Tuesday, February 23, 2010

துரத்தும் துரதிருஷ்டம்

அதிர்ஷ்டம் ஒருவரைத் துரத்திச்சென்று அடைகிறதோ இல்லையோ, துரதிருஷ்டம் மட்டும் இலக்கை அடையாமல் விடுவதில்லை என நினைக்கிறேன்.

கம்ப்யூட்டர் ரிப்பேர் சரி செய்த மறுநாளே நெட் வேலை செய்யவில்லை. கால் புக் பண்ணிவிட்டு சும்மா உட்கார்ந்திருக்கலாம் நான். கையை வைத்துக்கொண்டு எங்கே சும்மா இருக்கமுடிகிறது? மூன்று நாள் ஆகியும் இன்னும் ஒரு நாதியைக்காணோம், இதை முன்பே எதிர்பார்த்து பக்கத்து வீட்டு கனெக்ஷனில் மோடம் வேலை செய்கிறதா என பார்க்கும் ஆவலில் அவர்கள் வீட்டிலிருந்த இணைப்பில் மாட்டினேன். டுப்பென்ற சத்தத்துடன் பக்திமணம் கமழ ஒரே நேரத்தில் நான்கு பத்திகளை கொளுத்தியதைப்போல புகை எழும்பியது. அந்தச்சின்ன மோடத்திலிருந்துதான் எவ்வளவு புகை? அவர்கள் வீட்டிலிருந்தது வோல்டேஜ் வித்தியாசம் கொண்ட பவர் கனெக்டர் போலிருக்கிறது. இப்போது BSNL ஆள் வந்து கேட்டால் என்ன சொல்வது என தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறேன்.

அது ஒரு பக்கம் இருக்கட்டும் என்றால் ஞாயிற்றுக்கிழமை எப்படி பொழுது ஓட்டுவது? ரமா இருந்தாலாவது சுமாரான சுபமாகவாவது பொழுது கழியும். இப்போது என்ன பண்ணலாம்? பார்க்கவேண்டியிருந்த சில டிவிடிக்களை எடுத்து வைத்துக்கொண்டு ஒன்றை கம்ப்யூட்டருக்குள் திணித்தால் 'ஹிஹி.. எனக்கு டிகோடிங் பண்ணத்தெரியவில்லை' என்று அது பல்லிளித்தது. முந்தின நாள் வந்து போன கம்ப்யூட்டர் பிரகஸ்பதி இந்த அழகில் வேலை செய்து வைத்திருக்கிறது.

கடுப்பாகி விட்டு டிவியை ஆன் செய்யலாம் என ரிமோட்டை எடுத்தால்.. நம்புங்கள் அது கை தவறி கீழே விழுந்தது. எதுவும் உடைந்தது போல தெரியவில்லை, ஆனால் வேலை செய்யவில்லை. இது ஏதோ உள்நாட்டு சதி, ஊஹூம் இதற்கெல்லாம் அசரக்கூடாது என முடிவு செய்து பொங்கிவந்த அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு (ரமா இல்லாத நாளில் கூட கடைக்குப் போக நேர்ந்தால்) தாம்பரத்துக்குக் கிளம்பினேன்.

அலைந்து திரிந்து அதே மாடல் ரிமோட்டை வாங்கிக்கொண்டு திரும்பினேன். ஞாபகமாக பழைய ரிமோட்டில் இருந்து பாட்டிரிகளைப் போட்டு முயற்சித்தால் நம்புங்கள் அதுவும் வேலை செய்யவில்லை. திடீரென ஞானம் வந்தது. ஒருவேளை பாட்டிரி தீர்ந்திருந்தால்.. இல்லையே இப்படி திடுமென தீராதே.! கையை நீட்டி, எக்கி, தலைகீழாக நின்று, பக்கத்தில் டிவியுடன் ஒட்டிவைத்து என பல பிரயத்தனங்களுக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் பாட்டிரி தீரும். இருப்பினும் சந்தேகத்தின் பலனை பாட்டிரிக்கு வழங்கி மீண்டும் கடைக்குப் போய்விட்டு திரும்பினால் அப்போதும் டிவி பல்லைக் காட்டியது. அப்போதுதான் உறைக்கிறது இந்த டெக்னிகல் மண்டைக்கு, டிவியின் சிக்னல் ரிஸீவரில் கோளாறு.

மீண்டும் ஒரு கால் புக் பண்ணிவிட்டு டிவியில் இருக்கும் பட்டன்களால் இயக்கி படம் பார்த்துவிடுவது என்று முடிவு செய்தேன். ஒரே நிமிடம்தான். எல்லாம் முடிந்தது. மெனுவை அழுத்தினால் சானல் ரிவர்ஸில் சென்றது, சானல் அப் செய்தால் மெனு வந்தது. சவுன்ட்டைக் குறைத்தால் கூடியது. கூட்டினால் இன்னும் கூடியது.. ஏதோ ஹிந்திச்சானலில் வீடே அலற டப்பென்று மெயினை ஆஃப் செய்துவிட்டு உட்கார்ந்தேன்.

ஏதாவது சினிமாவுக்குப்போய்விட வேண்டியதுதான். பேப்பரை எடுத்தேன். ஊஹூம் ஒன்றும் வேலைக்காகவில்லை. பாவனா மனதில் வந்து அசலுக்குப் போகலாமா என்று ஒரு கணம் தோன்றியது. அடுத்த கணமே டிவி விளம்பரங்களில் வந்த குண்டு குண்டான ஆட்களும் (இரண்டு அஜித், சம்பத், சுரேஷ், பிரபு, இன்னும் பலர்) அவர்களின் மண்டைகளும், டிஸைனர் தாடிகளும் நினைவுக்கு வந்து அந்த எண்ணத்தை அடியோடு ரப்பர் வைத்து அழித்தேன். என்னதான் பண்ணுவது? துரதிருஷ்டம் பயங்கரமானது, கேபிளின் புத்தகத்தைக் கையிலெடுத்தேன்.

.

44 comments:

♠ ராஜு ♠ said...

ம்ம்..பொறவு..?

ஆதிமூலகிருஷ்ணன் said...

பேஜ் லோடிங் ரொம்ப தகறாறு பண்ணியதால் புது டெம்பிளேட். எப்பிடியிருக்குது? ஓகே?

அகநாழிகை said...

ஆதி, அப்புறம் எப்பூடி பதிவை போட்டீங்க.

//ஒரே நேரத்தில் நான்கு பத்திகளை கொளுத்தியதைப்போல புகை எழும்பியது//

ஆதியின் ‘டச்‘ இதுதான்.

டெம்ப்ளேட் நல்லாயிருக்கு ஆதி.

டம்பி மேவீ said...

puthu plate nalla irukkunga...


piragu ennachu ????

எறும்பு said...

அண்ணாச்சி யாரவது உங்களுக்கு சூன்யம் வச்சிருக்க போறாங்க.. எதுக்கும் ஒரு நல்ல நம்பூதிரியை பாருங்க..
:)

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி ராஜு, வாசுதேவன், மேவீ.!

Cable Sankar said...

யோவ்.. இதெல்லாம் ரொம்ப அநியாயம்யா.. என் புக்கு உனக்கு துரதிருஷ்டமா..? இருக்கட்டும்..இருக்கட்டும் ஒரு நாள் உங்களை ரூமுக்குள்ள அடைச்சி வச்சி.. விரல் வித்தை பையனோட அப்பா படத்தை 500 வாட்டி பாக்க வைக்கிறேன்..

அ.மு.செய்யது said...

கடைசில செம்ம டிவிஸ்ட்டு..இத நாங்க எதிர்பார்க்கல..!!!

பல தத்துவங்கள் அடங்கியது அந்த கடைசி வரி.

வானம்பாடிகள் said...

:))

தராசு said...

ஆனா இத்தனை களேபரத்துலயும் அந்த கடைசி வரி......

கலக்குங்க தல.

தராசு said...

டெம்பிளேட் சூப்பரப்பு.

வெள்ளிநிலா ஷர்புதீன் said...

கிழிஞ்சது ஆதி., (அவரோட சைட்டை அதிகமா படிச்சதாலா?) உங்களுடைய இந்த புலம்பல்கள் "சார்" உடைய புலம்பல்களை ஞாபகபடுத்துகிறது. ( டிஸ்க்ளைமர் - இதில் எந்த வித உள்குத்தும் இல்லை என என்னவென்றே தெரியாத டக்கிலா மேல் சத்யம் செய்கிறேன். ( ஆமா, நமக்கு கட்டுரை வந்துடும்மில்லே...?!)

வரதராஜலு .பூ said...

//ஒரே நேரத்தில் நான்கு பத்திகளை கொளுத்தியதைப்போல புகை எழும்பியது//

:-)

//துரதிருஷ்டம் பயங்கரமானது, கேபிளின் புத்தகத்தைக் கையிலெடுத்தேன்.//

ரொம்பவே பயங்கரம்தான்.

தமிழ் பிரியன் said...

கடைசி லைனில் தான் முக்கிய மெசேஜ் இருக்கு போல... ;-)

டெம்ப்ளேட் வேகமா ஓபன் ஆகுது.

பாபு said...

//டெம்ப்ளேட் வேகமா ஓபன் ஆகுது.//

athe

vanila said...

என்னதான் பண்ணுவது? துரதிருஷ்டம் பயங்கரமானது, கேபிளின் புத்தகத்தைக் கையிலெடுத்தேன்.
;-)))

வெள்ளிநிலா ஷர்புதீன் said...

கேபிளின் புத்தகத்தைக் கையிலெடுத்தேன்.


மேல உள்ள வரியை அய்யன் சுஜாதா எப்படி மாத்த சொன்னாருன்னா..." தூரத்து டேபிளில் தெரிந்த கேபிளின் புத்தகம் என்னை பார்த்து சிரித்தது."

நல்லாருக்கா?

மோகன் குமார் said...

கல்யாணத்தப்போ எல்லா பொருளும் புதுசா இருக்கும். கொஞ்ச வருஷம் ஆச்சுன்னா எல்லாம் ஒன்னு ஒண்ணா ரிப்பேர் ஆகும்.

இதிலிருந்து உங்களுக்கு கல்யாணம் ஆகி பல வருஷம் ஆய்டுச்சுன்னு தெரியுது

கார்க்கி said...

ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா

எடுக்க வேண்டிய உறுதிமொழிகளில் இதை விட்டுடுஙக்ளே சகா

Anonymous said...

ஒருவேளை பிங்க் சட்டை போட்டிருந்தீங்களோ. இதை படிச்சு பாருங்க

http://ppattian.blogspot.com/2010/02/blog-post_23.html

துபாய் ராஜா said...

கேபிளார் புத்தக விமர்சனத்தோட டிரைய்லரே ட்ரியல் ஆக்குதே ஆதி.. :))

சங்கர் said...

//ஒரே நேரத்தில் நான்கு பத்திகளை கொளுத்தியதைப்போல புகை எழும்பியது//

பதிவுகளைனு படிச்சிட்டேன் :))

துபாய் ராஜா said...

//பக்கத்து வீட்டு கனெக்ஷனில் மோடம் வேலை செய்கிறதா என பார்க்கும் ஆவலில் அவர்கள் வீட்டிலிருந்த இணைப்பில் மாட்டினேன்.//

அடுத்தவன் வயலுக்கு போற தண்ணியை நம்ம வயலுக்கு திருப்புறது, கரெண்ட்டு கம்பத்துல கொக்கி போடுறது,கேபிள் ஒயர்ல ஊக்கு குத்துறது மாதிரி இப்போ நெட் கனெக்சனிலுமா....

ம்ம்ம். நல்ல பரிணாம வளர்ச்சி. :))

அப்பாவி முரு said...

உங்க அதிஷ்ட்டம் (ரமா சித்திதான்)ஊருக்கு போயிருச்சே, அதான் காரணம்...

:)))))))

gulf-tamilan said...

/அந்தச்சின்ன மோடத்திலிருந்துதான் எவ்வளவு புகை?/

:)))))))))))))))))))))))))

அமுதா கிருஷ்ணா said...

ரமா இல்லாமல் பயம் விட்டு போச்சு,அடுத்த வீடு மோடம்,இன்னொரு ரிமோட்,புது புத்தகம் ரொம்ப ஃப்ரீ போல...

தண்டோரா ...... said...

அப்புறம் கைக்கு என்ன ஆச்சு தல?

காவேரி கணேஷ் said...

வழியே இல்லாமல் கேபிள் புத்தகத்தை எடுத்த ஆதியாருக்கு வாழ்த்துக்கள்.

படிச்சுட்டு , மத்த வேலைகளையும் எல்லா வேலைகளையும் முயற்சி செய்துவிட்டு, வேற வழியே இல்லாமல் விமர்சனம் எழுதவும்.

அறிவன்#11802717200764379909 said...

ஏங்க ஆதி,
கேபிள் எதுவும் தரேன்னு சொல்லிட்டு டபாய்க்கிறாரா என்ன? இப்டி வாரிருக்கிங்க....

அப்புறம் இன்னொன்று,வலைப்பூ பெயருக்கு இன்னைக்குதான் நியாயம் செஞ்சிருக்கீங்க..

மாதேவி said...

முடிவுக்கு வந்துவிட்டதே.

இராகவன் நைஜிரியா said...

வாழ்க்கைன்னு ஒன்னு இருந்தா இதெல்லாம் சகஜமப்பா..

KVR said...

புது டெம்ளெட் சூப்பர்.

புத்தகத்தைப் படிச்சிங்களா இல்ல அதையும் தாண்டி எதாவது துரதிர்ஷ்டம் துரத்துச்சா?

PPattian : புபட்டியன் said...

உங்க துரதிர்ஷ்டம் எங்களுக்கு சுவாரசியமா இருக்குது... :)

Sure said...

//துரதிருஷ்டம் பயங்கரமானது, கேபிளின் புத்தகத்தைக் கையிலெடுத்தேன்.//
அப்ப "துரத்தும் துரதிருஷ்டம்" பார்ட் 2 வருதா

bahurudeen said...

enakku ungka ezhuththa romba pidicchurukku naanum konja naalaikku munnaadithaan(3 varusham) kalyaanam panninavan.

bahurudeen said...

mm enna panna vidaathu ammani.
kuRippu: ennudaiya intha pinnuttam ungkal moththa pathiviRkkum serththu.

திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said...

:-)))

டெம்ப்ளேட் நல்லாருக்குங்க..

ஆதிமூலகிருஷ்ணன் said...

எறும்பு, கேபிள் (ஹிஹி), செய்யது, வானம்பாடிகள், தராசு, சர்ஃப் (வரும் ஆனா வராது.. ஹிஹி வந்துடும்ங்க, பயப்புடாதீங்க), வரதராஜுலு, தமிழ்பிரியன் (அதான் வேணும்), பாபு, வனிலா, மோகன் (ஹிஹி), கார்க்கி (புரியலையே), அம்மிணி, ராஜா (பர்மிஷன் வாங்கிட்டு வீட்டுக்குள்ளப் போயிதான்யா மாட்டினேன்), சங்கர், முரு, கல்ப்தமிழன் (ரசனை), அமுதா (5ம் தேதி வந்துடறாங்க :-(, தண்டோரா, காவேரி, அறிவன் (கரெக்டா புடிச்சுட்டீங்க), மாதேவி, இராகவன், கேவிஆர், புபட்டியன், ஷ்யூர், பஹ்ருதீன் (மொத்த பதிவுகளுக்கும் ஒரு பின்னூட்டமா? யோவ் அநியாயமாயில்லையா.. உங்களுக்கு? ரொம்ப பிடித்த பதிவுகளுக்காவது ஒன்றிரண்டைப்போடவும், ஹிஹி), சம்பத்..

அனைவருக்கும் நன்றி.!!!!!

பழமைபேசி said...

வாசித்ததின் பேறு அடுத்த இடுகையில் தொடருட்டும்...இஃகி!

அன்புடன் அருணா said...

புது டெம்பிளேட் சூப்பர்!
துரதிருஷ்டம் இப்பிடித் துரத்தித் துரத்தி அடிச்சிருக்கே!

இய‌ற்கை said...

:-) nice:-)

தாரணி பிரியா said...

டெம்ப்ளேட் அழகா இருக்கு. ரமா இல்லைன்னா எத்தனை பிரச்சினைகள் இப்பவாச்சும் புரிஞ்சுகோங்க‌

KKPSK said...

உங்க ஊர் விசிட் ப்ளாக் என்னாச்சு?

எனக்கும் கார்க்கி சொன்னது புரியலை!

பக்கத்து வீட்டில் பொதுமாத்து கொடுக்கிற வழக்கம் இல்லை போல இருக்கு!

misfortunes never come single-ன்னு 10th syllabus-ல சும்மாவா சொன்னாங்க!

அப்பாவி தங்கமணி said...

"ரமா இருந்தாலாவது சுமாரான சுபமாகவாவது பொழுது கழியும்"


- ரமா இல்லேன்னா எத்தனை கஷ்டம்னு இப்பவாது புரிஞ்சா சரி (தங்கமணிகள் சங்கம் சார்பாக....ஒரு அப்பாவி தங்கமணி)