Monday, December 7, 2009

செயற்கை மின்னல்

ஒரு சிறிய தகவல்.

மின்சாரத்தின் பயன்பாடுகளை நீங்கள் அறிவீர்கள். உங்கள் வீட்டுக்கு சுமார் 220V மின்சாரம் வந்துகொண்டிருக்கிறது. இரவு நேரத்தில் சுவிட்சுகளை ஆன் செய்கிறீர்கள் அல்லது ஆஃப் செய்கிறீர்கள். அப்போது அந்த சிறிய சுவிட்சுக்குள் ஒரு ஸ்பார்க் எழுந்து மறைவதை பார்த்திருப்பீர்கள். ஏன் அது ஏற்படுகிறது.? மின்சாரம் வந்துகொண்டிருக்கிற வயரை இன்னொன்றுடன் தொடச்செய்கிறீர்கள் அல்லது பிரிக்கிறீர்கள். அப்போது அந்த தொடர்புப்பட்டை மின்சாரம் வந்துகொண்டிருக்கிற வயருடன் இணைவதற்கு முந்தைய மைக்ரோ விநாடிகளில் மிகக்குறைந்த இடைவெளியில் மின்சாரம் காற்றில் பாய எத்தனிக்கிறது. அதனால்தான் அந்த வெளிச்சம். 220V க்குதான் இந்த வெளிச்சம். நிற்க.

மின்சாரத்தை பல்வேறு வழிகளில் நாம் உற்பத்தி செய்கிறோம். அவை பல்லாயிரம் வோல்டேஜ்களில் இருக்கும். அவற்றை இன்னும் பல்லாயிரமாக ஏற்றி அல்லது இறக்கி மற்றும் பிரித்து நாம் (பல்நிலை சப் ஸ்டேஷன்களில் உள்ள ட்ரான்ஸ்பார்மர்கள் இந்தப்பணியைச்செய்கின்றன) அவற்றைக் கடத்த அல்லது விநியோகிக்க (Transmission and Distribution) வேண்டியுள்ளது. ஏன் அப்படி, அப்படியே அனுப்பிச்சா என்ன என்கிற மாதிரி கேள்விக்கெல்லாம் அனுமதி கிடையாது. நாம் என்ன BE எலக்ட்ரிகலா படித்துக்கொண்டிருக்கிறோம். விஷயத்துக்கு வாருங்கள். அப்படியாயின் அந்த பல்லாயிரம் வோல்டேஜ் அழுத்த மின்சார லைன்களை ஆன் அல்லது ஆஃப் எப்படிச்செய்கிறார்கள்? அப்பாடா கேள்விக்கு வந்தாச்சு. ரொம்ப சிம்பிள். பெரிய்ய்ய்ய்ய சைஸ் சுவிட்சு செய்துவிட்டால் போச்சு. பெரிய ஆனையைக்கொண்டு சுவிட்சு போட்டுவிடலாம் இல்லையா? ஹிஹி விளையாட்டு வேண்டாம், சீரியஸா திங்க் பண்ணுவோம்.

சமீபத்தில் நெட்டிலும், வலையுலகிலும் ஒரு விடியோ உலவிக்கொண்டிருந்தது. ஒரு மனநலம் குன்றியவர் மின்தொடர்வண்டியின் கூரை மேல் ஏறி லைவ்லைனை தொட்டு பஸ்பமானதை கண்டிருப்பீர்கள். பஸ்பமாதல் என்பதற்கான உதாரணம் அது. சிவனின் நெற்றிக்கண்ணுக்குக்கூட அந்த சக்தி/வேகம் இருக்குமா என்பது சந்தேகமே.! அந்த லைவ்லைனின் வோல்டேஜ் எவ்வளவு தெரியுமா? ஜஸ்ட் சுமார் 11000V தான். அதற்கே தொட்ட அடுத்த மில்லி செகண்டுகளிலேயே உடலின் அத்தனை நீர்த்தன்மையும் ஆவியாக நன்கு காய்ந்த ஒரு வைக்கோல் கட்டைப்போல அந்த உடல் சடசடவென எரிந்தது. இது இவ்வாறு இருக்க நாம் எவ்வளவு வோல்டேஜ் மின்சாரத்தை கடத்த வேண்டிய சூழலில் இருக்கிறோம் தெரியமா?

மயக்கம் போட்டுவிட வேண்டாம். சாதாரணமாக 245000V மற்றும் அதிகபட்சமாக 800000V. இந்த லைவ்லைன் இருக்கக்கூடிய சப்ஸ்டேஷன் மற்றும் பவர் ஸ்டேஷனுக்குள் சென்றால் பல நூறு அடிகளுக்கு முன்பே தலைமுடியெல்லாம் நட்டுக்கொண்டு நிற்க பேய் போல ஆகிவிடுவோம். பக்கத்தில் போனால் நிஜமாகவே பேயாகிவிடுவோம் என்பது வேறுகதை. அப்படியானால் அந்த லைன்களை எப்படி ஆன் செய்வது ஆஃப் செய்வது.? அப்போது எவ்வளவு பெரிய ஸ்பார்க் வரும்? ஸ்பார்க்கா அது? பெரும் மின்னல்.. அதை எப்படி ஆற்றுப்படுத்துகிறார்கள்?

டிங் டிடிங்.. அதற்காகத்தான் படிச்சுப் படிச்சுச் சொல்கிறேன். உங்களுக்குத் தேவைப்பட்டால் நாங்கள் தயாரிக்கும், நல்ல தரமான ஆட்டோமாடிக் 'சுப்புணி அண்ட் கோ' சர்க்யூட் பிரேக்கர்களையே (அதாம்பா பெரிய்ய சைஸ் சுவிட்சு) வாங்கிப் பயன்படுத்துங்கள். நம்பிக்கையானது, நியாயமானது.. சுப்புணி சர்க்யூட் பிரேக்கர்களே.! சகாயமான விலையில் கிடைக்கும். நான் கேரண்டி. டிங் டிடிங்..


(சும்மா ஒரு பொது அறிவுக்காகத்தான் இது. படத்தில் காட்டப்பட்டுள்ளதைப் போன்ற பிரேக்கர்களே நான் மேற்சொன்ன ஹை-வோல்டேஜ் லைன்களை இணைக்க / பிரிக்கப் பயன்படுகிறது. இதன் உள்ளே இருக்கும் நுண்ணிய பாகங்களை சோதனை செய்யும் வேலையைத்தான் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஹிஹி..)

.
பின்னர் அப்டேட் செய்யப்பட்டது (08.12.09 / 8.10 PM)
பதிவுக்கு தொடர்புடையதாக இருக்கும் என்பதால் இந்தப்பதிவின் இந்த பின்னூட்டம் இங்கே..

முதலில் ஒரு டிஸ்கி : நான் ஒரு மெக் பார்ட்டி. தயாரிக்கப்படும் பொருளின் அப்ளிகேஷன் எலக்ட்ரிகலாக இருந்தாலும் நான் பார்க்கும் வேலை முழுக்க மெக்கானிகல் துறை சார்ந்ததுதான்.ஆகவே என் சிற்றறிவுக்கு எட்டியவரை பதில் சொல்கிறேன். இதில் தவறு இருக்கலாம். தெரிந்தவர்கள் திருத்துங்கள்.

ஏன் தயாரிக்கும் மின்சாரத்தை அப்படியே அனுப்பாமல் ஸ்டெப் அப் மற்றும் ஸ்டெப் டவுன் செய்யவேண்டியதிருக்கிறது? நீண்ட தூரம் மின்சாரத்தை கடத்துகையில் மின் இழப்பு ஏற்படுவதை தடுக்கவே இந்த ஏற்பாடு. விஜய் மற்றும் UTNI பின்னூட்டங்களைக் காணலாம்.

வேலன் விளையாட்டுக்கு கேட்டாரோ என்னவோ அதற்கான பதிலாக ட்ரூத் சொல்வது தியரிடிக்கலாக தவறு. அறிவிலி சொல்வதே ஓரளவு சரி. 100V ஆக இருந்தாலும் 1000KV ஆக இருந்தாலும். சர்க்யூட்டை குளோஸ் செய்யாமல் (தரையையோ, நியூட்ரல் லைனையோ, எதுக்கு வம்பு எதையுமோ தொடாமல் இருப்பது) இருக்கும் பட்சத்தில் ஷாக் அடிக்காது. மனிதர்களோ, பறவைகளோ லைனில் அமரலாம். இது தியரிதான். இதனுள் இன்னொரு தியரியும் இருக்கிறது. வோல்டேஜ் அதிகமாக அதிகமாக அந்த லைனை சுற்றிலும் கரோனா (Corona effect) எனப்படும் மின்புலம் ஏற்படுகிறது. இந்த கரோனா ஏரியாவுக்குள் மின் கடத்தும் எந்த பொருளும் சென்றால் பெரும் ஸ்பார்க்காக மின்சாரம் அங்கே பாய விழையும். தரையும் இதில் சேர்த்தி என்பதால்தான் வோல்டேஜ் அதிகமாக அதிகமாக மின் கம்பங்களின் உயரமும் அதிகமாகிறது. நாம் தரையில் நடந்தவாறே அந்த கரோனா ஏரியாவுக்குள் செல்லமுடியாது. தூரத்தில் இருக்கும் கரோனாவின் மெல்லிய பாதிப்பே நம் தலைமுடி நட்டுக்கொள்கிறது. ஆகவே தியரிடிகலாக தரைக்கும் நமக்கும் (பறவைக்கும்) தொடர்பில்லாத பட்சத்தில் ஹை வோல்டேஜ் லைனையும் தொடலாம், கரோனா ஃபீல்டுக்குள்ளும் போகலாம். ஆனால் பிராக்டிகலாக அது சாத்தியமில்லை. கரோனா ஃபீல்டிலிருக்கும் அதிர்வு, எழும் அல்ட்ராசவுன்ட், லைனின் வெப்பம் ஆகியவற்றால் அங்கு நாம் செல்வதோ, தொடுவதோ ஆகாத காரியம். பறவைகளும் இந்த ஃபீல்டுக்குள் செல்வதில்லை.

அறிவிலி துவக்கி, பாலகுமாரன் கோடிட்டுக்காட்டிய விஷயம் யாதெனின் இந்த பிரேக்கரைக்கொண்டு லைனை கட் செய்யும்போது எழும் மின்னலை எப்படி ஆற்றுப்படுத்துவது? பிரேக்கருக்குள் இருக்கும் பாகங்கள் அந்தச்சவாலை சமாளிக்கும் வண்ணம் தகுந்த மெட்டீரியல்களால் தயாரிக்கப்படுகிற‌து. அதனுள் எழும் வெப்பம், ஆர்க் ஆகியவற்றை ஆற்றுப்படுத்த (Quenching) வேறு பல வழிகளும் நடைமுறையில் இருந்தாலும் நான் தந்துள்ள படத்தில் இருக்கும் வகை பிரேக்கர்களில் பாலகுமாரன் சொல்லும் SF6 (Sulphur hexa flouride) என்ற ஒரு வகையான மந்தவாயு தேவையான அழுத்தத்தில் அதனுள் அடைக்கப்பட்டிருக்கிறது. அது அந்த கொஞ்சிங் (Quenching) வேலையைச் செய்கிறது.

உஸ்ஸ்ஸ்.. அப்பாடி, போதும்னு நினைக்கிறேன்.!

.

52 comments:

நாடோடி இலக்கியன் said...

:).

குசும்பன் said...

// இரவு நேரத்தில் சுவிட்சுகளை ஆன் செய்கிறீர்கள் //

மயில்சாமி: இந்த தாயத்தை கட்டிக்கிட்டா நடுராத்திரியில் கூட சுடுகாட்டுக்கு போகலாம்.

வடிவேலு: நான் ஏன் டா சுடுகாட்டுக்கு நடுராத்திரியில் போகபோறேன்:))

(இரவில் போய் யாராவது லைட்டை ஆன் செய்வாங்களா ஆதி:)

குசும்பன் said...

//அவற்றைக் கடத்த அல்லது விநியோகிக்க (Transmission and Distribution) வேண்டியுள்ளது.//

ஆதி யார் கடத்துறா? கொஞ்சம் ஆற்காடாருக்கு போன் போட்டு சொல்லுங்க. இதனால் தான் தமிழகத்துக்கு கரண்டு ஒழுங்கா கிடைக்கமாட்டேங்குதா?

Aravind said...

என்ன‌ ஆதி.. வ‌ர‌ வ‌ர‌ ரொம்ப‌ நாள் எடுக்கிறீங்க‌ ஒவ்வொரு ப‌திவுக்கும்... ரொம்ப‌ வேலையோ..

சாதார‌ணமா இங்கெல்லாம் டிச‌ம்ப‌ர் மாத‌ம் கொஞ்ச‌ம் அதிக‌மாக‌வே வேலை பார்ப்போம்..என்னா வேலை நிறைய‌ இருக்குன்னா.. இல்ல‌.. இல்ல‌வே இல்ல‌.. இது போன‌ஸ் மாத‌ம்... கொஞ்ச‌ம் பிலிம் கூட‌வே காமிக்க‌னும்...

அது மாதிரி நீங்க‌ளும்..!!!??

குசும்பன் said...

பாஸ் சூப்பர் பிகரை தொட்டாலும் ஸ்பார்க் அல்லது மின்னல் வருது பாஸ், அதுக்கு ஏதும் ஸ்விட்ச் தயாரிக்கிறீங்களா?:))

அறிவிலி said...

மேட்டர் சூப்பர். தமிழ்மணம் துறை சார்ந்த பதிவு பரிந்துரைக்கு ஆச்சு.

மின்னல பத்தி சொல்லிட்டு விட்டுட்டீங்களே. அப்படியே அத அமுக்கறதுக்கு யூஸ் பண்ற க்வென்ச்சிங் மீடியம் பத்தியும் சொல்லிட்டு முடிச்சிருக்கலாமே.

தமிழ்ப்பறவை said...

நல்லா இருக்குங்க...
துறை சார் பதிவுப் போட்டிக்கா...?
வாழ்த்துக்கள்...

அன்புடன் அருணா said...

எப்பா! என்னா தமிழு!ஆனாலும் பொது அறிவு கொஞ்சம் வளர்ந்துச்சு!

ஆதிமூலகிருஷ்ணன் said...

4 நாலு கழிச்சுப்போடுறேனே..

ஹிட்ஸ், பின்னூட்டம் ஒண்ணத்தையும் காணோமே.. இதுக்குதான் துறைசார்ந்து ஒண்ணும் போடறதில்லை..

அடுத்து போட்டுறவேண்டியதுதான்.. மொக்கை.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி இலக்கியன்.!

நன்றி குசும்பன்.! (நீங்க சொன்ன ஸ்பார்க்கை க்வென்ச் பண்ண கொஞ்சிங் தான் ஒரே வழி.!)

நன்றி அரவிந்த்.! (நம்புங்கபா.. ரொம்ப வேலைதான்)

நன்றி அறிவிலி, தமிழ்பறவை.! (அதான் டிஸம்பர் பதிவு கணக்கில வராதுல்ல, அப்புறம் ஏன் ஒண்ணுக்கு ரெண்டு பேர் கேட்டு கடுப்பேத்துறீங்க.. :-))

நன்றி அருணா.!

குசும்பன் said...

//இதன் உள்ளே இருக்கும் நுண்ணிய பாகங்களை சோதனை செய்யும் வேலையைத்தான் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.//

புரியிரமாதிரி சொல்லனும் என்றால் லைன்மேன் சரியா ஆதி!


(பொழுதுபோவல கும்மி அடிக்க ஒன்னும் நல்ல போஸ்டா இல்லை அதான் இங்கன கேம்ப் போடலாமான்னு யோசிக்கிறேன்)

கார்ல்ஸ்பெர்க் said...

ஆதி'ணா.. விஜயகாந்த் இருக்குறப்ப எதுக்கு இந்த 'சுப்புணி அண்ட் கோ' , 'நுண்ணிய பாகங்களை சோதனை ' எல்லாம்??

அப்பறம், அவர ஆவி ஆக்கணும்னா எவ்வளவு வோல்டேஜ் வேணும்??

Sangkavi said...

நல்லா இருக்கு......
வாழ்த்துக்கள்...

வெற்றி said...

எளிய தமிழில் நன்றாக அறிவியலை விளக்குகிறீர்கள்....தொடருங்கள்....

sriram said...

நல்லா வெளக்குறீங்க ஆதி..
இவ்ளோ தெரிஞ்ச நீங்க தங்க்ஸின் கோபத்தை அடக்கும் ஒரு சர்க்கியூட் ப்ரேக்கரை ஏன் கண்டுபிடிக்கவில்லை
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

ஈரோடு கதிர் said...

:))))).

கும்க்கி said...
This comment has been removed by the author.
கும்க்கி said...

எதையோ வெளாவாரியா சொல்ல வந்து படக்குன்னு முடிச்சுப்போட்ட மாதிரி இருக்குங்னா...

கார்க்கி said...

டாக்டர்.நாரயணன் ரெட்டி, துறை சார்ந்த பதிவு எழுதினா எவ்ளோ நல்லா இருக்கும்?? ம்ம்ம்

வால்பையன் said...

சம்சாரத்திடமிருந்து கூட மின்சாரம் தாக்கும்னு சொல்றாங்களே உண்மையா தல!

அ.மு.செய்யது said...

"அரிவு(வா)"ப் பூர்வமான பதிவு.

Anonymous said...

ஆதி,

110 v ஆ இருந்தாலும் 110 KV ஆ இருந்தாலும் அதன் மீது உக்காரும் காக்கா, குருவிகளுக்கு ஒன்றுமே ஆவதில்லையே எப்படி?

சுசி said...

//தலைமுடியெல்லாம் நட்டுக்கொண்டு நிற்க பேய் போல ஆகிவிடுவோம். பக்கத்தில் போனால் நிஜமாகவே பேயாகிவிடுவோம் என்பது வேறுகதை. //

அனுபவிச்சு எழுதி இருக்கீங்க.
நல்ல பதிவு.

Vijay said...

//ஏன் அப்படி, அப்படியே அனுப்பிச்சா என்ன என்கிற மாதிரி கேள்விக்கெல்லாம் அனுமதி கிடையாது. நாம் என்ன BE எலக்ட்ரிகலா படித்துக்கொண்டிருக்கிறோம். விஷயத்துக்கு வாருங்கள்.//

இவ்ளோ சொல்லிட்டு இது மட்டும் ஏன் சொல்லக்கூடாது? அப்படியே அனுப்ப முடியாது. ஏன்னா, மின்சாரம் தயாரிக்கிற எடத்துல ஹைவோல்டேஜ்ல தயாரிக்கிறாங்க. ஆனா உபயோக படுத்தற எடத்துல தேவைக்கு ஏத்தா மாதிரி வோல்டேஜ் வேண்டி இருக்கு. உங்க வீட்டு கிணத்து தண்ணிய மாடிக்கி ஏத்த் 220 வோல்ட்டு.... உங்க கிராமத்து கிணத்து தண்ணி எறக்கிற ப்ம்புசெட்டுக்கு 440 வோல்ட்டு... ம்ம்... உங்க ஊருக்கு தண்ணி சப்ளை பண்ற வீராணம் குழாய் சைஸ் லைனுக்கு எல்லாம் 6600 வோல்ட்டு... இது தவிர தொலைதூர இடங்களுக்கு மின்சாரம் அனுப்பனும்னா, வெரி ஹைவோல்டேஜ்தான் வசதி. ஏன்னா அந்த வோல்டேஜ்ல தான் மின்சார விரயம் குறைவு.

ஆதி சார், என்னா கரீட்டா? என்னை உங்க கம்பெனில லைன் மேன் வேலைக்கி சேத்துப்பியாபா?

Truth said...

//ஹிட்ஸ், பின்னூட்டம் ஒண்ணத்தையும் காணோமே.. இதுக்குதான் துறைசார்ந்து ஒண்ணும் போடறதில்லை..
ஒவ்வொரு வரியையும், எழுத்தையும் படிச்சேன் ஆதி. நீங்க மொக்கை போடுங்க, ஆனா இந்த மாதிரியான பதிவுகளும் போடுங்க. படிக்க ரெடியாத் தான் இருக்கேன் :-)

Truth said...

// வடகரை வேலன் said...
ஆதி,

110 v ஆ இருந்தாலும் 110 KV ஆ இருந்தாலும் அதன் மீது உக்காரும் காக்கா, குருவிகளுக்கு ஒன்றுமே ஆவதில்லையே எப்படி?

வேலன், உங்க கேள்வியை கொஞ்சம் மாத்தணும். 110KV ல உக்காரும் காக்கா சாகுறதில்லை, ஆனா அதையே மனிஷன் உக்காந்தா செத்து சாம்பலாவது உறுதி. அதெப்படி?

ஏன்னா, நாமெல்லாம் capacitanceஐ discharge செய்யும் sink போன்றவர்கள். ரொம்ப சிம்பிலா சொல்லணும்னா, லேப்டாப்பில் இருக்கும் மவுஸ் பேடில் உங்கள் விரலால் அசைத்தால் மட்டுமே மவுஸ் பாயண்டர் நகரும். வேரு எந்த பென்சிலோ, பென்னோ, இதை செய்ய முடியாது. because the mouse pad is capacitive and not resistive. iPhone also has the same touch screen funda. And thats why do not have stylus for iPhone. Stylus will simply not work on iPhone.

ஆதி, தப்பா சொல்லியிருந்தா மாத்துங்க.

Anonymous said...

//பாஸ் சூப்பர் பிகரை தொட்டாலும் ஸ்பார்க் அல்லது மின்னல் வருது பாஸ், அதுக்கு ஏதும் ஸ்விட்ச் தயாரிக்கிறீங்களா?:)) //

hahaha

குசும்பன் , உங்க கும்மிய இங்கயே நடத்துங்க. எங்களுக்கும் பொழுது போவணுமில்ல :)

அறிவிலி said...

//வடகரை வேலன் said...
ஆதி,

110 v ஆ இருந்தாலும் 110 KV ஆ இருந்தாலும் அதன் மீது உக்காரும் காக்கா, குருவிகளுக்கு ஒன்றுமே ஆவதில்லையே எப்படி?//

அண்ணாச்சி, ஷாக் அடிக்கணும்னா
கரண்ட் பாஸ் ஆகணும். அதுக்கு
சர்க்யூட் க்ளோஸ் ஆகணும். நாம கரண்ட் கம்பிய தொடும்போது பூமியில கால் வெச்சிருந்தோம்னா சர்க்யூட் க்ளோஸ் ஆகி நம்ம மூலமா கரண்ட் பாஸ் ஆகி ஷாக் அடிக்குது.ஆனா காக்கா, குருவி உக்காரும்போது ஒரு லைன்ல தான் உக்காருது. அதனால கரண்ட் பாஸ் ஆகாது, ஷாக்கும் அடிக்காது. நீங்களும் சூப்பர் மேன் மாதிரி பறந்து போய் கம்பிய அந்தரத்துல புடிச்சிகிட்டு தொங்கினா ஷாக் அடிக்காது.

அறிவிலி said...

//வேலன், உங்க கேள்வியை கொஞ்சம் மாத்தணும். 110KV ல உக்காரும் காக்கா சாகுறதில்லை, ஆனா அதையே மனிஷன் உக்காந்தா செத்து சாம்பலாவது உறுதி. அதெப்படி?//

தரையை தொடாம தொங்கினா மனுஷனும் சாம்பலாக மாட்டான். ரொம்ப ஹை வோல்டேஜ் ஆக இருந்தால் கொஞ்ச தூரம் வரைக்கும் காத்துலயே கரண்ட் பாஸ் ஆகும். ஆதி சொன்னா மாதிரி முடியெல்லாம் நட்டுக்கும், இன்னும் கொஞ்சம் பக்கத்துல போனா ஷாக் அடிக்கலாம்.

அறிவிலி said...

ட்ரூத்,

//ஏன்னா, நாமெல்லாம் capacitanceஐ discharge செய்யும் sink போன்றவர்கள். ரொம்ப சிம்பிலா சொல்லணும்னா, லேப்டாப்பில் இருக்கும் மவுஸ் பேடில் உங்கள் விரலால் அசைத்தால் மட்டுமே மவுஸ் பாயண்டர் நகரும். வேரு எந்த பென்சிலோ, பென்னோ, இதை செய்ய முடியாது. because the mouse pad is capacitive and not resistive. iPhone also has the same touch screen funda. And thats why do not have stylus for iPhone. Stylus will simply not work on iPhone.//

பேனா , பென்சில் வேலை செய்யாது சரி. ஆனா எதுக்கும் காக்காகிட்ட iPhone குடுதது பாருங்க, வேலை செய்யும்.:)))

Just for Joke. This Capacitive Resistive funda are quite the same for animals and human beings.

அறிவிலி said...

@ ஆதி,

போதுமா, பின்னூட்டம். நம்ம துறையை நாமளே ஊக்குவிக்கலேன்னா எப்படி?

Cable Sankar said...

//பாஸ் சூப்பர் பிகரை தொட்டாலும் ஸ்பார்க் அல்லது மின்னல் வருது பாஸ், அதுக்கு ஏதும் ஸ்விட்ச் தயாரிக்கிறீங்களா?:)) //

சுவிட்சு வீட்டுல் இருக்கிற மறந்து சொல்றாரு குசும்பன்..

Vijay said...

உங்கள் வீட்டுக்கு சுமார் 220V மின்சாரம் வந்துகொண்டிருக்கிறது. இரவு நேரத்தில் சுவிட்சுகளை ஆன் செய்கிறீர்கள் அல்லது ஆஃப் செய்கிறீர்கள். அப்போது அந்த சிறிய சுவிட்சுக்குள் ஒரு ஸ்பார்க் எழுந்து மறைவதை பார்த்திருப்பீர்கள்.

ஹை வோல்டேஜ்ல எழும் ஸ்பார்க் பாக்கணுமா? இந்த யூ.ஆர்.எல். பாருங்க.

http://www.youtube.com/watch?v=6xrkw4kNE_8

இது எப்பவும் ஆகறது இல்ல. இப்படி ஆகாம் இருக்கத்தான், நெறய பாதுகாப்பான சர்க்குட் பிரேக்கர்களூம், ஐசுலேட்டர்களும் வச்சிருக்கோம். இருந்தாலும் ஆதி மாதிரி ஆளுங்க ”இதன் உள்ளே இருக்கும் நுண்ணிய பாகங்களை சோதனை செய்யும் வேலையை” ஓழுங்கா பாக்காம பிளாக்ல மொக்கை போடும்போதுதான்.,.....வேணாம்... ஆதீஈஈ... எதுவானாலும் பேசி ”தீ”க்கலாம்பா...சே...தீர்க்கலாம்பா... கட்டைய கீழ போடுபா.. அட..

எறும்பு said...

அண்ணாச்சி நீங்க வேலை பாக்கிற கம்பெனி பேரு என்ன?? சென்னைல எனக்கு தெரிஞ்சு circuit breaker தயாரிக்கிற கம்பெனி alstom , இப்ப அது பேரு areva . இங்கதான் கொஞ்ச நாளைக்கு பொட்டி தட்டிட்டுஇருந்தேன்

ஸ்ரீமதி said...

நல்ல பதிவு அண்ணா. :))

நர்சிம் said...

நல்லா எழுதி இருக்கீங்க ஆதி.

அமிர்தவர்ஷினி அம்மா said...

// இரவு நேரத்தில் சுவிட்சுகளை ஆன் செய்கிறீர்கள் //

மயில்சாமி: இந்த தாயத்தை கட்டிக்கிட்டா நடுராத்திரியில் கூட சுடுகாட்டுக்கு போகலாம்.

வடிவேலு: நான் ஏன் டா சுடுகாட்டுக்கு நடுராத்திரியில் போகபோறேன்:))

(இரவில் போய் யாராவது லைட்டை ஆன் செய்வாங்களா ஆதி:)


உபயோகமான பதிவுன்னுதான் கமெண்ட் போட வந்தேன், அதுக்கு முன்னாடி, முன்னாடி கமெண்ட் :))))))))))))))))))))))))))))))))))))))))

KVR said...

நல்ல பதிவு ஆதி.

காக்கை உட்கார்ற மேட்டர்ல அறிவிலி சொன்னது தான் சரின்னு தோணுது. நீங்க என்ன சொல்றிங்க?

Romeoboy said...

சீரியஸ் பதிவ படிச்சிட்டு வந்தா குசும்பன் பின்னுடத்த படிச்சு சிரிக்காம இருக்க முடியல பாஸ் ...

பதிவு அருமை ..

நாஞ்சில் நாதம் said...

:))

வித்யா said...

நல்ல பதிவு.
அறிவிலி சொன்னது தான் சரி. சர்க்யூட் முழுமையாகாத வரைக்கும் கரண்ட் பாஸ் ஆகாது.

Utni said...

hi

Utni said...

Guys,
Consider this: to transmit 10 KW power: (crude calculation)
P = Voltage x current
10,000 W = 220 v x 45 A
or
10,000 w = 2200 vx 4.5A
Size(dia.) of the conductor (wire) is proportional to current.
Hence if we maintain 220v, we need a thicker wire.
Alternative is to increase the voltage to 2200 as shown above, which needs a thin wire.
Also, power losses = I x I x r. lower current, lower losses.
These are the reasons the voltage is stepped up, transmitted, and stepped down for consumption.
When we need to transmit larger power this is very efficient & cost saving. But, there is a tradeoff...guess.

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

துறை சார்ந்த பதிவா!!!
அம்மாம் பெரிய சுவிட்சுகளை ஆப் பண்ணும் போது வரும் மின்னல அணைக்க என்ன செய்வாங்க?

படத்துல இருப்பது ஒருவேளை SF6 CBயா இருக்குமோ?

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஓகே, தேவையான பின்னூட்டம் வந்தாச்சா.. அந்த பயம் இருக்கட்டும்.! நிறைய டெக்னிகல் கேள்விகளும், டிஸ்கஷன்களும் நடந்திருக்கின்றன. என் பதிலை மொத்தமாக இறுதியில் சொல்ல முயற்சிக்கிறேன்.

நன்றி குசும்பன்.! (ஆமா, நா லைன்மேன், நீங்கதான் ஹெல்பர் ஹிஹி)

நன்றி கார்ல்ஸ்.! (அவுர அடிக்கிறதுக்கெல்லாம் புதுசா டபுள் ஈணுலை போட்டுதான் கரன்டு தயாரிக்கணும்)

நன்றி சங்கவி.!
நன்றி வெற்றி.!

நன்றி ஸ்ரீராம்.! (ஷாப்பிங் பிரேக்கர்னு ஒண்ணு இருக்கிரது உங்க‌ளுக்குத் தெரியாதா?)

நன்றி கதிர்.!

நன்றி கும்க்கி.! (அதான் நான் என்ன பாடமா எடுக்கிறேன்னு சொல்லிட்டேன்ல)

நன்றி கார்க்கி.! (அதான் எம்மா ஆளுங்க எழுதுறாங்க? பத்தாதா?)

நன்றி வால்பையன்.! (தெரிஞ்சுக்கிட்டே கேள்வி கேட்டா கிளாஸிலிருந்து வெளியேற்றிருவேன்)

நன்றி செய்யது.! (ஏன் தம்பி இம்மாங்கஷ்டப்படுற.. 'அரிவா'ர்ந்த பதிவுன்னு போட்டாப்போச்சுது?)

நன்றி வேலன்.! (வால்பையனே பரவாயில்லைங்கிற மாதிரி ஒண்ணாங்கிளாஸ் கேள்வி கேட்டு என்னை அவமானப்படுத்தும் அண்ணாச்சி ஒளி'க)

நன்றி விஜய்.! (லைன்மேன் வேலைக்கி நீ பாஸாயிடுவ தல)

நன்றி ட்ரூத்.! (வேறவழி. உங்கள நம்பித்தான ஆகணும். பை தி வே, உங்க பதிலில் ஐபோன் உதாரணம் புரியலை, இதுக்கு பொருந்துமான்னும் புரியலை)

நன்றி அம்மிணி.! (நீங்க ஏன் அவுரு பின்னூட்டமெல்லாம் படிக்கிறீங்க. முதலில் கருத்து சொல்லிட்டுதான் பின்னூட்டம் பார்க்கணும்னு ஏதாவது சட்டம் போடணும்ப்பா)

நன்றி அறிவிலி.! (இன்னும் கொஞ்சம் பக்கத்துல போனா ஷாக் அடிக்கலாம்.
// சந்தேகத்தோடையே பதில் எழுதும் உங்களுக்கு முட்டை மார்க்.. ஹிஹி)

நன்றி கேபிள்.! (கரெக்டு பாஸ்)

நன்றி விஜய்.! (நானும் ஒரு அலுவலக விடியோவை இணைக்கலாம்னு முதலில் நினைத்தேன். விடியோ ஆபீஸில் தெரியவில்லை. நீங்கள் இணைத்திருப்பது மெக்கானிகல் டிஸ்கனெக்டராக இருக்கலாம். பிரேக்கர்களை ஒப்பிடுகையில் அதன் அப்ளிகேஷன் வோல்டேஜ் மிகக்குறைவு. அதற்கே அப்படியொரு ஸ்பார்க்)

நன்றி எறும்பு.! (ரொம்ப முக்கியமா, அது இப்ப? டெஸ்ட் வைக்கிறேன். எங்க ஆபீஸ்ல தெரிஞ்சவுங்க பேரு சொல்லுங்க பார்க்கலாம்)

நன்றி ஸ்ரீமதி.!
நன்றி நர்சிம்.!

நன்றி அமித்து.! (அம்மிணிக்கான பதில் பின்னூட்டத்தை பார்த்துக்கொள்ளவும்)

நன்றி கேவிஆர்.!
நன்றி ரோமியோ.!
நன்றி நாஞ்சில்.!
நன்றி வித்யா.!

நன்றி .! (நெம்ப படிச்சவரா இருப்பீங்களோ, விளக்கத்துக்கு நன்றி, சொல்லவந்ததையும் சொல்லிடுங்க‌)

நன்றி பாலகுமாரன்.! (இது கண்டிப்பா எலக்டிரிகல் பார்ட்டிதான்)

ஆதிமூலகிருஷ்ணன் said...

முதலில் ஒரு டிஸ்கி : நான் ஒரு மெக் பார்ட்டி. தயாரிக்கப்படும் பொருளின் அப்ளிகேஷன் எலக்ட்ரிகலாக இருந்தாலும் நான் பார்க்கும் வேலை முழுக்க மெக்கானிகல் துறை சார்ந்ததுதான்.ஆகவே என் சிற்றறிவுக்கு எட்டியவரை பதில் சொல்கிறேன். இதில் தவறு இருக்கலாம். தெரிந்தவர்கள் திருத்துங்கள்.

ஏன் தயாரிக்கும் மின்சாரத்தை அப்படியே அனுப்பாமல் ஸ்டெப் அப் மற்றும் ஸ்டெப் டவுன் செய்யவேண்டியதிருக்கிறது? நீண்ட தூரம் மின்சாரத்தை கடத்துகையில் மின் இழப்பு ஏற்படுவதை தடுக்கவே இந்த ஏற்பாடு. விஜய் மற்றும் UTNI பதில்களைக் காணலாம்.

வேலன் விளையாட்டுக்கு கேட்டாரோ என்னவோ அதற்கான பதிலாக ட்ரூத் சொல்வது தியரிடிக்கலாக தவறு. அறிவிலி சொல்வதே ஓரளவு சரி. 100V ஆக இருந்தாலும் 1000KV ஆக இருந்தாலும். சர்க்யூட்டை குளோஸ் செய்யாமல் (தரையையோ, நியூட்ரல் லைனையோ, எதுக்கு வம்பு எதையுமோ தொடாமல் இருப்பது) இருக்கும் பட்சத்தில் ஷாக் அடிக்காது. மனிதர்களோ, பறவைகளோ லைனில் அமரலாம். இது தியரிதான். இதனுள் இன்னொரு தியரியும் இருக்கிறது. வோல்டேஜ் அதிகமாக அதிகமாக அந்த லைனை சுற்றிலும் கரோனா (Corona effect) எனப்படும் மின்புலம் ஏற்படுகிறது. இந்த கரோனா ஏரியாவுக்குள் மின் கடத்தும் எந்த பொருளும் சென்றால் பெரும் ஸ்பார்க்காக மின்சாரம் அங்கே பாய விழையும். தரையும் இதில் சேர்த்தி என்பதால்தான் வோல்டேஜ் அதிகமாக அதிகமாக மின் கம்பங்களின் உயரமும் அதிகமாகிறது. நாம் தரையில் நடந்தவாறே அந்த கரோனா ஏரியாவுக்குள் செல்லமுடியாது. தூரத்தில் இருக்கும் கரோனாவின் மெல்லிய பாதிப்பே நம் தலைமுடி நட்டுக்கொள்கிறது. ஆகவே தியரிடிகலாக தரைக்கும் நமக்கும் (பறவைக்கும்) தொடர்பில்லாத பட்சத்தில் ஹை வோல்டேஜ் லைனையும் தொடலாம், கரோனா ஃபீல்டுக்குள்ளும் போகலாம். ஆனால் பிராக்டிகலாக அது சாத்தியமில்லை. கரோனா ஃபீல்டிலிருக்கும் அதிர்வு, எழும் அல்ட்ராசவுன்ட், லைனின் வெப்பம் ஆகியவற்றால் அங்கு நாம் செல்வதோ, தொடுவதோ ஆகாத காரியம். பறவைகளும் இந்த ஃபீல்டுக்குள் செல்வதில்லை.

அறிவிலி துவக்கி, பாலகுமாரன் கோடிட்டுக்காட்டிய விஷயம் யாதெனின் இந்த பிரேக்கரைக்கொண்டு லைனை கட் செய்யும்போது எழும் மின்னலை எப்படி ஆற்றுப்படுத்துவது? பிரேக்கருக்குள் இருக்கும் பாகங்கள் அந்தச்சவாலை சமாளிக்கும் வண்ணம் தகுந்த மெட்டீரியல்களால் தயாரிக்கப்படுகிற‌து. அதனுள் எழும் வெப்பம், ஆர்க் ஆகியவற்றை ஆற்றுப்படுத்த (Quenching) வேறு பல வழிகளும் நடைமுறையில் இருந்தாலும் நான் தந்துள்ள படத்தில் இருக்கும் வகை பிரேக்கர்களில் பாலகுமாரன் சொல்லும் SF6 (Sulphur hexa flouride) என்ற ஒரு வகையான மந்தவாயு தேவையான அழுத்தத்தில் அதனுள் அடைக்கப்பட்டிருக்கிறது. அது அந்த கொஞ்சிங் வேலையைச் செய்கிறது.

உஸ்ஸ்ஸ்.. அப்பா, போதும்னு நினைக்கிறேன்.!

கும்க்கி said...

தலிவரே.,
பாரின்லே 110வோல்ட் மட்டும் சப்ளை ஆகுதாமா...அதுல மனித உயிர்களுக்கு பாதிப்பில்லைதானே..நாம் ஏன் வீணா 220வோல்ட்டை வீட்டுக்குள்ளார வெச்சு வெளாண்டிட்டிருக்கோம்..?

துபாய் ராஜா said...

ஆதி,நாமளும் கரெண்டை கையில புடிக்கிற ஆளுதான்.... :))

(GTG,HRSG,STG,WTG பத்தி விளக்கமா ஒரு பதிவு போட நேரமில்லாமல் பிராஜெக்ட் பீக்குல போகுது ஆதி... )

க‌ரிச‌ல்கார‌ன் said...

MEch ப‌டிச்சிருந்தாலும் "த‌ள‌" எவ்வ‌ள‌வு க‌ஷ்ட‌ப் ப‌ட்டு ஒரு Elec ப‌திவு போட்டிருக்காரு ஓரே ஒரு ஓட்டு தானா?

குசும்பன் said...
(இரவில் போய் யாராவது லைட்டை ஆன் செய்வாங்களா ஆதி:)

ஆன் செஞ்சு தான் இந்த‌ க‌ல‌ர்ல‌ ஆயிட்டாரோ.....

தராசு said...

வேற துறையாயிருந்தாலும் கலக்குறீங்க தல,

வாழ்த்துக்கள்.

Indian said...

Nice post. Thought it would be a bit long.

A request to fellow bloggers.

Can some one write about elementary electricity (the sort of class 6 to class 12 physics)in Thamizh?

umakaviya said...

great....!!