Saturday, April 17, 2010

மிக்ஸியில் அடித்த கவிதை ஒன்று..

கொஞ்சம் பிஸி. அதனால கடையை சரியாகக் கவனிக்கமுடியவில்லை, மற்றவர்கள் பக்கமும் வரமுடியவில்லை. விரைவில் சூழல் சரியாகும் என நினைக்கிறேன். பார்க்கலாம். இந்த அழகில் கடந்த வாரம் ஒரு எழுத்தாள நண்பர் நான்கைந்து தடவைகள் போனிலும், மெயிலிலும் அழைத்தும் சிட்டிக்குள் போகமுடியவில்லை. ஏதோ சுவாரசியமான விஷயம் இருப்பின் பகிர்ந்துகொள்ளத்தான் அழைத்திருப்பார். ஒவ்வொரு முறையும் 'ட்ராஃபிக்கில் இருக்கிறேன்', 'மீட்டிங்கில் இருக்கிறேன்', 'லஞ்சில் இருக்கிறேன்', 'சுபா அழுதிட்டிருக்கான்', என்று சொன்னால் உண்மையாகவே இருந்தாலும் எத்தனை தடவைகள் சொல்வது.? மனிதர் கடுப்பாகமாட்டாரா.. கடைசி தடவை போனைக் கட் பண்ணும் முன்னாடி இப்படிக் கத்தினார்,

"யோவ்.. இந்த மாசச்சம்பளக்காரனுங்க, குடும்பம் குட்டின்னு இருக்கறவனுங்கல்லாம் எழுத்தாளன் இல்ல, எழுத்தாளனுக்கு ஃபிரெண்ட் கூட ஆகமுடியாது..!!"

********************

நண்பர் ஒருவர் "எனக்கு இந்த ஜிமெயிலில் 'இன்பாக்ஸை' விட 'பஸ்'தான் ரொம்பப் பிடித்திருக்கிறது" என்றார். ஏன்னு கேட்டதற்கு இப்படிச்சொன்னார், "அதில்தானே ஒரே கிளிக்கில் படிக்கவேண்டிய லிஸ்ட் காலியாகிவிடுகிறது"

********************

சுயபரிசோதனை இல்லாத ஒரு மனிதன் பணம், புகழ், மதிப்பு இழந்து எந்த அளவில் தரம் தாழ்ந்துபோவான் என்பதற்கு ஒரு உதாரணத்தை சமீபத்தில் காணமுடிந்தது.

நேற்று டிவியில் 'வித்த கவிஞர் பா.விஜய்' நடித்த 'ஞாபகங்கள்' படம் பார்த்தேன். இது போன்ற அரிய படங்களை லிஸ்ட் போட்டு சேகரித்து அவற்றை ஏதாவது மியூஸியத்தில் போட்டு பூட்டி வைத்துவிடுவது இந்த உலகத்துக்கு நல்லது. பாதிக்கு மேல்தான் பார்க்கமுடிந்தது. சொல்கிறேன் கேளுங்கள்.

வேலை வெட்டியில்லாத காதலனுக்கு கவிதையில் ஆர்வம். காதலியும் நன்றாக காதலிக்கிறார். ஒரு நாள் சந்தேகக் கேஸில் போலீஸ் இவரைப் பிடித்துச்சென்று உதைக்க அந்தக்கேப்பில் 'அவரது ஆர்வம், லட்சியம், வேலையில்லாத தன்மை' எல்லாவற்றையும் ரியலைஸ் பண்ணிப்பார்த்து வீட்டில் பார்த்த மாப்பிள்ளைக்கு ஓகே சொல்லிவிடுகிறார் காதலி. வீட்டில் உதை வாங்கி படுத்துக்கிடக்கும் இவரிடம் வந்து விடிந்தால் கல்யாணம் என்ற நிலையில் 'நீ லட்சியவாதி. கவிஞனாகி, பாடலாசிரியராகி, பெரியாளாகி.. இப்படி பல ஆகியாகி முன்னேற வேண்டும். நாம் கல்யாணம் செய்துகொண்டால் உன் கனவு அழிந்துவிடும்' என்று செண்டிமெண்டாக பேத்திவிட்டு சென்றுவிடுகிறார். இவரது லட்சியம் என்னவென்று சொல்லவில்லையே, 'பாடலாசிரியருக்கான தேசிய விருது' வாங்குவதுதான் அது. அப்படியே அப்படியாகி, இப்படியாகி 'தேசியவிருதை'யும் வாங்கி விடுகிறார். அதை சமர்ப்பிக்க காதலியை தேடிப்போகிறார். அங்கே கணவர் இறந்து தனிமையில் வாழ்ந்துகொண்டிருக்கும் காதலி அதை இவரிடம் மறைத்து சந்தோஷமாக இருப்பதாக நடிக்க, இது அவருக்குப் புரிந்தும் அதை நம்புவது போல நடித்துவிட்டு வந்துவிடுகிறார். டெல்லி தமிழ்ச்சங்கத்தில் நடக்கும் விழாவில் ரசிகர்கள் இவரது பழைய லவ்வைப்பற்றியே துளைத்துத் துளைத்துக் கேட்க இவர் மேடையிலேயே ஒரு பாடல் பாடுகிறார். அதை பார்வையாளர்கள் பக்கமிருந்து கேட்டுக்கொண்டிருக்கும் ஹீரோயினுக்கு எல்லாம் புரிந்து அவருடனே சேர முடிவெடுத்து வீட்டுக்குப்போய் டிரெஸ் மாத்திவர போய் வரும் கேப்பில் பங்க்ஷன் முடிந்து கவிஞர் தாஜ்மாஹால் பார்க்க ஆக்ரா சென்றுவிட, ஹீரோயினும் ஆக்ரா போகிறார். பெஞ்சில் உட்கார்ந்து கவிதை எழுதிக்கொண்டிருக்கும் கவிஞரின் முதுகுக்குப் பின்னால் 10 நிமிஷத்துக்கு வசனம் பேசிவிட்டு அவரைத்தொட்டால் கவிஞரின் தலை 'சொய்ங்'கென்று சாய்ந்துவிடுகிறது. போய்ச் சேர்ந்துவிட்டாராம். அதாவது லட்சியத்தை அடைந்துவிட்டு, அதை காதலிக்கு அர்ப்பணித்துவிட்டதால், தாஜ்மஹால் முன்னால் வந்து ஒரு பஞ்ச் கவிதையை எழுதிவிட்டு மண்டையை போட்டுவிட்டாராம். 10 நிமிஷத்துக்கு முன்னாடிதான் நல்லா ஸ்ட்ராங் டீ குடித்து விட்டு தெம்பாக தாஜ்மஹால் முன்னால் கவிதை எழுத ஆரம்பிப்பதாக காட்டுவார்கள்.

Pa.V

நடிப்பின் புதிய பரிணாமத்தையே விஜய் தொட்டிருக்கிறார் என்றால் அது மிகையாகாது. குப்பை மேடுகளில் 'இளைஞனே எழுந்துவா' டைப்பில் ஒரு பாடல் பாடுவதாகட்டும், பிளாஷ்பேக் கண்ணாடி போடாத இளமையாகட்டும், லவ்வரைப்பிரியும் போது அவர் தரும் ஆஃபரை மறுத்து, 'நீ ஒரு குழந்தை, உன்னைப்போய் நான் எப்படி.?' என்று கண்கள் துடிக்க, நாக்கு தழுதழுக்க புழியப் புழிய அழுவதாகட்டும், நல்ல முற்றிய கொப்பரைத்தேங்காய் போன்ற மண்டை ஸ்பெஷல் கெட்டப் (மேக்கப் மேன் கையில் கிடைத்தால்.. நறநற..) ஆகட்டும், லட்சியம் நிறைவேறியவுடன் தாஜ்மஹால் முன்னால் மண்டையை போடுவதாகட்டும் பின்னி பின்னி எடுத்திருக்கிறார்.

டெல்லியில் ஒரு நண்பர் என்ற பெயரில் ஒரு ஜந்து, புருவத்தைத் தூக்கிக்கொண்டு வாயைக்கோணிக்கொண்டு படத்தையும் மீறி பில்டப் பண்ணிக்கொண்டிருக்கிறது. அனேகமாக அது படத்தின் இயக்குனராக இருக்கலாம். கவிஞர் செத்தபின் மூஞ்சியில் இருந்து கண்ணாடி நழுவி விழுகிறது, கையிலிருந்து மோதிரம் நழுவி விழுகிறது.. இயக்குனர் டச்சாம். விட்டால் இன்னும் என்னல்லாமோ கழன்று விழுவதைப்போலவும் காண்பிப்பார்கள். படம் பார்த்துமுடித்ததும் ஈரம் காயாத சாணியை மிதித்துவிட்டதைப்போல இருந்தது. சை.!

********************

சமீபத்தில் ரசித்த ஒரு ஃபிரெஷ்ஷான எழுத்து. பெண்பார்க்கும் படலத்தின் அத்தனைச் சாரங்களையும் மெல்லிய நகைச்சுவை இழையோட கவர் செய்திருக்கிறார். சப்ஜெக்ட் எதுவாக இருந்தாலும் அதன் முழுமை, விவரணை, நடை இவையே ஒரு படைப்பு பிடித்துப்போக போதுமானதாக இருக்கிறது. வாழ்த்துகள் பாலா.

********************

ஒரு பத்துக் குட்டிக்கவிதைகளை மிக்ஸியில் போட்டு அடித்தால் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும். அலுவலகத்தில் நண்பர் ஒருவருக்கு கல்யாணம். வாழ்த்துமடலுக்கு கவிதை கேட்டார்கள். அதுவும் கொஞ்சம் அவசரம். ஒன்றும் வந்து தொலையவில்லை. முதல் முத்தம் வலையை ஓபன் பண்ணி வைத்துக்கொண்டு மிக்ஸியை ஓட்டினேன். ஏற்கனவே இந்தக்கவிதைகளை படித்தவர்கள் அடிக்கவராதீர்கள்..!! எனக்கே சிரிப்புத்தாங்கவில்லை. கவிஞர்கள் டென்ஷனாகவேண்டாம். வாசிக்க ஒரு ரிதம் கிடைப்பதற்காக கமா, புள்ளி வைத்தெல்லாம் எழுதியிருக்கிறேன். புண்ணியவான்கள் கமா, புள்ளி வைத்தார்கள் என்றால் பல கவிதைகள் புரியும் போலத்தான் இருக்கிறது.

காலத்திலிருந்தும்
இந்தக் காற்றிலிருந்தும்
காதல் ஒன்று
சேகரமாகிக்கொண்டேயிருக்கும்.
வாழ்வின் வழிநெடுக
தவிக்கின்ற தாகத்தைத்
தீர்க்கின்ற மழை அது.
சுழலும் காந்த ஊசிகளுக்கான
வடக்கைப்போல
அது
உற்று நோக்கிக்கொண்டேயிருக்கும்.
ஒரு வண்ணத்துப்பூச்சியைப்போல
இன்னொன்று இருப்பதில்லை,
நித்தமும் அந்தக் காதலின் நிறம்
புதிது புதிதாய் பூத்துக்கொண்டேயிருக்கும்.
ஒளி ஊடுருவும்..
மலர்கள் மிதந்துவரும்..
தென்றலுடன் சலசலக்கும்..
அந்தக் காதல்
நீரைப்போலவே
நீங்கள் நீடித்திருக்க உயிர்ப்பொருளாகும்.!

நல்வாழ்த்துகள்.!

.

24 comments:

மோனி said...

மிக்ஸியில் அடித்த கவிதையை படித்துவிட்டு தோணிய வரிகள்...

LOOSE MOTION NEVER COMES IN SLOW MOTION...

இராகவன் நைஜிரியா said...

பா. விஜய் படமான “ஞாபகங்கள்” முழுவதும் பார்த்த அண்ணன் ஆதி... ஆஹா அண்ணே நீங்க கிரேட். உலகத்தில் எந்த மொக்கைப் படத்தைப் பார்ப்பதற்கும் தகுதி அடைஞ்சுட்டீங்க. வாழ்த்துகள்.

ஒரு சின்ன சந்தேகம்... விஜய் அப்படின்னு பேரு இருந்தாலே இப்படித்தானோ?

// "யோவ்.. இந்த மாசச்சம்பளக்காரனுங்க, குடும்பம் குட்டின்னு இருக்கறவனுங்கல்லாம் எழுத்தாளன் இல்ல, எழுத்தாளனுக்கு ஃபிரெண்ட் கூட ஆகமுடியாது..!!" //
ஆஹா.. இப்படியெல்லாம் வேற திட்ட ஆரம்பிச்சுட்டாங்களா?

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

///கொஞ்சம் பிஸி. அதனால கடையை சரியாகக் கவனிக்கமுடியவில்லை, மற்றவர்கள் பக்கமும் வரமுடியவில்லை. விரைவில் சூழல் சரியாகும் என நினைக்கிறேன். பார்க்கலா////////

எவளவோ பொறுத்துவிட்டோம் . மெதுவா வாங்க காத்திருக்கிறோம் .

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

///கொஞ்சம் பிஸி. அதனால கடையை சரியாகக் கவனிக்கமுடியவில்லை, மற்றவர்கள் பக்கமும் வரமுடியவில்லை. விரைவில் சூழல் சரியாகும் என நினைக்கிறேன். பார்க்கலா////////

எவளவோ பொறுத்துவிட்டோம் . மெதுவா வாங்க காத்திருக்கிறோம் .

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

/////கவிஞர் செத்தபின் மூஞ்சியில் இருந்து கண்ணாடி நழுவி விழுகிறது, கையிலிருந்து மோதிரம் நழுவி விழுகிறது.. இயக்குனர் டச்சாம். விட்டால் இன்னும் என்னல்லாமோ கழன்று விழுவதைப்போலவும் காண்பிப்பார்கள்./////


பார்த்துங்க அதை பார்த்துக்கொண்டு இருக்கும்பொழுது நம்மது எதுவும் கழன்று விழுந்திராம !


பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .

ஈரோடு கதிர் said...

காலேஜ்ல கவிதை படிக்கிற சீன்ல மேடையில் சபாரி/கோட் போட்டிருந்த ஆட்கள் எனக்கு தெரிந்த ஒரு கல்லூரியின் முதல்வரும் /பேராசிரியரும் என்ற நட்பால் அந்த படத்தை பாதிக்கு மேல் வரைக்கும் பார்த்து (றஸித்து) விட்டேன்..

கிளைமாக்ஸும் டைரக்டர் ட்ச்சும் பார்க்கலடா சாமி... தப்பிச்சேன்

ஆமா... நீங்க ஏன் அதெல்லாம் பார்த்தீங்க ஆதி!!!!

அமுதா கிருஷ்ணா said...

ஞாபங்கள பார்த்தீங்களே அப்படியே விட வேண்டியது தானே..எதற்கு விமர்சனம் எல்லாம் நாங்கள் பாவமாய் தெரியலையா????

அன்புடன் அருணா said...

ரொம்ப பிஸின்னு சொல்லிட்டு இப்பிடி பா.விஜய் படமெல்லாம் முழுசா பார்த்துட்டிருந்திருக்கீங்க!

பிள்ளையாண்டான் said...

ஞாபங்கள் படத்துக்கு எல்லாம் விமர்சனமா? என்ன கொடுமைண்ணே இது..


மிக்சில அரைச்ச சட்னி ச்சீ கவிதை நல்லாத்தான் இருக்கு!!

கிரி said...

ஞாபகங்கள் படத்தின் விமரிசனம்.... ஆசம் (awesome)....... படத்தை தவற விட்டதற்காக ரூம் போட்டு அழுதேன்....

திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said...

//.. ல்ல முற்றிய கொப்பரைத்தேங்காய் போன்ற மண்டை ஸ்பெஷல் கெட்டப் ..//
:-))))))))

ஸ்ரீவி சிவா said...

மொக்கை படத்துக்கு ஒண்ணேமுக்கால் பக்கத்துக்கு விவரணை வேற... ஏன் இப்பிடி ?

நல்ல அறிமுகம் 'பாலா' ... பின்னுகிறார். பகிர்வுக்கு நன்றி.

கார்க்கி said...

ஹிஹிஹி..

ரிமைண்டர் வச்சு, அந்த படத்த பார்க்காம தப்பிச்சேன்.. பார்க்கனும்ம்ன்னா அலாரம் வைக்கலாம்.. நீ என்னடான்னு அம்மா திட்டினாங்க.. :))

செல்வேந்திரன் said...

யோவ்... சினிமாவாச்சும் ரெண்டு மணி நேரத்துல தப்பிச்சுரலாம்... பயபுள்ள தலவாணி சைசுல எழெட்டு பொஸ்தவம் எழுதிருக்கான். குலநாசம்!

மோனி said...

..//ரொம்ப பிஸின்னு சொல்லிட்டு இப்பிடி பா.விஜய் படமெல்லாம் முழுசா பார்த்துட்டிருந்திருக்கீங்க! //..

அத்த்த்த்த்தாதாதாதானே??????

அன்புடன்-மணிகண்டன் said...

ஆதி.. "ஞாபகங்கள்" பத்தி செம கலக்கல்.. நான் கிளைமாக்ஸ் மட்டும் பார்த்தேன்.. நல்லவேளை..
முழுப்படம் பார்த்த எஃபெக்ட் இப்போ.. :)

Indian said...

//சப்ஜெக்ட் எதுவாக இருந்தாலும் அதன் முழுமை, விவரணை, நடை இவையே ஒரு படைப்பு பிடித்துப்போக போதுமானதாக இருக்கிறது. வாழ்த்துகள் பாலா.//

இதை படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

கும்க்கி said...

மொத கமெண்ட்டே கலக்கலா இருக்கே...

விஜய்.பா படத்துக்கெல்லாம் விமரிசனம் எழுதற அளவு போயாச்சா....

அழுகையா வருது ஆமூகி...எப்படியிருந்த ஆள இப்படி ஆக்கிட்டாங்களே....

ஆதிமூலகிருஷ்ணன் said...

மோனி,

இராகவன்,

பனித்துளி (நான் எங்க டவுசர் கழண்டுடுமோன்னு கையில பிடிச்சிருந்தேன் :-),

ஈரோடு கதிர் (தலையெழுத்து, என்ன பண்ணித்தொலையிறது),

அமுதா (ஊரு உலகத்துல என்ன நடக்குதுனு தெரியவேண்டாமா? அதான்),

அருணா,

பிள்ளையாண்டான்,

கிரி (தேவைதான்),

ஸ்ரீவி,

சம்பத்,

கார்க்கி (எஸ்கேப்பா, எப்பிடித்தெரிஞ்சுது இவ்வளவு மட்டமா இருக்கும்னு?),

செல்வா (படுபாவி),

மணிகண்டன்,

இண்டியன்,

கும்க்கி (வேற என்னதான்யா பண்றது?)..

அனைவருக்கும் நன்றி.!

Cable Sankar said...

ஹிந்தியில் ரெயின்கோட் எனும்படத்தை அப்படியே உட்டாலக்கடி ஆக்கி நண்பரின் நிஜக்கதை என்றிருப்பார்கள். நீங்க சொன்ன அந்த கோண வாய் இயக்குனர்தான். போன வாரம் அகஸ்மாத்தாய் அவரை சந்திக்க நேர்ந்தது. படம் பார்த்தீங்களான்னு கேட்டார்..” சூப்பர் படம் சார்.. ராங் டைம் ரிலீஸ்” என்றார். அதே சிரிப்புடன்.:) முடியல..

அமிர்தவர்ஷினி அம்மா said...

அய்யோ ஆதி, நீங்க தயவுசெய்து இந்த சபாபதி மாதிரி படத்துக்கே விமர்சனம் எழுதுங்க, இந்த ”ஞாபகம்” மாதிரி தலைவலிய டி.வி.யில பார்க்கவே சகிக்கலை, அத விமர்சனமா படிச்சு வேற பார்க்கனுமா?

மிக்ஸியில் அடித்த கவிதை :) அதுக்கு மோனியின் முதல் பின்னூட்டம் ;))))))))))))))))))))))

Karthik said...

கதையே செம டெரரா இருக்கே? மிஸ் பண்ணிட்டேனே! டௌன்லோட் செய்தாவது பார்க்கிறேன். :)

ஆதிமூலகிருஷ்ணன் said...

கேபிள், அமித்துஅம்மா (அதெப்படி நான் பெற்ற இன்பம் வையம் பெறவேண்டாமா?), கார்த்திக் (ஆடு வலுவில் தலையை கொடுக்குது)..

நன்றிகள்.!

BALA said...

புதியவனை அறிமுகபடுத்தும் உங்கள் அன்புக்கு மிக்க நன்றி தாமிரா!

www.balavin.wordpress.com