Friday, April 2, 2010

சபாபதி – திரை விமர்சனம்

சில பழைய படங்கள் மிகவும் ரசனையானவை. 1941ல் வெளியான சபாபதி என்ற படம் அதில் ஒன்று. இந்தப்படம் எனக்கும் என் தங்கைக்கும் எவர்க்ரீன் பேவரிட். எத்தனை முறை பார்த்திருப்போம் என சொல்லிவிடமுடியாது. எப்போது டிவியில் ஒளிபரப்பினாலும் மிஸ் பண்ணவே மாட்டோம்.

எந்த முக்கியமான சமூகக் கருத்துக்களோ, அந்தக் காலத்துக்கே உரிய திருப்பங்களுடன் கூடிய நீண்ட கதைப்பின்னலோ இல்லாத மிக எளிய கதை. பத்தாவது படிக்கும் ஹீரோ, பணக்காரர். வகுப்பில் பெயில் ஆகிறார். அப்பா படிக்கச்சொல்லி கட்டாயப்படுத்த அம்மாவின் ஏற்பாட்டில் கல்யாணம் ஆகிறது. பத்தாவதில் பாஸாகிவிட்டு இவருக்காகவே கல்லூரி போகாமல் இருக்கும் ஹீரோயின். ஹீரோவின் பெயரிலேயே அவருக்கு ஒரு வேலைக்காரர். ஹீரோயின் பக்கம் ஒரு வேலைக்காரி. இப்படியாக கதை நகர்ந்து அவர் பாஸாவதில் முடிகிறது. வேறெந்த அழுத்தமான விஷயமும் இல்லை. ஆனால் படம் நம் மனதில் நீங்காமல் இடம்பெற நிறைய காரணங்கள்.

சகுந்தலை, ஆர்யமாலா, திருமங்கையாழ்வார், பூலோக ரம்பை, சாவித்திரி, விஷ்ணுலீலா மாதிரியான படங்கள் வெளியான காலகட்டங்களில் இயல்பான நம்மிடையே உலவிக்கொண்டிருக்கும் மக்களைப் பற்றிய இயல்பான கதை எனில் எப்பேர்ப்பட்ட ஒரு ஆறுதலையும், மகிழ்ச்சியையும் அப்போதைய பார்வையாளர்களுக்கு இந்தப்படம் தந்திருக்கும்.? சென்னையில் வாழும் உயர் குடும்ப வாழ்க்கை முறை. பாத்திரங்கள் பேசும் வசனங்களில் சென்னைத் தமிழின் வாசம். அதுவும் கார் வைத்திருக்கும் பணக்காரக்குடும்பம். வித்தியாசமான ரகளை பண்ணியிருக்கிறார்கள் படத்தை உருவாக்கியவர்கள்.

ஹீரோவாக டிஆர் ராமச்சந்திரன். என்ன.. அப்போது அவருக்கு ஒரு 18 வயதிருந்திருக்குமா? அவரது முட்டாள் வேலைக்காரராக காளி.என்.ரத்தினம். இருவரது பெயரும் சபாபதி. இந்தப் படத்திலிடம்பெற்ற பல காமெடிக்காட்சிகள் பல தடவைகள் தமிழில் காப்பி செய்யப்பட்டிருக்கின்றன. சோடா பாட்டிலை உடைத்துத்தருவது, இரண்டு நாலணாக்களில் எந்த நாலணாவுக்கு அல்வா வாங்குவது? போன்ற பல காட்சிகளின் ஒரிஜினல் இந்தப்படம்தான்.

ஹீரோ பள்ளியில் படிக்கிறார். வாத்தியாரைக் கலாட்டா செய்கிறார். சக மாணவர்களிடம் ‘மியூஸிக் கேட்கலாம் பிரதர், கார்ட்ஸ் விளையாடலாம் பிரதர்’ என ஆங்கிலத்தில் பேசிக்கொள்கிறார். ஆனால் படிப்புதான் வரமாட்டேன் என்கிறது. மாப்பிள்ளை பார்க்க வரும் மாமியிடம் ஆங்கிலப் பேப்பர் என்று தினமணியைப் வைத்துக்கொண்டு நான்கு வரி ஆங்கிலம் வாசித்து அதற்கு அர்த்தமாக நாற்பது வரிகள் (தற்போதைய வடிவேலு ஜோக்) சொல்லி சபாபதியிடம் சமாளிக்கிறார். பெண் பார்க்க அம்மாவைக்கெஞ்சி டிரைவராக மாறுவேடத்தில் போகிறார். குட்டு உடைகிறது. கல்யாணம் ஆகிறது. (ஹீரோயின் பத்மா) வகுப்பில் பெயில் ஆகிறார். கண்டிக்கும் அப்பாவிடம் இவருக்காக அம்மா ‘நீங்க படிச்சு கிழிச்சுட்டீங்களாக்கும். இப்ப நல்லாயில்ல?’ என்று சண்டைக்குப்போகிறார். தலைப்பொங்கலுக்கு மச்சினனின் குறும்பு விளையாட்டு. இடையே வேலைக்கார சபாபதிக்கும், ஹீரோயின் வீட்டு வேலைக்காரி ‘குண்டுமுத்து’வுக்கும் காதல். இடையில் வயதான தமிழ் வாத்தியாருக்கும் (கே.சாரங்கபாணி) அவரது இளம் மனைவிக்கும் இடையேயான சுவாரசியங்கள். அட்டம்ட் எழுத மனைவி தடையாக இருப்பாள் என மாமனார் தடை சொல்ல அது அப்படியல்ல என்று இறுதியில் நிரூபிக்கிறார் ஹீரோயின்.

Sabapathi

இவையெல்லாவற்றையும் விட ஒவ்வொருவரும் சென்னைத்தமிழும், ஆங்கிலமும் கலந்து பேசிக்கொள்ளும் அழகுக்காகவே இன்னும் பல தடவைகள் பார்க்கலாம். இரண்டு சம்பந்திமார்களும் ஒருவரையொருவர் ‘மச்சி’ என்றழைத்துக்கொள்கிறார்கள். ‘குண்டுமுத்தே’ என்றி ஹீரோயின் அழைக்கும் அழகு. பையன் ‘ரயில் குப் குப்பென்று சென்று கொண்டிருப்பது’ பற்றி 18 பக்கம் கட்டுரை எழுதியிருக்கும் அழகினைச் சொல்லி வாத்தியாரைக் கண்டிக்கும் அப்பா. பின்பு தேர்தலில் நிற்கும் அவரே வாத்தியாரிடம் ஓட்டுக்காக பணம் (அப்போவே) கொடுத்து வழிகிறார். ரசனையான காட்சிகளைச் சொல்லவேண்டும் என்றால் அத்தனைக் காட்சிகளையும்தான் சொல்லவேண்டும். பாடல்கள் இருந்தாலும் பல பாடல்கள் மிகச்சிறிதாகவே உள்ளன. சந்தர்ப்பம் கிடைத்தால் காணத் தவறாதீர்கள்.

32 comments:

ராமலக்ஷ்மி said...

//எவர்க்ரீன் பேவரிட்//

எனக்கும்:)!

இராகவன் நைஜிரியா said...

படம் பார்க்கும் போது சிரிச்சுகிட்டே இருக்கலாம்..

பழைய படத்திற்கான விமர்சனம் எழுதும் போது அதை ஆழ்ந்து அனுபவித்து எழுதுகின்றீர்கள்..

ஆயில்யன் said...

அந்த வேலைக்காரருக்கா [ எனது முன்னாள் ஆபிசரோட அப்பா ] - காளி ரத்னம் - பார்த்த படம் ரெண்டு வருடங்களுக்கு முன்பு ரொம்ப ரசித்த படம் அந்த காலத்தில் மைனர்கள் எப்படி நடந்துக்கிட்டாங்கன்னு பார்த்து தெரிஞ்சுக்கிடலாம் :))

அன்புடன் அருணா said...

ம்ம்ம் பார்த்ததிலலை...திடீர்னு என்னா பழைய பட மலரும் நினைவுகள்???

நர்சிம் said...

எந்த நால்ணாவுக்கு சோடாப்பா..கலக்கலா இருக்கும்

அதெல்லாம் சரி..சர்ர்ரி வேணாம்..

இராமசாமி கண்ணண் said...

அருமையான படம்ங்க அது.

தராசு said...

அய்ய, படம் பார்க்க போனா வெறும் நடிப்பையும் கதையும் தான் பார்ப்பீங்களா, இந்த பேக் ரவுண்ட் ஸ்கோர், கோரியோகிராஃபி, லைட்டிங், கேமரா ஏங்கிள், எடிட்டிங், வசனமில்லாமல் ஒற்றை வயலின் இசையிலயே ஹீரோவோட ஃபீலிங்க்ஸ் இதையெல்லாம் பார்க்க மாட்டீங்களா????

நாஸியா said...

ஐ! எனக்கும் பிடிச்ச படம்!!

'அப்படியாப்பா!!' 'சரிப்பா'

எனக்கும் சம்பந்திமார் 'மச்சி'ன்னு கூப்பிட்டுக்கிட்டது ஆச்சரியமா இருக்கு.. (தமிழ் முஸ்லிம்கள் மத்தியில் அண்ணி முறை வருபவர்களை மச்சின்னு கூப்பிடுவது வழக்கம்)

MANO said...

பார்த்திருக்கிறேன்...ரொம்ப அழகான நகைசுவை படம் இது.

மனோ

Sabarinathan Arthanari said...

நல்ல நகைச்சுவை படம்

துபாய் ராஜா said...

விரைவில் சாந்த சக்குபாய், மங்கம்மா சபதம் (வைஜயந்திமாலா அம்மா ஹீரோயினா நடித்தது.அவா ஊதினா இவா வருவா..என்ற பஞ்ச் டயலாக் ) போன்ற திரைவிமர்சனங்களையும் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வலுடன் எதிர்பார்க்கிறோம் ஆதி.... :))

ஜெயந்தி said...

எங்கள் குடும்பத்திற்கே பேவரிட் படம். அதில் சமூகக் கருத்தும் வருகிறது. அந்தக்காலத்தில் பெண்கள் பள்ளிக்குச் செல்வது குறைவு. இதில் பெண்க்ள படிக்க வேண்டும் என்று காட்டுகிறார்கள்.

sriram said...

ஆதி
அடுத்து என்ன, சாந்த சக்குபாய் விமர்சனமா?
கலக்குங்க
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

மயில்ராவணன் said...

சமீபமாத்தான் டிவில இந்தப்படம் பாத்து ரசித்தேன்..உங்க விமர்சனம் படிச்சதும் ரொம்ப சந்தோஷப்பட்டேன்.

தருமி said...

அந்த turn the table joke பற்றிச் சொல்லலையே ... ஆனா அது அந்தக் காலத்திலேயே படத்தில வச்சிருந்திருக்காங்களே ..!

படம் பார்த்த போது தங்ஸ் சொன்னது: ஒரு படத்திலேயும் நீங்க இப்படி சிரிச்சி பார்த்ததில்லையே ...

iskcon said...

குறிப்பாக புகைவண்டி பற்றி குப் குப் குப் என்று டி.ஆர். ராமச்சந்திரன் தமிழ் வாத்தியாரிடம் கட்டுரை எழுதியபோது எழும் நகைச்சுவையை சொல்வதற்கு வார்த்தை இல்லை. இன்று கூட ரசிக்கும்படியான இந்த திரைப்படம் தமிழ் திரை உலகில் ஒரு மைல் கல் என்றால் மிகை ஆகாது என்பது என் கருத்து.

thalaivan said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

Hello

you can register in our website http://www.thalaivan.com and post your articles

install our voting button and get more visitors

http://www.thalaivan.com/button.html


Visit our website for more information http://www.thalaivan.com

Nataraj said...

எனக்கும் favorite 'தாம்ப்பா'... நான் இப்படத்தில் சற்று ஷாக்-ஆன ஒரு அந்தக்கால மொழிப்பிரயோகம் இது. ஹீரோயின் பரதம் கற்றுக்கொண்டிருப்பார். அவரின் future மாமியார் வருவார். "ஒ, குழந்தைக்கு 'தேவடியா கச்சேரி' எல்லாம் சொல்லி தரீங்களா" என்று இயல்பாய் கேட்பார் ! ஒரு வார்த்தை 50 வருடத்தில் தமிழின் மிக முக்கிய வசைசொல்லாக மாறியதன் சமூக காரணங்கள் ஆராய்ச்சிக்கு உரியது.

இன்னொன்று, அந்த காலத்தின் மேல்தர மக்களின் feudalistic டைப் வாழ்க்கை மிக இயல்பாய் வெளிப்பட்டிருக்கும். சபாபதி தவிர படத்தில் மத்த வேலைக்காரர்கள் ஒரு distance - இலேயே இருப்பர்கள். டி.ஆர்.ராமச்சந்திரன் கிட்டத்தட்ட எல்லா படத்திலுமே அப்படி தான் நடித்தார். குறையாக சொல்லவில்லை, ஜஸ்ட் அன் observatation ...

pappu said...

நேற்று லோக்கல் சேனலில் மதுரையில் போட்டது உங்களுக்கு எப்படித் தெரியும்?

கரண்ட் கட் பழிவாங்கிவிட்டது!

பல நாளாக இந்தப் படத்தை துரத்திக் கொண்டு இருக்கிறேன்.

Cable Sankar said...

ஏன்.. ஏன்..?

என்ன ஏன்?

எதுக்கு?

என்ன எதுக்கு?

வேணாம்

என்ன வேணாம்..

ஏன்..?

ச.செந்தில்வேலன் said...

என்னுடைய கலெக்சனில் இருக்கும் படம். மிகச் சிறந்த படம்..

அதுவும்.. அந்த "தெற்கு ரயில்வேயைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருப்பார் பாருங்க... அது தான் டாப்பு..

"குப்சிப் குப்சிப் குப்சிப் குப்சிப் குப்சிப் குப்சிப் குப்சிப் குப்சிப் குப்சிப் குப்சிப் குப்சிப் குப்சிப் குப்சிப் குப்சிப் குப்சிப் ....." 7 பக்கத்துக்கு கட்டுரையாம்... கலக்கல்...

டம்பி மேவீ said...

இந்த டிவிடி எங்கே கிடைக்குது ??????

நானும் இந்த படத்தின் காட்சிகளை பார்த்திருக்கிறேன் ...ஆனால் முழு படத்தை பார்த்ததில்லை. செம காமெடி யாக இருக்கும் என்று கேள்வி பட்டு இருக்கிறேன்

அப்பாவி முரு said...

நல்லவேளை வடை ஊசி போகுமுன் வந்துட்டேன்....


ஏ. வி. மெய்யப்பன் தான் இந்த படத்தை டைரக்டர் எனது கூடுதல் தகவல்...

(சிங்கை ஒலி எஃப்.எம் இல் இந்த பதிலைச் சொல்லி, 2007 டிசம்பர் நடந்த நட்சத்திர கலைவிழாவிற்கான இலவச டிக்கெட்டை வென்றேன். அந்த வகையில் எனக்கு பிடித்த முக்கியமான படம்)

kavisankar said...

சோடா காமெடி இந்த படத்துலதான வரும் அதை விட்டுட்டீங்களே!

ஹுஸைனம்மா said...

புரியுது ஆதி; உங்கள வெளியே போகவிடாம ரமா தடுத்ததால, டிடி அல்லது ஏதோ ஒரு சேனலில் போடப்பட்ட இந்தப் படத்தைப் பார்க்கவேண்டியதாப் போச்சு, அதானே!!

ரமாவுக்கு நன்றி!!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி ராமலக்ஷ்மி.!
நன்றி இராகவன்.!
நன்றி ஆயில்யன்.!
நன்றி அருணா.!
நன்றி நர்சிம்.!
நன்றி கண்ணன்.!
நன்றி தராசு.! (ஹிஹிஹிஹி)
நன்றி நாஸியா.!

பின்னோக்கி said...

கடந்த ஒரு மாத காலமாக இந்த படத்தை பார்க்கவேண்டும் என்ற திடீர் ஆவல்.

மிகவும் வெள்ளந்தியான, கொஞ்சம் கூட டென்ஷன் இல்லாமல் பார்க்கக்கூடிய படம்...

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி மனோ.!
நன்றி சபரிநாதன்.!
நன்றி துபாய்ராஜா.! (ஹிஹி)
நன்றி ஜெயந்தி.!
நன்றி ஸ்ரீராம்.!
நன்றி மயில்ராவணன்.!
நன்றி தருமி.!
நன்றி இஸ்கான்.!
நன்றி நட்ராஜ்.! (நான் பதிவில் எழுத விட்டுப்போன கருத்தைத் தந்திருக்கிறீர்கள்)
நன்றி பப்பு.!
நன்றி கேபிள்.! (WHY?)
நன்றி செந்தில்வேலன்.! (அது 7 பக்கமல்ல, 18 பக்கங்கள். அதுவும் அவர் வாசிக்குமழகு இருக்கிறதே..)
நன்றி மேவீ.! (மோசர்பேர் ஒரிஜினல் டிவிடி கிடைக்குதுங்க)
நன்றி முரு.! (அந்த டீடெயில்ஸ் தரமறந்துட்டேன்)
நன்றி கவிஷங்கர்.!
நன்றி ஹுஸைனம்மா.!
நன்றி பின்னோக்கி.!

பாபு said...

'அப்படியாப்பா!!' 'சரிப்பா'

விக்னேஷ்வரி said...

இதுவரை சந்தர்ப்பம் கிடைக்கல. சீக்கிரமே பார்த்து விடுகிறேன்.

ஸ்ரீதர் நாராயணன் said...

நீங்க ஏற்கெனவே எழுதிட்டீங்களா? :) இப்பதான் அதிஷா போஸ்ட்லயும், ட்விட்டர்லேயும் இந்தப் படத்தைப் பத்தி பேசிட்டு இருந்தேன். செம படம் :)

இந்தப் படம் பார்த்த சமயங்களில் ‘என்ன பிரதர்’ ‘வாங்க பிரதர்’ என்று நண்பர்களோடு பேசிக் கொள்வது வழக்கம். :))

SanjaiGandhi™ said...

வயசான காலத்துல்ல ஈசி சேர்ல உக்காந்துட்டு நல்ல நல்ல பதிவா எழுதிட்டு இருக்காருய்யா மனுஷன் :)