Monday, April 12, 2010

ரங்கநாதன் தெரு : ஒரு எச்சரிக்கை

 

Ranganathan st   

சென்னை தி.நகர் 'ரங்கநாதன் தெரு' அதன் தனிப்பட்ட அடையாளங்களுக்காக புகழ்பெற்ற இந்தியாவின் முக்கியமான ஒரு கடைத்தெரு என்பதை நாம் அறிவோம். அதிகாலை முதல் நள்ளிரவு வரை இத்தனை பரபரப்பான ஜனத்திரளில் சிக்கித்தவிக்கும் வேறு கடைத்தெருக்கள் வேறெங்கும் இருக்குமா என்பது சந்தேகமே. அங்கு அடிக்கடி சென்று வரும் வாய்ப்பிருப்பவர்கள் இதை உணர்ந்திருக்கலாம், ஒவ்வொரு காலகட்டத்திலும் இங்கு வந்து செல்லும் மக்களின் எண்ணிக்கையும் மாலை வேளைகளில் நிகழும் மக்கள் நெருக்கடியும் ஆபத்தான வகையில் அதிகரித்துக்கொண்டு வருகிறது.

   இந்தியாவில் மக்களைக் கூட்டம் கூட்டமாக கொல்லும் தீவிரவாதம், வாகன விபத்துகள் போன்ற காரணிகளில் 'கூட்டநெரிசலு'ம் முக்கியமான ஒரு இடத்தைப்பெறுகிறது. இதற்கு எத்தனையோ முன்னுதாரணங்கள் இருக்கின்றன. சமீபத்தில் ஒரு நண்பரோடு ரங்கநாதன் தெருவுக்கு சென்ற போது நான் கண்ட நெரிசல் அசாத்தியமானது. அப்போது யாரேனும் பிக்பாக்கெட் திருடர்கள் போன்ற விஷமிகள் ஏதேனும் அசம்பாவிதத்தை நிகழ்த்தியோ, வதந்திகளை கிளப்பியோ 'தள்ளு முள்ளு' ஏற்பட காரணமானார்கள் எனில் பெருத்த உயிரழப்பு ஏற்பட்டிருக்கும் என்பது நிச்சயம்.

    அத்தகு கோர நிகழ்வு நிகழும் முன்பே அரசு விழித்துக்கொண்டு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனிக்கவேண்டும் என்பதே நம் ஆசை. இந்தத் தெருவின் நெருக்கடிக்கான மிக முக்கியமான காரணம் அங்கிருக்கும் பல்பொருள் அங்காடிகளை விடவும் மேற்கு மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து தி.நகருக்கான முதல் மற்றும் ஒரே வாயிலாகவும் இந்தத்தெரு அமைந்திருப்பதுதான். இதை மாற்றி ரயில் நிலையத்திலிருந்து வெளியேறும் பாதைகளை ஒன்றுக்கு மேற்பட்டதாக முந்தைய, பிந்தைய தெருக்களோடு இணைக்க வேண்டும். அப்படிச்செய்தால் ரங்கநாதன் தெருவுக்குள் வரவேண்டிய அவசியமில்லாதவர்கள் பிற பாதைகளை பயன்படுத்துவார்கள். மேலும் ரங்கநாதன் தெருவுக்குள் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும், அவர்கள் சிறு வியாபாரிகளேயானாலும் இது தவிர்க்க இயலாத ஒன்று. வாகனப் போக்குவரத்தைக் கையாளும் முறைகளைப் போலவே தெருவுக்குள் மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் காவலர்கள் எந்நேரமும் பணியாற்றவேண்டும். நெருக்கடிக்காலங்களில் மக்கள் வெளியேற ரங்கநாதன் தெருவை அருகிருக்கும் தெருக்களோடு இணைக்கும் குறுக்குத் தெருக்களை உருவாக்கவேண்டும். ஏற்கனவே இருப்பவை ஆக்கிரமிப்புகளின்றி  நேர்த்தி செய்யப்படவேண்டும். அதோடு நடுத்தட்டு மக்களும் விளம்பரங்களுக்கு மயங்காமல் ரங்கநாதன் தெருவின் மீதிருக்கும் மோகத்தை  விட்டொழிக்க முன்வரவேண்டும்.

    இத்தகைய ஏற்பாடுகள் செய்யப்படாவிட்டால், ரங்கநாதன் தெருவில் நிகழ்ந்த நெரிசலில் இத்தனை பேர் பலி என்ற தலைப்புச்செய்திகளை நாம் காணும் நாள்  தூரமில்லை என்றே தோன்றுகிறது.

நன்றி : நண்பர் கண்ணன்

37 comments:

Vidhoosh(விதூஷ்) said...

ஏங்க பீதிய கிளப்பறீங்க, நீங்க என்ன நவீன நாஸ்டிராடாமஸா? பயம்மாத்தான் இருக்குங்க..

அஹமது இர்ஷாத் said...

ஆங்... யோசிக்கவேண்டிய விஷயம்தான்.

my blog said...

மக்கள் போறதுக்கு ஓர் வழி வருவதுக்கு ஒரு வழி என்று வைத்தால் பாதி நெருச்சல் குறையும்.

சத்ரியன் said...

ஆ.மூ.கி,

நியாயமான எச்சரிக்கை பதிவு.

பாபு said...

/நடுத்தட்டு மக்களும் விளம்பரங்களுக்கு மயங்காமல் ரங்கநாதன் தெருவின் மீதிருக்கும் மோகத்தை விட்டொழிக்க முன்வரவேண்டும்.//

repeattu


சில வருடங்களாகவே,
t.nagar போனால் கூட அந்த பக்கம் தலை காட்டவே மாட்டேன்.

க‌ரிச‌ல்கார‌ன் said...

ச‌.அ

Anonymous said...

நான் கூட ஒரு முறை போயிட்டு பயந்து போய் திரும்பி வந்துட்டங்க

அதி பிரதாபன் said...

//மக்கள் போறதுக்கு ஓர் வழி வருவதுக்கு ஒரு வழி என்று வைத்தால் பாதி நெருச்சல் குறையும். //

நடக்குறதுலயும் ஒன்வேயா?

அடுத்து, ஒன்வேல ஏன் நடந்து வந்தன்னு அமுக்குவாய்ங்களோ?
அவ்வ்வ்வ்வ்வ்....

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

சமூக அக்கறை உள்ள சிறந்த பதிவு .
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .

வானம்பாடிகள் said...

அந்தப் பக்கம் போகும்போதெல்லாம் என் மனதிலும் இந்த நினைப்பு வரும் ஆதி:)

ராமலக்ஷ்மி said...

தேவையான எச்சரிக்கைப் பதிவு. பெங்களூரிலும் சில இடங்கள் பண்டிகை சமயங்களில் மட்டும் சற்றே இதுபோலக் கூட்ட நெரிசலாய் இருக்குமென்றாலும் இத்தனை மோசமில்லை.

ராம்ஜி_யாஹூ said...

நல்ல பதிவு.
பொதுவாக நான் அருகில் உள்ள நடேசன் தெரு வை தான் அதிகம் பயன் படுத்துவேன்.

ஆனால் நீங்கள் எழுதி உள்ளது போல நல்ளிரவேல்லாம் கூட்டம் கிடையாது. இரவு பத்து மணிக்கு மேல் காத்து வாங்கும் ஏரியா .

இரவு பதினொரு மணிக்கு டி நகர் வந்து பாருங்கள், வெறுமையாக இருக்கும். எஸ் ரா சென்னை சாலைகளின் இரவு பற்றி ஒரு கட்டுரை எழுதி உள்ளார்.

இரவு கூட்டம் எல்லாம் மதுரை டவுன் ஹால் ரோடு, பெரியார் பஸ் நிலையம், தான். இரண்டு மணிக்கும் அங்கே இட்லி சாப்பிடலாம்.

தராசு said...

நல்ல பதிவு.

புதுகைத் தென்றல் said...

எனக்கும் அந்த பயம் எப்பவும் இருக்கும். இந்த ரோடில் நடப்பது இல்லை இல்லை மனித சாகரத்தில் நீந்தி செல்வது ஒரு கலை.

சரியான எச்சரிக்கை மணி அடிச்சிருக்கீங்க

புருனோ Bruno said...

ஆதி பாஸ்

அரங்கநாதன் தெருவில் தீவிபத்து ஏற்பட்டால் 5000 பேர் இறக்கும் வாய்ப்பு உள்ளது

சொல்லப்போனால் கல்பாக்கத்தில் ஏற்படும் விபத்தை விட அரங்கநாதன் தெருவில் ஏற்படும் தீ விபத்தில் அதிகம் பேர் இறக்க நேரிடும்

அன்புடன் அருணா said...

எல்லோரும் அங்காடித் தெருவை வேறு விதமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும்போது ...இது கொஞ்சம் கவலைப் பட வேண்டிய விஷயம்தான்!பூங்கொத்து!

Cable Sankar said...

அருமையான லாடரல் திங்கிங் ஆதி..

பாலா அறம்வளர்த்தான் said...

ஆதி,
எல்லோரும் உங்களை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். "நன்றி: நண்பர் கண்ணன்" என்று போட்டுள்ளீர்களே - இது உங்கள் மீரா-கண்ணன் எழுதியதா பாஸ்?

BTW, வெறும் பின்னூட்டமிஸ்ட்டாக இருக்கும் எனக்கும் உங்களைப் போலவே பெயர் பிரச்சினை.:-) இன்னொருவரும் ப்ரியமுடன் பாலா என்று எழுதிக் கொண்டிருக்கிறார். பின்னூட்டமிஸ்ட்டாக நான் சீனியர் (?) என்றாலும், பிலாகராக அவர் சீனியராக இருப்பதால், யாரும் அவ்வளவாக சண்டைக்கு வர முடியாத என் இயற்பெயரிலேயே இனி பின்னூட்டமிடுகிறேன்.

--பாலா அறம்வளர்த்தான்

ச.செந்தில்வேலன் said...

உண்மை தான்!! நான் போகவே பயப்படும் அல்லது அழைத்துச் செல்லத் தயங்கும் இடங்களில் ரெங்கநாதன் தெருவிற்கு முதலிடம்...

அங்கே வேலை செய்பவர்களை யோசித்துப் பார்க்கும் பொழுது :((

முரளி said...

நல்ல பதிவு.. இதற்கான தீர்வு அனவைரும் சேர்ந்த கூட்டு முயற்சியாக மட்டுமே இருக்க முடியும்.
அனைவரும் எனும் பொது , அரசாங்கம், ரயில்வே துறை , பொது மக்கள், கடை உரிமையாளர்கள், நடைப்பாதை வியாபாரிகள் கட்சிக்காரர்கள் உட்பட

இரயில் நிலையத்தை விட்டு வருவதர்கக்கு வேறு வழி என்பது நல்ல யோசனை.. ரங்கநாதன் தெருவை விட்டால் , நடேசன் தெருவிற்கு வர வழி ஏற்படுத்துவது சுலபமாக இருக்கும்.. ஒரு சில காய்கறி கடைகளை மட்டும் அகற்றி விட்டு , ரயில்வேயின் பாதசாரிகள் கடக்கும் பாலத்தை ஒரு ௫௦ மீ தூரம் நீட்ட வேண்டும்..
மற்ற படி ரங்கநாதன் தெருவிற்கு மறுபுறம் ராமேஸ்வரம் தெருவில் எக்கசக்க கட்டிடங்கள் இருப்பதால் அந்த பக்கத்தில் மாற்று வழி சிக்கலே..

முகிலன் said...

அவசியமான எச்சரிக்கை.. வருமுன் காக்க அரசு தயாராக இருக்க வேண்டும்..

அறிவிலி said...

மிகவும் சரி. அனைவருக்கும் இது அலார்ம் சிக்னல்.

செல்வேந்திரன் said...

ரங்கநாதன் தெருவில் காற்றில் பறக்கவிட்ட விதிமுறை மீறல்களை எதிர்த்து ஒற்றை மனிதராகப் போராடிய பாவத்திற்கு டிராஃபிக் ராமசாமியை ஜெயிலில் போட்டார்கள். அடுத்த சில நாட்களில் ஏற்பட்ட தீ விபத்தில் தீயணைப்பு வண்டி உள்ளே வர வழியில்லாமல் பிழைப்பிற்காக ஜவுளிக்கடைக்கு வேலை வந்தவன் எரிந்து செத்தான்.

ராஜ நடராஜன் said...

வசந்த பாலன்!இந்த பின்னூடம் உங்களுக்குத்தான்.சமூக கருத்துக்களின் விரிவாக்கமாக ரங்கநாதன் தெரு இங்கே சொல்லப்படுகிறது உங்களின் பாதிப்பால்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி விதூஷ்.!
நன்றி அஹமது.!
நன்றி நண்பரே.!
நன்றி சத்ரியன்.!

நன்றி பாபு.! (இப்பல்லாம் எழுதறதில்லையா ஃபிரெண்ட்?)

நன்றி கரிசல்.!
நன்றி அம்மிணி.!
நன்றி பிரதாபன்.!
நன்றி பனித்துளி.!
நன்றி வானம்பாடிகள்.!
நன்றி ராமலக்ஷ்மி.!
நன்றி ராம்ஜி.!
நன்றி தராசு.!
நன்றி தென்றல்.!

நன்றி புரூனோ.! (பயமேற்படுத்துகிறீர்கள் டாக்டர்)

நன்றி அருணா.!
நன்றி கேபிள்.!

நன்றி பாலா.! (பதிவில் குறிப்பிடத் தவறிவிட்டேன். எழுதியது நான்தான். ஆனால் இந்தத்தகவலை எழுத வற்புறுத்தியது கண்ணன். ஆம், அது மீராவின் கண்ணன்தான். அப்புறம் உங்கள் இயற்பெயர் அழகு. நானும் பெயர்ச்சிக்கலில்தான் இயற்பெயருக்கு மாறவேண்டிவந்தது)

நன்றி செந்தில்.!
நன்றி முரளி.!
நன்றி முகிலன்.!
நன்றி அறிவிலி.!
நன்றி செல்வா.!

நன்றி ராஜநடராஜன்.! (பிற படங்களை ஒப்பிடுகையில் அங்காடித்தெரு நல்ல படம்தான் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் எனக்கு நிறைய மாற்றுக்கருத்துகள் இருக்கின்றன. இந்தப்பதிவு அதன் பாதிப்பால் எழுதப்பட்டதல்ல, இயல்பாய் நிகழ்ந்தது)

SurveySan said...

yes sir.

அனுஜன்யா said...

எல்லோருக்கும் இருக்கும் பயம் உங்கள் பதிவில் வெளிவந்திருக்கிறது. மும்பையில் நிறைய ரயில் நிலையங்களுக்கு வெளியில் (குறிப்பாக தாதர், பாந்திரா, அந்தேரி) இதே அளவு கூட்டம் அம்மும். BMC இப்போது நகரெங்கும் skywalk என்னும் ஆகாய நடைபாதைகளைக் கட்டி வருகிறது. பாதசாரிகள் ரோட்டில் செல்லாமல், படிகள் மீதேறி நடைபாதை-மேம்பாலத்தில் நீண்ட தூரம் நடக்கலாம். நிறைய தூரக் கிழக்கு நாடுகளில் இந்த மாதிரி ஆகாய நடைபாதைகள் பிரசித்தம். நிச்சயம் சென்னையிலும் வரவேண்டும். தலைவர் ஸ்டாலினிடம் சொல்லலாம்னு இருக்கேன். அப்துல் நம்பர் என்ன?

அனுஜன்யா

லதானந்த் said...

மிகச் சிறந்த பதிவு. சரியான எச்சரிக்கை

நாய்க்குட்டி மனசு said...

அங்காடித் தெரு வந்திருக்கும் நேரம் எழுத்தப்பட்ட மிக முக்கியமான, சிறப்பான பதிவு. கண்டு கொள்ளுமா அரசாங்கம்?
பிரச்சினையை மட்டும் சொல்லாமல் தீர்வையும் சொல்லி இருப்பது பாராட்டுக்கு உரியது.
இருந்தாலும் நீங்கள் முடித்திருந்த விதம் நடந்து விட வேண்டாம் என பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

ஈரோடு கதிர் said...

சரியான எச்சரிக்கை...

ஒரு வேண்டுகோள், இதை அந்தப் பகுதி சார்ந்த இது தொடர்பான அதிகாரிகளுக்கும், மாநகராட்சிக்கும் தெரியப்படுத்துங்கள்..

ஒரு வேளை ஏதாவது நல்ல வழி பிறக்கலாம்

பாபு said...

//(இப்பல்லாம் எழுதறதில்லையா ஃபிரெண்ட்?)//

நன்றி ஆதி

கொஞ்ச நாள் நானும் ரவுடி தான்ற மாதிரி ஓடிச்சு.
இப்பெல்லாம் ஒன்லி படிக்கிறது.
நடுவுல நம்ம ப்ளாக் வேறு delete ஆகி போச்சு.
இதுவும் நல்லதுக்குதான் என்று விட்டுட்டேன்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்ல பதிவு, உடன் இதே தெருவில் இருக்கும் ஒரு மணி நேர தையல் கடைகளுக்குள் நீங்கள் சென்றிருக்கிறீர்களா?

நேர்ந்திருந்தால் அதை வைத்தே இன்னொரு அங்காடி தெரு கதையை எழுதலாம். எட்டடி இடத்தில் நாலு தையல் மிஷின்களோடும் ஒரே ஒரு மின்விசிறியோடும், ஏதோ சுரங்கத்துக்குள் போய் வந்த உணர்வு கிடைக்கும். உள்ளுக்குள் முழுதும் மனிதக்காற்றுதான். வெளிக்காற்றை அங்கிருக்கும் மனிதர்கள் எந்த நேரம் சுவாசிப்பார்கள் என்பது அவர்களின் பீஸ் ரேட் சம்பளம் முழுமையடைந்ததை பொறுத்திருக்கும் என்று நினைக்கிறேன் :(

அங்கெல்லாம் மின்சார வயரிங்க் செய்திருக்கும் நிலையைப் பார்த்தால் இப்போது சென்னை வெயிலுக்கு தானாகவே பற்றிக்கொள்ளும் வாய்ப்பு அதிகம். திடீர் தீ விபத்துகள் ஏற்பட்டால் நினைத்து பார்க்கவே பயமாய் இருக்கிறது.

அமுதா கிருஷ்ணா said...

வார நாட்களில் காலை 10 முதல் 3 வரை கூட்டம் இருக்காது சாதாரண நாட்களில் நான் போனால் அப்ப தான் போவேன். பண்டிகைக்கு முந்தைய நாட்களில் இந்த பயம் எனக்கும் அடிக்கடி வரும். மாற்று ஏற்பாடு அவசியம் தேவை..

என்.ஆர்.சிபி said...

//ரயில் நிலையத்திலிருந்து வெளியேறும் பாதைகளை ஒன்றுக்கு மேற்பட்டதாக முந்தைய, பிந்தைய தெருக்களோடு இணைக்க வேண்டும். அப்படிச்செய்தால் ரங்கநாதன் தெருவுக்குள் வரவேண்டிய அவசியமில்லாதவர்கள் பிற பாதைகளை பயன்படுத்துவார்கள்.//


நல்ல யோசனைதான்!

பிரசன்னா said...

ரங்கநாதன் தெரு மட்டும் இல்ல.. அந்த ஏரியாவே அப்படித்தான் ஆகிட்டு இருக்கு..
நன்றி..

cheena (சீனா) said...

அன்பின் ஆதி

நல்லதொரு எசரிக்கை - பல் ஆண்டுகளுக்கு முன்னர் நான் அங்கு சென்றபோது இருந்த கூட்டம் பனமடங்காய்ப் பெருகி இருக்கிறது. அரசு உடனடியாகத் தலையிட வேண்டும்.

நல்ல சிந்தனை ஆதி
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

radhika said...

சென்னையில் இப்படி என்றால் எங்க ஊா் மதுரையை வந்து விளக்குத்துாண் பக்கம் பாருங்கண்ணே, அதுவும் தீபாவளி சமயம் வாங்க எப்படி இருக்கும்னு. உங்கள் பதிவு மிகவும் சூப்பா் நல்லதொரு எச்சாிக்கை