாட்களாகவே எனக்கு இந்தப்பதிவுலகம் குறித்து ஒரு ஆதங்கம் உண்டு. அது இந்தப் புனைபெயர் சூடிக்கொள்வது குறித்தது. வித்தியாசமாக வைத்துக்கொள்கிறேன் பேர்வழி என்று 'நீயும் நானும் ஊருக்குப்போனோம்', 'லட்டு தின்னலாமா', 'கொத்தும் கோழி', வால் முளைத்த வண்டு' 'உடைந்த முட்டை' என ரொம்பவும் படுத்தலாக வைத்துக்கொள்கிறார்கள். (இந்த உதாரணப்பெயர்களை(??) சொல்லவும் கூட பயமாக இருக்கிறது, யாராவது வைத்துக்கொண்டிருப்பார்களோ என)

நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் உங்களுக்கு ஓரளவு சொல்லிக்கொள்ளும்படி எழுதுவதோ, பத்திரிகை முயற்சிகளோ நோக்கமில்லாமல், பொழுதுபோக்கு மட்டுமே குறிக்கோளாக இருக்கலாம். அதில் தவறில்லை. ஆனால் உங்கள் கருத்துகளை பொருட்படுத்த அல்லது உங்களை யாராவது குறிப்பிட்டு பேச விரும்பினால் எழும் சிறிய சங்கடத்தை நினைத்துப்பார்க்கலாம்.

சமீபத்திய உதாரணமாக, நண்பர் மாதவராஜின் ஒரு பதிவில் நண்பர் 'நிகழ்காலத்தில்' ஒரு பின்னூட்டம் இடுகிறார். அவர் கருத்தை ஏற்ற மாதவராஜ் பதிவிலும் மாற்றம் செய்து பின்னூட்டத்திலும் பதில் கருத்து தெரிவிக்கிறார். நானாக இருந்தால் எப்படி எழுதியிருக்கக்கூடும்?

எதிர்காலத்தில் பதிவெழுதுகையில் நிகழ்காலத்திலின் கருத்துகளை கவனத்தில் கொள்கிறேன். நன்றி நிகழ்காலத்தில்.!

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்பதற்கேற்ப நல்ல படைப்புகளை நாளை நாம் தரும் சூழல் நேரும் என்ற நம்பிக்கையுடன் அழகான பெயர்களை சூடிக்கொள்ளுங்கள். தமிழிலா அழகுப்பெயர்களுக்குப் பஞ்சம்? இது என் வேண்டுகோள் மட்டுமே. மாற்றுக்கருத்து இருப்பின் மன்னியுங்கள்.

**********

சமயங்களில் சில நல்ல பதிவுகள், நம்மை அது சொன்ன விஷயங்களையும் தாண்டி சிந்தனையில் ஆழ்த்திவிடுகின்றன. ஒரு சமூக அக்கறை கொண்ட போராட்ட வாழ்வு வாழ்ந்து மறைந்த ஒரு பெரியவரை நினைவு கூறும் நண்பர் எம்.எம்.அப்துல்லாவின் சமீபத்திய இந்தப்பதிவு, பதிவு சொன்ன விஷயங்களையும் தாண்டி என்னை நாள் முழுதும் ஆக்ரமித்திருந்தது.

'போராட்டமேயில்லாத சுக வாழ்வு வாழும் நீ, உன்னைச்சுற்றி நிகழும் அநீதிகளுக்கு எதிராக ஒரு சிறு துரும்பையேனும் கிள்ளிப்போட்டிருக்கிறாயா.? உனக்கெல்லாம் இருப்பதற்குப்பெயர் சமூகக்கோபமா? அப்படியொன்று உனக்கிருக்க ஏதேனும் தகுதியிருக்கிறதா உனக்கு? முதுகெலும்பு என்று ஒன்று உனக்கிருப்பதை நீ அறிவாயா?'

வெட்கம் பிடுங்கித்தின்ன மனசாட்சி இன்னும் கேட்டுக்கொண்டேயிருக்கிறது என்னை. பதிவுகள் ரசனை சார்ந்தவை மட்டுமல்ல.. சிந்தனைகளையும், வாழ்க்கை முறைமைகளையும் மாற்றும் சக்தி வாய்ந்தவை என்பது இன்னுமொருமுறை விளங்கியது எனக்கு.

**********

அப்புறம், தமிழில் பிழைகள்.

எழுத்துப்பிழைகள், இலக்கணப்பிழைகள் என பிழைகளின் கூடாரம் இந்தப்பதிவுலகம். (இதைச்சொல்வதில் எனக்கு எந்தத்தயக்கமுமில்லை). என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன்.

பிழையை அறியாமலிருந்தால் அவமானம். அறிந்தும் செய்தால் (கவனக்குறைவாக.. டைப்பிங் எரர்) அயோக்கியத்தனம். கருத்துக்கள், சிந்தனைகளை முன்னெடுத்துச்செல்லும் அதே நேரம் ஈரிழைப்பின்னலாக மொழியையும் முன்னெடுத்துச் செல்லவேண்டிய அவசியமும் பொறுப்புமிருக்கிறது நமக்கு. பிழைகள் களைய முயல்வோம்.

ஆர்வமிருப்பின் ஒற்றுப்பிழைகள் குறித்த நண்பர் கேவிஆரின் பதிவு மற்றும் தொடர்புடைய சுட்டிகளுக்குச் செல்லுங்கள்.

**********

அப்புறம் எழுத்தில் கண்ணியம்.

மொத்த மக்கள்தொகையில் 0.01 சதவீதத்துக்கும் குறைவான கூட்டமே பதிவுலகம். மொழி சார்ந்த கலை, இலக்கிய பங்களிப்புகளைச் செய்வதோடு மட்டுமல்லாமல் உறங்கும் ஊடகங்கள் சொல்லாத, தயங்கும் எழுத்தாளர்கள் பேசாத பல சமூக, அரசியல் விஷயங்களை, கருத்துகளை, செய்திகளை.. சிந்திக்கவும், உரையாடவும், பரப்பவும் கிடைத்த அறிவியல் அற்புதமே இந்தப்பதிவுலகம். இந்தச்சிறிய சதவீதம் படித்தது, அறிவார்ந்தது, வசதியானது, தொழில்நுட்பம் அறிந்தது. ஆனால் இவைதான் எந்தப்பாமரருக்கும் குறைவில்லாத, பேசப்படுகிற கருத்தை ஒட்டியதாக இல்லாத, மேம்போக்குத்தனமான, கண்ணியமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறது.

நண்பர் ஜீவனின் சமூக அக்கறையுள்ள இந்தப்பதிவில் நண்பர் ரோஸ்விக்கின் பின்னூட்டம் ஒரு உதாரணம் மட்டுமே. தமிழக முதல்வர் குறித்த ஆதாரமற்ற வெற்றுக்கூச்சல். ஊழல், சுயலாபம், பொறுப்பின்மை அனைத்தையும் கண்டிக்கிற உரிமை நமக்கிருக்கிறது. ஆனால் அது நம்பகத்தன்மையுள்ள செய்தியின் மீதான விமர்சனமாக‌ இருக்கவேண்டும், கருத்துப்பொதிந்ததாக இருக்கவேண்டும்.

பல லட்சம் மக்களின் அபிமானம் பெற்ற தலைவர்களை.. அது கலைஞரோ, ஜெயலலிதாவோ, ராமதாஸோ.. கண்ணியமற்ற முறையில் விமர்சிப்போமானால் நமக்கும் அவர்களின் தேர்தல் நேர மேடைப்பேச்சாளர்களுக்கும் எந்த வித்தியாசமும் இருக்கப்போவதில்லை.

**********

தோழி ஸ்ரீமதி மற்றும் நண்ப‌ர் முரளிகுமார் பத்மநாபன் இருவரும் 'Scrumptiuos blog (ருசிகர வலைப்பூ)' என்றொரு விருதை நம் புலம்பல்களுக்கு வழங்கியுள்ளார்கள். இருவருக்கும் என் நன்றி.


இந்த விருதை

கேவிஆர் ட்ரூத் சின்னஅம்மிணி அப்பாவிமுரு அறிவிலி

ஆகியோருக்கு வழங்கி மகிழ்கிறேன்.

**********

சென்ற வாரம் மழையினால் ஒத்திவைக்கப்பட்ட பதிவர் சந்திப்பு இந்த சனிக்கிழமை நிச்சயமாக நடக்கவிருக்கிறது. வாய்ப்பிருக்கும் அனைவரும் கலந்துகொள்ளுங்கள், சந்திக்கலாம். குறிப்பாக நான், பதிவர்களுக்கு எல்லா பதிப்பகங்களும் சலுகை விலையில் புத்தகங்கள் தந்தாக வேண்டும் என்று ஏதாவது தனிநபர் தீர்மானம் போடலாம் என்றிருக்கிறேன்.. ஹிஹி.!

விபரங்களுக்கு படத்தை சொடுக்கி பெரிதாக்குங்கள்.
.

77 comments:

ஆயில்யன் said...

//அனுஜன்யா : அதோ அந்த உச்சாணிக்கிளையில் நமக்கு எட்டாம தொங்குது பாருங்க அந்த திராட்சைப்பழம். அது பயங்கரமா புளிச்சுக்கொடுவும்..
ஆதி, மகேஷ் (கோரஸாக) : ஆமா அங்கிள், ஆமா.!!) //

LOL :))))))))))))))))))

ஆயில்யன் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா :))))

vanila said...

நல்லா இருந்தது, இன்னும் ரொம்ப நல்லாவே இருக்கு.. கடந்த காலத்திலும், நிகழ்காலத்தில் சொன்னவை.. எதிர்காலத்திலும் தொடரும் என ..

பட்டிக்காட்டான்.. said...

எல்லா விசயமும் நல்லாருக்குங்க..

//.. 'என்ன அங்கிள், நம்ப கூட வந்த எல்லோரும் ..//

இங்கே உங்கள் வில்லத்தனம் தெரிகிறது..

//.. ஆயில்யன் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா ..//

அப்படியா, பிறந்தநாள் வாழ்த்துகள்..

ரோஸ்விக் said...

தங்களின் மாற்றுகருத்தை வரவேற்கிறேன். அதில் எவ்வித வருத்தமும் இல்லை. நன்றிகள்.

அந்த பின்னூட்டத்தில், நான் எழுதிய சில கோர்க்கப்பட்டவைகளாக இருக்கலாம். அது ஆதங்கத்தில், எனது பாட்டனிடம் உள்ள உரிமையில், கோபத்தில் வந்தவையாக இருக்கலாம்.

அதில் பல உண்மை தான் என்பதை உலகறியும். என் எழுத்தில் கண்ணியம் குறைவாக காணப்பட்டால் அதற்கு வருந்துகிறேன்.

எதிர்காலத்தில் கண்ணியம் கட்டுப்பாடோடு இருக்க வேண்டும் என்ற கடமையுடன் எழுத முனைகிறேன்.

Truth said...

// ஆயில்யன் said...
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா :))))

அப்படியா? நீங்க கார்க்கி போல சூசகமா சொல்ல மாட்டீங்களா? :P

இல்லே நேத்து நரை முடி பத்தி எல்லாம் சொன்னது இதுக்குத் தானோ :-)
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆதி.

மத்தபடி விருது அப்படிங்கிற பேருல முதல் முறையா பதிவுல வாங்கியிருக்கேன். ரொம்ப நன்றிங்க ஆதி. :-)

Anonymous said...

விருதுக்கு மிக்க நன்றிங்க ஆதி.

Itsdifferent said...

I dont see anything wrong in Rosewicks comments. Thats the truth. And satire is way to express the displeasure about the administration. Can you deny any one of the statements he has made. Its not that the CM has to do all the work, all he has to do set the right direction/tone with the ministers and team he has. There is a PWD ministry, whose main job is infrastructure maintenance, what are they doing? Atleast Jaya came up with an idea of rain water harvesting. What did the current CM do, and he has been the CM for most of the last 4 decades.
So, lets stop handling these guys with kid gloves, and they dont deserve it.

சுசி said...

//ஃபாலோ பண்றவங்க எல்லோருமே பதிவு படிக்கிறதில்ல.. அப்புறம், குவாலிடியா எழுதுறவங்களுக்கு ஃபாலோயர்ஸ் கம்மியாத்தான் இருப்பாங்க, //

என்னா நெக்கலு....

ஹாலிவுட் பாலா said...

பிக்ஸார் ஸ்டோரி பத்தி.. இங்க குறிப்பிட்டதுக்கு மிக்க நன்றி! :) :)

அதை சுருக்கமா எழுத வேண்டிய கட்டாயம். வேறு வழியில்லை. அதை இன்னும் விரிவா.. எழுத.. நிறைய படிச்சிட்டு இருக்கேன். சமயம் வாய்த்தால்..., உங்கள் விருப்பப்படி நிச்சயம்.. ஒரு முழு கட்டுரையா வர வாய்ப்பிருக்கு!

உங்க பாராட்டுக்கு மறுபடியும் என் நன்றி! :)

========

அதான்... எனக்கும் ஃபாலோயர்ஸ் கம்மியா இருக்காங்களா?! :)

velji said...

my page comes under 'quality writing'.thank you anujanya!

நிகழ்காலத்தில்... said...

\\சமீபத்திய உதாரணமாக, நண்பர் மாதவராஜின் ஒரு பதிவில் நண்பர் 'நிகழ்காலத்தில்' ஒரு பின்னூட்டம் இடுகிறார். அவர் கருத்தை ஏற்ற மாதவராஜ் பதிவிலும் மாற்றம் செய்து பின்னூட்டத்திலும் பதில் கருத்து தெரிவிக்கிறார். \\

தாங்கள் எனக்கு கொடுத்த தகவலின் பேரிலேயே நண்பர் மாதவராஜ் இடுகையில் திருத்தம் செய்தது தெரிந்தது,

மாதவ்ராஜின் பண்பை மதிக்கிறேன்

தேடிவந்து தகவல் கொடுத்த தங்களையும் மதிக்கிறேன்

வாழ்த்துக்கள்

அறிவிலி said...

விருதுக்கு நன்றி, ஆதி.

1. அதே பதிவல நானும் "ஆமா அங்கிள், ஆமா" போட்டேனே.

2. ஆமா, கரெக்டு.இப்ப பாருங்க, உங்களுக்கு 270 எனக்கு 43 தான்.
:))))).

அப்பாவி முரு said...

//"இந்த ஃபாலோயர்ஸ்னால என்ன பிரயோஜன்ம்ங்கிற நீ? ஊஹூம், நோ யூஸ்.!, ஃபாலோ பண்றவங்க எல்லோருமே பதிவு படிக்கிறதில்ல.. //

அப்படித்தான் இருக்குமென நினைக்கிறேன். வாத்தியாருக்கு 978 பாலோவர் இருக்காங்க. ஆனால், பத்து - இருவது பின்னூட்டம் தான் வருது.

அப்பாவி முரு said...

//'நீயும் நானும் ஊருக்குப்போனோம்', 'லட்டு தின்னலாமா', 'கொத்தும் கோழி', வால் முளைத்த வண்டு' 'உடைந்த முட்டை' என ரொம்பவும் படுத்தலாக வைத்துக்கொள்கிறார்கள்.//

இதே போல இடுகையை சூடாக்க பரபரப்பான தலைப்பை தேர்ந்தெடுப்பாங்க பாருங்க... உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்

ராமலக்ஷ்மி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆதி:)!

விரைவில் புளிக்கும் பழம் தானாகப் பொத்தென்று மடியில் விழவும் வாழ்த்துக்கள்:))!

அப்பாவி முரு said...

//'Scrumptiuos blog (ருசிகர வலைப்பூ)' என்றொரு விருதை நம் புலம்பல்களுக்கு வழங்கியுள்ளார்கள்//

'Scrumptiuos blog (ருசிகர வலைப்பூ)' என்றொரு விருதை நம் அப்பாவியின் இடுகைகளுக்கு வழங்கியுள்ளார்கள்

:)
:)

செந்தில் நாதன் said...

நல்ல பதிவு!!

டம்பி மேவீ said...

சார், அன்று நீங்க எனக்கு சொன்னதை தான் இன்றும் இந்த பதிவில் சொல்லி இருக்கீங்க. நன்று.

ஆனா நாங்க எல்லாம் பின்னாடி நவீனம் வந்த வியாதிகள் இப்படி தான் கொக்கு மக்காக பெயர் வைப்போம். இதற்க்கு பெயர் தான் கட்டுடைத்தல்


(முதல் மேட்டர் நன்றாக ரசித்தேன்)

டம்பி மேவீ said...

பரிசலுக்கு 500 FOLLOWERS (பின் தொடர்ப்பவர்கள்/ பின் தொடர்பு/ பின்னாடி வந்து படிப்பவர்கள்) இருந்தாலும் சராசரியா 30 பின்னோட்டம் தானே வருது. அது ஏன்னு யாராச்சு யோசித்து உண்டா????

30 பேருக்கு தான் பின்னோட்டம் போட மனசு வருது/ இல்லாட்டி அவ்வளவு பேர்க்கு தான் அந்த பதிவு பிடிச்சு இருக்கு போல


எடக்கு மடக்காக யோசிக்கும் சங்கம்

மேவி
தலைவர்

(no offense ; just kidding)

எம்.எம்.அப்துல்லா said...
This comment has been removed by the author.
எம்.எம்.அப்துல்லா said...

யோவ் அண்ணே,நீராவது பரவாயில்லை. இன்னும் ஃபாலோயர்ஸ் 145 லேயே நங்கூரம் போட்டு நிக்கிற என்னைய என்னத்தச் சொல்றது?

//

ஆதி, மகேஷ் (கோரஸாக) : ஆமா அங்கிள், ஆமா.!!)

//


அப்படியே எம் பேரையும் சேர்த்துருங்க :)))


அப்புறம் ரொம்ப நாளைக்கப்புறம் என்னைத் திரும்பத் திரும்ப படிக்க வைத்த இடுகை இது. வாழ்த்துகள்ண்ணா.

முரளிகுமார் பத்மநாபன் said...

தலைவரே, வந்துட்டேன், கண்டுகிட்டேன். நன்றி :-) இந்தமுறை எந்த கிரிட்டிக்ஸும் இல்லாது கஸ்டமாக இருக்கு, நண்பரே. என்னோட பதிவை பத்தி ஒண்ணுமே சொல்லலையே!

☀நான் ஆதவன்☀ said...

பிறந்த நாள் வாழ்த்துகள் ஆதி! :)

தராசு said...

//பதிவுகள் ரசனை சார்ந்தவை மட்டுமல்ல.. சிந்தனைகளையும், வாழ்க்கை முறைமைகளையும் மாற்றும் சக்தி வாய்ந்தவை என்பது இன்னுமொருமுறை விளங்கியது எனக்கு. //

எதார்த்த வரிகள்,

பலமுறை படிக்கத்தூண்டிய பதிவு இது.

கலக்குங்க தல.

வனம் said...

வணக்கம் ஆதி

\\பிழையை அறியாமலிருந்தால் அவமானம். அறிந்தும் செய்தால் (கவனக்குறைவாக.. டைப்பிங் எரர்) அயோக்கியத்தனம். \\

உண்மையிலேயே கடந்த பதிவின் பின்னூட்டத்தில் தெரியாமத்தான் வாணக்கம் போட்டுட்டேன் அதுக்காக இப்படியா ?

நான் ரோம்ப பாவம்.......

இராஜராஜன்

RAMYA said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோ!!

ஸ்ரீமதி said...

உங்களுக்கு என் பதிவில் ஒன்று இருக்குன்னு நீங்க பாட்டுக்கு சொல்லிட்டு வந்துட்டீங்க.. நானும் அது என்ன என்னன்னு படிச்சிக்கிட்டேஏஏஏஏஏ வந்தேன்... முதல் பத்தி படிக்கும்போது சரி அனு அண்ணாதான் ஏதோ நம்மல பத்தி சொல்லிருக்காரு போலன்னு நினைச்சேன்.. ம்ஹீம்.. இப்படியே எல்லாத்துலையும் பெப்பே... அப்பறம் சமூகம் பத்தின பதிவுன்னது எனக்கு கன்ஃபார்ம் ஆகிடிச்சு நான் இல்லன்னு... அப்பறம் எழுத்துப்பிழை நிஜமா பயந்துட்டேன் நான்.. ஆகா காலைல ஆப்பீஸ் வந்ததும் அவமானமான்னு.. டேமேஜ் கொஞ்சம் தான்... எழுத்தில் கண்ணியம்னதும் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தேன்... அங்கயும் 1னுமில்ல... அடுத்ததெல்லாம் படிக்கறதுக்குள்ள எனக்கு ஸ்ருதி கொறைஞ்சு போச்சு... கடசீல பார்த்தா விருது(கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்)... நல்லா கிளப்புறாங்க... நானும் போஸ்ட் போட்டுட்டு எங்கடா ஆதி அண்ணாவ கமெண்ட காணோமேன்னு தேடினா உங்க கமெண்ட் இப்படி.. நல்லா இருங்க...

ஸ்ரீமதி said...

பிறந்த நாளா இன்னைக்கு.. வாழ்த்துகள் அண்ணா.. :))

வெண்பூ said...

ஸ்பெல்லிங் மிஸ்டேக் பத்தி எழுதறதெல்லாம் ஓகே.. ஆனா அந்த அழைப்பிதழ்லயே ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கே, கவனிக்கலையா?? :(((

அப்புறம், பதிவர் சந்திப்புன்னு சொன்னீங்க, ஆனா அழைப்பிதழ்ல "இணையத் தமிழ் எழுத்தாளர்"ன்னு போட்டிருக்கு, அப்ப நானெல்லாம் வரக்கூடாதா? :))))

அமிர்தவர்ஷினி அம்மா said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே!

இந்தப் பதிவு மொத்தமும் மிகவும் பிடித்திருந்தது.
பிறந்தநாள் ஸ்பெஷலா ?

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஸாரி ஸ்ரீமதி,

பதிவோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரே வாக்கியத்தை காப்பி பேஸ்ட் பண்ணியதால் வந்தவினை..

உங்கள் கமென்டுக்கு இன்னும் சிரித்துக்கொண்டிருக்கிறேன். நானும் பேக்கு மாதிரி இப்படி பல காரியங்கள் பண்ணியிருக்கேன்.. ஹிஹி.!

ஹுஸைனம்மா said...

//நீ, உன்னைச்சுற்றி நிகழும் அநீதிகளுக்கு எதிராக ஒரு சிறு துரும்பையேனும் கிள்ளிப்போட்டிருக்கிறாயா.? //

அதான் ரமாவைப் பத்தி அங்கங்கே புலம்பி, கல்யாணம் செய்யாதீங்க, செய்யாதீங்கன்னு அறிவுரை சொல்லி 37 பதிவுகள் போட்டதில, எத்தனை கல்யாணத்தை நிறுத்தியிருப்பீங்க!! இது பெரிய சேவைதானே சம்பந்தப்பட்ட பெண்களுக்கு!!

Karthik said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள். பதிவு நல்லாருக்கு. :)

ஸ்ரீமதி said...

//ஆதிமூலகிருஷ்ணன் said...
November 12, 2009 10:34 AM ஸாரி ஸ்ரீமதி,

பதிவோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரே வாக்கியத்தை காப்பி பேஸ்ட் பண்ணியதால் வந்தவினை.. //

அண்ணா ப்ளீஸ் சாரி எல்லாம் வேண்டாம்.. நான் ஏமாந்த கதை சொல்லவே அப்படி ஒரு கமெண்ட் போட்டேன்.. மத்தபடி வருத்தம் எதுவும் இல்ல.. சிரிச்சிருந்தா நல்லது. :))))

ஸ்ரீமதி said...

//வெண்பூ said...
ஸ்பெல்லிங் மிஸ்டேக் பத்தி எழுதறதெல்லாம் ஓகே.. ஆனா அந்த அழைப்பிதழ்லயே ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கே, கவனிக்கலையா?? :(((

அப்புறம், பதிவர் சந்திப்புன்னு சொன்னீங்க, ஆனா அழைப்பிதழ்ல "இணையத் தமிழ் எழுத்தாளர்"ன்னு போட்டிருக்கு, அப்ப நானெல்லாம் வரக்கூடாதா? :))))//

கண்டிப்பா நீங்க நானெல்லாம் கிடையாது அண்ணா.. ;)))

ஸ்ரீமதி said...

//ஹுஸைனம்மா said...
//நீ, உன்னைச்சுற்றி நிகழும் அநீதிகளுக்கு எதிராக ஒரு சிறு துரும்பையேனும் கிள்ளிப்போட்டிருக்கிறாயா.? //

அதான் ரமாவைப் பத்தி அங்கங்கே புலம்பி, கல்யாணம் செய்யாதீங்க, செய்யாதீங்கன்னு அறிவுரை சொல்லி 37 பதிவுகள் போட்டதில, எத்தனை கல்யாணத்தை நிறுத்தியிருப்பீங்க!! இது பெரிய சேவைதானே சம்பந்தப்பட்ட பெண்களுக்கு!!//

LOL :)))))))))))

நர்சிம் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆதி.

பதிவு..அருமை.

SanjaiGandhi™ said...

//இந்த ஃபாலோயர்ஸ்னால என்ன பிரயோஜன்ம்ங்கிற நீ? ஊஹூம், நோ யூஸ்.!, ஃபாலோ பண்றவங்க எல்லோருமே பதிவு படிக்கிறதில்ல.. அப்புறம், குவாலிடியா எழுதுறவங்களுக்கு ஃபாலோயர்ஸ் கம்மியாத்தான் இருப்பாங்க, பாரு.. இப்ப நாம இல்லையா?"//

ஹிஹி.. ஆமாமா.. நாம் இல்லையா? 53 ஃபாலோயரோட? :))

பிறந்தநாள் வாழ்த்துகள் ஆதி.. வாழ்க வளமுடன்.. :)

ஜீவன் said...

பதிவு மொத்தமும் அருமை...!


இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

அனுஜன்யா said...

யோவ் ஆதி,

'நச்' கதை எழுதியிருக்கேன். தயவு செய்து பாராட்டுங்கன்னு போன் போட்டு பேசிட்டு இப்ப என்னை கும்முறியே நியாயமா? உனக்கு நானு அங்கிளா? உன் குழந்தை என்னை அங்கிள்னு சொன்னா நீயும் அதையே சொல்லணுமா? சுயமா சிந்திங்கப்பா.
(கவுண்டர் வாய்சில் படிக்கணும்)

ஏற்கெனவே நிறைய 'பின் தொடரும் நண்பர்கள்'. இன்னிக்கு உன் தயவால ஒரு இருபத்தஞ்சு பேரு கம்மி ஆகிடுச்சு. நல்லா இருப்பா.

மத்தபடி இடுகை நல்லா இருக்கு. குறிப்பாக அப்துலின் அங்கிள் (இதுதான் உண்மையான அங்கிள்) பற்றி சொன்னது.

இதையும் சொல்லிக்கிறேன்: பிறந்த நாள் .....வாழ்த்த வயதில்லை என்பதால் வணக்கங்கள். Have a fantastic year buddy. Continue to give the same joy to all of us.

அனுஜன்யா

ஸ்ரீராம். said...

வகுப்பறை என்ற வலைப் பக்கத்துக்கு தொள்ளாயிரம் தாண்டி Followers பார்த்த நினைவு. Followers பற்றிய கருத்தை ரசித்தேன்

தாரணி பிரியா said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆதி :)))))

Saravana Kumar MSK said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா :))))

Saravana Kumar MSK said...

பதிவு, கலக்கல்..

எறும்பு said...

அண்ணாச்சி, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

புன்னகை said...

நீண்ட இடைவேளைக்குப் பின் உங்கள் பதிவு பக்கம் வருகிறேன். அருமையான பதிவு. அப்புறம், பிறந்த நாள் வாழ்த்துக்களும் கூட! :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

அண்ணன் ஆதி அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

சுசி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆதி.....

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி ஆயில்யன்.!
நன்றி வனிலா.!
நன்றி பட்டிக்காட்டான்.!

நன்றி ரோஸ்விக்.! (ஸ்போர்டிவாக எடுத்துக்கொண்டமைக்கு நன்றிகள்)

நன்றி ட்ரூத்.!
நன்றி அம்மிணி.!

நன்றி இட்ஸ்டிப்ரன்ட்.! (இருப்பா அடுத்த சினிமா நட்சத்திர விழாவில் ஸ்ரேயா-வுக்கு டிரஸ் செலக்ட் பண்ணி கொடுத்துட்டு வாரேன்.// இதிலும் கூடவா தவறில்லை என்று சொல்கிறீர்கள்.? எவ்வளவு கொச்சையான வசை? மேலும் அனைவரும் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதாலேயே அதில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் உண்மையாகிவிடாதல்லவா?

மேலும் இதை ஒரு ஒற்றை உதாரணமாக மட்டுமே குறிப்பிட்டுள்ளேன். இன்னும் ஆயிரம் பதிவுகளையும், பின்னூட்டங்களையும் தரமுடியும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். நீண்ட நாட்கள் கழித்த உங்கள் வருகைக்கு நன்றி தோழரே.!)

நன்றி சுசி.!
நன்றி ஹாலிவுட்பாலா.!

நன்றி வெல்ஜி.! (குட் ஸ்பிரிட்)

நன்றி நிகழ்காலத்தில்.! (அப்படியும் பெயர் வைத்துக்கொள்வதாக ஐடியா இல்லையில்லையா? ஹிஹி..)

நன்றி அறிவிலி.!
நன்றி முரு.!
நன்றி ராமலக்ஷ்மி.!
நன்றி செந்தில்நாத‌ன்.!
நன்றி மேவீ.!

நன்றி அப்துல்.! (சரிதான் உங்க பெயரும் விட்டுப்போச்சு)

நன்றி முரளிகுமார்.! (இன்னும் பதிவு படிக்கலைன்னு அர்த்தம். ஹிஹி..)

நன்றி ஆதவ‌ன்.!
நன்றி தராசு.!
ரோம்ப நன்றி ராஜராஜன்.!
நன்றி ரம்யா.!

நன்றி ஸ்ரீமதி.! (சந்தடி சாக்குல உங்களையும் நான் பேக்குன்னு சொன்னதைக் கவனிக்காமல் பேக்குதான் அப்ப்டிங்கிறதை நிரூபிச்சுட்டீங்க.. ஹிஹி)

நன்றி வெண்பூ.! (ஐயா, அது நான் கிரியேட் பண்ணவில்லை. அகநாழிகை வாசுதேவன் பண்ணியதாக இருக்கலாம்)

நன்றி அமித்துஅம்மா.!

நன்றி ஹுஸைனம்மா.! (காதல் பற்றிய என் பதிவுகளை படித்திருக்கமாட்டீர்கள் என நினைக்கிறேன். அதில் சேம் சைட் கோல் நிறைய போட்டிருக்கிறேன்)

நன்றி கார்த்திக்.!
நன்றி நர்சிம்.!
நன்றி சஞ்சய்.!
நன்றி ஜீவன்.!
நன்றி அனுஜன்யா.!

நன்றி ஸ்ரீராம்.! (அதனால்தான் 'விரைந்து' என்று ஒரு பதம் இணைத்திருக்கிறேன்)

நன்றி தாரணி.!
நன்றி சரவணா.!
நன்றி எறும்பு.!
நன்றி புன்னகை.!

ஆதிமூலகிருஷ்ணன் said...

தன்முனைப்பில் தெரிந்துகொண்டு, பிற‌ந்தநாளுக்காக வாழ்த்திய அத்தனை அன்பு உள்ள‌ங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பின்னோக்கி said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

//'லட்டு தின்னலாமா', 'கொத்தும் கோழி'

படிக்கும் போது பக்.பக்ன்னு இருந்துச்சு. எங்கடா, நம்ம பேரையும் சேர்த்துடப்போராருன்னு :)

நீங்க சொன்ன பதிவு தமிழை பிழையில்லாமல் எழுத உதவும்.

அட நீங்க வேற ! இந்த கட்சிங்க நடத்துற மேடைப் பேச்ச நீங்க கேட்கனும்.

ஒரு விழாவில் (மனோரமா பாராட்டு விழா) கலைஞர், எப்படி தனது மூன்றாவது மனைவியைத் திருமணம் செய்து கொண்டேன்னு விவரமா சொன்னாரு.

முரளிகண்ணன் said...

வாழ்த்துக்கள் ஆதி

வால்பையன் said...

//வால் முளைத்த வண்டு'//

இது யாரு, நானா!?

தமிழ்ப்பறவை said...

many more happy returns of the day aathi....

Itsdifferent said...

Happy Birthday Athi....

To your reply on Shreya, thats why its called Satire. Watch Jay Leno or David Letterman shows on NBC or CBS, see how do they take it up on Obama and other politicians. So its all done to convey a point. And there is an opinion out there, that Indians in general lack sense of humor and Tamils are the worst in that lot. I will send that study URL when I find it.
2. Even after Jay or Letterman does so much of satire, Obama and others would love to sit with them on the talk show, critique themselves, and enjoy that humor.
Namma Oorla, Auto varum, ippallam cinema'la Bolero varudhu, adhanala lets change this phrase to Bolero varum......

sriram said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆதி..
இன்று போல் என்றும் வாழ / பிறரை மகிழ்விக்க எல்லாம் வல்ல ஆண்டவரை / இயற்கையை (உங்கள் நம்பிக்கை எதுவோ அது) வேண்டுகிறேன்.

அப்புறம், மத்தவங்களோட இடுகைகள் / பின்னூட்டங்கள வச்சே ஒரு இடுகை போடற டெக்னிக்கை எங்க கத்துகிட்டீங்க..

மேலும், நர்சிம்மின் பதிவில் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரவில்லை... I know everyone will enjoy your answer to it...

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

அத்திரி said...

அண்ணே பொறந்த நாள் வாழ்த்துக்கள். யூத் அனுஜன்யா அண்ணாச்சியை அங்கிள் என்று சொன்னதை வன்மையாக கண்டிக்கிறேன்

மங்களூர் சிவா said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

angelintotheheaven said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

அமுதா கிருஷ்ணா said...

happy birthday....

அமுதா கிருஷ்ணா said...

oh pathivar sandhipaaa....

கடைக்குட்டி said...

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...!!


நான் சந்திக்கவே கூடாதுன்னு நெனக்கிற பதிவர் நீங்கதான்.. (இதுவரைக்கும் எந்தப் பதிவரையும் பார்த்தது இல்லை.. இருந்தாலும்..)

ஏதோ அரை டவுசர் பையன்தான் நெனவுக்கு வர்றான் உங்க பதிவெல்லாம் படிச்சா... (சைடுல படத்த பாத்தா ஆஅவ்வ்வ்வ்)

எல்லாத்தையும் காமெடியா பாக்குறீங்க.. உங்க ஃப்லோ நல்லா இருக்கு,,

நான் உங்கள ஏன் பாக்க கூடாதுன்னு நெனக்குறேன்னா.. என் மனசுல இருக்குற அந்த அரைக்கால் சட்டை போட்ட உருவம் மறைந்து உங்கள் எழுத்தை ரசிக்க முடியாதோன்னு,,,


மனதிலிருந்து எழுதி இருக்கும் இந்த பின்னூட்டத்தை படிப்பீர்கள் என்ற எண்ணத்துடன்...

சிரிப்புடன்,

கடைக்குட்டி :-)


தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள்.. உங்களோட எவ்ளோ பதிவ படிச்சுட்டு பின்னூட்டம் போடாம் போயிடுவேன்.. அதுக்காக வட்டியும் மொதலுமா... :-)

அக்பர் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

RAMYA said...

இடுகை நல்லா இருக்கு ஆதி, நல்ல சில விளக்கங்கள் கூறி இருக்கீங்க.

நல்லது எதுவாக இருந்த போதிலும் அதைப் பின் பற்றுவதில் எந்த தயக்கமும் இருக்காது.

விளக்கமான வெவரமான இடுகை!

ம்ம்ம்.. நல்லா அடிச்சு ஆடுங்க....!!

மணிநரேன் said...

நன்றாக இருந்தது இந்த இடுகை...:)

துபாய் ராஜா said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிரதர்...

ஸ்ரீமதி said...

//சந்தடி சாக்குல உங்களையும் நான் பேக்குன்னு சொன்னதைக் கவனிக்காமல் பேக்குதான் அப்ப்டிங்கிறதை நிரூபிச்சுட்டீங்க.. ஹிஹி//

கவனிச்சேன்... கேட்டு உறுதிப்'படுத்திக்க' வேண்டாமேன்னு விட்டுட்டேன்..கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

வாத்துக்கோழி said...

கொத்தும் கோழி நானா? எனிவே யோசிக்கிரேன். காலம் தவறிய பிறந்தனாள் வாழ்த்துக்கள்....

எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அங்கில்.

என்ன பேரு வச்சா உங்களுக்கு என்ன? அதெல்லாம் மாத்த முடியாது அங்கில்.

// டம்பி மேவீ said...
சார், அன்று நீங்க எனக்கு சொன்னதை தான் இன்றும் இந்த பதிவில் சொல்லி இருக்கீங்க. நன்று.//
ஓஹோ... இதே வேலையாத்தான் அலையிறீங்களா?

மறத்தமிழன் said...

ஆதி,

முதலில் உங்களுக்கு பிறந்தநாள் வழ்த்துக்கள் !

ஜனாப் பக்கீர் அகமது அவர்களுக்கு வீரவணக்கம் !

அவரைப் பற்றி பதிந்த அ,ஆ விற்கு நன்றிகள் பல...

எழுத்து வன்முறையும் ஆபத்தான ஒன்றுதான்.
சமூக நல்லிணக்கம்,மத நல்லிணக்கம்கிர பேர்ல சில‌ பேர்
வன்மத்தை பாலூட்டி சீராட்டி வளர்க்கிறார்கள் !

அவையெல்லாம் கண்டிக்கப்படவேண்டியவை.
சிறந்த பதிவு...
வாழ்த்துக்கள் !

அன்புடன்,
மறத்தமிழன்

KVR said...

பரிசலுக்கு இங்கேயும் வாழ்த்துகள்

சுட்டிக்கும் விருதுக்கும் நன்றி. விருது/தொடர்பதிவுகளில் பெரிய பிரச்சனையே அதை முன்னெடுத்துச் செல்வது தான். நானும் 5 பதிவர்களைத் தேட ஆரம்பிக்கிறேன்

Its Me The Monk said...

சிங்கம் லாம் சிங்கள் ஆ தான் ப்லோக் எழுதுமாம் ஆதி...
பெரியவங்களே சொல்லி இருக்காங்க...

மத்தவங்களை follow பண்ணுற கூட்டம் blog i follow பண்ணுற கூட்டம்...
இது உங்களையே follow பண்ற கூட்டம்...

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே...)

கவலைபடாம கலக்குங்க.... :)

Mahesh said...

பி.நா.வாழ்த்துகள் ஆதி !!!

ஆமா... ஆமா... அது என்ன அப்பிடி புளிக்குது.... முழங்கால் வரைக்கும்??

KVR said...

Belated Bday wishes aathi.

உங்களுக்கும் விருது கொடுத்திருக்கேன்

http://kvraja.blogspot.com/2009/11/blog-post_16.html

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி பின்னோக்கி.!
நன்றி முரளி.!
நன்றி வால்பையன்.!
நன்றி தமிழ்பறவை.!

நன்றி இட்ஸ்டிப்ரண்ட்.! (உங்கள் கருத்தில் ஒப்புதலில்லாமலில்லை)

நன்றி ஸ்ரீராம்.!
நன்றி மங்களூர்.!
நன்றி அத்திரி.!
நன்றி ஏஞ்சல்.!
நன்றி அமுதா.!

நன்றி கடைக்குட்டி.! (உங்கள் ரசனை புரிகிறது. அதுக்காக அரைக்கால் டவுசர்லாம் உங்களுக்கே ஓவரா தெரியலையா?)

நன்றி அக்பர்.!
நன்றி ரம்யா.!
நன்றி நரேன்.!
நன்றி துபாய்.!
நன்றி வாத்துக்கோழி.!
நன்றி பிரதாபன்.!
நன்றி மறத்தமிழன்.!

நன்றி கேவிஆர்.! (இதுதான் தேடுன லட்சணமா?)

நன்றி மாங்க்.! (கருத்து நல்லாருந்தது)

நன்றி மகேஷ்.! (அல்லோ.. வாங்க சார், ஊருக்கெல்லாம் போயிட்டு வந்தாச்சா? இதோட போயிடமுடியாது. மற்ற பதிவுகளுக்கும் பின்னூட்டம் போட்டுடுங்க.. கணக்கு வச்சிருக்கேன்)

ஊர்சுற்றி said...

ரொம்ப தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணே.

//அழகான பெயர்களை சூடிக்கொள்ளுங்கள். தமிழிலா அழகுப்பெயர்களுக்குப் பஞ்சம்?//
என்னோட பேரு சரியா பொருந்துதா?!!

'ஊர்சுற்றி ஜோன்சன்'