Wednesday, March 24, 2010

பிரபல பதிவர் அவஸ்தை

ஒரு ஊர்ல.. நான் எவ்வளவோ சொல்லியும் கேட்காத நண்பர் ஒருத்தர், கல்யாணம் பண்ணிக்கிட்டார். அது ஆனது ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி. அவர் இப்போ ஒட்டகம் மேய்க்கிற ஊர்ல வேல பாக்குறார். இப்போதைக்கு ஒரு ப்ப்பிரபல பதிவர்னு சொன்னா உங்களால கண்டு பிடிக்கமுடியமா? சரி என்ன நடந்துச்சுன்னாவது பாப்போம். தன்னோட தங்கமணியை டெலிவரிக்காக ஊருக்கு அனுப்பிவிட்டு கடந்த ஒரு வருஷமா ஜாலியா இருந்தவர், நீண்ட பிரிவின் முடிவாக காதலோடு தங்கமணியையும், காதல் பரிசாக தங்கக்குட்டியையும் ஊருக்கு வந்து அழைத்துக்கொண்டு மீண்டும் ஒட்டகம் மேய்க்கத் திரும்பிவிட்டார்.

அவர் ஊரிலிருக்கும் போது தங்கமணியுடன் போனில் ஒவ்வொரு முறை
அளவளாவும் போதும் அவரது தங்கமணி தங்கக்குட்டியைப் பற்றிய பிரச்சினைகளை
எடுத்துரைத்த போது, 'அட என்ன டார்லிங். ஊரிலில்லாத அதிசயமாகவா நாம் பிள்ளை பெற்றிருக்கிறோம். பிள்ளைன்னா அப்பிடி இப்பிடி இருக்கத்தான் செய்யும். நாமதான்
அஜ்ஜிஸ் செய்து வளர்க்கணும்' என்று தத்துவம் பேசியிருக்கிறார். ஆனால் ஒரு
மாதமாக நிஜத்தில் சில சிக்கல்களை அனுபவிக்கையில்தான் நமது ஞாபகம் அண்ணனுக்கு வந்திருக்கிறது. நம்மால் முடிந்தது ஆறுதல்தான் என்பதால் அதைச்சொல்லி அவரைத் தேற்றினோம். பின்னே.. நம்ம கஷ்டத்தைச் சொல்லும் போது 'அடடா, நாம தனியாள் இல்ல..'ன்னு ஒரு ஆறுதல் கிடைக்கும்தானே.. அவருக்கு நேர்ந்த சில அனுபவங்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறேன். ஆள் யாரென்றெல்லாம் கேட்காதீங்க, சொல்லமாட்டேன்.

*பகல் பூராவும் நல்லாத் தூங்கிவிட்டு இரவு பூரா கச்சேரி நடத்திக்கொண்டிருக்கிறாராம் ஜூனியர். புருஷனும் பெண்டாட்டியும் ஷிப்ட் முறையில் விழித்துக் கொண்டிருக்கிறார்களாம். பின்னே தொட்டிலில் போட்டால் அழும் பிள்ளையை பக்கத்தில் போட்டுக்கொண்டு தூங்கவா முடியும்.? ஒரு வேளை இந்திய, இப்போதைய நேர மாறுபாடுதான் பிரச்சினைக்கு காரணமாக இருக்குமோ என்ற குழப்பமாம் நம்மவருக்கு.

*ஒரு நாள் ராத்திரி 1 மணியிலிருந்து ஜூனியர் அழ ஆரம்பித்திருக்கிறார். தங்கமணி
கொஞ்ச நேரம் சமாதானம் பண்ணிப்பார்த்து முடியாததால் தூங்கிக்கொண்டிருந்த இவரை முகத்தில் சொம்புத் தண்ணீரை ஊற்றி எழுப்பியிருக்கிறார். பசிக்கிறதோ? வயிற்றை கியிற்றை வலிக்கிறதோ? இல்ல எறும்பு கடித்திருக்குமோ? என்று அத்தனை சோதனைகளையும் முடித்தபின்னும் அழுகை நிற்கவில்லை. மூன்று மணிக்கு மேல் பதறிப்போய் காரை எடுத்துக்கொண்டு 24 hrs ஹாஸ்பிடலைத் தேடிப்போய் டாக்டரைப்பார்க்க உட்கார்ந்தபோது நடந்தது என்ன தெரியுமா? மடியிலிருந்த ஜூனியர் அழகாக நம்மவரின் முகம் பார்த்து ஹிஹின்னு சிரித்திருக்கிறார்.

*ஆபிஸிலிருந்து ஓடி வந்ததும் ஜூனியரைத் தூக்கிவைத்துக்கொண்டு கொஞ்சிக் கொண்டிருக்கிறாராம். இல்லையானால் சமையல், துணி தோய்த்தல், பாத்திரம் தேய்த்தல் போன்ற வேலைகளை அதுவும் முகம் கோணாமல் பார்க்கவேண்டியதிருக்கிறதாம். சமயங்களில் எவ்வளவுதான் கொஞ்சிக்கொண்டிருந்தாலும் ஜூனியர் அதை ரசிக்காமல் அழுது வைக்க குழந்தை கைமாறி இவர் பாத்திரம் தேய்ப்பதும் அவ்வப்போது நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறதாம்.

*ஒருநாள் ஆஃபீஸ் மீட்டிங் முடித்து கொஞ்சம் டென்ஷனாக உட்கார்ந்திருக்கும் போது தங்கமணியிடமிருந்து அவசரமாக போன். “காலையிலிருந்து 5 வாட்டி போயிட்டான்க.. தண்ணியா போகுது. பயம்மா இருக்குது, உடனே ஓடியாங்க..” ஓடிப்போயிருக்கிறார் நம்மவர். ஹாஸ்பிடல். மருந்து.

*அன்றிலிருந்து நான்காவது நாள் ஜூனியரோடு மீண்டும் ஹாஸ்பிடலில் உட்கார்ந்திருக்கிறார் நம்மவர். பக்கத்திலிருந்தவர் என்னன்னு கேட்டபோது.. குழப்பமான முகத்தோடு சொன்னாராம், “ஆயி போயி நாலு நாளு ஆவுது. நாங்களும் இப்போ வந்துடும், அப்போ வந்துடும்னு பார்த்துக்கிட்டிருந்தோம். வரல.. அதான்” நிலைமை பரிதாபம்தான் இல்ல.?

பரிதாபமாக எனக்கு போன் செய்து புலம்பினார், “இப்ப கைப்பிள்ளையாக இருக்கப்போயிதான் இவ்வளவு பிரச்சினை இல்ல. கொஞ்சம் வளந்துட்டா சரியாப்போயிடுமில்ல..” என்றவரிடம் “யோவ், இனிமேத்தான்யா இருக்குது..” என்று ஆரம்பித்துத் தொடரமுடியாமல் அரைமணி நேரம் சிரித்துக்கொண்டிருந்தேன்.

50 comments:

ஜீவன்(தமிழ் அமுதன் ) said...

ம்ம்ம் ரைட்டு ...!

//“யோவ், இனிமேத்தான்யா இருக்குது..” //

ஏன் இப்படி பீதிய கிளப்புறீங்க...! ;;)

வானம்பாடிகள் said...

“யோவ், இனிமேத்தான்யா இருக்குது..” என்று ஆரம்பித்துத் தொடரமுடியாமல் அரைமணி நேரம் சிரித்துக்கொண்டிருந்தேன்.//

பின்ன! இப்புடி அப்புராணியா கேள்விகேட்டா சிரிக்காம முடியுமா?

தமிழ் பிரியன் said...

;-)))

முகிலன் said...

//புலம்பினார், “இப்ப கைப்பிள்ளையாக இருக்கப்போயிதான் இவ்வளவு பிரச்சினை இல்ல. கொஞ்சம் வளந்துட்டா சரியாப்போயிடுமில்ல..” என்றவரிடம் “யோவ், இனிமேத்தான்யா இருக்குது..” என்று ஆரம்பித்துத் தொடரமுடியாமல் அரைமணி நேரம் சிரித்துக்கொண்டிருந்தேன்//

இம்புட்டு நேரம் காட்டுனது ட்ரெயிலர், மெயின் பிக்சர் இனிமேத்தான இருக்குன்னு தெரியல பாவம்.. :))

தாரணி பிரியா said...

:) கண்டு பிடிச்சுட்டேனே.

ரமா உங்களுக்கு சுபாவை பார்த்துக்கிற பொறுப்பு எல்லாம் தந்து இருக்காங்கதானே. உங்க அனுபவத்தை எல்லாம் சொல்லி தேத்துங்க.

ராம்ஜி_யாஹூ said...

பிரபல பதிவர் வீடு எங்க விவேகானந்தர் குறுக்கு சந்தா

~~Romeo~~ said...

ஹா ஹா ஹா .. இதை படிக்கும் போது சிரிப்பு மட்டும் இல்ல, எனக்கும் ஒரு தோஸ்து கிடச்சிடாரு என்கிற சந்தோசம் தான்..

என்னோட ஜூனியர் பண்ணுற வேலை எல்லாம் இதே தான்.

~~Romeo~~ said...

“யோவ், இனிமேத்தான்யா இருக்குது//

ரைட் எச்சரிக்கை மணி அடிச்சாச்சு ... :((

RR said...

//“யோவ், இனிமேத்தான்யா இருக்குது..” என்று ஆரம்பித்துத் தொடரமுடியாமல் அரைமணி நேரம் சிரித்துக்கொண்டிருந்தேன்.//
என்ன ஒரு வில்லத்தனம்! நாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறட்டும் என்ற பரந்த மனப்பான்மை போல இருக்கு.............ஆதி touch.... ரசித்தேன். வாழ்த்துகள்

ச்சின்னப் பையன் said...

:-))))))))))))))))))))

இராகவன் நைஜிரியா said...

இதுக்கே இப்படி அலுத்துகிட்டா... வரப்போகும் நாளை நினைச்சுகிட சொல்லுங்க.

இந்த கஷ்டம் எல்லாம் இன்னு 6 மாசம்தான்... அப்புறம் இதுவே பழகிப் போயிடும்... கஷ்டம் தெரியாது.

இதுக்குதான் அந்த காலத்தில் இடுக்கண் வருங்கால் நகுகன்னு சொல்லி வச்சு இருக்காங்க போலிருக்கு..

இராகவன் நைஜிரியா said...

// ஒரு ஊர்ல.. நான் எவ்வளவோ சொல்லியும் கேட்காத நண்பர் ஒருத்தர், கல்யாணம் பண்ணிக்கிட்டார். //

விதி வலியது கொடியது... அதை தடுக்க யாராலும் இயலாது..

இராகவன் நைஜிரியா said...

ஆமாம் அந்த ப்ப்பிரபல பதிவர் யாருங்க...

gulf-tamilan said...

அவர் பேர் `கு`வில்தானே ஆரம்பிக்கும்:)))

முகவை மைந்தன் said...

உங்களுக்கும் நெம்பத்தான் குசும்பு;-)

Aruna said...

“ஆயி போயி நாலு நாளு ஆவுது. நாங்களும் இப்போ வந்துடும், அப்போ வந்துடும்னு பார்த்துக்கிட்டிருந்தோம். வரல.. அதான்"---
படிச்சுட்டு தனியா உக்காந்து சிரிச்சிட்டு இருந்தேன்.
அருமையான் பதிவு.. வாழ்த்துக்கள்
வெண்புரவி

நேசமித்ரன் said...

//“யோவ், இனிமேத்தான்யா இருக்குது..” //

டச்சிங் தலைவரே

ர‌கு said...

// நாங்களும் இப்போ வந்துடும், அப்போ வந்துடும்னு பார்த்துக்கிட்டிருந்தோம்//

ப‌ஸ் ஸ்டாப்ல‌ ப‌ஸ்ஸுக்கு வெயிட் ப‌ண்ற‌ மாதிரி சொல்லியிருக்கார் :))))

டம்பி மேவீ said...

என் அண்ணனை நினைச்சா தான் பாவமா இருக்கு. ரித்தி செம லூட்டி யாம்

அன்புடன் அருணா said...

/இம்புட்டு நேரம் காட்டுனது ட்ரெயிலர், மெயின் பிக்சர் இனிமேத்தான இருக்குன்னு தெரியல பாவம்.. :))/
ரிப்பீட்டு!

கண்ணகி said...

:)... அனுபவிங்க...அனுபவிங்க..

தராசு said...

ஆனாலும் அந்த ஊரை ஒட்டகம் மேய்க்கற ஊர்னு சொல்லி இவ்வளவு கேவலப் படுத்தக் கூடாது.

நல்ல ஃப்ளோ தல. நடத்துங்க.

வரதராஜலு .பூ said...

//பின்னே.. நம்ம கஷ்டத்தைச் சொல்லும் போது 'அடடா, நாம தனியாள் இல்ல..'ன்னு ஒரு ஆறுதல் கிடைக்கும்தானே.. //

//தொடரமுடியாமல் அரைமணி நேரம் சிரித்துக்கொண்டிருந்தேன்.//

என்னா ஒரு குசும்பு உங்களுக்கு?

//இம்புட்டு நேரம் காட்டுனது ட்ரெயிலர், மெயின் பிக்சர் இனிமேத்தான இருக்குன்னு தெரியல பாவம்.. :))//

ரிப்பீட்டு

அகநாழிகை said...

படிக்க ரொம்ப சுவாரசியம். வாழ்க்கைய இப்படி வாழ சிலரால மட்டுமே முடியும். ஆதி உங்களோட எல்லா பதிவுகளுக்குமான பின்னூட்டம் இது.

☀நான் ஆதவன்☀ said...

குசும்பு :))

கண்ணா.. said...

ஒட்டகம் மேய்க்கிற ஊர்ல பிரபல பதிவர்னு சொன்னா கண்டு பிடிக்க முடியாதுன்னு நினைப்பாக்கும்..

// ஆள் யாரென்றெல்லாம் கேட்காதீங்க, சொல்லமாட்டேன்//

ம்க்கும்.. இது வேறயாக்கும்.. குசும்புதானே உமக்கு...

வி.பாலகுமார் said...

:) :)

Rajeswari said...

ரசித்தேன்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

அந்தப் பிரபலபதிவரோட பின்னூட்டம் உங்க சமீபத்திய பதிவுகள்ள இல்லாதபோதே டவுட்டானேன். :))))))

இப்ப கைப்பிள்ளையாக இருக்கப்போயிதான் இவ்வளவு பிரச்சினை இல்ல. கொஞ்சம் வளந்துட்டா சரியாப்போயிடுமில்ல..” //

ஆமா, ஆமா. நமக்கு பழகிப்போய்டும்.

பாபு said...

//இனிமேத்தான்யா இருக்குது..” //

athuuuu

ஜெயந்தி said...

சிரிச்சு சிரிச்சு வயிறு வலியே வந்துவிட்டது.

vanila said...

பெயர் கு வில் ஆரம்பித்து ன் என்று முடியும். நடுவில் சும்ப என்று மூன்று எழுது வரும்.

:) கண்டு பிடிச்சுட்டேனே.

வால்பையன் said...

பாவம்ங்க அவரு! ஆறுதல் சொல்லாம பயமுறுத்துறிங்களே!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)

உண்மையை மறைச்சு பலர் ..அதெல்லாம் வளர்ந்தா சரியாகிடும்ன்னு சொல்லி பொய்யா ஆறுதல் சொல்லிடுவாங்க அதனால் ப்ரச்சனை வருமோதெல்லாம் பயம்மாவே இருக்கும்..

குசும்பன் said...

அவர் அட்ரஸ் கொடுங்க, எனக்கு இந்த டீடெயில் எல்லாம் தேவை படுது:))))

SanjaiGandhi™ said...

மாப்பிள்ளை ஓவரா தான் குசும்பு பண்றான் போல.. :))

suresh said...

good one

கண்ணா.. said...

//குசும்பன் said...
அவர் அட்ரஸ் கொடுங்க, எனக்கு இந்த டீடெயில் எல்லாம் தேவை படுது//

ஏற்கனவே பிரபல பதிவர்னு க்ளு கொடுத்ததால எல்லாரும் உங்களத்தான் சந்தேக படுறாய்ங்க..

இதுல நீங்க வேற எங்கப்பன் குதுருகுள்ள இல்லன்னு வந்து அப்ரூவர் ஆகுறீரே.....

Anonymous said...

இதெல்லாம் ஒரு மேட்டரா, இன்னும் இருக்கு... :)) ஜாலி

☼ வெயிலான் said...

இனிமையான இம்சைகள் :)

Anonymous said...

:)

அநன்யா மஹாதேவன் said...

சிரிச்சு சிரிச்சு ஒரு வழி ஆயிட்டேன். பாவம் பிரபல பதிவர். விட்றுங்க!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி ஜீவன்.!
நன்றி வானம்பாடிகள்.!
நன்றி தமிழ்.!
நன்றி முகிலன்.!
நன்றி தாரணி.!
நன்றி ராம்ஜி.!
நன்றி ரோமியோ.!
நன்றி RR.!
நன்றி ச்சின்னவர்.!
நன்றி இராகவன்.!
நன்றி கல்ப் தமிழன்.!
நன்றி முகவை மைந்தன்.!
நன்றி அருணா.!
நன்றி நேசமித்திரன்.!
நன்றி ரகு.!
நன்றி மேவீ.!
நன்றி அன்பு அருணா.!
நன்றி கண்ணகி.!
நன்றி தராசு.!
நன்றி வரதராஜுலு.!
நன்றி வாசுதேவன்.!
நன்றி ஆதவன்.!
நன்றி கண்ணா.!
நன்றி பாலகுமார்.!
நன்றி ராஜேஸ்வரி.!
நன்றி அமித்துஅம்மா.!
நன்றி பாபு.!
நன்றி ஜெயந்தி.!
நன்றி வனிலா.!
நன்றி வால்பையன்.!
நன்றி முத்துலக்ஷ்மி.!
நன்றி குசும்பன்.! (ஹெஹெஹே..)
நன்றி சஞ்சய்.!
நன்றி சுரேஷ்.!
நன்றி மயில்.!
நன்றி வெயிலான்.!
நன்றி சின்னஅம்மிணி.!

அறிவிலி said...

sweet revenge

Ramesh said...

பெர்சுங்க சும்மாவா சொல்லிச்சுங்க...கல்யாணம் பண்ணிப் பார்... புள்ளய பெத்துப்பார்ன்னு...சொன்ன மாதிரி இனிமே தான் ட்ரவுசர் கிழியப்போது.

smart said...

இந்த மொக்கை பதிவுக்கு இத்தனை ஓட்டா?

கும்க்கி said...

:))))))))))

சம்மந்தப்பட்ட நண்பரை நினைச்சுப்பார்த்தேன்...இன்னும் சிப்பு சிப்பா வர்ரது போங்கோன்னா....

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி அநன்யா.!
நன்றி அறிவிலி.!
நன்றி ரமேஷ்.!
நன்றி ஸ்மார்ட்.! (குட் கொஸ்டின்)
நன்றி கும்க்கி.!

விக்னேஷ்வரி said...

ஆஹா இவ்ளோ கஷ்டங்கள் இருக்கா... பயம்ம்ம்ம்ம்ம்மா இருக்கு.

Abhi said...

அட நாம மட்டும் இல்லை இன்னும் நெறைய பேரு துணைக்கு இருக்காங்க போல...உங்க எல்லா பதிவுகளும் அருமை ....