Wednesday, February 17, 2010

சில பாராட்டுகள்

சில அருமையான பதிவுகளைப் பார்க்கும் போது அடடா என்ன பிரமாதம் என்று வியந்துவிட்டு அவர்களை எப்படியும் பாராட்டவேண்டும் என்று போனிலோ, மெயிலிலோ பாராட்டைத்தெரிவிக்க முயல்கிறோம். அது என்னவோ எனக்கு திருப்தியாகவே இருப்பதில்லை. இனி இது போன்ற தொகுப்புப்பதிவுகளிலேயே தெரிவிக்கலாம் என்றிருக்கிறேன்.

ஒரு அருமையான கவிதை அனுபவத்துக்காக சரவணகுமார் MSK

ஒரு பயனுள்ள பகிர்வுக்காக ஆரூரன் விஸ்வநாதன்

தெறிக்கும் நகைச்சுவைக்காக ச்சின்னப்பையன், குசும்பன்

ஆகியோருக்கு என் வாழ்த்துகள்.. (அரைமணி நேரம் தொலைபேசியில் புகழ்ந்ததாய் கொள்ளுங்கள்) தொடருங்கள் நற்பணி.!

**********************

எழுத்தாளர்களாகிவிட்ட (ஒரு முட்டை ஆம்லெட்டாகிறது.. ஹிஹி) கேபிள்சங்கர், பரிசல்காரனுக்கு வாழ்த்துகள். புத்தக வெளியீட்டுவிழா குறித்த பதிவு, போட்டோக்கள், ஊருக்குச்சென்று வந்த பயணக்கட்டுரை (கட்டாயம் போட்டாக வேண்டுமாமே), போட்டோக்கள், விடியோக்கள் எல்லாம் ஸ்டாக்கிலிருக்கின்றன. நேரமின்மையால் பதிவிடமுடியவில்லை. அதெப்படி விடமுடியும்? கண்டிப்பாக எல்லாம் வரும்.

**********************

மணவாழ்க்கையில் களமிறங்கியிருக்கும் பதிவர்கள், அன்பு நண்பர்கள் அதிஷா, யாத்ரா, சேரல், அதிபிரதாபன் ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.! (ஊஹூம், சிரிக்கக்கூடாது. நான் திருமண வாழ்த்து சொன்னால் மட்டும் ஏன் உங்களுக்கு இப்படி சிரிப்பு வருகிறது?)

**********************

அரிதாக சிலர் நேரிலும், மெயிலிலும் நம் எழுத்துகளைச் சிலாகிக்கும் போது கொஞ்சம் மிதப்பது போலத்தான் இருக்கிறது. சமீபத்தில் மிதக்கச்செய்தவர் 'மறத்தமிழன்'. மேலும் உண்மையிலேயே புதிய பதிவுகளேதும் இருக்கிறதா என சிலர் அடிக்கடி வந்து பார்ப்பதாக தெரிய வரும்போது 'இன்னுமா இந்த ஊரு நம்பள நம்புது?' என்று தோன்றி அப்படியே கொஞ்சம் புல்லும் அரிக்கிறது. உங்களைச் சோதனை எலிகளாய்க் கருதி பல கவிதை, சிறுகதை முயற்சிகள் எல்லாம் செய்ய பலத்த திட்டமிருப்பதால், பயப்படவேண்டாம், எழுதாமலிருக்கவேண்டும் என்ற எண்ணமெல்லாம் ஏதுமில்லை.

எனினும் கொஞ்ச நாளாக சில பிரச்சினைகளால் தொடர்ந்து ஏதும் அதுவும் உருப்படியாக ஏதும் எழுத இயலாமலிருக்கிறது. மேலும் பிளாகரோடு போராடமுடியாமல் விண்டோஸ் லைவ் ரைட்டருக்குப் பதிலாக (ரைட்டருக்கு என்ன பிரச்சினையோ என் கம்ப்யூட்டருக்கு வரமாட்டேன் என்கிறது) ஏதோ ஒரு சாஃப்ட்வேரை (பிளாக்டெஸ்க்) இறக்கும் முயற்சியில் கம்ப்யூட்டர் கோமா ஸ்டேஜுக்கு போய்விட்டது. அதைச் சரிபண்ண இன்னும் சில நாட்கள் ஆகுமென்பதால் இன்னும் சில நாட்கள் இதே நிலை தொடரும். அதுவரை என்ஜாய்.!

*************************

சில இரவுகளில்
தொலைதூரம் அழைத்துச்செல்கிறாய்
அந்தத் திகைப்பில் இருக்கும்போதே
விடிந்துவிடுமே
என்ற கவலை எழுகிறது எனக்கு.

19 comments:

Anonymous said...

//நான் திருமண வாழ்த்து சொன்னால் மட்டும் ஏன் உங்களுக்கு இப்படி சிரிப்பு வருகிறது?)//

அதானே!!!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

சின்னப் பையன் சுட்டி ஆரூர் விஸ்வநாதன் தளத்திற்குச் செல்கிறது.

சென்ஷி said...

சின்னப்பையனின் உரல் இணைப்பு தவறாக உள்ளது. திருத்தவும்.

////நான் திருமண வாழ்த்து சொன்னால் மட்டும் ஏன் உங்களுக்கு இப்படி சிரிப்பு வருகிறது?)//

இடுக்கண் வருங்கால் நகுக தத்துவமா இருக்குமோ?!

முட்டை ஆம்லெட்டாகிற கவிதை அருமை :)

அமுதா கிருஷ்ணா said...

ரமாவை ஒரு லுக் விட சொல்லுங்கள் கோமாவிலிருக்கும் கம்ப்யூட்டர் உயிர்பெறட்டும்...

அக்பர் said...

தொடர்ந்து எழுதுங்கள் சார்.

சுரேகா.. said...

கலக்குறீங்களே தல!

அன்னிக்கு ரொம்ப ஸ்மார்ட்டா இருந்தீங்க!

ஆயில்யன் said...

//முட்டை ஆம்லெட்டாகிற கவிதை அருமை :)//

அதே! அதே!!

Sangkavi said...

கவிதை வழக்கம்போல் அழகு...

மறத்தமிழன் said...

ஆதி,

துறை சார்ந்த பதிவு,வட்டார வழக்கோடு புனையும் கதை,தங்கமனி அப்டேட்ஸ் மற்றும் மிக்ஸ்டு ஊறுகாய்(தொகுப்புகள்)போன்றவை மிகவும் சுவாரஸ்யம்.
நல்ல வாசிப்பனுபவத்தை தரக்கூடியவை.
தொடர்ந்து எழுதி கலக்குங்க...என்னை மாதிரி வாசிப்பதற்கு பல பேர் ரெடி.

வாசு அண்னன்ட்ட பேசி சீக்கிரம் உங்க புத்தக வெளியீட்டு சேதி சொல்லுங்க...

அப்புறம் எப்பூடி மாதிரி புதுப் புது வார்த்தைகளையும் ட்ரென்டுக்கு ஏத்த மாதிரி அறிமுகப்படுத்துங்க...

இறுதியாக கவிதை நன்று..

சந்தித்ததில் மகிழ்ச்சி..மீண்டும் சந்த்திப்போம்..

நர்சிம் said...

நல்லா எழுதி இருக்கீங்க ஆதி

காவேரி கணேஷ் said...

ஊஹூம், சிரிக்கக்கூடாது. நான் திருமண வாழ்த்து சொன்னால் மட்டும் ஏன் உங்களுக்கு இப்படி சிரிப்பு வருகிறது?).

இடம் ஆதியார் வீடு.

டம், டும், படார், ஜயோ, ஆதியார் அலறல் கேட்கிறது. காது கொடுத்து கேட்டால், மவனே, பதிவர் சந்திப்பு, புத்தக வெளியீடுன்னு போவியா, போவியா, திடும், திடும்னு அடி விழுகிறது. ஆதியார் , தலையை தடவி கொண்டே, கம்யூட்டர்ல் உட்கார்கிறார்.

குரல் கேட்கிறது, இப்ப தானே அடி வாங்குன, அதுகுள்ள ப்ளாக்கா?
போய் ஒழுங்கா வீட்டு வேலய பாரு,
திரும்பவும் ஆதியின் அழுகுரல் ஓங்கி கேட்கிறது.
நாம் திரும்பி பார்க்கமால் பின்னங்கால் பிடரியில் ஓடி வந்தோம்.

அப்புறம் ஏன் ஆதியார் திருமண வாழ்த்து சொன்னால் நாமெல்லாம் சிரிக்க மாட்டோம்.

வாழ்க புது மாப்பிள்ளைகளே.

அன்புடன் அருணா said...

/இனி இது போன்ற தொகுப்புப்பதிவுகளிலேயே தெரிவிக்கலாம் என்றிருக்கிறேன்./
அட இது நல்லாருக்கே!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி அம்மிணி.

நன்றி குருஜி. (எப்ப என் கம்ப்யூட்டர் சரியாகி எப்ப நான் திருத்தி.. ஹூம். விடுங்க! இப்ப எப்பிடி பதில் போடுறங்கிறீங்களா? ஆஃபீஸ்ல பிளாகருக்குள் போகமுடியாது. ஆனா பின்னூட்டம் போடலாம். எப்பூடி?)

நன்றி சென்ஷி.

நன்றி அமுதா.

நன்றி அக்பர்.

நன்றி சுரேகா. (யாரு? நானா? தகத்தகன்னு.? எம்ஜிஆர முன்னப்பின்ன பார்த்திருக்கீங்களா?)

நன்றி ஆயில்யன்.

நன்றி சங்கவி.

நன்றி மறத்தமிழன்.

நன்றி நர்சிம். (என்ன நக்கலா?)

நன்றி காவேரிகணேஷ்.

நன்றி அருணா.

பரிசல்காரன் said...

சிறந்த மொழி நடையில் வாழ்த்தியமைக்கு நன்றி ஆதி!

சப்ராஸ் அபூ பக்கர் said...

உங்களால் வாழ்த்தப் பட்டவர்களுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள். (கடைசியில் எழுதி இருந்த கவி வரிகள் அருமையாக இருந்தது )

RR said...

//இன்னுமா இந்த ஊரு நம்பள நம்புது?//

ச்சே ச்சே அதெல்லாம் அப்போ......

அமிர்தவர்ஷினி அம்மா said...

//நான் திருமண வாழ்த்து சொன்னால் மட்டும் ஏன் உங்களுக்கு இப்படி சிரிப்பு வருகிறது?)//

ரகசியத்தையெல்லாம் வெளியே சொல்லிட்டு பின்னாடி வாழ்த்து சொன்னா சிரிக்காம இருப்பாங்களா :))))))

எனக்கே சிப்பு சிப்பா வருது ;)

செல்வேந்திரன் said...

நாளைய தமிழ் இலக்கியத்தை ஆளப்...

அகநாழிகை said...

ம் நல்லாயிருக்கு ஆதி. வாழ்த்துகள்.