Friday, January 8, 2010

வேட்டைக்காரன் : ஒரு உரையாடல்

நான்கு நாட்கள் விடுப்பில், ஊர்ப்பயணத்தையெல்லாம் முடித்து காலையில் சென்னை வந்து இறங்கினேன். மீண்டும் அதே ஆஃபீஸுக்கா என்ற மலைப்பில் சலித்துக்கொண்டு வேறு வழியில்லாமல் கிளம்பிக்கொண்டிருந்தபோது சரியாக கண்ணனிடமிருந்து போன் வந்தது.

'இன்னிக்கு போலாமா வேட்டைக்காரன்?'

'பாத்துட்டனே'

'ஊருக்குப்போறேன்னு சொல்லிட்டிருந்தயே'

'ஊர்லதான் பாத்தேன்'

'போன வேலையை விட்டுட்டு இந்த வேலையுமா? ஓஹோ.. நீங்கதான் பிளாகராச்சே.. அதுனாலயா?'

'...'

'சரி, விடு அந்தக் கருமத்தை.. படம் எப்பிடி இருந்துச்சு? கத சொல்லு'

'டமால் டுமீல்னு என்கவுண்டர் பண்ற ஒரு போலீஸப்பாத்து விஜயும் போலீஸ் ஆக ஆசைப்படுறாரு.. அவ்ருதான் ரோல் மாடல்'

'அடடே, அப்புறம்?'

'அதுனால காலேஜ் படிக்க சென்னைக்கு வர்றாரு..'

'எதுக்கு?'

'போலீஸாவுணும்ல..'

'ஓஹோ, எங்கேர்ந்து வர்றாராம்? மதுரையா.?'

'இல்லை, தூத்துக்குடி'

'ரொம்ப வித்தியாசமாயிருக்கே.. அப்புறம்?'

'கொஞ்ச நேரம் குறுக்க பேசாம கேட்டின்னா, கதை சொல்றேன்..'

'சரி கோவப்படாத.. சொல்லு'

'அவுரு வண்டில ஏறம்போதே அனுஷ்காவை பாத்து ஜொள்விட்டு அவர் திராட்சைப்பழம் சாப்புடுற அழகுல லவ்வு பண்ண ஆரம்பிச்சுடுறாரு..'

'ஊம்'

'அப்படியே சென்னைக்கு வந்ததும் ஆட்டோ ஓட்ட ஆரம்பிக்கிறாரு'

'காலேஜிக்கு போலியா?'

'இல்ல, பார்ட் டைம்.. படிக்க பைசா வேணும்ல..'

'அப்ப சரி'

'ஆட்டோ ஓட்டுற நேரம்போக மிச்ச நேரம் அனுஷ்கா வீட்ல செட்டிலாகிடுறாரு'

'அதெப்படி சேத்துக்கிட்டாங்க'

'ட்ரெயின்ல அனுஷ்காவோட பாட்டிக்கு ஹார்ட் அட்டாக் வந்ததுக்கு உதவி பண்ணுறாரு. அனுஷ்கா ஸ்கூட்டிய கண்டுபிடிச்சு தர்றாரு.. இப்பிடி நிறைய பண்றாரு. இப்பிடி இருக்கும்போது ஒரு வில்லன் ரோட்டுல போற வார பொண்ணுங்களையெல்லாம் தூக்கிட்டு போயிடுவாரு. தட்டிக்கேட்டா வெட்டிப்போட்டுடுவாரு'

'அவுரு அனுஷ்காவை தூக்கிட்டுப்போயிடுறாரா?'

'அதெல்லாமில்லை. அனுஷ்கா சைஸ்க்கு அது ஆவுற கதையில்லை என்பதால் விஜயுடன் காலெஜில் கூட படிக்கும் ஒரு பொண்ணை, அதற்குள் சிஸ்டர் மாதிரி பழ‌கிட்டாங்கன்னு வச்சுக்க‌யேன், அவர தூக்கப் பிளான் பண்றார். அது தெரிஞ்சி விஜய் அவர நல்லா மொத்தி விட்டுடறார். இத்தனைக்கும் டாடாசுமோக்கள், கூட பத்து பரட்டைத்தலை ரவுடிகள்னு எந்நேரமும் சுத்திக்கினுதான் இருக்கார்.'

'அடடா.. அவுருதான் மெயின் வில்லனா?'

'இல்ல, அவுரு மெயின் வில்லனோட பையன். மெயின் வில்லன் ஒரு பெரிய தாதா, தொழிலதிபர் வேற. அரசியல்வாதி, போலீஸ்னு எல்லோரும் அவுரு முதுகுக்கு பின்னாடி இருக்காங்க..'

'தாதான்னு சொன்னா போறாதா, ஏன் இப்படி நீட்டி முழக்குற?'

'அவுரு இவரை போலீஸ்ல புடிச்சு குடுத்துடறாரு'

'ரொம்ப நல்லவரா இருக்காரே, பையன் ஒண்ணும் சொல்லலியாமா?'

'இல்ல, அடிபட்ட‌ பையன் ஆஸ்பத்திரில மயக்கமா இருக்காரு. டாக்டர்லாம் இதுமாதிரி அடியை பாத்ததே கிடையாது. அடிச்சது சாதா ஆளு கிடையாது, பெஸல் சாதான்னு சொல்லிடறாங்க. அப்பறம்தான் தெரியுது. வில்லன் இவரை போலீஸ்ல புடிச்சுக்குடுத்ததே என்கவுன்டர் பண்ணத்தான் அப்படின்னு. விஜய் என்ன பண்றாரு எஃப்ஐஆர் போட்டா வேலைக்கு சிக்கலாயிடுமேனு போலீஸை அடி பின்னிடுறாரு. அடி வாங்கின போலீஸ் கண்டிப்பா என்கவுன்டர் பண்ணிடவேண்டியதுதான்னு முடிவு பண்ணி இவரை நல்லா மொத்தி ஒரு வேன்ல கூட்டிட்டுப்போறாங்க..'

'எங்க?'

'என்கவுன்டர் பண்ண. இவுர் என்ன பண்றார், அடடா எப்படியும் படிப்பு போச்சு, நாமளும் பேசாம தாதாவாயிடவேண்டியதுதான்னு அங்கனயே முடிவுபண்ணி வேன்ல இருந்த போலீஸை த‌ள்ளிவிட்டு கீழ இறங்கி அங்கேயிருந்த‌ நயாகரா மாதிரி ஒரு ஃபால்ஸ்லயிருந்து குதிச்சு தப்பிச்சுடுறாரு..'

'ஆமா அனுஷ்கா என்ன ஆனாங்க?'

'அவுங்க என்ன பண்றாங்கன்னா இவரு ரோல்மாடலா இருந்த போலீஸ்கிட்ட உதவிகேட்டு போறாங்க. அங்க என்னாடான்னா அவுரு கண்ணு தெரியாம தண்ணியடிச்சுக்கிட்டிருக்காரு. கேட்டா அவரையும் முன்னாடி நம்ப வில்லன் அப்படி பண்ணிவிட்டிருக்காரு.'

'அடடா'

'திரும்ப ஊருக்குள்ள வந்து ரோல்மாடலை பாத்து விஜய் பேசுறாரு. ரெண்டு பேரும் பேசி முடிவுபண்ணி ரெண்டு பேருக்கும் வேலை போச்சு, பேசாம ஒண்ணா மண்ணா சேந்து டிடெக்டிவ் ஏஜென்ஸி நடத்தலாம்னு முடிவுபண்ணி நடத்துறாங்க. அது நடத்துனா கோட்டு, ஜெர்கின்தான் போடணுமாமே.. போட்டுக்கறாரு. அப்புறம் வில்லனையும் பாத்து பேசுறாரு. அவுரு தனக்கு இன்னின்ன பிஸினெஸ் இருக்குதுன்னு விலாவாரியா எடுத்துச் சொல்றாரு. உடனே இவுரு அதுக்கெலாம் குண்டு வச்சு இடிச்சு தரைமட்டமாக்கிடுறாரு.'

'அடடா'

'வில்லனுக்கு என்ன பண்றதுன்னு தெரியாம திரும்பவும் போலீஸை கூப்பிடுறாரு. ஆனால் அந்த போலீஸ் வரமாட்டேங்குறாரு.'

'ஏனாம்?'

'ஏன்னா இந்த நேரத்துக்குள்ள ஆஸ்பத்திரியில இருந்து வெளிய வந்த குட்டி வில்லன், அந்த போலீஸ் 'வச்சிருந்த' ஒரு பொண்ணை இவுரு 'வச்சிக்கிட' கூட்டிக்கிட்டு வந்துடுறாரு. அந்த கோவத்துல அந்த போலீஸ் வரமாட்டேங்குறாரு'

'அச்சச்சோ'

'அரசியல்வாதிகளும் உதவி பண்ணாம போக வில்லன் கோவத்துல அமைச்சராயிடுறாரு..'

'ஆஹா.. ஆச்சுடா'

'பதவியேத்துட்டா ஒன்னும் பண்ணமுடியாதுங்கிறதால, அதுக்கு முன்னாடியே பதவியேற்க போக வீட்லயிருந்து கார்ல ஏறும்போதே கொல்லத் திட்டம்போட்டு அவர கொல்லப்போனா இவர போலீஸ் புடிச்சுக்குது.'
'ஏன்'

'இவுரு மேலதான் எஃப்ஐஆர் இருக்கே..'

'ஓஹோ'

'புடிச்சு உடனே ஸ்டேஷனுக்கு கொண்டுபோகாம அங்கேயே நின்னுக்கிட்டிருக்காங்களா.. பக்கத்துல நின்ன கண்ணு தெரியாத பார்ட்னர்கிட்ட 'சைரன் சத்தம் கேட்குதா.. அமைச்சர் கார்கிட்ட போயிட்டார், கதவத்தொறந்துட்டார்'னு பொதுஜனம் சத்தம் போடுற மாதிரி சத்தமா போட்டுக்குடுக்கிறார். அதக் கப்புனு புடிச்சிக்கிட்டு அவுரு வில்லனை சுட்டுடுறாரு. முடிஞ்சது கதை.'

'அப்புறம், குட்டிவில்லன் என்ன ஆனாரு? அனுஷ்கா என்ன ஆனாங்க? சத்யன் போஸ்டர்ல இருக்காரே, அவுரு யாரு.?'

'அதெல்லாம் சொல்லமுடியாது. வேணும்னா நீயே போய் பாத்துக்கோ..'

'போடா, கதை நல்லாத்தான் இருக்குது.. நானே பாத்துக்குறேன்'

'பாத்துக்கோ, பொழச்சுக்கிடந்தேன்னா வர்ற ஞாயித்துக்கிழமை வீட்டுக்கு வா'

.

33 comments:

ஆதிமூலகிருஷ்ணன் said...

நேரமின்மையால் அவுட் டேட் ஆகிவிட்டாலும் நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அறைகுறையாக டிராஃப்டில் இருந்ததை முடித்து போட்டுவிட்டு எஸ்கேப்பாகிறேன். பை பை. குட்லக்.! (நான் எனக்குச் சொன்னேன்)

தாரணி பிரியா said...

:))

தராசு said...

பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

அறிவன்#11802717200764379909 said...

{குட்லக்.! (நான் எனக்குச் சொன்னேன்)}

இது !

வால்பையன் said...

//அடிபட்ட‌ பையன் ஆஸ்பத்திரில மயக்கமா இருக்காரு. டாக்டர்லாம் இதுமாதிரி அடியை பாத்ததே கிடையாது. அடிச்சது சாதா ஆளு கிடையாது, பெஸல் சாதான்னு சொல்லிடறாங்க.//


பாட்ஷா படத்துலயும் இதே மாதிரி ஒரு வசனத்தை பார்த்திருக்கேன்!

Cable Sankar said...

அனுஷ்காவை ஏன் கடத்த முடியாதுங்கிறத்துக்கான காரணம் சூப்பர்

கணேஷ் said...

ROTFL :))))))

Rajeswari said...

அனுஷ்காவை பற்றிய தவறான கருத்துக்களை பரப்புவதற்காக, அ.க.மன்றம் கடும் கண்டனம் தெரிவிக்கிறது.

கார்க்கி said...

சுறாவையும் மறக்காம பார்த்து இப்படி ஒரு பதிவு எழுதுங்க. உங்க சகிப்புத்தன்மையை கண்டு மெச்சினோம்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

ரெண்டு பேருக்கும் வேலை போச்சு, பேசாம ஒண்ணா மண்ணா சேந்து டிடெக்டிவ் ஏஜென்ஸி நடத்தலாம்னு முடிவுபண்ணி நடத்துறாங்க. அது நடத்துனா கோட்டு, ஜெர்கின்தான் போடணுமாமே.. போட்டுக்கறாரு

:))))))))

சிரிச்சு மாளலை.
கண்ணனுக்கு கதை சொல்லுற சாக்குல வேட்டைக்காரனை காமெடி பீஸாக்கிட்டிங்களே

வானம்பாடிகள் said...

இந்த விமரிசனம் நல்லா இருக்கே:))

கடைக்குட்டி said...

ஹி ஹி.. படம் நானும் பாத்தேங்க..

படமும் சரி இந்தப் பதிவும் சரி முழுசா படிக்க முடியலீங்க..

செம்ம்ம மொக்க...

ஜெட்லி said...

//குட்லக்.! (நான் எனக்குச் சொன்னேன்) //

:))

பட்டிக்காட்டான்.. said...

:-))))

Mrs.Dev said...

//'பாத்துக்கோ, பொழச்சுக்கிடந்தேன்னா வர்ற ஞாயித்துக்கிழமை வீட்டுக்கு வா' //

"நச் "

செம காமெடி (படமா இது பாடமாச்சே... விஜய் படத்துக்கு இனி போவியா போவியான்னு யாராவது உச்சந்தலைல நறுக்குன்னு கொட்டினா தேவலை.)
:)))

கலையரசன் said...

நாங்களும் பார்த்துட்டோம்... ஏன்னா, நாங்களும் பதிவருல்ல...

(புண்ணாக்கு விக்கிறவன்.. குண்டூசி விக்கிறவனை எல்லாம் இதுக்கு சம்பந்தபடுத்த கூடாது சொல்லிட்டேன்!)

Mahesh said...

"வேட்டைக்காரன்" என்ற மகாகாவியத்தை இப்படி சித்தரித்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன் :(

பரிசல்காரன் said...

சீரியஸா நல்லா இருக்கு ஆதி. யார் இது நல்லால்லைன்னாலும் மனம் தளராதே.. விஜய்யை ரோல் மாடலா நெனைச்சுக்கோங்க!!

கார்க்கி said...

//ஹி ஹி.. படம் நானும் பாத்தேங்க..

படமும் சரி இந்தப் பதிவும் சரி முழுசா படிக்க முடியலீங்க..

செம்ம்ம மொக்க.//

இதைத்தான் நானும் சொல்ல வந்தேன். சொன்னா விஜய்க்கு எதிரா எழுதினா இவனுக்கு இதே வேலம்பாங்க.

இப்ப பெரிய்ய்ய ரீப்பீட்டு போட்டுக்குறேன். பதிவு மரண மொக்கை

வரதராஜலு .பூ said...

//'பாத்துக்கோ, பொழச்சுக்கிடந்தேன்னா வர்ற ஞாயித்துக்கிழமை வீட்டுக்கு வா' //

:))

Karthik said...

கொஞ்சம் கம்மிதான். அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். சுறா வை நல்லா கவனிச்சிருங்க. கடைசி படம் வேற. (அதுக்கப்புறம் சிஎம் ஆயிருவாரு. :P) :)

ஹாலிவுட் பாலா said...

///'பாத்துக்கோ, பொழச்சுக்கிடந்தேன்னா வர்ற ஞாயித்துக்கிழமை வீட்டுக்கு வா'///

கஷ்டம்தான்....!!!!!!! :( :( :(

பிரபாகர் said...

அவுட் டேட் என வருந்ததேவையில்லை ஆதி. அட்டகாசமாய், வித்தியாசமாய் எழுதியிருக்கிறீர்கள். அனுஷ்கா மேட்டர், தாதா பற்றிய தகவல்கள்.... ஒரு விதத்தில் வேட்டைக்காரனுக்கு உதவி செய்திருக்கிறீர்கள், தாமதமாய் வெளியிட்டு. முதலிலேயே வந்திருந்தால் நிறைய பேர் பார்க்கும் எண்ணத்தை விட்டிருப்பார்கள்.

கலக்குங்கள் நண்பா!

பிரபாகர்.

KVR said...

நான் எதோ உறையாடலா இருக்கும்ன்னு வந்தேன், உரையாடல் தான் இருக்கு :-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) நல்லா இருந்தது..( படத்தை சொன்னதா நினைச்சிடாதீங்க)

படத்தில செத்துப்போய்ட்டாருன்னு நினைச்ச ஒரு கேரக்டர் திரும்பவும் வந்தமாதிரி எனக்கு ஒரு குழப்பம்.. சரி எத்தனையோ கவனிக்காம விட்டுட்டோம் இதை ஏன் கவனிக்கனும்ன்னு மனசு தேத்திக்கிட்டேன்..

ஸ்ரீமதி said...

:)))))

கார்க்கி said...

கடையை பத்திரமா பார்த்துக்கிட்டதுக்கு ஒரு அத்தாட்சி

சுசி said...

நானும் பாத்தேன்.. எனக்கு இப்டீல்லாம் தோணலையே..

ஒருவேளை பிரபல பதிவர்னா இப்டித்தான் தோணுமோ??

நல்ல காமடியா எழுதி இருக்கீங்க ஆதி.

Jagannathan said...

All those bloggists who wrote about Vettaikkaran can save and repost the article when 'Sura 'is released. Vijay has the stupidity to say there will be no change in 'Sura'- See latest Kumudham interview.
// கீழ இறங்கி அங்கேயிருந்த‌ நயாகரா மாதிரி ஒரு ஃபால்ஸ்லயிருந்து குதிச்சு ...// I thought it would have been a great relief for the audience, but you spoiled it by saying தப்பிச்சுடுறாரு..' Audience yeppadi thappikkirathu? - R. Jagannathan

கார்க்கி said...

நண்பர் ஜகனாதன்,

காலம் காலமாக விஜய் இதைத்தான் சொல்றார். ஆனால் பார்க்கிறத நிறுத்த மாட்டறாங்க. என்ன செய்ய?
இப்போ விக்ரம், சூர்யாவுமுமே விஜய் ரூட்டுக்கு வருவதுதான் வேதனை. உஙக்ளைப் போன்ற அறிவாளிஅக்ளின் வேதனை யாருக்கு தெரிகிறது?

ரிஷி said...

still not back to chennai???

vanila said...

Ellarum vasanattha keppanga... sari.. oruttharu vasanattha paarthaaraam. idhu eppadi..

ஆதிமூலகிருஷ்ணன் said...

தாரணி, தராசு, அறிவன், வால்பையன் (ஹிஹி), கேபிள் (ஹிஹி), கணேஷ், ராஜேஸ்வரி, கார்க்கி (சீரியஸா, கிண்டலா? இப்பிடி ஆயிப்போச்சே உன் நிலைம.. ஹிஹி), அமித்துஅம்மா, வானம்பாடிகள், கடைக்குட்டி, ஜெட்லி, சம்பத், மிஸஸ்.தேவ் (ஹிஹி), கலையரசன், மகேஷ், பரிசல் (யோவ்..), வரதராஜுலு, கார்த்திக், பாலா, பிரபாகர், கேவிஆர், முத்துலக்ஷ்மி (இன்னும் சிரிச்சுக்கிட்டிருக்கேன்), ஸ்ரீமதி, சுசி, ஜெகன்னாதன், ரிஷி, வனிலா..

அனைவருக்கும் நன்றி.!