Thursday, March 25, 2010

சென்னை பதிவர் குழுமம்

நீண்ட நாட்களாக நண்பர்கள் பலராலும் பேசப்பட்டுக்கொண்டிருந்த ‘சென்னை பதிவர்களுக்கான குழு’ அமைப்பிற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் துவங்குவதற்கான சமிக்கைகள் (நீ திருந்தவே மாட்டியாடா?) தெரிகின்றன. (அதென்ன திருப்பூர், கோவைன்னு சங்கம் அமைச்சு கலக்குறாங்க, நாம இன்னா இளிச்சாவாயான்னு யாரோ சீனியர் பதிவர் புலம்பினாராம்) அதைப்பற்றிப் பேசவும் அல்லது வழக்கம் போல கூடிக்குலாவவும் வரும் சனிக்கிழமை மாலை ஒரு பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சமீப காலமாக வலைப்பூவிற்கு வந்து புகழ்ந்து வைக்கும் நண்பர்களைக் காண ஆவலாகயிருக்கிறது. அது எப்படி நீங்கள் மட்டும் என் சிறப்பைக் கண்டு பிடித்தீர்கள் என்று கேட்டுத் தெரிந்துகொள்ளத்தான்.! வாருங்கள், அனைவரும் ஒன்று கூடுவோம். தமிழ்த் தொண்டாற்றுவோம் (அப்பிடின்னா இனிமே பதிவெழுதப் போறதில்லையா? ன்னெல்லாம் கேட்கக்கூடாது).. அட்லீஸ்ட் மகிழ்ந்திருப்போம்.!

பரிந்துரைக்கப்பட்டுள்ள பெயர் : ‘சென்னை இணைய எழுத்தாளர்கள் குழுமம்’

பரிந்துரைக்கப்பட்டுள்ள லோகோ :

type 2[2]

இரண்டிலும் மாற்றமிருக்கலாம்.

சென்னை இணைய எழுத்தாளர்கள் குழுமம் சந்திப்பு

நாள் : 27/03/10

கிழமை ; சனிக்கிழமை

நேரம் : மாலை 6 மணி

இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்
6. முனுசாமி சாலை,
மேற்கு கே.கே.நகர்.
சென்னை:

தொடர்புக்கு..


மணிஜி : 9340089989
M.M.அப்துல்லா : 9381377888
கேபிள்சங்கர் : 9840332666
லக்கிலுக் : 9841354308
நர்சிம் : 9841888663
பொன்.வாசுதேவன் : 9994541010

33 comments:

அப்பாவி முரு said...

வாழ்த்துகள்....சீக்கிரம் சங்கத்துற்கு கட்டிடம் கட்டவும்.,

வழிபோக்குல தங்க வசதியாக இருக்கும்...

ஆடுமாடு said...

இந்த வாட்டியாவது வர டிரை பண்றேன். ஒரு 8 மணிக்கு வந்தா ஓகேவா?

எறும்பு said...

Ok ok

பழமைபேசி said...

வாழ்த்துகள்!

தத்துபித்து said...

// சீக்கிரம் சங்கத்துற்கு கட்டிடம் கட்டவும்.,

வழிபோக்குல தங்க வசதியாக இருக்கும்...//

அப்ப நிதி திரட்ட சிங்கப்பூரில் கலை நிகழ்ச்சி நடத்துவீங்களா?
.

அப்பாவி முரு said...

ஹாய் தத்துபித்து.,

கலைநிகழ்சி இருந்தால்.,


ஆ.மு.கி -யின் புத்தக வெளியீட்டை சிங்கையில் வைத்துக்கொள்ளலாமா?

கார்க்கி said...

வந்துடறேன்

ஒரு முக்குயமான வேலை இருக்கு :))

தத்துபித்து said...

//ஆ.மு.கி -யின் புத்தக வெளியீட்டை சிங்கையில் வைத்துக்கொள்ளலாமா?//

ஆ.மூ.கி. திருமணம் ஆகாதவர்களுக்கான சிறப்புரை ஆற்றுவார்.
(சும்மா ஆத்து.. ஆத்துன்னு ஆத்துவார் ).
.

மணிஜீ...... said...

விவாதங்களை குறும்படமாக எடுங்க ஆதி !

ராஜ நடராஜன் said...

அடுத்த கச்சேரி ஏற்பாடு செய்யும் போது கொஞ்சம் கால அவகாசம் கொடுங்களேன்.முடிஞ்சா நானும் ஜோதியில கலந்துக்க முடியும்.வசதி எப்படி?

குழுமத்திற்கு வாழ்த்துக்கள்.

முகவை மைந்தன் said...

மகிழ்ச்சியாக இருக்கிறது. திட்டங்கள் நிறைய வைச்சிருக்கீங்கன்னு நினைக்கிறேன். எளிதில் எட்ட வாழ்த்துகள்.

செல்வராஜ் ஜெகதீசன் said...

இனிதே நடைபெற வாழ்த்துக்கள்.
(நானும் சென்னைக்காரந்தான்)

செல்வராஜ் ஜெகதீசன்
அபுதாபி.

நேசமித்ரன் said...

வாழ்த்துக்கள் நலமே விளைக

:)

க.பாலாசி said...

லோகோ... அருமைங்கண்ணா.... வாழ்த்துக்களும்கூட.....

kggouthaman said...

வாழ்த்துக்கள்.
'எர்த் ஹவர்' என்று சொல்லப்படுகிற 'விளக்கணைப்போம்' - இயக்கமும் - சனிக்கிழமை இருபத்தேழாம் தேதி இரவு எட்டரை முதல் ஒன்பதரை வரை. பங்கேற்கும்படி பல வேண்டுகோள்கள் இணையத்தில் வந்துகொண்டிருக்கின்றன. பதிவர் குழுமம் கூடிப் பேசும் நேரத்தில், பல பதிவர்களும் கணினியை இயக்காமல் இந்த நிகழ்வுக்கு வந்துவிடுவார்கள். அந்த வகையில், இது சமுதாயத்திற்கு கூடுதல் நன்மை.

~~Romeo~~ said...

ஆஜர் .........

துளசி கோபால் said...

இனிய வாழ்த்து(க்)கள்.

முடிஞ்சால் கட்டாயம் வருவேன்.

தேவன் மாயம் said...

நல்வாழ்த்துக்கள்!!!

வானம்பாடிகள் said...

ரோஜர்!

நசரேயன் said...

சங்கத்திலே வட்டியில்லா கடன் உண்டா ?

V.Radhakrishnan said...

கூட்டம் அதிகமாகத்தான் இருக்கும் போலிருக்கிறது.

துபாய் ராஜா said...

ரைட்டு...அப்படியே 'நெல்லை பதிவர் குழுமம்' அறிவிப்பும் சீக்கிரம்....

அன்புடன் அருணா said...

சரி...நடத்துங்க...நடத்துங்க!

விக்னேஷ்வரி said...

நீங்களும் சங்கத்தைக் கூட்டியாச்சா.. சூப்பரு.

ஆதிமூலகிருஷ்ணன் said...

வாய்ப்பிருப்போர் அனைவரும் கலந்துகொள்ளுங்கள் நண்பர்களே.. சந்திப்போம். பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி. அறிவிப்புப் பதிவுக்கெல்லாம் தனித்தனியா நன்றி சொல்லமுடியாதுப்பா.!

நிதி திரட்ட கலை நிகழ்ச்சி, சிங்கப்பூரில் புத்தக வெளியீடு, மற்றும் சுயஉதவிக்குழு, கூட்டுறவுக்கடன் ரேஞ்சுக்கு நம்மைக் கலாய்த்த பின்னூட்டிகள் நேரில் வந்தால் நடுமண்டையில் நச்சென்று குட்டி வைக்கப்படுவார்கள், ஜாக்கிரதை.!

துளசி மேடம் வருவதாக சொல்லியிருக்கிறார். அதுபோல பெண்கள் பலரும் கலந்துகொண்டால் அனைவருக்கும் மகிழ்ச்சி.!

அப்பாவி முரு said...

//நடுமண்டையில் நச்சென்று குட்டி வைக்கப்படுவார்கள்//

குட்டியை ஏண்ணே நடுமண்டையில வைக்குறீங்க...

(எப்பிடியும் கலாய்ப்போர் சங்கம்., கிளைகள் இல்லாது... மற்றும் கட்டிடம் இல்லாதது)

Rajalakshmi Pakkirisamy said...

This logo is too good.

நர்சிம் said...

வாழ்த்துகளோ வாழ்த்துகள்..

பிரியமுடன்...வசந்த் said...

வாழ்த்துகள் வாழ்த்துகள்...

பிரியமுடன்...வசந்த் said...

இணைய எழுத்தாளர்கள் குழுமமா அப்போ சாரு ஜெமோ இணைய எழுத்தாளர்கள்தானே அவர்களுக்கும் சங்கத்துல இடம் இருக்கோ?

மறத்தமிழன் said...

ஆதி,

முதலில் வாழ்த்துக்கள்..

அப்புறம் நீங்க சென்னை புற நகர செயலாளர்

பதவியை வளைச்சிருங்க:))

Kolipaiyan said...

Present sir.

ராமலக்ஷ்மி said...

சிறப்பாக நடக்க என் வாழ்த்துக்கள்.

//சமீப காலமாக வலைப்பூவிற்கு வந்து புகழ்ந்து வைக்கும் நண்பர்களைக் காண ஆவலாகயிருக்கிறது. அது எப்படி நீங்கள் மட்டும் என் சிறப்பைக் கண்டு பிடித்தீர்கள் என்று கேட்டுத் தெரிந்துகொள்ளத்தான்.!//

:)))!