Sunday, April 4, 2010

மர்மதேசத்தில் பையா

மர்மதேசம்

நம்ப ஆளுங்க இம்சை பண்றதுல பயங்கர கெட்டிக்காரங்க என்பது போல இந்த ஹாலிவுட்காரங்க டுபாகூர் விடுறதுல பயங்கர கெட்டி. அவங்களும் என்னதான் செய்வாங்க பாவம்? எப்படித்தான் வித்தியாசமான கதைகள் சொல்றது? இந்தப்படத்துல கடவுள்கள் குரூப்புக்கும் (அவங்களுக்குள்ளேயிருக்கும் பிரச்சினைகள் தனி) மனிதர்கள் குரூப்புக்கும் சண்டை.. மனிதர்கள் சைடுக்கு கடவுளுக்கும் மனுஷிக்கும் பிறந்த ஹீரோ தலைவன்.. எப்பூடி?

clash_of_the_titans_poster02

வித்தியாசமாக சுவாரசியமாக திங்க் பண்ணாவிட்டால் எவ்வளவுதான் டெக்னிகல் சைடில், கிராஃபிக்ஸில் கலக்கினாலும் பிரயோஜனம் இல்லை. படத்தில் சொல்லிக்கொள்கிற மாதிரி சுவாரசியமாக ஏதும் இல்லை. பறக்கும் குதிரை, பெரிய்ய்ய்ய தேள், பிரம்மாண்டமான க்ராக்கன் எல்லாம் ஏற்கனவே பார்த்தவைதான். அதிலும் மெட்யூஸா, அதன் குட்டிப்பாம்புகள் ஹேர்ஸ்டைல் உடைய தலை, பார்ப்பவர்களைக் கல்லாக்கும் திறன், அது இருந்தால்தான் அடுத்த கட்டம் என்ற திரைக்கதை, கிளைமாக்ஸில் பிரம்மாண்ட கிராக்கன் குறிப்பாக கிளைமாக்ஸ் நிகழும் கடல்முகம் பார்த்த பில்டிங் உட்பட என அத்தனையையும் அப்படியே ‘காட் ஆஃப் வார்’ ப்ளேஸ்டேஷன் கேம் சீரிஸிலிருந்து லவட்டியிருக்கிறார்கள். மே பி அவர்கள் அனுமதி வாங்கி செய்திருப்பார்களாயிருக்கும்.

ஃப்ரீயா இருந்தா இவங்களின் டுபாகூரும் எந்த அளவுக்குதான் போகுதுன்னு பார்க்க ஒரு தடவை பார்த்துவையுங்கள்.

*******************

பையா

விஜய், அஜித்களுக்கு கடும் போட்டியாக சூர்யா இருப்பது போல அடுத்து கார்த்தியும் உருவாகியிருக்கிறார். வயசாகிவிட்டதால் அப்படியாவது அவர்கள் இருவரும் ரிடையர் ஆகித் தொலையமாட்டார்களா என்ற ஆசை ஒருபுறம். அவர்கள் இருப்பது பத்தாதா நீங்களுமாய்யா என்ற எரிச்சல் மறுபுறம்.

ரொம்பப் புதுமை என்றில்லாவிட்டாலும் தமிழுக்கு ஓரளவு புதிய கதைக்களம். ஜிவ்வுன்னு லாஜிக் மீறாமல் (கலைத்தன்மையோடேயே, கமர்ஷியலாகவே கூட) கொண்டு போயிருக்கலாம்தான். ஆனால் அவ்வளவு ஈஸியா திருந்திட்டாங்கன்னா அதெப்படி? ‘நிக்கிற பஸ்ஸில் ஏறமாட்டார், ஓடுற பஸ்ஸில்தான் ஏறுவார்’ என்று நண்பர் வசனம் பேச ஹீரோ ஓடி வந்து பஸ் ஏறுகிறார். இப்படி 20 வருடங்களுக்கு முன்னால் உள்ள காட்சியுடன் படம் துவங்க நாம் முதல் கொட்டாவி விடுகிறோம்.

paiya-movie-wallpapers-posters-01

அப்புறம் சற்றுநேரத்தில் பரபரப்புடன் கார் கிளம்பவும் நாம் நிமிர்ந்து உடகாருகிறோம். சண்டையைத் தவிர உருப்படியாக பண்ணுவார், வேறெதுவாவது மும்பையில் நிகழும் என்று நாம் எதிர்பார்த்துக்கொண்டிருக்க அப்படி எதுவும் கடைசி வரை நிகழவேயில்லை. முதல் காட்சியில் ஹீரோயினைக் கண்டவுடனேயே வெறித்தனமான காதல் வந்து விடுகிறது ஹீரோவுக்கு. கடைசிக் காட்சியில் டைட்டில் போடும் போது நண்பர்கள் வந்து சொல்லும் வரை ஹீரோயினுக்கு ஹீரோ மேல் காதல் வந்து தொலையவில்லை. என்ன அநியாயம் இது.? இவ்வளவுக்கும் அவர் இவருக்காக என்ன மண்ணாங்கட்டியெல்லாம் செய்துதொலைக்கிறார். ஹூம்.!

எதிர்புறம் நிற்கும் வில்லன்கள் வரிசையிலிருந்து ஒரு அடியாள் மட்டும் கத்தியுடன் ‘குடுகுடு’ வென முதலில் ஓடிவந்து ஒத்தையில் நின்று கொண்டிருக்கும் ஹீரோவின் முஷ்டியால் ‘டும்’மென குத்து வாங்கி வேரறுந்த மரமாய் சாய்வது நன்றாகத்தான் இருந்தது முதல் படத்தில். ஆனால் அதையே எல்லாப் படத்திலும் வைத்தால் எப்படி? இந்தப்படத்தில் இன்னும் கொஞ்சம் அதிகமாக எல்லா சண்டைக்காட்சிகளையும் அப்படித்தான் துவங்கியிருக்கிறார்கள். ஆக்ஷன் கொரியோகிராபர்ஸ் கொஞ்சமாவது புதுசா சிந்திங்கப்பா.. முடியல.. ஆஃப்ட்ரால் மானாட மயிலாட புரொகிராமுக்குக்கூட எப்படில்லாம் புதுசு புதுசா திங்க் பண்றாங்க தெரியுமா?

தமன்னாவின் காஸ்ட்யூம் டிஸைனர் நிச்சயமாக ஒரு ஃபேஷன் டிஸைனராகத்தான் இருக்கவேண்டும். ஏன்னா வித விதமான டிரெஸ்கள், ஆனால் ஒண்ணு கூட நல்லாயில்லையே..!! படத்தின் பிளஸ் ஒளிப்பதிவும், ம்யூஸிக்கும்தான். அழகழகான பாடல்களும், அவை படமாக்கப்பட்ட விதமும் கொள்ளை அழகு.

********************

போனஸ் : ரேனிகுண்டா

பார்க்கவேண்டிய லிஸ்டில் இருந்தும் தியேட்டரில் தவறவிட்டு, திருட்டு டிவிடி கூட கிடைக்காமல் கடைசியாக இன்று விஜய் டிவியில்தான் பார்த்தேன். மிகச்சிறப்பான படம். வன்முறை கொஞ்சம் தூக்கலாக இருந்தாலும் இளம் குற்றவாளிகளின் நாம் அறிந்திராத பரபரப்பான பக்கங்கள். மிகச்சில இடங்களில் தொய்வு மற்றும் சினிமாத்தனம் இருந்தாலும் அவற்றையெல்லாம் தாண்டி படம் நிறைவாக செய்யப்பட்டிருப்பதாக உணரமுடிகிறது.

ranikunda

நடிகர்கள் தேர்வு, அவர்களின் நடிப்பு, லாஜிக் மீறாத இயல்பான காட்சிகள், திரைக்கதை, ஒளிப்பதிவு, காமிராக்கோணங்கள், இசை, கலை என அத்தனையும் சிறப்பு.. இன்னும் இன்னும்.. சொல்லத்தெரியாத ஏதோ ஒரு பர்ஃபெக்ஷன் படமெங்கும் நிறைந்திருக்கிறது. அதுதான் தேர்ந்த இயக்கத்தின் விளைவா என்ன.? கிண்டல் இல்லாமல் சீரியஸாகத்தான் சொல்கிறேன், இன்றைய நிலையில் ஓரளவு நல்ல படைப்புகளைத் தரும் பாலாஜி சக்திவேல், வசந்தபாலன், ஜனநாதன், சிம்பு தேவன், பாண்டியராஜ், சமுத்திரக்கனி, சசிகுமார் போன்ற யாருடைய படத்திலும் இல்லாத ஒரு உணர்வை உணரமுடிந்தது. அவர்கள் ஈகோ பார்க்காமல் ‘ரேனிகுண்டா’ R.பன்னீர்செல்வத்திடம் இயக்கம் குறித்து இணைந்து பணிபுரிந்து தெரிந்துகொள்ளலாம். அவர்களுக்கு மட்டுமின்றி தமிழ்சினிமாவுக்கும் அது நல்லது. A worthy fellow.!

.

26 comments:

பாலா said...

ரைட்டு !!

அன்புடன்-மணிகண்டன் said...

//மானாட மயிலாட புரொகிராமிலேயே எப்படில்லாம் புதுசு புதுசா பண்றாங்க தெரியுமா?//

எப்படி ஆதி இப்படியெல்லாம்?? ;)

குசும்பன் said...

ஞாயிற்று கிழமை போஸ்ட் போட்டுவிட்டு அப்புறம் என்னை ஒரு பயபுள்ளையும் கண்டுக்கவில்லை, நான் நிக்கிறேன் நிக்கிறேன் என்று பலாசுளாக்கி மாதிரி கத்தவேண்டியது! உங்களை எல்லாம்...

கடமைன்னு ஒன்னு இருக்கே அதுக்காக.

KVR said...

// A worthy fellow.!//

படம் பார்க்கும்போது எனக்கு RGV நினைவுக்கு வந்தார்.

குசும்பன் said...

//வேறெதுவாவது மும்பையில் நிகழும் என்று நாம் எதிர்பார்த்துக்கொண்டிருக்க //

அனுஜன்யா விக்கெட் விழுமான்னு எதிர்பார்த்திருக்கிறீர்:)))

KVR said...

//ஞாயிற்று கிழமை போஸ்ட் போட்டுவிட்டு அப்புறம் என்னை ஒரு பயபுள்ளையும் கண்டுக்கவில்லை, நான் நிக்கிறேன் நிக்கிறேன் என்று பலாசுளாக்கி மாதிரி கத்தவேண்டியது! உங்களை எல்லாம்...
//

யே குசும்பா, ஞாயிற்றுக்கிழமையிலே வேலை பார்க்கிற நம்மள மாதிரி நாலு பேருக்காக அண்ணாச்சி பதிவு எழுதுறாரு, அதையும் கெடுத்துடுவிங்க போல இருக்கே!!

குசும்பன் said...

//R.பன்னீர்செல்வத்திடம் இயக்கம் குறித்து இணைந்து பணிபுரிந்து தெரிந்துகொள்ளலாம். //

ரைட்டுங்க சொல்லிபோடுலாங்க எசமான்!

முதலில் இந்த பேரரசு யாரிடம் இணைந்து பணிபுரிஞ்சா நமக்கு நல்லதுன்னும் ஒரு யோசனை நீங்கதான் சொல்லிபோடனும்!

குசும்பன் said...

//படம் பார்க்கும்போது எனக்கு RGV நினைவுக்கு வந்தார்.
//

எனக்கு MGM, VGP எல்லாம் நினைவுக்கு வந்தது!

குசும்பன் said...

கடை ஓனரே இல்லாதப்ப கடையில நாமலே டீ ஆத்துறது நொம்ப போர்:(

பை பை

KVR said...

//கடை ஓனரே இல்லாதப்ப கடையில நாமலே டீ ஆத்துறது நொம்ப போர்:(
//

ஓனர் மானாட மயிலாட பார்க்க இப்போவே தயாராகிக்கிட்டு இருக்கார்ன்னு நினைக்கிறேன். நானும் பை பை

SanjaiGandhi™ said...

/ரொம்பப் புதுமை என்றில்லாவிட்டாலும் தமிழுக்கு ஓரளவு புதிய கதைக்களம்./

புதுக்கோட்டையிலிருந்து சரவணன் தமிழ் படம் இல்லையா மாமா?

SanjaiGandhi™ said...

//குசும்பன் said...

ஞாயிற்று கிழமை போஸ்ட் போட்டுவிட்டு அப்புறம் என்னை ஒரு பயபுள்ளையும் கண்டுக்கவில்லை, நான் நிக்கிறேன் நிக்கிறேன் என்று பலாசுளாக்கி மாதிரி கத்தவேண்டியது! உங்களை எல்லாம்..//

இவருக்குத் தான் இந்தப் பதிவே.. அதும் படிக்கலைனா நாம என்ன செய்றது மாமா :)

http://www.blog.sanjaigandhi.com/2010/03/blog-post_15.html

...வெள்ளி, சனி மற்றும் ஞாயிறுகளில் பதிவிட வேண்டாம். வெள்ளிக்கிழமை வளைகுடா பதிவர்கள் ஓய்வில் இருப்பார்கள். சனி, ஞாயிறில் ஐடி வல்லுனர்கள் ஓய்வில் இருப்பார்கள். பதிவர்கள் பெரும்பாலும் அலுவலங்கங்களில் தான் இயங்குகிறார்கள். அதனால் அவர்கள் ஓய்வில் இருக்கும் போது பதிவுகள் போட்டுவிட்டு பின்னூட்டம் வரவில்லை, ஹிட்ஸ் வரவில்லை என புலம்ப வேண்டாம்.....

நேசமித்ரன் said...

விமர்சனம் அருமை

மொத்தத்தில் திரைக்கதை -இயக்கம் கடந்து ஒரு பெர்பெக்‌ஷன் வேண்டி இருக்கிறது

டைடான்ஸில் இல்லாதது பையாவில் இருந்தும் வெல்லாதது இரண்டிலும் இல்லாதது ரேனிகுண்டாவில் இருந்தும்...

RR said...

//இந்த ஹாலிவுட்காரங்க டுபாகூர் விடுறதுல பயங்கர கெட்டி//
இந்த டுபாக்கூர இவங்க 1981 லேயே அவுத்து விட்ருகானுங்க...........இது ஒரு remake படம்.........கொஞ்சம் நினைவு படுத்தி பாருங்க நீங்க காலேஜ் final year படிக்கும் போது ஒரிஜினல் படம் ரிலீஸ் ஆகியிருக்கும் :-))))))

LK said...

nallathan eluthi irkeenga.
renigunda is a nice attempt but not sure whether the film got good response from audience

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி பாலா.!

நன்றி மணிகண்டன்.! (அந்த லட்சணம் கூட இதிலில்லைனு சொல்லவந்தேன். பார்ட் 1 பார்த்தேன். இப்போ ஏதோ அஞ்சோ, ஆறோ போகுதாமே)

நன்றி கேவிஆர்.! (அதென்ன RGV?)

நன்றி குசும்பன்.! (பேரரசு, தரணி, லிங்குவையெல்லாம் திருத்த பன்னீர்செல்வத்தோட தாத்தா வந்தாலும் ஆகாது தல..)

நன்றி சஞ்சய்.! (கத்துக்கறேன். தல.. 2 வருஷமாச்சு.. இன்னும் கத்துக்கிறேனா.?)

நன்றி நேசமித்திரன்.!

நன்றி RR.! (யோவ்.. ஏன் இந்த கொலவெறி?)

Anonymous said...

//தமன்னாவின் காஸ்ட்யூம் டிஸைனர் நிச்சயமாக ஒரு ஃபேஷன் டிஸைனராகத்தான் இருக்கவேண்டும். ஏன்னா வித விதமான டிரெஸ்கள், ஆனால் ஒண்ணு கூட நல்லாயில்லையே..!! //

ஒரு பேஷன் டிசைனர் இருக்காங்க பதிவுலகத்தில. அவங்க படம் பாத்துட்டு இதுக்கு கமெண்ட் போடுவாங்கன்னு நினைக்கிறேன். விக்னேஷ்வரி, ப்ளீஸ் நோட் திஸ் :)

தராசு said...

அங்க ஒருத்தரு 5 படத்துக்கு விமர்சனம் போடறாரு, இங்க ஒருத்தரு 3 படம்,

ஹூம், ஹூம், சம்திங் ராங்.

KVR said...

//நன்றி கேவிஆர்.! (அதென்ன RGV?)//

Ram Gopal Varma

நர்சிம் said...

ரேனிகுண்டா...

punitha said...

சும்மா கலக்கீடீங்க போங்க. வாழ்த்துக்கள்.

உங்கள் பிளாக்கை நான் http://www.filmics.com/tamilshare என்ற இணைய தளத்தில் பார்த்து அறிந்து கொண்டேன். உங்கள் திறமைகள்/உணர்வுகள் மற்றும் உங்களுக்கு தெரிந்த இணையத்தில் நீங்கள் கண்ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள இந்த தளத்தில் இலவசமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.

அதிஷா said...

போயா லூசு

shortfilmindia.com said...

ஒரு பதிவுல மூணு விமர்சனம..?

கேபிள் சஙக்ர்

ஆதிமூலகிருஷ்ணன் said...

அம்மிணி (அவ்வ்வ்வ்வ்வ்), தராசு, நர்சிம், புனிதா, அதிஷா, கேபிள்.. நன்றிகள் அனைவருக்கும்.!

ப்ரியா கதிரவன் said...

//விஜய், அஜித்களுக்கு கடும் போட்டியாக சூர்யா இருப்பது போல //

அப்படியா?

விக்னேஷ்வரி said...

முதல் ரெண்டு படத்தையும் நீங்க தியேட்டர்ல பார்த்த கொடுமைக்காக நாங்களும் பார்க்கணுமா என்ன... க்ரேட் எஸ்கேப்.