Monday, December 14, 2009

கவிதை எழுதுவது எப்படி?


இவற்றைத் தொடர்ந்து..

'உரையாடல்' கவிதைப்போட்டி அறிவித்திருக்கும் இவ்வேளையில் அடுத்த தேவை என்ன என்பதை முன்னறிந்து தர வேண்டிய பொறுப்பிருப்பதை அறியாதவனா.. நான்? போகலாம் பாடத்துக்கு.. கவிதை எழுதுவது எப்படி?

கவிதை முன்சொன்னவை போல அவ்வளவு எளிதானது அல்லதான். ஆனால் அதற்காக ரொம்ப பயப்படவேண்டியதில்லை. கொஞ்சம் தைரியமாக அப்ரோச் செய்தோமானால் ஒரு வழி பண்ணிவிடலாம் (கவிதையை மட்டுமல்ல, படிப்பவர்களையும்தான்). கவிதைகளில் இரண்டு வகை இருக்கின்றன. ஒன்று நேரடியாக, அழகாக நாம் நினைப்பவற்றை, ரசித்தவற்றை அப்படியே சொல்லிவிடுவது. இன்னொன்று அப்படியெதுவுமேயில்லாமல் ஏதோ ஒன்றை எழுதிவிடுவது. அது நமக்கே கூட புரியவேண்டுமென்பதில்லை, ஏனென்றால் எழுதிமுடித்தவுடன் அது நம்மிலிருந்து விலகி பிரதியாகிவிடுவதால் அதைப் புரிந்துகொள்வது படிப்பவன் பாடு. எழுதிப் போட்டுவிட்டு நான்கு நாட்கள் கழித்துவந்து பின்னூட்டங்களைப் பார்த்தால் எப்படியும் பத்து விதமான அர்த்தங்களோடு சிலாகிப்புகளோடு உங்களை ஒரு பெரிய கவிஞராக்கிவிட்டிருப்பார்கள். கவலை வேண்டாம் இதே வழிமுறையில் சிறுகதை எழுதுபவர்கள் பலரையும் கூட எனக்குத்தெரியும். ஆகவே தைரியமாக முயற்சியுங்கள். குறிப்பாக எழுதும்போது உங்களுக்கு இலக்கணப்பிழை நேரும் என்றால் நீங்கள் அதிர்ஷ்டசாலி, இங்கே அது கூடுதல் தகுதி. இது கொஞ்சம் சீரியஸான ஏரியா என்பதாலும் பலரிடம் மூக்கில் குத்துவாங்க நேரிடும் என்பதாலும் நாம் இதை விட்டுவிட்டு முதல் வகை கவிதைகள் எப்படி எழுதுவது என்று மட்டும் பார்க்கலாம்.

இந்தக் கவிதை வகையை எழுத, முதலும் முக்கியமுமான தேவை ஒரு பெண்ணைக் காதலித்து முடித்திருக்க வேண்டும். அல்லது காதலித்துக்கொண்டுமிருக்கலாம். அப்படியில்லாதவர்கள் கவலைப்பட வேண்டாம், குறைந்தபட்சம் பெண்களைப்பார்த்து ஜொள் விடுபவர்களாக இருந்தால் கூட போதுமானது. அதையும் கூட செய்திராத புத்திசாலிகள் கவிதையெல்லாம் எழுதி ஆகவேண்டிய அவசியமொன்றுமில்லை என்று நான் சொல்லவேண்டியதில்லை.

அப்படியானால் சமூகக்கவிதைகள்? என்று இழுப்பவர்களுக்கு.. அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம், கவிதை பழகுவதற்கு காதல்தான் சரியான களம். (இப்போதே குறிப்பெடுத்துக்கொள்ள துவங்குங்கள்.. கவிதை, காதல், களம்.. எப்படி வரிசையாக வார்த்தைகள் வந்துவிழுகின்றன பார்த்தீர்கள்தானே?)

முதலில் கவிதைக்கான பொருள். அதை எப்படிக் கண்டுகொள்வது? இப்போது காதலித்துக் கொண்டிருப்பவர்கள், நேற்று நீங்கள் முத்தம் கேட்டதற்கு உங்கள் காதலி எப்படி வெட்கப்(?)பட்டார் என்பதை எண்ணிப்பாருங்கள். அவர் பேசிக்கொண்டிருக்கும் போது உங்கள் காதில் சங்கு வைத்து ஊதினாலும் கேட்காத அளவில் அவர் உதடுகளை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தீர்கள் அல்லவா, அதையும் எண்ணிப்பாருங்கள். அவர் கட்டிச்சீவி முடித்திருந்தாலும் அழகுதான், அலைபாய விட்டிருந்தாலும் அழகுதான் எப்படி இது? என குழம்பியிருப்பீர்கள்தானே அதை எண்ணுங்கள்.

இவையெல்லாம் இல்லாதவர்கள் கொசுவத்திகளை சுழற்றிவிடுங்கள். சென்னை வந்த புதிதில் கைகளில் பைகள் இருந்த காரணத்தால் பஸ் டிரைவர் அடித்த பிரேக்கில் அவிழ்ந்த பூங்கொத்தைப்போல உங்கள் மார்பில் விழுந்தாளே ஒரு யுவதி, நினைவிருக்கிறதா? நண்பர் வீட்டிற்குச் சென்றிருந்தபோது அவரின் தங்கையின் தோழியெனும் முன்முகம் பார்த்திராத ஒரு பெண்ணின் கால்களை நினைவிருக்கிறதா? கெண்டைக்கால்களுக்கா இவ்வளவு அழகு என மூர்ச்சையாகி விழுந்த உங்களை தண்ணீர் தெளித்து நண்பர் வெளியே இழுத்துவந்த பின்னும் கூட ஜொள் வழிய போகமாட்டேன் என அடம்பிடித்தீர்களே நினைவிருக்கிறதா? இவ்வாறு பலவற்றையும் நினைவு கூர்ந்து மனதில் ஊறப்போடுங்கள். வார்த்தைகளுக்காக காத்திருங்கள்.

அப்புறம் களம். பால்நிலவு, முன்னிரவு நேரம், பால்கனித் தென்றல், சுகமான இருக்கை (அடல்ட்ஸ் ஒன்லி : தேவையானவர்கள் சிகரெட் அல்லது தேநீர் அல்லது இரண்டும் அல்லது திராட்சை ரசம் ஆகியவற்றை வைத்துக்கொள்வது) ஆகியன இருந்தால் கவிதை பீறிடும் என நீங்கள் நினைத்துக்கொண்டிருந்தால்.. ஸாரி, அது தவறு. நான் நிறைய டிரை பண்ணி நல்ல குறட்டை விட்டுத்தூங்கியிருக்கிறேன். ஆகவே அவையெல்லாம் அவசியமில்லை, நெஞ்சுக்குள் கவிதை எனும் நெருப்பு இருந்தால் எந்த சமயத்திலும் அது பிரசவிக்கும். அது மானேஜர் மீட்டிங்கில் கத்தும்போதும், பைக்கை 'சபக்'கென சாணி மேல் ஏற்றும் போதும், தங்கமணி செய்த போண்டாவை தின்ன முயலும்போதும் என எந்தத் தருணமாகவும் இருக்கலாம். அதை அறிந்து கொள்வதில்தான் உங்கள் வெற்றி இருக்கிறது.

அப்புறமென்ன.. தைரியமாக எழுதத்துவங்கிவிடுங்கள். ஒரு வரிக்கு ஒரு வார்த்தை அல்லது அதிகபட்சம் மூன்று வார்த்தைகள், அவ்வளவுதான் எண்டர் தட்டிவிடுங்கள். வானம், பானம், கானம், மானம் என எதுகைகளும், கற்பு, கவிதை, களிமண், கருப்பட்டி என மோனைகளும் அடுத்தடுத்து வருமாறு பார்த்துக்கொள்ளுங்கள். நிறைய புதுமையான வார்த்தைகளும் பழக்கத்தில் இல்லாத பழைய வார்த்தைகளும் கவிதைகளுக்கு ரொம்ப அவசியம். அப்போதுதான் ஒரு எஃபெக்ட் கிடைக்கும். பின்னிரவு, இலாவகம், வன்மம், அச்சுறுத்தல், இச்சை.. இப்படியான வார்த்தைகள் இடம்பெற வேண்டும். அது ஒன்றும் சிரமமில்லை. பெரிய தமிழறிவோ, வாசிப்போ அவசியமில்லை. கவிதை எழுதுவது என்று முடிவாகிவிடால் நான்கைந்து கவிஞர்களின் சில கவிதைகளை திறந்து வைத்துக்கொண்டால் போயிற்று. ஆனால் அதே நேரம் நீங்களே சிந்திக்கிறேன் பேர்வழி என்று அசூயை, சமிக்ஞை போன்ற கொஞ்சம் ஓவரான வார்த்தைகளைப் பயன்படுத்திவிட்டு பின்னால் மொத்து வாங்காதீர்கள்.

அப்புறம் உதாரணமாய் உங்கள் காதலியின் அழகை வர்ணிக்கும் கவிதை ஒன்று எழுதப்போவதாய் முடிவுசெய்துவிட்டீர்கள் எனக்கொள்வோம். அதை சும்மா அப்படியே சொல்லாமல் எதோடாவது ஒப்பிட்டுச்சொல்லுங்கள். அதுதான் உவமை எனப்படுகிறது. அதற்காக காலங்காலமாய் கல்யாண வாழ்த்து எழுதும் போது பயன்படுத்தும் 'நகமும் சதையும் போல', 'மலரும் வண்டும் போல', 'பாலும் தேனும் போல'ன்னு எழுதி படிக்கிறவங்களை கடுப்பேற்றாதீர்கள். 'உன் உதடுகள் அழகு' என்று சொன்னால் அது வாக்கியம். அதை,

அன்பான
அவள்
அதரங்கள்
அறுத்த
ஆரஞ்சுச்சுளைகள்
அல்லவா?
அல்லது
அழகான நெல்லை
அல்வாவா?

என்று எழுதினால் கவிதையாகிறது, எப்பூடி? ரொம்ப யூஸ் பண்ணாமலிருந்தால் தவறு. நீங்களும் கொஞ்சம் சொந்தமாக திங்க்(?) பண்ணுங்கள்.

ஆல் தி பெஸ்ட்.!

.

61 comments:

karki said...

//ஆல் தி பெஸ்ட்//

இந்த மாதிரி பதிவுகளில் எங்க “ஆள்.. தி பெஸ்ட்”

கலக்கல் சகா

Cable Sankar said...

ஆதி..
இது சீரியஸ் பதிவா
காமெடி பதிவா?
அதுக்கு ஏத்தா
மாதிரி பின்னூட்டம்
போடணும்..:)

இப்படிக்கு
எண்டர் கவிதைகள்
புகழ்
கேபிள் சங்கர்:)

நாடோடி இலக்கியன் said...

கலக்கல் ஆதி.

நல்ல சுவாரஸ்யம்.

தர்ஷன் said...

//குறைந்தபட்சம் பெண்களைப்பார்த்து ஜொள்விடுபவர்களாக இருந்தால் கூட போதுமானது. அதையும் கூட செய்திராத புத்திசாலிகள் கவிதையெல்லாம் எழுதி ஆகவேண்டிய அவசியமொன்றுமில்லை என்று நான் சொல்லவேண்டியதில்லை.//

சரியாச் சொன்னீங்க
உங்கள் கொசுவத்தி அனுபவங்கள் இளையராஜா பின்னணி இசையுடன் எண்பதுகளின் படம் பார்த்தது போல இருக்கின்றது.

விஜய் ஆனந்த் said...

நல்லா இருக்கு...

தராசு said...

//அதிகபட்சம் மூன்று வார்த்தைகள், அவ்வளவுதான் எண்டர் தட்டிவிடுங்கள்.//

கலக்கல். ஆனா, இந்த வரிகளில் எதோ உள்குத்து இருக்கற மாதிரி தெரியுதே.

க‌ரிச‌ல்கார‌ன் said...

'உரையாடல்' கவிதைப்போட்டி அறிவித்திருக்கும் இவ்வேளையில் எல்லா க‌விஞ‌ர்க‌ளும் தான் ப‌ரிசு பெற‌ கவிதை எழுதிக் கொண்டிருக்கையில் எங்க‌ ஆள் ம‌ட்டும் ஒரு கூட்ட‌த்தையே க‌வித‌ எழுத‌ வைக்க‌ வேண்டும் என்று உழைக்கிறார். அச‌த்த‌ல் த‌லைவா!

எல்லா க‌விக‌ளும்
த‌த்த‌ம‌து க‌விதைக‌ளை
கூர் தீட்டுகையில்

எங்க‌ளை கூர் தீட்ட‌
வ‌ந்தாயே க‌விஞ‌ர்க‌ளின்
க‌வியே

நீ வாழ்க‌
நின் குல‌ம் வாழ்க‌
நின் கொற்ற‌ம் வாழ்க‌!!

ராமலக்ஷ்மி said...

ரசித்தேன்:)!

♠ ராஜு ♠ said...

எனக்கு நல்லா தெரிஞ்ச, ஒரு மொழி தமிழ்..
அதுல உங்களுக்குன்னு ஒரு வார்த்தை..
அது மட்டும் வரமாட்டேங்குது..
அட பின்னூட்டம் போடத்தாங்க.

KaveriGanesh said...

சாரு நிவேதிதாவின் 10 நூல்களின் வெளியீட்டின் தொகுப்பும் , புகைப்படங்களூம்

http://kaveriganesh.blogspot.com/2009/12/10.html

pappu said...

டாவென அழைத்த அவள்
க்ளோரோஃபார்ம் குரலில்
மயங்கிய
என்னை
எட்டிப் பார்க்கத் திமிரும்
லோகட் முலைகளைப்
போல சிறிதாக எட்டிச்
சிதறும் அவள் தோழியின்
சிரிப்பின் வெக்கம்
சிறிதாக கொல்ல...
இருவரின் ஒற்றுமை
திருமணத்தில் தொடருமா எனக் கேட்க
சடுதியில் சென்றேன்.

இது எப்புடி... கன்னி முயற்சி, அதுவும் இன்ஸ்டண்ட்...
ஆதி, சங்கரிடம் கற்ற பயிற்சியின் விளைவு.. உங்கள் தலைமை மாணாக்கனாக என்னை அறிவியுங்கள்!

pappu said...

இது கவிதை மட்டுமில்லை அடுத்த கதையுடைய கருவைத் தான் இப்படி.... அந்த வகையில் உங்களுக்குதான் முதலில் கதையை லீக் பண்ணிருக்கேன்..

இதக் கவிதையயும்(?!) ஒரு பதிவா(?!) கல்லா கட்டிக்க அண்ணனுடைய ஆசிர்வாதம் வேணும் :)

ஜெட்லி said...

நானும் வரும் காலங்களில் ட்ரை பண்றேன் அண்ணே..

Sangkavi said...

ஆதி......இப்படி கூட கவிதை எழுதலாமா...........

எனது முதல் கவிதை உங்களுக்கே....................

கார்க்கி said...

//இது எப்புடி... கன்னி முயற்சி//

பப்பு, கொடுத்து வச்சவரய்யா நீர்..

KaveriGanesh said...

அவ்வளவுதான் எண்டர் தட்டிவிடுங்கள்.

ஏற்கனவே எண்டர் கவிஞர் நம்மிடம் உள்ளார் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

ஆதி,
இந்த கட்டுரை ஆ.வி யில் வரவேண்டிய மிகதகுதியானது.

கே.ரவிஷங்கர் said...

நல்லா இருக்குங்க.

அமிர்தவர்ஷினி அம்மா said...

சிரிப்பும் சுவாரஸ்யமும்

pappu said...

@கார்க்கி
//இது எப்புடி... கன்னி முயற்சி//

பப்பு, கொடுத்து வச்சவரய்யா நீர்..///

இதுல ட்ரிபுள் மீனிங் எதுவும் இல்லையே!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி கார்க்கி.! (கொஞ்ச‌ம் குழ‌ப்ப‌த்தில் இருந்தேன். ஆறுத‌ல் பின்னூட்ட‌ம்)

நன்றி கேபிள்.! (சீரிய‌ஸான்னு கேட்குற‌ அள‌வுக்கு சீரிய‌ஸா இருந்த‌தா? அவ்வ்..)

நன்றி இலக்கியன்.!

நன்றி தர்ஷன்.! (நான் எண்ப‌துக‌ளா? யோவ்.. 90க‌ளில்தான் ஸ்கூலுக்கே போனேன்)

நன்றி விஜய்.!
நன்றி தராசு.!

நன்றி கரிசல்.! (ச‌ரிதான், ந‌ட‌த்துங்க‌)

நன்றி ராமலக்ஷ்மி.!
நன்றி ராஜு.!

நன்றி காவேரி.! (நீங்க சொல்ற‌தை விகடன்ல கேட்டுறப்போறாங்க, ஜாக்கிரதை)

நன்றி பப்பு.! (இந்த‌க்கொல‌வெறி க‌விதை எழுதப்பட‌ நான் கார‌ண‌மாகிட்ட‌னா? சாமி என் க‌ண்ண‌க்குத்திடாதே..)

நன்றி ஜெட்லி.!
நன்றி சங்கவி.!
நன்றி ரவிஷங்கர்.!

நன்றி அமித்துஅம்மா.! (உங்களுடைய பின்னூட்டத்தையும் ஒரு அளவுகோலாக நான் கொண்டுள்ளேன். பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் நிஜமான கருத்துகளை தெரிவியுங்கள். மதிப்பிட்டுக்கொள்ள உதவும்)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[குறைந்தபட்சம் பெண்களைப்பார்த்து ஜொள்விடுபவர்களாக இருந்தால்கூட போதுமானது. அதையும்கூட செய்திராத புத்திசாலிகள் கவிதையெல்லாம் எழுதி ஆகவேண்டிய அவசியமொன்றுமில்லை என்று நான் சொல்ல வேண்டியதில்லை.]]]

அதான் எனக்கு அந்தச் சனியன் வரவே மாட்டேங்குதா..?

வானம்பாடிகள் said...

இம்புட்டு சுலபமா? எண்டர் தட்டணும்னு தெரியுது. ஆனா எங்க தட்டணும்னு தெரியலையேஏஏஏஏஏஏஏஏஏஏ..அவ்வ்வ்வ். கலக்கல்

Cable Sankar said...

/கலக்கல். ஆனா, இந்த வரிகளில் எதோ உள்குத்து இருக்கற மாதிரி தெரியுதே//

ஆமாண்ணே.. ஏதோ யாரையோ குத்துற மாதிரிதான் இருக்கு

அ.மு.செய்யது said...

மரத்திலிருக்கு காய்..
தூங்கத் தேவை பாய் !!!

வானமோ நீலம் !!!
நீதான்டி என் பாலம் !!!

( அந்த‌ அசூயை மேட்டர் ர‌சித்தேன்...கும்மாங்குத்துல்ல‌ அது..!! )

Rajeswari said...

இப்படியானதொரு நம்பிக்கை பதிவை அளித்தமைக்கு நன்றிகள் பல..கண்டிப்பாய் கவிதை போட்டியில் பரிசு வாங்கிவிடுவேன்..
அவ்வ்வ்வ்...

Anonymous said...

///பைக்கை 'சபக்'கென சாணி மேல் ஏற்றும் போதும், தங்கமணி செய்த போண்டாவை தின்ன முயலும்போதும் என எந்தத் தருணமாகவும் இருக்கலாம்//

இது தாமிரா டச். நல்லா இருக்கு :)

ஆனா என்ன ட்ரை பண்ணாலும் நமக்கெல்லாம் வராது :)

அதி பிரதாபன் said...

அதிரும் அவளது
அதரங்கள்
அல்வாவா
ஆரஞ்சு சுளைகளா
ஆம்லெட்டா
இட்லியா
ஈரமான போண்டாவா
உட்டாலக்கடியா
ஊசிப்போன....

அய்யய்யோ வேணாம், வேற மாதிரி போகுது, திரும்ப மொதல்ல இருந்தே ஆரம்பிக்கிறேன்.

அதிரும் அவளது அதரங்கள்
ஆரஞ்சு சுளைகளா
அல்வாவா
கேட்கலாம்
உணரலாம்
பொறு
வேலைக்குச் செல்லட்டும்
கணவன்

ஹ்ம்.... நீங்க சொன்ன ஏதாவது ஒரு பாயிண்டுக்குள்ல வருதா?
---
என்னப்பா இது, நெறைய கவிதை பின்னூட்டத்துல இருக்கும்னு வந்தா கவிஞர் கேபிள் கவிதை மட்டும்தான் இருக்கு...(நைட்டு கவனிப்பீங்கள்ல?)

ஆதி அண்ணே, உங்க கவிதையும் சூப்பரு (நீங்க அடுத்த வாரம்), அதுலயும் கடசி வரி உங்க நேட்டிவிட்டிய காட்டுது.

ஹுஸைனம்மா said...

ஆதியண்ணே, இந்தப் பதிவு என் முதல் கவிதையைப் பாத்ததுக்கபுறம் எழுதினீங்களா இல்ல தற்செயல் நிகழ்வா? எது எப்படியானாலும் உங்க ஊக்கப்படுத்தும் வார்த்தைகளால் இன்னும் பல கவிதைகள் எழுதலாம் என்று என்னை முடிவெடுக்க வைத்துவிட்டீர்கள். நன்றி.

எதுக்கும் என் கவிதையைப் பாக்காதவங்க பாத்துடுங்க.

நர்சிம் said...

நல்லா எழுதி இருக்கீங்க ஆதி.

Vijay said...

//90க‌ளில்தான் ஸ்கூலுக்கே போனேன்)//
எதுக்கு....பொண்ணை சேக்கதானே? :))

Vijay said...

//90க‌ளில்தான் ஸ்கூலுக்கே போனேன்)//
90 களில்தான் நீங்க 90 மேட்டர்ல மும்முறமா இருந்தீங்களே தல. அப்புறம் என்னா உஸ்கூலூ...அது இதுன்னு உதார் உட்டுக்கிட்டு...

சங்கர் said...

ஜஸ்டு மிஸ், இப்போதான் ஒரு கவிதை எழுதி முடிச்சேன், பரவாயில்ல அடுத்த கவிதைக்கு உங்க யோசனைகளை பயன்படுத்திக்கிறேன்

அன்புடன்-மணிகண்டன் said...

இருக்கும் கவிஞர்கள் இம்சை போதாதுன்னுட்டு இப்படி வேறயா??
சூப்பர் பதிவு ஆதி..

எம்.எம்.அப்துல்லா said...

அடக் கெரகமே!

KVR said...

//அறுத்த
ஆரஞ்சுச்சுளைகள்
அல்லவா?//

ஆரஞ்சு சுளையைக் கூட அறுத்துச் சாப்பிடுற மனுஷன இப்போ தானுங்கண்ணா பார்க்கிறேன்.

"ஆரஞ்சுச்சுளைகள்” - இதழைப் பற்றிப் பேசுவதால் ஒரு கிக்கா இருக்கட்டும்ன்னு நடுவுல “ச்” வச்சிங்களா?

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

உரையாடல் சிறுகதை பட்டறைக்குபின் சிறுகதையின் வரவு கம்மி, இப்போ உரையாடல் கவிதை பட்டறை ஒன்று நடக்குமா?
சந்தேகம்-101.

முரளிகண்ணன் said...

:-)

வித்யா said...

பதிவு சுவாரஸ்யம்.
பின்னூட்டங்கள் பதிவை விட..

நாஞ்சில் நாதம் said...

:))

Karthik said...

சரவணக்குமார் அண்ணா மாதிரி கவிதைகள் எழுத கொலை, தற்கொலைகள் பண்ணின அனுபவம் வேண்டுமோ? விளக்கம் ப்ளீஸ்!! :))

பரிசல்காரன் said...

ஆதி

இந்த மாதிரி நான் எழுதினா மட்டும் ஏன் திட்டறாங்க?

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி உண்மைத்தமிழன்.! (ஹிஹி.. அதான் காரணமா இருக்கும்)

நன்றி வானம்பாடிகள்.!

நன்றி செய்யது.! (க க க போ)

நன்றி ராஜேஸ்வரி.! (ஊஹூம், இதுக்கெல்லாம் அழக்கூடாது)

நன்றி அம்மிணி.! (என்னது.. சாணி மேல பைக்க ஏத்துறது தாமிரா டச்சா?)

நன்றி பிரதாபன்.! (கோடு போட்டா ரோடு போடுற பார்ட்டிங்கதான் நம்ப தம்பிகள், குட். கீப் இட் அப். ஆமா அதென்ன அடுத்த வாரம்? புரியலையே)

நன்றி ஹுஸைன்.! (உங்க கவுஜ சூப்பர்ல)

நன்றி நர்சிம்.!

நன்றி விஜய்.! (ஏன் இப்ப்டி?)

நன்றி சங்கர்.! (அப்பிடியே பிக்கப் பண்ணி போயிகினேயிருக்க வேண்டியதுதான்)

நன்றி மணிகண்டன்.!
நன்றி அப்துல்.!

நன்றி கேவிஆர்.! (அவ்வ்வ்.. நான் விளையாட்டுக்கு வர்ல)

நன்றி பாலகுமாரன்.!
நன்றி முரளி.!
நன்றி வித்யா.!
நன்றி நாஞ்சில்.!

நன்றி கார்த்திக்.! (அது அவனைத்தான் கேட்கணும், கொலகாரன்)

நன்றி பரிசல்.! (ஏன் இந்த வயித்தெரிச்சல்? நானே பயங்கர கொளப்பத்துல கடையை ஓட்டிக்கிட்டிருக்கேன்)

அறிவிலி said...

:)))

Romeoboy said...

கடைசியா
நீங்க
சொல்லவருவது
என்டர்
தட்டுங்க
அதானே..

அட இதுவே ஒரு கவிதை மாதிரி இருக்குல.

அதி பிரதாபன் said...

ஆதி அண்ணே,
கவிஞர் கேபில் கவித நல்லா இருக்குன்னு சொன்னதுக்கு நைட்டு கவனிச்சிட்டாரு, நீங்க அடுத்த வாரம் கவனிங்கன்னு சொன்னேன்.

RAMYA said...

ஆதி நல்லா எழுதி இருக்கீங்க.
என்டரைத் தட்டிட்டேன்:)

அறிவுரை ரொம்ப சுவாரசியம்...

ட்ரை பண்ணி பார்க்கலாம்
வாழ்த்துக்கள் அறிவுரைக்கு...

பைக் சாணி மீது ஏறும்போது கூடவா கவிதை வரும் :))

அது சரி :)

பிரியமுடன்...வசந்த் said...

ஆதிசார் ரொம்ப அழகா சொல்லிக்குடுத்துட்டீங்க ...!

Deepa said...

//( அந்த‌ அசூயை மேட்டர் ர‌சித்தேன்...கும்மாங்குத்துல்ல‌ அது..!! )

நன்றி செய்யது.! (க க க போ)

//

It shows how you face critics :-(:-(

ஹாலிவுட் பாலா said...

இவ்ளோ சிம்பிள் மேட்டருங்களா???

ஹும்.. ஏற்கனவே.. கவிதை எழுதி... பீதியை கிளப்பிகிட்டு இருக்காங்க. நீங்க க்ளாஸ் வேற எடுத்து அனுப்பறீங்க. உங்களுக்கு நரகம்தான் கிடைக்கும். பிடி சாபம்.

Saravana Kumar MSK said...

Me the 50 ;)

Saravana Kumar MSK said...

நல்லவேளை அண்ணா, இந்த பதிவு போட்டீங்க. போட்டின்னு வரும்போது ஒரு கவிதையும் வர மாட்டேங்குது.. நானும் ஒரு மாசமா ஒரு கவிதை எழுதணும்ன்னு நெனைக்கிறேன், ம்ஹும்.. :) :(

Saravana Kumar MSK said...

//@Karthik said...
சரவணக்குமார் அண்ணா மாதிரி கவிதைகள் எழுத கொலை, தற்கொலைகள் பண்ணின அனுபவம் வேண்டுமோ? விளக்கம் ப்ளீஸ்!! :))//

//நன்றி கார்த்திக்.! (அது அவனைத்தான் கேட்கணும், கொலகாரன்)//

ரெண்டு பெரும் சேர்ந்து, என்னை ஜெயில்ல களி திங்க வச்சிருவீங்க போலேயே.. :(

cheena (சீனா) said...

அறுத்த ஆரஞ்சுச் சுளைகளை
அதரமாகப் பெற்றவள்
அருகிலிருந்தால்
கவிதை என்ன
காவியமே எழுதலாமே

Muthukumar said...

Congrats for 300...

he he..I'm the 300th follower :-)

Vijay said...

//Deepa said...
( அந்த‌ அசூயை மேட்டர் ர‌சித்தேன்...கும்மாங்குத்துல்ல‌ அது..!! )

நன்றி செய்யது.! (க க க போ)

It shows how you face critics :-(:-(//

அது சரி!!! ..ஒண்ணும் சொல்லறத்துக்கு இல்ல...ம்ம்,, ஆதி....அப்டியே போய்ட்டே இருக்கணும்... என்னா? ...ம்...

விக்னேஷ்வரி said...

யப்பா.... என்னா ஒரு கலைச் சேவை. நீங்க எங்கேயோ போயிட்டீங்க தலைவரே. காலைக் காட்டுங்க கொஞ்சம்.

அத்திரி said...

அண்ணே உங்க புண்ணியத்துல விரைவில் கவித எழுதப்போறேன்

அன்பரசன் said...

பிரமாதம்

ஆதிமூலகிருஷ்ணன் said...

அறிவிலி, ரோமியோ, ரம்யா, தீபா, பாலா, சரவணா, சீனா (அங்கே எப்பிடி?? ஹிஹி), முத்துக்குமார் (பெஸல் நன்றி), விஜய் (வேற வழி?), விக்னேஷ்வரி (நோநோ.. இதுக்கெல்லாம் இப்டி பண்ணக்கூடாது.. இன்னும் எவ்ளோ இருக்குது?), அத்திரி, அன்பரசன்..

அனைவருக்கும் நன்றி.!

govardhan said...

மிகவும் நன்றாக இருந்தது :)

Rajendiran said...

கல்வியின் பயணம் கல்லூரி வரை தான். அம்மாவின் அன்பு வாழ்வின் இறுதி வரை.