Monday, January 4, 2010

அறுவடைக்காலம்

இன்னும் புத்தக ஃபீவர் முடிந்தபாடில்லை. இதோ இன்னுமொரு புத்தகம் குறித்த‌ பதிவு. வழக்கமாக சென்னை புத்தக கண்காட்சிக்கு இரண்டு மூன்று தடவைகளாக போவது வழக்கம். ஏனெனில் இருக்கும் ஸ்டால்களை ஒரே நாளில் பார்ப்பதென்றால் அது ஆவுற கதையில்லை. ஆனால் இந்த முறை வேறு வழியில்லை இந்த ஞாயிறு மட்டும்தான் கிடைத்த ஒரே நாள். 12 மணிக்கெல்லாம் ஸ்பாட்டில் ஆஜராகிவிட்டேன். இரவு 9 மணிக்கு இன்னொரு நண்பரை செண்ட்ரலில் சந்திக்கவேண்டியிருந்ததால் சீக்கிரமெல்லாம் கிளம்ப வேண்டிய அவசியமில்லாமல் கண்காட்சி முடிந்து அவர்களே வெளியே துரத்தும் வரை அங்கேயே இருந்து பார்த்துவிட்டுவரலாம் என்ற ஐடியா. நண்பர்கள் யாரிடமிருந்தும் அழைப்பு வரவில்லை. நானும் யாரையும் அழைக்கவில்லை. இதுமாதிரி இடங்களில் தனியே தன்னந்தனியே என்பது ஒரு வசதி.

நுழைவாயிலிலேயே குறுகுறுப்பு தொற்றிக்கொண்டது. இந்தமுறை கொஞ்சம் புத்தகங்கள் வாங்க திட்டமிருந்ததால் நிரப்புவதற்கு வசதியாக முதுகுப்பையை காலியாக கொண்டுவந்திருந்தேன் (ஹிஹி.. கோணிப்பை கிடைக்கவில்லை).

சுந்தரபுருஷன் என்ற ஒரு படத்தில் வடிவேலு திருடனாக நடித்திருப்பார். ஒரு பூட்டியிருக்கும் வீட்டுக்குள் சென்ற அவர் அங்கிருக்கும் பொருட்களைப் பார்த்து வியந்து, பரபரப்பாவார். "ஹையோ.. கட்டிலு கட்டிலு, அதுக்குமேல மெத்தை மெத்தை.. பீரோலு பீரோலு.. உள்ள சிலுவர் பேட்டிரி சிலுவர் பேட்டிரி, ஹையோ காத்தாடி காத்தாடி, உள்ள பித்தாள ரெக்கை ரெக்கை.." கிட்டத்தட்ட அந்த நிலைமையில்தான் இருந்தேன். 'ஹையோ இந்தப்பதிப்பகம், அந்த பதிப்பகம், இந்த ரைட்டர், அந்த ரைட்டர், இந்த புக்கு, அந்த புக்கு..'

அறுவடைக்குத்தயாரான வயல் போல கண்காட்சி. நெற்சுமையால் தலைதாழ்ந்திருக்கும் கதிர்களைப்போல காட்சியரங்குகள். நெல்மணிகளாய் புத்தகங்கள். சுமார் 500 காட்சியரங்குகள், கோடிக்கும் மேலான புத்தகங்கள் என இந்தப்பெருங்கடலில் தேவையான புத்தகங்களை நிச்சயமாய் நிதானமாக தேர்ந்தெடுக்கவே முடியாது. மலைப்பும், வியப்பும் மட்டுமே மிஞ்சியது. (நகுலன் கவிதைகள் என்ற நெல்மணியை வாங்கவில்லை என்பதற்குத்தான் இந்த பில்ட் அப், புரிகிற‌தா பரிசல்?) முதலில் இருந்து துவங்கி ஒரு ரவுண்ட் வந்துவிட்டு பின்னர் ரெஸ்ட் எடுத்துவிட்டு உணவுக்குப்பின்னர் முடிவு செய்த பதிப்பகங்களுக்குச் சென்று புத்தகங்கள் வாங்க திட்டமிட்டேன்.

ஆனால் திட்டமிட்டபடி என்று நாம் நடந்திருக்கிறோம்? ஒவ்வொரு தெருவாக 'யு' டர்ன் அடித்து அடித்து பாதியை கடப்பதற்குள் பாதி பையை நிரப்பியிருந்தேன். டயர்டாகிவிட்டதுடன் பசி வயிற்றைக் கிள்ளியது. வெளியே வந்து கிருஷ்ணா ஸ்வீட்ஸின் சாம்பார் சாதத்தை விழுங்கிவிட்டு பத்து நிமிடம் உட்கார்ந்துவிட்டு இரண்டாவது ரவுண்டை துவக்கவும் சிங்கைப்பதிவர் விஜய் ஆனந்த் மற்றும் கார்க்கி ஆகியோரிடமிருந்து அழைப்பு. முதல் முறையாக விஜயுடன் சந்திப்பு. அவரும் அவரது நண்பரும் நிஜமாகவே கோணிப்பை பிடிக்காத அளவில் புத்தகங்களை அள்ளி வைத்திருந்தனர். மேலும் எறும்பு செல்லும் பாதையை அழித்துவிடுவது போல டீ குடிக்கப்போகலாம், கிழக்கு போகலாம், உயிர்மை போகலாம் என இடது வலதாக, முன்னும் பின்னுமாக என்னை குழப்பிவிட்டு அவர்கள் நோக்கத்தை செவ்வனே நிறைவேற்றினர்.

அதன் பின்னர் திருவிழாவில் தொலைந்த குழந்தைப்போல ஏற்கனவே வந்த பாதையிலேயே திரும்பத்திரும்ப வந்துகொண்டிருந்தேன். கூட்டம் பெரும்பாலும் விஐபி பதிப்பகங்களான உயிர்மை, கிழக்கு, காலச்சுவடு, விகடன் ஆகியவற்றையே மொய்த்துக்கொண்டிருந்தது. ஆங்காங்கே சில முக்கிய எழுத்தாளர்களும் கூட்டத்தோடு கூட்டமாய் உலாத்திக்கொண்டிருந்ததை காணமுடிந்தது. பெண்கள் பெரும்பாலும் கோலப்புத்தகங்கள், சமையல் புத்தகங்கள் ஸ்டால்களிலும், ஐஸ்கிரீம், பாப்கார்ன் கடைகளிலும், வெளியே காண்டீனுலுமே காணப்பட்டனர் என்று நான் சொல்லவில்லை, கார்க்கி சொன்னான். அதற்கு நான் மத்தியமாக தலையாட்டிவைத்தேன். ஒருவழியாக வழிகண்டுபிடித்து மீத வரிசைகளையும் பார்த்துவிட்டு, பட்ஜெட்டைத்தாண்டி பையையும் நிரப்பிக்கொண்டு அக்கடா (கால்வலியில் கடைசி சில தெருக்கள் சும்மா ஒப்புக்காச்சும் ரன்னிங்கிலேயே பார்த்தேன்) என்று உட்காரவும் பளபளா வெள்ளைச்சிரிப்போடு வெள்ளைச்சட்டையில் அப்துல்லா வரவும் சரியாக இருந்தது. அவரோடு கொஞ்சம் அளவளாவிவிட்டு கிளம்பினேன்.

வாங்கின புத்தகங்களை சொன்னால் மேதைமை வெளிப்பட்டுவிடும் ஆபத்திருந்தாலும் எவ்வளவோ பண்ணிவிட்டோம்.. இதைப் பண்ணமாட்டோமா என்ன.?

சாம்பல் நிற தேவதை ‍: ஜீ.முருகன்
கண்ணாடியில் நகரும் வெயில் ‍: வா.மணிகண்டன்
சிகரங்களில் உறைகிற‌து காலம் : கனிமொழி
கிளிஞ்சல்கள் பறக்கின்றன : தமிழ் வலைப்பதிவர்கள் தொகுப்பு
மரப்பாச்சியின் சில ஆடைகள் : தமிழ் வலைப்பதிவர்கள் தொகுப்பு
உரையாடலினி : அய்யனார் விஸ்வநாத்
சினிமாவின் மூன்று முகங்கள் : சுதேசமித்திரன்
தாழப்பறக்காத பரத்தைய‌ர் கொடி : பிரபஞ்சன்
நாஞ்சில்நாடன் கதைகள் : நாஞ்சில்நாடன்
சூடிய பூ சூடற்க : நாஞ்சில்நாடன்
ரத்தம் ஒரே நிறம் : சுஜாதா
சாந்தாமணியும் இன்னபிற காதல்கதைகளும் : வா.மு.கோமு
கருவேல நிழல் : பா.ராஜாராம்
அய்யனார் கம்மா : நர்சிம்
பெண்மணம் : கி.ராஜநாராயணன்
கோபல்ல கிராமம் : கி.ராஜநாராயணன்
கோபல்லபுரத்து மக்கள் : கி.ராஜநாராயணன்
பாரதியின் கட்டுரைகள் : பாரதியார்
பாரதியின் கதைகள் : பாரதியார்

இறுதியாக இன்னும் வாசிக்கவில்லையே இந்த பெருநாவலை, காலங்களைக் கடந்து நிற்பதற்கான காரணம் அறியும் ஆவலில்..

பொன்னியின் செல்வன் : கல்கி


.

32 comments:

vellinila said...

i would like to complete my 500 books perfectly within this year, thats why i hesitate to buy new books but when i enter bookfair, atleast my hand ( mean it ) will buy atleast few. ssshhhh ippave kanna kettuthea....

வெண்பூ said...

வித்தியாசமான கலெக்சன்... பாராட்டுகள், புத்தகங்கள் வாங்கியதற்கு.. வாழ்த்துகள், படித்து முடிப்பதற்கு..

பொன்னியின் செல்வன், இதுவரை நீங்கள் படித்ததில்லை என்பது ஆச்சர்யமே. படியுங்கள், இன்னும் ஆச்சர்யப்பட்டுப் போவீர்கள்.

கே.ரவிஷங்கர் said...

கலக்கல்ஸ்.நானும் நேற்று இருந்தேன்.

ஜோசப் பால்ராஜ் said...

விசய் ஆனந்து தனியா வந்தாலே சூப்பரு, இதுல கார்கி கூட சேர்ந்து வந்தானா, சுத்தம். பாவம் நீங்க.

என்னது, பொன்னியின் செல்வன் இன்னும் படிக்கலையா ? படிக்கலையா? படிக்கலையா

என்னக் கொடுமை ஆதியண்ணா ?

குசும்பன் said...

//எறும்பு செல்லும் பாதையை அழித்துவிடுவது//

யோவ் எறும்பாய்யா நீ? கிடா மாதிரி இருந்துக்கிட்டு கம்பேரிசனை பாரு!!!

//பெண்கள் பெரும்பாலும் கோலப்புத்தகங்கள், சமையல் புத்தகங்கள் ஸ்டால்களிலும்,//

வெப்பன் சப்ளையர் யாருன்னு இப்பயாச்சும் கண்டுபிடிச்சீங்களா இல்லைய்யா? அந்த பதிப்பகத்தையே அழிச்சிடனும் என்று கோவம் வந்திருக்குமே!!!

Anonymous said...

இந்த வரிசையில் முதலில் பெண்மனம் படியுங்கள்.. ரொம்ப நல்ல புத்தகம் ....கிராமப்புற வாழ்வியல் குறித்து நன்றாக இருக்கும்..:)

பரிசல்காரன் said...

:-(

என்ன செய்ய?

சரி... நான் கேட்ட நகுலன் புக் என்னாச்சு?

விக்னேஷ்வரி said...

பெண்கள் பெரும்பாலும் கோலப்புத்தகங்கள், சமையல் புத்தகங்கள் ஸ்டால்களிலும், ஐஸ்கிரீம், பாப்கார்ன் கடைகளிலும், வெளியே காண்டீனுலுமே காணப்பட்டனர் என்று நான் சொல்லவில்லை, கார்க்கி சொன்னான். //
எதுக்குங்க கார்க்கி பேரை சொல்லி தப்பிச்சுக்குறீங்க. பொண்ணுங்களை குறை சொல்லலைனா, உங்க பதிவு முழுமையடையாதா ஆதி... :)


நல்ல கலெக்ஷன்ஸ் தான். நான் இங்கே இருந்துகிட்டு புத்தகங்களின் பேரை மட்டுமே கேட்டுக்க முடியுது. :(

பின்னோக்கி said...

ரத்தம் ஒரே நிறம், கருவேல நிழல் , அய்யனார் கம்மா தவிர மத்த புக் எல்லாம் தெரியலையே. ம்.ம்.ம்.. நிறைய படிக்கணும் போல. ஆனா இந்த புக் எல்லாம் படிச்ச எனக்கு புரியுமான்னு தெரியலை. பார்ப்போம்.

ஆனா நான் பொன்னியின் செல்வன் படிச்சுட்டேன். சிவகாமியின் சபதம் படிச்சுட்டேன். என்னைப் பொருத்தவரை வேகம் என்றால் சிவகாமியின் சபதம் தான்.

செல்வேந்திரன் said...

ஆமூகி, உரையாடலினியை ஒன்பதாம் தேதிக்குள் படித்து முடித்துவிட்டு பத்தாம் தேதி என்னிடம் ஒப்படைக்கும்படி உம்மை எச்சரிக்கிறேன்.

@ விக்கி:

நல்ல கலெக்ஷன்ஸ் தான். நான் இங்கே இருந்துகிட்டு புத்தகங்களின் பேரை மட்டுமே கேட்டுக்க முடியுது ''

ஆமாம் விக்கி. நீ அங்கே இருக்கிறதுனால எனக்கும் புக்ஸ் வாங்கித் தர ஆளே இல்லை. லிஸ்ட் அனுப்பவா...

அறிவன்#11802717200764379909 said...

{இறுதியாக இன்னும் வாசிக்கவில்லையே இந்த பெருநாவலை, காலங்களைக் கடந்து நிற்பதற்கான காரணம் அறியும் ஆவலில்..

பொன்னியின் செல்வன் : கல்கி
}

இன்னும்...படிக்கலையா????????

அறிவிலி said...

ஆதி,

பொன்னியின் செல்வன் கல்கியில் வந்ததை யாராவது பைண்ட் செய்து வைத்திருந்தால் வாங்கிப் படிக்கவும். படங்களுடன் படிக்கையில் இன்னும் பிரம்மாண்டமாக இருக்கும் என்பது என் எண்ணம். பழுவேட்டரையர், ஆழ்வார்க்கடியான் உருவங்களெல்லாம் இன்னமும் என் மனத்திரையில் தெரிகிறார்கள்.

துபாய் ராஜா said...

// அறிவிலி said...
ஆதி,

பொன்னியின் செல்வன் கல்கியில் வந்ததை யாராவது பைண்ட் செய்து வைத்திருந்தால் வாங்கிப் படிக்கவும். படங்களுடன் படிக்கையில் இன்னும் பிரம்மாண்டமாக இருக்கும் என்பது என் எண்ணம். பழுவேட்டரையர், ஆழ்வார்க்கடியான் உருவங்களெல்லாம் இன்னமும் என் மனத்திரையில் தெரிகிறார்கள்.//

ரிப்பீட்ட்ட்டேய்ய்ய்.....

அமரர் திரு.கல்கியின் அழகான எழுத்து நடையில் அனைத்து காட்சிகளும், கதாபாத்திரங்களும் கண்முன் வந்து செல்வார்கள். இதை படித்தவர்கள் அனைவருமே வந்தியதேவனாக தம்மை நினைத்து கொள்வதை தவிர்க்க முடியாது.

எம்.ஜி.ஆர் தொடங்கி கமல் வரை அனைவரும் திரைப்படமாக்க முய்ற்சித்த கதை. ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்கூட தொலைக்காட்சி தொடராக்க பெரும் பொருள் செலவில் ஏ.வி.எம் ஸ்டூடியோவில் பூஜை போட்டு பின் தொடர முடியாமல் போனது.

தமிழ்ப்பறவை said...

இன்னும் பொன்னியின் செல்வன் படிக்கலையா.... சேம் பிளட்தான் இங்கயும்...
‘நாஞ்சில் நாடன் கதைகள்’ ஆன்லைன்ல ஆர்டர் பண்ணிப் படிக்கலாம்னு இருக்கேன் பார்ப்போம்...
புத்தாண்டு வாழ்த்துக்கள் ஆதி...

pappu said...

வயித்தெரிச்சல நானும் கொஞ்சம் கொட்ட வைக்குறேன். நீங்க இன்னும் பொன்னியின் செல்வன் படிக்கலையா? என்ன ஆதி?

சங்கர் said...

முதலில் கோபல்ல கிராமம் படிக்கலாம்,

ஒரு கேள்வி, நீங்கள் வாங்கியது, பாரதியின் கட்டுரைகள் முழுத்தொகுப்பா? விஜயா கட்டுரைகள் மட்டுமா?

சங்கர் said...

//வாங்கின புத்தகங்களை சொன்னால் மேதைமை வெளிப்பட்டுவிடும்//

அப்படியா!, அய்யய்யோ, நான் விலையோட சேர்த்து சொல்லிட்டேனே

பா.ராஜாராம் said...

நன்றி ஆதி!

சுசி said...

//அறுவடைக்குத்தயாரான வயல் போல கண்காட்சி. நெற்சுமையால் தலைதாழ்ந்திருக்கும் கதிர்களைப்போல காட்சியரங்குகள். நெல்மணிகளாய் புத்தகங்கள். சுமார் 500 காட்சியரங்குகள், கோடிக்கும் மேலான புத்தகங்கள் என இந்தப்பெருங்கடலில் தேவையான புத்தகங்களை நிச்சயமாய் நிதானமாக தேர்ந்தெடுக்கவே முடியாது. மலைப்பும், வியப்பும் மட்டுமே மிஞ்சியது.//
அருமையான விளக்கம்.

//அதற்கு நான் மத்தியமாக தலையாட்டிவைத்தேன்.//
சொன்னவங்கள விட தலையாட்டுரவங்களுக்குத்தான் தண்டனை ஆதி. பாவம் அவங்களுக்கு சாம்பார் சாதம் கிடைக்கலையோ என்னமோ. எனக்கென்னமோ நீங்க ரமாவுக்காகவும் போன இடங்கள் மாதிரி தான் தெரியுது.

Cable Sankar said...

என்னது பொன்னியின் செல்வன் படிக்கலையா..????????:((((((

:))))))))

சுரேகா.. said...

Super Ji..

Thanks for sharing

அகநாழிகை said...

ஆதி நல்ல தேர்வுகள். படித்து அடுத்த ஆண்டு இளம் எழுத்தாளராக வாழ்த்துகள்.

Anonymous said...

பொன்னியின் செல்வன் இன்னுமா நீங்க படிக்கலைன்னு அதிர்ச்சி அடையும் கூட்டத்துல நானும் சேந்துக்கறேன். இத்தனை நாள் "ஆப்பு"கானிஸ்தான்லயா இருந்தீங்க :)

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி வெள்ளிநிலா.!

நன்றி வெண்பூ.! (நீங்க ஆரம்பிச்சீங்க, பாருங்க எத்தனை பேரு கலாய்ச்சிருக்காங்கன்னு)

நன்றி ரவிஷங்கர்.!
நன்றி ஜோஸப்.!

நன்றி குசும்பன்.! (சைண்டிபிக்கா ஒரு உதாரணம் கூட சொல்லவுட மாட்டீங்களே)

நன்றி மயில்.!

நன்றி பரிசல்.! (குசும்பன்.. ஓடியாங்க ஓடியாங்க.. எலி மாட்டிக்கிச்சு. பதிவு படிக்காம ஒருத்தர் பின்னோட்டம் போட்டுருக்காரு)

நன்றி விக்னேஷ்வரி.!
நன்றி பின்னோக்கி.!

நன்றி செல்வேந்திரன்.! (எச்சரிக்கை? புதுசா இருக்கு! நடத்துங்க..)

நன்றி அறிவன்.!

நன்றி அறிவிலி.! (அதெல்லாம் அந்தக்காலமாச்சே? கிடைக்குமா?)

நன்றி துபாய்ராஜா.!
நன்றி தமிழ்பறவை.!
நன்றி பப்பு.!

நன்றி சங்கர்.! (நீங்க ரொம்ப டீடெய்லான ரிபோர்ட் கொடுத்திருக்கீங்க போலருக்கே)

நன்றி ராஜாராம்.!
நன்றி சுசி.!
நன்றி கேபிள்.!
நன்றி சுரேகா.!
நன்றி வாசுதேவன்.!
நன்றி அம்மிணி.!

KKPSK said...

கட்டுரை நன்று..!
பார்த்திபன் கனவு
சிவகாமியின் ...
பொன்னியின் ...
இந்த order-ல படிக்க நல்லா இருந்தது. சிவகாமி.. வேகம் அதிகம்..i ended up in taking leave next day to complete..beware!

அமிர்தவர்ஷினி அம்மா said...

இதுமாதிரி இடங்களில் தனியே தன்னந்தனியே என்பது ஒரு வசதி. //

exactly

புத்தகங்களின் தேர்வு நன்று.

வாங்கிய புத்தகங்களின் மீது சு.பாவின் கரம், சிரம் மற்றும் இன்னபிற படாமல் இருக்க வாழ்த்துக்கள்.

வடிவேலு காமெடி // டைமிங்க் சென்ஸ், அக்மார்க் ஆதி ஸ்டைல். ரசித்தேன்

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி KKPSK.!
நன்றி அமித்துஅம்மா.!

தண்டோரா ...... said...

என்னது பொன்னியின் செல்வன் படிக்கலையா..????????:((((((

எம்.எம்.அப்துல்லா said...

நீங்க பொன்னியின் செல்வன் படிக்காம இருக்குறதுக்கு இலக்கியமேதைகள் கேபிளும்,தண்டோராவும் எப்பிடி வருத்தப்படுறாங்க பாருங்க :)

KVR said...

//வாங்கின புத்தகங்களை சொன்னால் மேதைமை வெளிப்பட்டுவிடும் ஆபத்திருந்தாலும் எவ்வளவோ பண்ணிவிட்டோம்.. இதைப் பண்ணமாட்டோமா என்ன.?
//

அப்படியெல்லாம் நினைக்காதிங்க. பொறவு எங்களை மாதிரி தற்குறிகளெல்லாம் எப்படி புத்தகம் வாங்குறதாம்? ஒரு ரெஃபரன்ஸ் வேணுமுல்ல...

கும்க்கி said...

நன்றி ஆமூகி..

படித்தப்பின் மெல்லிய ப்ளாஸ்டிக் உறைகளால் புத்தகங்களை மூடி பத்திரமாக பாதுகாக்கவும்.

மேலும் ஒரு முறை படித்தபின் போதும் என தோன்றும் புத்தகங்களை விரும்பும் நண்பர்களுக்கு விஷேச நாட்களில் பரிசலிக்கவும் செய்யலாம்...

அல்லது என்னை மாதிரி வீடு புகுந்து புத்தகங்களை கொள்ளையடிக்கும் ஆசாமிகளிடம் ஒன்றிரண்டு கொடுத்தும் தப்பிக்கலாம்...

பாலகுமார் said...

நேரம் கிடைக்கும் போது இதை வாசித்துப் பாருங்கள்.

http://solaiazhagupuram.blogspot.com/2010/01/blog-post.html