Thursday, January 7, 2010

மிச்செலின் கண்கள்

3Dயில்தான் பார்க்கவேண்டும் என்று ஒரு முடிவோடு இருந்தாலும், டிக்கெட் கிடைக்காததாலும், ஆர்வம் காரணமாகவும் வந்த சில நாட்களிலேயே 'அவதார்' படத்தைப் பார்த்துவிட்டேன். ஆனாலும் 3Dயில் பார்த்த பிறகுதான் படத்தைப்பற்றி எழுத வேண்டும் என்று வைராக்கியமாக இருந்துவிட்டேன். அதற்குள் விமர்சனம், டெக்னிகல் பிரமிப்பு என அனைவரும் எழுதிமுடித்துவிட்டார்கள். நல்ல தகவல்களுக்கு ஹா.பாலாவின் 'அவதார்' பதிவைக்காணலாம். டெக்னிகல் விஷயத்தில் சினிமாவின் அடுத்த கட்டம் அல்லது இன்னொரு பரிமாணத்தைத் தொட்டிருக்கிறார்கள் என்று எளிதில் சொல்லிவிடலாம். பிரமிப்பூட்டும் காட்சிகள்.


குறிப்பாக நான் என்ன சொல்ல ஆசைப்படுகிறேன் என்றால் ஹீரோயின் 'நேத்ரி' (Neytiri) காரெக்டர் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. ஸ்டைல், எக்ஸ்பிரஷன் என மனதை அள்ளிக்கொண்டு போகிறார் நேத்ரி.. ஹூம் நாம கொடுத்துவச்சது அவ்வளவுதான், நாம என்ன 'நவி'யா? இல்ல குறைந்த பட்சம் வால்தான் இருக்குதா?. இந்தக் காரெக்டரின் ஒரிஜினல் நடிகை ஜோ சல்தானா (Zoe saldana) வுக்கே பாராட்டுகள் சேர வேண்டியது. மேக்கிங் வீடியோக்களில் இவர் நடிக்கும் சில காட்சிகளைக் காணும் போதே பிரமிப்பாக இருந்தது.


அப்புறம் ன்னொருவர் ஹெலிகாப்டர் பைலட்டாக வரும் 'மிச்செல்' (Michelle Rodriguez). அவரது கண்களை இன்றைக்கெல்லாம் பார்த்துக் கொண்டேயிருக்கலாம். கனவிலே மிதக்கும் கண்கள். காரெக்டரைசேஷன், கம்பீரம் என குறைவாக வந்தாலும் நிறைவாக செய்திருக்கிறார். இவரை ஏற்கனவே Resident evil, Fast & Furious பார்த்து ஜொள் விட்டிருக்கிறேன். அவர் இறந்துபோவதான காட்சி என் பர்சனல் சோகம்.


******************************

வேட்டைக்காரன் படமும் பார்த்தாயிற்று. அதுபற்றி பின்னர் கண்ணனுடன் பேசிக்கொண்டிருந்ததை அரைகுறையாக எழுதியும் வைத்திருந்தேன். அவுட் டேட் ஆகிவிட்டதால் அது வேண்டாம். சுறா வரட்டும் மொத்தமாக எழுதிக்கொள்ளலாம், ஒண்ணும் அவசரமில்லை. நேற்று 'ஜக்குபாய்' சிடி வெளியானதால் சினிமா உலகமே பரபரப்பாக இருப்பதாக செய்தி படித்தேன். திருட்டு விசிடியை ஒழிக்காவிட்டால் சினிமா அழியும் என்று கூக்குரல் வேறு. எப்போதாவது சில படங்களை சிடியில் பார்க்க நேர்ந்தால் அதைப்பார்ப்பதை விடவும் பக்கத்தில் சுவற்றில் போய் முட்டிக்கொள்ளலாம் போலத்தான் இருக்கிறது. ஒன்று அதில் தெரியும் படத்தின் லட்சணம். அல்லது சினிமாவின் லட்சணம். வேட்டைக்காரன் மாதிரி இன்னும் நான்கு படங்கள் வந்தால் சினிமாவே ஒழிந்துவிடும் என்பதால் திருட்டு விசிடியும் தன்னாலேயே அழிந்துபோய்விடும். யாரும் மெனக்கெட வேண்டியிருக்காது. முட்டை இருந்தால்தானே ஆம்லெட் போடமுடியும்?

தாம்பரத்தில் படம் வந்த மறுநாளே பிளாட்பாரத்தில் திருட்டி சிடிக்கள் விற்பனைக்கு இருந்ததைப் பார்த்தேன். படம் இன்னும் ஜோராகத்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. ரேணிகுண்டா, அவதார் போன்ற படங்களைத்தான் சொல்கிறேன்.

*******************************

சமீபத்தில் ஓர்நாள் கொஞ்சமே கொஞ்சமான அளவு துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுவிட்டு என்ன செய்தேன் எனத் தெரியவில்லை, கவனித்த போது மெஷின் கழுத்து வரை தண்ணீரை எடுத்துக்கொண்டிருந்தது. என்னடா இது வம்பாக போயிற்று என்று மெஷினை ஆஃப் செய்து ப்ரொகிராமை கேன்சல் செய்தேன். அதன் பிறகுதான் பிரச்சினையே.. திரும்ப ஆன் செய்தால் இருக்கும் தண்ணீர் எடையையும் சேர்த்து துணியாக கற்பனை செய்துகொண்டு நிறைய சோப் பவுடர் கேட்டதுமல்லாமல் இன்னும் தண்ணீரை எடுக்க ஆரம்பித்துவிட்டது மெஷின். 'டாய்.. யாருகிட்ட வேலையை காட்டுற..?' என்று எவ்வளவோ போராடியும் வேலைக்காகவில்லை. அப்புறம் என்ன பண்ணித்தொலையுறது? பின்னர் ஒவ்வொரு மக்'காக தண்ணீரை அள்ளி வெளியே எடுத்து முதலில் இருந்து ஒழுங்காக வேலையை ஆரம்பித்தேன்.

இடையில் தண்ணீரை வெளியேற்ற வேறெதுவும் வழியிருக்கிறதா என்று ஒரு பிரபல பதிவரை போனில் அழைத்து கேட்டபோது ஒரு சம்பவம் நிகழ்ந்தது. நாங்கள் சீரியஸாக பேசிக்கொண்டிருப்பதை கவனித்த அவரது தங்கமணி விழுந்து விழுந்து சிரித்ததோடு அல்லாமல் 'உங்ககிட்டயா ஐடியா கேக்குறாரு? ஜோக் ஆஃப் தி இயர்..' என்று ஆரவாரம் செய்து பல்பு கொடுத்தார் எங்கள் இருவருக்கும். ஹூம்.!

*********************************

நாளை முதல் மாதக்கடைசி வரை பொங்கலை ஒட்டிய நீள்விடுப்பில் ஊர் செல்லவிருப்பதால் அனேகமாக இணையம் பக்கம் வர இயலாது (நீள்விடுப்பு கண்டு சிலருக்கு காதில் புகை வருவது தெரிகிறது). அதுவரை கடையை காத்தாட விடாமல் பழைய பதிவுகளை படித்து பொழுதுபோக்கிக்கொண்டிருக்கும் படி அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். யாரார் பழைய பதிவுகளுக்கு பின்னூட்டமிட்டு உங்களுக்கு மிகவும் பிடித்தமான பதிவுகளை குறிப்பிடுகிறீர்களோ அவர்களுக்கெல்லாம் பரிசு காத்திருக்கிறது (கண்ணைத் தொடச்சுக்கங்க). சரியாக பிப்ரவரி 1ல் வந்துவிடுவேன். வரும்போது பயணக்கட்டுரைகள், புகைப்படங்கள், குறும்படங்கள் என்று வழக்கமான விருந்துகளுடன் வருவேன் (ஊம்.. திரும்பவும் அழக்கூடாது) என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

*********************************

விடுமுறையின் துவக்கமாக ஈரோடு, கோவை நண்பர்களை சந்திக்க வருகிறேன். வரும் 9, 10 தேதிகளில் அங்குதான் சுற்றிக்கொண்டிருப்பேன். சந்தித்துத் தொலைவோம் என்ற எண்ணமிருப்பவர்கள் முன்னதாக தொடர்பு கொள்ளலாம். அலைபேசி எண் : 9789066498.

அனைவருக்கும் என் இனிய தமிழ்ப்புத்தாண்டு மற்றும் தமிழர்திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன். வாழ்த்துகள்.! பிப்ரவரியில் சந்திக்கலாம்.. பை பை.! (அலோ அலோ.. ரொம்ப சந்தோஷப்படவேண்டாம். நாளைக்கு வருவேன், இடையிடையே வாரம் ஒரு முறை எட்டிப்பார்த்தாலும் பார்ப்பேன். உங்களையெல்லாம் பிரிஞ்சு ரொம்ப நாள் தாங்காது எனக்கு. பாசம் பொங்கிரும்)


.

32 comments:

டம்பி மேவீ said...

washing machine matter top......

yaar antha pirabalam

டம்பி மேவீ said...

சினிமா துறையை பொறுத்த வரைக்கும் இன்னும் MARKET சிறப்பாகவே இருக்கிறது ...... சிறு நகரங்களில் கூட தியட்டரில் படம் பார்க்க விரும்புகிறார்கள் (நல்ல படம் வந்தால் மட்டுமே)


திரையரங்களில் ENTERTAINMENT VAUE அதிக படுத்தினாலே போதும் .........

அப்பாவி முரு said...

ஜன 14-ல் சென்னையில் உங்களை சந்திக்கலாமென இருந்தேன்...

(வடை) பொங்கல் போச்சே...

Cable Sankar said...

வாஷிங்மெஷின்மேட்டர் கற்பனையில் உங்களை மிஸ்டர் பீனாக பார்த்தேன்.:))

டம்பி மேவீ said...

அவதார் பட வெற்றியில் அந்த படத்தினுடைய மார்க்கெட்டிங்க்கு பெரும் பங்கு இருக்கிறது ......

இந்தியாவில் சிறப்பான தொழில்நுட்ப வசதிகள் பெருமளவு இல்லாததால் எதிர் பார்த்த வெற்றி இங்கு கிடைக்கவில்லை என்பதே நிஜம் .....

டம்பி மேவீ said...

வாஷிங் மிசின் ல தேங்கிய தண்ணீரை வெளியேற்றவும் PROG இருக்கு பாஸ்


but some branded mac. s strictly follow the process which sometimes creates a fuss

pappu said...

தாம்பரம் வந்தாலே படம் போவேன். வித்யா. போன வாரக் கடைசியில் வந்தபோ வேட்டைக்காரன். அவதார் நோ 3டி.ஆசையே போச்சு.

Anonymous said...

மிஷல் Lost னு ஒரு மெகா சீரியல்ல கூட நடிச்சிருக்காங்க.

வேட்டைக்காரன் விமர்சனம் மிஸ் பண்ணீட்டமேன்னு கவலைப்படாதீங்க. சுறாவுக்கு காப்பி-பேஸ்ட் பண்ணீருங்க :)

Anonymous said...

எங்களையெல்லாம் அவ்வளவு பயந்தவங்கன்னு நினைச்சிங்களா?

நாங்க இந்த ஊரை விட்டு எங்கயும் போக மாட்டோம்...

கோவையை கடவுள் காப்பாத்துவார் :))

வாங்க.. வாங்க..கவனிச்சுக்கிறோம் :))))

தராசு said...

என்னது எங்களின் கொங்குநாட்டுக்கு மன்னரின் வருகையா,

யாரங்கே, கோட்டை வாயிலை இழுத்து மூடுங்கள்.

மகா said...

//ஹை‍‍ -எண்ட் கம்ப்யூட்டர் கேம்ஸ் //

there are lot of types, sports, strategy, action, etc., in which thing u have interest....

பதிவு அருமை ... வாழ்த்துக்கள் ...

பாபு said...

//நீள்விடுப்பு கண்டு சிலருக்கு காதில் புகை வருவது தெரிகிறது). //

athethaan

பின்னோக்கி said...

//விடுமுறையின் துவக்கமாக ஈரோடு, கோவை நண்பர்களை சந்திக்க வருகிறேன்


சித்தவைத்தியர் ரேஞ்சுக்கு சொல்றீங்களே :)

முரளிகுமார் பத்மநாபன் said...

வாங்க பாஸு

♠ ராஜு ♠ said...

\\ pappu said...
தாம்பரம் வந்தாலே படம் போவேன். வித்யா. போன வாரக் கடைசியில் வந்தபோ வேட்டைக்காரன். அவதார் நோ 3டி.ஆசையே போச்சு.\\

நானும் தாம்பரம் வந்தா அதே வித்யாதான்..ம்ம்..கடைசியா சர்வம்ன்னு நெனைக்கிறேன்.

பிரபாகர் said...

ஆதி!

அவதாரில் என்னை சுண்டியிழுத்த மிச்செல்லின் கண்கள் உங்களையுமா? வியப்பாயிருக்கிறது. எத்தனையோ அவதார் படத்தின் விமர்சனங்களை படித்தாலும் உங்களைப் படித்தபின் ஏதோ ஒரு இனம் புரியா மன நிறைவு...

பிரபாகர்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

பின்னூட்டமெல்லாம் இருக்கட்டும். யாராவது தமிழிஷ், தமிழ்மணத்துல ஒரே ஒரு ஓட்டைப்போடுங்கப்பா. என் ஓட்டை மட்டும் பார்த்துக்கிட்டிருக்க ஒரு மாதிரியா இருக்குது. :‍-((

துபாய் ராஜா said...

ஹாப்பி ஊர் டேஸ்.

Romeoboy said...

எவ்வளவு நல்ல விஷயத்தை சொல்லி இருக்கீங்க அதுக்காக நாங்க அழமாட்டோம் பாஸ் . நல்லபடியா போயிட்டு வாங்க .

அமிர்தவர்ஷினி அம்மா said...

முட்டை இருந்தால்தானே ஆம்லெட் போடமுடியும்?

அட அட அட :))))

பின்னர் ஒவ்வொரு மக்'காக தண்ணீரை அள்ளி வெளியே எடுத்து முதலில் இருந்து ஒழுங்காக வேலையை ஆரம்பித்தேன். //

நம்பிட்டோம் எசமான் ;)

பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வானம்பாடிகள் said...

இனிய விடுமுறையுடன் பொங்கல் வாழ்த்துகளும்.

நர்சிம் said...

வாழ்த்துக்கள்..எல்லாத்துக்கும்.

தாரணி பிரியா said...

//மயில் said...
January 7, 2010 9:57 AM

எங்களையெல்லாம் அவ்வளவு பயந்தவங்கன்னு நினைச்சிங்களா?

நாங்க இந்த ஊரை விட்டு எங்கயும் போக மாட்டோம்...

கோவையை கடவுள் காப்பாத்துவார் :))

வாங்க.. வாங்க..கவனிச்சுக்கிறோம் :))))
//

repeatuu :)

Rajaraman said...

ஹலோ பாஸ் ஏப்ரல் பதினாலாம் தேதி வரப்போற தமிழ் புத்தாண்டுக்கு இப்பவே அட்வான்சாக வாழ்த்து சொல்றீங்க..

அமுதா கிருஷ்ணா said...

வாஷிங் மெஷினுக்கு எல்லாம் பிரபல பெண் பதிவர்களை கேட்கணும். பொங்கல் திட்டு வாங்காமா செய்யவும்!!!!

கார்க்கி said...

அய்ய்ய்.. எங்க தாத்தா ஊருக்கு போயிட்டாரு.....

Karthik said...

தராசு said...

என்னது எங்களின் கொங்குநாட்டுக்கு மன்னரின் வருகையா,

யாரங்கே, கோட்டை வாயிலை இழுத்து மூடுங்கள்.//

ROFL.

உங்க பழைய பதிவில் எனக்கு ரொம்ப பிடிச்சது குருவி விமர்சனம்தான். வேட்டைக்காரன் விமர்சனத்தை போடுங்களேன். :))

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி மேவீ.! (எங்க வாஷிங் மெஷின்ல அப்படி ஒண்ணத்தையும் காணோம்ங்க)

நன்றி முரு.! (எனக்கும் வட போச்சு)

நன்றி கேபிள்.! (ஹிஹி)

நன்றி பப்பு.! (எங்க இருக்கீங்க? தாம்பரம் எதுக்கு வருவீங்க)

நன்றி அம்மிணி.! (அதானே)

நன்றி மயில்.! (நாந்தான் பயப்படுணும். ஹிஹி)

நன்றி தராசு.! (சிம்பிளா இருந்தாலும் புதுசா இருக்கு.. :-))

நன்றி மகா.! (ஆக்ஷன், அட்வென்சர்.. எல்லோரும் பின்னூட்டத்திலேயே லைட்டா பதில் சொல்லிட்டு ஓடிருறாங்க.. மெயிலுக்கு ஒருத்தரும் வரலை :-(

நன்றி பாபு.!
நன்றி பின்னோக்கி.!
நன்றி முரளிகுமார்.!
நன்றி ராஜு.!

நன்றி பிரபாகர்.! (ஒத்தரசனை?)

நன்றி துபாய்ராஜா.!
நன்றி ரோமியோ.!
நன்றி அமித்து.!
நன்றி வானம்பாடி.!
நன்றி நர்சிம்.!
நன்றி தாரணி.!
நன்றி ராஜாராமன்.!
நன்றி அமுதா.!

நன்றி கார்க்கி.! (நறநற..)

sriram said...

//முட்டை இருந்தால்தானே ஆம்லெட் போடமுடியும்?//
தத்துவம் நம்பர் 10001...
விடுமுறையில் அப்படியே மதுரைக்கும் போயி இதை திருமலை நாயக்கர் மகால் தூண்களில் செதுக்கி விடுங்க, பின்னால் வரும் சந்ததியினர் படிச்சு பயன் பெறுவாங்க..

ஆகா ஈரோட்டில் இன்னொரு பதிவர் சந்திப்பா?? அப்போ அடுத்த வாரம் கும்மி அடிக்க நெறய மேட்டர் இருக்கும்....

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

விக்னேஷ்வரி said...

ஹாஹாஹா... மொத்தமும் தூள். பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்.

தமிழ்ப்பறவை said...

மிச்செல் 1000 வாட்ஸ்...
நல்லபடியா ஊருக்குப் போயிட்டு வாங்க...

செல்வேந்திரன் said...

மிச்செலைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு லெவின்ஸ்கி ஆண்டி நினைவுக்கு வந்தார்...