Monday, April 26, 2010

பதிவுலக அரசியல்!

இன்னும் கண்ணன் வருவதற்கு நேரமிருக்கிறது. அதற்குள் ஒரு பதிவு போட்டாலென்ன? என்ன எழுதலாம். வழக்கமான மைல்டான பதிவுகள் தவிர சீரியஸான ஒன்றிரண்டு விஷயங்களும் எப்போதாவது எழுத வேண்டுமென்றும் பிளான் வைத்திருக்கிறேன். எழுதினால் எங்கே நீங்களும் சீரியஸாகி விடுவீர்களோ என்றுதான் பயந்துகொண்டு தள்ளிப்போட்டு வருகிறேன். அதில் ஒரு விஷயம்தான் பதிவுலக அரசியல்.

சீச்சீ.. சீரியஸ் டாபிக்கே வாணாம்.. அந்தப்பழம் புளிக்கும். ஆகவே மைல்டாகவே அந்த விஷயத்தைப்பற்றி நான் நினைப்பதைச் சொல்லிவிடுகிறேன். (சில பதிவுகளையும், பின்னூட்டங்களையும், மெயில்களையும் பார்த்தபிறகு தோன்றிய சப்ஜெக்ட் இது)

* சினிமா தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு அதி தீவிர மீடியா. மேலும் ஏராளமான பணம் புரளக்கூடிய துறை. ஆனால் நம்மூரில் எழுத்தாளர்களுக்கும் அவர்களுடைய படைப்புகளுக்கும் உள்ள வரவேற்புதான் நல்லா தெரியுமே நமக்கு. ஆகவே சிலர் தவிர்த்து பிறர் சினிமாவுக்குத்தாவுகிற வாய்ப்பைத்தான் எதிர்பார்த்துக் கிடக்கிறார்கள். அல்லது யாருக்கும் தெரியாவண்ணம் ஏங்கிக்கொள்கிறார்கள். அல்லது ச்சீ இந்தப்பழம் புளிக்கும் என்கிறார்கள். ஒருவழியாக அதை அடைந்தவர்கள் பெருமை பேசிக்கொள்கிறார்கள். காரணம் இலக்கியச்சேவையா? எந்தத்துறையிலும் வாய்க்காத அளவில் நிரம்ப நிரம்ப புகழ், நிரம்ப நிரம்ப பணம். அதில் என்ன தவறு இருக்கிறது?

* பதிவுலகம் எப்படியிருக்கிறது? பத்திரிகைகளுக்கு தாவ நேரம் பார்த்துக்கொண்டு உறுமீனுக்காக‌ போல காத்துக்கொண்டிருக்கிறது. (எனக்கு ஒரு குட்டி மீன் கிடைச்சாக்கூட போதும்). எழுத்தாளர்களுக்கு எப்படி சினிமாவோ அதைப்போலவே பதிவர்களுக்கு பிரின்ட் மீடியா. அல்லது முதலில் வில்லன், அப்புறம் ஹீரோ, அப்புறம் சிஎம் என்பது போலாகவும் இருக்கலாம். காரணம் இலக்கியச்சேவையா? முதலில் குமுதத்தில் ஐந்து பக்க சிறுகதை, பின்னர் உயிர்மையில் 200 பக்க நாவல், பின்னர் விகடனில் எட்டு பக்க பேட்டி. எப்பேர்ப்பட்ட கனவு அது. அதில் என்ன தவறு இருக்கிறது? சிலர் பிரின்ட் மீடியாவை விடவும் வலையுலகம் பிரம்மாண்டமானது. இதன் எதிர்கால சாத்தியங்கள் அளப்பறியதாக இருக்கும் என்கிறார்கள். ஊகங்களால் பயனில்லை.

* வேறெந்த கலைகளை விடவும் அதிகபட்சமாய் மக்களை அடைவதில் சினிமாவும் எழுத்தும் முன்னிற்கிறது. ஆகவேதான் அதைப்பற்றி மேலே பார்த்தோம்.ஆனால் பிற கலைகளை விடவும் எழுத்துத்துறை பற்றி மட்டும்தான் நாம் விவாதிக்க முடியும் (நாம் செய்வதைப்பற்றிதானே பேச முடியும்). மேலே "அதில் என்ன தவறு இருக்கிறது?" என்று சொன்னோமே, அது சுயநலமாக அல்லவா இருக்கிறது. அப்படியானால் இலக்கியச்சேவையை யார்தான் செய்வது. அது சுயமாக இயங்கும். சமூகத்தின் (பெரும்பாலான மக்களின்) நேர்மையான ரசனையை ஒட்டியதாகவே இலக்கியம் இருக்கமுடியும். ஒன்றை விடுத்து இன்னொன்று ஆளாகிவிடமுடியாது. சமூகத்தின் அத்தனைத் தளங்களிலிருந்தும் படைப்பாளிகள் புறப்பட்டு வந்திருக்கிறார்கள், வருகிறார்கள், வருவார்கள். அவர்கள் சமூகத்தின் ஒட்டுமொத்த ரசனையையும், இலக்கியத்தையும் தீர்மானிப்பார்கள்.

அய்யய்யோ கிரைம் நாவல் பிச்சிக்கிட்டு போகுதே?

அய்யய்யோ சுறா படம் வசூல் அள்ளுதே?

அய்யய்யோ மொக்கைப்பதிவு இப்பிடி ஹிட்டாவுதே?

((புலம்பினா ஒண்ணியும் நடக்காது. நீ மட்டும் 'என்னா ரசனை இது? நா எழுதுன பின்நவீனத்துவ கவுஜய ஒர்த்தனும் படிக்கமாட்றானுவோ'னு புலம்பிகினுருந்தா.. உன் ரசனை சராசரிக்கு உசந்தது, ஸாரிபா.. மாறுபட்டதுனு வெச்சிகோனு நா சொல்லிருவேன். உன் வேலையை மட்டும் பார். நேரம் வரும்போது பின்ந‌வீனத்துவம் தன்னால முன்னால வரும். அப்பாலயும் வந்து புதுசா 'பின்னுக்கும்பின்னாடிநவீனத்துவத்துல' ஒரு கவுஜ எழுதிவெச்சுகினு இத்த குறை சொல்லிக்கினுருப்பே..))

* எழுத்தாளர்களைப்பற்றி எழுதும் போது பொறாமை வேண்டாம். கிண்டல் வேண்டாம். எழுத்தில் தகுந்த மரியாதை தருவோம். உனக்கு பிடிக்காதா அவரை, அவரைப்பற்றி படிக்கவேண்டாம். மாற்றுக்கருத்தை மரியாதையான முறையில் தெரிவிக்கலாம். (இதையே அரசியல்வாதிகளைப் பற்றியும், பிற துறையினரையும் பற்றி எழுதும்போது கடைபிடிக்கலாம்). தகுந்த நேரம் வரும்போது நாமும் எழுத்தாளராகக்கூடும். மாறாக மாறுபட்ட சாத்தியங்களால் அவர்களைவிடவும் நாம் மேலேறிச்செல்ல அவர்கள் நம்மைப்பற்றி இதைப்போலவே எழுதவேண்டிய சூழல் ஏற்படும். இதையே சக பதிவர்களுக்கிடையேயான கருத்துமோதலிலும் கைக்கொள்ளலாம். தகாத வார்த்தைகளைக்கூறி சகதி வாரியிறைப்பதில் யாருக்கும் நன்மையில்லை. இனிய சொற்களிலும் மாற்றுக்கருத்தை தெரிவிக்கமுடியும். ஆகவே கனியிருப்ப காய்களைக்கொள்ள வேண்டாம்.

ஒரே மொக்கைப்பதிவுகளாக இருக்கிறது என்று சொன்னேனில்லையா?..

சினிமாவை எடுத்துக்கொள்ளுங்கள், ரெண்டு படம் நல்லாயிருந்தா பத்து படம் நமக்கு பிடிக்க மாட்டேங்குது. பிடிச்ச படத்திலேயும் ஏதோ பாட்டோ, சீனோ மொக்கையாக‌ போயிடுது. ஒரு இயக்குனரையே எடுத்துக்குங்க ஒரு படத்துல அள்ளிக்கொண்டு போய்விடுகிறார், இன்னொன்றில் காத்துவாங்கிவிடுகிறார். விகடன் எடுத்துக்கங்க.. ரெண்டு பகுதி நல்லாருக்குது. ரெண்டு பகுதி மொக்கையாக இருக்குது. அதுவும் யாருக்கோ பிடிக்கும். ஒரு எழுத்தாளர எடுத்துக்கங்க, ஒரு கதை இப்பிடி இன்னொன்று உண்டுமா? என்ற அளவில் இருக்கிறது. அடுத்த கதையில் பேஸ்த் அடிக்கவைக்கிறார். அதை மாதிரிதான் பதிவுலகமும் என எனக்கு பிடிக்காத பதிவுகளைப் பார்த்து க்கொள்ளும்போது நினைத்துக்கொள்கிறேன். எல்லா வலைப்பூக்களுமே சிறப்பாக இருக்கவேண்டியது என்ற அவசியமுமில்லை, ஒரே பதிவரின் எல்லா பதிவுகளும் சிறப்பாக இருக்கவேண்டும் என்ற‌ அவசியமுமில்லை.

என்னாபா இது எங்கியோ ஆரம்பிச்சு எங்கேயோ வந்திட்டேனே.? பொழச்சுப்போங்க.. இத்தோட விடுறேன்.

(டிஸ்கி :ரொம்ப முன்னாடி எழுதிய ஒரு பதிவு. நேரமின்மையால் ரிப்பீட்டாகிறது)

.

27 comments:

ராம்ஜி_யாஹூ said...

cant u/stand anything

ராஜ நடராஜன் said...

கடை காத்து வாங்குது.நான் துண்டு போட்டு உட்கார்ந்துக்கிறேன்.

ஆங்க்!அது யாரது நமக்கும் முன்னால ஒருத்தரு முண்டாசு கட்டிகிட்டு:)

சுசி said...

நல்ல வேளை நான் இப்போதான் படிச்சேன் :)

நேசமித்ரன் said...

அரசியலுக்கும் நமக்கும் ரொம்ப தூரம் பாஸ்

ஜூட்!

:)

Mahesh said...

அப்பாடி... இரு இடத்துல கூட என் கவிதையைப் பத்தி சிலாகிச்சு எழுதல.... பொழச்சுப் போங்க !!

நாய்க்குட்டி மனசு said...

தகாத வார்த்தைகளைக்கூறி சகதி வாரியிறைப்பதில் யாருக்கும் நன்மையில்லை. இனிய சொற்களிலும் மாற்றுக்கருத்தை தெரிவிக்கமுடியும்.//
WELL SAID

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

ரசித்த புலம்பல்!

:))

அகநாழிகை said...

நல்ல பதிவு.

ராமலக்ஷ்மி said...

மிக நல்ல பதிவு:)!

புதுகைத் தென்றல் said...

நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க

அன்புடன் அருணா said...

அவசியமான புலம்பல்!

தராசு said...

எதைத் தின்னா பித்தம் தெளியும்னு மாத்திரம் சொல்லீருங்க தல.

வானம்பாடிகள் said...

பதிவுலகத்தில இம்புட்டு இருக்கா?

கண்ணகி said...

ஆட்டோ ஏதாவது வந்த்தா

யுவகிருஷ்ணா said...

சிறப்பான பதிவு. நன்றி நர்சிம்!

குசும்பன் said...

// எழுத்தாளர்களைப்பற்றி எழுதும் போது பொறாமை வேண்டாம். கிண்டல் வேண்டாம். எழுத்தில் தகுந்த மரியாதை தருவோம்.//

சரிங்க ஆதீ சார்!

அப்படியேங்க செஞ்சுடுவோங்க ஆதி சார்!

நீங்கங்க ஆதிசார் சொல்லிட்டீங்கன்னாங்க சார் வேற அப்பீலுங்க சார் ஏதுங்க சார்!

(இந்த கமெண்டை டைப்பும் போது சார், பக்கத்தில் உட்காந்திருந்த பொண்ணு துப்பட்டாவை வாங்கி இடுப்பில் துண்டு போல் கட்டிக்கிட்டு டைப் செய்யுறேங்க ஆதி சார்:))

குசும்பன் said...

//ஒரு எழுத்தாளர எடுத்துக்கங்க, ஒரு கதை இப்பிடி இன்னொன்று உண்டுமா? என்ற அளவில் இருக்கிறது. அடுத்த கதையில் பேஸ்த் அடிக்கவைக்கிறார். //

சில விதிவிலக்குகளும் உண்டுங்க ஆதிசார்.

எனக்கு தெரிஞ்ச ஒரே எழுத்தாளருங்க சார் ஆதி மட்டும் தானுங்க சார். அவரை எடுத்துக்கிட்டா எல்லா பதிவுமே சூப்பர் டூப்பர் ஹிட்டுங்கதாங்க சார்.

இப்ப அண்ணாமலை யுனிவர்சிட்டியில் இவரோட பதிவுகளை ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள் அதிகம் ஆயிட்டாங்கன்னு புள்ளிவிவரம் சொல்லுதுங்க சார்.

LK said...

nalla pathivu thala ..athuvum aduthavangala vimarsanam panrathu patthi sonnenga parunga very good one

குசும்பன் said...

//* வேறெந்த கலைகளை விடவும் அதிகபட்சமாய் மக்களை அடைவதில் சினிமாவும் எழுத்தும் முன்னிற்கிறது.//

சாமியார் என்று ஒரு கலை இருக்கு பாஸ் அதில் மக்களை அடையலாம், பிடிச்ச நடிகைகளை அடையலாம் அதை ஒரு முறை ட்ரை செஞ்சு பாருங்களேன்:)))

ஆதிமூலகிருஷ்ணன் said...

அனைவருக்கும் நன்றி.

@மகேஷ் : சிலாகிச்சு வேற எழுதணுமா? ஏதாவது சொல்லிரப்போறேன். ஓடிருங்க.

@தராசு : இஞ்சி.

@யுவகிருஷ்ணா : கைதவறிடுத்தா? இல்ல நக்கல் பண்றீரா? :-)

@குசும்பன் : நீங்க சொல்ற கலை எல்லோருக்கும்தான் பிடிக்கும். ஆனா மாட்டிக்கிட்டா வாங்கிக்கட்ட ஒடம்புல தெம்பு இருக்கணும் பாஸ். :-)

KVR said...

ஏதோ சொல்ல வந்து சொல்லிட்டா நட்புகள் பாதிக்குமோன்னு ஒரு கவலையிலே குழப்படி செய்து எழுதின மாதிரி இருக்கு.

KVR said...

// யுவகிருஷ்ணா said...
சிறப்பான பதிவு. நன்றி நர்சிம்!//

நேத்து நர்சிம் பதிவுல இதே ஸ்டைல் பின்னூட்டத்தைப் பார்த்தப்போ பின்னூட்டம் தவறி வந்துடுச்சோன்னு நினைச்சேன், இப்போ இங்கே பார்க்கிறப்போ தெரியுது. தவறி வரலை ;-)

பிள்ளையாண்டான் said...

Well Said!!

அதிஷா said...

பிப்ப்பிப்பீ.. பீப்பிப்பீ.. தாம் தரிகிட தாம் தரிகிட தாம் தாம்.. பிப்ப்பீப்பீ... பிப்பபிப்பீ.. தைதை தோம் தைதை தோம்..

கார்க்கி said...

லாலாலாலான்னு போடலானு வந்தா, அதிஷா முந்திக்கிட்டாரே

ஹுஸைனம்மா said...

இப்படி உங்களையேக் குழப்பிகிட்டதுக்கு, நீங்க பேசாம, கண்ணன் வர்றவரை ஒரு தூக்கம் போட்டிருக்கலாம்!!

இரசிகை said...

poruppaa pulambiyirukkeenga:)