Friday, December 18, 2009

இரவின் சாத்தியங்கள்


மேலும் சில முறிதல்கள் நிகழ்கின்றன
இதைச் சொன்னமைக்காக
இவன் வருந்தி உழல வேண்டும்
காயம் கொள்ள வேண்டும்
வார்த்தைகள் இல்லாமல் கழியும் பகல்கள்
அத்தியாவசியமாய் எழும்
தட்டையான ஒலிக்குறிப்புகள்
பிரியும் படுக்கைகள்
காற்றோடு மட்டுமே உறவு
இன்னும் இன்னுமென வளரும்
அத்தனையையுமே
அடித்துச்செல்ல
ஒரு அதிகாலை நேரத்தில்
நோக்கம் எதுவுமேயில்லாத விரல்கள்
இவன் மேனியெங்கும் உலா வந்துகொண்டிருந்தன.

.

43 comments:

நாடோடி இலக்கியன் said...

நல்லாயிருக்கு ஆதி.

வெற்றிபெற வாழ்த்துகள்..!

//நோக்கம் எதுவுமேயில்லாத விரல்கள்//

இதுதான் லேசா குழப்புது.மெயிலில் விளக்கம் தேவை.

Anonymous said...

எப்பயும் சண்டை போட்டு முறைச்சுக்கிட்டே இருக்க முடியுமா. சண்டையும் தீரத்தானே வேணும்.

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

தண்டோரா ...... said...

/இதுதான் லேசா குழப்புது.மெயிலில் விளக்கம் தேவை//

இங்கனயே சொன்னா நாங்களூம் தெரிஞ்சுப்போமில்ல!

தராசு said...

அடுத்த எண்டர் கவிதையா??

கொஞ்சம் புரிஞ்சுது, கொஞ்சம் குழப்புது.

கார்க்கி said...

தராசண்ணே, இதுக்கு பதிலா ஆதிய நீங்க சப்புன்னு அறைஞ்சிருக்கலாம்

விக்னேஷ்வரி said...

Good feel.

அ.மு.செய்யது said...

ரொம்ப‌ மென்மையா இரு உறவுகளுக்கிடையேயான‌ இறுக்கங்களை அழ‌கா சொல்லியிருக்கீங்க‌..!!! ( க‌விதை புரிஞ்சிடுத்துன்னு குறிப்பால் உண‌ர்த்துகிறேன் )

போட்டிக்காக‌ எழுத‌ப்ப‌ட்டிருக்காவிட்டால் இன்னும் நிறைய‌ ரசித்திருப்போம்.கார‌ண‌ம் போட்டிக்கு ஒரு பிர‌ம்மாண்ட‌ம் தேவைப்ப‌டுகிற‌த‌ல்லவா ??

வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள்.

நாஞ்சில் நாதம் said...

வெற்றிபெற வாழ்த்துகள்..!

Sangkavi said...

//பிரியும் படுக்கைகள்
காற்றோடு மட்டுமே உறவு//

ஊடலுக்கு அப்புறம் தானே கூடல்..........

நல்ல பீலிங்கான கவிதை.....................

அமுதா கிருஷ்ணா said...

நர்சிம் மாதிரி விளக்கம் முதலில் கொடுத்துட்டு அப்புறம் கவிதை ப்ளீஸ்....நான் கொஞ்சம் மக்கு...

RAMYA said...

வெற்றிபெற வாழ்த்துகள் ஆதி..!

அதி பிரதாபன் said...

அவ்வ்வ்வ்....

vanila said...

வெற்றிபெற வாழ்த்துகள் ஜி..

ராமலக்ஷ்மி said...

அருமை. வெற்றி பெற என் வாழ்த்துக்கள்!

Vidhoosh said...

அது சரி..

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

--வித்யா

அ.மு.செய்யது said...

இன்று நிறைய டெம்பிளேட் பின்னூட்டங்கள் போல..!!! என்சாய் !!!

அமிர்தவர்ஷினி அம்மா said...

இதைச் சொன்னமைக்காகஇவன் வருந்தி உழல வேண்டும்காயம் கொள்ள வேண்டும்வார்த்தைகள் இல்லாமல் கழியும் பகல்கள்அத்தியாவசியமாய் எழும் தட்டையான ஒலிக்குறிப்புகள் //

அஃதே அஃதே, அவ்ளோ லேசுல விட்றமுடியுமா என்ன ;)

ஊடல் / கூடல் சொல்லப்பட்ட விதம் ரொம்ப பிடிச்சிருந்தது.

அ.மு.செ, சொன்ன மாதிரி போட்டிக்கவிதையென்றால் கொஞ்சம் பிரமாண்டம் தேவைப்படுமோ, இந்தக் கவிதை எளிமையாக இருப்பது மாதிரி ஒரு உணர்வு (ஏன்னா, எனக்கே புரிஞ்சிடுச்சே :)

ஆதிமூலகிருஷ்ணன் said...

அடப்பாவிகளா.. அப்போ இந்த வடையும் போச்சா.?? அவ்வ்வ்வ்..

இலக்கியன், அம்மிணி, தண்டோரா, தராசு, கார்க்கி, விக்னேஷ்வரி, செய்யது, நாஞ்சில், சங்கவி, அமுதா, ரம்யா, ப்ரதாபன், வனிலா, ராமலக்ஷ்மி, வித்யா, அமித்து..

அனைவருக்கும் நன்றி.!!

@செய்யது, அமித்து : அவ்வ்வ்வ்..

எம்.எம்.அப்துல்லா said...

வந்தாச்சு, படிச்சாச்சு, கிளம்பியாச்சு

:)

Deepa said...

Super!

தமிழ்ப்பறவை said...

தலை நல்லா இருக்கு.எனக்குப் பிடிச்சிருந்தது...
இலக்கியன் இன்னும் வளரலைன்னு நினைக்கிறேன். இதுக்கு தனியா மெயில்ல வேற விளக்கம் வேணுமாம்...
இந்த முறை சுடச்சுட வடை கிடைக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் ஆதி...

பாலா said...

அப்ப அப்பப்பா ஆதிஅண்ணே ஆகா ஆகா
வார்த்தை வர மாட்டேங்குது ஆகா அருமை அருமை
இதொரு அற்புதமான கணம்
எவ்ளோ அருமையான கவிதை ஏன் எல்லார்டையும் போய் சேரலை
ரொம்பவே வருத்தம் பாஸு ரொம்ப ரொம்ப எளிமையா எவ்ளோ மென்மையா ..........
சொல்லமுடியல பரிசு கிடைக்கனும்யா கிடைக்கணும்

KaveriGanesh said...

வாழ்த்துக்கள் ஆதி

அன்புடன் அருணா said...

வெற்றிபெற வாழ்த்துகள்..!

பிரியமுடன்...வசந்த் said...

//தட்டையான ஒலிக்குறிப்புகள்//

அப்டின்னா இன்னா சாரே...

மீதிவரிகள் மிக அருமையா கோர்த்துருக்கிங்க...

வெற்றி பெற வாழ்த்துக்கள் சார்

♠புதுவை சிவா♠ said...

"மேலும் சில முறிதல்கள் நிகழ்கின்றன
இதைச் சொன்னமைக்காக

நோக்கம் எதுவுமேயில்லாத விரல்கள்இவன் மேனியெங்கும் உலா வந்துகொண்டிருந்தன"

நோக்கம் இருக்கு தல உஷாரு!

அடி லேச பட்டுதா?
ஊமைகாயமா இருக்குமா?
பால் வாங்க போனா வீக்கம் வெளியில தெரியுமா?

:-))))))))))


வெற்றிபெற வாழ்த்துகள் ஆதி!

பரிசல்காரன் said...

கவிதையின் நேர்பொருளை விட மறைபொருளாய் நீங்கள் சொல்லியிருந்த விஷயங்கள் ரசிக்க வைத்தது ஆதி!

வெற்றி பெற வாழ்த்துகள்!

KVR said...

ஹிஹி அங்கேயும் இதே கதை தானா?

நிலாரசிகன் said...

நல்லா இருக்குங்க

cheena (சீனா) said...

வெற்றி பெற நல்வாழ்த்துகள் ஆதி

தமிழன்-கறுப்பி... said...

கவிதையின் தலைப்புதான்..!

:)

தோழி said...

"நோக்கம் எதுவுமேயில்லாத விரல்கள்
இவன் மேனியெங்கும் உலா வந்துகொண்டிருந்தன."

Romba nalla irukku. All the best for winning :)

Bala Aramvalarthaan said...

நல்லா இருக்கு ஆதி!!
ஆனால் பரிசல் ஏன் 'மறை பொருள்' இருக்கிறது என்று சொல்லி குட்டையை குழப்புகிறார் :-) "நோக்கம் எதுவுமே இல்லாத விரல்கள்" அவர்களுடைய குழந்தையோடதோ?

--ப்ரியமுடன் பாலா

க‌ரிச‌ல்கார‌ன் said...

//Bala Aramvalarthaan said...
நல்லா இருக்கு ஆதி!!
ஆனால் பரிசல் ஏன் 'மறை பொருள்' இருக்கிறது என்று சொல்லி குட்டையை குழப்புகிறார்//

நல்லா இருக்கு ஆதி!!

ஒருவேளை க‌விஞ‌ர்க‌ளுக்கு மாத்திர‌ம் புரியுமோ என்ன‌வோ?
க‌விதைய‌ செல‌க்ட் ப‌ண்ண‌ப் போற‌வ‌ங்க‌ளுக்கு புரிஞ்சா ச‌ரி

அவனி அரவிந்தன் said...

பகல்களில் முறிந்ததையும் கிழிந்ததையும் இணைப்பது இரவில் மட்டுமே சாத்தியம். மிகவும் அழகான கவிதை. வெற்றி பெற வாழ்த்துக்கள் !

தியாவின் பேனா said...

யான கவிதை
நல்ல நடை
வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

அப்துல், தீபா, தமிழ்பறவை, பாலா (நக்கல் பண்ற மாதிரியே இருக்குதே..), கணேஷ், அருணா, வசந்த் ((தட்டை சாப்பிட்டதில்லையா?), சிவா, பரிசல் (அப்பிடி என்னாத்த கண்டுக்கிட்டீங்க..), கேவிஆர், நிலாரசிகன், சீனா, கறுப்பி, தோழி, பாலா (இதுவும் நல்லாயிருக்கே), கரிசல், அரவிந்தன், தியா..

அனைவருக்கும் நன்றி.!

கும்க்கி said...

நல்ல கவிதை..
ஆனாலும் போட்டிக்கென அறிவித்திருப்பது லேசான ஏமாற்றமே...

போட்டிகளுக்கென ஒரு ஆழ்ந்த அழுத்தமான உட்பொருள் இருக்க வேண்டுமல்லவா..?

இந்த கவிதையிலும் வழக்கமான உங்கள் வாசகர்கள் கொஞ்சம் கூடுதலாக புரிதலுடன் உரிமையான கமெண்ட் போட்டுள்ளதைக்காட்டிலுமே,

ஒரு அற்புதமான மெல்லிய நிகழ்வை நுட்பமாக பதிவு செய்துள்ளதாகவே தோன்றுகிறது..

திருமணமாகாத வாசகர்கள் எப்படி புரிந்துகொள்வார்கள் என்ற எண்ணமும் எழாமலில்லை..

யுவகிருஷ்ணா said...

நிஜமாகவே அருமை ஆதி!

thenammailakshmanan said...

மிக அருமை
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்

வெ.இராதாகிருஷ்ணன் said...

உறவும், முறிவும் பற்றிய கவிதைக்கு மிக்க நன்றி. வெற்றி பெற வாழ்த்துகள்.

S.A. நவாஸுதீன் said...

வெற்றிபெற வாழ்த்துகள்.

சக்தி said...

//Bala Aramvalarthaan said...
நல்லா இருக்கு ஆதி!!
ஆனால் பரிசல் ஏன் 'மறை பொருள்' இருக்கிறது என்று சொல்லி குட்டையை குழப்புகிறார்//

நல்லா இருக்கு ஆதி!!

ஒருவேளை க‌விஞ‌ர்க‌ளுக்கு மாத்திர‌ம் புரியுமோ என்ன‌வோ?
க‌விதைய‌ செல‌க்ட் ப‌ண்ண‌ப் போற‌வ‌ங்க‌ளுக்கு புரிஞ்சா ச‌ரி//

naan kavigan illanga, enaku konjam puriyum padi solluringala...?