Thursday, February 4, 2010

பெண்ணியம் : துளி பார்வை

அவனுக்கு பக்தனாக இருக்க எனக்குத் தகுதி இருக்கிறதோ இல்லையோ தெரியாது, ஆனால் நான் அவனது பக்தன். அவன் ஒரு லெஜன்ட். நிஜமான புரட்சி வீரன். ஆழ அகலமான வளமான சிந்தனாவாதி. தத்துவ மேதை. பிற தத்துவ ஞானிகளைப் போல சிந்தனையைச் சொன்னதோடு நில்லாமல் முடிந்தவரை வாழ்ந்தும் காட்டிய பகுத்தறிவுப் பகலவன்.

அவனை ஒட்டி திரு. ஓவியா சொன்ன ஒரு கருத்தை நண்பர் தங்கவேல் மாணிக்கம் இந்தக் குறும்பதிவில் சொல்கிறார். அற்புதமானது அது. இவரது பிற பதிவுகளை இன்னும் படிக்கவில்லை. ஆனாலும் ஒரு சோறு பதம்தானே. இந்த நேரத்தில் வலைச்சர வாய்ப்பை வழங்கிய திரு. சீனா அவர்களுக்கு உளப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஏனெனில் கிடைக்கும் குறைந்த நேரத்திலும் நாம் நினைக்கும் டாப்பிக்கில் பதிவுகளைத் தேடும் பணியில் ஒன்றின் பின் ஒன்றாக சுட்டிகளின் மூலமாக பயணிக்கும் அனுபவம் புதிது. வழியெங்கும் வித விதமான பதிவுகள். அதில் பல முத்துக்கள்.

புதிய‌ க‌லாச்சார‌ம் இத‌ழில் வெளியான‌ ஒரு க‌ட்டுரை 'வின‌வு' வ‌லைப்பூவில் அனும‌தியுட‌ன் வெளியிட‌ப்ப‌ட்டுள்ள‌து. ஆரோக்கிய‌மான‌ சிந்தனை, அதே நேர‌ம் அது வ‌ள‌மான‌ மொழிநடையில் சொல்ல‌ப்ப‌ட வேண்டும். எப்படி உன் எழுத்துக்கள் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறாய்? என்று கேட்டால் இப்ப‌டித்தான் என்பேன். ஆணாதிக்கம் எங்கே துவங்குகிறது, அறியாமலே அதில் இருபாலரும் உழன்றது எவ்வாறு என்பது குறித்த‌ ஒரு சிறு பார்வை.‌ என்னை சமீபத்தில் மிக‌வும் க‌வ‌ர்ந்த‌ ஒரு க‌ட்டுரை இது. இது குறித்து மூத்த பதிவர் சேவிய‌ரின் அழ‌கான‌ ந‌டையில் லைட்டான‌, ஆனால் சிந்த‌னைக்குரிய‌ ப‌திவு ஒன்றையும் காணுங்க‌ள்.

பெண்விடுதலை குறித்து எழுதியிருக்கிறாரா என‌ தெரிய‌வில்லை, எனினும் வேறு சில பிரமாதமான விஷ‌ய‌ங்க‌ள் TBCD யின் ப‌திவுக‌ளில் அழ‌கான‌ ந‌டையில் க‌ண்டேன். கவிஞர் கலி. பூங்குன்றன் எழுதிய மேலும் ஒரு ம‌திப்புக்குரிய‌ க‌ட்டுரையை த‌மிழ் ஓவியாவின் இந்த‌ப்பக்க‌த்தில் காண‌லாம்.

இன்னும் பல அற்புதமான பதிவுகளை இந்தத் தேடல் நீட்சியில் தொடர்ந்து நான் காண்கிறேன். அதில் தோழி புதியமாதவி எழுதிய 'ஊடகங்களும் ஊடறு பெண்களும்' என்ற பதிவும் முக்கிய இடத்தை பெறவேண்டிய பதிவாகும். இந்தப்பதிவு உண்மையில் கவிதையில் ஆரம்பித்து கட்டுரையாகி.. முடியாமல் நிற்கிறது. இதில் பல வழக்குகள் குறித்த செய்திகளும் இருக்கின்றன. இவரது பல பதிவுகளும் ஆழமான கருத்துகளைக் கொண்டுள்ளன. பெண்ணினத்துக்கு இழைக்கப்படும் இன்னொரு அதிர்ச்சிகர விஷயத்தைப்பற்றி தோழர் மாதவராஜின் இந்த இணைப்புக்கும் தொடர்ந்து அதில் தரப்பட்டுள்ள‌ இணைப்புக்கும் செல்லுங்கள். இவரின் பிற நல்ல பதிவுகளையும் வாசியுங்கள்.

இவர்கள் அனைவரையும் என் பதிவில் அறிமுகம் செய்வது நான் பெருமை கொள்வதற்காகத்தான் என்பதை அறிவீர்கள்.

மேலும் தேடிய‌றிவோம் அறிவுச்செல்வ‌த்தை.! பெண்க‌ளுக்கான‌ ச‌ம‌ உரிமையும், சுத‌ந்திர‌மும் பெரிய‌ ம‌ன‌தோடு ஆண்க‌ள் வ‌ழ‌ங்குவ‌து என்றோ, அவ‌ர்க‌ள் போராடிப்பெற‌வேண்டிய‌து என்றோ அல்லாம‌ல் கால‌ங்கால‌மாய் அதைச்செய்த‌ ஆண்க‌ள் ம‌ற்றும் அதை ஒப்புக்கொண்ட‌ பெண்க‌ள் இருவ‌ர‌து த‌வ‌றேயென‌ அறிந்து அன்பும் ஒழுக்க‌மும் ஆன‌ அற‌வாழ்வை, ச‌ம‌வாழ்வை வாழ்வோம்.. (ஹைய்ய்ய்யா.. ரொம்ப‌ நாள் க‌ழிச்சு ஒரு அறிவுரை சொல்லிட்டீனே..‌‌) வாழ்த்துக‌ள்.. நாளைக்குச்ச‌ந்திப்போமா?


டிஸ்கி: நேரமின்மையால் டிஸம்பர்'08 ல் வலைச்சரத்தில் எழுதிய ஒரு அறிமுகத்தொகுப்பை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

.

22 comments:

ஆதிமூலகிருஷ்ணன் said...

Test Pinnootam.! :-))

கோவி.கண்ணன் said...

மீ த 2nd !

சிட்டுக்குருவி said...

nenu 3rd.........!

எம்.எம்.அப்துல்லா said...

:)

SanjaiGandhi™ said...

பின்னூட்டம் போட்டுட்டேன்

வெண்பூ said...

போட்டாச்சி.. போட்டாச்சி...

பரிசல்காரன் said...

முதலில் இதைப் படித்திருக்கின்றேனாவென நினைவிலில்லை. உங்கள் எழுத்து பிம்பத்தை வைத்துப் பார்க்கும்போது இந்த மொழி வித்தியாசமானதாக - கவர்வதாய் இருக்கிறது ஆதி.

பரிசல்காரன் said...

தொடருங்கள்!

முரளிகுமார் பத்மநாபன் said...

நானும் போட்டாச்சு :-)

வெயிலான் said...

:)

வெயிலான் said...

:)

வெயிலான் said...

:)

ஆதிமூலகிருஷ்ணன் said...

கருத்துச்செறிவான பின்னூட்டங்களால் மகிழ்ச்சி.! ஹிஹி.. யாராவது ஏன் நன்றி சொல்லலைன்னு கேட்டா.. பிச்சு பிச்சு.!

திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said...

:-))))

Vijayashankar said...

:-)

Vijayashankar said...

:-)

மின்னுது மின்னல் said...

.

குசும்பன் said...

:-))))

குசும்பன் said...

ஆதிமூலகிருஷ்ணன் said...
Test Pinnootam.! :-))
//

:)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

cheena (சீனா) said...

இவ்ளோ பேர் போட்டாங்களே அப்புறம் என்னா

தராசு said...

பதிவு அருமை.

நல்லாருக்கேன்னு படிச்சுட்டே கீழே வந்தால், அந்த டிஸ்கி, ஹூம்.

அன்புடன் அருணா said...

/கருத்துச்செறிவான பின்னூட்டங்களால் மகிழ்ச்சி.! ஹிஹி.. யாராவது ஏன் நன்றி சொல்லலைன்னு கேட்டா.. பிச்சு பிச்சு.!/
:))))))))))))))))))))))))))))))!