Friday, March 12, 2010

ஐஸ்..!

இன்று காலை வியர்த்து விறுவிறுத்து அலுவலகத்திற்குள் நுழைந்தேன். வழக்கமான அதே உடைதான், பாலிஷ் பார்த்து மாதங்கள் ஆகிவிட்ட அதே ஷூக்கள்தான். பிரச்சினைகளின் தீவிரம் இன்னும் குறையவில்லை, அந்த டென்ஷனும் முகத்திலிருக்கிறது. வியர்த்து வழிந்ததற்கான காரணம் பைக் பஞ்சராகிவிட்டதால் மெயின் ரோட்டிலிருந்து உள்ளே அரை கிலோமீட்டர் நடந்து வந்தேன். அறைக்குள் வந்த போது ஏசி வேலை செய்யவில்லை. சந்தைக்கடை போல பொருட்கள், ஆட்கள், பிரச்சினைகள். ..

சிறிது நேரத்தில் டீ குடிப்பதற்காக வெளியே வந்தேன். ஒரு போன் வந்ததால் ஆ.:பீஸுக்கும் கேண்டீனுக்கும் நடுவிலிருக்கும் மரநிழலில் ஒதுங்கினேன். அப்போது ஒரு புதிய டெக்னீஷியன் என்னை நெருங்கி 'ஒரு கேஸ்டிங்கில் சந்தேகமா இருக்குது. நீங்க பாத்துட்டீங்கன்னா நல்லது' என்றார். சரி வாங்க போகலாம் என்று போனில் பேசிக்கொண்டே அவ‌ருட‌ன் சென்றேன். அவ‌ருக்கு 20 வ‌ய‌திருக்க‌லாம். அவ‌ர் என்னை மேலும் கீழும் பார்க்கிறார், லேசாக‌ புன்ன‌கைக்கிறார். இத‌ற்கு முன்ன‌ரும் க‌வ‌னித்திருக்கிறேன். தூர‌த்தில் இருந்து கூர்மையாக அவர் க‌வ‌னிப்ப‌தை நான் க‌வ‌னித்திருக்கிறேன். என்ன‌ பிர‌ச்சினை ந‌ம்மிட‌ம் இன்று? ஸிப் போடவில்லையா? செக் பண்ணிக்கொண்டேன். நேர‌மின்மையால் முடிகூட‌ வெட்டிக்கொள்ளாத‌தால் ரொம்ப‌தான் க‌ண்றாவியாகி விட்டோமோ? என்று நினைத்துக்கொண்டு அவ‌ரிட‌மே கேட்டுவிட்டேன், 'என்ன‌ த‌ம்பி, ஏன் என்னைப் பார்த்து சிரிக்கிறீங்க‌?'

"சார், நீங்க‌ ரொம்ப‌ ஸ்டைலா இருக்கீங்க‌"

ட‌மால்...!


(எங்கேயும் தட்டுப்படாமல் இருப்பதிலேயே உணர்ந்திருப்பீர்கள். கொஞ்சம் பிஸி. அதான் மீள்பதிவு, அதிலும் ஒரு நியாயம் வேண்டும் என்பதால்தான் இப்படி ஒரு குட்டிப்பதிவு. விரைவில் சந்திப்போம்)

.

24 comments:

Anonymous said...

ஆவ்வ்வ்வ்

அத்திரி said...

அது சரி....நடக்கட்டும்

pappu said...

என்னய பாத்து ஏண்டா அப்படி சொன்னங்குறீங்களா?

கார்க்கி said...

பாவம் தம்பிகு இங்லீஷ் தெரியல போலிருக்கு..

ஆளு பல்க்கா இருக்கிங்கன்னு சொல்றதுக்கு மாத்தி சொல்லிட்டாரு

Mahesh said...

படிக்கற நாங்களே டமால்... கேட்ட உங்க நிலைமை புரியுது பாஸ்....

vanila said...

நீங்க அவரைப்பாத்து கேக்கலையா ஆதி.. "அவனா நீயி" ன்னு.. Come Back Soon... (To Form :)) )

வரதராஜலு .பூ said...

அவ்வ்வ்வ்வ்வ்

எம்.எம்.அப்துல்லா said...

:)

அமுதா கிருஷ்ணா said...

தூக்க கலக்கத்தில் இருந்து இருப்பாரோ?

தராசு said...

நிஜமா சொன்னானா தல.

ஆதிமூலகிருஷ்ணன் said...

அவனா நீயி.?

ஆளு பல்க்கா இருக்கிங்கன்னு சொல்லவந்து டங்கு ஸ்லிப்பாயிருக்குமோ?

என்னைய பாத்து ஏண்டா அப்படிச்சொன்னே.?

நிஜமா சொன்னானா தல?

தூக்கக்கலக்கத்துல இருந்திருப்பானோ?

அவன் கண்ணு நொள்ளையா இருக்குமோ?

---- ஒருத்தன் என்னை அளக்க்கா இருக்கான்னு சொன்னா உங்களுக்குதான் எவ்வளவு பொறாமை.! ஹூம்..

ஆதிமூலகிருஷ்ணன் said...

அம்மிணி, அத்திரி, பப்பு, கார்க்கி, மகேஷ், வனிலா, வரதராஜுலு, அப்துல், அமுதா, தராசு (நிஜமாத்தான்யா..)..

அனைவருக்கும் நன்றி.

வானம்பாடிகள் said...

:>

நேசமித்ரன் said...

யூத்து பாஸ் நீங்க

:)

அமிர்தவர்ஷினி அம்மா said...

'என்ன‌ த‌ம்பி, ஏன் என்னைப் பார்த்து சிரிக்கிறீங்க‌?'"சார், நீங்க‌ ரொம்ப‌ ஸ்டைலா இருக்கீங்க‌" //

மனசுக்குள்ள அந்த தம்பி நெனைச்சிருப்பார், எப்படி சொன்னாலும் தாங்கிக்கறாரு, இவுரு ரொம்ப நல்ல்லவரூன்ன்ன்ன்ன்ன்ன்னு //

:)))))))

சத்ரியன் said...

ஓவராத்தான் இருக்குது.....!

அன்புடன் அருணா said...

கப் ஐஸ்!!!!!

க.பாலாசி said...

//"சார், நீங்க‌ ரொம்ப‌ ஸ்டைலா இருக்கீங்க‌"//

என்ன கொடுமைங்க இது...!!!!!!!

வெள்ளிநிலா ஷர்புதீன் said...

:) ( tips koduththa abdulla anna vaalga)

பா.ராஜாராம் said...

வரட்டும் வாங்க ஆதி.வாழ்க்கைன்னா நாலு நல்லது கெட்டது இருக்கத்தான் செய்யும்...

:-)

விக்னேஷ்வரி said...

:)

இராமசாமி கண்ணண் said...

:)

KKPSK said...

வுடுங்க பாஸ்..அவிங்க எபபவுமே இப்பிடித்தான். இதெல்லாம் உமக்கு புதுசா..!

ஆதிமூலகிருஷ்ணன் said...

வானம்பாடிகள், நேசமித்திரன் (ஹிஹி), அமித்துஅம்மா, சத்ரியன், அருணா, பாலாசி, சர்ப்பு, பாராசார், விக்னேஷ்வரி, கண்ணன், KKPSK (நமக்குன்னு சொல்லுங்க பாஸ்)..

அனைவருக்கும் நன்றி.