Thursday, April 29, 2010

ஏ.கே. கங்குலி Vs கேதன் தேசாய்

நேற்றைய நாளிதழில் முதல் பக்கத்தில் பெரிதாக கட்டம் கட்டி, முக்கியத்துவம் தரப்பட்டு ஒரு செய்தி வெளியாகியிருந்தது. எனக்கு மிகவும் ஆச்சரியம் தந்த அந்தச்செய்தி அப்படி வெளியாவதற்கான அத்தனை தகுதியும் வாய்ந்ததுதான். என் ஆச்சரியம் ஏனெனில் அதற்கு எப்படி இவர்கள் முக்கியத்துவம் தந்து முதல் பக்கத்தில் வெளியிட்டுத் தொலைத்தார்கள் என்பதுதான்.

அது மேற்கு வங்கத்தைச் சேர்ந்த, 2008ம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக சில மாதங்கள் பணியாற்றி அதே ஆண்டில் உச்சநீதிமன்ற நீதிபதியாக பணி உயர்வு பெற்றுச் சென்றுவிட்ட திரு. ஏ.கே. கங்குலியை பற்றிய செய்தி. இவர் தமக்கிருக்கும் இருதய நோய்க்காக 2008ம் ஆண்டிலிருந்தே வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்காக அடிக்கடி இவர் இங்கு வந்து சென்று கொண்டிருக்கிறார். அவர் எப்படி வந்து போகிறார்? விமானத்திலா.. ட்ரெயினிலா.. என்பது தெரியவில்லை. அந்தச்செய்தியிலும் குறிப்பிடப்படவில்லை. மேலும் அவரது வருகையின் போது அவர் தங்குவது சிஎம்சி அருகே உள்ள ஒரு லாட்ஜில். வாடகை எவ்வளவு தெரியுமா? மயக்கம் போட்டுவிடவேண்டாம்.. ரூ.125 தான். லாட்ஜிலிருந்து மருத்துவமனைக்குப்போவது நடந்தேதான்.

அவர் வந்து செல்வது பாதுகாப்புக்கான எந்த உயரதிகரிகளுக்கோ, லோக்கல் அதிகாரிகளுக்கோ தெரியவில்லை. சிகிச்சை தரும் டாக்டரிடமாவது சொன்னாரோ என்னவோ? இந்த முறை விபரம் தெரிந்து பத்திரிகையாளர்கள், வேலூர் டிஎஸ்பி ஆகியோர் காணச் சென்றபோது, ‘சொந்த வேலையாக வந்திருக்கிறேன். நீங்கள் உங்கள் வேலையைப் பார்க்கப்போகலாம்’ என்று அனுப்பி விட்டாராம்.

இந்தக் காலத்தில் இப்படியெல்லாம் ஆட்கள் இருந்தால் அதைத் தாங்கும் அளவுக்கு நமக்கு மனத்திடம் இல்லை.

(பிற்சேர்க்கை : இந்தத் தகவல் 28.04.10 தினகரன் பத்திரிகைச்செய்தியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. ஆனால் இது தவறான தகவல் என்று அறிய வருகிறோம். சென்னையில் பணிபுரிந்து, தற்போது உச்சநீதிமன்றத்தில் இருக்கும் திரு. ஏகே. கங்குலியும்.. வேலூர் சிஎம்சி வந்து செல்லும் ஓய்வுபெற்ற கொல்கத்தாவைச் சேர்ந்த நீதிபதி திரு. ஏகே. கங்குலியும் வேறு வேறு நபர்களாவர்)

~~~~~~~~~~~~~~~~

நாலு நாள் கூட ஆகவில்லை அதற்குள் 2000 கோடி லஞ்சம் வாங்கி நம்மை மலைக்கவைத்த ‘கேதன் தேசாய்’ செய்தியை ஏழாவது பக்கத்துக்கு ஒரு ஓரச்செய்தியாக தள்ளியாகிவிட்டது. இன்னும் சில தினங்களில் காணாமல் போய்விடும்.

கேதன் தேசாய் இந்திய மருத்துவக்கவுன்சில் தலைவர். இவர் லஞ்சம் வாங்கிக்குவித்தது, நாடு முழுவதும் துவக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளிடமிருந்து. அவை தகுந்த கல்விக்கூட வசதிகளைப்பெற்றிருந்தனவா? இல்லையா? எதையும் பார்க்காமல் அனைவரிடமிருந்தும் வாங்கப்பட்டிருக்கிறது. அப்படியாயின் அவை எத்தனை லட்சக்கணக்கான மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டிருக்கும்? அவர்கள் படிப்பு முடிந்ததும் எத்தனை அளவு சேவை மனதுடன் தொழில் புரிய வெளியே வருவார்கள். அவர்களின் மூலம் சிகிச்சை பெறப்போகும் மக்கள் எத்தனைக் கோடி பேர்? இந்த ‘கேதன் தேசாய்’ என்ற ஒரு மனிதனால் மட்டுமே அடுத்து வரும் 50 ஆண்டுகளுக்கு கோடிக்கணக்கான மக்களுக்கு நிகழப்போகும் அநீதி தயாராக இருக்கிறது. பிற குற்றங்களை விட லஞ்ச ஊழலில் வீச்சு மிகப்பெரியது என நான் நினைக்கிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~

எவ்வளவு பெரிய கெட்டதிலும் ஒரு நல்லது இருக்கத்தான் செய்கிறது. நித்யானந்தா வெளிநாடுகளுக்குச் செல்லும் போது செப்பு மாலைகள், செப்புக்காப்புகளுடன் போய் திரும்பி வரும்போது தங்கமாலைகள், தங்கக் காப்புகளுடன் வருவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். இந்தத் தங்கக்கடத்தல் விவகாரமாக மார்ச் 18ல் சுங்க இலாகா அவரக்கு வலை விரித்திருந்ததாம். பார்ட்டி அதற்குள் மார்ச் 2லேயே பாலியல் மற்றும் தொடர்ந்த மோசடி வழக்குகளில் சிக்கி நாறிப்போய்விட்டது. வீடியோ, யார் என கண்டுபிடியுங்கள் போட்டி, கொந்தளிப்பு, அப்டேட் தகவல்கள் என விறுவிறுப்பான நிகழ்வுக்கு முன்னால் தங்கக்கடத்தல் நமக்கு அவ்வளவு சுவாரசியமாக இருந்திருக்காதுதான்.

~~~~~~~~~~~~~~~~~~

பிடித்த விஷயங்களையும், பிடித்த நபர்களையும் தகுதிக்கு மீறி உச்சத்துக்கே கொண்டு சென்று கொண்டாடுவது நம்மிடம் இருக்கும் ஒரு பெரிய கோளாறு. ஒரு பெரிய உதாரணம் கிரிக்கெட். ஒரு விளையாட்டு என்ற தகுதியையும் மீறி போதையாக அது போனதால்தான் இவ்வளவு ஊழல், சூதாட்டம், மோசடி. இந்த ஐபிஎல்லின் தொடர்ச்சியாக நிழலுலகில் ஆயிரக்கணக்கான கோடிகளில் சூதாட்டம் நிகழ்த்தப்பட்டு தாவூத் இப்ராகிம் பல ஆயிரம் கோடிகள் குவித்திருக்கிறார். போட்டிகளின் முடிவு உட்பட அவரது கரம் நீண்டிருக்கும் என நாம் சந்தேகித்தால், அதில் ஒன்றும் தவறில்லை.

கிரிக்கெட் மீதான மோகத்தைக் கொஞ்சம் நாம் குறைத்துக்கொள்ள முன்வந்தால் இந்த மோசடிகள், ஏமாற்றுவேலைகள் குறைவதோடு, கொஞ்சம் பிற விளையாட்டுகளின் மீதும் தன்னிச்சையாக கவனம் விழ வாய்ப்பிருக்கிறது.

~~~~~~~~~~~~~~~~~~

கடந்த நான்கு வருடங்களாக இழுத்துக்கொண்டிருந்த குஷ்பு மீதான 22 வழக்குகளையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து அவரை விடுவித்திருக்கிறது. கருத்துச் சுதந்திரத்துக்கான ஒரு குட்டி மகிழ்ச்சி.

குஷ்பு சொன்னது, “தனக்கு வரப்போகும் மனைவி கன்னியாக இருக்கவேண்டும் என்று எந்த படித்த ஆணும் எதிர்பார்க்கமாட்டார்” வசதியாக இதற்கு முன்னும் பின்னுமாக அவர் சொன்ன பகுதிகள் மறக்கப்பட்டன.

இப்போது இதன் மீது நீதிபதிகள் கூறியது, “குஷ்பு தெரிவித்த கருத்துகள் ஒரு தனிப்பட்ட நபரின் கருத்துகளாகும். அதனால் யாருக்கும் பாதிப்பு நிகழ்ந்திருக்கின்றனவா? சட்டப்படி மேஜரான ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழலாம். திருமணத்துக்கு முன் உறவு கொள்வதை எந்தச்சட்டமும் தடுக்கவில்லை, அரசியல் சட்டப்பிரிவு 21 வாழ்வதற்கான உரிமையை வழங்குகிறது.”

~~~~~~~~~~~~~~~~~

தெருவில் செல்லும் அழகிய ஒரு பெண்ணை வேடிக்கை பார்க்கவும் (சைட் அடிக்க?), அவள் தமிழ் பேசும் அழகையும் கேட்க.. மறுத்துவிடாதே உடனே வா என்று சமைத்துக்கொண்டிருக்கும் தன் இல்லாளை அழைக்கிறான் காதல் கணவன்.

‘இதழில் மொய்த்தன எண்ணிலா வண்டுகள்’
வீதியில் மக்களின் விழிகளோ அவைகள்?
அவ்விதழ் அசைந்தசைந் தசைந்து கனியோடு
பிசைந்த தேன் கேள் கேள் அதனை
இசையும் தமிழும் என்றால் ஒப்பேனே!

-பாவேந்தர்

bharathidasan

(இன்று பாவேந்தரின் 120வது பிறந்தநாள்)

.

32 comments:

முகிலன் said...

//குஷ்பு சொன்னது, “தனக்கு வரப்போகும் மனைவி கன்னியாக இருக்கவேண்டும் என்றூ எந்த படித்த ஆணும் எதிர்பார்க்கமாட்டார்” வசதியாக இதற்கு முன்னும் பின்னுமாக அவர் சொன்ன பகுதிகள் மறக்கப்பட்டன//

நீங்களாவது அதைச் சொல்லியிருக்கலாம்.. :))

ஈரோடு கதிர் said...

ஏ.கே.கங்குலி பற்றிய செய்திக்கு மிக்க நன்றி

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

பாவேந்தர் கவிதை மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி !

Sabarinathan Arthanari said...

நேர்மையும், இனிமையும் கலந்த நல்ல இடுகை

நன்றி

அதிஷா said...

நல்ல பதிவு நன்றி நர்சிம்

குசும்பன் said...

//கிரிக்கெட் மீதான மோகத்தைக் கொஞ்சம் நாம் குறைத்துக்கொள்ள முன்வந்தால் இந்த மோசடிகள், ஏமாற்றுவேலைகள் குறைவதோடு, கொஞ்சம் பிற விளையாட்டுகளின் மீதும் தன்னிச்சையாக கவனம் விழ வாய்ப்பிருக்கிறது//

போங்க பாஸ்:( நீங்க ஒரு படம் ஹீரோவா நடிச்சா பலர் உங்க மேல் மோகம் கொண்டு கிரிக்கெட் மோகத்தை குறைச்சுப்பாங்க என்று நான் பல முறை சொல்லியும், இன்னும் நீங்க ஹீரோவா நடிக்காம இருக்கீங்க, இதுவே நீங்க சமூகத்துக்கு செய்யும் பெரிய அநீதி பாஸ்:((

இப்படிக்கு
ஆதி ரசிகர் பேரவை
2011 முதல்வர் முன்னோட்ட அமைப்பு

மணிஜீ...... said...

/நல்ல பதிவு நன்றி நர்சிம்//

?????

தராசு said...

இந்த கங்குலி மேட்டர் சூப்பர் தல. எல்லாரும் நிறைய படிச்சுக்க வேண்டியது. ஸ்கார்ப்பியோவில் வந்து அலப்பறை விடும் வார்டு கவுன்சிலர்களுக்கே, பிளக்ஸ் பேனர் வைத்து பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லும் தொண்டர் படை மிகுந்த இந்நாட்டில், இப்படியும் ஒரு மனிதரா என வியக்கத் தோன்றுகிறது.

2000 கோடி - இன்னும் 50 வருடத்துக்கு அதன் தாக்கம் என்பது நிச்சயமான உண்மை.

கிரிக் கெட்டுப் போய் விட்டது நைனா, வீணா டென்ஷன் ஆவாத, லூசுல விடு.

குஷ்பு - ஹூக்கும்,

பிள்ளையாண்டான் said...

ஜ‌ட்ஜ் மேட்டர் டாப்!

பாவேந்த‌ர் க‌விதை ந‌ச்!


தேசாய் விஷ‌ய‌ம் பின்னுக்கு போவ‌த‌ன் பின்னால், நிறைய‌ சூழ்ச்சிக‌ள்!
த‌னியார் ம‌ருத்துவ‌க் க‌ல்லூரிக‌ளிட‌மிருந்து வ‌ரும் விள‌ம்ப‌ர‌ வ‌ருமானம்! பெரும்பாலும், அர‌சிய‌ல்/வ‌ணிக‌ பெரும் முத‌லைக‌ள் ந‌ட‌த்தும் க‌ல்லூரிக‌ள்

ஜ‌ன‌நாய‌க‌ம்!

கார்க்கி said...

ஊழலை நான் ஆதரிக்கவில்லை. ஆனால் கிரிக்கெட்டை விட சுவாரஸ்யமான விளையாட்டு இந்தியாவில் என்ன இருக்கிரது? சொல்லுங்களேன்

அதிஷா said...

கார்க்கி நீங்க உலக கோப்பை ஹாக்கி போட்டிகள் டிவில பார்த்தீங்களா? கிரிக்கெட் பத்தாயிரம் அடி தள்ளி நிக்கணும்.. அவ்ளோ விர்விர் சுர்சுர்.. இத்தனைக்கும் ஹாக்கிய பத்தி தெரிஞ்சுக்கறது கிரிக்கெட்டை விடவும் ஈஸி!

அருள் said...

அய்யா.

ரூ. 125 வாடகையில் தங்கியது உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.கங்குலி அல்ல.

அவர் ஓய்வுபெற்ற கொல்கத்தா மாவட்ட நீதிபதி ஏ.கே.கங்குலி. பத்திரிகையாளர்களின் அவசரபுத்தியால் தவறான செய்தி வெளியாகிவிட்டது.

எப்படி இருந்தாலும், மாவட்ட நீதிபதி 25 வாடகையில் தங்குவதும், நடந்தே மருத்துவமனைக்கு போவதும் கூட வியக்க வேண்டிய செய்திதான்.

இன்னொரு கவனிக்க வேண்டிய செய்தி - கேத்தன் தேசாய் விவகாரத்தை ஆங்கில ஊடகங்கள் பெரிதாக தோண்டவில்லை. கூடுமானவரை மறைக்கவே முயற்சிக்கின்றன என்பது.

கார்ல்ஸ்பெர்க் said...

ஐயா'வா? எனக்கு கவுண்டமணி காமெடி தான் ஞாபகம் வருது :)

அன்புடன் அருணா said...

/ஆனால் கிரிக்கெட்டை விட சுவாரஸ்யமான விளையாட்டு இந்தியாவில் என்ன இருக்கிரது? சொல்லுங்களேன்/
ஹாக்கியும்,கால் பந்தாட்டமும்!
இந்தியாவில் மீடியாவினாலும் விளம்பரங்களினாலும் ஸ்வாரஸ்யமக்கப்பட்ட விளையாட்டு கிரிக்கெட்!

கார்க்கி said...

அதிஷா, அருணா மேம்,

எனக்கு கால்பந்தாட்டம் கூட பிடிக்கும். ஆனால் ஹாக்கி அவ்வளவாக கவரவில்லை. ஏனென்று தெரியவில்லை. மேலும் நான் சொல்ல வந்தததை பாதிதான் சொன்னேன். அது எந்தவறு. பார்ப்பதற்கு மட்டுமல்ல, விளையாடுவதற்கும். ஹாக்கி ஆடுவது எளிதல்ல.. கால்பந்தாட்டம் ஆடலாம்.. ஆனால் வெறும் 4, 6 பேர் வைத்தே நாஙக்ள் கிரிக்கெட் ஆடுவோம்.. ஃபிட்பால் அப்படியல்ல.

மேலும் என்னை பொறுத்தவரை cricket is sexier than girls always. :))

அதிஷா said...

மச்சி மறுபடியும் தப்பா சொல்ற.. பேஸ்கட் பால், புட்பால்லாம் இப்பவும் ஸ்கூல் பக்கம் போய்ப்பாரு நாலு பசங்க சேர்ந்து விளையாடுவாங்க..

பந்து வாங்கறதுதான் பிரச்சனையா இருக்குமே தவிர ஆட்கள் எண்ணிக்கை பிரச்சனை ஆகாது.. இன்னைக்கு அந்த பந்தும் கூட மலிவு விலைல தெருவுல கூவி கூவி விக்கறான்!

Anonymous said...

//த்யானந்தா வெளிநாடுகளுக்குச் செல்லும் போது செப்பு மாலைகள், செப்புக்காப்புகளுடன் போய் திரும்பி வரும்போது தங்கமாலைகள், தங்கக் காப்புகளுடன் வருவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்//

அது எந்த நாடுன்னு கேட்டு சொல்லுங்க. நானும் கொஞ்சம் தங்கமாலை வாங்கலாம்னு இருக்கேன் :)

இராமசாமி கண்ணண் said...

ஏ.கே.கங்குலி செய்தி நச். நன்றி.

கார்க்கி said...

மறுபடியும் நான் ஸ்கூல் படிச்ச காலத்தை மனசுல வச்சிக்கிட்டே பேசறேன்.. ஹிஹிஹி

மோகன் குமார் said...

பாரதி தாசன் பிறந்த நாளை ஞாபகம் வச்சிருக்கீங்க!!ஆச்சர்யம் !!

ஆதிமூலகிருஷ்ணன் said...

இன்னிக்கு என்ன நிறைய ராங்கு பிடிச்ச பின்னூட்டமெல்லாம் வந்திருக்குது. படிச்சமா, நல்லாருந்துதுனு பின்னூட்டம் போட்டமா, போனமான்னு இல்லாம என்ன கெட்ட பழக்கம் இது.? :-)


நன்றி முகிலன்.! (அந்த குறிப்பிட்ட இந்தியா டுடே இதழ் கூட இன்னும் பரண் மேல் கிடக்கிறது. அதெல்லாம் தேடியெடுக்கமுடியாது. நான் ஃபீல் பண்ணியதைச் சொன்னேன். அவ்வள்வுதான் :-)

நன்றி கதிர்.!
நன்றி பனித்துளி.!
நன்றி சபரிநாதன்.!

நன்றி ஜ்யோவ்ராம் சுந்தர்.!

நன்றி குசும்பன்.! (என்னிய கவுக்கிறதுக்கு நீர் ஒருத்தன் போதுமய்யா..)

நன்றி மணிஜி.! (ரெண்டு டிக்கெட்டு ராங்கு பிடிச்சு அலையுது. அதுங்க இப்பிடித்தான் பண்ணும். :-) தெரியாதா உங்களுக்கு?)

நன்றி தராசு.! (கங்குலி நியூஸ்ல தப்பு இருக்குதாமே)

நன்றி பிள்ளை.!

நன்றி கார்க்கி.! (More than a Girl' ங்கிற ஃபீல்தான் கடுப்பேத்துறது. ஏன் இப்படி லூசுத்தனமா இருக்கீங்கன்னே புரியலை. என்ன இந்த விஷயத்துல நாங்கல்லாம் மைனாரிடியாப் போனதுதான் வருத்தமா இருக்குது. 55 வயசைத்தாண்டியும் எங்க அப்பா, 85 வயசைத்தாண்டியும் தலைவர் என மிகப்பிடித்தமானவர்களே லூசா அலையும்போது என்னத்தச்சொல்ல.? ஃபுட்பால்தான் ஆண்மைத்தனமான விளையாட்டு என அடித்துச் சொல்வேன்.)

நன்றி அருள்.! (பத்திரிகைச்செய்தியை அப்படியே நம்புவதற்கு நாம் லூசு இல்லை எனினும் இது நல்ல செய்தியாக இருக்கிறதே என பகிர்ந்துகொண்டேன். சுட்டுதலுக்கு நன்றி. மேலும் தவறு இருக்குமானால் தயவு செய்து அது என்ன என்பதை விளக்குங்கள். 2008ல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர், உச்சநீதிமன்றம் சென்றவர் இருவரும் ஒருவர்தானே? அவர் கொல்கத்தாக்காரர் இல்லையா? அவர் சிஎம்சிக்கு வந்தவர் இல்லையெனில் வந்தவர் யார்? இருவர் பெயருமே சரியாக ஏகே கங்குலிதானா? மேல் தகவல் தாருங்கள்.)

நன்றி கதிர்.!
நன்றி கார்ல்ஸ்பெர்க்.!
நன்றி அருணா.!
நன்றி அம்மிணி.!
நன்றி இராமசாமி.!
நன்றி மோகன்குமார்.!

sriram said...

நீதிபதி கங்குலி பத்தின விசயத்தை பகிர்ந்தமைக்கு நன்றி, இது போன்ற, தோழர் நல்லகண்ணு போன்றோர் இன்னும் பலர் நாட்டுக்குத் தேவை.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

அருள் said...

///மேலும் தவறு இருக்குமானால் தயவு செய்து அது என்ன என்பதை விளக்குங்கள். 2008ல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர், உச்சநீதிமன்றம் சென்றவர் இருவரும் ஒருவர்தானே? அவர் கொல்கத்தாக்காரர் இல்லையா? அவர் சிஎம்சிக்கு வந்தவர் இல்லையெனில் வந்தவர் யார்? இருவர் பெயருமே சரியாக ஏகே கங்குலிதானா? மேல் தகவல் தாருங்க///

"ஏ.கே. கங்குலி" என்பதில் "ஏ.கே" தான் பெயரின் சுருக்கம். கங்குலி என்பது ஒருவகையில் சாதிப் பெயர், பெயரின் பின் இணைப்பு. எனவே, இதுபோல ஒரே பெயரில் நிரையபேர் இருப்பது வட இந்தியாவில் சாதாரணம்தான்.

இந்த ஏ.கே. கங்குலி உச்சநீதிமன்ற நீதிபதி இல்லை. கொல்கத்தா மாவட்ட நீதிபதியாக இருந்து, 2007 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றவர்.

ஆனால், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து, தற்போது உச்சநீதிமன்றத்தில் பணியற்றிவரும் ஏ.கே.கங்குலி வேறு நபர்.

பத்திரிகையாளர்களின் அவசரத்தால் ஆள்மாறாட்ட செய்தி வெளியகிவிட்டது.

இதுகுறித்து, "உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.கங்குலி விடுதியில் தங்கியிருப்பதாகத்தான் எங்களுக்கும் முதலில் தகவல் கிடைத்தது. ஆனால் காவல்துறை விசாரித்தபோதுதான் அங்கு தங்கியிருப்பது உச்சநீதிமன்ற நீதிபதி அல்ல. ஓய்வுபெற்ற கொல்கத்தா மாவட்ட நீதிபதி என்று தெரியவந்தது" என்று வேலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

விரிவான செய்திக்கு இன்றைய "தமிழ் ஓசை" நாளிதழை பார்க்கவும்.

இரசிகை said...

nalla idukai......!

thalaippu nallaayiruku:)

பாலா அறம்வளர்த்தான் said...

ஜ்யோவ்ஜிக்கு நன்றி சொல்லி இருக்கிறீர்கள் - ஆனால், அவர் வந்த மாதிரி தெரியவில்லை. அதிஷாக்கு பதிலாக பேரை மாற்றி போட்டு விட்டீர்களா? அவரும் "நன்றி நர்சிம்" என்கிறார்...

என்னமோ மாதவா ஒன்றும் புரியவில்லை:-)

செல்வேந்திரன் said...

OOPSSS...!

ச.முத்துவேல் said...

செய்திகள் தெரிஞ்சுக்கவெல்லாம் எங்க நேரம் கிடைக்கிது? குஷ்பூ விவகாரம், அடிப்படையான சில விசயங்களை, என் சந்தேகங்கள் தீர்றவகையில இப்பத்தான், இங்கத்தான் பாத்தேன். எனவே,...
வேறென்ன, நன்றிதேன்.

thalaivan said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

ஷர்புதீன் said...

:)

அமைதி அப்பா said...

நல்ல பகிர்வு.

எப்படியோ, ஒரு மாவட்ட நீதிபதியாக இருந்தவர், இவ்வளவு எளிமையாக இருப்பது நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டிய ஓன்று.

இந்த மாதிரியானவர்கள் இருப்பதால்தான், எத்தனை கேத்தன் தேசாய்கள் இருந்தாலும் இந்தியா முன்னேறுகிறது.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி ஸ்ரீராம்!
நன்றி அருள்.! (மேல் தகவல்களுக்கு நன்றி தோழரே)
நன்றி இரசிகை.!
நன்றி பாலா.! (ஹிஹி)
நன்றி செல்வா.!
நன்றி முத்துவேல்.!
நன்றி ஷர்புதீன்.!
நன்றி அமைதிஅப்பா.!

குசும்பன் said...

பாஸ் எனக்கு போர் அடிக்குது புது பதிவு போடுங்க பாஸ்:))) அட்லீஸ்ட் உங்களை கேமிராவில் வீடியோ எடுத்து குறும்படம் என்றாவது போடுங்க பாஸ்! நீங்க எழுதாம இருந்தா ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு பாஸ்!

இப்படிக்கு
ஆதி இலக்கிய பேரவை