Monday, February 8, 2010

தங்கமணி அப்டேட்ஸ்

சமீபத்தில் குடும்பத்தோடு ஒரு ரிஸப்ஷனுக்குப் போயிருந்தோம். பஃபே சிஸ்டத்தில் ஜிலேபி, வெஜ் பிரியாணி, சப்பாத்தி குருமா, தயிர்சாதம், சைட் டிஷ்ஷஸ் என அத்தனை ஐட்டமும் அவ்வளவு டேஸ்டியாக இருந்தது. நல்ல சாப்பாடுங்கிறது அரிதிலும் அரிதான எங்கள் குடும்பமே (அம்மா, தங்கை, ரமா, மைத்துனி எல்லோருமே சமையலில் அவ்வளவு அழகு) ஏதோ காணாததை கண்டது போல சாப்பிட்டுக் கொண்டிருந்தது. பிரியாணியில் இருந்து அடுத்த ஐட்டத்துக்குப் போகாமல் அதையே மாறி மாறி எடுத்துப்போட்டுக்கொண்டு இருந்தனர். 'மானத்த வாங்காதீங்கடி சீக்கிரம் சாப்பிட்டு முடிங்க'ன்னு நான் சொன்னபோது தங்கை நைஸாக 'பார்சல் கேட்டா தருவாங்களாடா?'னு கேட்டப்போ ஏதோ விளையாட்டுக்குதான் கேட்கிறான்னு நினைத்துக்கொண்டு 'அப்படித்தாண்டி பண்ணனும், நைட்டுக்கு உங்க சாப்பாட்ட சாப்பிடுறதுக்கு இவனுங்ககிட்டயே பார்சல் வாங்கிட்டுப்போகலாம்' என்றேன்.

ரமா பக்கத்தில் வந்து காதைக்கடித்த பின்னர்தான் புரிந்தது, இவங்க நிஜமாகவே பார்சலுக்குப் பிளான் போடுவது. 'அடிப்பாவிகளா.. வாயிக்கு ருசியா ஒரு தயிர் சாதம் பண்ணத் துப்பில்லாம இப்படி பண்றீங்களே.. இதென்ன ஹோட்டலா? வீட்டுக்கு வாங்க உங்கள வச்சிக்கிறேன்'னு அடுத்தாளுக்குத் தெரியாம விழுந்து பிடுங்கிய பிறகுதான் ஒழுக்கமா சாப்பிட்டுவிட்டு எழுந்தார்கள்.

*************

சமீபத்தில் ஒரு நண்பர் அவரது தங்கமணியோடு வீட்டுக்கு விருந்துக்கு வந்திருந்தார். சாப்பிட்டு முடிந்து ரிலாக்ஸ்டாக பேசிக்கொண்டிருந்தோம். ரொம்ப ஆதங்கத்தோடு பேசினார்.

"அந்தக்காலத்துல எங்கம்மா மீன் குழம்பு வைச்சாங்கன்னா தெருவே மணக்கும். யேய்ய்.. என்னப்பா ஊட்ல விசேஷமான்னு ரெண்டு பேரு விசாரிச்சுட்டுப்போவாங்க. இப்பல்லாம் எங்க.. இவள் வைக்கிற குழம்பு, சட்டிக்குள்ள மண்டைய விட்டு மோந்து பாத்தாலும் வாசத்தை காணோம்.."

ரமாவும், அவர் தங்கமணியும் பக்கத்தில் வந்து அதற்கு மாற்றுக்கருத்து சொல்லத்தயாராக இவர் அவர்களை நோக்கி, "நாஞ்சொல்றது சரிதானே நீங்களே சொல்லுங்க.. அந்தக்காலத்துல உங்க பாட்டி எப்படி சமைச்சாங்க? தெருவே மணத்துதா இல்லையா?"

"ஆமா.."

"உங்க அம்மா எப்படி சமைச்சாங்க? வீடே மணத்துதா இல்லையா?"

"ஆமா.."

"அப்ப இப்ப மட்டும் ஏன் இப்படி? அப்படி என்னதான் பிரச்சினை உங்களுக்கு?"

சீரியஸாகவே ரமா பதில் சொன்னார், "நாங்களும் சீரியஸாகத்தான் பண்றோம். மணக்க மாட்டேங்குதுன்னா நாங்க என்ன பண்றது.. மீன்லதான் ஏதோ பிரச்சினைன்னு நினைக்குறேன்.."

நண்பர் பேஸ்த்தடித்துப்போய் என்னைப்பார்க்க நானும் சொன்னேன், "அதானே பாவம், இவுங்க என்ன பண்ணுவாங்க.. மீன்லதான் ஏதாவது பிரச்சினையா இருக்கும்".

**************

ஆபீஸில் எங்கள் டீமில் ஒரு தங்கமணி இருக்கிறார். டீமாக வெளியில் போய் சாப்பிட்டு ரொம்ப நாளாகிவிட்டபடியால் ஒரு மாலை நேரத்தில் தாம்பரம் அஞ்சப்பரில் டின்னருக்குப் பிளான் பிளான் பண்ணினோம். மாதக்கடைசி மற்றும் 10 பேர் ஆகையால் செலவை ஷேர் செய்துகொள்ளலாம் என முடிவாகியது. அவரிடம் திட்டத்தைச் சொல்லியபோது 'இல்லையில்லை, எங்க வீட்டுக்காரரிடம் பர்மிஷன் வாங்க வேண்டும்' என்றார். நாங்களும் பண விஷயத்தில் ரொம்ப கறார் பேர்வழி போல என நினைத்துக்கொண்டு 'சரி கேளுங்கள்' என்றோம்.

அவர் போனில் பேசிவிட்டு வந்து, "ஓகே" என்றார். நாங்களும் 'என்ன பட்ஜெட்டுக்குத்தானே?' என்றோம்.

"என்னது பட்ஜெட்டுக்கா.. நான் சாப்பிடுறதுக்குத்தான் பர்மிஷன் கேட்கப்போனேன். அதுக்கு ஓகே சொல்லிட்டார்"

.

48 comments:

இராகவன் நைஜிரியா said...

அண்ணே ஆதி அண்ணே... அப்டேட்ஸ் சூப்பர் அண்ணே... ரொம்ப நல்லா இருக்கு... ரிசப்ஷன் மேட்டரும், மீன் குழம்பு மேட்டரும் சூப்பர் அண்ணே...

இராகவன் நைஜிரியா said...

ஹையா நான் தான் முதல் பின்னூட்டமா... சூப்பர்..

இராகவன் நைஜிரியா said...

// அடுத்தாளுக்குத் தெரியாம விழுந்து பிடுங்கிய பிறகுதான் //

ஐ பொய் சொல்லக்கூடாது. விழுந்து பிடுங்கினது உங்களுக்கே தெரிஞ்சிருக்காது.. அப்புறம் இல்ல அடுத்த ஆளுக்கு தெரிஞ்சிருக்க...

நாமெல்லாம் என்ன விழுந்து பிடுங்கற ஜாதியா... அவங்க ஒரு முறை முறைச்சாலே ... சும்மா இருக்க மாட்டோம்.

வேண்டாம்... அதெல்லாம் தப்புன்னு சமாதானமா சொல்வதெல்லாம் விழுந்து பிடுங்குவதாகாது..

இராகவன் நைஜிரியா said...

// "என்னது பட்ஜெட்டுக்கா.. நான் சாப்பிடுறதுக்குத்தான் பர்மிஷன் கேட்கப்போனேன். அதுக்கு ஓகே சொல்லிட்டார்" //

அதானே முதலிலேயே கரெக்டா சொல்லத்தெரியலையே உங்களுக்கு. வீட்லதான் அவங்க கிட்ட பேச பயம்னா... ஆபிசிலேயும் எல்லார்கிட்டேயும் பயமா..

இராகவன் நைஜிரியா said...

தமிழ் மணம் ஓட்டு போட்டாச்சுங்க...

ஞாபகமா அக்கௌண்ட்க்கு பணத்த அனுப்பிடுங்க..

gulf-tamilan said...

/மீன்லதான் ஏதாவது பிரச்சினையா இருக்கும்"./

:))))
முடியல,எப்படி சார்!!!

Cable Sankar said...

எவ்வளவு பட்டாலும் முடிய மாட்டேங்குதே..:)

Anonymous said...

:)

சுசி said...

:)))

பா.ராஜாராம் said...

:-)

நேசமித்ரன் said...

:)

சொல்ற விதம்னு ஒண்ணு இருக்குல்ல...

அப்பாவி முரு said...

//'அடிப்பாவிகளா.. வாயிக்கு ருசியா ஒரு தயிர் சாதம் பண்ணத் துப்பில்லாம இப்படி பண்றீங்களே.. //

இதே கேள்வியை உங்க வீட்டம்மா, உங்களைப் பார்த்து கேட்டிருந்தால் முகத்தை எங்க வச்சுக்குவீங்க?

புதுகைத் தென்றல் said...

எப்படியாவது தங்கமணிகளை தாக்கியே ஆகணும்.

பதிவு வருது இருங்க

கார்க்கி said...

கலக்கல் சகா..

அந்த கடைசி மேட்டர்.. அவர் சொன்னதுக்கப்புறம் உங்க நிலைமை எப்பைட்ன்னு சொல்லி முடிச்சிருந்தா இன்னும் சுவார்ஸ்யம் கூடியிருக்கும்..

ஆனா நீங்க வழக்கம்போல ஹிஹிஹிஹின்னு வழிசலா இல்ல உர் உர்னு பொறாமைப் பட்டிருப்பீங்களான்னு நாங்க யோசிக்கறதும் நல்லாத்தான் இருக்கு:))

புதுகைத் தென்றல் said...

http://pudugaithendral.blogspot.com/2010/02/best.html

உங்க பதிவின் லிங்கோடு எதிர் பதிவும் போட்டாச்சு

Vidhoosh said...

அண்ணி நீங்க "மோப்பம் பிடிச்சு பிடிச்சு மூக்கு மரத்து போயிருக்கும்'ன்னு இல்ல சொல்லி இருக்கணும். என்ன போங்க.. பயிற்சி பத்தலை.

:(

தராசு said...

அந்த மீன் குழம்பு மேட்டரு சூப்பர்.

Sangkavi said...

ஆதி மீன் மேட்டர் நல்லாயிருக்கு....

//"என்னது பட்ஜெட்டுக்கா.. நான் சாப்பிடுறதுக்குத்தான் பர்மிஷன் கேட்கப்போனேன். அதுக்கு ஓகே சொல்லிட்டார்" //

இப்படித்தா கவுத்துறுவாங்க நண்பா....

நர்சிம் said...

வணக்கம்..உங்க ஏரியா..தலைப்பு..ம்.

☀நான் ஆதவன்☀ said...

பதிவு கலக்கல் ஆதி. அதைவிட தலைப்பும், லேபிளும் :))

ஹுஸைனம்மா said...

//மீன்லதான் ஏதாவது பிரச்சினையா இருக்கும்".//

இப்பத்தான் எனக்கும் புரியுது.. அதானே, இப்பவெல்லாம் மீன், மட்டன், காய்கறிகள்னு எல்லாமே உரங்கள், மருந்துகள் தாக்கத்தில ருசியில்லாமத்தான் இருக்குது.

சிரிப்பாச் சொன்னாலும், சீரியஸான மேட்டரைச் சொல்லிட்டீங்க. ரங்ஸ்களெல்லாம் புரிஞ்சுக்கோங்க..

Anonymous said...

ஆதி ஒரு சிறு விளக்கம்.

ஆத்து மீனுக்கும், குளத்து மீனுக்கும் சுவையில் வித்தியாசம் இருக்கு. அதே போலத்தான் கடல் மீனும்.

மூன்றிற்குமான சமைக்கும் பக்குவம் வேறு வேறு. நாம் எல்லாவற்றிற்கு ஒரே சக்தி மசாலா அல்லது ஆச்சி மசாலாதான் போடுகிறோம். அங்குதான் குழப்பமே.

மேலும் இந்த இந்த மீனுடன் இன்ன் இன்ன காய்கறி சேர்க்க வேண்டுமெனவும் ஒரு சூத்திரன் இருக்கும். கத்தரிக்காய், மாங்காய், மொச்சை போன்றவற்றை எல்லா மீனுடனும் சேர்க்க முடியாது;கூடாது.

பாட்டிகளுக்கு இந்த வகை தெரிவதால்தான் குழம்பின் சுவை அதிகம். மேலும் மண்பாத்திரமும் ஒரு காரணம்.

பொதுவாக முதல் நாள் வைத்த குழம்பு மறு நாள் கூடுதல் சுவையுடன் இருக்கும்.

நாஞ்சில் நாடனிடம் கேட்டால் சுமார் 200 வகை மீன்களையும் அதற்கான பக்குவத்தையும் சொல்வார்.

குழம்பென்றால் ஊழியும் வறுவலென்றால் வஞ்சிரமும் எனது தேர்வு; சுவை கிட்டும்.

பிரபா said...

அடிக்கடி வந்து ஏதாவது திட்டி தீர்த்துட்டு போனால் தானே தெரியும் ,, இனி என்ன பண்ண வேணும் எண்டு ...
கதவு திறந்தே இருக்குது ,,, வாங்க வந்து பாருங்க,,, நம்ம பதிவுட லட்சணத்த,,,

மின்னுது மின்னல் said...

:)

எறும்பு said...

:))

வானம்பாடிகள் said...

:)). அப்டேட் அசத்தல். இராகவன் அண்ணா ஃபார்ம்கு வந்தாச்சு போல:)

பாபு said...

//ஃபார்ம்கு வந்தாச்சு போல:) //

repeattu

துபாய் ராஜா said...

:))

ஈரோடு கதிர் said...

:))))))

திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said...

//.. அதானே பாவம், இவுங்க என்ன பண்ணுவாங்க.. மீன்லதான் ஏதாவது பிரச்சினையா இருக்கும்" ..//

:-)))

மதார் said...

சும்மா தங்கமணியை தப்பு சொல்லாதீங்க . நிஜமாலுமே மீன் தான் இங்க பிரச்னை. உங்க பாட்டி, அம்மா எல்லாம் ஊர்ல ஆறு , குளம்னு மீன் பிடிக்கப்பட்ட ஒருமணி நேரத்துக்குள்ள வெட்டி குழம்பு வச்சுருப்பாங்க அதுவும் இதர மசாலா எல்லாம் அந்த உடனே அம்மில அரைச்சு பண்ணிருப்பாங்க . நான் கூட ஊர்ல உயிருள்ள மீன வெட்டி குழம்பு வச்சுருக்கேன் ,அதோட சுவையே தனிதான் . இங்க நீங்க வாங்குற ஆத்து கெண்டை மீன் எல்லாம் எப்போ பிடிச்சதுன்னு தெரியுமா ? எங்க ஊர் குளத்துல மீன் வாங்குற ஒரு தரகர்கிட்ட இந்த மீன் எல்லாம் எப்போ லோட் பண்ணி அனுப்புவீங்கன்னு கேட்டப்போ ஒரு வாரம் ஆகும்னு சொன்னார் அது வரைக்கும் அத ஐஸ் போட்டு வச்சுருப்பாங்கலாம். கிட்டத்தட்ட பிடிபட்டு பத்து நாளுக்கு மேல ஆனா மீன்ல எண்ண சுவை இருக்கும் ? அங்க ஒருகிலோ கெண்டைமீன் 3o தான். இங்க அது 300 . நா ஆசையா எனக்கு பிடிச்ச ஒரு மீன் வாங்கி பொரிச்சேன் அதன் சுவைல அந்த மீன் சாப்டற ஆசையே போய்டுச்சு . அதுவுமில்லாம மீன் குழம்பு ரெடிமேட் மசாலாவும் நகரத்துல ஒருகாரணம் .

இதவேணா தங்கமணியை முயற்சி பண்ணி பாக்க சொல்லுங்க . இல்ல நீங்க பண்ணாலும் சரிதான் .

மீன் குழம்பு - தூத்துக்குடி செய்முறை

மதார் said...

மீன் குழம்பு - தூத்துக்குடி செய்முறை
http://mathar-itsallaboutmine.blogspot.com/2010/01/blog-post_05.html

எம்.எம்.அப்துல்லா said...

உங்க ஏரியா :)
உள்ள வந்துட்டேன்.

Karthik said...

//எம்.எம்.அப்துல்லா said...
உங்க ஏரியா :)
உள்ள வந்துட்டேன்.

ROFL. Repeateyy.. :)))

☼ வெயிலான் said...

ஆதி,

நீங்க மீன் குழம்பு பதிவு போட்டு, வ.க.வேலன் அண்ணாச்சி இன்னைக்கு மதியம் மீன் சோறு சாப்பிட கிளம்பிட்டார் :)

தண்டோரா ...... said...

ஆதி..இந்த பதிவை படிச்சுட்டு ஒரு கதையே எழுதிட்டேன்..(நாளைக்கு)...வீட்ல யாரும் இல்லாதப்ப போன் பண்ணுங்க. நான் வந்து மீன் குழம்பு வச்சு தாரேன். காலையில் 8 மணிக்கு தாம்பரம் மார்க்கெட்டில் ஆற்று விரால் கிடைக்கும்.(எல்லா நாளிலும் இல்லை)

ஜோசப் பால்ராஜ் said...

// "அதானே பாவம், இவுங்க என்ன பண்ணுவாங்க.. மீன்லதான் ஏதாவது பிரச்சினையா இருக்கும்".
//

இந்த பதில மட்டும் சொல்லாம மாத்தி பேசிருந்தா சும்மா அதிர்ந்துருக்கும்ல. அதான் ஜஸ்ட்ல எஸ்கேப் ஆயிட்டிங்களா? நோட் பண்ணிக்கிறோம் தல.

என். உலகநாதன் said...

ஆதி,

எனக்கு என்னவோ மனைவியைப் பற்றி பொதுவில இப்படி குறைகூறுவது பிடிக்கவில்லை. உங்களுக்கு வலைப்பூ இருப்பதால எழுதறீங்க. அவங்களும் எழுத ஆரம்பிச்சா நினைச்சுப் பாருங்க உங்க நிலைமையை?

அன்புடன் அருணா said...

கொஞ்சம் மீன்லெ சென்ட் அடிச்சுப் பாருங்களேன் மணக்குதான்னு??!!!!!!!!!:)))))

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி ராகவன்.! (தெரிஞ்சு போச்சுன்னா கம்முனு இருக்கணும் தலைவா..)

நன்றி கல்ப் தமிழன்.!
நன்றி கேபிள்.!
நன்றி அம்மிணி.!
நன்றி சுசி.!
நன்றி பாரா.!
நன்றி நேசமித்திரன்.!
நன்றி முரு.!

நன்றி தென்றல்.! (எதிர்பதிவொண்ணும் சூடுபிடிக்கலை போல.. ஹிஹி)

நன்றி கார்க்கி.!
நன்றி விதூஷ்.!
நன்றி தராசு.!
நன்றி சங்கவி.!
நன்றி நர்சிம்.!
நன்றி ஆதவன்.!
நன்றி ஹூஸைனம்மா.!

நன்றி வேலன்.! (இப்ப யாராவது இவ்ளோ டீடெயில்ஸ் கேட்டாங்களா?? போங்கையா வயித்தெரிச்சலை கிளப்பாம..)

நன்றி பிரபா.!
நன்றி மின்னல்.!
நன்றி எறும்பு.!
நன்றி வானம்பாடிகள்.!
நன்றி பாபு.!
நன்றி ராஜா.!
நன்றி கதிர்.!
நன்றி சம்பத்.!

நன்றி மதார்.! (டேக் இட் ஈஸி பிளீஸ்..)

நன்றி அப்துல்.!
நன்றி கார்த்திக்.!
நன்றி வெயிலான்.!

நன்றி தண்டோரா.! (ஒருநாள் கண்டிப்பா பண்ணலாம் பாஸ். ஏமாத்திடாதீங்க)

நன்றி ஜோஸப்.!

நன்றி உலகநாதன்.! (ஏற்கனவே பல தடவைகள் விளக்கம் சொன்ன விஷயம்தான் நண்பரே.. ரமா என்ற பெயர் மற்றும் இந்தப் பதிவுகளில் எழுதும் விஷயங்கள் பெரும்பான்மையும் உண்மை அல்ல. நானும் என் மனைவியும் சென்ற ஒரு திருமணத்தில் 'தயிர்சாதம் நல்லாயிருந்ததுல்ல' என்ற ஒற்றை வரியிலிருந்து டெவலப் செய்ததுதான் இந்தப்பதிவின் முதல்பகுதி. இப்பதிவுகள் வெறும் நகைப்புக்காக மட்டுமே.. எனது பிற பதிவுகளை வாசித்தீர்களானால் தெரியும் என் காதல் எவ்வாறானது என்று. என் மனைவியை நான் குறை கூறுகிறேன் என்று நீங்கள் சொல்வது நல்ல காமெடி.! மேலும் இந்த மாடல் எழுத்துகள் புதுமையானதும் அல்ல.. பழம்பெரும் எழுத்தாளர்கள் தேவன், எஸ்விவி, பாக்கியம் ராமசாமி என பலரும் விட்டுவிளையாடிய களம்தான் இது. அதைப்பார்த்து கடற்கரையில் மணல்வீடு கட்டி மகிழும் சிறுவர் மனநிலையே என் போன்றவர்களின் முயற்சியும்.. நன்றி.)

அறிவிலி said...

வழக்கம் போல தங்கமணி பதிவு சூப்பர் ஹிட். நைஜீரியா ராகவன் அவர்களும் நீங்களளும் ஃபுல் ஃபார்முக்கு வந்துட்டா மாதிரி தெரியுது.

சூப்பர்。。。。。。。。。。

ஜெயந்தி said...

நீங்க தங்கமணியப் பத்தி எழுதறது ரமாவைப் பத்தியில்லை என்பது அதை தொடர்ந்து படித்தாலே தெரியுமே?

புதுகைத் தென்றல் said...

நீங்க தங்கமணியப் பத்தி எழுதறது ரமாவைப் பத்தியில்லை என்பது அதை தொடர்ந்து படித்தாலே தெரியுமே?//

அதானே எங்களுக்குத் தெரியாதா!!
http://pudugaithendral.blogspot.com/2010/02/blog-post_09.html
உங்களுக்கு ஒரு லெட்டர் ஃப்ரெண்ட்.

கண்டிப்பா படிங்க

என். உலகநாதன் said...

ஆதி,

பதிலுக்கு நன்றி.

ஒரு நண்பர் என்ற முறையில் மனதில் பட்டதை எழுதினேன். அவ்வளவுதான். உங்கள் விளக்கம் எனக்குப் பிடித்திருந்தது. நானும் உங்களை தினமும் படிக்கிறேன் ஆதி. இனியும் படிப்பேன். அதனால் என் பின்னூட்டத்தை தவறாக எண்ண வேண்டாம்.

புன்னகை said...

ரொம்ப நாள் கழிச்சு, இந்தப் பக்கம் வந்தா, தங்கமணி பதிவு!!!!!!!! :-)
//மீன்லதான் ஏதாவது பிரச்சினையா இருக்கும்//
இதுல என்ன சந்தேகம்??? ;-)

அமிர்தவர்ஷினி அம்மா said...

"அப்ப இப்ப மட்டும் ஏன் இப்படி? அப்படி என்னதான் பிரச்சினை உங்களுக்கு?"

:)))))))

பிரச்சினை மீன் குழம்புல இல்லை, மூக்குலயும் வாய்லயும் தான் இருக்குன்னு நினைக்கிறேன் ;)

கண்ணகி said...

ஒருவாரத்துக்கு களிதான்...

அமைதிச்சாரல் said...

அண்ணி கிட்ட, இன்னும் பத்து நாளைக்கு உப்பில்லாம கஞ்சி கொடுக்கச்சொன்னா எல்லாம் சரியாகிடும் :-))