Tuesday, March 30, 2010

கடைத் தெரு

பதிவுலகம் கொண்டாடிக்கொண்டிருக்கும் இன்னொரு படம், அதற்கு ஆகத்தகுதியுள்ள படம்தான். வசந்தபாலன் நம்பிக்கையூட்டுகிறார்.

இது சினிமாடிக்கான கிளைமாக்ஸா என்றால்.. இல்லை, ரியல் இப்படித்தான் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. ஆனாலும் மனதைத்தொட்ட ஒரு படம், சமூகத்தை ஒரு புகைப்படமாய்ப் பதிவு செய்யும் ஒரு முயற்சி இன்னும் கொஞ்சம் ஹேப்பி எண்டிங்கில் முடிந்திருந்தால் மகிழ்ச்சியும், கொஞ்சம் பாஸிடிவ் நம்பிக்கையுமாக வெளிவந்திருக்கலாம். தியேட்டரிலிருந்து கனத்த மனதோடு வெளியேறவேண்டியிருக்கிறது.

Angadi-Theru-Stills-4

பல காட்சிகளில் மனம் குபுக்கென்று பொங்கிவிடுகிறது. எதிர்பாராத ஒரு நேரத்தில் சாலையோர மனிதர்கள் மீது விபத்துக்குள்ளான லாரி ஒன்று பாயும் போது திரையிலிருந்து கண்களை விலக்கி சில விநாடிகள் தலையில் கை வைத்துக்கொண்டு ‘ஐயோ’ என்று உட்காரவேண்டியதாயிருக்கிறது. அந்த அளவுக்கு காட்சி லைவ்வாக இருக்கிறது. இன்னொரு காட்சியில் குள்ள மனிதர் ஒருவரின் மனைவி அதே குறைபாட்டுடன் பிறந்த குழந்தையை முன்னிறுத்தி தன் மனவுணர்வுகளைப் பகிரும் காட்சியில் பொங்கும் கண்ணீரைக் கட்டுப்படுத்தமுடியவில்லை.

படத்தில் இன்னும் பல சிறப்புகள். காணத் தவறாதீர்கள். தொடர்ச்சியாக அய்யனார் விஸ்வநாத் எழுதிய இந்தப்படத்தின் விமர்சனத்தைக் காணுங்கள்.

*****************

நேற்று ‘பதிவர் குழுமம்’ பற்றிய பதிவைக் கொஞ்சம் சீரியஸாகத்தான் எழுதிவிட்டேன் போலிருக்கிறது. இரண்டு மெயில்கள், நான்கைந்து போன்கால்கள் (இரண்டு ஐஎஸ்டி வேறு) என பரபரப்பாகிவிட்டது. அதில் என்ன புதியவர்களை இப்படி வாரியிருக்கிறீர்கள் என்று ஒரு கேள்வி. என்ன அநியாயம் அப்படி அர்த்தம் வரும்படிக்கு எதையும் நான் எழுதவில்லையே. எழுதாததையும் புரிந்துகொள்ளும்படிக்கு நம் பின்னவீனத்துவவாதிகளின் டிரெயினிங் பலமாகத்தான் இருக்கிறது போலிருக்கிறது. ஹிஹி.

நான் புதியவர்கள், பழையவர்கள் என்று பிரித்து எழுதவேயில்லை. நான் சொன்ன கருத்துகள் பொதுவானவைதான். நிறைகுடங்கள் தளும்பாமல் இருக்கும் போது அதிரும் குறைகுடங்களின் கூத்துகளைத்தான் ‘முடியல’ என்று குறிப்பிட்டிருந்தேன்.

நேற்று கொஞ்சம் சீரியஸாக எழுதியதால் சந்திப்பில் எடுத்த புகைப்படங்களை போட மறந்துவிட்டேன். இதோ ஒரு முக்கியமான புகைப்படம். சந்திப்பில் கலந்துகொண்ட யூத்துகள் இருவர். ஹிஹி.!

DSC09456

****************

சன் டிவியில் நிஜம் நிகழ்ச்சியில் குற்றாலம் மலை மேல் செண்பகாதேவி அருவி அருகில் ஒரு பாட்டி 50 வருடங்களாக தன்னந்தனியாக வாழ்ந்துவருவது குறித்து ஒளிபரப்பினார்கள். எல்லாம் சரிதான். உள்ளூர்காரர்கள் முதல், சுற்றுலாப் பயணிகள் வரை தாராளமாக சென்று வரக்கூடிய செண்பகாதேவி அருவிக்குப் போவதை ஏதோ இமயமலை உச்சிக்கு சென்று வருவதைப்போல ‘பயங்ங்ங்கர காடு, கொடும் மலைப்பாதை, பல கிலோமீட்டர்கள், கொடிய விலங்குகள்.. உயிரைப்பணயம் வைத்து நம் குழு உங்களுக்காக அங்கே சென்று வந்தது’ என்ற பில்ட் அப்பைத்தான் தாங்கமுடியவில்லை. பல வருடங்களாக அங்கே வாழ்ந்தவன். பளிங்கு நீர், வானளாவிய மரங்கள், துள்ளித்திரியும் குரங்குகள், பறவைகள் என இயற்கை கொஞ்சும் இடங்கள் அவை. ஆஃப் சீஸனில் போனால் கூட ஒரு காட்டுப்பன்றியைக்கூட பார்க்கமுடியாது அங்கே.. ஏதோ கொடிய விலங்குகளாம். ஹும்.! அப்பளத்தைக்கூட சுத்தியல் கொண்டு உடைப்பார்கள் போல..

****************

சென்ற ஞாயிறன்று ரொம்ப அக்கறையோடு இரண்டு போன் கால்கள். ரொம்ப சோகமாக ‘தாமிரா, இன்னிக்கு மாஹாவீர் ஜெயந்தி.. கடைப்பக்கம் போய் ஏமாந்திடாதீங்க.. சும்மா ஞாபகப்படுத்தலாமேன்னுதான் ஹும்’ என்றார்கள். டாய்.. என்னாங்கடா இது? ஒரு குடும்பஸ்தனைப்போய் இப்படிக் கலாய்க்கிறாங்களேன்னு கடுப்பாகிப் போய் உட்கார்ந்திருந்தேன். சும்மா இருந்தவனை சீண்டிவிட்டால் எப்படி இருக்கும்? அதுவும் கிடைக்காது என்று தெரிந்த பின்னர்.. ஒரே 90 ஞாபகமாகவே இருந்தது. ஏற்கனவே காலையிலிருந்து ஏனோ கடுப்பாக இருந்த ரமாவை நினைத்து 90 ஞாபகத்தை விரட்டிக்கொண்டிருந்தேன். மீண்டும் ஒரு போன்கால்.

‘தாமிரா, இன்னிக்கு ஏதோ லீவாம். ரொம்ப அர்ஜண்ட். கைவசம் ஏதாவது ஸ்டாக் இருக்குமா?’

*****************

கண்ணன் போன் பண்ணினான்.

‘சைக்யாட்ரிஸ்ட், டாக்டர் ஷாலினியும் பிளாகராமே. தெரியுமா அவங்களை?’

‘பர்சனலாத் தெரியாது. போன் நம்பர் இருக்குது. வேணுமானா அறிமுகப்படுத்திக்லாம். ஏண்டா கேட்குறே?’

‘ஒரு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கணும்’

‘யாருக்கு? என்ன விஷயம்?’

‘எனக்குதான். ஏன்னு கேட்டியா? எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு’

‘ஏண்டா.. ஒரு மாசம்தான ஆச்சுது. அதுக்குள்ளயா? பாரு 4 வருஷம் ஆச்சு. நான்லாம் சமாளிச்சு இருக்கலியா..’ நான் தொடர்வதற்குள் போன் கட்டாகிவிட்டது. ஆஸ்பத்திரிக்கு கிளம்பிக்கிட்டிருப்பானோ என்னவோ..

.

24 comments:

சென்ஷி said...

ர்ரைட்.. ரைட் ;)

~~Romeo~~ said...

எனக்கு நம்பர் குடுங்க 2 வருஷம் ஆச்சு :(

திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said...

இரண்டு யூத்துகளை போட்டோ எடுத்தது ஒரு யூத்துங்களா ..??

அதிஷா said...

'' அந்த '' நன்றியை எங்கும் தெரிவிக்க முடியாததால் இங்கே!

நன்றி நன்றி நன்றி !!!

நேசமித்ரன் said...

உணர்வு பூர்வமாக அணுகி இருக்கிறீர்கள் கடைத் தெருவை

ஒரு குபுக் அப்புறம் பொங்கும் கண்ணீர் :)

அந்த போட்டோ செலக்‌ஷன் தாமிரா டச் வேறு எங்கும் பார்க்காத புகைப்படம்

சைக்கியாரிஸ்டிடமிருந்து எஸ்கேப் ஆவதற்கும் 90 மேட்டருக்கும் எந்த தொடர்பும் இல்லல்ல ?:)

வானம்பாடிகள் said...

சந்திப்பில் கலந்துகொண்ட யூத்துகள் இருவர். ஹிஹி.!

ஹிஹி:))

அக்பர் said...

கலக்கல்.

கட்டிங் மேட்டர் சூப்பர்.

சன் டிவிக்காரங்களை தேனருவிக்கு போகச்சொல்லுங்க பாஸ்.

கார்க்கி said...

சூப்பர் சகா... எல்லா மேட்டரும் தூள்..

நர்சிம் said...

ரைட்டு.. படம் பார்த்தாச்சா?

ஃபோட்டோ சூப்பர்.

Vidhoosh said...

சுத்தியலால் நொறுக்குவதை ரொம்பவே ரசித்தேன். :))

மற்றவை ஓகே.

தராசு said...

போட்டோவுல ஒரு ஆதி டச் தெரியுது.

90, நம்மள வெறுப்பேத்தறதுக்குண்ணே ஒரு கும்பல் இருக்குது தல

KVR said...

//‘பயங்ங்ங்கர காடு, கொடும் மலைப்பாதை, பல கிலோமீட்டர்கள், கொடிய விலங்குகள்.. உயிரைப்பணயம் வைத்து நம் குழு உங்களுக்காக அங்கே சென்று வந்தது’ என்ற பில்ட் அப்பைத்தான் தாங்கமுடியவில்லை.//

இவனுங்க கொடுத்த பில்டப் பார்த்து அடுத்த விடுமுறையில் ஒரு மலைக்குப் போலாம்ன்னு நினைச்சேனே :-(, ஆப்பாய்டுச்சா????

//பாரு 4 வருஷம் ஆச்சு. நான்லாம் சமாளிச்சு இருக்கலியா..//

அதானே!! போகப் போக அவருக்கும் வலி மறத்துப் போய்டும்

துபாய் ராஜா said...

பதிவுல டாப்பே அந்த யூத்துங்க படம் தான்.... :))

சுசி said...

//பல வருடங்களாக அங்கே வாழ்ந்தவன். //

ஒருவேளை நீங்க இன்னமும் அங்க வாழ்ந்திட்டு இருக்கீங்கன்னு நினைச்சாங்களோ என்னமோ..

(20 கமன்ட் வரலேன்னா அருவாள் கொண்டு மிரட்டிர ஆளாச்சே நீங்க.. அத சொன்னேன்)

ஆடுமாடு said...

'அங்காடித் தெரு' கிளைமாக்ஸ் சினிமாத்தனம். படம் முடிந்த பிறகு அது தேவையில்லை என்றே தோன்றியது.

எனக்குத் தெரிந்து அதிகப் பதிவர்கள் ஒரு படம் பற்றி புகழந்து எழுதியிருப்பது 'அங்காடித் தெரு'வாகத் தான் என்று நினைக்கிறேன்.

வாழ்த்துகள் பாஸு.

Rajeswari said...

ஓகே ஓகே..

பிள்ளையாண்டான் said...

அண்ணே,

அய்யனார் அவர்களின் திரைப் பார்வை எல்லாம் சரிதான்.

அதுக்காக, இதுவரை எந்த பதிவருமே சொல்லாத இறுதி காட்சியைப் பற்றி அவர் நீண்ட விளக்கம் கொடுத்திருப்பது தேவைதானா? அதற்க்கு நீங்களும் துணைபோவதை வன்மையாக கண்டிக்கிறேன்.

திரைப் பார்வை என்ற பெயரில், படத்தின் முக்கியமான குறியீடுகளைக் குறிப்பிட்டு, ஒரு சராசரி ரசிகனின் சிந்திக்கும் திறமையை மழுங்கடிக்கிறீர்கள்.

எம்.எம்.அப்துல்லா said...

அங்காடித் தெரு கிளைமாக்ஸ் கண்டிப்பா சினிமாத்தனம்தான். ஆனால் நல்ல படம் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.

குசும்பன் said...

//‘தாமிரா, இன்னிக்கு ஏதோ லீவாம். ரொம்ப அர்ஜண்ட். கைவசம் ஏதாவது ஸ்டாக் இருக்குமா?’//

அல்லோ 100ங்களா? போலீஸ்கார் போலீஸ்கார் இங்க ஒருத்தர் சரக்கு காய்ச்சி சப்ளை செய்கிறார், வந்து கோழி அமுக்குவது போல் அமுக்குங்க!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி சென்ஷி.!
நன்றி ரோமியோ.! (2 வருஷம் ஆயிட்டாலே அட்வைஸ் பண்ண நீங்களும் எலிஜிபிள்தான், ஹிஹி)

நன்றி ச‌ம்ப‌த்.!
நன்றி அதிஷா.! ('அதெ'ல்லாம் ச‌ப்பை மேட்ட‌ரு. அதுக்குப்போயி ந‌ன்றியெல்லாம்.. உன்னும் ஏதும் ஐடியா வேணும்னா அணுக‌வும்)

நன்றி வான‌ம்பாடிக‌ள்.!
நன்றி நேச‌மித்திர‌ன்.! (முடிஞ்ச‌வ‌னுக்கு 90. முடியாத‌வ‌னுக்கு சைக்கியாட்ரிஸ்ட். ஹிஹி)

நன்றி அக்ப‌ர்.!
நன்றி கார்க்கி.!

நன்றி ந‌ர்சிம்.!
நன்றி விதூஷ்.!

நன்றி த‌ராசு.!
நன்றி கேவிஆர்.!

நன்றி துபாய்.!
நன்றி சுசி.! (இன்னிக்கு கூட‌ 19 தான் வ‌ந்திருக்குது. அவ்வ்)

நன்றி ஆடுமாடு.!
நன்றி ராஜேஸ்வ‌ரி.!

நன்றி பிள்ளையாண்டான்.!
நன்றி அப்துல்.!

நன்றி குசும்ப‌ன்.! (போன் வ‌ந்த‌து நிச‌ம். அதுக்காக‌ நீங்க‌ த‌ந்த‌தை த‌ந்திட‌முடியுமா? இன்னும் அது ஸ்டாக்கில்தான் இருக்கிற‌து)

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஹும்.! அப்பளத்தைக்கூட சுத்தியல் கொண்டு உடைப்பார்கள் போல.. //

hi....... thamira touch.

அங்காடித்தெரு விமர்சனத்தை சுருக்கிட்டீங்களே ?

Han!F R!fay said...

\\சந்திப்பில் கலந்துகொண்ட யூத்துகள் இருவர்.\\


ரொம்ப யூத்'தா இருக்காங்களே...எப்டி சார்...:-)))))

பின்னோக்கி said...

சன் டிவி நிஜம் ஒரு ஜோக் பார்த்து சிரிச்சுட்டு போய்கிட்டே இருக்கணும்.

ரெண்டு பேர் போட்டாவும் சூப்பர். (இந்த கமெண்ட்ட அந்த ரெண்டு பேரும் படிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில்) :)

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி அமித்துஅம்மா, ஹனிஃப், பின்னோக்கி.!!