Tuesday, March 16, 2010

கண்ணனும் மீராவும்

கொஞ்ச நாளாகவே கண்ணன் பற்றிய தகவல்கள் ஏதும் நமது பதிவுகளில் பார்த்திருக்கமாட்டீர்கள்.. அதான் ஏன்னு கேட்கிறீர்களா? சொல்றேன். அவன் கொஞ்சநாளா ரொம்ப பிஸியா இருந்தான், அதான் எழுதமுடியலை. (எப்பிடி நம்ம லாஜிக்.? ஹிஹி..) கண்ணனுக்கு சமீபத்தில்தான் கல்யாணம் ஆனது. அதுவும் ஸ்டண்ட் காட்சிகள் நிறைந்த லவ் மேரேஜ் என்பதால் 'கண்ணன் கதை' என்ன, 'கண்ணன் நாவலே' எழுதலாம் என்ற அளவுக்கு சுவாரசியங்கள். அதைப்பற்றி மெதுவாகப் பார்ப்போம். பரபரப்பு, சண்டை, சச்சரவு, விருந்து மருந்தெல்லாம் ஓய்ந்து, ஓஞ்சு போனபிறகு வீட்டுக்குக் கூப்பிடலாம் என பிளான் செய்திருந்தோம். அதன் படி கண்ணனையும், மீராவையும் போன வாரம் ஞாயிற்றுக்கிழமை விருந்துக்கு அழைத்திருந்தோம்.

சுபா உய் உய்யென கத்தியபடியே சுவரில் எனது புதிய பால் பாயிண்ட் பேனாவால் முட்டை முட்டையாய் வரைந்து கொண்டிருந்தான். தடுத்தால் 'ஒரு சூறாவளி கிளம்பியதே..' ரேஞ்சுக்கு படுத்திவிடுவான். பிடிவாதத்தில் அப்படியே அம்மா எங்கே என்று வந்திருக்கிறான். அவன் ஒன்றைச்செய்யும் போது தடுத்தாலோ, கேட்டபொருள் கொடுக்கப்படாவிட்டாலோ வீடு ரெண்டாகிவிடுகிறது. இருப்பது பத்தாதென்று அவனும் முடிந்த அளவுக்கு எங்களுக்கிடையே தகறாறு உண்டுபண்ணிக்கொண்டிருந்தான். பேனாதானே போனால் போகிறது வெங்காயம் என்று அழுதுகொண்டே வெங்காயம் அரிந்துகொண்டிருந்தேன்.

ரமா கிச்சனில் மும்முரமாக இருந்தார். "முட்டைக்குழம்பு வைக்கிறியாம்மா?" என்று ஐடியா கொடுத்து, "முட்டை யாருக்கு? உங்களுக்கா.. கொலஸ்ட்ரால் எங்கயிருக்குன்னு தெரியும்ல.. அதோட விருந்துக்கு கூப்பிட்டு புளிக்குழம்பு, முட்டைக்குழம்புன்னு யாராவது பண்ணுவாங்களா? சாம்பார்தான்.." என்று பதில் வாங்கிக்கட்டிகொண்டேன்.

மீராவைப்பற்றி பேச்சு வந்தது. "அவ எப்பிடிங்க சமைக்கிறாளாம்?"

"எனக்கு என்ன தெரியும்? கல்யாணத்துக்கு அப்புறம் அவங்க வீட்டுக்கு நான் போகவேயில்லையே.."

"நீங்க கண்ணன்ட கேட்டிருப்பீங்களே.."

"ஆமா, இதான் எனக்கு வேல பாரு? அவனே குடும்பத்து ஆளுகள சமாளிக்கிறது பத்தாதுனு அவளயும் வேற சமாளிச்சி ஓஞ்சி போய் கிடப்பான்.. நாங்க பேசியே ரொம்ப நாளாவுது"

"வேலைக்காங்க போறா?"

"ஆமா, இந்த பிரச்சினைக்காக கொஞ்ச நாள் ரிசைன் பண்ணிருந்தா.. இப்ப திரும்பவும் ஜாயின் பண்ணியிருக்கான்னு நினைக்கிறேன்"

அவர்கள் இருவரும் பைக்கில் 11 மணிவாக்கில் வந்து சேர்ந்தார்கள். வந்ததிலிருந்து சுபாவை தூக்கிவைத்துக்கொண்டு அவனுடன் பேசிக்கொண்டிருந்தாள். வெளியாள் யாரும் வந்தால் ஏதோ உலகத்திலேயே ஒழுக்கமான பிள்ளை என்பது போல சாந்த சொரூபியாய் இருப்பவன், ஏதோ அதிசயமாக மீராவுடன் சேர்ந்துகொண்டான். புத்தகத்தை எடுத்துவைத்துக்கொண்டு அவளிடம் படம் பார்த்து பெயர் சொல்லிக்கொண்டிருந்தான். "பலோம்" (பழம்), "நாயி" (நாய்), "மியோ" (பூனை), "ஞானி" (யானை).. என்று விளக்கங்கள் தொடர்ந்துகொண்டிருந்தது. சிரிப்பும், மகிழ்ச்சியும் பொங்க அவனோடு பேசிக்கொண்டிருந்தாள். பின்னர் அளவளாவலுடன் உணவு உண்டு முடித்தோம்.

"சாப்பாடு பிரமாதம்க்கா.. இந்தப்பச்சடி எப்படி வெச்சீங்க, சூப்பராயிருந்தது" மீரா ஒரு ஸ்விங்கரை லாவகமாக வீசினாள். ரமா கிளீன் போல்ட்.

நான் கண்ணனிடம் காதில் கிசுகிசுத்தேன். 'இப்பிடி அள்ளிவிடுறாளே, இதுக்குள்ள வீட்ல எல்லா பிரச்சினையும் சால்வாயிருக்குமே..'.

அவன் பதிலுக்கு கிசுகிசுத்தான், 'இப்பல்லாம் காய்கறி வாங்கவே அம்மாவும் இவளும் ஜோடி போட்டுக்கிட்டுதான் போறாங்கன்னா பாத்துக்கயேன்'.

கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டேன்னு ஒத்தைக்கால்ல நின்னவங்க அவங்க அம்மா. நான் சொன்னேன், 'நீ எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கோடா..'

.

29 comments:

Anonymous said...

மாமியாரும் மருமகளும் ஒத்துமையா இருந்தா ஆகாதே. :)

பாபு said...

//'நீ எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கோடா..'//

repeattu

ரிஷி said...

ஆதி , எதுக்கும் நீங்களும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க ....

சுபா எப்படி உங்கள மாதிரி சூப்பரா நடிக்கிறான் !!

கார்க்கி said...

உங்க ஏரியா சகா.. செம..

கார்க்கி said...

/வெங்காயம் அரிந்துகொண்டிருந்தேன்//

வாட் எ கோ இன்சிடென்ச்? இன்னைக்கு என் பதிவை பாருங்க புரியும்

புன்னகை said...

//வெங்காயம் அரிந்துகொண்டிருந்தேன்.//
உங்களுக்காக கார்க்கியிடம் சண்டை போடலாம்னு நினைக்கும் போது இப்படி சொதப்பிட்டீங்களே! :-(

தராசு said...

//கொலஸ்ட்ரால் எங்கயிருக்குன்னு தெரியும்ல.//

இருந்தாலும் அண்ணி இப்படி காமெடி பண்ணக் கூடாது.

ஆதிமூலகிருஷ்ணன் said...

அம்மிணி, பாபு, ரிஷி, கார்க்கி, புன்னைகை (அவ்வ்வ்வ்வ்), தராசு..

நன்றி.!

எம்.எம்.அப்துல்லா said...

//மாமியாரும் மருமகளும் ஒத்துமையா இருந்தா ஆகாதே. :) //

பெரிய பெரிய வல்லரசுகளே பிரிக்கிற வேலையத்தானேக்கா பண்ணுது :))

Mahesh said...

//பிடிவாதத்தில் அப்படியே அம்மா எங்கே என்று வந்திருக்கிறான்.//

நீங்க வெங்காயம் அரியறப்ப அவங்க ப்ளாக் படிக்கிறாங்களா?

ஜானி வாக்கர் said...

ரெம்ப நாள் கழித்து கண்ணன் பற்றிய பதிவு, அதுவும் கடைசி வரி டாப்.

KVR said...

உங்க ஏரியா, கலக்குங்க. மொத்த இடுகையுமே DLF Maximum (இந்த ஐபிஎல் வந்தாலும் வந்துச்சு, சிக்ஸர்க்குக் கூட பேர் மாறிப் போச்சப்பா)

இராகவன் நைஜிரியா said...

தூள் நைனா...

காலம் மாறுதுங்க. மாமியார், மருமகள் சண்டைப் போட்ட காலம் போய், அவங்க இரண்டு பேரும் சேர்ந்துகிட்டு நம்மள மாதிரி இருக்கிறவங்களை போட்டு பார்த்துடாறாங்க.

அமிர்தவர்ஷினி அம்மா said...

பேனாதானே போனால் போகிறது வெங்காயம் என்று அழுதுகொண்டே வெங்காயம் அரிந்துகொண்டிருந்தேன்

:)))))


பிடிவாதத்தில் அப்படியே அம்மா எங்கே என்று வந்திருக்கிறான் //

மிரட்டுனா, சரண்டர் ஆகறதுல அப்பா மாதிரி இருடா ந்னு நீங்க இன்னும் சொல்லிக்கொடுக்கலையா ;)

அவளிடம் படம் பார்த்து பெயர் சொல்லிக்கொண்டிருந்தான். "பலோம்" (பழம்), "நாயி" (நாய்), "மியோ" (பூனை), "ஞானி" (யானை).. என்று விளக்கங்கள் தொடர்ந்துகொண்டிருந்தது.

சு.பா அப்டேட்ஸ் சூப்பர்.

ஹுஸைனம்மா said...

விருந்துக்கு சாம்பாரா???!!

//வெளியாள் யாரும் வந்தால் ஏதோ உலகத்திலேயே ஒழுக்கமான பிள்ளை என்பது போல சாந்த சொரூபியாய் இருப்பவன்//

இதில சுபா உங்களைக் கொண்டிருக்கான் என்று தெளிவா விளங்குது!!

விக்னேஷ்வரி said...

பிடிவாதத்தில் அப்படியே அம்மா எங்கே என்று வந்திருக்கிறான். //
உங்க தங்கமணிக்கு ஃபார்வார்டியாச்சு. சாயங்காலம் வீட்டுக்குப் போங்க. ஆயுதம் தயாரா இருக்கும்.

அழுதுகொண்டே வெங்காயம் அரிந்துகொண்டிருந்தேன். //
நீங்க ரொம்ப நல்லவரு. இப்படி உண்மையெல்லாம் வெளிய சொல்லிடுறீங்களே.

நல்ல பதிவு. கடைசி வரி எச்சரிக்கையை மனதில் கொள்ளவும்.

நேசமித்ரன் said...

ரொம்ப நல்ல narration Boss

தன்னிலையில் இருந்து மனதோடு பேசும் பாவனை வாய்க்கிறது வாசிப்பில் ....

:)

சத்ரியன் said...

//'நீ எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கோடா..'//

பாஸ்..பாஸ்(boss),

உங்கள் நெனைச்சா பாவமா இருக்கு boss.

உங்கள நீங்களே தேத்திக்குறீங்களே boss.

எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கோங்க Boss.

ஜெயந்தி said...

பதிவர் சந்திப்பின்போது இரண்டு வெங்காயத்தைக் கொடுத்து நறுக்கச்சொல்லி உங்கள் (நறுக்கத் தெரியாமல் தடுமாறும்) குட்டை உடைக்கணும்.

க.பாலாசி said...

//'இப்பிடி அள்ளிவிடுறாளே,//

இருந்தாலும் உங்களுக்கு ரொம்பதான்...

வானம்பாடிகள் said...

/இப்பல்லாம் காய்கறி வாங்கவே அம்மாவும் இவளும் ஜோடி போட்டுக்கிட்டுதான் போறாங்கன்னா பாத்துக்கயேன்'./

விவேக் காமெடி கவனம் வருது பாஸ்:))

Aruna Suresh said...

இவ்வ்ளோ சீக்கிரமாவா க்ளீன் போல்ட் ஆவுறது?????????????????

☼ வெயிலான் said...

அருமை ஆதி!

KarthigaVasudevan said...

:)))

பிள்ளையாண்டான் said...

கலக்கல்!

ஆதிமூலகிருஷ்ணன் said...

அப்துல் (அதானே),
மகேஷ் (ஃபிரியாயிட்டீங்களா),
ஜானி,
கேவிஆர்,
இராகவன்,
அமித்துஅம்மா,
ஹுஸைனம்மா,
விக்னேஷ்வரி (சுத்தம்),
நேசமித்திரன்,
சத்ரியன் (தண்ணி ஃபிரியா தருவாங்களா பாஸ்ங்கிற மாதிரி இருக்குது நீங்க பேசுற ஸ்டைல் :-))
ஜெயந்தி,
பாலாசி,
வானம்பாடிகள்,
அருணா,
வெயிலான்,
கார்த்திகா,
பிள்ளையாண்டான்..

அனைவருக்கும் நன்றிகள்.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

நல்ல பகிர்வு நண்பரே .
மீண்டும் வருவான் பனித்துளி !

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க !
மீண்டும் வருவான் பனித்துளி !

கும்க்கி said...

என்னய்யா இது...

சொல்லக்கூடாதா...

வழக்கம்போல எழுத்துக்கும் பேச்சுக்கும் சம்மந்தமில்லாமத்தான் செயல்...

நல்லாருங்க...