Friday, March 19, 2010

பெருவெடிப்பு

அழகியலுடன் கூடிய கலையம்சமான காட்சியமைப்புகள் கொண்ட திரைப்படங்கள் இருக்கின்றன. பிரமிப்பைத் தரக்கூடிய விறுவிறுப்பான காட்சியமைப்புகள் கொண்ட படங்கள் இருக்கின்றன. மீள முடியாத தாக்கத்தையும் தொடர் சிந்தனைகளையும் ஏற்படுத்தும் திரைப்படங்கள் இருக்கின்றன. மனதைத்தொடும் நிகழ்வுகளுடன் கண்ணீரை வரவழைக்கும் படங்கள் இருக்கின்றன. சமூக அவலங்களை, வாழ்வியலை உயிர்ப்போடு தரக்கூடிய படங்கள் இருக்கின்றன…. (நிறுத்து, இதெல்லாம் எங்கே? என்று கேட்கிறீர்களா? 'நான் ஆங்கிலப்படங்களைச் சொல்கிறேன்'.. அதானேப் பார்த்தேன்)

பெரும்பாலும் கனத்த விஷயங்களையும், மெல்லிய மன உணர்வுகளையும் பேசும் கதைகள் விறுவிறுப்பாகவோ, பிரம்மாண்டமாகவோ இருப்பதில்லை. ஆனால் எப்பேர்ப்பட்ட கதைகளையும் திறமைசாலிகளால் விறுவிறுப்பாக சொல்லமுடிகிறது என்பதற்கான சாட்சிதான் ‘தி ஹர்ட் லாக்கர்’.

பிரம்மாண்டம் என்பது நூற்றுக்கணக்கான ஹெலிகாப்டர்கள் மோதிக்கொள்வதும், புவிப்பிரளயங்களைக் காட்சிப்படுத்துவதும் மட்டும்தானா? ஒரு புல்லட் கேஸ் துப்பாக்கியிலிருந்து தெறித்து விழும் காட்சி, நம் விழிகள் விரியச்செய்கின்றதே.. டாப் ஆங்கிளில், இழுக்கப்படும் வயர்களைப் பற்றிக்கொண்டு சங்கிலித்தொடராய், புதைக்கப்பட்ட வெடிகுண்டுகள் சுற்றிலும் மேலெழுகின்றன.. நடுவில் ஒரு மனிதன். நமக்கு ஒரு விநாடி மூச்சு நின்று போகிறது. மரணத்தில் விளிம்பில் நின்றுகொண்டு 'இது என் வாழ்வு' என்று நம்மை நோக்கி கூக்குரலிடும் ஹீரோ.!!

hurt_locker_ver3

சமீபத்தில் இவ்வளவு ஆழமான உணர்வுகளை தொட்டுச்செல்லக்கூடிய, அதே நேரம் விறுவிறுப்பான ஒரு சினிமாவைப் பார்க்கவில்லை. போர்க்களத்திலிருக்கும் ஒரு வெடிகுண்டு செயலிழக்கச்செய்யும் நிபுணனின் கதை.

ஹீரோவுக்கு ‘போர் ஒரு போதை’ என்பது போல இப்படத்தின் மீதான சில விமர்சனங்கள் சொல்கின்றன. நான் அப்படி உணரவில்லை. வாழ்க்கையின் மீதும் மனிதர்கள் மீதும் காதல் கொண்டவனாகவும், நம்பிக்கை கொண்டவனாகவும்தான் அவனை நான் உணர்கிறேன். வாழ்விற்கான அர்த்தம் தேடும் நோக்கிலேயே மிக சின்சியராக, மரணத்தின் தோள் மீது கைகளைப் போட்டுக்கொண்டு உலாத்தும் ஒரு உன்னத வீரனாகவே அவன் இருக்கிறான். அவனது வீரம் அளப்பரியது. சில சமயங்களில் எழும் உணர்வுகளை எளிதில் எழுதிவிடமுடிவதில்லைதான்.

hurt-locker-boom

இறுதிக்காட்சியில் அவன் தன் கைக்குழந்தையுடன் ஏறத்தாழ இவ்வாறாக பேசிக்கொண்டிருக்கிறான்.

“நீ இந்த பொம்மையை நேசிக்கிறாய்.. இந்த தொட்டிலை நேசிக்கிறாய்.. நீ அணிந்திருக்கும் உடையை.. என்னை.. இந்தக் கிலுக்கலை.. உன்னைச்சுற்றியிருக்கும் அனைத்தையும் நேசிக்கிறாய். நீ வளர்கையில் இந்த பொம்மை வெறும் பஞ்சுப்பொதியென்பதை உணர்வாய். உன் விருப்பங்கள் குறுகக்கூடும். நீ நேசிக்கும் மனிதர்களும், பொருட்களும், செயல்களும் எண்ணிக்கையில் குறைந்துகொண்டே போகும். ஒரு கட்டத்தில் அது ஒன்றிரண்டாக மாறவும் நேரலாம்…. ஒரு வேளை.. அது ஒன்றேயாகவும் கூட ஆகலாம், என்னைப்போல..”

அடுத்த காட்சியில் அவன் இருப்பது களத்தில்.

.

21 comments:

இராமசாமி கண்ணண் said...

நல்ல விமர்சனம்.

நேசமித்ரன் said...

உணர்வு வடிவதற்குள் சுடச் சுட எழுதியது போல் இருக்கிறது அழகான விமர்சனம்

முதல் பத்தியும் கடைசி பத்தியும் பிடித்தம் அதிகம் வரக் காரணம்

ர‌கு said...

இந்த‌ ப‌ட‌ம் டிவிடி வாங்கிட்டேன், இனிமேதான் பார்க்க‌ணும்

நீங்க‌ சொல்லியிருக்கும் வித‌ம் பட‌ம் பார்க்கும் ஆர்வ‌த்தை அதிக‌ரிக்குது!

Anonymous said...

//இதெல்லாம் எங்கே? என்று கேட்கிறீர்களா? 'நான் ஆங்கிலப்படங்களைச் சொல்கிறேன்'.. அதானேப் பார்த்தேன்)//

நாங்க சொல்லவேண்டியதை எல்லாம் நீங்களே சொல்லீட்டா எப்படி?

நர்சிம் said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க ஆதி..நேசமித்ரனை வழி மொழிகிறேன்.

தராசு said...

ஒரு நல்ல படம் பார்த்தேன்னு சொல்லீட்டு போக வேண்டியதுதான, அதுக்கு எதுக்கு முதல் பாராவுல இத்தனை பில்ட் அப்பு.....,

MANO said...

விமர்சனம் அட்டகாசம்.

மனோ

Cable Sankar said...

ஆதி.. அருமையான விம்ர்சனம்.. படம் பார்த்தவுடன் எழுதியிருக்கிறீர்கள். அதனால் வார்த்தைகள் வரவில்லைன் என்று நினைக்கிறேன். நானும் எழுதணும், எழுதணும்னு நினைச்சிட்டு இருக்கேன். இன்னும் எழுதறேன். பார்த்து இரண்டு மாசத்துக்கு மேல ஆச்சு

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி கண்ணன்.
நன்றி நேசமித்திரன்.
நன்றி ரகு.

நன்றி அம்மிணி.
நன்றி நர்சிம்.
நன்றி தராசு.

நன்றி மனோ.
நன்றி கேபிள்.

நேசமித்திரனும், கேபிளும் சொல்வதைப்போல உணர்வுகள் வடிவதற்குள்தான் எழுதியிருக்கிறேன். தாக்கத்தில்தான் வார்த்தைகள் வரவில்லை. ஆனால் நான் படம் பார்த்து 10 நாட்கள் ஆகிவிட்டன..

ஆதிமூலகிருஷ்ணன் said...

இன்னும் விரிவாக எழுதலாம்தான். ரொம்ப ஆர்டினரியாக இந்தப்படத்தையும் பண்ணிவிட வேண்டாமேன்னுதான் விட்டுவிட்டேன்.

போர்க்களத்தின் கொடுமைகளை அனுபவித்துவிட்டு எப்போது குடும்பத்துடன் அமைதி வாழ்க்கையை மேற்கொள்வோம் என போர்வீரர்கள் ஏங்கித்தவித்துக்கொண்டிருக்கும் வேளையில் இவர்களுக்கான நேரம் முடிந்து வீடுவந்து சேர்கிறார்கள். கடைசிக்காட்சியில் அவன் கைக்குழந்தையுடன் பேசிக்கொண்டிருக்கையில் இவனும் தன் குழந்தையிடம் நான் நேசிக்கும் இருவர் நீயும், உன் அம்மாவும் என்றோ அல்லது நீ மட்டும் என்றோ கூறுவான் என எதிர்பார்க்கும் வேளையில் அவனது தேர்வு போர்க்களமாக இருக்கிறது.

அதுவும் சொல்லில் இல்லாமல் சடாரென காட்சியாக விரிவது பிரமிப்பு.!

கார்க்கி said...

ம்ம்ம்

பார்க்கனும்

ஜெனோவா said...

அண்ணே , DVD இருக்கு , இன்னிக்கு பார்க்கணும் , விமர்சனத்துக்கு நன்றி !

வால்பையன் said...

பார்க்கும் ஆர்வத்தை தூண்டி விட்டீர்கள்!

ஆயில்யன் said...

//வாழ்க்கையின் மீதும் மனிதர்கள் மீதும் காதல் கொண்டவனாகவும், நம்பிக்கை கொண்டவனாகவும்தான் அவனை நான் உணர்கிறேன்//

பல காட்சிகளில் மிக தைரியமிக்க போரின் மீது விருப்பம் கொண்ட ராணுவ வீரனாகவும்,சக மனிதர்களின் துன்பங்களை கண்டு துயர் அடையும் காட்சிகளும் நெகிழ்ச்சியடைய செய்தது குறிப்பாக சக ராணுவ வீரன் கொல்லப்படும்போது,மனித வெடிகுண்டு சிறுவன் !

வெடிகுண்டுகளை தேடிபோகும் படபடக்க வைக்கும் காட்சிகள் முதல் பாதியில் !

கடைசி வரிகள் - அழகா சொல்லியிருக்கீங்க!

Manju said...

'War is a drug' - I think this is the caption used by the makers in the film ads.

Your view is different. Any way good narration. Keep it up.

தாரணி பிரியா said...

படம் பாக்கணுமுன்னு தோணுது உங்க விமர்சனம் படிச்சபிறகு

அன்புடன் அருணா said...

படம் பார்த்துட்டு வர்றேன்!

ஆதிமூலகிருஷ்ணன் said...

கார்க்கி, ஜெனோவா, வால்பையன், ஆயில்யன், மஞ்சு, தாரணி, அருணா..

அனைவருக்கும் நன்றி.

(என்ன இன்னைக்கு கூட்டம் கம்மியா இருக்குது? வேற வழியில்லை, மொக்கை போஸ்ட் ஒண்ணு போட்டுற வேண்டியதுதான்)

நாமக்கல் சிபி said...

நல்ல விமர்சனம்!

Jeeves said...

படம் பார்க்கறேன். நீங்க சொன்ன மாதிரியே இருந்தா ஓட்டு + இல்லாட்டா ஓட்டு -

(ஹெ ஹெ... ஆல்ரெடி ஓட்டுப் போட்டாச்சு )

கும்க்கி said...

நீங்க சொன்னப்புறம் படம் பார்க்க தோனலை....

பாஸிட்டிவாக எடுத்துக்கொLக...