Monday, April 19, 2010

யட்சியும், விரலியும்

நண்பர் செல்வா தன் வீட்டுக்கு வந்து மண்பாண்டத்துக்குள் குடியேறிய 'யட்சி'யை கொசுக்களிடமிருந்து காப்பாற்றி பாதுகாத்துவருகிறார் என்பது தாங்கள் அறிந்ததே. அதைப் பார்த்ததிலிருந்து எனக்கு செல்வா மீது கடும் பொறாமை எழுந்தது. எனக்கும் ஒரு யட்சி வேண்டும் என்று முடிவு செய்தேன். ஏன் என்று கேட்கிறீர்களா? யட்சியின் பயன்கள் பற்றி கேள்வியுற்றால் இப்படிக் கேட்கமாட்டீர்கள். முடிவு செய்த படிக்கு பாவூர்சத்திரம் கோணமண்டை ஒண்டிப்புலி தாத்தா சொல்படி ஒரு யட்சியைப் பெறுவதற்கான வேலைகளில் ஈடுபட்டேன். அது நான் நினைத்தபடிக்கு அப்படியொன்றும் எளிதான வேலையாக இருக்கவில்லை.

சிங்கவல்லி பூவிதழ் மூணு, கூவிளம்பட்டை ஒரு இணுக்கு, கொடுக்காப்புளி விதை இரண்டு, குப்பைமேனி ஒரு ஈரு, பேர்சொல்லா ஒரு துண்டு, திப்பிலி விரல்நுனி இத்தனையையும் இன்னிக்கு எடுத்த கூட்டுத்தேன் ரெண்டு சொட்டையும் விட்டு, இளந்தென்னைத் தலைக்காயின் தண்ணீரைச் சேர்த்து அரைத்து ரெண்டு உருண்டையாக்க வேண்டும். அதை குட்டியூண்டு பானையில் வைத்து யாரும் பார்க்காம நடு ராத்திரியில் வீட்டு தலைவாசலில் புதைச்சு 13 நாள் கழிச்சு எடுத்து ஒன்றை நாக்கில் படாமல் விழுங்கிவிட்டு இன்னொன்றை மஞ்சத்துணியில் கட்டி அமாவாசை அன்னிக்கு ஊருக்கு தெற்கே சுடுகாட்டுக்கு போற வழியில வீசிவிட்டு வந்து விடவேண்டும். அன்னிக்கு ராத்திரியே ஒத்தை நாட்டுக்கோழி முட்டையை மஞ்சப்பூசி குளிப்பாட்டி குங்குமம் வச்சி புறவாசல் வடக்கு மூலையில் புதைச்சு வச்சுடணும். அதிலிருந்து 27வது நாள் யட்சி அந்த முட்டைக்குள் குடிவந்துவிடுவாள்.

இது விவரங்களை ஒண்டிப்புலி தாத்தா சொன்னதும் பயபக்தியுடன் விரதமிருந்து இதையெல்லாம் செய்தேன். சொன்னபடிக்கு 27 வது நாள், புதைத்துவைத்த முட்டையை தோண்டி எடுத்துப்பார்த்தால் முட்டைக்கு உள்ளே என் விரலளவுக்கு ஒருத்தி தலைவிரி கோலமாய் ஆங்காரமாய் இருந்தாள். 'அட அறிவுகெட்டப்பயலே, என்னை எதுக்கு கூப்பிட்டே?' என்று நாக்கைத்துருத்திக்கொண்டு கத்தினாள். இவள் யட்சி போல இல்லையே.. பயந்துபோய் அவள் வெளிவருவதற்குள் அங்கிருந்த ஒரு பானையை எடுத்து டப்பென்று அவள் மேல் கவிழ்த்து மூடினேன்.

பின்னர் தாத்தாவைக் கேட்டபோது அவர் கேட்ட விபரங்களைக்கூறியபின் 'அட முட்டாப்பயலே, முட்டையை ஒரு மண் கலயத்துக்குள்ளப் போட்டுதான பொதைக்கச்சொன்னேன். நீ வெறும் முட்டையை அப்படியே புதைச்சிருக்கயே.. அதான் விரலி வந்துருக்கா. பயப்புடாத, அவ யட்சிக்கு ஒண்ணுவிட்ட அக்காதான். பயங்கர கோவக்காரி. ஆனா ரொம்ப நல்லவ.. புடிச்சுப்போச்சுன்னா என்ன சொன்னாலும் செய்வா. என்ன ஒண்ணு, அவளுக்கு மண்பானையே புடிக்காது. முதலில் போய் பானையிலிருந்து எடுத்து ஏதாவது கண்ணாடிக் குடுவைக்குள் போட்டு யாரும்பாக்காம வய்யி. நாலைஞ்சு நாளு கழிச்சுப் பேச்சுக்குடு, கோவந்தணிஞ்சிருக்கும்'

அதுபடியே செய்தேன். கண்ணாடிக்குடுவை கிடைக்காமல் காலியாக இருந்த ஒரு குவார்டர் பாட்டிலில் போட்டு மூடி பீரோவுக்கு பின் புறமாய் வைத்தேன். ஆர்வத்தை அடக்கமுடியாமல் ஐந்தாவது நாள் வீட்டில் யாரும் இல்லாத போது பாட்டிலை எடுத்துப்பார்த்தால் அமைதியாகியிருந்தாள். தூங்கி எழுந்திருப்பாள் போலயிருக்கிறது. என்னைப்பார்த்ததும், 'எங்கேடா போயிட்டே? என்னா பாட்டில்டா இது? நல்லா இருக்குதே வாசம். இதுல இருந்த பானத்தை எனக்கு கொஞ்சம் தர்றீயா? இல்லைன்னா உன் மண்டையை பிடிச்சு உலுக்கிருவேன்' என்றாள். பின்னர் அவள் கேட்டதை எல்லாம் செய்தேன். பிறகு நிதானமாக 'என்ன வேணும் ஒனக்கு?' என்று கேட்டாள் விரலி.

'அதையெல்லாம் டீடெய்லா அடுத்த பதிவுல சொல்றேன். இப்போதைக்கு இந்த பதிவுக்குப் பின்னூட்டம் போடாதவங்க கனவுல போயி அவுங்க காதை கடிச்சு வைச்சுட்டு வந்துடுறியா?'

.

30 comments:

ஜீவன்(தமிழ் அமுதன் ) said...

யப்பா ..! என் காது தப்பிச்சுட்டு...!

வானம்பாடிகள் said...

குவார்ட்டர் பாட்டிலுக்குள்ள முட்டை. ரைட்டு. முட்டை பாட்டிலுக்குள்ள போச்சோ இல்லையோ பாட்டிலுக்குள்ள இருந்தது எங்க போச்சுன்னு தெரிஞ்சது. எப்புடியோ! காது தப்பிச்சா சரி. இல்லைன்னா கண்ணுமில்ல போயிடும். கண்ணாடி போடமுடியாதபடிக்கு:))

கார்க்கி said...

ஹிஹிஹிஹி

குசும்பன் said...

வீக்கெண்டில் எடக்கு மடக்கா ஏதும் செஞ்சு அடி கொஞ்சம் பலமோமோமோ தல?:))

நேசமித்ரன் said...

ஆஹா !!!!

:)

அமிர்தவர்ஷினி அம்மா said...

ரசித்துப் படித்தேன் ஆதி

நாய்க்குட்டி மனசு said...

கண்ணாடிக்குடுவை கிடைக்காமல் காலியாக இருந்த ஒரு குவார்டர் பாட்டிலில் போட்டு மூடி பீரோவுக்கு பின் புறமாய் வைத்தேன்.//
super idea to off the anger.

அறிவிலி said...

அடக்... கண்றாவியே... நீங்க ஏவிவிட்டது தெரியாம ஆபீஸ் மீட்டிங்ல லேசா கண்ணா அசந்துட்டேன்... காது போயிருச்சே...

அடுத்த வாட்டி கரெக்டா "ராத்திரி கனவு" ன்னு போடுங்க...

முகிலன் said...

நானும் தப்பிச்சுட்டன்..

தராசு said...

வர வர மொக்கைக்கு ஒரு அளவே இல்லாம போயிகிட்டிருக்கு.

என் காது தப்பிச்சிருச்சு, ஆமா இந்த விரலி பாக்கறதுக்கு ஆள் எப்படி இருப்பா??

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

இனிமே இந்த பக்கம் வந்தா உஷாரதான் இருக்கணும் போல .

செல்வேந்திரன் said...

பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காமால் எழுதிட்டேனோன்னு தோணுது :))

Saravana Kumar MSK said...

Present விரலி. காதை கடிச்சி துப்பிடாத.. :)


இரண்டாவது பத்தி (செய்முறை) கலக்கல்..

KVR said...

நான் பின்னூட்டம் போடறதா இல்லை. விரலி வரட்டும். வச்சிக்கிறேன் கச்சேரியை (நாங்கல்லாம் சத்ய்ராஜ் மாதிரி)

அன்புடன் அருணா said...

ஹாஹாஹா...அய்யய்யோ!..
ம்ம்ம் காதுக்குப் பயந்து!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி ஜீவன்.! (அந்த பயம் இருக்கட்டும்)

நன்றி வானம்பாடிகள்.! (முட்டையிலிருந்து எடுத்து உள்ளே போட்டம்யா.. என்ன கேள்வி இது? :‍)

நன்றி கார்க்கி.!

நன்றி குசும்பன்.! (ஹிஹி)

நன்றி நேசமித்திர‌ன்.!

நன்றி அமித்துஅம்மா.!

நன்றி நாய்க்குட்டி.!

நன்றி அறிவிலி.! (ஆஃபீஸ்ல தூங்குறதுக்கு தனி ட்ரீட்மென்ட் இருக்குது)

நன்றி முகிலன்.!

நன்றி தராசு.! (இது மாதிரி டபுள்மீனிங்ல கேட்டா என்ன ஆகும் தெரியுமா? ஜாக்கிரதை)

நன்றி பனித்துளி.!

நன்றி செல்வா.! (யட்சிக்கும், விரலிக்கும் போட்டி வச்சு பாப்பமா?)

நன்றி MSK.! (இப்படி குறளி வித்தையெல்லாம் காமிச்சாதான் இந்தப்பக்கம் வருவியாப்பா)

நன்றி கேவிஆர்.! (யோவ்.. பாத்து சூதானமா இருந்துக்கிடும்)

நன்றி அருணா.!

பாலா அறம்வளர்த்தான் said...

பார்த்தேன் ரசித்தேன் பின்னூட்ட மொன்றை
வார்த்தேன் காதுக்கு பயந்து!!!

☼ வெயிலான் said...

இந்த புனைவு நல்லாருக்கு ஆதி!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி அறம்வளர்த்தான்.!

நன்றி வெயிலான்.! (நீங்கள் பின்னூட்டமிடாவிட்டால் நான் என்னவென்று கொள்வது? வெளிப்படையாக சொல்லிவிட்டால் தேவலை :-))

பிள்ளையாண்டான் said...

அய்யய்யோ, மத்தியான நேரம் கொஞ்சம் அசந்துட்டேன். லேட்டாத் தான் பார்த்தேன்.

விரலி, என் காதை விட்டுடும்மா..

தாரணி பிரியா said...

விரலி யட்சி போல இல்லை .இப்படி விரலியை வெச்சு குரளி வித்தை காட்டிக்கிட்டு இருக்கிறது அதுக்கு தெரிஞ்சா உங்க காதை கடிச்சு வெச்சுடும் பாத்துகோங்க‌

நாடோடி இலக்கியன் said...

சிங்கவல்லி பூவிதழ் என ஆரம்பித்து விரலியின் எண்ட்ரிவரை சரியான விறுவிறுப்பு ஆதி.

காது சப்பித்த சந்தோஷத்தில் இலக்கியன்.

அன்புடன்-மணிகண்டன் said...

Super... :)

அமுதா கிருஷ்ணா said...

தாங்கலை...

நாடோடி இலக்கியன் said...

போன பின்னூட்டத்தில் `த` `ச` வாகிவிட்டது,கண்டுக்காதீங்க.

:)))))

பாலராஜன்கீதா said...

வாத்தியாரின் டாக்டர் ராகவானந்தம் நினைவிற்கு வந்தார்
;-)

நர்சிம் said...

நடத்துய்யா.

Anonymous said...

ப்ரஸண்ட். காது இருக்கான்னு பாத்துக்கறேன்

புதுகைத் தென்றல் said...

பின்னூட்டம் போடாட்டி காதுஇருக்காதா!!! அவ்வ்வ்வ்வ்வ்வ்

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி பிள்ளையாண்டான்.!

நன்றி தாரணி.! (எல்லா வெவரமும் எங்களுக்கும் தெரியும், சும்மா பயங்காட்டாதீக :-)

நன்றி இலக்கியன்.!
நன்றி மணிகண்டன்.!
நன்றி அமுதா.!
நன்றி பாலராஜன்கீதா.!
நன்றி நர்சிம்.!
நன்றி அம்மிணி.!
நன்றி தென்றல்.!