Wednesday, December 16, 2009

பூக்களைக் கடத்திச்செல்பவன்

ம்பாசமுத்திரத்தின் மேற்கு எல்லை. மரங்கள் சூழ்ந்த ரயிலடி. நான் அந்த இடத்தை அடைந்தபோது மாலை மணி 4.00. மேட்டுச்சாலையிலிருந்து ரயிலடிக்குச் செல்லும் சிறுசாலையில் செல்லத்துவங்கினேன். மனித நடமாட்டமே மிகக்குறைவாக இருக்கும் இந்தச்சாலை எனக்கு மிகவும் பிடித்தமானது. அந்த ரயிலடி மிகவும் அழகானது. வாயிலில் அமைக்கப்பட்டிருக்கும் மரச்சட்டத்தால் ஆன கேட்டில் கொடிகள் படர்ந்திருக்கும். மேலும் அதைச்சுற்றிலும் செடிகொடிகள் படர்ந்திருக்க அதையடுத்த மரங்களுமென ரம்மியமான இடம். கடும் வெயில் காலத்திலும் தென்றல் வீச நாம் நம்மை மறந்திருக்கலாம் அந்த ரயிலடியில். ஆனால் நான் இப்போது ரயிலடிக்குச்செல்லவில்லை. அதற்கு சிறிது முன்பாகவே ஒரு நெடிதுயர்ந்த அரசமரமொன்றும் அதனடியில் ஒரு ஒற்றைக் கல்மேடையும் உண்டு. அது என் வாழ்வில் மறக்கமுடியாத ஒரு இடம். அந்த இடத்தை அடைந்தேன். கல் மேடையையே கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டிருந்தவன் அதில் ஏறி அமர்ந்தேன். என் கைகளில் ஒரு ரோஜாப்பூ இருந்தது.

ந்த நேரமும் மழை வரும் போல இருந்தது. நான் கைகளில் இருந்த ரோஜாப்பூக்களைப் பார்த்தேன். பூக்களைக் கொண்டு வருவதில்தான் எத்தனைச் சிரமங்கள்.. பாலிதீன்கள் பைகளின், பொக்கேக்களின் கசகசப்பில் சிக்குண்ட பூக்களின் மேலிருப்பது பனித்துளிகளா, அவற்றின் வியர்வைத்துளிகளா.. எவருக்குத் தெரியும்? எந்த வகைகளிலும் பூக்களை பார்சல் செய்வதுதான் கடினமான வேலையாக எனக்குத்தோன்றுகிறது. அதுவும் இவை ஒரு வகையில் திருடப்பட்ட பூக்கள்.

வீட்டில் இன்று யாருமே இல்லை. அம்மா பெரியம்மா வீட்டிற்கு சென்றிருக்கிறாள். எங்கள் வீட்டு மொட்டை மாடியில் பாதுகாக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட தொட்டிகள் பார்க்க ஒரு குட்டிப்பூந்தோட்டமே இருப்பது போல இருக்கும். இது பூக்கள் கொழிக்கும் காலமல்ல. அவ்வாறான சமயங்கள் என்றால் யாரும் கணக்குப்பார்க்கமாட்டார்கள், அதற்கு அவசியமோ, ஆர்வமோ இருக்காது. அப்படிப் பூத்துக்குலுங்கிவிடும். ஆனால் இப்போது அப்படியல்ல, இப்போதுதான் பூக்கத் துவங்கியிருக்கின்றன. ஆர்வமிகுதியில் எந்தச்செடியில் எத்தனை பூக்கள், மொட்டுக்கள் என அப்பா கணக்கு வைத்திருப்பார். ஆனால் எனக்கு வேறு வழியில்லை.

ஒரு மஞ்சள் ரோஜாவையும், மூன்று பன்னீர் ரோஜாக்களையும் கத்தரியின் உதவியோடு நிறைய இலைகளோடு, நீண்ட காம்புடன் வெட்டிக்கொண்டேன். எப்படிச் சிந்தித்துப் பார்த்தாலும் எப்படி பேக் செய்வது எனப்புரியவில்லை. அப்படியே பஸ்ஸில் கொண்டுசெல்லமுடியாது. வேறு வழியில்லாமல் ஒரு நாளிதழ் பக்கங்களால் மூடினாற்போல சுற்றிக்கொண்டேன். அம்மா எந்த நேரமும் வந்துவிடுவாள், அதற்குள் கிளம்பியாகவேண்டும். மீண்டும் ஒருமுறை கண்ணாடியில் கூர்ந்து பார்த்துக்கொண்டேன். கன்னங்களை உப்பி மீசையின் திருத்தம் சரியாக இருக்கின்றதா என பார்த்துக்கொண்டு கிளம்பிவிட்டேன்.

இப்போது வாட்சைப்பார்த்தேன். மாலை 4.30. இன்னும் 20 நிமிடங்களில் வந்து விடுவாள். நெஞ்சுக்குள் ஒரு ஐஸ் கட்டி நழுவியது. பைத்தியம் போல மனது சிரித்துக்கொண்டிருப்பது வெளியேவும் கொப்பளிக்கிறதா என்ன? அடக்கிக்கொண்ட போதும் புன்னகைத்தேன். இந்த இடத்தில் இன்று எத்தனையாவது தடவையாக சந்திக்கிறோம்? நினைவில்லை. அந்த முதல் நாள் நினைவிலாடியது.

நீல நிறத்தாவணி. முதல் முறையாக அந்த பள்ளிச்சீருடையில் பார்க்கிறேன், அதுவும் தாவணியில். இவளிடம் தாவணிகள் கூட இருக்கின்றனவா என்ன? வெளியே சந்திக்கும் முதல் நாள். அந்தப் படபடப்பை வார்த்தைகளில் அவ்வளவு எளிதாக வெளிப்படுத்திவிட முடியாதுதான். இன்றும் கூட அந்தப்படபடப்பை உணர முடிகிறது. தூரத்தில் வரும்போதே கவனித்துவிட்டேன். கல்லில் அமர்ந்திருந்தவன் இறங்கி கல்லுக்குப்பின்னால் தயங்க.. அவள் எதிர்ப்புறமாய் அவளது தோழியரின் தோள்களுக்குப்பின்னால் பதுங்கி என்னைக் கடந்து, கடந்து.. கடந்தே சென்றுவிட்டாள். வரச்சொன்னதே அவள்தான். அதற்குள்ளாகவே விதிர்த்துப்போயிருந்தேன்.

சற்றுத்தொலைவில் சென்று பின் பைகளை தோழியிடம் தந்துவிட்டு மீண்டாள். எண்திசைகளிலும் பயம்கொண்டவளாய், மெலிதான அவள் குரல் கேட்கும் தொலைவில் வந்தவள் 'பயமாக இருக்கிறது, போன் பண்ணுகிறேன்' என்று பதறிவிட்டு முகம் கூட பார்க்காமல் ஓடிச்சென்றுவிட்டாள். பின்னர் வந்த சந்திப்புகளில் நிகழ்ந்தது.. காதல்.!

காத்திருத்தல் தவம். மணியைப்பார்த்தேன். 4.55. பரபரப்பானேன். தூரத்தில் ஒரு ஒற்றைச்சைக்கிள். பின்புறம் அவள் இருக்கிறாளா? இல்லை. தாமரை தன் சைக்கிளை என்னருகில் நிறுத்தியவள், 'இன்னிக்கு 3.00 மணிக்கெல்லாம் ஏதோ வேலைன்னு வீட்டுக்குப்போயிட்டாள், உங்களைப் பார்த்து சொல்லச்சொன்னாள்'. பதிலுக்குக் காத்திராமல் சைக்கிள் கிளம்பியிருந்தது. கல்மேடையிலிருந்து இறங்கி நடக்கத்துவங்கினேன். கைகளில் பூக்கள் சோர்ந்திருந்தன. சாலையை நான் தொட்ட இடத்தில் இரண்டு சிறுமிகள் பஸ்ஸுக்காக காத்திருந்தனர். கிழக்கு நோக்கி அவர்களைக் கடந்து செல்கையில் ஏதோ தோன்றிட அந்தப்பூக்களை அவர்களிடம் நீட்டினேன். மாற்றாக சில புன்னகைகளை பெற்றுக்கொண்டேன். மீண்டும் நடக்கத்துவங்கினேன்.

ப்போது மணியைப்பார்க்கிறேன். மணி 4.30 தான் ஆகியிருந்தது. மடியில் கிடந்தது ஒற்றை ரோஜா. கையில் எடுத்துக்கொண்டு இறங்கி நடக்கத்துவங்கினேன். சாலையைத் தொடுமிடத்தில் புதிதாக முளைத்திருந்தது பஸ் நிலையம் ஒன்று. அதிலிருந்த சிமெண்ட் திட்டுகளில் அமர்ந்திருந்த இரண்டு பெண்கள் பஸ்ஸுக்காக காத்திருந்தனர். அவர்களின் கண்பார்வைக்குள் கூழாங்கற்களைப் பொறுக்கி விளையாடிக்கொண்டிருந்தாள் சிறுமியொருத்தி. அங்கே நிறுத்தியிருந்த பைக்கை அடைந்து ஸ்டார்ட் செய்தேன். சத்தத்தில் கவனம் கலைந்த சிறுமி என்னை நோக்கினாள். அந்தப்பூவை அவளை நோக்கி நீட்டினேன்.

.

55 comments:

அனுஜன்யா said...

நல்லா இருக்கு ஆதி. சில வரிகள் ரொம்ப பிடிச்சது.

'பொக்கேகளுக்குள் சிந்தியவை பனித்துளிகளா, வியர்வைத்துளிகளா', 'கன்னங்களை உப்பி மீசையைச் சரி பார்ப்பது' என்று நல்லா இருக்கு.

இன்னும் கொஞ்சம் எதோ மிஸ்ஸிங் என்றும் தோன்றுகிறது. சிறுகதையை விட, ஒரு அழகிய கவிதையை படித்த உணர்வு. இதை நான் பாராட்டாகத் தான் சொல்கிறேன்.
நிறைய கதை/கவிதை எழுதுங்க ஆதி. நர்சிம் போட்டியே இல்லாம ரொம்ப ரவுசு பண்றாரு :)

அனுஜன்யா

க‌ரிச‌ல்கார‌ன் said...

ந‌ல்லாருக்கு த‌ல‌
குசும்ப‌னோட‌ சிஸ்ட‌ம் இன்னிக்கு ஒரு நாள் வேலை செய்ய‌க் கூடாதுன்னு எல்லாம் வ‌ல்ல‌ இறைவ‌னை வேண்டிக்கொள்கிறேன்.

அகநாழிகை said...

ஆதி,
கதை நல்லா வந்திருக்கு. இன்னும் கூட எழுதியிருக்கலாம். தொடர்பயிற்சியில் சரியாகிவிடும்.வாழ்த்துக்கள்,

- பொன்.வாசுதேவன்

பைத்தியக்காரன் said...

ஆதி,

தலைப்புக்கு ஒரு சல்யூட். சில வரிகள் கவிதை. சில வார்த்தைகள் நீக்கியிருக்கலாம். கதைக்கு அவசியமான ஒரு இடம், மவுனமாகிவிட்டது. மவுனத்தை கலைத்திருக்கலாம்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

தராசு said...

தல,

ஜீப்புல ஏற ஒரு நல்ல முயற்சி.

வாழ்த்துக்கள்.

தராசு said...

300 க்கு வாழ்த்துக்கள்.

ராஜகோபால் (எறும்பு) said...

தலைப்பு அருமை,

கதையும் அருமை......

ராஜகோபால் (எறும்பு) said...

//நீல நிறத்தாவணி. முதல் முறையாக அந்த பள்ளிச்சீருடையில் பார்க்கிறேன்,//

ரைட்டு...
:-)

Anonymous said...

ந‌ல்லாருக்கு த‌ல‌

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி அனுஜன்யா.! (நிறைய தயக்கங்களோடுதான் இதை பப்ளிஷ் செய்தேன். பாராட்டு நிம்மதியைத் தருகிறது.

நர்சிம்முக்கு போட்டி என்ற உங்கள் பாராட்டில் மிக மகிழ்ந்தேன். உழைப்பு இன்னும் அதிகம் தேவை என்பதையும் உணர்கிறேன்)

நன்றி கரிசல்.!

நன்றி வாசுதேவன்.! (எழுதியிருக்கலாம் என்பதை ப்போது உணர்கிறேன்)

நன்றி பைத்தியக்காரன்.! (உங்கள் வரவுக்கு முதல் மகிழ்ச்சி. விமர்சனத்துக்கு இரண்டாவது மகிழ்ச்சி)

நன்றி தராசு.! (நீங்கள்லாம் தள்ளிவிட்டுதான் ஏறவைக்கவேண்டும் பாஸ்)

நன்றி ராஜகோபால்.!

குசும்பன் said...

//சில வார்த்தைகள் நீக்கியிருக்கலாம். கதைக்கு அவசியமான ஒரு இடம், மவுனமாகிவிட்டது. மவுனத்தை கலைத்திருக்கலாம்.
//

இங்கே நல்ல மீன்கள் விற்கப்படும்! போர்ட் தான் நினைவுக்கு வருது:)

அவரு சுத்திவளைச்சு என்ன சொல்ல வருகிறார் என்று புரியுதா ஆதி?

vanila said...

ரைட்டு...
:-)

ஜெனோவா said...

நல்லாயிருக்கு ஆதியண்ணே! இன்னும் கொஞ்சம் காதல் தருணங்களை எழுதியிருந்தால் , கடைசி பத்தி இன்னும் கனமாகியிருக்கும் .
வாழ்த்துக்கள் !

துபாய் ராஜா said...

ராபின் ஹூட் போல (பூக்கள் அதிகமாக) இருக்கிறவங்க கிட்ட இருந்து நல்ல காரணத்துக்காக (பிகருக்காக) கடத்தி இல்லாதவங்களுக்கு (கள்ளமில்லா பள்ளி சிறுமிகளுக்கு) கொடுக்கிற உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு ஆதி...

குசும்பன் said...

உங்களோட சொந்த அனுபவம் என்பதால் இதை கிண்டல் செய்ய மனசு வரவில்லை ஆதி!

லெமூரியன்... said...

A.V.R.M.V பள்ளி சீருடை சுடிதார் ஆயிற்றே???? அந்த ரயில் நிலையம் தாண்டி அந்த பள்ளிதானே இருக்கிறது ?????
:-) :-) :-)
சொந்த ஊர் அம்பை என்றாலும் நான் அங்கே போனதென்னவோ ஒரு 20 முறைதான்........
எனக்கும் அந்த ரயில் நிலையம் ரொம்ப பிடிக்கும்.........
ஒவ்வொரு முறை அங்கு செல்லும்போதும் மறக்காமல் எதிர் புறத்தில் உள்ள ஒரு பெரியவரின் பெட்டி கடையில்
சிகரட் பிடிக்க தவற மாட்டேன்.....!

அப்புறம் இந்த கதை....அல்லது அனுபவம் மிக அருமை...!
வாழ்த்துக்கள்.

கார்க்கி said...

:(((((

இன்னகிக்கே போடணூமா? ஒரு நாள் கழிச்சு போடக்கூடாதா?

ஏதாவது சொல்லிடப் போறேன்...

ஸ்ரீமதி said...

அந்த பூக்களை வாங்கிக்கவாவது வந்திருக்கலாம் :(((

அமிர்தவர்ஷினி அம்மா said...

கவிதை மாதிரி நகர்ந்த எழுத்து நடை,

பைத்தியம் போல மனது சிரித்துக்கொண்டிருப்பது வெளியேவும் கொப்பளிக்கிறதா என்ன? அடக்கிக்கொண்ட போதும் புன்னகைத்தேன் //

மிகவும் பிடித்திருந்தது. மனதிற்குள் புதைந்துகிடக்கும் மிக மெல்லிய உணர்வுகளை தட்டி எழுப்பிய மாதிரி ஒரு உணர்வு தந்தது இந்தச் சிறுகதை.

அமிர்தவர்ஷினி அம்மா said...

தலைப்பைப் பார்த்தவுடன் கவிதையாக இருக்கும்னு நெனச்சேன் ;)

கும்க்கி said...

அந்த படபடப்பு..
உலகையே மறந்த மணித்துளிகள்..
மனதில் சுழலும் பயப்பந்து..
கிளம்பும் முன் செய்துகொண்ட தயாரிப்புகள்..
கவனம் பிசகாத எண்ண ஓட்டம்..
கண்கள் பரிமாறிக்கொள்ளும் செய்வதறியா சேதி...
நட்புக்களின் உதவிகள்...
கால நேர இடைவெளிகளின்றி எப்போதும் யோசித்துக்கொண்டிருக்கும் காதலி(யி)ன் பிம்பம் ..

நீல நிற யூனிபார்ம்கள் கடந்து போகாத வாழ்வு எவருக்கேனும் இல்லாமலாகியிருக்குமா என்ன...

அற்புதமான நினைவோடை ஆமூகி.

Vijay said...

ஆதிக்கு ஒரு சல்யூட்டேய்....
குமுக்கிக்கு ஒரு ரிப்பீட்டேய்...

ம்ம்...இந்த கான்செண்ட்ரேஷனை எல்லாம் படிப்புல காமிச்சி இருந்தா ஸ்டீபன் ஹாக்கிங்ஙே ஆகி இருக்கலாம்.. ம்ம்..லூசுல விடுங்க...

ஸ்டெல்லா புருஸ் சொன்ன மாதிரி “அது ஒரு நிலாகாலம்தான்”.. ம்ம்...மனிதன் உணர்ச்சிகளின் குவியல்தானே...

அத்திரி said...

அனுபவமான வரிகள். நீங்கள் சொன்ன அம்பை ரயிலடி செல்லும் பாதை மிக அமைதியாக இருக்கும்.. மெயின் ரோடு மிக அருகில் இருந்தாலும்... இந்த 500மீட்டர் ரோடில் நிலவும் அமைதியை பலமுறை அனுபவித்திருக்கிறேன்.................

அப்புறம் இது புனைவு தானே???

நர்சிம் said...

//நிறைய கதை/கவிதை எழுதுங்க ஆதி. நர்சிம் போட்டியே இல்லாம ரொம்ப ரவுசு பண்றாரு :)//

கொலை வெறின்னா இது தான்.

ஆதீ..

நல்லா எழுதி இருக்கீங்க. கட்டுரைக்கும் கதைக்குமான இடைப்பட்ட சில வார்த்தைகளைத் தவிர்த்திருந்தால் இன்னமும் சிறப்பாய் இருந்திருக்கும்..அலைபேசுவோம்.

நர்சிம் said...

//ஒரு மஞ்சள் ரோஜாவையும், மூன்று பன்னீர் ரோஜாக்களையும் கத்தரியின் உதவியோடு நிறைய இலைகளோடு, நீண்ட காம்புடன் வெட்டிக்கொண்டேன். எப்படிச் சிந்தித்துப் பார்த்தாலும் எப்படி பேக் செய்வது எனப்புரியவில்லை.//

//அந்தப்பூவை அவளை நோக்கி நீட்டினேன்.//

ரசித்தேன் ஆதி

எம்.எம்.அப்துல்லா said...

நன்று :)

அதி பிரதாபன் said...

கும்க்கி,
முந்தின பதிவையும் படிச்சீங்க போலருக்கு?

அதி பிரதாபன் said...

நமக்கு சரியா புரியலப்பா, அப்றம் படிச்சுப் பாக்குறேன்.

Sangkavi said...

ஆதி.,

கதையும், கதையை கொண்டு சென்ற விதமும் அருமை........

தண்டோரா ...... said...

/நீல நிற யூனிபார்ம்கள்//


நான் வாசிக்கும்போது பச்சை என்றே...

Cable Sankar said...

ஆதி.. நல்லாருக்குன்னு சொல்லாம்னா.. கொஞ்சம் குறையுது.. நிச்சயம் கதைக்கான நடையிலும் கட்டுரைக்கான நடையிலும், நிறையவே கவிதைக்கான நடையிலும் பயணப்படுகிறது கதை.

Cable Sankar said...

டைட்டில் சூப்பர்

அ.மு.செய்யது said...

// கைகளில் பூக்கள் சோர்ந்திருந்தன.//

இந்த இடத்தில ஸ்கோர் பண்றீங்க..!!!

அழகான குறுங்க(வி)தை.

தமிழ்ப்பறவை said...

படிக்க நல்லா இருக்கு.. கருதான் கொஞ்சம் பிடிபடலை எனக்கு...

அன்புடன்-மணிகண்டன் said...

மூன்று முறை படித்துவிட்டேன்.. கதை என்பதற்கான அறிகுறிகள் சிலவரிகளில் மட்டுமே தென்பட்டது.. ஒருவேளை எனக்கு அவ்வளோதான் புரிந்திருக்கலாம்.. நிறைய இடங்கள் குழப்பம் தருகின்றன ஆதி.. உதாரணம்: முதல் சந்திப்பைப் பற்றி சிலாகிக்கும் போதே "இன்றும் கூட அந்தப்படபடப்பை " என்று வந்துவிடுகிறது.. ஆனால் அடுத்த பத்தியில் தான் "பின்னர் வந்த சந்திப்புகளில் நிகழ்ந்தது.. காதல்.!" என்று இறந்தகாலம் முற்று பெறுகிறது.. எனக்கென்னவோ நீங்கள் காட்சியினைச் சுற்றியுள்ள விஷயங்களை விவரிப்பதில் மட்டுமே முழுகவனம் செலுத்துவதாகப் படுகிறது..

மீண்டும் சொல்கிறேன்.. ஒருவேளை எனக்கு இந்த அளவு தான் புரிந்திருக்கலாம்....

தத்துபித்து said...

அண்ணே அருமையான கதை / அனுபவம் .
(ஆனாலும் "அதிசயங்கள் அடிக்கடி நிகழ்வதில்லை " முதலிலேயே படித்து விட்டதாலோ என்னவோ ஏதோ குறைகிறது. ஆங்.. பீலிங் .)

தத்துபித்து said...

// என் கைகளில் ஒரு
ரோஜாப்பூ இருந்தது.
எந்த நேரமும் மழை
வரும் போல இருந்தது.
நான் கைகளில் இருந்த ரோஜாப்பூக்களைப் பார்த்தேன். பூக்களைக் கொண்டு வருவதில்தான் எத்தனைச் சிரமங்கள்..
பாலிதீன்கள் பைகளின், பொக்கேக்களின் கசகசப்பில்
சிக்குண்ட பூக்களின் மேலிருப்பது பனித்துளிகளா, அவற்றின் வியர்வைத்துளிகளா..?
எவருக்குத் தெரியும்? //

இரண்டு வார்த்தைகளுக்கு
ஒரு என்டர் தட்டினால்
அடடே .....
ஒரு அழகான கவிதை!

தத்துபித்து said...
This comment has been removed by the author.
நாடோடி இலக்கியன் said...

//கைகளில் பூக்கள் சோர்ந்திருந்தன//

ரசித்தேன்..

பூவைக்கான பூவை பூக்களுக்குக் கொடுத்த கதை நன்றாக இருக்கிறது.

முதல் பாராதான் கொஞ்சம் கடினமாக இருக்கிறது ஆதி.

தத்துபித்து said...
This comment has been removed by the author.
கார்க்கி said...

மணிகண்டன் சொல்லுவதை கவனிக்கவும். ஆங்காங்க ப்ரசெண்ட் டென்சிலும், பின் பாஸ் டென்ஸீலும் ஜம்ப் அடிக்கிறது. லேபிளில் கதைன்னு போடலைன்னா நல்ல பதிவு..

Vijay said...

கதைன்னா அனுபவிக்கனும் பா. நோண்டி நொங்கு எடுக்கக்கூடாது.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நிறைய பாராட்டுகள், குறைவான விமர்சனங்களுடன் என்னைப் பொறுத்தவரை திருப்தியான பதிவு.

முதலில் கார்க்கி மற்றும் பலரும் ஃபீல் பண்ணியதைப்போல இது கதைதானா என்பதில் எனக்கும் சந்தேகமே. கதை என்று லேபிள் போட்டிருக்காவிட்டால் இன்னும் பாராட்டியிருப்பார்கள் என்பது நிஜம். இருப்பினும் 'அனுபவம், காதல்' லேபிளில் போட்டிருக்கவேண்டியது. உண்மையில் அதுவுமில்லாமல், கதையாகவும் இல்லாமல் நடுவாக இருந்தது. புது லேபிள் கிரியேட் பண்ண விருப்பமில்லாமல் நடப்பது நடக்கட்டும் என போட்டுவிட்டேன். கிடைத்தது சில கொட்டுகள்.! ஹிஹி..

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி குசும்பன்.! (ஹிஹி)

நன்றி வனிலா.!

நன்றி ஜெனோவா.! (கரெக்டா சொன்னீங்க பாஸ்)

நன்றி துபாய்ராஜா.!

நன்றி லெமூரியன்.! (ரொம்ப சிந்திக்காதீங்க.. இது ஒரு கற்பனைக்கதைதான். ஹிஹி)

நன்றி கார்க்கி.! (அப்படி ஒன்றும் ஒற்றுமையாக இருக்கிறதா தெரியலையே.. ஹிஹி. அப்புறம் மணிகண்டனுக்கான பதிலையும் பார்க்கவும்)

நன்றி ஸ்ரீமதி.!

நன்றி அமித்து.!

நன்றி கும்க்கி.! (விளக்கமான பாராட்டு. நன்றி பிரெண்ட்)

நன்றி விஜய்.! (அதென்னவோ சரிதான்)

நன்றி அத்திரி.! (ஆமா)

நன்றி நர்சிம்.! (மேலே அனைவருக்குமான விளக்கம் தந்திருக்கிறேன், பேசுவோம்)

நன்றி அப்துல்லா.!

நன்றி பிரதாபன்.!

நன்றி சங்கவி.!

நன்றி தண்டோரா.! (ஏன் அப்படி?)

நன்றி கேபிள்.!

நன்றி செய்யது.!

நன்றி தமிழ்பறவை.!

நன்றி மணிகண்டன்.! (முதல் பாராவும், கடைசியும் நிகழ்காலம். கிளியர். கதைநாயகன் அந்தக்கல்லில் உட்கார்ந்திருக்கும் சிறிது நேரத்தில் சில பழைய நிகழ்வுகளை நினைத்துப்பார்க்கிறார், அவ்வளவுதான். தனியாக பாரா போல்ட் செய்யப்பட்டுள்ளது. அதில் காலங்கள் கலக்கப்படுவதில் அவ்வளவாக பிரச்சினை இல்லையென்றே நினைக்கிறேன். 'இன்றும் அந்த படபடப்பை' உணர்வது என்ற வாக்கியம் நிகழ்காலத்தில் உணர்வதைத்தான் சொல்லியிருக்கிறேன்)

நன்றி தத்துபித்து.!

நன்றி இலக்கியன்.! (ஒரு நல்ல பாயிண்டைச் சொல்லியிருக்கிறீர்கள், நன்றி)

ஆதிமூலகிருஷ்ணன் said...

பின்தொடரும் 300 நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.!

பிரியமுடன்...வசந்த் said...

//பொக்கேக்களின் கசகசப்பில் சிக்குண்ட பூக்களின் மேலிருப்பது பனித்துளிகளா, அவற்றின் வியர்வைத்துளிகளா.. எவருக்குத் தெரியும்? //

ஆகா...!

300 பின் தொடர்பவர்களுக்கு வாழ்த்துக்கள் தல!

அறிவிலி said...

நல்லா இருக்கு. நான் வழக்கமாக லேபில்களை பார்ப்பததில்லை. ஆகவே எனக்கு படிக்கும்போது நன்றாகவே இருந்தது.

அறிவிலி said...

300 தொட்டு மூத்த பதிவர் ஆனதற்கு வாழ்த்துகள்.

andal said...

விகடனில் கதை படித்தேன் லகுவான நடையில் கதையும் அழுத்தமான கவிதையும் க்ளாஸ் வாழ்த்துக்கள்.

நர்சிம் said...

//andal said...
December 17, 2009 10:11 AM விகடனில் கதை படித்தேன் லகுவான நடையில் கதையும் அழுத்தமான கவிதையும் க்ளாஸ் வாழ்த்துக்கள்.
//

பேரவாடி மாத்துற தாமிர ஆதி??

அன்புடன்-மணிகண்டன் said...

ஆதி..
முதல் சந்திப்பைப் பற்றி சொல்லும்போது வரச் சொன்னதே அவள் தான்.. ஆனால் கண்டுக்காம கடந்து போனாள்'ன்னு நீங்க சொல்றது நிகழ்காலத்துக்கும் பொருந்துது..

மேலும், அடுத்த பாராவில் தான் "பின்னர் வந்த சந்திப்புகளில் நிகழ்ந்தது.. காதல்.!" அப்படின்னு முடிக்கறீங்க..
அதாங்க கொஞ்சம் குழம்பிடுச்சு...

இதுதான் அந்த குழப்பத்தை எனக்கு ஏற்படுத்தக் காரணமான வரிகள்..
"அந்தப் படபடப்பை வார்த்தைகளில் அவ்வளவு எளிதாக வெளிப்படுத்திவிட முடியாதுதான். இன்றும் கூட அந்தப்படபடப்பை உணர முடிகிறது."

மற்றபடி இது மிகச்சிறந்த சொல்லாடல்கள் கொண்ட படைப்பென்பதில் எனக்கு குழப்பமே இல்லை..

andal said...

//நர்சிம் said...
//andal said...
December 17, 2009 10:11 AM விகடனில் கதை படித்தேன் லகுவான நடையில் கதையும் அழுத்தமான கவிதையும் க்ளாஸ் வாழ்த்துக்கள்.
//

பேரவாடி மாத்துற தாமிர ஆதி??//

அட கடவுளே அது நீங்கள் இல்லையா?
ஏற்கனவே ஒரு முறை ’அவள்’-ல் வெளியான கவிதை பற்றி பின்ணுட்டமிட்டதற்கு நன்றியெல்லாம் கூறினீர்களே?

ஆதிமூலகிருஷ்ணன் said...

I'm Backu.!

வசந்த், அறிவிலி (அப்போ பார்த்திருந்தா?), ஆண்டாள் (எனக்கு பல்பு தரலைன்னா தூக்கம் வராதவங்க நிறைய பேர் இருக்காங்கப்பா..சை), நர்சிம், மணிகண்டன்..

அனைவருக்கும் நன்றி.!

அன்புடன் அருணா said...

தலைப்புக்கு ஒரு பூங்கொத்து!எப்போதாவது உபயோகித்துக் கொள்ளலாமா???

musthafa said...

passport illa visa illa but en manam ambai R.S LA Chancey illa. ippo avalum en kuda illa .simply super