Tuesday, April 6, 2010

ஸ்டோரி டிஸ்கஷன்

சினிமாத்துறையில் ஸ்டோரி டிஸ்கஷன் என்று ஒரு வஸ்து இருப்பதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். நமக்கு அதைப்பற்றியெல்லாம் தெரியாது என்று வைத்துக்கொள்ளுங்களேன். இது வேற மாதிரி. ஒரு சில மொக்கைப்பதிவுகள் போட்டவுடன் இடையிடையே ஒரு கதை அல்லது ஒருகவிதை எழுதவேண்டும் என்று திட்டமிடுவேன். பாருங்கள், உங்கள் நல்ல நேரம் சமீப காலமாக கவிதை என்ற ஒன்று சிந்தனையில் வந்தே தொலையமாட்டேன் என்கிறது. இந்த கதை இருக்கிறதே அது கொஞ்சம் சிக்கலானது. உங்கள் நேரேஷன் பிரமாதம் என சிலர் சீண்டிவைத்திருக்கிறார்கள். ஆனால் முக்கிய சில புள்ளிகளோ இனிமே நீ கதை எழுதினால் விரலை ஒடிப்பேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதற்காகவெல்லாம் பயந்தால் தொழில் பண்ணமுடியுமா? ஆகவே அடுத்த கதையொன்றை எழுதிவிடலாம் என முடிவு செய்தேன். இந்தக் கிராமத்துக் கதைகளை அதே ஸ்லாங்கில் எத்தனை தடவைதான் எழுதிக்கொண்டிருப்பது? ஏதாவது வித்தியாசமாக கமர்ஷியல் சினிமா மாதிரி ஆக்ஷன் கதை எழுதலாம். ஹீரோவுக்கும், வில்லனுக்கும் சும்மா பரபரன்னு பத்திக்கணும்.

ஆகவே கண்ணனுடன் டிஸ்கஸ் பண்ணி ஒரு கருவை ரெடி பண்ணிக்கொண்டால் நேரேஷனில் நாம் கலக்கிவிடலாம் என்று எண்ணி போன் போட்டேன். விளக்கமாக விபரத்தைச் சொன்னேன். இனி டிஸ்கஷன்..

'முதல்ல ஹீரோ யாரு? என்ன பண்றாருன்னு முடிவு பண்ணிட்டோம்னா அப்பாலிக்கா வில்லன் யாரு என்ன பண்றாருன்னு முடிவு பண்ணிடலாம். அப்புறமா அவங்களுக்குள்ள என்ன நடக்குது? முக்கியமான ஆக்ஷன்ஸ் என்னன்னு பின்னிட்டோம்னா முடிஞ்சது. கடைசியா பாட்டு எங்க வைக்கிறது.. பைட்டு எங்க வைக்கிறது.. ஹீரோயின் என்ன பண்றாங்கன்னு பாத்துட்டோம்னா ஃபினிஷ்ட்'

'டேய். நாம சினிமா கதையா டிஸ்கஷனா பண்ணிகிட்டிருக்கோம்.? ஒரு சிறுகதை எழுதலாம்னு ஐடியா கேட்டா என்ன நக்கல் பண்றியா?'

'அட, பண்றது பண்றோம். பெருசா பண்ணிவைப்போமே. நாளைக்கே தேவைப்படாதா என்ன? முடிச்சப்புறம் சுருக்கி கதையா எழுதிடு..'

'என்ன கதை எழுதுறதுன்னா உனக்கு அவ்ளோ கிண்டலா இருக்குதா? நீ எழுதிப்பார்டா அப்போ தெரியும். முட்டை போடுற கோழிக்குதான்..'

'மீரா இன்னிக்கு கோழிக்குழம்பு வைச்சிருக்கா. வர்றியா இங்க? அப்படியே கதையும் டிஸ்கஸ் பண்ணலாம்'

'பேச்ச மாத்தாத..'

'சரி விடு. கதையைப் பார்ப்போம். இப்போ என்ன கிரைம் கதைதானே வேணும். ஹீரோவும் வில்லனும் மோதிக்கணும்.. அவ்வளவுதானே'

'ஆமா..'

'ஹீரோ போலீஸ் ஆபீஸர், ஓகேவா?'

'வேணாம். கிரைம் கதைன்னா உடனே போலீஸா? போலீஸ்னா.. துப்பாக்கி, கொலை, கடத்தல், தங்கம், வைரம், ரவுடி வில்லன் ஹீரோயினை வேற புடிச்சுட்டுப்போயிருவான்.. போர்..'

'வாணாமா? சரி. அப்போ காலேஜ் ஸ்டூடண்ட்? அப்போதான் குத்து ஸாங். லவ் ஸீன்ஸ், ஹாஸ்டல், ஃபுட்பால் கிரவுண்ட் ஆக்ஷன், ஹாஸ்டல் சீக்வன்ஸ்னு நிறைய ஸ்கோப் இருக்குது..'

'வேணாம்'

'சரி விடு. ஒரு பெரிய பில்டிங். அதுல நிறைய கம்பெனி இருக்குது. நம்ப ஹீரோ அதுல வேல பாக்குற ஸாஃப்ட்வேர் பார்ட்டி. அந்த பில்டிங்குக்கு ஒரு பிரச்சினை வருது. பில்டிங் உள்ள பரபரப்பான காட்சிகள்'

'பில்டிங்குக்கு என்ன பிரச்சினை வருது?'

'பில்டிங்குக்கு என்ன பிரச்சினை வரும்? ம்ம்ம்.. ஆங்.. தீவிரவாதி பாம் வச்சுடுறான்.!!'

'தீவிரவாதியா? டேய்.. பாவம்டா.. விட்டுர்றா அவனை. அவனுக்கு வேற வேலயே இல்லையா?'

'அப்ப தீவிரவாதி வேணாமா? பில்டிங்குக்கு வேற என்னதாண்டா பிரச்சினை வர்றா மாதிரி பண்ணமுடியும். நிலநடுக்கம்? அதுக்கு வில்லன் எப்படி பொறுப்பாகமுடியும்? ஹூம். சரி விடு. பில்டிங்கே வேண்டாம். சிவில் என்ஜினியர் ஓகேயா? சைட் ஒர்க். புதுசா இருக்கும். யாரும் காமிச்சதில்லை. அங்க அவனுக்கு கீழ வேலபாக்குறவங்க ஒவ்வொருத்தரா சாவுராங்க. கடைசியில பாத்தா அதுக்கு காரணம் ஒரு பேயி..'

'சாவுறதுக்கு காரணம் பேயா? இது புதுசா? பேயி கூட ஹீரோ எப்பிடி சண்டை போடுவாரு? மந்திரவாதி வேணும். கிராபிக்ஸெல்லாம் கதையில எப்படி பண்றது? மண்டையில போட்டம்னா.. வேற சொல்லுடா'

'வேலைதேடுற இளைஞர்?'

'ஏன் வயசானவங்க வேலை தேட மாட்டாங்களாமா?'

'சும்மா எதச்சொன்னாலும் கொற கண்டுபிடிச்சுக்கிட்டு? அப்படின்னா ஹீரோ என்ன பண்றாருன்னு நீ சொல்லு. மிச்சத நான் சொல்றேன்..'

'அரசியல்வாதி?'

'என்ன ஊழல் பண்றாரா?'

'பிஸினெஸ்மேன்?'

'என்ன தொழில்பண்றாராம்? ஸ்பின்னிங் மில் வச்சிருக்காரா? தையல் மெஷின் வச்சிருக்காரா?'

'ப்ரொஃபஸர்?'

'கெமிஸ்ட்ரி புரொபஸர்தானே? லேப்.. ஆஸிட்.. கெமிக்கல்.. கண்டுபிடிப்புலாம் வருமே?'

'ஹீரோ ஒரு ரைட்டர்?'

'ஹிஹி.. ஊட்டுக்காரி பேரு ரமாவா? தங்கமணி கதையா?'

'அப்போ என்னதாண்டா பண்ணச்சொல்ற? சரி நீயே சொல்லு. நான் மறுத்துப்பேசல..'

'ஹீரோ ஒரு ஆர்மி வீரன். பாம் டிஃப்யூஸர். திரில்லிங்கா நிறைய பாமை அவர் டிஃப்யூஸ் பண்றதக் காமிக்கிறோம். ஹீரோயின் அங்கேயே பாமர் ஹெலிகாப்டர் பைலட்.. வார் ஃபீல்ட்.. இவுங்க பாம் போடுறாங்க, அவர் டிஃப்யூஸ் பண்றாரு. காண்ட்ரவர்ஸி. உலகத்தரத்துக்குப் பண்ணிடலாம்'

'கோழிக்குழம்பைக் காலிபண்ணிடாதீங்க.. அங்கயே வந்துடறேன் சாப்பிடறதுக்கு. இனிமே உன்கிட்ட கதை கேட்டம்னு வச்சிக்கயேன். பிஞ்ச சப்பல்ஸாலயே என்ன அடி..'

.

21 comments:

Cable Sankar said...

பேசாம குப்புற படுத்துகிட்டு தூங்கியிருக்கலாம். கண்ணன் கிட்ட கேட்குற நேரத்தில..:)

அனுஜன்யா said...

ஆதி, நல்லா இருக்கு. சிப்பு சிப்பா வருது. சேம் ப்ளட்
:(((

அனுஜன்யா

தராசு said...

//இனிமே உன்கிட்ட கதை கேட்டம்னு வச்சிக்கயேன். பிஞ்ச சப்பல்ஸாலயே என்ன அடி..' //.

RR said...

//இனிமே உன்கிட்ட கதை கேட்டம்னு வச்சிக்கயேன். பிஞ்ச சப்பல்ஸாலயே என்ன அடி..' //.

வானம்பாடிகள் said...

பாருங்க பாஸ். இப்புடியேல்லாம் டிஸ்கஸ் பண்ணி ஒரு சினிமா எடுத்தா இண்டர்வல்ல ஒரு இடுகை, திரும்பி வரும்போது ஒரு இடுகைன்னு போட்டு காலி பண்ணிடுறாங்க:))

துபாய் ராஜா said...

கிச்சு...கிச்சு..கிச்சு...கிச்சு....

ராமலக்ஷ்மி said...

//சும்மா பரபரன்னு//

இருக்கு:))!

செல்வேந்திரன் said...

'ஹீரோ ஒரு ரைட்டர்?


'ஹிஹி.. ஊட்டுக்காரி பேரு ரமாவா? தங்கமணி கதையா?'

பயபுள்ள பேச்சுவாக்குல சோத்தைக் குலைச்சிட்டானே....

KVR said...

//'ஹீரோ ஒரு ஆர்மி வீரன். பாம் டிஃப்யூஸர். திரில்லிங்கா நிறைய பாமை அவர் டிஃப்யூஸ் பண்றதக் காமிக்கிறோம். ஹீரோயின் அங்கேயே பாமர் ஹெலிகாப்டர் பைலட்.. வார் ஃபீல்ட்.. இவுங்க பாம் போடுறாங்க, அவர் டிஃப்யூஸ் பண்றாரு. காண்ட்ரவர்ஸி. உலகத்தரத்துக்குப் பண்ணிடலாம்//

டோட்டல் மொக்கைல இது டாப் மொக்கை :-)))) சூப்பர்

பா.ராஜாராம் said...

:-))

திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said...

:-))

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி கேபிள்.!
நன்றி அனுஜன்.!
நன்றி தராஸ்.!
நன்றி ஆரார்.!
நன்றி வானம்பாடிஸ்.!
நன்றி துபாய்.!
நன்றி ராமலக்ஷ்மி.!
நன்றி செல்வா.!
நன்றி கேவிஆர்.!
நன்றி பாரா.!
நன்றி திரு.!

ஹுஸைனம்மா said...

கத எழுத ஐடியா வரலன்னா இப்படியும் ஒப்பேத்தலாமோ? நல்ல கதை.

"உழவன்" "Uzhavan" said...

ஹோட்டல்ல ரூம் போட்டு டிஸ்கஸ் பண்ணுற கதையைவிட இது நல்லாதான் இருக்கு -)

நேசமித்ரன் said...

ஆஹா இப்பிடியும் எழுதலாமா ?

அன்புடன் அருணா said...

அப்புறமா அடி வாங்கினீங்களா???கோழிக் குழம்பு சாப்புட்டீங்களா???

ஜோசப் பால்ராஜ் said...

உருப்புடியா ஒரு ஸ்டோரி டிஸ்கஷனை முடிச்சு ஒரு கதைய கொண்டு வரத்தெரியல. அதுக்குள்ள உமக்கு கோழி குழம்பு வேற கேக்குதா? இதுல பதிவ போட்டோன் கமெண்டயே காணோம்னு ஒரே புலம்பலு வேற.

இப்டி தான் கமெண்ட் போடலாம்னு பார்த்தேன். ஆனா இதுவே நல்லாருக்கு. இப்டி கூட பதிவு போடலாமோ?

vanila said...

டொய்ங் டொட்டொடொய்ங் ....

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி ஹுஸைனம்மா.!
நன்றி உழவன்.!
நன்றி நேசமித்திரன்.!
நன்றி அருணா.!
நன்றி ஜோஸப்.!
நன்றி வனிலா.!

கார்க்கி said...

:)))

விக்னேஷ்வரி said...

ஹாஹாஹா...