Wednesday, March 3, 2010

அவன் பெயர் மீரா கதிரவன்

சமீபத்தில் ஒரு நாள் கண்ணனிடம் இருந்து போன் வந்தது. மானேஜர் கூப்பிட்டாக்கூட 5 நிமிஷம் கழிச்சுப்போகலாம், இவன் கூப்பிட்டுப்போகலைன்னா டான்ஸ் ஆடிவிடுவான். வீட்டுக்குப்போனால் தாடி வைத்த ஒரு அழகான நபருடன் பேசிக்கொண்டிருந்தான். நான் போகவும் 'இவன்தான் பிரபல பிளாகர் ஆதி' என்று வேண்டுமென்றே 'பிரபல'வை அழுத்திச்சொல்லி அறிமுகம் செய்துவைத்தான். கடுப்பாகும் போதே அடுத்து 'இது யாருன்னு சொல்லு பாக்கலாம்' என்று கேள்வி வேறு. எனக்குப் பிடிக்காததையே செய்வதில் பரம திருப்தியடையும் இரண்டாவது நபர்.

ஹிஹி என்று நான் இளித்துக்கொண்டிருக்கும்போதே ரொம்ப சிரமம் வைக்காமல் 'நான் மீரா கதிரவன்' என்று சிரித்தார் அவர். அட, எத்தனை தடவை போனில் பேசியிருக்கிறோம் என்று பின்னர் சகஜமானேன். அவர் இதோ வரும் வெள்ளியன்று வெளியாகவிருக்கும் 'அவள் பெயர் தமிழரசி' படத்தின் இயக்குனர். அவர் கையில் ஒரு சிடி இருந்தது. ஆஹா.. படம் வெளியாகும் முன்பே பார்த்துவிடலாம், அதுவும் தியேட்டர் அலைச்சல், செலவு இல்லாமலேயே என்று நான் மகிழவும், 'முதல்ல படத்தை பார்த்துடலாம், அப்புறம் பேசுவோம்' என்று கண்ணன் சொல்லவும் ஆர்வமாகித்தலையாட்டினேன்.

ஒரு அழகிய 5 நிமிடங்கள். அதற்குள் முடிந்துபோய்விட்டது. அதானே பார்த்தேன்.. பில்ட் அப் இல்லாமல் என்னைக்கு நாம் நினைத்தது நடந்திருக்கிறது.? அவர் கொண்டு வந்திருந்தது ட்ரெயிலர்தான். இவங்கள்லாம் படம் தியேட்டர்ல ரிலீஸாகுறதுக்கு முன்னால் லவ்வருக்குக்கூட படத்தைப் போட்டுக்காண்பிக்க மாட்டார்கள் போலிருக்கிறது. அவ்வளவு அழுத்தம். நிறைய பேசிக்கொண்டிருந்தோம். ஏற்கனவே இந்தப்படத்திற்காக படம் துவங்கப்படும் முன்பே முன்னால் மீரா எடுத்த இதே படத்துக்கான முன்னோட்டத்தைப் பார்த்திருக்கிறேன். 10 நிமிடங்கள் ஓடும் அதிலேயே பல ஆச்சரியங்கள் நிறைந்திருந்தன. ஒரு முன்னோட்டத்திற்காக மேற்கொள்ளப்பட்ட கடும் உழைப்பே என்னை வியக்கச்செய்தது. சினிமா எளிய வேலை அல்ல. மீரா ஒரு எழுத்தாளர், சிறுகதைகள் எழுதியிருக்கிறார். லோகித்தாஸிடம் நன்மதிப்பைப் பெற்றிருந்த அவரது அன்புக்குரிய சீடர்களில் முக்கியமானவர். பாலுமகேந்திராவின் நண்பர். அவரது பல படங்களின் திரைக்கதைப் புத்தகங்களை உருவாக்கியவர் மீராகதிரவனே.

meera

சில வருடங்களுக்கு முன்னமே துவக்கப்பட்ட பிராஜக்ட் 'தமிழரசி'. சரியான நேரத்தில் பணிகள் நிறைவடைந்திருந்தால் நாம் பாராட்டிய பல படங்களுக்கு முந்தைய படமாக இது இருந்திருக்கும். படத்தில் முன்வைக்கப்பட்டிருக்கும் காதல், பயணம் குறித்து டிரெயிலரிலிருந்து முழுமையாக அறிந்துகொள்ளமுடியவில்லை எனினும் பெய்த அதிகாலை மழையின் ஈரம் காயாமலேயே திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு கிராமத்தை உயிர்த்தன்மையோடு திரையில் மொழிபெயர்த்திருப்பார் என்பது மட்டும் நிச்சயம். இலக்கியப்பரிச்சயமும், தொடர்பங்களிப்பும், இயல்பு சினிமாவின் மீதான நம்பிக்கையும் கொண்டவர்களின் வரவு மகிழ்வான சேதி. நாடோடிகள், பசங்க.. போன்ற வெற்றிப்படங்களின் வரிசையில் இந்தப்படமும் இடம்பெறவேண்டும் என்பது நம் ஆசை. அப்போதுதான் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நிகழும் இயல்பான சினிமாக்களின் வரவு பெருகி ஆரோக்கியமான சூழல் உருவாகும்.

தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்கயிலாத இடத்தைப்பெற மீரா கதிரவனுக்கு நம் வாழ்த்துகள்.

தமிழரசியின் இசை குறித்து நண்பர் கார்க்கியின் ஒரு பதிவைக் காணுங்கள்.

படத்தில் பங்குபெற்ற கலைஞர்களின் பேட்டிகள் மற்றும் படம் குறித்த தகவல்களுக்கு படத்திற்கான இந்த பிரத்யேக வலைப்பூவுக்கு செல்லுங்கள்.

பி.கு : படத்தின் முழு தலைப்பு கேப்ஷனுடன் சேர்த்து 'அவள் பெயர் தமிழரசி, வயது 18 மாநிறம்' என்பதாகும். கிளம்புகையில் கண்ணன் கேட்டான், "அடுத்து நாம ஒரு குறும்படம் எடுக்கலாமாடா? பெயர் கூட முடிவு பண்ணிட்டேன்.. 'அவன் பெயர் தாமிரா, வயது 34 கொஞ்சம் தொப்பை'.."

.

44 comments:

எறும்பு said...

//'அவன் பெயர் தாமிரா, வயது 34 கொஞ்சம் தொப்பை'.."//

Yaaru paakirathu
:)

விக்னேஷ்வரி said...

அறிமுகத்திற்கு நன்றி.

'அவன் பெயர் தாமிரா, வயது 34 கொஞ்சம் தொப்பை'.." //

குறும்படத்திற்கு வெயிட்டிங்.

ஜெட்லி said...

முதல் நாள் போலாம்னு இருக்கேன்...

பரிசல்காரன் said...

வெற்றிபெற வாழ்த்துகள்...

நண்பருக்குச் சொல்லிவிடுங்கள்!

நிலாரசிகன் said...

////'அவன் பெயர் தாமிரா, வயது 34 கொஞ்சம் தொப்பை'.."///

அண்ணாச்சி,இந்தப்படம் எப்போ ரிலீஸ்? :)

Cable Sankar said...

மீராவுக்கு வாழ்த்துக்கள்.

வெள்ளிநிலா ஷர்புதீன் said...

அவன் பெயர் தாமிரா, வயது 34 கொஞ்சம் தொப்பை'- கேமரா?

KVR said...

படத்தின் தலைப்பே அழகாய் இருந்தது. பின்னர் நண்பர்கள் சொல்லக்கேட்டு இன்னமும் எதிர்ப்பார்ப்பு கூடியது. லோகிதாஸின் சீடர் என்று அறிந்தபோது இன்னமும். படம் வெற்றிபெற வாழ்த்துகள்.

//'அவன் பெயர் தாமிரா, வயது 34 கொஞ்சம் தொப்பை'..//

குறும்படத்துக்கு வெயிட்டிங் :-)

அன்புடன் அருணா said...

பகிர்தலுக்கு நன்றி...என் பூங்கொத்தை அனுப்பிடுங்க!

//'அவன் பெயர் தாமிரா, வயது 34 கொஞ்சம் தொப்பை'.."//
பாவம் ஆதி!

ரிஷி said...

வெற்றி பெற வாழ்த்துக்கள் !!

//'அவன் பெயர் தாமிரா, வயது 34 கொஞ்சம் தொப்பை'.."//
>>

அவன் பெயர் தாமிரா, வயது 34?, நிறைய தொப்பை !!!

ROMEO said...

ஆதி கேபிள் புத்தகவெளியீட்டு விழா அன்று மீரா கதிரவன் பற்றி சொன்னிங்க. ஆனால் அன்று வந்து இருந்த புதிய பதிவர்களிடம் பேசிக்கொண்டு இருந்ததால் இவரிடம் பேசாமல் சென்றுவிட்டேன். அப்பறம் ரொம்ப வருத்தப்பட்டேன், வெகு ஆவலாய் வரும் 5 ஆம் தேதியை எதிர்பார்கிறேன்.

திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said...

//.. அவன் பெயர் தாமிரா, வயது 34 கொஞ்சம் தொப்பை ..//

:-D))

குசும்பன் said...

//அடுத்து நாம ஒரு குறும்படம் எடுக்கலாமாடா? பெயர் கூட முடிவு பண்ணிட்டேன்.. 'அவன் பெயர் தாமிரா, வயது 34 கொஞ்சம் தொப்பை'.."//

எப்பதான் நம்ம இயக்குனர்கள் ஆங்கிலபடங்களை காப்பிஅடிப்பதை நிறுத்தப்போகிறார்களோ. ஏற்கனவே குங்பூ பாண்டா என்ற படம் வந்துவிட்டது. இனி உங்களை வெச்சு பிட்டு படம் கூட எடுக்க முடியாது:)))

குசும்பன் said...

இங்கு இரண்டுமாதங்களுக்கு முன்பு நடைப்பெற்ற பிலிம் பெஸ்டிவெல்லில் இந்த படம் இடம்பெற்று இருந்தது.

குசும்பன் said...

//மீரா கதிரவனுக்கு நம் வாழ்த்துகள்.//

நான் கூட மீரா கதிரவன் என்றதும் சூப்பர் பிகரா இருக்கும் என்று நினைச்சுட்டேன் பாஸ்:))

அத்திரி said...

படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

pappu said...

ப்ராப்ள பதிவர் தாமிரா.... லைக் இட்...;)

Sangkavi said...

உங்கள் நண்பர் வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே....

க.இராமசாமி said...

படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். அப்படியே அந்த குறும்படமும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

வெண்பூ said...

//
நான் கூட மீரா கதிரவன் என்றதும் சூப்பர் பிகரா இருக்கும் என்று நினைச்சுட்டேன் பாஸ்:))
//

அதுவும் எதோ மல்லு ஃபிகர்னு நெனச்சேன் நானு..

நர்சிம் said...

வாழ்த்துகள்.

SanjaiGandhi™ said...

//இவங்கள்லாம் படம் தியேட்டர்ல ரிலீஸாகுறதுக்கு முன்னால் லவ்வருக்குக்கூட படத்தைப் போட்டுக்காண்பிக்க மாட்டார்கள் போலிருக்கிறது.//

இது வேறையா ? சொல்லவே இல்ல மாமா..

//'அவன் பெயர் தாமிரா, வயது 34 கொஞ்சம் தொப்பை'.."//

குப்பையா இல்லாம இருந்தா சரி :))

மறத்தமிழன் said...

ஆதி,

படத்தை பார்க்கும் ஆர்வத்தை தூண்டிவிட்டீர்..
படமும்,இயக்குனரும் வெற்றியடைய வாழ்த்துக்கள் !

படத்தை கடைசிவரை இருந்து பார்த்துவிட்டு பொறுமையாக விமர்சனம்
போடுங்க:}

ஆதிமூலகிருஷ்ணன் said...

எறும்பு, விக்னேஷ்வரி, ஜெட்லி, பரிசல், நிலா, கேபிள், வெள்ளிநிலா, கேவிஆர், அருணா, ரிஷி, ரோமியோ, சம்பத், குசும்பன், அத்திரி, பப்பு, சங்கவி, இராமசாமி, வெண்பூ, நர்சிம், சஞ்சய்..

அனைவருக்கும் அன்பான நன்றி, மீரா சார்பிலும்.!

(யோவ் மறத்தமிழன், தாம்பரம் வித்யாவில் கிளைமாக்ஸ் கட்டாகிவிட்டது. கன்பர்ம் பண்ணியாச்சுய்யா.. புண்ணாக்காதீங்க.. :‍-))

r.selvakkumar said...

நாளைக்கு சென்னை கமலா தியேட்டரில் தமிழரசியை பார்க்கப் போகிறேன். யார் வர்றீங்க?

வெயிலான் said...

இந்தப்படத்துல பிரபல பதிவர் ஒருவர் ஒரு பாட்டு எழுதியிருக்கிறார்.

மறத்தமிழன் said...

ஆதி,

அதான பாத்தேன்...

நம்ம ஆதி எப்படி க்ளைமாக்ஸை கோட்டை விட்டார்னு..

இனிமே வித்யாவில் பாக்காதீங்க...

அமுதா கிருஷ்ணா said...

உங்க படத்தினை மே மாதத்தில் உங்க ப்ளாக்கில் வெளியிடுங்கள்..ஏனென்றால் அந்த ஒரு மாதமும் இணையம் பக்கமே வருவதாயில்லை.டூர் போறோம்...

அறிவிலி said...
This comment has been removed by the author.
அறிவிலி said...

அறிவிலி said...
அந்த குறும்(பு) படத்த சீக்கிரம் எடுங்க.

இய‌ற்கை said...

வாழ்த்துகள்...

☀நான் ஆதவன்☀ said...

//தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்கயிலாத இடத்தைப்பெற மீரா கதிரவனுக்கு நம் வாழ்த்துகள்.//

ஆம். இந்த படத்தை மிகவும் எதிர்பார்க்கிறோம். அவருக்கு வாழ்த்துகள்

☀நான் ஆதவன்☀ said...

படம் வெளியான பின்பு அதாவது வெற்றிப் பெற்ற பின்பு அவருடன் பதிவர்கள் கலந்துரையாடும் படி ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யுங்கள் ஆதி.

ஜோசப் பால்ராஜ் said...

சிங்கையில் பிரபல நடிகர்களின் படங்கள் தான் உடனே வெளியாகும். இந்தப் படம் இங்கு திரையிடப்பட்டால் கட்டாயம் பார்கிறேன்.
இயக்குநருக்கு என் வாழ்த்துக்களை சொல்லுங்க அண்ணே.

//அவன் பெயர் தாமிரா, வயது 34 கொஞ்சம் தொப்பை'.. //

கொஞ்சம் என்பது மிகக் குறைவான மதிப்பீடு என்பது என் எண்ணம்.

இராகவன் நைஜிரியா said...

தமிழரசியும், மீரா கதிரவனும் வெற்றி பெற வாழ்த்துகள்.

இராகவன் நைஜிரியா said...

//'அவன் பெயர் தாமிரா, வயது 34 கொஞ்சம் தொப்பை'.."//

அப்ப போலீஸ் வேலைக்கு முயற்சி பண்ணலாமே..

TBCD said...

மீரா கதிரவன் படம் வெற்றிப் பெற வாழ்த்துகிறேன் !

பாடல்கள் வித்தியாசமாக வந்திருக்கின்றது. படமும் அவ்வண்ணமே இருக்குமென்று நம்புவோமாக !

சந்தோஷ் = Santhosh said...

எப்படியூம் பாத்துடுவோம் பாஸூ.. நீங்க இந்த கவலையை விட்டு தாமிரா 34 தொப்பையை கவனிங்க..

சந்தோஷ் = Santhosh said...

நான் கவனிக்க சொன்னது தாமிராவோட தொப்பையை இல்ல.. குறும்படத்தை..

cheena (சீனா) said...

மீரா கதிரவனுக்கு நல்வாழ்த்துகள் - அவள் பெயர் தைமிழரசி - வெற்றி பெற நல்வாழ்த்துகள் - குறும்படம் எப்போ

முரளிகுமார் பத்மநாபன் said...

குஜுகுஜு குஜுகுஜு கூட்ஸ்வண்டிக்காகவே வெயிட்டிங்கு... ட்ரெய்லரே சுவாரஸ்யமாக இருக்கிறது. நண்பர் மீராவிற்கு என் வாழ்த்துக்கள்

ஆதிமூலகிருஷ்ணன் said...

செல்வகுமார், வெயிலான், மறத்தமிழன், அமுதா (என்னாமதிரி பல்பு குடுக்குறீங்கப்பா), அறிவிலி, இயற்கை, ஆதவன், ஜோஸப், இராகவன், TBCD, சந்தோஷ், சீனா, முரளிகுமார்..

அனைவருக்கும் நன்றி.!

அமிர்தவர்ஷினி அம்மா said...

'அவன் பெயர் தாமிரா, வயது 34 கொஞ்சம் தொப்பை'.."

இப்படி ஒரு படம், அது குறும்படமாவே வெளிவந்தாலும் 100 நாள் வெற்றிவிழா கொண்டாட வாய்ப்பு அதிகமிருக்கிறது. எனவே வாய்ப்பை தவறவிடாதீர்கள். ;)))


எனக்குப் பிடிக்காததையே செய்வதில் பரம திருப்தியடையும் இரண்டாவது நபர். //

தாமிராவின் தங்கமணி டச் :))))))

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி அமிர்தவர்ஷினி அம்மா.