Monday, March 22, 2010

பிரமாத குருவும் 11 சீடர்களும்

ஒரு ஊர்ல ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய ஆசிரமம் இருந்தது. ஆசிரமம்னா எல்லா இடத்திலயும் இருக்குற மாதிரி இல்லை, இது கொஞ்சம் வித்தியாசமானது. எப்படின்னா இங்க நிறைய சாமியாருங்க இருப்பாங்க. ஆசிரமத்துக்குள்ளயே ஒவ்வொரு சாமியாரும் ஏரியா பிரிச்சிக்கிட்டு தனி குடில் போட்டுக்கிட்டு அவங்கவங்க சீடருங்கள வச்சிக்கிட்டு பொழப்பு நடத்திக்கிட்டிருப்பாங்க. அப்படின்னா ஒரு சாமியார் மட்டும் இருக்கிற ஏரியாவை ஆசிரமம்னு சொல்லுவீங்களா? இல்ல இருக்குற ஏழெட்டு சாமியாருங்களின் மொத்த ஏரியாவையும் சேத்து ஆசிரமம்னு சொல்லுவீங்களா? அதனாலதான் வித்தியாசம்னு சொன்னேன். சமயங்கள்ள ரெண்டு ஏரியா சாமியாருங்களுக்குள்ள சண்ட வந்து கசமுசன்னு ஆகுறதும் நடக்கும்.

இதையெல்லாம் தவிர மொத்த ஆசிரமத்துக்கும் சேர்த்து ஒரு தலைமை குருவும் உண்டு. அவருக்கு மொத்தத்தையும் மேய்க்கிற அளவுக்கு அவ்வளவு பவர் இருக்கா? இல்லையா? அல்லது இருக்குற மாதிரி இருக்கா? என்பதையெல்லாம் பின்னர் பார்க்கலாம். இப்போதைக்கு அவர் பெயர் சீனிச்சாமின்னு வச்சுக்குங்க. அதான் சீனியர் சாமி.!

ஆசிரமத்த நீங்க பாத்தீங்கன்னா அசந்து போயிடுவீங்க. ஊரைவிட்டுத் தள்ளி தூரமா மலையடிவாரத்துல சூப்பரா இருக்கும். ஒரே மரம் செடி கொடின்னு பச்சைப்பசேல்னு இருக்கும். பக்கத்துல குளுகுளுனு ஒரு ஆறு வேற ஓடிக்கிட்டிருக்கும். ஆசிரமத்துக்குள்ள பூஞ்செடிகள்லாம் வச்சி தோட்டமெல்லாம் போட்டு அழகா இருக்கும். தோட்டவேல பாக்குறது, மத்த பொது காரியங்கள், ஜாலியா பொழுதுபோக்குறது என ஏரியா வித்தியாசமில்லாமல் இந்த சீடப்பசங்க மட்டும் பல நேரம் ஒண்ணுமண்ணா இருப்பாங்க. சரி வாங்க நம்ப ஏரியாக்கு போவோம்.

ஆசிரமத்துக்குள்ள நுழைஞ்சி நாலைஞ்சு ஏரியாக்களை கடந்து போனீங்கன்னா நம்ப பிரமாதரோட ஏரியா வரும். பிரமாத குருவைப்பத்தி நிறைய கதகதயா சொல்லுவாங்க அவரோட சீடர்கள். அங்க இருக்கற மற்ற குருக்களயெல்லாம் விட அவருதான் திறமசாலின்னும், ஞானமிக்கவர்னும் சொல்லுவாங்க. அதையெல்லாம் விட ஒரு முக்கியமான விஷயம் அவர் எந்த குருவுமே இல்லாம சுயம்புவா ஞானமடைஞ்சார்ங்கிறதுதான். இமயமலையில தன்னந்தனியா 7 வருசம் தவமிருந்திட்டு வந்திருக்கார்னும் சொல்லுவாங்க. அவருக்கு ஏன் பிரமாதர்னு பேரு வந்ததுங்கிறதுக்கே தனிக்கதை இருக்கு. அவரப்பத்தியும், அவரோட 11 சீடர்களப் பத்தியும், பக்கத்து ஆசிரமங்களைப் பற்றியும், அவைகளுக்கிடையேயான தொடர்புகளைப் பற்றியும் போகப்போக நீங்களே தெரிஞ்சுக்குவீங்க.. இப்ப இன்னைக்கு கதையப் பாக்கலாம்.

பிரமாத குரு தன்னோட 8 வது சீடன் ஜெயேந்திரனை கூப்பிட்டு, ஆசிரம வாசலில் அன்றாட நிகழ்ச்சி நிரலை வரும் பக்தர்கள் எளிதாக தெரிந்துகொள்ள வசதியாக ஒரு அறிவிப்புப்பலகை தொங்க விடுமாறு பணித்தார். பணித்தார் என்றால், "ஆசிரம அஜெண்டாவை பக்தர்கள் தெரிந்துகொள்ளும் படிக்கு வாசலில் ஒரு போர்ட் வை ஜெயேந்திரா.." என்று சொன்னார் என்று நினைக்கிறீர்களா, அதுதான் இல்லை. இவ்வாறு சொல்கிறார்,

"குழந்தாய் ஜெயேந்திரா, நான் இமயத்திலிருந்து திரும்பியதிலிருந்து சுமார் 13 வருடங்கள் நாடெங்கும் சுற்றியலைந்து கியூஸி பகவான் புகழ் பரப்பி வந்திருக்கிறேன் என்பதை நீ அறிவாய். அந்தக்கால கட்டங்களில் நான் சுமார் ஏழாயிரம் ஆசிரமங்களைச் சந்தித்திருக்கிறேன். அதிலே எழுபதாயிரம் போர்டுகளைப் பார்த்திருக்கிறேன். பகவான் ஸ்லோகனுக்கு ஒன்று, குருவின் புகழ் பரப்ப ஒன்று, தலபுராணத்துக்கு ஒன்று, வேண்டுகோளாக ஒன்று, அறிவிப்பாக ஒன்று என அவை ஏராளம் ஏராளம். போர்ட் என்பது ஆசிரமத்தின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகும். வரும் பக்தர்களின் அறியாமையை விளக்கி, அவர்களை அலைக்கழிக்காமல் திசைகாட்டும் விஷயங்களை குறித்திட அறிவிப்புப்பலகைகள் அவசியம். இந்த அடிப்படை விஷயம் கூட உங்கள் சிந்தைக்கு உதிக்காத விந்தையை நான் என்னென்று சொல்வேன்.."

'இம்மா நாளு இன்னா பண்ணிக்கினுருந்த.. மின்னாலயே கூவினுருந்தா பண்ணிக்கிடாசியிருப்பேன்ல..' என்று மனதுக்குள் நினைத்த ஜெயேந்திரன் வெளியே, "இப்ப இன்னா போர்ட் வெக்குனூன்றியா குரு.?"

"ஆம் ஜெயேந்திரன், போர்ட் என்றால் என்னவென்று தெரியுமெனினும் நான் அது எப்படியிருக்கும் என்று உனக்கு விளக்கி.."

'வாணா.. வுட்டுரு, என்ன கொலகாரனா ஆக்காத..' என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு, "தெரியும் குரு, வெச்சிர்றேன்" என்று சொல்லிவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் வெளியே ஓடினான் ஜெயேந்திரன். இப்போது தெரிந்திருக்குமே பிரமாதர் எவ்வளவு சுருக்கமாக பேசுவார் என்று. அவரது பல தனிச்சிறப்புகளில் இதுவும் ஒன்று.

மாலை சிறப்புப்பூஜைக்காக நந்தவனத்திலே பூக்களைப் பறித்துக்கொண்டிருந்த அஜயேந்திரனும், விஜயேந்திரனும் குடிலுக்குள்ளிருந்து வெளியே ஓடிவந்த ஜெயேந்திரனை பிடித்து விசாரித்தனர். இவன் விபரத்தைக்கூறி இது போல போர்ட் வைக்கவேண்டுமாம் உதவுங்கள், எதை எப்படி வைப்பதென புரியவில்லை என்று சொல்ல, நானே பூ பறிச்சு டயர்டா போய் கிடக்குறேன் வேற ஆளப்பாரு என்று சொல்லிவிட்டான் விஜயேந்திரன். அஜயேந்திரனோ காலையிலிருந்து எனக்கு வயித்தவலி என்னால முடியாது என்று சொல்லிவிட, ஜெயேந்திரன் தனியாகவே வேலையைத் துவங்கி பாதியைத்தான் முடிக்கமுடிந்தது. மறுநாளும் வேறு வேலையிருந்ததால் இதை மறந்துவிட்டான். இப்படியாக நாட்கள் சென்றன.

பின்னொரு நாள் பிரமாதர் அஜயேந்திரனைக் கூப்பிட்டு, "குழந்தாய் அஜயேந்திரா, நான் இமயத்திலிருந்து திரும்பியதிலிருந்து.." என்றதில் அஜயேந்திரன் காதில் ஸேம் பிளட்டுடன் விஜயேந்திரன், ஜெயேந்திரன் இருவரிடமும் வந்து சொல்லி திரும்பவும் வேலையைத் துவங்கினார்கள். இப்போதும் அவர்களிடமிருந்த பலகை அறுக்கும் கருவி பழுதுபட்டதால் வேலை தடைபட, பின்னர் அதை மறந்து போய்விட்டார்கள். 

அன்றிலிருந்து ஒரு மண்டலத்தில் நிகழ்ந்த ஒரு மகா யக்ஞ சொற்பொழிவில் தொடர்ந்து மூன்று மணிநேரம் சொற்பொழிவாற்றிவிட்டு மற்ற சாமியார்களும் பேச வேண்டுமே என்ற ஒரே காரணத்துக்காக உரையை சுருக்கமாக முடித்து அமர்ந்தார் பிரமாதர். அன்றைய நிகழ்ச்சி முடிவில் கேள்வி நேரத்தில் ஒரு சாதாரண பக்தர் எழுந்து பிரமாதரை நோக்கி சொன்னார்,

"சாமி, ஒரு சின்ன யோஜனை. சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதேங்கோ, எப்பப்ப பூஜை, புனஸ்காரம் நடக்கும்? எப்போ சாமியை பக்தாள்லாம் பார்க்கலாம், பஜனை எப்போன்னெல்லாம் வாசலிலே ஒரு போர்டிலே எழுதிவச்சுட்டேள்னா வர்றவாளுக்கெல்லாம் யூஸ்ஃபுல்லா இருக்குமோன்னோ.."

கூட்டத்தில் சீடர்களைத் தேடிய பிரமாதரின் கண்களுக்குத் தட்டுப்படாமல் அதற்குள் எஸ்கேப்பாகியிருந்தனர் ஜெயேந்திரன், அஜயேந்திரன், விஜயேந்திரன் மூவரும்.

.

23 comments:

பாலா said...

மாம்ஸ் அதிஷா சாயல் வருது ப்ளீஸ்
இதே போல வேணாமே
உங்க ஸ்டைல் ரைட்டிங்கே வேற
அதுதான் நமக்கு பிடிக்கும்

Truth said...

எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வாழ்த்துக்கள். நல்ல ப்ளோ.

நாமக்கல் சிபி said...

நல்லா இருக்கு!

மங்களூர் சிவா said...

அனானி கமெண்ட் இல்லையா??? என்ன கொடுமை நித்யானந்தா இது???

Jeeves said...

பாலா கூவுனத நானும் ஒருக்கா கூவிக்கறேன்.

Mahesh said...

நல்லாத்தான் கீது...

ஆனா இஷ்டைல் மாத்தாத வாத்யாரே... அப்பால உன் இஸ்டம் :)))))

ஆதிமூலகிருஷ்ணன் said...

பாலா (நமக்குனு ஒரு ஸ்டைல் இருக்குதுன்னு ஒத்துக்கிட்டதுக்காக மன்னிச்சு வுட்டுடறேன்.. ஹிஹி)

ட்ரூத்,
சிபி,
சிவா (உங்க பேர்லயே போடுமய்யா),

ஜீவ்ஸ்,
மகேஷ்

அனைவருக்கும் நன்றி.

என்ன கொடுமை இது? காலையிலருந்து வெறும் 6 பின்னூட்டம்தானா? அப்ப.. நா பிரபல பதிவர் இல்லையா..? அவ்வ்வ்வ்....

சிங்கை நாதன்/SingaiNathan said...

இதோ வந்துட்டேன் :)

தராசு said...

ஹலோ, முதல்ல தாமிரான்னும், அப்பலிக்கா ஆதி மூல கிருஷ்ணன்ங்கற பெயர்ல ஒருத்தர் இங்க எழுதிகிட்டிருந்தாரே, அவர பார்த்தா கொஞ்சம் விசாரிச்சதா சொல்லுங்கப்பா.

அமிர்தவர்ஷினி அம்மா said...

:)

அன்புடன் அருணா said...

மண்டபத்துலே யாராவது எழுதிக் கொடுத்தாங்களா?????ஹி..ஹி..

"உழவன்" "Uzhavan" said...

தொடராய் இதை எழுதவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் :-)

மணிஜீ...... said...

/ ஜெயேந்திரன், அஜயேந்திரன், விஜயேந்திரன் மூவரும்.//

ஏன் செல்வேந்திரனை விட்டீங்க ஆது ?

விக்னேஷ்வரி said...

ஒரு சாமியார் மட்டும் இருக்கிற ஏரியாவை ஆசிரமம்னு சொல்லுவீங்களா? இல்ல இருக்குற ஏழெட்டு சாமியாருங்களின் மொத்த ஏரியாவையும் சேத்து ஆசிரமம்னு சொல்லுவீங்களா? அதனாலதான் வித்தியாசம்னு சொன்னேன். //
வேண்டாம் ஆதி, கார்க்கி கூட சேராதீங்க.

நீங்களும் மொக்கைல இறங்கிட்டீங்களா... :(

ஆதிமூலகிருஷ்ணன் said...

சிங்கைநாதன்,
தராசு (ஆனாலும் இப்பிடி டேமேஜ் பண்னக்கூடாது அண்ணே),
அமித்துஅம்மா,
அருணா,
உழவன் (எவ்ளோ நாளா எம்மேல காண்டுல இருக்கீங்க.. :-))
மணிஜீ,
விக்னேஷ்வரி..

நன்றி.!

கும்க்கி said...

வெயிட்லெஸ்...

கும்க்கி said...

வழக்கமான எழுத்து மொழியை காணோம் என்ற எதிர்பார்ப்பு உருவாவதில் தவறேதுமில்லை அல்லவா...
பழகிய மொழி..விடுத்து மாறுகையில் கொஞ்சம் அதிருப்தி உருவாவது இயல்பு..
சொல்ல வந்த விஷயங்களை இன்னும் அழுத்தத்துடனே சுருக்கமாக சொன்னாலும் புரிந்துகொள்ளுமளவு வாசக வட்டம் தயாராகிவிட்டது என்பதை எப்படி சொல்லி புரியவைப்பது...
மணிஜி பக்கங்களை உதாரணமாக சொல்லலாம் ..விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்..

~~Romeo~~ said...

:) அருமை

cheena (சீனா) said...

அன்பின் ஆதி

பிரமாத குரு பிரமாதமாக பணியினைச் செய்கிறார். அவரது கொள்கைகளைப் பரப்பத்தான் தகுந்த சீடர்கள் இல்லை. எல்லா இந்திரர்களும் சரியாக பணியினைச் செய்தால் - பிரமாத குரு இதைப்போல இன்னும் ஒரு 11 ஆசிரமங்கள் உதயமாக - ஒவ்வொன்றிலும் 11 ஆசிரமங்கள் - சீனிச்சாமி - பெருந்தலைசீனிச்சாமியாக - தலைமைப் பொறுப்பில் அமர்ந்து - அனைத்து ஆசிரமங்களிலும் அறிவிப்புப் பலகைகள் வ்க்கும் பணியினைச் சிறப்பாகச் செய்வார். இது நிறைவேறும் என்று அவருக்குத் தெரியும்.

கார்க்கி said...

//வேண்டாம் ஆதி, கார்க்கி கூட சேராதீங்க.

நீங்களும் மொக்கைல இறங்கிட்டீங்க//

ஆவ்வ்வ்வ்

இல்லைன்னா இவரு சாகித்ய அகாடெமி அவார்டு வாங்கிட்டுதான் வீட்டுக்கு திரும்புவாரு.,.

சகா.. இவரை உடனடியாக மன்னிப்பு கேட்க சொல்லுங்க. இல்லைனன நான் எதிர்பதிவு போடுவேன்..
டுவேன்

வேன்..

ன்...:))

ஸ்ரீமதி said...

என்ன ஆச்சு அண்ணா? எதாவது உள்குத்து பதிவா? பதிவுலகத்துல இருந்து ரொம்ம்ம்ம்பபபபபப தூரம் விலகி இருக்கறதால விஷயம் புரியல.. இல்ல இது சாதா'ரண' பதிவு தானா? ஆனா மண்டபத்துல எழுதி வாங்கின மாதிரி இருக்கே... ;)))

நர்சிம் said...

பிரமாத’ம் ஆதி.. ;)

KKPSK said...

comments-ல கொசுக்கடி அதிகமோ!..நீங்க புதுசா ஏதாவது பண்ணிகிட்டே இருங்க.
தொடர்ந்து இதை எழுதவும்.