Wednesday, February 10, 2010

ரெண்டு ஷாட் டக்கீலா

 

lemontree28withoutimage10

வீரிய விதைகள் எழுந்தேதான் தீரும். பெருந்திரளான பதிவர்கூட்டத்தில் நல்ல எழுத்துக்கள் நட்சத்திரங்களுக்கிடையேயான நிலவைப் போல பளிச்சென தெரிந்துவிடத்தான் செய்கின்றன. பதிவர்கள் பலரின் புத்தகங்களும் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. நண்பர் நர்சிமைத் தொடர்ந்து பரிசல்காரன், கேபிள்சங்கர் ஆகியோரின் முதல் புத்தகங்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் ஒரு நல்விழாவில் வெளியாகவிருக்கின்றன. இன்னும் பல சிகரங்கள் தொட அவர்களுக்கு இது ஒரு நல்தொடக்கமாக அமைந்திட நம் நல்வாழ்த்துகள். அனைவரும் வந்திருந்து விழாவை சிறப்பிக்க நண்பர்களின் சார்பில் வேண்டுகிறேன்.

parisalwithcontent12

சிறப்பு விருந்தினர்கள் பலரும் கலந்துகொள்ளும் இவ்விழாவினைப்பற்றி மேலதிக தகவல்கள் இதோ:

நிகழ்ச்சி நிரல்
தேதி : 14.02.10
நேரம் : மாலை 5.30
விருந்தினர்கள் : பிரமிட் நடராஜன், நடிகர், தயாரிப்பாளர்,
சி.எஸ்.அமுதன் இயக்குனர் தமிழ்ப்படம்
அஜயன் பாலா, எழுத்தாளர்
பொன்.வாசுதேவன், பதிப்பாளர், அகநாழிகை பதிப்பகம்.

இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்
6.முனுசாமி சாலை
முதல் மாடி, மஹாவீர் காம்ப்ளெக்ஸ்
பாண்டிச்சேரி ஹவுஸ் அருகில்,
மேற்கு கே.கே.நகர்
சென்னை –78

அனைவரும் வந்திருந்து விழாவை சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
கேபிள் சங்கர் : 9840332666
பரிசல் காரன் : 9894747014
குகன் : 9940448599

(பி.கு : மறக்காமல் டைரி கொண்டுவரவும். ஆட்டோகிராப் போட்டுத்தருகிறேன். கேட்க கூச்சப்படவேண்டாம்)

26 comments:

KVR said...

உங்க பொஸ்தகம் எப்போ ரிலீஸ்? தங்கமணி அப்டேட்ஸ் புத்தகமாக வெளிவந்தால் நானே ஒரு பத்து காப்பி வாங்கி என்னை/உங்களை மாதிரி நல்லவங்களுக்குக் கொடுக்கலாம்ன்னு இருக்கேன்.

என்னை மாதிரி 100 பேர் ஆளுக்கு 10 வாங்கினால் 1000 புத்தகம். ஒரு புத்தகம் ரூ100ன்னு வச்சாலும் வருஷத்துக்கு ரூ 10,000 ராயல்டி. யோசிச்சு நாட்டுக்கு நல்லது செய்யுங்க மக்கா ;-)

மறத்தமிழன் said...

ஆதி,

கதை,தங்கமனி அப்டேட்ஸ்னு சுவாரஸ்யமா எழுதுரய்ங்க..

எப்போ புத்தக வெளியிடு பாஸ்?

நர்சிம்,பாரா,கேபிள்,பரிசலைத் தொடர்ந்து

புத்தகம் வெளியிட வாழ்த்துக்கள் !

வரதராஜலு .பூ said...

//(பி.கு : மறக்காமல் டைரி கொண்டுவரவும். ஆட்டோகிராப் போட்டுத்தருகிறேன். கேட்க கூச்சப்படவேண்டாம்)//

:-)

விரைவில் புத்தகமாக எதிர்பார்க்கிறேன் தங்கமணி அப்டேட்ஸ்

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள் :))))

ஆயில்யன் said...

//என்னை மாதிரி 100 பேர் ஆளுக்கு 10 வாங்கினால் 1000 புத்தகம். ஒரு புத்தகம் ரூ100ன்னு வச்சாலும் வருஷத்துக்கு ரூ 10,000 ராயல்டி. யோசிச்சு நாட்டுக்கு நல்லது செய்யுங்க மக்கா ;-)//

அண்ணாச்சி ஐடியா ஜூப்பரேய்ய்ய் ஆனா நாட்டுக்கு என்ன நல்லது வீட்டுக்குத்தான் நல்லது :)

அன்புடன் அருணா said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
//(பி.கு : மறக்காமல் டைரி கொண்டுவரவும். ஆட்டோகிராப் போட்டுத்தருகிறேன். கேட்க கூச்சப்படவேண்டாம்)//
அட! இதுவேறயா!நடத்துங்க...நடத்துங்க!

henry J said...

Unga blog romba nalla iruku
(`*•.¸(`*•.¸ ¸.•*´)¸.•*´)

Make Money Online - Visit 10 websites and earn 5.5$. Click here to see the Proof

Download Youtube Videos free Click here

தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here

அமிர்தவர்ஷினி அம்மா said...

வாழ்த்துக்கள் இருவருக்கும்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

KVR said...
...... யோசிச்சு நாட்டுக்கு நல்லது செய்யுங்க மக்கா ;-)

உள்நாட்டுக்கா, வெளிநாட்டுக்கா ;)

நேசமித்ரன் said...

நண்பர்களுக்கு வாழ்த்துகள்
உங்களுக்கும்...

தாரணி பிரியா said...

பரிசல் சாருக்கும் கேபிள் சாருக்கும் வாழ்த்துக்கள். கடைசி லைன் ஆட்டோகிராப் வாங்கி தருகிறேன் வந்தாதானே சரியாய் இருக்கும்

தாரணி பிரியா said...

அடுத்த உங்க புக்தானே. அதுல ஆட்டோகிராப் போட்டு ஃபாலோயர் எல்லாருக்கும் ஃப்ரீயா அனுப்பி வைக்கவும்

சென்ஷி said...

:)

shortfilmindia.com said...

நன்றி தலைவரே

கேபிள் சங்கர்

வெள்ளிநிலா said...

நீங்க எப்ப ரவுடி ஆகபோறீங்க!?

திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said...

கேபிளுக்கும் பரிசலுக்கும் வாழ்த்துகள்.
//.. (பி.கு :..//
:-))

pappu said...

(பி.கு : மறக்காமல் டைரி கொண்டுவரவும். ஆட்டோகிராப் போட்டுத்தருகிறேன். கேட்க கூச்சப்படவேண்டாம்)///

பாக்யராஜ் சொல்ற மாதிரி ‘வெண்ணய நக்குறவன் ஒருத்தன் விரல சூப்புறவன் இன்னொருத்தனாம்’

பரிசல்காரன் said...

ஐயோ.. இங்கயும் என் நம்பர் தப்பு. கட் பேஸ்டறப்போ சரி பார்க்கணும்ல ஆதி..

9894747014

அத்திரி said...

வந்திடுவோம் ....வாழ்த்துக்கள் யூத்துக்கும் பரிசலுக்கும்

நர்சிம் said...

வாழ்த்துக்கள்..அடுத்து உங்கதா ஆதி..வாழ்த்துக்கள்.

துபாய் ராஜா said...

வாழ்த்துக்கள்.

sriram said...

//வீரிய விதைகள் எழுந்தேதான் தீரும்//

நீங்க A ஜோக்கெல்லாம் எழுத மாட்டீங்களே .. கேபிள் பத்தின பதிவுங்கறதால எழுதிட்டீங்களா??? :):)

அப்புறம் உங்க புக் எப்போ வருது??

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

ஆதிமூலகிருஷ்ணன் said...

இந்தப்பதிவுக்கு பரிசலும், கேபிளும்தான் நன்றி சொல்லவேண்டும் என்பதால் நான் மொத்த நன்றியோடு எஸ்கேப்பாகிறேன். நன்றி.

அடுத்து (கொலைக்களத்தில் அடுத்த ஆடு) நானா என்பது போல கேட்ட அத்தனை பேருக்கும் ஒரு கொலைவெறி நன்றி. இன்னும் நாலைஞ்சு பேராவது டெஸ்ட் (சோதனை எலி) பண்ணிய பிறகுதான் முடிவு எடுப்பேன் (எடுத்துட்டாலும்).

Anonymous said...

பரிசலாருக்கும் கேபிளாருக்கும் வாழ்த்துக்கள்.

தங்கமணி அப்டேட்ஸுக்கு ரசிகர்கள் நிறைய ஆகிட்டு வர்றோம். புக்கும் சீக்கிரம் ரிலீஸாகட்டும் :)

Karthik said...

vaazhthukkal rendu perukkum..:))

எம்.எம்.அப்துல்லா said...

//பி.கு : மறக்காமல் டைரி கொண்டுவரவும். ஆட்டோகிராப் போட்டுத்தருகிறேன். கேட்க கூச்சப்படவேண்டாம்)

//

அடிங்..