Monday, April 19, 2010

ஒரு ஆள், ஒரு காரியம்.

அரசின் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டில் சந்தேகம். மாற்று இல்லை. யாரை நம்புவது.? ஒன்றும் புரியவில்லை. எங்கெங்கும் ஊழல். அதனாலேயே எழும் ஏற்றத்தாழ்வுகள். அநீதி பெருகுகிறது. மனித நேயம் இன்னும் குற்றுயிராகவாவது பிழைத்துக் கிடக்கிறதா தெரியவில்லை. அரசு எந்திரங்களின் கடமை தவறல்கள் தவிர பணநோய் பீடித்த ஆயிரக்கணக்கான தொழிலதிபர்கள். அதனால்.. பதுக்கல்கள், விலையேற்றம், பரமாரிப்பின்மை, விபத்துகள், போலிகள், கலப்படம், பலியாகும் உயிர்கள், ரௌடியிசம், கொலைகள், கொள்ளைகள், உழைப்புச்சுரண்டல்.. மேலும் கொழுத்துப்பெருக்கும் சுயநலம்.. நிலம், நீர், காற்று அனைத்தையும் போட்டியிட்டுக்கொண்டு மாசுபடுத்துகிறோம்.

எல்லாவற்றையும் எல்லோரும் செய்கிறார்கள். நான் மட்டும் என்ன செய்வது? ஏன் இப்படி இருக்கிறது இந்தச் சமூகம்?

யாருக்காவது லஞ்சம் கொடுக்காமல் இருக்கமுடிகிறதா? இந்த ஒருமுறைதானே.. வேலையாகவேண்டும். எந்த அநீதியையாவது தட்டிக்கேட்க முடிகிறதா? ஏன் வம்பு? உதை வாங்கவோ.. போலீஸ், கோர்ட் என அலைவதோ என்னால் ஆகாது. இந்த இயற்கைக்காவது ஏதாவது செய்து மன ஆறுதல் பெறலாம்தான். இதுவரை ஒரு செடியை நட்டிருக்கிறோமா? டிவி பார்க்கவே நேரம் சரியாக இருக்கிறது. யாராவது செய்வார்கள். நான் பெண்டாட்டி, பிள்ளையோடு வீட்டுக்குள் பூட்டிக்கொண்டு உட்கார்ந்துகொள்கிறேன்.

ஒரு ஆள். ஒரு காரியம். ஒரே ஒரு உருப்படியான காரியம். மாற்றங்கள் நம் கைகளில்தான் இருக்கின்றன..


.

14 comments:

க‌ரிச‌ல்கார‌ன் said...

வ‌ர‌ வ‌ர‌ ச‌மூக‌ அக்க‌றை கூடிக் கொண்டே போகுது த‌ல‌!

தராசு said...

நேற்றுத்தான் ஒரு மரம் நட்டேன் தல.

இன்னும் மூன்று மாத்தத்தில் 10 மரங்கள் நட நண்பர்களுடன் திட்டமிட்டிள்ளோம்.

ஈரோடு கதிர் said...

ஒரு மனிதன்....ஒரு காரியம்..

பெருமிதமாக இருக்கிறது. பயன்பெற்ற குடும்பங்களின் தலைமுறையே வாழ்த்தும்

கார்க்கி said...

:))))))))

அமுதா கிருஷ்ணா said...

எதாவது செய்யணும்..

பிள்ளையாண்டான் said...

கட்சி ஆரம்பிச்சு, 2011‍தேர்தல்ல நின்னு, 2016-ல ஆட்சியைப் பிடிக்கப் போறீங்களா?

நல்ல சிந்தனை!

பிள்ளையாண்டான் said...

பாராட்டப் பட வேண்டிய விஷயம். பகிர்ந்ததர்க்கு நன்றி!!

Karthik said...

:))))))))

Joseph said...

பதிவுக்கு நன்றி அண்ணா.

நல்ல செய்திகள் பலரையும் அடைய வேண்டும். இதப் பார்த்து நாலு மேனேஜராச்சும் பேங்க்ல படிப்புக்கு லோன் கேட்டு வர்ற தகுதியுள்ள ஏழை மாணவர்களுக்கு மனமுவந்து உதவினால், தொழில் கடன் கேட்டு வரும் கிராமத்து ஆட்களுக்கு மனமுவந்து உதவினால் புண்ணியமாய் போகும்.

Joseph said...

தாராசு அண்ணா,
மரம் நட்டு நல்ல காரியத்த தொடங்கியிருக்கீங்க. வாழ்த்துக்கள்.

பாலா அறம்வளர்த்தான் said...

This field is called Micro Finance. Yunus of Bangladesh (who got Nobel as well) started this and made a big impact in Bangladesh. There are few organisations who are into this in India and 'm using rangde.org.

மேல் விபரங்களுக்கு http://www.rangde.org/home.htm

அன்புடன் அருணா said...

ம்ம்ம்..நல்ல விஷயம்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

அனைவரின் கருத்துப்பகிர்தலுக்கும் நன்றி.

@தராசு : சொல்லின் செயல் பெரிது. ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் கேட்பேன். மரங்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகவேண்டும். வாழ்த்துகள்.!

@ஜோஸப் : தகவலுக்காக நன்றி.!

Itsdifferent said...

Does anyone from Salem have contacts of J S Partiban, featured in the video.
We are in the process of expanding the MFI (http://30df.org) to Tamil nadu.
I am thinking his inputs will be very valuable. So please do share the contact details, if anyone has it.