Sunday, March 14, 2010

விடுமுறைப்பயணம் : ஒரே பாகம்

திட்டப்படி முதலில் ஈரோடு பால்ய நண்பன் வீடு. குழந்தைப்பருவத்தை இருவரும் எவ்வாறெல்லாம் கழித்தோம் என்பது அலையலையாய் எழுந்தது மகிழ்ச்சியாய் அல்லது ஏக்கமாய். அவனை மனைவி, குழந்தைகுட்டிகளோடு பார்ப்பதுதான் எத்தனை மகிழ்ச்சி.

DSC08308

'வெளியே போய்ட்டு வர்றோம்மா கொஞ்ச நேரம்..' என்று அவளிடம் நான் சொல்லிவிட்டு நாங்கள் கிளம்பியபோது முகம் நிறைய சிரிப்புடன் 'சரிங்ண்ணா..' என்றவளின் கண்கள் அவனை நோக்கி 'கோக்கு மாக்கா வந்தீங்கன்னா, தெரியும் சேதி' என்று மிரட்டியதையும், இவன் பொட்டிப்பாம்பாக கண்ணாலேயே பதில் சொல்லிவிட்டு வந்ததையும் நான் கவனிக்கத்தவறவில்லை. அடங்காத வல்லூறாய்த் திரிந்தவன். சிரித்துக்கொண்டேன்.

*

மதியமே நண்பனின் வீட்டருகேயே இருந்த பதிவர் நண்பர் 'ஈரோடு கதிர்' அலுவலகத்துக்கு சென்றேன். அவரை சந்தித்து மகிழ்வுடன் பேசிக்கொண்டிருந்த சற்றைக்கெல்லாம் ஆரூரன் விஸ்வநாதன், க.பாலாசி தொடர்ந்து வால்பையன் ஆகியோர் வர அனைவருடனும் அளவளாவ முடிந்தது. கதிர், விஸ்வநாதன் ஆகியோர் பதிவுகளில் எப்படி சீரிய சிந்தனைகளோடு தங்களை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்களோ அவ்வாறே நேரிலும் உணரமுடிந்தது.

erode.jpeg

தொடர்ந்த சிறுவிருந்தில் நண்பர் கார்த்திக், ராதாமணாளன் ஆகியோர் கலந்துகொண்டனர். அன்றுமாலையே நான் திருப்பூர் கிளம்ப இருந்த நிலையைச்சொல்ல திருப்பூர் நண்பர்களைக் காணும் பொருட்டு உற்சாகத்தோடு கார்த்திக்கும், வால்பையனும் தங்கள் காரிலேயே என்னை டிராப் செய்துவிடுவதாகக்கூற எனக்கு டபுள் மகிழ்ச்சி.

*

நீண்ட பயணத்தில் ராதாமணாளனை அவரது ஊரில் டிராப் செய்துவிட்டு திருப்பூரை நாங்கள் அடைந்தோம். விடுதிக்குச் செல்லுமுன்பே வழியில் மடக்கியது பரிசல், முரளிகுமார், செந்தில் கூட்டணி. அதில் முரளிகுமார் மட்டும் இரவு விருந்தில் கலந்துகொள்ளவில்லை என்று சொல்லிப்போவதற்காகவே காத்திருந்திருக்கிறார். அவர் கிளம்பி விட மற்ற அனைவரும் வெயிலானால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விடுதி அறைக்குச் சென்றோம். சிறிது நேரத்துக்கெல்லாம் வெயிலான் வந்துவிட பேரரசன் மற்றும் சில பதிவர்களும் கலந்துகொள்ள விருந்து விடிகாலை வரை நீண்டது. பூபதி, தினேஷ் ஆகிய பதிவரல்லாத நண்பர்கள் விருந்தை கலகலப்பாக்கினர். நள்ளிரவில் திருப்பூரின் ஓரிடத்தில் கிடைக்கும் சூடான பொங்கலின் சிறப்பை செந்தில் நினைவுகூர்ந்து பெருமைப்பட்டுக்கொள்ள நான் ஜொள்ளுடன் 'எங்கே, வாங்கி வாருங்கள் பார்க்கலாம்' என்று தூண்டிவிட்டேன். பின்னர் மறுத்தும் கேட்காமல்  சொன்னதை நிரூபித்தார். நன்றி செந்தில்.

*

மறுநாள் கிளம்புகையில் அன்புக்குரிய நண்பர் சாமிநாதன் வந்து சந்தித்தார். பின்னர் பரிசல், வெயிலானுடன் எண்பதுகளின் டிபிகல் டச் புகைப்படத்தை எடுத்துக்கொண்டேன்.

DSC08357

அடுத்து பரிசலின் வீட்டில் காலை உணவு ஆனால் உண்டது மதியவேளையில். எழுந்தது அந்த லட்சணத்தில். பரிசலின் பெண்பிள்ளைகள் அவ்வளவு அழகு. மிஸஸ் பரிசலை பார்த்த பின்னர்தான் அந்த அழகு எங்கிருந்து வந்திருக்கிறது என்று விளங்கிக்கொண்டேன். மேலும் பரிசல் பணியாற்றும் தொழிற்சாலை விசிட்டும் மேற்கொள்ளப்பட்டது. ஆயத்த ஆடை உற்பத்தியைப்பற்றி சில சுவாரசிய விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.

*

கோவையின் பேருந்து நிலையத்தில் காத்திருந்து பைக்கில் என்னை அள்ளிச்சென்றது அன்புக்குரிய சஞ்சய். அங்கிருந்து நாங்கள் சென்றோம்.. சென்றோம்.. கோவையையே தாண்டி ஒரு சிற்றூரில் ஒளிந்துகொண்டிருந்த அண்ணாச்சி வடகரை வேலன் வீட்டுக்கு. அப்படியே கிராமங்களின் விழாக்காலங்களை நினைவூட்டும் கறிக்குழம்பும், உளுந்தஞ்சோறும் மணக்க மணக்க. உண்டு முடித்து மூவரும் கிளம்பியது நண்பர் செல்வேந்திரனின் புதிய அறைக்கு (இன்னும் கொஞ்ச நாட்களில் அந்த அறை வீடாக மாறிவிடும்). போகும்போதே தயாராக பூஜைப்பொருட்களுடன் சென்றதால் உடனேயே அடுத்த விருந்து துவங்கியது. கிராமத்திலேயே பிறந்து வளர்ந்திருந்தாலும் அதுவரை இல்லாத ஒரு புதிய அனுபவமாய் இருந்தது அன்றைய இளநீருடன் காக்டெயில். நன்றி அண்ணாச்சி.

*

சற்று நேரம் வேலன் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த போது (அதாவது பிளாட் ஆகிவிட்டபோது என்று நினைத்துக்கொள்ளாதீர்கள்) நானும் செல்வேந்திரனும் அடுத்து வரும் வருடங்களில் மருதூர் மாசனமுத்துவிற்குப்பிறகு ஆளற்றுப்போய் வதங்கியிருக்கும் தமிழ் சிறுகதை உலகத்தை இருவரும் சேர்ந்து எப்படி ஆளப்போகிறோம் என்று தீவிரமாக பேசிக்கொண்டிருந்தோம். அவரிடம் பல திட்டங்கள் இருக்கின்றன போலத் தெரிகிறது.

Kovai 

*

பின்னர் விரைந்து கழிந்தன சேரன்மாகாதேவி, மணிமுத்தாறு, பாளையங்கோட்டை என அழகிய விடுமுறை நாட்கள். சுபாவுடன் அப்பாவின் பழைய காலத்து டக்குமோட்டாரில் வயலுக்குப் போய்விட்டு திரும்பியபோது எடுத்த படம்.

MOV08769_0001 

சம்பவங்கள் நிகழ்ந்து நிறைய நாட்கள் ஆகிவிட்டதால் பதிவர்சந்திப்புகளில் நினைவில் இருந்ததை மட்டுமே எழுதியுள்ளேன். ஆனாலும் நீங்க ரொம்பத்தான் ஸ்பீடு என்று பின்னூட்டம் போடக்கூடாது. அது தெரிஞ்சதுதானே.!! விடுமுறைநாட்களில் எடுத்த நெல்லை மண்ணின் இயற்கைக்காட்சிகளின் ஒரு சிறிய விடியோ தொகுப்பு இதோ உங்களுக்காக..

*

41 comments:

நேசமித்ரன் said...

நல்ல பகிர்வு...!

விறு விறு நடையில் சுறு சுறு பதிவர்களின் உபசரிப்பும் முகச்சிரிப்பும்.

Anonymous said...

Video அருமை. கொஞ்சம் மேலும் கீழும் போகுது. ட்ரைபாட் வைச்சு ஒரு இடத்துல நின்னு எடுத்திருக்கலாம். :)

பழமைபேசி said...

நண்பா, நீங்க நான் ஊர்ல இருக்கும் போதே ஈரோடு வந்ததாகச் சொன்னாங்க? நல்ல தொகுப்புரை!

அன்புடன் அருணா said...

கலக்குங்க!

டம்பி மேவீ said...

எல்லாம் சரி . தண்ணியை மட்டும் கொஞ்சம் குறைச்சுகொங்க

Jeeves said...

கண்டேன்.. கண்டேன் .. கண்டேன் ஆதியை ( ஐமீன் அவர் எடுத்தப் படங்களை )
கண்டேன் ராகவா

ஜோசப் பால்ராஜ் said...

என்னாது குறும்படம் 0210 ஆ ??????

கார்கிய வைச்சு எடுத்தது ஒரு ரெண்டு படம், மீதி 207 படம் எங்க ? எனக்கு இப்ப உடனே லிஸ்ட் வந்தாகனும்.
நாங்கள்லாம் கணக்குல ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு

லேட்டா எழுதுனதுனால கொஞ்சம் சுவாரசியம் கம்மியாயிருச்சுங்ணா.

இதுக்குதான் சூட்டோட சூட எழுதியிரணும்கிறது.

ஈரோடு கதிர் said...

எதிர்பார்த்ததை விட எளிமையாக இருந்தீர்கள் ஆதி...

நீங்கள் வாசிக்கும் பதிவர்கள் குறித்து பகிர்ந்த நேர்மை மிகவும் பிடித்திருந்தது..

மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் போது சந்திக்க ஆசையாக உள்ளேன்

குசும்பன் said...

//எண்பதுகளின் டிபிகல் டச் புகைப்படத்தை //

புச்சா வயசுக்கு வந்த பெண் மாதிரி வெயிலான் முகத்தில் சிறு வெட்கம்.

பத்து நாள் பட்டினி கிடந்தவன் போல பாவமா ஒரு பரிசலின் லுக்

வழக்கம் போல அப்படியே அழகாக திருட்டு களை உங்க முகத்தில்.

முரளிகுமார் பத்மநாபன் said...

அண்ணே! ரைட்டு. நெல்லை வீடியோ அழகு. வாழ்த்துக்கள்

செல்வேந்திரன் said...

பதிவை விட வசீகரம் வீடியோ... நெல்லைச் சீமை என்றாலே வறண்ட பூமியும், பட்டையைக் கிளப்பும் வெயிலும் என கற்பிதம் செய்திருக்கும் பெருநகரவாசிகளுக்கு வேறொரு தோற்றத்தை உண்டுபண்ணுகிற வீடியோ...

RR said...

விடுமுறை ஒரே விருந்து மயம் போல? கலக்குங்க!.....வீடியோ அருமை!

கும்க்கி said...

வீடியோ அழகு...

யோவ் யுவான் சுவாங்...உம்ம பயணம்லாம் இருக்கட்டும்..நெல்லை மண்ணழகை நாங்கல்லாம் நேர்ல பாக்கவேண்டாமா...?

அப்புறம் விருந்துக்கு பின்பு எடுத்த படங்கள்லாம் எங்க..?

குசும்பன் said...

//அவனை மனைவி, குழந்தைகுட்டிகளோடு பார்ப்பதுதான் எத்தனை மகிழ்ச்சி.//

ஒருத்தன் கஷ்டப்படும் பொழுது இப்படியா சந்தோசப்படுவீர்?:)))))

ஜீவன்(தமிழ் அமுதன் ) said...

வீடியோ அருமை ...!

குசும்பன் said...

நெல்லை மண்ணழகு என்று டைட்டில் போட்டுவிட்டு பயபுள்ள தண்ணிய காட்டுத்து!

இந்த படம் எடுத்தப்ப டைரக்டர் தண்ணியில் இருந்தாரு என்று சிம்பாலிக்கா சொல்றாய்ங்களோ????

பிரசன்னா said...

பரிசலுடன் இருக்கும் போட்டோவில் உங்களிடம் கொஞ்சூண்டு பிரபாகரன் சாயல்..

கும்க்கி said...

பிரசன்னா said...
பரிசலுடன் இருக்கும் போட்டோவில் உங்களிடம் கொஞ்சூண்டு பிரபாகரன் சாயல்..


அப்படி போடுங்க அறுவாள...

இது “ரா”வுக்கு தெரியுமா..?

:-))

கும்க்கி said...

எனக்கென்னமோ போலீஸ் என்கொயரி முடிஞ்சு வெளில வந்த ஆளு மாதிரில்லா தெரியுது....

இராகவன் நைஜிரியா said...

நல்ல பகிர்வு...

என்னைவிட வேகமாகத்தான் போட்டு இருக்கீங்க.

நான் இது பயணக் குறிப்பை எத்தனை பாகமா போட்டு இடுகை எல்லாம் தேத்தினேன் தெரியுமா..

இந்த பயணக்குறிப்பை வச்சு ஒரு 3 இடுகையாவது தேத்தியிருக்கலாமே..

KVR said...

கொஞ்சம் பொறாமை கலந்த மகிழ்ச்சி. நானெல்லாம் விடுமுறைல வந்தால் யாரையாவது சந்திக்கணும்ன்னு ப்ளான் பண்ணால் கூட முடியாம போய்டுது. நீங்க என்னன்னா ஊர் ஊராப் போய் கறிசோறு சாப்பிட்டு வந்துருக்கிங்க. என்ஸாய்ய்ய்ய்ய்ய் :-)

//சுபாவுடன் அப்பாவின் பழைய காலத்து டக்குமோட்டாரில் வயலுக்குப் போய்விட்டு திரும்பியபோது எடுத்த படம்//

ரகளையா இருக்கு

ஆடுமாடு said...

கொடுத்துவச்ச ராசா!

அடிக்கடி ஊருக்குப் போயிட்டு வர்றீங்க... கல்யாணம் காட்சின்னா கூட போக முடியலை... ம்ஹூம்... நல்லாருங்க !

டக்கு மோட்டார் rasanai.

வெள்ளிநிலா ஷர்புதீன் said...

:)! ! perfect

ஆதிமூலகிருஷ்ணன் said...

நேசமித்திரன்,

அம்மிணி (நாம எடுக்குற படத்துக்கு டிரைபாட் ஒண்ணுதான் குறைச்சலாங்கும்? இனிமே பண்ணலாம்),

பழமையார் (மிஸ் பண்ணிட்டனா?),

அருணா,

மேவீ (கரெக்டா அட்வைஸ் பண்ணிடுவீங்களே),

ஜீவ்ஸ் (என்ன இந்தப்பக்கம் காத்துவீசுது?),

ஜோஸப் (மழைதான் வரப்போகுது),

கதிர் (நிச்சயமாய்..),

குசும்பன் (போட்டோ விமர்சனம் அழகு, குறிப்பா வெயிலான் ஹிஹி),

முரளிகுமார்,

செல்வா (அப்படின்னா இன்னும் கொஞ்சம் கூட சேர்த்திருப்பேனே ஐயா),

RR,

கும்க்கி (விருந்துக்கு பின்னாடி எடுத்த போட்டோவா? விளங்குச்சு)

ஜீவன்,

பிரசன்னா (என்ன ஒரு பார்வை?),

இராகவன் (நானும் அப்படித்தான் நினைச்சேன். வர வர நம்மாளுங்களுக்கு பொறுமை கொறஞ்சிக்கிட்டே வருதா? கல்லு விட்டுருவாங்களோனுதான் ஒரே பாகத்துல முடிச்சுக்கிட்டேன்),

கேவிஆர் (கறிச்சோறு வேணும்னா கொஞ்சம் சிரமப்பட்டாதான் கிடைக்கும்),

ஆடுமாடு (வாவ்.. முதல் தடவையா வர்றீங்களா பாஸ்? பெருமை எனக்கு),

ஷர்ஃபுதீன்..

அனைவருக்கும் நன்றி.!

அறிவிலி said...

:-)) அருமை。。。

Mahesh said...

வர வர எழுத்தை விட படங்கள் அழகு கூடிக்கிட்டே போகுது... (கவனிக்க: படத்துல இருக்கறவங்க அழகைச் சொல்லலை... .குறிப்பா படத்தை எடுததவங்களைப் பத்தி சொல்லவே இல்லை)

இராமசாமி கண்ணண் said...

புகைப்படங்களும், வீடியோவும் அருமை. பகிர்வுக்கு நன்றி.

விக்னேஷ்வரி said...

யாரண்ணாச்சி அது, முதல் ஃபோட்டோல ஸ்மார்ட்டா இருக்குறது...

பரிசல்காரன் said...

இதுதானா சார் உங்க ‘டக்’கு?

பாபு said...

பகிர்வுக்கு நன்றி

தராசு said...

அப்புறம் திருப்பூர்ல ஒரு வித்தியாசமான் கேமரா செட்டிங் பண்ணுனத பரிசல் எழுதியிருந்தாரே, அந்த போட்டோவெல்லாம் எங்க தலைவா???

உங்க ஊர் அழகோ அழகு.

மாதேவி said...

நெல்லை மண் பார்த்தாகிவிட்டது. பகிர்வுக்கு நன்றி.

தாரணி பிரியா said...

நல்லா ஊரு சுத்தி இருக்கிங்க. பொறாமையா இருக்குதுங்க :)

சுபா முகம் தெரியறது போல போட்டோ எடுத்து இருக்கலாம் :)

வெயிலான் said...

படங்களும், வீடியோவும் அருமை!

மறத்தமிழன் said...

ஆதி,

எப்படி உங்களுக்கு மட்டும் டைம் கிடைக்குது ..

அடிக்கடி நல்லா ஊர்சுத்துரிங்க...

பதிவர்களின் விருந்தோம்பலும், நெல்லை மண்மணமும்
கமகமக்கிறது...

ஆதிமூலகிருஷ்ணன் said...

அறிவிலி,
மகேஷ் (யோவ்),
கண்ணன்,
விக்னேஷ்வரி (வெயிலுக்கு நல்ல குளுகுளு),
பரிசல்,
பாபு,
தராசு (அதான் அந்த எண்பதுகள் போட்டோ),
மாதேவி,
வெயிலான்,
தாரணி (பிளாகில் இட ரமா விரும்புவதில்லை. பிரிதொரு சமயம்),
மறத்தமிழன்..

அனைவருக்கும் நன்றி.

திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said...

அடடா..நீங்க ஈரோடு, திருப்பூர் வந்ததே இப்போதான் தெரியுது..
முன்னாடியே தெரிஞ்சுருந்தா..

வால்பையன் said...

இம்புட்டு நாளா அதுக்கு!?

~~Romeo~~ said...

Nice post :)

எம்.எம்.அப்துல்லா said...

//அப்பாவின் பழைய காலத்து டக்குமோட்டாரில் வயலுக்குப் போய்விட்டு //

எலேய்..பண்ணையார் ஃபேமிலியால்லே நீயி!!!

க.பாலாசி said...

நீங்க லேட்டா போஸ்ட் போடலாம், நாங்க லேட்டா படிக்கப்படாதா.. (‘அதுக்காக 8 மாசம் கழிச்சாடா!!!’ன்னு கேக்குறது தெரியுது)இப்பதான் எங்கிருந்தோ ஒரு லிங்க் கெடச்சு வந்து படிக்கிறேன். நைஸ்... அந்த வீடியோ கண்களுக்கு குளிர்ச்சி. மறுக்கா இந்தப்பக்கம் வந்தா ஆரத்தி ரெடியாயிருக்கு..