Thursday, February 11, 2010

பதின்மத்தின் ஒரு சேதி

தொடர்பதிவுகள் எழுதி நிறைய நாட்கள் ஆகிவிட்ட நிலையில் பதின்ம வயதுகளில் எழுதப்பட்ட டைரிக்குறிப்புகளை பகிரும் இந்தத்தொடருக்கு அழைத்த தோழி 'சின்ன அம்மிணி'க்கு நன்றி. சுவாரசியமான டாபிக்தான் இல்லையா? எனக்கு டைரி எழுதும் வழக்கமிருந்ததில்லை. சில வருடங்களில் ஆர்வத்தோடு ஆரம்பித்து தொடராமலே போயிருக்கும் டைரிகள் பரணில் கிடக்கின்றன. அந்த வயதுகளில் நிகழ்ந்த பகிரத்தக்க விஷயங்கள் பல இருப்பினும் ஒரு காதல் பகுதியை மட்டும் பார்க்கலாம். (மற்றது யாருக்கு வேணும்கிறீங்களா? அதுவும் சரிதான்)

**********

சினிமாக்களும், புத்தகங்களும், நண்பர்களும் ஏற்படுத்திய தாக்கத்தால் ஏற்பட்டதல்ல என் காதல், நிச்சயமாக சொல்வேன். சின்னஞ்சிறுமியாய் இருக்கும் போதே என் பிளாக் அன்ட் வொயிட் உலகத்தின் வண்ணமாக இருந்தவள் அவள். புரியாத வயதிலேயும் இவள் சக மனுஷி அல்ல என்பதை உணர்ந்தே தவித்தவன் நான். ஆகவே இந்த பைத்தியக்காரத்தனத்தை வர்ணித்து பத்தாம் வகுப்பிலேயே நண்பர்களைக் கெடுத்தவன் நானாக இருக்கக்கூடும்.

காதலின் மொத்தமும் அல்லது பெரும்பான்மைப்பகுதியும் காமம் என்ற கூற்றை எந்த அறிவியல் சொன்னாலும் நான் ஏற்கமாட்டேன். ஏனெனில் நான் உணர்ந்த நிஜம் இது. பின்னாளில் தாளமுடியாமல் வெடித்துக்கிடந்ததை ஒப்புக்கொள்ளும் அதே நேரம் காமத்தை அறியாத ஏன் உறவுகளையே அறியாத பால்ய வயதிலும் அவள் தலைக்கு மேல் நான் மட்டுமே அறிய, சுழன்ற ஒளிவட்டத்தை கண்டு.. இவளிடம் மட்டும் எப்படி என்று பொருள்விளங்காத குழப்பத்தில் வளர்ந்தவன் நான்.

பதின்மத்தில்தான் அந்த உணர்வுக்குக் காதல் என்ற பெயர் வழங்கப்படுவதைக் கண்டுகொண்டேன். எப்படிச்சொல்வது.. அதை.. அவளிடம்.? தூக்கமற்ற இரவுகளின் அறிமுகம். நெருப்பு சுடுகிறது என்றால் சுடுகிறது என்றுதான் சொல்லமுடியும். லட்சம் தடவைகள் பயன்படுத்தப்பட்டாலும் கூரிய விழிகள் என்றால் கூரிய விழிகள்தான். நீர்த்துளிகள் அவள் முகமெங்கும் பூத்திருக்க அவள் அன்று பார்த்த பார்வை என் எழுபிறப்புக்குமானது என்றால் உங்களால் மறுக்கமுடியுமா? காற்றையும், மழையையும் போல பல்வேறு வடிவங்கள் கொண்டவள் அவள். பிரமிப்பானவள்.

கண்ட கட்டுப்பாடுகள், ஒழுக்கம், நாகரீகம், புண்ணாக்கு அத்தனையையும் தொலைத்துவிட்டால்தான் என்ன? நான் தொலைக்கவில்லை. முடிந்துபோனவற்றில் இன்னும் முடிவுக்கு வரமுடியாத நான் செய்த தவறுகளில் முதன்மையானது அது.

ஒரு சில முத்தங்களோடு முடிந்து போன முடிவுறாத எண்ணங்களின் பயணம் அது, நினைவுகளின் நீட்சி அது. இன்னும் சொல்வேன் இதுபற்றிப் பின்னர். இப்போது தொடரமுடியாமல் விக்கித்து நிற்கிறேன்... நன்றி.

நீ இருந்தால் இருப்பேன்
அழிந்தால் அழிவேன்
நீயறியாமல் உன்னைத் துரத்திக்கொண்டேயிருப்பேன்
ஒரு ஒற்றனைப்போல.!

*************

இந்தத்தொடரை (பதின்ம வயதுகளின் டைரிக்குறிப்புகள்) தொடர நான் ஆசையோடு அழைப்பது..


26 comments:

Aravind said...

Nicely narrated Aathi.. Cheers!

Aravind said...

But lately you are not writing much and most of the time we return empty handed after visiting your blog!

Anonymous said...

//காதல் பகுதியை மட்டும் பார்க்கலாம். (மற்றது யாருக்கு வேணும்கிறீங்களா? அதுவும் சரிதான்)//

மத்ததும் இல்லாம முழுமையாகாதே பதின்மம். நட்பு, பெற்றோரை வேறுவிதமாக பார்க்க ஆரம்ப்பிப்பது எல்லாம் இந்த வயதில்தானே

கண்ணகி said...

உள்ளதையும் உள்ளத்தையும் சொல்லீருக்கீங்க..

தமிழ் பிரியன் said...

:-)

முகிலன் said...

நல்லா இருக்குது பாஸ்..

அகநாழிகை said...

நல்லாயிருக்கு AMK.

கார்க்கி said...

அரவிந்துக்கு ஒரு ப்ளு சட்டை பார்ச்செல்ல்ல்ல்ல்ல்ல்ல்

ஆதிமூலகிருஷ்ணன் said...

பூஸ்ட் பின்னூட்டம் தந்த அரவிந்துக்கு நன்றி.! (ஃபாலோ செய்தல் அல்லது மெயிலுக்கு ஃபீட் செய்து கொண்டால் இந்த வெற்று அலைச்சலை தவிர்க்கலாம் அரவிந்த். என்ன ஒண்ணு எனக்கு ஹிட்ஸ் குறைஞ்சுபோயிடும், ஹிஹி. நேரமின்மையால் அடிக்கடி எழுத முடியவில்லை. முயல்கிறேன்)

கருத்தை ஏற்கிறேன் அம்மிணி.

கண்ணகி, தமிழ்பிரியன், முகிலன், வாசுதேவன்.. நன்றி.

அதென்ன ப்ளூ கலர் கார்க்கி, புரியலை.!

Karthik said...

அரவிந்துக்கு ஒரு கருப்பு பேண்ட் பார்சேல்ல்ல்ல்.. (மேட்ச் ஆக வேணாம்?)

சரவணக்குமார் அண்ணாவ நானும் கூப்பிடம்னு இருந்தேன். எக்ஸ்பெக்ட் எ டெரரர் அடொலசன்ஸ்..:))

பைத்தியக்காரன் said...

அழைப்புக்கு நன்றி ஆதி.

எழுத முயல்கிறேன் :)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

நர்சிம் said...

மிகப் பிடித்திருந்தது.

அமிர்தவர்ஷினி அம்மா said...

class.

முடிந்துபோனவற்றில் இன்னும் முடிவுக்கு வரமுடியாத நான் செய்த தவறுகளில் முதன்மையானது அது. //

மிகவும் ரசிக்க வைத்த இடுகை

திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said...

//.. ஒரு சில முத்தங்களோடு முடிந்து போன முடிவுறாத எண்ணங்களின் பயணம் அது, ..//

ம்ம்.. சரிங்க..

"உழவன்" "Uzhavan" said...

//என் பிளாக் அன்ட் வொயிட் உலகத்தின் வண்ணமாக இருந்தவள் அவள்//
 
லவ் லெட்டர் நல்லா எழுதுவீங்கனு நினைக்கிறேன் :-)
மற்றாவர்களும் சீக்கிரம் எழுதுங்கள்.

பழமைபேசி said...

வணக்கங்க ஆதி! நன்றி!! இரசித்தேன்!!!

மாலையில் வந்ததும், எழுதி விடுகிறேன்!

Rajeswari said...

ரசித்தேன்

ஆதிமூலகிருஷ்ணன் said...

20 பின்னூட்டத்துக்கு குறைவா இருந்தா நா கோவப்படுவேன்னு தெரியாதா.? லாஸ்ட் வார்னிங். பீ கேர்ஃபுல்.!

ஆதிமூலகிருஷ்ணன் said...

கார்த்திக், பைத்தியக்காரன், நர்சிம், அமித்து, சம்பத், உழவன், பழமைபேசி, ராஜேஸ்வரி.. நன்றி.!

susi said...

கவலையை கூட ரசனையா எழுதி இருக்கீங்க ஆதி.

எழுத்து கவிதையோட குட்டியா ஒரு படமும் சேர்த்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்குமோன்னு தோணுது :))

susi said...

21 வதும் போட்டுட்டேன்..

முதல்ல அருவாள கீழ வைங்க..

அ.மு.செய்யது said...

செம்ம ரொமான்டிக்ங்க..!! அப்படியே ஃபீல் ஆகுதுங்க..

இன்னும் நிறைய எழுதியிருக்கலாமோனு தோணுது.

பிரியமுடன்...வசந்த் said...

நல்லாயிருந்தது சார்...

பழமைபேசி said...

http://maniyinpakkam.blogspot.com/2010/02/blog-post_11.html

அன்புடன் அருணா said...

சேதி கொஞ்சம் முழுமையா இல்லதது போல் இருக்கிறதே ஆதி!

cheena (சீனா) said...

அன்பின் ஆதி

பதின்ம வயது என்பது காதல் மட்டும் தானா - வேறு ஒன்றும் இல்லையா - காதல் பிரதானம் என்று அதனை எடுத்துக் கொண்டீர்களா ?

ஆதியின் காதல் இவ்வளவு தீவிரமாக இருந்திருக்கிறதே - ஒளி வட்டம் காரணமா ?