Thursday, December 31, 2009

சுஜாதாவும், பொன்னியின்செல்வனும்.!

நேற்றே கோலாகலமாக ஆரம்பித்தாயிற்று '33 வது சென்னை புத்தகத்திருவிழா'. சென்ற வருடங்களில் வாங்கிய புத்தகங்களையே இன்னும் வாசித்தபாடில்லை. என் தொல்லையில்லாமல் அலமாரியில் தூங்கிக்கொண்டிருக்கின்றன அவை. இருப்பினும் எப்போது கண்காட்சிக்கு சென்றுவருவோம்.. என்ன புத்தகம் வாங்கலாம்.. இவர் சொன்னதை வாங்கலாமா? அவர் சொன்னதை வாங்கலாமா? என்று அதே எண்ணமாக இருக்கிறது. திடீரென நண்பர்களின் புத்தகங்கள் சார்ந்த விருப்பங்கள் எப்படி இருக்கிறது என்று அறிய விரும்பினேன். அப்படியே நம்மைப்போல விருப்பம் கொண்டவர்களுக்கு உதவியாக இருக்கக்கூடுமே என்ற எண்ணத்தில் அதையே பதிவாகவும் போட எண்ணினேன்.

மறக்க இயலாத புத்தகங்கள்..
வாங்கவிருக்கும் புத்தகங்கள்..
பிடித்தமான எழுத்தாளர்..
புத்தகம் சார்ந்த அனுபவங்கள்..

என்ற எளிமையான 4 கேள்விகளுடன் மெயில்கள் அனுப்பி பதில் கோரினேன். வழக்கம் போல 5க்கு 2 பதில்களாவது வரும் என்று எண்ணினேன். மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் சுமந்த படி பெரும்பாலான பதில்கள் வந்து சேர்ந்தன. கால அவகாசம் மிகக்குறைவாக (இரண்டே நாட்கள்) இருந்ததால் மிகச்சிலரால் கலந்துகொள்ளமுடியாது போய்விட்டது. எனக்கு இன்னும் பலரையும் கேட்கவேண்டும் என்ற ஆசை இருப்பினும் கட்டுப்படுத்திக்கொண்டேன். தொடர்பதிவுக்கு அழைக்கும்போது ஏற்படும் குழப்பம் போலவேதான் யாரைக்கேட்பது என்ற குழப்பம். வழக்கம் போல ரேண்டமாகவே தேர்வு செய்தேன். பெண்பதிவர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். பதிவின் சுவாரசியம் மற்றும் நீளம் கருதி நான்கே பதிவுகள் போடுவதாக முடிவு செய்தேன். அதன்படி ஏற்கனவே 4 பதிவுகளில் 16 பிரபல தமிழ்ப்பதிவர்களின் பேட்டிகளை கண்டிருப்பீர்கள்.

எழுதவேண்டும் என்ற ஆர்வம் ஏற்படுவது எதனால்? நம் எண்ணங்களை/ சிந்தனைகளை பகிர்ந்துகொள்ள.! புரிதல்களுடன் கூடிய நல்வாழ்க்கை வாழத் தேவையான நற்சிந்தனை எதன் தொடர்ச்சியால் எழுகிறது? நிச்சயமாக வாசிப்பு என்று சொல்லிவிடலாம். எங்கிருந்து வாசிக்கத்துவங்குவது? நீச்சல் கற்க தடாலென யாரும் கடலில் குதித்துவிடுவதில்லை. வந்த அத்தனை பதில்களிலும் அந்த ஒற்றுமையைப் பார்க்கமுடிந்தது...

அத்தனை பேரையுமே பால்ய பருவத்திலேயே புத்தகங்கள் பற்றிக்கொண்டுள்ளன. கோகுலம், அம்புலிமாமா, துளிர், பூந்தளிர், வாண்டுமாமா, சிறுவர்மலர்கள், காமிக்ஸ் என ஒவ்வொருவரையும் புத்தகங்கள் தூங்கவிடாமல் செய்திருக்கின்றன. பின்னர் அவர்கள் அடுத்த ஈர்ப்பாக விகடன், கல்கி, குமுதம் வார இதழ்களையும், கிரைம் நாவல்களையும் கடந்திருக்கின்றனர். அடுத்து கிட்டத்தட்ட அனைவருமே தமிழின் மிகப்பெரிய ஒரு எழுத்தாளுமையின் புயலில் சிக்கித் தவித்தே பின்னர் அடுத்த தளத்தை அடைய முடிந்திருக்கிறது. அது சுஜாதா எனும் புயல். பலரும் அதைக்கடக்கமுடியவில்லை, அந்த சுகத்திலேயே உழன்றுகொண்டிருக்கிறார்கள் இன்னும். சிலரே அதன் பின்னும் பரந்து விரிந்திருக்கும் இலக்கியப்பரப்பில் அவரவருக்கான வாசிப்புக்களத்தை தேர்வுசெய்து கொண்டார்கள் அல்லது செய்து கொண்டிருக்கின்றார்கள்.

அனைவரின் நெஞ்சிலும் தங்கிவிட்ட சுஜாதாவைப்போலவே இன்னொரு பொதுத்தேர்வாக கல்கியின் 'பொன்னியின் செல்வன்'. தலைமுறைகள் கடந்தும் வியாபித்திருக்கும் நாவலைக்காணமுடிகிறது. அத்தனை பிரமிப்பையும், சுகானுபவத்தையும் தருவதாக அமைந்திருப்பது அதன் சிறப்பு.

அதே கேள்விகளுக்கான எனது பதில்களைக்கேட்டால்..

*******************************

பிடித்த புத்தகங்கள் மற்றும் புத்தகங்கள் குறித்த அனுபவங்கள் (முதல் மற்றும் நான்காவது) கேள்விகளுக்கான பதிலை 'ஒரு நெல்லிமரமும் சில வாடகைப்புத்தகங்களும்..' என்ற எனது பதிவில் விரிவாக சொல்லியிருக்கிறேன்.

2. முன்பே இந்த புத்தகங்களை வாங்கவேண்டும் என திட்டமிடும் வழக்கமுள்ளவரா நீங்கள்? அப்படியாயின் இந்த புத்தகவிழாவின் போது என்ன புத்தகங்கள் வாங்க திட்டமிட்டுள்ளீர்கள்?

திட்டமிடும் வழக்கம் இல்லை. கண்காட்சிகளில், புத்தகக்கடைகளில் புத்தகங்களை வேடிக்கை பார்க்கும்போது முன்னமே கேள்விப்பட்டு மனதில் பதிந்துகிடக்கும் புத்தகங்கள் கண்ணில் பட்டால் பட்டென வாங்கிவிடுவதுதான்.

3. நீங்கள் சந்திக்க மிகவும் விரும்பிய எழுத்தாளர்கள் யாரும் உண்டா? உங்கள் ஆசை நிறைவேறிவிட்டதா? (அல்லது) யார் உங்கள் ஆதர்ச எழுத்தாளர்?

யாரையும் சந்திக்க எண்ணியதில்லை. பலரையும் பல சந்தர்ப்பங்களில் தூரமாய் கண்டுமகிழ்ந்திருக்கிறேன். சிலரிடம் பேசியிருக்கிறேன். மிகச்சிலரிடம் பழகியிருக்கிறேன்.

பிடித்தமான எழுத்தாளர்கள் எனில்.. கலைஞர் மு.கருணாநிதி, சுஜாதா, கி.ராஜநாராயணன், வண்ணதாசன், ச.தமிழ்செல்வன்.

*****************************************

படித்திராதவர்களுக்காக..

'புத்தகங்கள் : பிரபல பதிவர்கள் பேட்டி'

பேட்டியில் பங்கேற்றவர்கள்..

வெண்பூ
யுவகிருஷ்ணா
பரிசல்காரன்
நிலாரசிகன்
ஜ்யோவ்ராம் சுந்தர்
டாக்டர் புரூனோ
கார்க்கி
கேபிள் சங்கர்
ராமலக்ஷ்மி
அனுஜன்யா
சின்ன அம்மிணி
அதிஷா
அமிர்தவர்ஷினி அம்மா
வித்யா
வடகரை வேலன்
நர்சிம்

..பதில்களின் வடிவில் தாம் விரும்பும் புத்தகங்களை பட்டியலிட்டு, எழுத்தாளர் குறித்த, புத்தகங்கள் குறித்த நினைவுகளை நம்மோடு சுவைபட பகிர்ந்துகொண்ட மேற்குறித்த நண்பர்கள், பின்னூட்டத்தில் தங்கள் ரசனைக்குரிய புத்தகங்கள் குறித்த தகவல்களை பகிர்ந்துகொண்ட நண்பர்கள் என அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த நன்றி.

இந்நன்னேரத்தில் 2 லட்சம் ஹிட்ஸ்களை தந்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் அத்தனை நண்பர்களுக்கும் நன்றிகளுடன்.. இனிய புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன். வாழ்த்துகள்.!

.

32 comments:

அமுதா கிருஷ்ணா said...

”சென்ற வருடங்களில் வாங்கிய புத்தகங்களையே இன்னும் வாசித்தபாடில்லை. என் தொல்லையில்லாமல் அலமாரியில் தூங்கிக்கொண்டிருக்கின்றன”

பலபேர் நிலைமை இதுதான்..இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஆதி....

கார்க்கி said...

2 லட்சத்துக்கு வாழ்த்துகள் சகா..

Sangkavi said...

2 லட்சம் ஹிட்டுக்கு எனது வாழ்த்துக்கள்.......

என்ன புத்தகம் வாங்கலாம்னு எங்களுக்கும் சொல்லுங்க......

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்......

அமுதா கிருஷ்ணா said...

வரும் ஆண்டும் எக்குத்தப்பாய் எதாவது செய்து ரமாவிடம் நன்கு வாங்கிக் கட்டணும் என்று கடவுளிடம் வேண்டி கொள்கிறேன்..

♠ ராஜு ♠ said...

பிரபலங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட, ஒரு பிரபலத்தின் பதிலகள் இன்றூ வெளியாகின்றனவோ..!

Have A Happy New Year Uncle.

Anonymous said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்.
தங்கமணிப்பதிவுகள் நிறைய அடுத்த ஆண்டு வரட்டும் :)

ஜானி வாக்கர் said...

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் அனைத்து பதிவர்களுக்கும்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

பதிவு மிகப்பிடித்திருந்தது, தலைப்பும்.

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தங்களுக்கும் தங்கள் தங்கமணி ரமா & செல்வன் சு.பாவுக்கும்.

தமிழ்ப்பறவை said...

வாழ்த்துக்கள்...

பாபு said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

தாரணி பிரியா said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :))))

வானம்பாடிகள் said...

2 லட்சம் ஹிட்டுக்கு மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள் ஆதி.

அ.மு.செய்யது said...

எவ்ள கஸ்டப்பட்டு மெனக்கெட்டு,எடிட் பண்ணி,அங்கங்க லிங்க் கொடுத்து,யோசிச்சி
இந்த பதிவ நீங்க எழுதியிருந்தாலும்,

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஆதியண்ணே !!!

அ.மு.செய்யது said...

ஓ இதுவேறயா ??

இரண்டு லட்சம் ஹிட்ஸ்க்கு வாழ்த்துக்கள்ங்க..!

ரிஷி said...

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்......

அக்னி பார்வை said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

துபாய் ராஜா said...

2 லட்சத்திற்கும்,2010ற்கும் வாழ்த்துக்கள்.

அன்புடன் அருணா said...

ரமாகிட்டே கூட ஒரு பேட்டி எடுத்திருக்கலாமே!

ராமலக்ஷ்மி said...

பொதுவாக காணப்பட்ட அம்சங்களை அலசியிருப்பதும் உங்கள் பதில்களும் அருமை. புத்தாண்டு வாழ்த்துக்கள்!

தமிழ் வெங்கட் said...

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

வல்லிசிம்ஹன் said...

நம் வலைப்பதிவர் துளசி கோபாலின் புத்தகம் 'என் செல்லங்களான செல்லங்கள்',வாங்கப் போகிறேன்.
சந்தியா பதிப்பகம் வெளியிடுகிறார்கள்.
விட்டுப் போன கி.ரா. ஐய்யாவின் புத்தகங்கள் இரண்டு இருக்கின்றன. அவற்றை வாங்கவேண்டும்.
உங்களுக்கு எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

அத்திரி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

2 லட்சம் ஹிட்டுக்கு வாழ்த்துக்கள்

ஜெயந்தி said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

கனவுகள் விற்பவன் said...

வாழ்த்துக்கள்! 2 லட்சத்துக்கும் 2010 க்கும்...

RR said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

மாதவராஜ் said...

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

தமிழ் பிரியன் said...

நல்ல முயற்சி.. முழு தொகுப்பையும் ஒன்றாகவே படித்தேன். சுஜாதா, பொன்னியின்செல்வன் டிபால்ட்டாக அமைந்து விடுகின்றது போலும்.. ;-)

சுசி said...

வாழ்த்துக்கள் ஆதி.

புது வருடத்துக்கும், ரெண்டு லட்ஷத்துக்கும்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

வாழ்த்துச்சொன்ன அத்தனை நல்லியதங்களுக்கும் மனமார்ந்த நன்றி.

பரிசல்காரன் said...

ஆதி

உங்களோடான அரைமணி நேர உரையாடல் எனக்கு மிக உபயோகமாய் இருந்தது!

உங்கள் பேட்டியில் என்னையும் பங்கெடுக்க வைத்தமைக்கு நன்றி!

கும்க்கி said...

ஆமூகி.,
நான் தொடர்சியான வலைப்பதிவனில்லைதான்...
புத்தக வாசிப்பில் ஆனாலும்....

Karthik said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

பிரபல பதிவர்கள் பேட்டியா? உடனே படிச்சிடறேன். :)