Wednesday, January 27, 2010

கரிகாலன் காலழகு

'கரிகாலன் காலப்போல..' பாடலுக்காக கபிலனுக்கு விகடனின் சிறந்த பாடலாசிரியர் விருது. என்ன கொடுமை இது? தலையில் அடித்துக்கொண்டேன். கரிகாலன் பாடலின் லிஸ்ட் ஃபார்மெட் என்பது பொதுவாக கவிஞர்கள் சிக்ஸர் அடிக்கிற களம். அதில் இவ்வளவு சொத்தையாக ஒரு பாடலை நான் இதுவரை கேட்டதேயில்லை. அந்தப்பாடலில் தப்பித்தவறியாவது ஒரு வரி அழகாக எழுதியிருப்பாரா கவிஞர் என உற்றுக்கேட்டதிலும் ஏமாற்றமே..

கரிகாலனின் கருத்த காலென்பது எப்பேர்ப்பட்டதொரு அரிய விஷயம். நிகரில்லா வீரத்துக்கு சொல்லத்தகுந்த உவமையல்லவா அது? அதையெப்படி ஒரு பெண்ணின் கூந்தலுடன் ஒப்பிடமுடியும்? அடுத்தவரியாக 'சேவலோட கொண்டை மாதிரி உதடு'ன்னா உடனே உதடில்ல.. மந்திரிச்ச தகடாம். 'வலம்புரிசங்கப்போல கழுத்து'ன்னா கழுத்தில்ல கழுத்தில்ல கண்ணதாசன் எழுத்தாம். கண்ணதாசன் எழுத்துக்கும் கழுத்துக்கும் என்னய்யா தொடர்பு? இன்னும் மேம்பால வளைவு போல மூக்கு, ஜல்லிக்கட்டு காளை.. என பாடல் முழுதுமே அரிய கவிதையாக மலர்ந்திருக்கிறது. கபிலன் 'புலி உறுமுது, நாய் குரைக்குது, கொசு கடிக்குது' போன்ற பாடல்களோடு தன் கலைச்சேவையை நிறுத்திக்கொள்வது நலம். இந்தப்பாடலுக்குப் பதிலாக 'ஒரு சின்னத்தாமரை'க்காவது விருது தந்திருக்கலாம்.

**********************

கடந்த சூரிய கிரகணத்தின் போது அம்மா வாசலில் நின்றுகொண்டு விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தார். என்னவென்று வெளியே சென்று பார்த்தபோது பக்கத்துவீட்டு பெண்மணி ஒரு உலக்கையை முற்றத்தில் செங்குத்தாக நிறுத்திவிட்டு என் அம்மாவிடம், "பாத்தியாக்கா.. எப்பிடி நிக்கிதுன்னு.." என்று வியந்துகொண்டிருந்தார். அவர் நிறுத்தியிருந்தது அகலமான பெரிய பூண் இருந்த மேல்பாகத்தை அடியில் வைத்து.

பொதுவாக ஒரு ஓரமாக சந்திரன் ஈஷிக்கொண்டு போவதைப் பார்த்துப் பார்த்து கிரகணம் என்றால் நான் அவ்வளவாக ஆர்வம் காண்பிப்பதில்லை. தற்செயலாக பக்கத்துவீட்டு பையன் எக்ஸ்ரே பிலிம் வழியாக பார்த்துக்கொண்டிருக்க நானும் வாங்கிப்பார்த்தேன்.. வியந்தேன்.! தங்க வளையமாக ஒரே தகத்தகாயம். இயற்கை பெரியது, அரியது.! எப்போதும் ஓலைக்கீற்றுகளைத் தாண்டி குட்டி குட்டி வட்டங்களாக விழும் சூரிய வெளிச்சம், அப்போது குட்டி குட்டி பிறைகளாக விழுந்தது பெரும் வியப்பு. போட்டோ எடுக்க மிஸ் பண்ணிவிட்டேன்.

அப்புறம் இன்னொரு செய்தி. அன்றைய தினம் டிவி செய்திகளில் ஒருவர் இனி இதுபோன்ற கிரகணம் 2019ல்தான் தெரியும் என்றார். அடுத்த சானலில் 2084ல்தான் தெரியும் என, இன்னொன்றில் 2118ல்தான் என்று கூற.. அடுத்தும் ஒன்றில் 3010ல்தான் தெரியும் என்றார்கள். என்னாங்கடா இது.?
**********************

போன தடவை மாதிரி இந்தமுறையும் டெக்னிகல் பதிவுக்கு விருது கிடைக்கும் என நப்பாசையுடன் இருந்தேன். தமிழ்மண விருதுகள் 2009ல் ஒரு நல்ல பெரிய பல்பு கிடைத்தது. இருப்பினும் பதிவு டாப் 10ல் வந்தது ஒரு குட்டி ஆறுதல். உண்மைத்தமிழன் அண்ணனும், டாக்டர் புரூனோவும் போட்டியில் எந்தமாதிரி இடுகைகளை பரிந்துரைக்க வேண்டும் என முன்னதாக பதிவுகள் இட்டிருந்தார்கள். அவர்கள் சொல்லாத இன்னொரு ஆலோசனை ஒன்றையும் கண்டுகொண்டேன். அது, உண்மைத்தமிழன், டாக்டர் புரூனோ, குசும்பன், ராமலக்ஷ்மி போன்றோர் போட்டியிடும் பிரிவுகளில் நாம் போட்டியிடாமல் இருப்பதுதான். அப்படி இருந்தாலே பாதி ஜெயித்தாமாதிரிதான். ஹிஹி..

வெற்றிபெற்ற அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.!

**********************

சின்ன வயதில் படித்தும் இன்னும் மறக்காத ஒரு ஜோக்.

25வது திருமணநாளைக் கொண்டாட மனைவியை அழைத்துக்கொண்டு ஹோட்டலுக்கு செல்கிறார் ஒரு கணவர். அமர்ந்து ஆர்டர் செய்யும்போது எடுத்தவுடனேயே மனைவியிடம், 'இன்னொரு பாதாம் ஹல்வா சாப்பிடுகிறாயா கமலா?' என்கிறார். இப்போதுதானே உள்ளே வந்து அமர்ந்திருக்கிறோம்.. அதென்ன இன்னொரு பாதாம் ஹல்வா என விழிக்கிறார் மனைவி.

'முதல் கல்யாணநாளுக்கு வந்து சாப்பிட்டமே, மறந்துட்டியா.. கமலா?'

***********************

சமீபத்தில் ஒரு எழுத்தாள நண்பருடன் ஒரு மாலையைக் கழித்தபோது நான் உடன் கொண்டு சென்றிருந்த 'மரப்பாச்சியின் சில ஆடைகள்' புத்தகத்தை கவனித்தார். அவர் முழிக்கிற முழியிலேயே நான், "ஊஹூம், பயப்பிடாதீங்க.. என் கதையெல்லாம் வரலை. தைரியமா பாருங்க" என்று சொல்லி புத்தகத்தைத் தந்தேன்.

புத்தகத்தை திருப்பிக் கொண்டிருந்தவர் வேகவேகமாக சில கதைகளை படித்துவிட்டு 'புத்தகம் வேண்டும், மீதத்தையும் படிக்கவேண்டும்' என்றார். நம் நண்பர்கள் கதைகளாயிற்றே.. 'ஆஹா.. பேஷாக தந்துவிட்டால் போகிறது' என்று கொடுத்தேன்.

படித்தவரையில் கருத்து கேட்டபோது, சென்ஷியின் 'கடவுள் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத புதியபடம்' தன்னை மிகவும் கவர்ந்ததாக சொன்னார். எடுத்துக்கொள்ளப்பட்ட விஷயம் ஆக முழுமையாக, அழகாக, புதிதாக சொல்லப்பட்டிருக்கிறது என்றார். இந்தக்கதையை எழுதியவர் ஒரு சிறந்த சிறுகதையாளராக ஜொலிக்க வாய்ப்பிருப்பதாக சொல்லி வாழ்த்தினார் அவர். 'நாங்கூட பூக்களைக்கடத்திச்செல்பவன்னு ஒரு கதை எழுதியி..' நான் முடிக்கவில்லை.. அதற்குள்ளாக, 'உங்களுக்கு ரொம்ப ஏறிடுச்சுன்னு நினைக்கிறேன். பாருங்க உளற ஆரம்பிட்டீங்க.. படுத்துக்கறீங்களா' என்றார்.

(வயிற்றெரிச்சலோடு).. வாழ்த்துகள் சென்ஷி.

************************

இதுவும் அதே சந்திப்பில் நடந்ததுதான்.

முன்னுரையை படித்த அவர், 'பதிவர்கள் உங்களுக்கெல்லாம் ரோஷமே கிடையாதா.?' என்றார். 'ஏன் கேட்கிறீங்க? அதெல்லாம் எங்களுக்கு ரொம்பவே இருக்குதே' என்றேன்.

'இல்ல, மாதவ்ராஜ்னு ஒருத்தர் உங்களையெல்லாம் குழந்தைப்பசங்கன்னு முன்னுரையில் இவ்வளவு தெளிவா நக்கல் பண்ணியிருக்காரே.. ஒண்ணும் சொல்ல மாட்டீங்களான்னு கேட்டேன்..'

'இப்பதான் புரியுது, எழுத்துலகம் ஏன் ரத்தபூமியா இருக்குதுன்னு. ஒரு மனுஷன் அழகா ஒரு உவமை சொல்லியிருக்கானேன்னு போவீங்களா? அத விட்டுட்டு.. இந்த வேலையெல்லாம் இங்க வேண்டாம், ஏன்.. அவரு கதையும்தான் இந்த புக்ல‌ வந்திருக்குது, அவரும் எங்கள்ல ஒருத்தர்தான்' என்று கோபப்பட்டேன் (நம்பாதவர்கள் சமாளித்தேன் என்று திருத்தி வாசிக்கவும்).

.

49 comments:

செந்தில் நாதன் said...

வாழ்த்துகள்...சென்ஷி என்ற குழந்தைக்கு...

Vidhoosh said...

எப்டியோ கிரகணம் தெரியும் என்கிறார்களே..:)) 2012-டை பற்றிய வதந்திகள் ஏதும் கிளப்பி விடாமல்..

===============
டாப் 10-இல் நானும் வந்தேன். நர்சிம் பரிசை தட்டிக் கொண்டு போயிட்டார்.. :)) எல்லா பிரிவுலேயும் ஒரு ஆள் நம்ல கவிழ்க்கவே புறப்பட்டு வராங்க.. ஆமா, உரையாடல் கவிதைக்கு பல்லு தேச்சு ரெடியா இருங்க. "மண்டையில் என்ன களிமண்ணா?" என்று சிவராமன் பட்டறையில் கேட்டாலும் கேட்கலாம். (அசட்டு சிரிப்பே என்றாலும் பளிச்சுன்னு இருக்க வேண்டாம். அதுக்குத்தான்.:))
===============

Vidhoosh said...

சென்ஷிக்கு வாழ்த்துக்கள்.

பாபு said...

ullen aiyyaa

♠ ராஜு ♠ said...

கபிலனைப் பற்றிய வரிகளை வன்மையாகக் கண்டிக்கிறேன்...!

இறைவனை பெண்ணின் இடைக்கு ஒப்பிட்ட இத்தமிழ் கூறும் நல்லுலகில் கரிகாலன் காலை ஒப்பிட்டால் தப்பில்லை. (ஆன்மீக வாதிகளே வடையை கவ்வுக..!)

ஒருவேளை கரிகாலன் சோழ வம்சத்தில் வந்தவன் என்பதால் இந்த லாஜிக் குமுறலா..!
(இதுக்கு பேரு கொலைவெறியுடன் குறியீடு தேடுதல்..)

துரதிர்ஷ்டமாக, மேற்கூறிய இரண்டு பாடல்களுமே பத்மஸ்ரீ First attempt.Dr.விஜய் அவர்களின் பாடல்களே..!
:-((

தராசு said...

வாங்க தல, எப்ப ஃபார்முக்கு வருவீங்க??

//ஒருவேளை கரிகாலன் சோழ வம்சத்தில் வந்தவன் என்பதால் இந்த லாஜிக் குமுறலா..!
(இதுக்கு பேரு கொலைவெறியுடன் குறியீடு தேடுதல்..)//

யப்பா, ராஜு, நல்லாருங்கப்பு

♠ ராஜு ♠ said...

\\கரிகாலனின் கருத்த காலென்பது எப்பேர்ப்பட்டதொரு அரிய விஷயம். நிகரில்லா வீரத்துக்கு சொல்லத்தகுந்த உவமையல்லவா அது? அதையெப்படி ஒரு பெண்ணின் கூந்தலுடன் ஒப்பிடமுடியும்?\\

என்னாது கரிகாலன்ற பட்டப்பேரு வீரத்துக்காக குடுத்ததா..? புதிய தகவல். நன்றி.

மாதவராஜ் said...

என்னையும், உங்களையும் மட்டும் குழந்தைகள் என்று சொல்லவில்லை. கதை எழுதுகிற எல்லோரையுமே குழந்தைகள் என்றுதான் சொல்லி இருக்கிறேன். போதுமா?

ராமலக்ஷ்மி said...

//எப்போதும் ஓலைக்கீற்றுகளைத் தாண்டி குட்டி குட்டி வட்டங்களாக விழும் சூரிய வெளிச்சம், அப்போது குட்டி குட்டி பிறைகளாக விழுந்தது பெரும் வியப்பு.//

குட்டிப் பிறைகளாய்... இது புதிது. படம் எடுத்துப் பகிர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்தான்.

---

சென்ஷிக்கும் மற்றவருக்கும் வாழ்த்துக்கள் சொல்லியிருக்கும் விதம்..:)!

---

மறக்கவே முடியாத அந்த ஜோக்கை இன்னும் ரமாவிடம் பகிர்ந்து கொள்ளவில்லையென நினைக்கிறேன்:)!

Anonymous said...

//ஒரே தகத்தகாயம்//

இது என்ன 'தகதக' வார்த்தைக்குப்பதிலா. நல்லா இருக்கே. நான் கேள்விப்பட்டதில்லை.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி செந்தில்நாதன்.!

நன்றி விதூஷ்.! (ஆமாமா.. பளிச்சுன்னுதான் இருக்கணும்// இன்னும் சிரிச்சுகிட்டிருக்கேன்)

நன்றி பாபு.! (எப்பிடியிருக்கீங்க?)

நன்றி ராஜு.! (என்னாது கரிகாலன்ற பட்டப்பேரு வீரத்துக்காக குடுத்ததா..?//
நா எப்ப அப்படிச்சொன்னேன்?)

நன்றி தராசு.! (யோவ்.. வந்ததுமே ஏம்யா மூட்அவுட் பண்றீங்க? இது ஃபார்ம்ல எழுதுன மாதிரி இல்லையா? :-()

நன்றி மாதவராஜ்.! (அது தெரியும்ண்ணே.. அதானே சமாளிச்சிட்டனே)

வானம்பாடிகள் said...

:))

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி ராமலக்ஷ்மி.! (மிஸ் பண்ணிட்டேன். நெட்ல தேடினேன், கிடைக்கலை, அதே மாதிரி கிராஃபிக்ஸ் பண்ணமுடியுதான்னு பார்க்கிறேன்)

நன்றி சின்னஅம்மிணி.! (அது பாரதிதாசனின் வார்த்தை)

andal said...

நானும் அந்த பிறை வடிவ நிழலை பார்த்து வியந்த்தேன் போட்டொ எடுக்கதான் தோன்றவில்லை

முரளிகுமார் பத்மநாபன் said...

வெல்கம் பேக், :-)

துபாய் ராஜா said...

ஆதி ரிட்டர்ன்ஸ்.... :))

அறிவன்#11802717200764379909 said...

நல்லா புலம்பி இருக்கீங்க..

அந்த எழுத்ததாள நண்பர் யாருன்னு சொல்லலாம்ல..

கார்க்கி said...

கடையை காத்தாடவிடாம கமென்ட் எல்லாம் போட்டு தமிழ்மண முகப்பில் வர வைத்ததற்கு ரொம்ப சிறப்ப்ப்ப்ப்ப்பா பதில் செஞ்சிட்டிங்க சகா ...மிக்க நன்றி. திருப்பி ஊருக்கு போவாமலா இருப்பிங்க? வச்சிக்கிரேன்

ராஜு, வாடியம்மா வாடி பாட்டு கேட்டுருகிங்களா? மறந்திருபிங்க. ராஜா படத்துல. அதையும் மறந்திருப்பிங்க. ரெட்டுக்கு அடுத்து வந்தது. அதையும் மறந்திருப்பிங்க. சிட்டிசனுக்கு அடுத்து ரெட். இந்த படமெல்லாம் முன்னாள் அல்டிமேட் ஸ்டார் நடித்தது

கார்க்கி said...

ரொம்ப நாள் அண்ணி கூடவே இருந்து வாங்கின்னிங்களா? அதான் மண்டைல கண்டா வீங்கியிருக்கு. சரியான உடனே பதிவெழுதுங்க. இல்லைன்னா தராசு சொல்ற மாதிர் கமெண்ட்ஸ் தான் அவ்ரும் :))

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி வானம்பாடிகள்.!
நன்றி ஆண்டாள்.!
நன்றி முரளிகுமார்.!
நன்றி ராஜா.!
நன்றி அறிவன்.! (ஏன்? மண்டை நிஜமாலுமே உடையுறதுக்கா)
நன்றி கார்க்கி.! (அப்பிடி என்ன செஞ்சேன்? ஹிஹி பாட்ட சொல்றியா? எங்கே மனசுல கைய வெச்சி சொல்லு.. இதுதானா பெஸ்ட்2009?)

ஸ்ரீமதி said...

:))))

நர்சிம் said...

நல்ல பதிவு.

கரிகாலன் பாட்ட மியூட் பண்ணிட்டு ஒத்தபக்க ஸ்க்ரீன மட்டுமே பாக்கணும்யா என் சிப்ப்ப்ஸ்ஸ்ஸ்..

கார்க்கி said...

அது பெஸ்ட் கிடையாது. ஆனா அந்த வரிகளோடு ரீச் தெரியுமா? அந்த பாட்டு எஃபெம்மில் சக்கை போடு போடக் காரணமே அந்த லிரிக்ஸ்தான். ஆனால் அது விருதுக்கு ஏத்தது இல்லை. அவங்க கொடுத்தா விகடன திட்டுங்க. பாட்ட நொட்டை சொல்லக் கூடாது. அது ஒரு குத்து பாட்டு. அவ்ளோதான்.

விகடன குத்துறத விட்டு நாய் கடிக்குது கொசு கடிக்கிது எல்லாம் ஏன்? யாரை திட்டனுமோ அவங்கள விட்டுடுங்க..

கபிலன் எவ்ளோ நல்ல பாட்டு எழுதிருக்காரு?

அமிர்தவர்ஷினி அம்மா said...

'நாங்கூட பூக்களைக்கடத்திச்செல்பவன்னு ஒரு கதை எழுதியி..' நான் முடிக்கவில்லை.. அதற்குள்ளாக, 'உங்களுக்கு ரொம்ப ஏறிடுச்சுன்னு நினைக்கிறேன். பாருங்க உளற ஆரம்பிட்டீங்க.. படுத்துக்கறீங்களா' என்றார்.

:)))))))))))))))))))

formkku vandhuteenga boss

பிள்ளையாண்டான் said...

ஜோக் சூப்பர்.... (நான் சொன்னது விருது மேட்டரை)..

எல்லா வருஷமும் சரிதான்.... உலகின் வெவ்வேறு பகுதிகளில் எல்லா ஆண்டும் சூரிய கிரகணம் வரும்... எனக்குத் தெரிந்தவரை, தமிழ் நாட்டில் இது போன்ற ஒரு சூரிய கிரகணம் தெரிய இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆகும் என்று நினைக்கிறேன்...

திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said...

//.. உங்களுக்கு ரொம்ப ஏறிடுச்சுன்னு நினைக்கிறேன். பாருங்க உளற ஆரம்பிட்டீங்க.. படுத்துக்கறீங்களா' ..//

சிரிப்ப நிறுத்த முடியல..

அதிஷா said...

அந்த சின்ன வயசு ஜோக்கு.. ஜோக்கானு புரியல.. புரியற மாதிரி போடுங்க..

குசும்பன் said...

என்ன கொடுமை இது? தலையில் அடித்துக்கொண்டேன். //

எனி ஹெல்ப் யூ நீட் ஆதி? பிளீஸ் கிவ் மீ எ கால்:)

குசும்பன் said...

//உண்மைத்தமிழன், டாக்டர் புரூனோ, குசும்பன், ராமலக்ஷ்மி போன்றோர் போட்டியிடும் பிரிவுகளில் நாம் போட்டியிடாமல் இருப்பதுதான். //

அண்ணே களை கொல்லின்னு ஒரு பூச்சி மருந்து இருக்கு அதை தெளிச்சா அந்த மூன்றாவதா இருக்கும் களை செத்துடும்:)

குசும்பன் said...

//உங்களுக்கெல்லாம் ரோஷமே கிடையாதா.?' என்றார். 'ஏன் கேட்கிறீங்க? அதெல்லாம் எங்களுக்கு ரொம்பவே இருக்குதே' என்றேன்//

இப்ப முதல் பத்தியில் இருக்கும் அதே டயலாக்கை இங்க சொன்னால் பொருத்தமாக இருக்கும்...அது

"உங்களுக்கு ரொம்ப ஏறிடுச்சுன்னு நினைக்கிறேன். பாருங்க உளற ஆரம்பிட்டீங்க.. படுத்துக்கறீங்களா"

குசும்பன் said...

//மாதவராஜ் said...
உங்களையும் மட்டும் குழந்தைகள் என்று சொல்லவில்லை.//

ஆதியை மட்டும் குழந்தைன்னு சொல்லியிருந்தீங்க, இரத்த ஆறு ஓடும் ஆமா:)))

ச.முத்துவேல் said...

கரிகாலன் பாட்டு நல்ல பாட்டுதான், வரிகள்தான். எப்படின்னு கேட்கறீங்களா? அடுத்து சந்திக்கும்போது பேசுவோம்.:)

நேசமித்ரன் said...

என் நண்பன் சென்ஷிக்கு வாழ்த்துக்கள்

முதல் பத்தி மனசாட்சியின் குரல்

மிக நல்ல இடுகை !!!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி ஸ்ரீமதி.!

நன்றி நர்சிம்.! (நல்லா கேக்குறாங்கையா டிவியில பாட்டு)

நன்றி கார்க்கி.! (நீ சொல்றதெல்லாம் நியாயம்தான். கேட்டுக்குறேன். ஆனால் லிரிக்ஸ்ங்கிற வார்த்தையை மட்டும் பயன்படுத்தாதே.. முடியல.. அழுதுருவேன்)

நன்றி அமித்து.! (ஒரு ஆள் இப்டிச்சொல்லுங்க, ஒருத்தர் அப்டிச்சொல்லுங்க..)

நன்றி பிள்ளையாண்டான்.! (நீங்க சைண்டிஸ்டா? ஹிஹி)

நன்றி சம்பத்.!

நன்றி அதிஷா.! (ஓய்.. ஊர்லதான் இருக்கீறா?)

நன்றி குசும்பன்.! (நீங்களா களை குசும்பன்? என் பொறாமையில் இருக்கும் முதல் நபரே நீங்கள்தான். ஆகத்தகுதியானவர் நீங்கள்)

நன்றி முத்துவேல்.!

நன்றி நேசமித்திரன்.!

குசும்பன் said...

//தமிழ்மண விருதுகள் 2009ல் ஒரு நல்ல பெரிய பல்பு கிடைத்தது. /

உங்களுக்கு விருது கிடைக்காததுக்கு நீங்க வருந்துனீங்களோ இல்லையோ நான் ரொம்ப வருந்தினேன் ஆதி! நிஜமாய்யா, சத்தியமா ரொம்ப வருந்தினேன்.ஏன்னு மட்டும் கேட்காதீர்!

.
.
.
.
.

போன முறை உங்களுக்கும் பரிசு கிடைச்சு அதை வாங்க போகும் பொழுது என் பரிசையும் வாங்கி திருப்பதி வரை சென்று கூரியர் அனுப்பி வெச்ச மகராசன், இந்தமுறையும் அப்படியே உங்க தலையில் கட்டிவிடலாம் என்று நினைச்சேன்,முடியாம போச்சே அதுக்காகதான் வருந்தினேன்:)))

அன்புடன் அருணா said...

நல்லா புலம்பியிருக்கீங்க!

அத்திரி said...

நெல்கம் பேக்... ஹிட்ஸ் அதிகமாகனும் என்ற நோக்கில் விஜய் படப்பாட்டை குறை சொலவதை வன்மையாக கண்டிக்கிறேன்

அத்திரி said...

welcome back
spelling mistake ஆகிடிச்சு முந்திய கமெண்டில்

குசும்பன் said...

ஆதி உங்கள் குறையை போக்க ஒரு மைனஸ் ஓட்டு போட்டுவிட்டேன், இப்ப நிம்மதியா?:))))

SanjaiGandhi™ said...

welcome back writer

ஆதிமூலகிருஷ்ணன் said...

4 மைனஸ் ஓட்டு வாங்கி நானும் பிராபள பதிவாயிட்டேன்.. ஹைய்ய்ய்யா..!!!

நன்றி அருணா.!
நன்றி அத்திரி.! (முழிச்சுக்கிட்டிருக்கீறா?)
நன்றி சஞ்சய்.!

அறிவிலி said...

//சின்ன வயதில் படித்தும் இன்னும் மறக்காத ஒரு ஜோக்//

25 ஆவது திருமண நாளுக்கு வாழ்த்துகள் ஆதி.

(ஜோக்காம்.... ஜோக்கு!!!புரியற மாதிரி இல்லன்னா இப்பிடித்தான்)

♠ ராஜு ♠ said...

ஆலுவலகத்தில் உங்களை பிரபல பதிவர் ஆக்க முடியவில்லை.ஆதலால், வீட்டிற்கு வந்து இப்போதுதான் உங்களை பிரபலபதிவராக்கினேன்.
:-)

♠ ராஜு ♠ said...

முந்தய பின்னூட்டத்தில் பிரபலபதிவர் என்பதை ஆதியின் பார்ர்வையிலேயே
பிராபள பதிவர் என திருத்திப் படிக்கவும்.

நன்றி சுகுணாதிவாகர் மற்றும் குசும்பன்.

Karthik said...

அத்தனை ரைட்டர்ஸுக்கும் வாழ்த்துக்கள்!! :)

//♠ ராஜு ♠ said...
பத்மஸ்ரீ First attempt.Dr.விஜய்

ROFL..:D

தாரணி பிரியா said...

வாங்க வாங்க‌

KKPSK said...

அப்பாடி! இப்பவாது வந்தீங்களே!

தமிழ்ப்பறவை said...

சுவாரஸ்யப் பகிர்வு ஆதி... ரசித்தேன்...

சென்ஷி said...

நன்றி ஆதி.... மிகவும் மகிழ்வாய் உணர்கிறேன். வாழ்த்துக்கள் அனைத்தும் மாதவராஜ் அவர்களையே சார்ந்தது..