Wednesday, December 9, 2009

காலனைக் கேலி செய்தவள்

'தேவதை' நடப்பு இதழில் நமது அன்புக்குரிய தோழி, பதிவர் ரம்யாதேவியைப் பற்றிய கவர் ஸ்டோரி வெளியாகியுள்ளது. காலனைக் கேலி செய்து மரணத்தை வென்று வந்த அவரது வாழ்க்கை அனைவருக்கும் தன்னம்பிக்கை தரும் ஒரு லைவ் எடுத்துக்காட்டு. ரம்யா மிகுந்த அன்பானவர், பழக இனிமையானவர். அவருடன் போனில் பேச நேர்ந்தால் கலகலவென சிரிக்காமல் நாம் போனை வைத்துவிட முடியாது. நகைப்பு ததும்பும் அவர் பேச்சு கட்டுரையிலும் தெறித்தது. சிறிதும் சிம்பதி கிரியேட் செய்துவிடாமல் பிரமிப்பைத் தருவதாக இருந்தது கட்டுரை. நீங்கள் ஒரு உதாரண மனுஷி ரம்யா. உங்கள் நட்புக்கு நாங்கள் பெருமை கொள்கிறோம், வாழ்த்துகள்.!

************

பிரபல பதிவர் ராமலக்ஷ்மியின் வலைப்பூ குறித்த அறிமுகத்துடன் அவரது புகைப்படங்கள் குறித்த சிலாகிப்புடன் நடுப்பக்கங்கள் நிறைந்திருந்தன (எங்கூர்க்காரங்கன்னாலே எல்லாத்திலும் திறமைசாலிகள்தான்னு தனியா வேற சொல்லணுமா என்ன? ஹிஹி). அவருக்கும் இன்னும் உயரங்கள் பல தொட வாழ்த்துகள். அப்படியே அதே இதழை சுவாரசியமாக புரட்டிக்கொண்டு வந்தபோது வீட்டுக்குறிப்புகள் பக்கம் தென்பட்டது (ஹைய்யா.. நம்ப செட்டு என ச்சின்னப்பையனும், மகேஷும் கூச்சலிடுவது கேட்கிறது). ஒரு அழகிய குறிப்பு மிகவும் பிடித்திருந்தது.

"டிஸைனர் ரப்பர்கள், பென்சில்கள், ஊதல், பென்சில் பாக்ஸ் போன்ற சிறிய பொருட்களை எப்போதும் கைவசம் வைத்திருங்கள். குழந்தைகளை சந்திக்க நேர்கையில் அவற்றை பரிசளித்து அந்த சின்னஞ்சிறிய மனிதர்களின் கண்கள் வியப்பிலும், மகிழ்ச்சியிலும் விரிவதைக்காணலாம்."

ஐடியாவும் 'சின்னஞ்சிறிய மனிதர்கள்' என்ற வார்த்தைப்பிரயோகமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

*************

PIT குழுவாக இயங்கும் ஒரு பெரிய புகைப்படப்போட்டிக்கு அழைத்திருக்கிறார்கள். தலைப்பு 'என் நகரம்'. எனக்குள் உறங்கிக்கிடந்த புகைப்படக் கலைஞனை சுரண்டி விட்டுவிட்டார்கள். திருநெல்வேலியை படங்களாக பிரதிபலிக்க முடிவுசெய்துள்ளேன். பிப்ரவரி வரை நேரமிருப்பதாலும், ஜனவரியில் நீள்விடுப்பில் ஊர் செல்ல இருப்பதாலும் முடியும் என நம்புகிறேன். என்னுடன் இணைந்துகொள்ள விருப்பமிருப்பவர்கள் மெயிலில் தொடர்பு கொள்ளவும். thaamiraa@gmail.com (டெஸ்ட் வைத்து சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். ஹிஹி..)

**************

வேட்டைக்காரன் விளம்பரங்கள் நல்ல டெம்போ ஏற்றுவதாக உள்ளன. படம் விஜயின் ரசிகர்ளை ஏமாற்றாமல் இருக்கக்கடவதாக. கார்க்கியைப் போலவே நானும் பயங்கர எதிர்பார்ப்பில் இருக்கிறேன். பின்னே குருவி மாதிரி ஒரு ஹிட் விமர்சனம் எழுதி எவ்வளவு நாட்கள் ஆகின்றன? எனது ஆவலை தூண்டியிருக்கும் இன்னொரு படம் ஜேம்ஸ் கேமரூனின் 'அவதார்' (ஆங்கிலத்தில் என்ன 'ஏவேட்டர்'னு சொல்லணுமா?). மேக்கிங் விடியோவை யூடியூபில் பார்த்த போதே பிரமிப்பு தாங்கவில்லை. விஷுவலின் உச்சத்தை தொட்டிருப்பார்கள் என நினைக்கிறேன். பார்ப்போம்.

**************

வண்ணம் (கவிதை)

சில புத்தகங்கள்

கொஞ்சம் ரசனை

சிறிது வண்ணங்கள்

தந்தது நீ

வாழ்வதற்கான முதல் தேவையைத் தந்த

உன்னை விட்டுவிட்டும்

வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறேன்

.

34 comments:

கார்க்கி said...

ரம்யாவுக்கு ராமலஷ்மிக்கும் வாழ்த்துகள்.

பிட் படம் எடுக்கறுதுக்கு கூட கூட்டம சேர்ப்பிங்களா அப்பு? அதுவும் டெஸ்ட் வேற. என்ன டெஸ் சாமீ?


வேட்டைக்காரனை நீங்க பார்க்க கூடாது.. சொல்லிட்டேன் ஆமா..

வண்ணம்,. அது கவிதைன்னு அடைப்புக்குறிக்குள் போட்டதால்தான் தெரிகிறது :))

Cable Sankar said...

என்ன கவிதை எழுதுறீங்க நீங்க.. கேபிள் சங்கர்னு ஒருத்தர் கலர் கலரா கவிதை எழுதி பின்னுறாரு.. போய் பார்த்துட்டு வாஙக்..:)

க.பாலாசி said...

இரு தேவதைகளுக்கும் எனது வாழ்த்துக்களும்...

புகைப்பட போட்டியில் தங்களது முயற்சியும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்...

//வேட்டைக்காரன்....//

:-(

புதுகைத் தென்றல் said...

வாழ்த்துக்கள் ரம்யா, ராமலக்‌ஷ்மி.

தராசு said...

ரம்யாவுக்கும், ராம லஷ்மிக்கும் வாழ்த்துக்கள்.

//எனக்குள் உறங்கிக்கிடந்த புகைப்படக் கலைஞனை சுரண்டி விட்டுவிட்டார்கள்//

பொதுவா உறங்கிக் கிடப்பவர்களை தட்டித் தான் எழுப்புவாங்க, உங்கள சுரண்டுனாங்களா தலைவா,
ஆமாம், இப்பிடி உங்களுக்குள்ள இன்னும் யாரெல்லாம் உறங்கி கிடக்கறாங்க, எதுக்கு கேக்கறேன்னா, நாமளும் கொஞ்சம் பிரண்டலாமே, சீ, சுரண்டலாமேன்னுதான்.

தராசு said...

// Cable Sankar said...
என்ன கவிதை எழுதுறீங்க நீங்க.. கேபிள் சங்கர்னு ஒருத்தர் கலர் கலரா கவிதை எழுதி பின்னுறாரு.. போய் பார்த்துட்டு வாஙக்..:)//

அப்படிப் போடு அருவாள.

தராசு said...

// @ கார்க்கி said

வேட்டைக்காரனை நீங்க பார்க்க கூடாது.. சொல்லிட்டேன் ஆமா..//

ஆமா, தலைவரே, நமக்கு வேண்டப்பட்டவங்க எச்சரிச்சாங்கன்னா, ஆமான்னு கேட்டுக்கணும். பாருங்களேன், அவுங்களே எவ்வளவு பயந்து போயிருக்காங்கன்னு

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி கார்க்கி.! (எங்க உரையாடல்ல பரிசு வாங்கிடுவேனோன்னு பொறாமைதானே உனக்கு?)

நன்றி கேபிள்.! (யோவ்.. எத்தனை பேர்யா கிளம்பியிருக்கீங்க இந்தமாதிரி? உரையாடல் அமைப்பை.. நறநற..)

நன்றி பாலாசி.!
நன்றி தென்றல்.!

நன்றி தராசு.! (உள்ள இருக்குறது பல ரூபங்கள், அதனாலதான் எப்பயுமே எங்கள நாங்க நாங்கன்னுதான் சோல்லுவோம். கவனிச்சிருப்பீங்களே பல பதிவுகளில்..)

சரண் said...

நான் இப்பதான் வலைப்பூவை ரிலீஸ் பண்ணி இருக்கேன். ஒரு வருஷமா பிரிவியூ ஷோதான் ஒட்டினு இருந்தேன். ஆனா ஒண்ணுப்பா எவ்வளவு டென்சன் இருந்தாலும் உங்க மாதிரி சில பேர் வயிறு புன்னாகுற அளவுக்கு சிரிக்க வெச்சுடுறீங்க...

சரண்
http://writer-saran.blogspot.com/

அமிர்தவர்ஷினி அம்மா said...

ரம்யாவுக்கும், ராம் மேடத்திற்கும் வாழ்த்துக்கள்

அதே இதழை சுவாரசியமாக புரட்டிக்கொண்டு வந்தபோது வீட்டுக்குறிப்புகள் பக்கம் தென்பட்டது //

இப்படி வீட்டுக்குறிப்பு பார்த்து செஞ்சதுதான் அந்த ஆயுதம் போண்டாவா ? :)

'சின்னஞ்சிறிய மனிதர்கள்' / அழகாய் இருக்கிறது சொல்லிப்பார்க்க.

வண்ணம் அழகாய் இருக்கிறது.

♠ ராஜு ♠ said...

நான் இப்பதான் வலைப்பூவை ரிலீஸ் பண்ணி இருக்கேன். ஒரு வருஷமா பிரிவியூ ஷோதான் ஒட்டினு இருந்தேன். ஆனா \\ஒண்ணுப்பா எவ்வளவு டென்சன் இருந்தாலும் உங்க மாதிரி சில பேர் வயிறு புன்னாகுற அளவுக்கு சிரிக்க வெச்சுடுறீங்க...\\

ஹலோ, சீரியஸா பேசிட்டு இருக்காப்ல‌. சிரிப்பு போலீஸ்ன்றீங்க..!
அவ்வளவுதான்..! டரிய்லாகீரும்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி சரண்.! (நா சீரியஸா கவிதை எழுதுனா உங்களுக்கு சிரிப்பா இருக்குதா? பிச்சுபிச்சு..)

நன்றி அமித்துஅம்மா.!

நன்றி ராஜு.! (ஆமா, அவுருக்கு தெரியாது, நீங்க எடுத்துக்குடுங்க)

Rasigan said...

திருநெல்வேலி...விஜய் ..கவிதை..பார்த்ததும் கார்க்கி ..என்ன சொல்லுவாரோன்னு நெனைச்சேன்..சொல்லீட்டார்..ஹா ஹா

அமுதா கிருஷ்ணா said...

கார்க்கி,வேட்டைக்காரனை தாம்பரம் வித்யாவில் வரவிடாமல் செய்து விட்டால் தாமிராவை பார்க்கவிடாமல் செய்யலாம்....

ராமலக்ஷ்மி said...

உங்கள் அன்புக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஆதி.

ரம்யா என்றாலே பிரமிப்புதான். அவருக்கு இங்கும் என் வாழ்த்துக்கள்!

வாழ்த்தியிருப்பவர்களுக்கு என் நன்றிகள்.

உங்கள் மூலமாக ‘நம் நகரம்’ போட்டியில் இடப் பெறப் போவது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. நீண்ட விடுப்பில் செல்வதால் நிச்சயம் அழகாகக் கவர் செய்ய இயலும்.

வண்ணம் அருமை. தொடருங்கள்.

அத்திரி said...

//பின்னே குருவி மாதிரி ஒரு ஹிட் விமர்சனம் எழுதி எவ்வளவு நாட்கள் ஆகின்றன? //

முடியல...வேணாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.........விட்டுடுங்க...............அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் அழுதிருவேன்

கும்க்கி said...

என்னத்த....
ஒரு பத்து பதினஞ்சு அறுவா படத்த கறுப்பு வெள்ளையிலவும், கலர் கலராவும் எடுத்து போட்டா ஆச்சு...தி.வேலி.
இதுக்கு டெஸ்ட் வேறயாமா....


ரம்யா அக்காவிற்கும், ராமலஷ்மி மேடத்திற்கும் வாழ்த்துக்கள்..
தகுதியான உதாரணங்கள்.

கார்க்கி said...

//அமுதா கிருஷ்ணா said...
December 9, 2009 6:52 PM
கார்க்கி,வேட்டைக்காரனை தாம்பரம் வித்யாவில் வரவிடாமல் செய்து விட்டால் தாமிராவை பார்க்கவிடாமல் செய்யலாம்//

மேடம் நம்ம படம் எம்.ஆர்ல தான். வித்யாவில அவதார்.

உங்கள் ஏரியாவில் வேட்டைக்காரான் எங்கே ரிலிஸ் என்பதை தெரிந்துக் கொள்ள உடனே எனக்கு ஃபோன் போடுங்க

RAMYA said...

ஆதி! உங்கள் அன்புக்கும், உங்கள் வாழ்த்துக்களுக்கும், உங்கள் வலையில் என்னை கவுரவப் படுத்தியதிற்கும் மிக்க நன்றி சகோ!

என்னை வாழத்திய அனைவருக்கும் மிக்க நன்றி!

ராமலக்ஷ்மி மேடத்திற்கும் இங்கே என் நல் வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறேன். சகோதரிக்கு என் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்கிறேன்.

நட்பு வளையத்தில் ஆரோகணித்திருக்கும் எனக்கு வேறு என்ன வேண்டும்? இந்த வலைச் சொந்தங்கள் ஒன்றே போதும்.

என் எண்ணங்களுக்கு வானமே எல்லை. அதே போல என் கனவுகளுக்கும் வானமே எல்லை. இதுதான் எனது தாரக மந்திரம்.

மதிப்பிற்குரிய அனுஜன்யா கூறியது போல் நான் இன்னும் மென்மேலும் உயர உயர செல்ல உங்கள் அனைவரின் அன்பு ஒன்றே போதும்.

ஆதி! நீங்கள் போட்டியில் வெல்ல எனது வாழ்த்துக்கள்!

நன்றி! நன்றி! நன்றி!

தமிழ்ப்பறவை said...

கலர் கலராக் கவிதை முயற்சிகள்...
(ஒன்பது வரிக் கவிதை தொடர் போலவா?)

தமிழ்ப்பறவை said...

//பிட் படம் எடுக்கறுதுக்கு கூட கூட்டம சேர்ப்பிங்களா அப்பு? அதுவும் டெஸ்ட் வேற. என்ன டெஸ் சாமீ?//
:-)

அ.மு.செய்யது said...

"வாழ்வதே சாதனை தான்" என்ற ரம்யாவின் வார்த்தைகளைத் தாங்கி வந்த தேவதையின் அட்டைப் படத்தை மட்டுமே பார்க்க முடிந்தது.நம்ம ரம்யா !!!! பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

பதிவர் ராமலஷ்மிக்கும் வாழ்த்துக்கள்..( உங்களுக்கும் இந்த கியூட் கவிதைக்காக !! )

சுசி said...

ரம்யாவுக்கும், ராமலஷ்மி அக்காவுக்கும் வாழ்த்துக்கள்.

//எனக்குள் உறங்கிக்கிடந்த புகைப்படக் கலைஞனை சுரண்டி விட்டுவிட்டார்கள். //
அப்பாடா.. சிங்கத்த சீண்டினாத்தானே தப்பு. இது ஜஸ்ட்டு சுரண்டல்தானே.

//'சின்னஞ்சிறிய மனிதர்கள்' //
நோட் பண்ணிக்கிட்டேன் :))

//வாழ்வதற்கான முதல் தேவையைத் தந்த
உன்னை விட்டுவிட்டும்
வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறேன்//

அருமை..

ஆதிமூலகிருஷ்ணன் said...

ரசிகன், அமுதா (நல்ல கணிப்பு, ஹிஹி), ராமலக்ஷ்மி, அத்திரி, கும்க்கி, ரம்யா (உங்கள் தகுதிக்கு எங்கள் பாராட்டுகள் மிகக்குறைவே), தமிழ்பறவை (குறைஞ்சது ரெண்டு பேர் இருக்கணூம்கிறது PIT ரூல்ஸ் பிரெண்ட்), செய்யது, சுசி..

அனைவருக்கும் நன்றி.!

துபாய் ராஜா said...

ராமலஷ்மி அக்காவிற்கும்,ரம்யாவிற்கும் வாழ்த்துக்கள்.இன்ஷா முருகா, ஜனவரி ஊர்ல சந்திப்போம் ஆதி....

Truth said...

ரம்யாவுக்கும் ராமலக்ஷ்மிக்கும் வாழ்த்துக்கள்.

PiTக்கு உங்களுக்கு வாழ்த்துக்கள் ஆதி. டெஸ்ட் எல்லாம் இருக்கட்டும், உங்களோட புகைப்படங்கள் எங்கே? அத சொல்லலியே! :-)

உண்மையில் வேட்டைக்காரன் படத்தை விட உங்களோட திரை விமர்சனம் தான் நான் ரொம்ப எதிர்பார்க்கிறேன்.

பட்டிக்காட்டான்.. said...

ரம்யாவுக்கும், ராமலஷ்மிக்கும் வாழ்த்துக்கள்

//.. உள்ள இருக்குறது பல ரூபங்கள், அதனாலதான் எப்பயுமே எங்கள நாங்க நாங்கன்னுதான் சோல்லுவோம். ..//

முடியல..!

Anonymous said...

ரம்யாவுக்கும் ராமலஷ்மிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

ச்சின்னப் பையன் said...

ரம்யாவுக்கும் ராமலஷ்மிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

க‌ரிச‌ல்கார‌ன் said...

//திருநெல்வேலியை படங்களாக பிரதிபலிக்க முடிவுசெய்துள்ளேன். பிப்ரவரி வரை நேரமிருப்பதாலும், ஜனவரியில் நீள்விடுப்பில் ஊர் செல்ல இருப்பதாலும் முடியும் என நம்புகிறேன்//

திருநெல்வேலியை படங்களாக பிரதிபலிக்க நீள் விடுப்பெல்லாம் தேவையில்லை அரை நாள் விடுப்பு போதும் "த‌ள‌" (த‌ல‌ இல்ல‌)

ஆதிமூலகிருஷ்ணன் said...

துபாய் ராஜா,

ட்ரூத் (எடுத்திருந்தாத்தானே இருக்குறதுக்கு? இனிமேதான் எடுக்கணும்),

பட்டிக்காட்டான்,

அம்மிணி,

ச்சின்னவர் (கையில கிடைச்சீங்கன்னா தெரியும், அநியாயம்யா நீங்க பண்றது),

கரிசல்காரன் (லீவு குடும்பத்தோடு இருக்காத்தானே தவிர போட்டோ எடுக்க இல்லை, அரைநாள் கிடைச்சாலே போதும் எடுத்துடுறேன், போதுமா.. :-))

அனைவருக்கும் நன்றி.

ஜெனோவா said...

ஆதியண்ணே, நானும் போட்டோ எடுக்குற உங்க குரூப்புல சேந்துகிடலாமா??
டெஸ்டுக்கு எத்தன போட்டோஸ் அனுப்பனும் ?

ரம்யாவுக்கும் , ராமலக்ஷ்மி அவர்களுக்கும் வாழ்த்துக்கள் !

vanila said...

கடைசி ஏழு வரிகளைத்தவிர மற்றதெல்லாம் கவிதை மாதிரியே இருக்கு ஜி...

ரம்யா ஜி'க்கும் ராமலக்ஷ்மிக்கும் வாழ்த்துகள்.

Truth said...

//ட்ரூத் (எடுத்திருந்தாத்தானே இருக்குறதுக்கு? இனிமேதான் எடுக்கணும்),

அட போட்டிக்காக எடுத்தது இல்லேங்க. இதுவரைக்கு நீங்க எடுத்த படங்கள் ஏதேனும் ஆல்பத்துல இருக்கும்ல, அத தான் கேட்டேன்.