Thursday, April 15, 2010

திருமணமாகாதவர்களுக்கான எச்சரிக்கை -44

சில வாரங்களுக்கு முன்பாக..

சுபா ஒழுங்காக சாப்பிடுவதேயில்லை. ஒரு இட்லியை ஒன்றரை மணி நேரமாக கொடுப்பது, அரை தோசை சாப்பிட வைக்க அரை கிலோமீட்டர் ரவுண்ட் செல்வது என தலையால் தண்ணி குடித்துக்கொண்டிருந்தார் ரமா. கொஞ்சம் பாவமாக இருந்தாலும் உள்ளூர 'என்னை என்ன பாடு படுத்தியிருப்ப.. நல்லா வேணும்.. கடவுள்னு ஒருத்தன் இருக்கத்தான் செய்றாண்டா' என நினைத்துக்கொள்வேன். பிறகு மருந்து கொடுத்தல், பால் தருவதை நிறுத்துதல் (தூங்கும் போது), வெரைட்டி செய்தல், கூட்டமாக சாப்பிடுதல் (பக்கத்து வீடுகளுடன்) என டாக்டரின் யோசனைப்படி என்னென்னவோ செய்து பார்த்தோம். ஹூம்.. ஒரு ஸ்பூன் சாதத்தை வாயில் திணித்தாலும் அதை நமது மூஞ்சியிலேயே துப்பிவிடுவதோடு மட்டுமல்லாமல் ஏழு வீட்டுக்கு கேட்கிறமாதிரி அழுது வைத்தான். ரெண்டு பேரும் கடுப்பாகியிருந்தோம். சில நாட்களில் ஏதோ முனிவர்கள் போல வெறும் தண்ணீர் குடித்தே வாழ்ந்துகொண்டிருந்தான். அன்போடு பேசுவதும் சொல்லிக்கொடுப்பதும் சைக்கலாஜிகலாக நல்ல பலனைத் தரும் என்று டாக்டர் அடுத்த ஐடியாவை எடுத்துவிடவும் அதையும் டிரை பண்ணினோம்.

ஒரு நாள் தூக்கி வைத்துக்கொண்டு மெல்லிய குரலில், "என்னடா தம்பி, இட்லி வேணுமா? தோசை வேணுமா? பூரி சூப்பரா இருக்கும் தெரியுமா.. எல்லோரும் சாப்பிடுவமா? சாப்பிட்டாத்தானே நல்ல பலசாலியாக முடியும்.? இப்ப அப்பாவைப் பாரு.. ஒரு நாளைக்கு எத்தனை தடவை சாப்பிடுறேன்னு. இதுக்குப்போயா அழுவாங்க.? நீ குட் பாய்தானே?.."

அதற்கு ஏதும் பலன் இருந்ததா என்பதை அப்புறம் பார்க்கலாம்.

சில நாட்களுக்கு முன்பாக..

என்ன பிரச்சினையோ தெரியவில்லை, ஒழுங்காக ஆய் போகாமல் படுத்திக்கொண்டிருந்தான். அதோடு போகும் போதும், சுத்தம் பண்ணும் போதும் பயங்கர அழுகை வேறு. டாக்டரோ அப்படியேதும் பிரச்சினை இருக்கறா மாதிரி தெரியலையே என்று சொல்லிவிட்டார். திடீரென ஏதும் அசிங்கப்பட ஆரம்பித்துவிட்டானோ என நினைத்தபடி என் சைக்கலாஜிகல் ட்ரீட்மெண்டை கையிலெடுத்தேன்.

"தம்பி, எதுக்கு அழுகிற.. இதுக்குப்போயா அழுவாங்க. எல்லோரும் போறதுதானே.. ஒழுங்கா போக வேண்டியதுதானே.. இப்ப அப்பாவைப் பாரு.. ஒரு நாளைக்கு எத்தனை.."

அடச்சே..!!!!

.

35 comments:

ஆயில்யன் said...

:))))

இராமசாமி கண்ணண் said...

ஹா. ஹா. ஹா.

தமிழ் பிரியன் said...

;-))))

சங்கரராம் said...

ஹா. ஹா. ஹா.

Nataraj said...

நல்ல 'ஆய்'வு ஆதி :D

பா.ராஜாராம் said...

:-))

மங்களூர் சிவா said...

haa haa
:)))))))

முகிலன் said...

மீதி 43 இருக்காண்ணே.. இதப் படிக்காமப் போயிட்டேனே...

நம்ம வீட்ல அவங்க கொஞ்ச நேரம் முயற்சி செஞ்சி பாத்துட்டு முடியலைன்னா நம்ம கைல தட்ட குடுத்து நீயாச்சி உம்பிள்ளையாச்சி.. சாப்பிட வைக்க முடிஞ்சா சாப்பிட வை. இல்லைன்னா நீயே அதை சாப்புட்டுடுன்னு சொல்லிடறாங்க.

அத சாப்புடுற தண்டனையில இருந்து தப்பிக்கிறதுக்கு எப்பிடியாவது பையன் வாய்ல திணிச்சிடுறது.. ஆனாலும் பய துப்பிட்டுப் போயிடுறான்.

RR said...

//வெறும் தண்ணீர் குடித்தே வாழ்ந்துகொண்டிருந்தான்.//
இதிலென்ன உங்களுக்கு வருத்தம்/ஆச்சரியம்? உங்க சைக்கலாஜிகல் டிரீட்மென்ட் தான் வேலை செய்யுது...........என்ன நீங்க டாஸ்மாக் தண்ணி.......அவன் மெட்ரோ தண்ணி.

நல்லவன் கருப்பு... said...

வழக்கம்போல நல்லா இருக்கு.....தொடர்ந்து எழுதி மற்றவர்களுக்கு வழிகாட்டியாய் இருக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்....அங்க யாருப்பா ...!! அண்ணன் ஆதிக்கு ஒரு பாராட்டு விழா எடுக்கணும்....எல்லாம் ரெடி பண்ணுங்கப்பா ....!!!

//Blogger முகிலன் said...மீதி 43 இருக்காண்ணே.. இதப் படிக்காமப் போயிட்டேனே... //

இனிமே அத படிச்சு உங்களுக்கு பிரயோசனம் இல்ல அண்ணா...வேணும்ன்ன அண்ணிகிட்ட கொஞ்சம் சூதானமா நடந்துக்கிற உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும்..... :)

அத்திரி said...

:))))

LK said...

அண்ணே வயிறு கோளறு எதாவது இருக்க போகுது.

@முகிலன்
நம்ம மேடம் இதுல ரொம்ப தெளிவு, வேண்டாம்னா வேண்டாம்தான். யார் குடுத்தாலும் சரி.

டம்பி மேவீ said...

satyamaa mudiyalanga

எம்.எம்.அப்துல்லா said...

;)

தராசு said...

எங்க போனீங்க, ரொம்ப நாளா காணோம், ஆணி அதிகமா???

அப்புறம் இது உங்க ஏரியா, சொன்னா நிறுத்தவா போறீங்க, வழக்கம் போல அடிச்சு ஆடத்தான் போறீங்க, நடத்துங்க.

நாய்க்குட்டி மனசு said...

புள்ளை வளக்கிரதுன்ன சும்மாவா? ஆனா அது சிரிக்கிற ஒரு கள்ளமில்லா சிரிப்பில எல்லா கஷ்டமும் பறந்து போகும்.

கார்க்கி said...

உங்கள மாதிரி பலசாலி ஆகலாம்னு சொன்னா எப்படி சாப்பிடுவான்? யாராவ்து உங்க ஃப்ரெண்டு 170 செ.மீ ஹய்யிட்டுல, 70 கிலோ வெயிட்டுல, ஸ்மார்ட்டா, அழகா , ஹேண்ட்சம்மா இருப்பாங்க.. அவங்கள கூட்டிட்டு போய் காட்டுங்க பாஸ்....

புதுகைத் தென்றல் said...

எங்க மாமா குழந்தைநல மருத்துவர் அவர் சொல்லிக் கொடுத்த டெக்னிக் தான் என் வீட்டில் யூஸ் ஆனது.

பசிக்கும் வரை காயவிட்டு பசி உணர்ந்ததும் சாப்பிட கொடுக்கலாம்.

அதுக்காக ரமாவை 'என்னை என்ன பாடு படுத்தியிருப்ப.. நல்லா வேணும்.. கடவுள்னு ஒருத்தன் இருக்கத்தான் செய்றாண்டா' கறுவுவதை வன்மையாக கண்டிக்கிறேன்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

Ayilyan, Kannan, Sankar, Nataraj, Para, Siva, Mukilan, RR, Karuppu, Aththiri, LK, MayV, Abdul, Tharasu, Naikutti, Karki, Thentral.. Thanks to all.!

கண்ணகி said...

:)....

மோனி said...

Same Blood..


..//ஆ.வி.-க்கு வாழ்த்துகள்....//

ஸ்ரீவி சிவா said...

நிச்சயமா என்னால இதை காமெடியா எடுத்துக்க முடியல ஆதி...

ஏன்னா வீட்டுல எனக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிட்டாய்ங்க. நீங்க எழுதுன இந்த விஷயத்துல தகப்பன் ஸ்தானத்தில் என்னை வெச்சு பாக்குறேன்.
அய்யயோ...முடியல. நான் அவ்வளவு பொறுப்பான ஆள் கிடையாதே பாஸ்.

இனிமையான இளமை காலத்துக்கு ஆப்பு வெச்சுருவாய்ங்களோ? பேதியை கிளப்புறீங்க.. சே.. பீதியை கிளப்புறீங்க ஆதி.

வி.பாலகுமார் said...

:) :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

சுபாவின் இந்த ரெண்டு ப்ராப்ளத்துக்குமே சேர்த்து சாப்பாட்டை டெஸ்ட் செய்து பார்த்திருக்கலாமே, ஏன்னா நீங்க செஞ்சதை நீங்க சாப்பிட்டே .......... :))))

அக்மார்க் ஆதி பதிவு.

சத்ரியன் said...

யாரங்கே?

வலையுலகத்துக்குன்னு ஒரு தலைவன் யாரும் இல்லியா? இனிமே மொக்கைக்குன்னு ஒரு அளவுக்கோள் வையுங்கப்பா.

இந்த பதிவுல வர அப்பாவப் பாருங்க. அப்பாவியா ‘எத்தன”.....

Hanif Rifay said...

0பீதியை கிளப்புறீங்க சார்...

Anonymous said...

பையனுக்குன்னு தனியா நேரம் ஒதுக்கி சாப்பிட வைக்காமா, நீங்க ரெண்டு பேரும் சாப்பிடும் போது ஊட்டுங்க.

செல்வேந்திரன் said...

:)))

அமுதா கிருஷ்ணா said...

ஸ்ரீவி சிவா மாதிரி சின்ன பசங்களுக்கு பீதியை கிளப்புறதே உங்களுக்கு வேலையா போச்சு....

Cable Sankar said...

நீங்க பிஸியா இருக்கீங்கன்னு தெரியுது..:))

பிரசன்னா said...

செந்தில் கூட ஒரு படத்துல இப்படித்தான்.. எந்த எடத்துல என்ன உதாரணம் சொல்றதுன்னு தெரியாம அடி வாங்குவார் :)

அன்பரசன் said...

he he he !!!

ஆதிமூலகிருஷ்ணன் said...

கண்ணகி,

மோனி (அது நானில்லைங்க),

ஸ்ரீவி சிவா (இடுகையின் நோக்கம் நிறைவேறிடுச்சு. நீங்கள் பிற பாகங்களையும் தவறாது காணவும்),

பாலகுமார்,
அமித்துஅம்மா,
சத்ரியன்,
ஹனிஃப்,
அம்மிணி,

செல்வா (நீ சிரிடி, இருக்குது உனக்கு),

அமுதா,
கேபிள்,
பிரசன்னா,
அன்பரசன்..

அனைவருக்கும் நன்றி.!

ஸ்ரீவி சிவா said...

//இடுகையின் நோக்கம் நிறைவேறிடுச்சு. நீங்கள் பிற பாகங்களையும் தவறாது காணவும்//
என்ன நோக்கமோ போங்க... டெர்ரர் பீலிங் பாஸ். அவ்வ்வ்வ்.

நான் ரெகுலரா படிச்சிட்டு இருக்கேன் ஆதி. இப்போதான் பின்னூட்டம் போடுறேன்.

வெற்றி said...

:))