Wednesday, January 6, 2010

நூடுல்ஸ் கதை

தலைப்பில் தேங்காயெண்ணெய் கதை இருப்பதாக பார்த்து வந்தீர்களா? அதை பலமுறை பார்த்துவிட்டதால் ஒரு நூடுல்ஸ் கதை படிக்கலாம் வாங்க.. அவ்வ்வ்வ்வ்வ்வ்.. எப்படியெல்லாம் சமாளிக்கவேண்டியிருக்கிறது 'மயில்'?

********************************

11.08.09 காலை 8 மணி.
'காலையில டி.:பன் பண்ண முடியாத நேரத்தில யூஸ் ஆகும், சாய்ந்திரம் வரும்போது நூடுல்ஸ் வாங்கிட்டு வாங்க..'
'சரிம்மா'

11.08.09 மாலை 7 மணி.
'டெய்லி சொல்லணுமாங்க உங்களுக்கு. எப்படி மறக்குது உங்களுக்கு?'
'நாளைக்கு வாங்கிடலாம்மா'

12.08.09 மாலை 7 மணி.
'என்னங்க வாங்கிட்டு வந்திருக்கீங்க.. இது பாஸ்தா, நான் கேட்டது நூடுல்ஸ்.'
'பாக்க அழகா இருந்துச்சு, ஒரு சேஞ்சா இருக்க‌ட்டுமேனு..'
'இத‌ xxx கூட‌ திங்காது'
'ச‌ரிம்மா, நா சாப்டுக்க‌றேன். உன‌க்கு நூடுல்ஸ் நாளைக்கு வாங்கிட்டு வ‌ந்துட‌றேன்'

13.08.09 மாலை 7 ம‌ணி.
'என்ன‌ங்க‌ இதைப்போய் வாங்கிட்டு வ‌ந்திருக்கீங்க‌.. 20 ரூபா த‌ண்ட‌ம். இதுல காய்கறிலாம் சேந்திருக்குதுனு நினைக்கிறேன். நான் கேட்ட‌து 5 ரூபா பாக்கெட் பிளெய்ன் நூடுல்ஸ்.'
'ஸாரிமா, நாளைக்கு வாங்கிட‌லாம்'

14.08.08 மாலை 7 ம‌ணி.
'என்ன‌ங்க‌ இது? வேற‌ பிராண்ட் போய் வாங்கியிருக்கீங்க‌, நல்லாவேயிருக்காதே.! மேகிதான் ந‌ல்லாயிருக்கும்'
'ஸாரிமா, நாளைக்கு வாங்கிட‌லாம்'

15.08.09 காலை 10 ம‌ணி.
'ஏங்க‌ த‌ண்ட‌த்துக்கு நாலு பாக்கெட் வாங்கியிருக்கீங்க‌. ஒண்ணு போறாதா?'
'என்ன‌ விளையாடுறயா.. நானும் பாத்துட்டேயிருக்கேன். என்ன‌ ப‌ண்ணிணாலும் குறை க‌ண்டுபிடிச்சுகிட்டு.. இனிமே எதாவ‌து வாங்க‌ச்சொன்னே ... எதுனாலும் நீயே போயி வாங்கிக்கோ, @#@#&%#@ #$@ #% @#'
'*&^%$#$#% @#@#&%#@ #$@ '
'$#$#% @#@#&%'
'ம்ம்ம்..ஊம்..ம்.. ஹும்'
'இப்ப‌ என்னாச்சுன்னு இப்பிடி ஒப்பாரி வெக்கிறே..'

15.08.09 காலை 11 ம‌ணி.
'சாருக்கு மேகி நூடுல்ஸ் எடுத்துக்குடுப்பா, எத்த‌னை பாக்கெட் சார்.?'
'நூடுல்ஸ் வேணாம்பா.. க‌ருப்ப‌ட்டி இருக்குதா?'
'இல்லையே சார்'
'இங்கே வேறெங்க‌ கிடைக்கும்னு தெரியுமா?'

*************

டிஸ்கி : நான் பதிவுலகம் வந்த புதிதில் எழுதிய ஒரு பதிவு இது. ரெகுலராக வரும் வலைகளுக்கும் கூட வரமுடியவில்லை. எதிர்பாராதவிதமாக அலுவலகம், வீடு ரெண்டிலும் கொஞ்சம் பிஸியாகிவிட்டதால் இதை மீள் பதிவாக்கியுள்ளேன்.. பொறுத்துக்கொள்ளவும்.

.

23 comments:

Ibrahim A said...

me the first.........

http://www.rojavinkadhalan.blogspot.com

Anonymous said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்

மீள்பதிவு சரி... எத்தனை முறை....

முடியலை....

Jawahar said...

வீட்ல தேங்காய் எண்ணை எடுக்க இன்னம் எளிதான வழி இருக்குங்க. அலமாரியிலிருந்து தேங்காய் எண்ணை பாட்டிலை எடுத்து மூடியைக் கழற்றி உள்ளங்கையில் கவிழ்த்தால் உடனே கிடக்குமே....

http://kgjawarlal.wordpress.com

Anonymous said...

//எதிர்பாராதவிதமாக அலுவலகம், வீடு ரெண்டிலும் கொஞ்சம் பிஸியாகிவிட்டதால்//

வீட்டுல பிசி ஒத்துக்கறோம். அலுவலகத்தில என்ன பிஸி.

ஆமா. தமிழ்மணத்தில தேங்காயெண்ணை எடுப்பது எப்படின்னு தலைப்பு இருக்கு. இங்க வந்தா அதுக்குள்ள மாத்தியாச்சா

ஆதிமூலகிருஷ்ணன் said...

Thanks Ibrahim, Jawahar.!

Thanks Mayil.! (மறந்துட்டேங்க.. நினைவூட்டியதற்கு நன்றி.! இப்ப பாருங்க பதிவை எப்படி சமாளிச்சிருக்கேன்னு.? ஹிஹி)

sriram said...

அப்பிடி என்ன பிஸி - மளிகைக் கடைக்கு போறதுதானே??

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

ராஜகோபால் (எறும்பு) said...

நொந்து நூடல்ஸ் ஆன கதைன்னு தலைப்பு வச்சிருக்கலாம்.
:))

தராசு said...

படிச்சுட்டேன்.

மீள் பதிவுன்னாலும் தேதி சரியா போட்டிருக்கறீங்களே அது எப்படி????

பரிசல்காரன் said...

நான் இப்பதான் படிக்கறேனா... இல்ல அப்படித் தோணுதா,,...

அவ்வ்வ்வ்வ்...

கார்க்கி said...

பரிசல்,

இவரு பதிவெல்லாம் மனசுல நிக்காதுங்க. ஏன்னா உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு

♠ ராஜு ♠ said...

'சாருக்கு மேகி நூடுல்ஸ் எடுத்துக்குடுப்பா, எத்த‌னை பாக்கெட் சார்.?'

ஹிட்லர் ரிட்டர்ன்ஸ் பதிவுன்னு நினைச்சுரப்போறாஙக..!

அமிர்தவர்ஷினி அம்மா said...

:)

கும்க்கி said...

என்னமோ போங்க...ஹூம்.

☀நான் ஆதவன்☀ said...

:))

KVR said...

கடை டல்லடிக்கக்கூடாதுங்கிற உங்க நல்ல மனசு எங்களுக்குப் புரியுது. ஆனால், நானூறாவது பதிவு ஐநூறாவது பதிவெல்லாம் போடுறப்போ இந்த மீள்ஸையெல்லாம் மைனஸ் பண்ணிடணும், ஜாக்கிரதை.

Mohan said...

எண்னை வழியுது

விக்னேஷ்வரி said...

:)

அன்புடன் அருணா said...

ரைட்டு!

ச்சின்னப் பையன் said...

:-)))

Mahesh said...

அப்பிடியே கொஞ்சம் எலுமிச்சம்பழமும் வாங்கி என் தலைல தேச்சுடுங்க...

அத்திரி said...

பழைய கஞ்சி நல்லாத்தான் இருக்கு........இன்னும் இதுக்கு மேல எதிர் பார்க்கிறேன் உங்க பதிவுகளைத்தான்

வால்பையன் said...

//'இத‌ xxx கூட‌ திங்காது'
'ச‌ரிம்மா, நா சாப்டுக்க‌றேன். உன‌க்கு நூடுல்ஸ் நாளைக்கு வாங்கிட்டு வ‌ந்துட‌றேன்'//

ஆனாலும் உங்களுக்கு அநியாய நன்றியணர்வுண்ணே!

பட்டிக்காட்டான்.. said...

மீள் ஆ..? நூடுல்சுனு நினச்சேன்..

(அப்படியே உள்ளிருந்து வருது, பின்னூட்டத்த சொன்னேங்க)..