Tuesday, February 2, 2010

தமிழ்ப்படம், கோவா, ஆயிரத்தில் ஒருவன் : விமர்சனங்கள்

தமிழ்ப்படம்

எதிர்பார்ப்புகளை வீணடிக்காத படம். தமிழ் சினிமாவின் கிளிஷேக்கள் அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபி. கொஞ்சத்தைத் தொட்டிருக்கிறார்கள். இந்த வகையில் தமிழில் இது முதல் படம் என்பதால் கடந்த 30 வருட சினிமாக்களில் அங்கேயும் இங்கேயுமாய் அல்லாடியிருக்கிறார்கள். ஏதாவது 5 அல்லது 10 வருடத்தை மட்டும் குறிவைத்திருந்தால் இன்னும் கொஞ்சம் களைகட்டியிருக்கும். ஸ்பூஃப்தானே என்று அலட்சியம் காட்டாமல் முடிந்த வரை சின்சியராக பண்ணியிருக்கிறார்கள்.

ரஜினி, கமல், விஜய் என சகட்டுமேனிக்கு கிண்டல் பண்ணியிருந்தாலும் கொஞ்சம் அளவோடுதான் பண்ணியிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. வசதியான பேனர் என்பதால் இன்னும் கொஞ்சம் சீண்டியிருக்கலாம். என்னை மிகக்கவர்ந்த காட்சிகளில் ஒன்று, பாட்ஷா ரகுவரன் 'அங்கே பார்..' என்று நம் ரஜினியை கலாய்க்க, நம்மவர் 'இங்கே பார்..' என்று இந்தப்பக்கம் காட்டும் போது காட்சி வரும்முன்னரே ஆவல் எகிறுகிற‌து. அட்டகாசம் பண்ணியிருக்கிறார்கள், ரகுவரன் கோஷ்டி தலைதெறிக்க ஓடுவது கலக்கல். மனதை லேசாக்கும் இதுபோன்ற படங்கள் தொடர்ந்து வரவேண்டும் என்பது நம் ஆசை.

************

கோவா

சகலகலாவல்லவன் துவக்கப்பாடலுடன் (சாயல் என்ன சாயல்.. அப்படியே) படம் துவங்கி அப்படியே 80களின் கிராமத்து சினிமா போலவே கொஞ்ச நேரம் பயணிக்கிறது. படத்தின் டோன் கூட அப்படியே.. ஹீரோக்கள் குழு கோவாவுக்கு ஒரு உயர்ந்த லட்சியத்துடன் எஸ்கேப் ஆனவுடன் அப்படியே படத்தின் டோன் ரிச்சாக மாறுவதை உறுத்தாமல் உணரமுடிகிறது. கிளாமர் பெண்களை சமயங்களில் நிஜத்தில் பார்க்க நேரும் போது கண்குளிர சைட் அடிக்கலாம் என்றால் இந்த வெட்கம் வந்து பிடுங்கித்தொலைக்கிறது. அது போன்ற பையன்கள் சினிமாதான் என்பதால் வெட்கத்தை ஓரம் வைத்துவிட்டு கொஞ்சம் ஜொள் விட்டுக்கொள்ளலாம். கோவாவின் இயற்கை அழகுடன் இளமை அழகையும் தாராளமாக படம் பிடித்துத் தந்திருக்கிறார்கள்.

சில பல லாஜிக்குகளை மறந்துவிட்டு பார்த்தால் படத்தில் இரண்டு மூன்று காதல்கள், அவை ஒட்டிய அழகிய காதல் காட்சிகள் வருகின்றன. குறிப்பிடத்தகுந்தது பிரேம்ஜியின் பகுதி. ஆனால் காமெடி பண்ணுகிறேன் பேர்வழி என்று காதல் காட்சிகளின் அழுத்தத்தைக் தேவையேயில்லாமல் குறைத்திருக்கிறார்கள். இதுபோன்ற கதையை கிளைமாக்ஸில் சுவாரசியமாக முடித்து வைப்பது சிரமம்தான். ஏதேதோ ஷோ காண்பித்து சிரமப்பட்டு முடித்துவைக்கிறார்கள்.

படத்தின் குறிப்பிடவேண்டிய இன்னொரு விஷயம் ஆகாஷ், சம்பத் இடையிலான ஓரினக்காதல்.. சர்ப்ரைஸ், ஒரு முழு பாடல் கூட இருக்கிறது. தமிழில் இதைப்பேசும் முதல் படமாக இது இருக்கலாம். பயந்துகொண்டே அதையும் அழகாகச்சொல்லாமல் காமெடி கலக்கிறேன் பேர்வழி என்று அழுத்தத்தைக் குறைத்துவைக்கிறார் இயக்குனர். இது போன்ற ஜோடியில் இருவரில் ஒருவர் பெண் பாகத்தை ஏற்பவராக இருப்பர். அதை ஏற்றிருப்பவர்.. நம்புங்கள் ஆகாஷ் அல்ல, சம்பத். சம்பத்தை ஒரு வில்லனாக, கரடுமுரடான பாத்திரங்களிலேயே இதுவரை கண்டிருக்கிறோம். அவரது தோற்றமும் அவ்வாறானதே. ஆனால் ஒரு நல்ல நடிகன் எவ்வாறான பாத்திரத்திலும் ஜொலிப்பான் என்பதற்கான உதாரணமாய் வியக்கவைத்திருக்கிறார் சம்பத்.

தலையெழுத்து.. நம் ஹீரோக்கள்தான் மொக்கையாக இருக்கிறார்கள். குறைந்த பட்சம் சம்பத், கிஷோர் (வெண்ணிலா கபடிக்குழு) போன்ற தேர்ந்த குணச்சித்திர நடிகர்களாவது நமக்கு வாய்த்திருக்கிறார்களே என நாம் மகிழலாம்.

***************

ஆயிரத்தில் ஒருவன்

நான் கடவுள், உ.போ.ஒருவன் படங்களுக்குப்பிறகு ஏராளமான வலைப்பூ விமர்சனங்களை பெற்ற படமாக ஆயிரத்தில் ஒருவன் இருக்கலாம் என நண்பர்கள் கூறினார்கள் (ஹிஹி.. கொஞ்ச நாளாக ஊரிலில்லை). நம் கருத்தையும் சொல்லிவைப்போம் என (ஹிஹி.. என் பிரத்யேக வாச‌கர்கள் எதிர்பார்த்துத் தொலைத்திருந்தால் என்ன செய்ய என்பதற்காக) எழுதுகிறேன்.

நூற்றுக்கணக்கான டெக்னீஷியன்கள், கலைஞர்களின் அரிய உழைப்பு படம் நெடுக தெரிவதால் குறை சொல்லவே மனம் வரமாட்டேன்கிறது. ஆனாலும் என்ன பண்ண? அழகான ஒரு ஃபேன்டஸி கதை. அதை எவ்வளவு மகா மொக்கையாக சொல்லமுடியுமோ அப்படிச்சொல்லி வெறுப்பேற்றியிருக்கிறார் செல்வராகவன். படத்தின் மிகப்பெரிய மைனஸ் செல்வராகவன். இவ்வளவுக்கும் அவர் எனக்குப் பிடித்தமான இயக்குனர்தான். அவரது புதுப்பேட்டை எனது ஃபேவரிட்.

செல்வராகவனுக்கே தெரியாத சாதா, பெஸல்சாதா பின்நவீனக்கூறுகள் படத்தில் இருக்கிறதா, இல்லையா என்பதெல்லாம் நமக்குத் தேவையில்லாத விஷயம். ஆனால் ஒரு படைப்பின் தரமே அதில் உருவாக்கப்பட்டுள்ள காரெக்டர்கள் தங்கள் குணம், சூழல், உணர்வு சார்ந்து தங்களை எப்படி வெளிப்படுத்திக்கொள்கிறார்கள் என்பதில்தான் இருக்கிறது. இவ்வளவு ஆக மொக்கையான காரெக்டர்களை செல்வராகவன் படத்தில் எதிர்பார்க்கவில்லை, மேலும் அந்தக் காரெக்டர்களைச் செய்த நடிகர்களின் பங்கு அதைவிடவும் கொடுமை.

பார்த்திபன் காரெக்டரிலிருந்து வெளியே துருத்திக்கொண்டிருக்கிறார். பின்னணியில் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் மட்டும் இல்லாவிட்டால் அழகம்பெருமாள் நைட் வாட்ச்மேன் மாதிரி இருப்பார் என நினைக்கிறேன். இந்த அழகில் அவர் ஆர்மி ஆஃபீசராம், அவருக்கு கோபம் வேறு வருகிறது. ரீமாவின் லாராகிராஃப்ட் காட்சிகளைப் பார்த்தால் கடுப்பாக இருக்கிறது. கார்த்தி ஓகே ரகம். நேரத்துக்கு ஒரு நிறத்தில் வருகிறார். அவர் அழுக்காக இருக்கிறார் என்று இயக்குனர் சொல்கிறாரா அல்லது அவர் நிறம் கறுப்பு என்று சொல்கிறாரா தெரியவில்லை. ஆனானப்பட்ட கமல்ஹாஸனே கறுப்பு மேக்கப்பில் பல்பு வாங்கியவர்.

தவிர, சப்பையான காட்சியமைப்புகள் பல படம் நெடுக.. பட்டியலிட்டால் இந்த இடுகை பத்தாது. இரண்டுபுறமும் ஆயிரக்கணக்கான வீரர்களைக்கொண்டு மோதவிட்டு ஆங்கிலப்படங்களைப் போல காட்சிப்படுத்த ஆசைதான். ஆனால் அது நம்மால் முடியுமா? நூற்றுக்கணக்கான ஆட்களைத்தான் பயன்படுத்தமுடியும், நமது ஆக்ஷன் கொரியோகிராஃபரின் லட்சணமும் நமக்குத்தெரியும். நம் பட்ஜெட் அப்படி. பிறகேன் அந்த முயற்சி? முடியவில்லை என்றால் விட்டுவிடவேண்டும். ஆங்கிலப்படங்கள் உசத்தி என்று நான் சொல்லவரவில்லை. ஆனை ஆனைதான். புலி புலிதான். புலி ஆனையாக ஆசைப்பட்டால் இப்படித்தான் இருக்கும். பர்ஃபெக்ஷன் ரொம்ப முக்கியம், நாங்கள் என்ன அதை பாபுசிவன் படத்திலேயா எதிர்பார்க்கிறோம்?

என்னவாயினும் வித்தியாசமான கதைக்களங்களுக்கான உதாரணமாக படம் இருப்பதால் செல்வராகவனுக்கு நம் நன்றிகளும், வாழ்த்துகளும்.!

.

35 comments:

sriram said...

மீ தெ ஃபர்ஸ்ட்டேய்ய்ய்ய்...
நெக்ஸ்ட் மீட் பண்றேன்

sriram said...

தமிழ்ப் படம் & கோவா - பாக்கலாமுங்கறீங்க?? பாத்துட வேண்டியது தான்

ஆ.ஒ - சொல்றதுக்கு ஒண்ணுமில்ல

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

வானம்பாடிகள் said...

:) வந்தாச்சா.

அப்பாவி முரு said...

:) வந்தாச்சா

:) வந்தாச்சா

:) வந்தாச்சா...

kuruvi said...

// ஓரினக்காதல்.. சர்ப்ரைஸ், தமிழில் இதைப்பேசும் முதல் படமாக இது இருக்கலாம்.//

ஏங்க அப்போ வேட்டையாடு விளையாடு தமிழ்ப்படம் இல்லீங்களா?

சங்கர் said...

//வசதியான பேனர் என்பதால் இன்னும் கொஞ்சம் சீண்டியிருக்கலாம்//

அதே அதே

Anonymous said...

ஆயிரத்தில் ஒருவனை விமரிசிச்சிட்டீங்களா. ஒத்துக்கறோம். நீங்களும் பதிவர்தான் :)

ஜெட்லி said...

//இதுபோன்ற கதையை கிளைமாக்ஸில் சுவாரசியமாக முடித்து வைப்பது சிரமம்தான். ஏதேதோ ஷோ காண்பித்து சிரமப்பட்டு முடித்துவைக்கிறார்கள்.


//

கடைசில அந்த ஷோ மட்டும் இருந்ததால்
கொஞ்சம் தலைவலியோடு தப்பித்தேன்...

அறிவிலி said...

வந்தாச்சா :).

பி.கு. விமர்சனப் பதிவுகள் படிப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன்.

Cable Sankar said...

ரைட்டு.. ஒரு வழியா டிக்கெட் விழலை..?

கார்க்கி said...

இவ்ளோ படம் பார்த்திங்களா?

சகா, அந்த பாபுசிவன் மேட்டர். அதை சொன்னால்தான் கத்துகிறார்கள். வேட்டைக்காரனில் லாஜிக் பார்த்திங்களா? ஏன் இதுல பார்க்குறன்னு கேட்கறாங்க,,, என்ன சொல்ல?

☀நான் ஆதவன்☀ said...

:)))

தராசு said...

என்னது காந்திய சுட்டுட்டாங்களா???

Sangkavi said...

நல்ல விமர்ச்சனம்...

பரிசல்காரன் said...

தமிழ்ப்படம் பாருங்கன்னு சொன்னோம். அதுக்காக எல்லா தமிழ்ப்படத்தையும் பார்த்துட்டீங்க போல!சரி... ஆயிரத்தில் ஒருவனை செல்வாவே மறந்துட்டாருப்பா.. விட மாட்டீங்களா?

நர்சிம் said...

வந்தாச்சுப் போல..போயாச்சுப் போல..

Karthik said...

வாங்க வாங்க..:)

வெள்ளிநிலா said...

கடந்த பதினாறு நாட்கள் பதிவுகளை உடனே பார்க்க துவங்கிவிடாதீர்கள் ( ஓய்வில் இருக்கும் பொது அவதானித்த பல இலக்கிய(?!) கட்டுரைகளுக்காக வெய்டிங் , நம்ம இலக்கிய சண்டைகள் பயங்கரமாக இருந்த நாட்கள் அது....

செந்தில் நாதன் said...

வந்துட்டாருப்பா....வந்துட்டாரு...

1001 பற்றிய 1001-வது விமர்சனம்...யாராவது இனி இந்த படத்துக்கு விமர்சனம் எழுத கூடாதுன்னு பதிவுலக சட்டம் கொண்டு வாங்கப்பா..

எம்.எம்.அப்துல்லா said...

ஹிஹி.. கொஞ்ச நாளாக ஊரிலில்லை). நம் கருத்தையும் சொல்லிவைப்போம் என

//

இதுக்கு நீரு ரொம்ப நாளு ஊருல இருந்திருக்கலாம் :)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

ஆயிரத்தில் ஒருவன் பற்றியது நேர்மையான விமர்சனம்..

எப்படி ஆதி..?

மோகன் குமார் said...

கோவாவுக்கு பெரும்பாலும் எதிர் மறையான விமர்சனங்கள்; இதனால் பார்க்கும் விருப்பம் போய்டுச்சு. ஆயிரத்தில் ஒருவன் பத்தி நீங்க சொன்னது சரியே

அமிர்தவர்ஷினி அம்மா said...

:) விமர்சனம்னாலே பயந்து வருது பாஸ்

guna said...

கமென்ட் சூப்பர் சார் காமெடி பண்ணிடிங்க போங்க.

guna said...

கமென்ட் சூப்பர் சார் காமெடி பண்ணிடிங்க போங்க.

hari said...

நரிய பாத்து நாய் சூடு போட்டுக்கன கதையா இருக்கு ஆயிரத்தில் ஒருவன்

ஜீவன் said...

// மனதை லேசாக்கும் இதுபோன்ற படங்கள் தொடர்ந்து வரவேண்டும் என்பது நம் ஆசை.//


அதே...!

சுகன் said...

செல்வராகவனுக்கே தெரியாத சாதா, பெஸல்சாதா பின்நவீனக்கூறுகள் படத்தில் இருக்கிறதா, இல்லையா என்பதெல்லாம் நமக்குத் தேவையில்லாத விஷயம். ஆனால் ஒரு படைப்பின் தரமே அதில் உருவாக்கப்பட்டுள்ள காரெக்டர்கள் தங்கள் குணம், சூழல், உணர்வு சார்ந்து தங்களை எப்படி வெளிப்படுத்திக்கொள்கிறார்கள் என்பதில்தான் இருக்கிறது. இவ்வளவு ஆக காரெக்டர்களை செல்வராகவன் படத்தில் எதிர்பார்க்கவில்லை, மேலும் அந்தக் காரெக்டர்களைச் செய்த நடிகர்களின் பங்கு அதைவிடவும் கொடுமை.நண்பரே, மொக்கையான என்றால் என்ன?

இதன் தமிழ் விளக்கம் என்ன?

ஒரு படைப்பின் தரமே அதில் உருவாக்கப்பட்டுள்ள காரெக்டர்கள் தங்கள் குணம், சூழல், உணர்வு சார்ந்து தங்களை எப்படி வெளிப்படுத்திக்கொள்கிறார்கள் என்பதில்தான் இருக்கிறது.

நண்பரே, இவையனைத்தும் தாங்களுக்கு தெரியுமா?

தெரிந்தால் செல்வராகவன் அவர்களுக்கு சொல்லித் தாருங்கள்.

செல்வேந்திரன் said...

பாபு சிவன் // அட்டகாசம்

சுகன் said...

செல்வராகவனுக்கே தெரியாத சாதா, பெஸல்சாதா பின்நவீனக்கூறுகள் படத்தில் இருக்கிறதா, இல்லையா என்பதெல்லாம் நமக்குத் தேவையில்லாத விஷயம். ஆனால் ஒரு படைப்பின் தரமே அதில் உருவாக்கப்பட்டுள்ள காரெக்டர்கள் தங்கள் குணம், சூழல், உணர்வு சார்ந்து தங்களை எப்படி வெளிப்படுத்திக்கொள்கிறார்கள் என்பதில்தான் இருக்கிறது. இவ்வளவு ஆக காரெக்டர்களை செல்வராகவன் படத்தில் எதிர்பார்க்கவில்லை, மேலும் அந்தக் காரெக்டர்களைச் செய்த நடிகர்களின் பங்கு அதைவிடவும் கொடுமை.

நண்பரே, மொக்கையான என்றால் என்ன?
இதன் தமிழ் விளக்கம் என்ன?

ஒரு படைப்பின் தரமே அதில் உருவாக்கப்பட்டுள்ள காரெக்டர்கள் தங்கள் குணம், சூழல், உணர்வு சார்ந்து தங்களை எப்படி வெளிப்படுத்திக்கொள்கிறார்கள் என்பதில்தான் இருக்கிறது.
நண்பரே, இவையனைத்தும் தாங்களுக்கு தெரியுமா?
தெரிந்தால் செல்வராகவன் அவர்களுக்கு சொல்லித் தாருங்கள்.

சுகன் said...

வணக்கம், உண்மை தமிழன் அவர்களே!
தாங்களுக்கு உண்மை தமிழ் தெரியுமா? எனக்கு தெரியாது. தெரிந்திருதால் கற்றுத்தாருங்களேன்.


Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

ஆயிரத்தில் ஒருவன் பற்றியது நேர்மையான விமர்சனம்..

எப்படி ஆதி..?

February 2, 2010 12:02 PM

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி ஸ்ரீராம்.!

நன்றி வானம்பாடிகள்.! (ஆச்சு)

நன்றி முரு.! (ஆச்சு, ஆச்சு..)

நன்றி குருவி.! (இதை ஒப்பிடுகையில் அதில் வெளிப்படையாகக்கூட சொல்லப்படவில்லை என்றே எண்ணுகிறேன்)

நன்றி சங்கர்.!

நன்றி அம்மிணி.!

நன்றி ஜெட்லி.!

நன்றி அறிவிலி.! (நல்ல முடிவு)

நன்றி கேபிள்.! (அது விக்கெட்டுய்யா, டிக்கெட் இல்லை. எந்த நேரமும் சினிமா, தியேட்டர், டிக்கென்னுகிட்டு..)

நன்றி கார்க்கி.! (என்னத்த சொல்ல?)

நன்றி ஆதவன்.!

நன்றி தராசு.! (காலை வாருவதை நிப்பாட்டிவிட்டு அடுத்த பதிவுக்காவது பாராட்டி வைக்கவும். நீங்கள் பாராட்டி ரொம்ப நாள் ஆவுது)

நன்றி சங்கவி.!

நன்றி பரிசல்.!

நன்றி நர்சிம்.!

நன்றி கார்த்திக்.!

நன்றி வெள்ளிநிலா.!

நன்றி நாதன்.!

நன்றி அப்துல்லா.! (விளங்குச்சு.. போ)

நன்றி உண்மைத்தமிழன்.! (அண்ணே சந்தேகமாவே இருக்குதே, பாராட்டத்தானே செய்யுறீங்க..)

நன்றி மோகன்.!

நன்றி அமித்து.!

நன்றி குணா.!

நன்றி ஹரி.!

நன்றி ஜீவன்.!

நன்றி செல்வா.!

நன்றி சுகன்.! (பதில் 1 : நீங்கள் பதிவுலகிற்கு புதியவராக இருக்கலாம் என எண்ணுகிறேன். தொடர்ந்து என் பதிவுகளைப் படித்துவந்தால் நீங்கள் என்னவாக ஆவீர்களோ அந்தப் பரவச நிலைக்கு பேர்தான் அது.
பதில் 2 : நிஜமாகவே செல்வராகவன் என் நண்பரின் நண்பரென்பதால் நீங்கள் சொல்வதை நிஜமாக்கி செல்வாவுக்கு கிளாஸ் எடுக்கலாம் என்றும் எண்ணுகிறேன்)

தாரணி பிரியா said...

இத்தனை படம் பார்த்திங்களா :)

RR said...

//(ஹிஹி.. என் பிரத்யேக வாச‌கர்கள் எதிர்பார்த்துத் தொலைத்திருந்தால் என்ன செய்ய என்பதற்காக)//
:-)

அமுதா கிருஷ்ணா said...

கோவா படம் கோவாவில் எடுக்கவில்லையாம்,,மலேஷியாவின் லங்காவியில் எடுக்கப்பட்டதாம்...நல்லாயிருக்கு விமர்சனங்கள்...