Wednesday, April 21, 2010

நீ என்றால் அது நான்

உன் கண்களில் தெரியும் ஏமாற்றம்தான் வேதனையின் இடுபொருளாகிறது, காரணம் நானெனில் நொடிப்பொழுதில் ரணமாகிறேன். உனது கோபமோ அழகைக்கூட்டிச் செய்யப்பட்டது, ரசித்துக்கொண்டேயிருக்கலாம். எனது கோபமோ குறுகுறுப்பான ஒற்றைப்பார்வையில் நெகிழ்ந்து தொடரும் உன் சிரிப்பில் உருகிப்போகின்றது. அந்தப்பல் வரிசையை பார்த்துக்கொண்டேயிருக்கிறேன். எந்தச் செயல்களில் எந்தப் பொருட்களில் ஒளிந்திருக்கின்றன வாழ்க்கைக்கான மகிழ்ச்சி எனும் தேவரகசியங்களை நீதான் கற்றுத்தருகிறாய். உன் முத்தங்கள் பசியாற்றுவதாய் ஒருபோதும் இருப்பதில்லை, அதை மேலும் கிளறிக்கொண்டேயிருப்பதாயிருக்கின்றன. நீ என்னில் கொண்டிருக்கும் காதல் என்னிலும் தூயது என்பதை வெட்கத்தோடு ஒப்புக்கொள்கிறேன். உன் நலம் அது எனது, நீ எனில் அது நான் என்றிருக்க நான் எண்ணத்தான் செய்கிறேன். ஆனால் நீ அதை சொல்லியே விடுகின்றாய் உன் மழலையில்..

ஐஸ்கிரீமின் எனக்கான முதல் ஸ்பூனுக்கு நீ சொல்வது,

'அப்பா.. அப்பா.. அப்பா'

உனக்கான இரண்டாவது ஸ்பூனுக்கு நீ சொல்வது,

'நீ.. நீ.. நீ'

.

45 comments:

கார்க்கி said...

:))))

ரசிச்சு படிச்சேன் சகா..

VELU.G said...

அருமை

தாரணி பிரியா said...

சூப்பர்

NESAMITHRAN said...

ஐஸ்கிரீமின் எனக்கான முதல் ஸ்பூனுக்கு நீ சொல்வது,

'அப்பா.. அப்பா.. அப்பா'

உனக்கான இரண்டாவது ஸ்பூனுக்கு நீ சொல்வது,

'நீ.. நீ.. நீ'


அருமை

என்.ஆர்.சிபி said...

சூப்பர்!

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

மிகவும் ரசிக்கும் வகையில் எழுதி இருக்கீங்க .
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .

வானம்பாடிகள் said...

nice:))

ஜீவன்(தமிழ் அமுதன் ) said...

nice..;)

ராமலக்ஷ்மி said...

கவித்துவமான அருமையான பகிர்வு.

தராசு said...

அருமை.

வாழ்கையை அணு அணுவா ரசிக்கறீங்க.

ஆமா, இப்பல்லாம் சுபா சமத்தாயிட்டானா????

குசும்பன் said...

வலையுலக கமல்யா நீர், ஒரு நாளைக்கு கதை, ஒரு நாளைக்கு கவிதை, ஒரு நாளைக்கு தங்கமணி, ஒரு நாளைக்கு டெக்னிக்கல், ஒரு நாளைக்கு சினிமா விமர்சனம் என்று வித விதமா எழுதி அசத்துறீர் ஒய்!

என்ன கெரகம் நமக்குதான் ஒரு எழவும் புரியமாட்டேங்குது:))))) ரிசல்ட்டும் கமல் பட ரிசல்ட் மாதிரி ஆயிடுது:)))

இப்படிக்கு
வெந்த புண்ணில் மிளகாய் பொடி தூவுவோர் சங்கம்!

anura said...

ஆஹா!!!!!

ஆதிமூலகிருஷ்ணன் said...

அனைவருக்கும் நன்றி.

@தராசு : யோவ், வயித்தெரிச்சலக் கிளப்பாதீயும். கவிஜைக்கு பொய்யழகுன்னு தெரியாதா உமக்கு?

@குசும்பன் : சிரிக்கவா? அழவான்னே தெரியலை. போய்யா போங்கு. பாரு, இன்னிக்கு பூரா வெறும் 180 பேர்தான் வந்திருக்காங்க.. அதுவும் ஒருத்தரும் ஓட்டும் போடமாட்டாய்ங்க.. ஹூம்.! என்ன பொழப்பு இது?

Anonymous said...

:)))

Sangkavi said...

ஆஹா.... அருமை....

குசும்பன் said...

//180 பேர்தான் வந்திருக்காங்க//

ஆதி அதில் 160 முறை நீயே எத்தனை பேர் வந்திருக்காங்க என்று திரும்ப திரும்ப பார்த்தது ராசா! மீதி 20 பேர் தான் வந்தது அதில் 1 ஓட்டு.

ஓட்டு சதவீதம் நல்லாதான் இருக்கு ஒய், கவலைப்படாதீர்:)))

இப்படிக்கு
தற்கொலை முடிவில் இருப்போருக்கு மறுவாழ்வு அளிக்கும் மையம் துபாய் கிளை

Hanif Rifay said...

திருமணமாகாதவர்களுக்கான எச்சரிக்கை அப்படீன்னு 44 பதிவு போட்ட மனுஷன் இவர்தான....???!!!!!?????

இவர் மட்டும் கல்யாணம் பண்ணி கொய்ந்த பெத்து பார்த்து ரசிச்சு கவுஜ எழுதுவாராம்...
நாங்கல்லாம் இவரு எச்சரிக்கை படிச்சு பேஸ்ட் அடிச்சு உட்காரணுமாம் ...
இன்னாபா நாயம் இது...

Hanif Rifay said...

தற்கொலை முடிவில் இருப்போருக்கு மறுவாழ்வு அளிக்கும் மையம் துபாய் கிளை


நல்ல சங்கமா இருக்கே... !!!!!

Hanif Rifay said...

ரசிச்சு புலம்பிருக்க சார்... மெய்யாலுமே சொக்க கீது... சொம்மா எதுனா புலம்பறத உட்னு இந்த மாறி சொகம்மா பொலம்பு சார்.....

உன்க்கு கள்ள வோட்டு போடா இன்னா பண்ணும்...???

தமிழ்ப்பறவை said...

ரசித்தேன்...

பிள்ளையாண்டான் said...

தலைவா கலக்கல்!

பா.ராஜாராம் said...

:-) fantastic!

குசும்பன் & ஆதி

:-))

இராமசாமி கண்ணண் said...

அருமை.

ஆதிமூலகிருஷ்ணன் said...

மீண்டும் நன்றி அனைவருக்கும்.

@ஹனிஃப் : ஐஸ்கிரீம் திங்கிறதும், கவுஜ எழுதறதும் நல்லாத்தானிருக்கும். பயபுள்ள அதைத்தவிர ஒண்ணையும் திங்காம படுத்தும் போது தெரியும் ஏண்டா இப்பிடி வந்து மாட்டினோம்னு. இப்பக்கூட ஆஸ்பத்திரிக்குதான் போய்ட்டு வர்றோம். பயபுள்ள ஆயே இருக்கமாட்டேங்குது. நாங்க ரெண்டு பேரும் இப்ப வந்துடுமா? அப்ப வந்துடுமான்னு அங்கேயே பாத்துக்கிட்டிருக்கோம்..!!! :-((

சுசி said...

அழகா எழுதி இருக்கிங்க ஆதி..

கண்கள் உங்க எழுத்தை படிக்கும்போது
மனக்கண்ணில் என் பசங்க முகம் தானா வந்திடுச்சு..

Saravana Kumar MSK said...

//நாங்க ரெண்டு பேரும் இப்ப வந்துடுமா? அப்ப வந்துடுமான்னு அங்கேயே பாத்துக்கிட்டிருக்கோம்..!!! :-((//

:))))))))))))))))))))))))))

(அண்ணா, நம்ம கஷ்டத்த பார்த்து இப்படி இவன் சிரிக்கிறானென்னு நினைக்காதீங்க, ப்ளீஸ்.. படித்ததும் சிரிப்பு வந்துருச்சி..)

RR said...

//நாங்க ரெண்டு பேரும் இப்ப வந்துடுமா? அப்ப வந்துடுமான்னு அங்கேயே பாத்துக்கிட்டிருக்கோம்..!!! //
அங்க பார்த்துகிட்டே இருந்தால்லாம் வராது........... Prune Juice வாங்கி குடுத்து பாருங்க, its a home remedy for Constipation (google prune juice and find its health benefits). அப்படியும் வர மறுத்தா Glycerin suppositories அப்படின்னு ஒன்னு pharmacy 'ல விப்பாங்க, அதா வாங்கி அங்க வைங்க. (என்ன எல்லாம் ஒரு அனுபவம் தான்.........நாங்க இதெல்லாம் பண்ணிருக்கோம் இல்ல!). Glycerin suppositories பத்தி எதுக்கும் டாக்டர் கிட்ட ஒரு வார்த்த கேட்டுகோங்க.

அக்பர் said...

ரொம்ப நல்லாயிருக்கு சார்.

நாய்க்குட்டி மனசு said...

வெயில் காலம் கொஞ்சம் அப்படி இப்படி தான் இருக்கும். குடிக்கிறதுக்கு தண்ணீ நிறைய குடுங்க. I can understand the worry when the input and the output are imbalanced

RAMYA said...

ம்ம்ம்ம்... அருமை எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க? ரூம் போட்டு யோசிப்பீங்களா?

கவிதை நயத்தோடு ரிதமெடிகா ப்ளோ போகுது... மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெருசுன்னு சொல்லுவாங்க அதே போல சில வரிகளேயானாலும் அருமையான ரசனை உணர்வோடு எழுதி இருக்கீங்க..

உங்க பதிவுகளை அளவில்லா ஆணிகளால் ரொம்ப மிஸ் பண்ணிட்டேன்னுநினைக்கிறேன்:(

மொத்தத்தில் நல்ல பகிர்வு ஆதி:)

ஆதிமூலகிருஷ்ணன் said...

@RR, நாய்க்குட்டி : உங்கள் அன்பு புரிகிறது. இருப்பினும் எது, எந்த சூழலில், எதற்காக சொல்லப்படுகிறது எனவும் கொஞ்சம் பார்க்கலாம். இல்லையெனில் கவிதை அனுபவத்தை மிஸ் செய்துவிட்டு இப்படி Water, Prune, Glycerin என்று சிந்திக்க நேரலாம்.! :-))

Karthik said...

ஸப்பா இந்த ரொமான்டிக் ப்ளாக்கர்ஸ் தொல்லை தாங்கலையே! :)

விக்னேஷ்வரி said...

அழகா இருக்கு, ரசிக்கும்படி.

Hanif Rifay said...

@ஆதி

பயபுள்ள ஆயே இருக்கமாட்டேங்குது. நாங்க ரெண்டு பேரும் இப்ப வந்துடுமா? அப்ப வந்துடுமான்னு அங்கேயே பாத்துக்கிட்டிருக்கோம்..!!! :-(இதெல்லாம் கொய்ந்த வளர்புள்ள சகஜமப்பா....இதுக்குலாம் பயந்தா பொழப்ப நடத்த முடிமா பாஸ்...(அப்படின்னு நா சொல்லல சகா...எங்க அக்கா....வடிவேல் கணக்கா சொல்றாபா....)

Anonymous said...

ஸ்வீட்!!!!

ஸ்ரீவி சிவா said...

:)))))))))).
ரசிக்கும்படியான எழுத்து நடை.. நல்லாயிருக்கு

~~Romeo~~ said...

சோ ஸ்வீட் ... :)

RR said...

//இல்லையெனில் கவிதை அனுபவத்தை மிஸ் செய்துவிட்டு இப்படி Water, Prune, Glycerin என்று சிந்திக்க நேரலாம்.! :-))//

கவிதையா? அது எங்க இருக்கு?????.......சொன்னாதான தெரியும்!
---
----
okay, okay....... Jokes apart.......
----
---
கவிதை ரொம்ப அருமையா இருக்கு............அதா சொல்ல மறந்துட்டஹன்......

அமிர்தவர்ஷினி அம்மா said...

நீ என்னில் கொண்டிருக்கும் காதல் என்னிலும் தூயது என்பதை வெட்கத்தோடு ஒப்புக்கொள்கிறேன்

க்ளாஸ்....

அழகு, ரசனை, பாசம் எல்லாம் ஒருங்கே இந்தப்பதிவில்.

padma said...

ரொம்ப அழகா இருக்கு

இரசிகை said...

nice..........

SanjaiGandhi™ said...

வாவ்.. மனுஷன் வாழ்க்கையை எவ்ளோ அழகா ரசிச்சி வாழறார்யா.. எஞ்சாய் மாமு.. :)

ஆதிமூலகிருஷ்ணன் said...

அனைவருக்கும் நன்றி.

Mahesh said...

கவிதை கேட்டீங்களே ஆதி.... நம்ம கடைக்கு வரவும்.... உங்களுக்காகவே ஒரு ஸ்பெஷல் மசாலா ரோஸ்ட் ரெடியா இருக்கு... :)))))))))))) சீக்கிரம்... ஆறிடப் போகுது...

புன்னகை said...

பதிவு அருமையிலும் அருமை! ரொம்பவே ரசிச்சுப் படிச்சேன், ஒவ்வொரு வார்த்தையும் அற்புதம்! இவ்ளோ அருமையான பதிவ இத்தன நாள் படிக்காம விட்டேன்! :-(