Tuesday, May 4, 2010

பிரேக்ஃபாஸ்ட் வித் ரொமான்ஸ்

இந்தக் காலை உணவு பெரிய தொல்லையான ஒரு விஷயம். காலையில்தான் அதிகமாக சாப்பிடவேண்டும் என்று மருத்துவம் சொன்னாலும் அந்நேர பரபரப்பு, அவசரம், மற்றும் காலகாலமான பழக்கம் என அது முடிவதில்லை. பெரும்பாலும் ரமா தரும் ஹார்லிக்ஸையோ, காம்ப்ளானையோ (சுபா மொழியில் காமுலா) குடித்து விட்டு ஓடிவிடுவேன் (சேர்த்து வைத்து மதியம், மாலையில் கட்டிவிடுவேன் என்பது வேறு விஷயம்). சில நாட்களில் பொங்கல், தோசை என நாம் ரெடியாகும் முன்பே உணவு ரெடியாகிவிட்டால் வேறு வழியில்லை லேட்டானாலும் பரவாயில்லை என சாப்பிட்டுவிட்டுதான் போகவேண்டும், இல்லையெனில் பிரச்சினை வேறு மாதிரி இருக்கும் (மாலையில் ஃபிரிட்ஜில் வைக்கப்பட்ட அதே பொங்கலை சாப்பிடவேண்டி வரும்).

இப்போதைய பிரச்சினை என்னவெனில் இரண்டுக்கும் நடுவாக சில பதார்த்தங்கள் இருக்கின்றன. அவைதான் இந்த நூடுல்ஸ், உப்புமா, இடியாப்பம், புட்டு வகையறாக்கள். எனக்கு அப்புறம் எழுந்தாலும் நான் ரெடியாவதற்குள் ரமா கைங்கர்யத்தில் இவை ரெடியாகியிருக்கும். திங்கவும் முடியாமல், எஸ்கேப்பாகவும் முடியாமல் பிரச்சினைக்குரியவை இவை. இந்த ஐட்டங்கள் சுபா சாப்பிடும் அதே கிண்ணத்தில் ஸ்பூனுடன் நமக்காக மேஜையில் காத்துக்கொண்டிருக்கும். இரண்டு ஸ்பூனை விழுங்கிவிட்டு வெளியே ஓடிப்போய் பால்கனியில் அவசர அவசரமாக ஷூக்களை போட்டுக்கொண்டிருந்தால் மிச்சம் வைத்த கிண்ணத்துடன் ரமா துரத்திக்கொண்டு வந்துவிடுவார்.

நேற்று அப்படித்தான் சேரோடு கால்களை கால்களால் இடுக்கிப்பிடி போட்டு பிடித்துக்கொண்டு புட்டுக்கிண்ணத்தோடு அரஸ்ட் செய்துவிட்டார் என்னை. அது ஆஹா.. மணாளன் சாப்பிடாமல் வேலைக்குப்போகிறாரே என்ற கரிசனமா அல்லது புட்டு வீணாகிப்போகுமே என்ற கவலையா என்று கண்டுபிடிக்கமுடியாது. அப்படியே லாக் செய்த பொஸிஷனில் கிண்ணத்தை முகத்துக்கு நேரே பிடித்துக்கொண்டு ஸ்பூனால் வாய்க்குள் திணித்துவிடுவார். வேறு வழியே இல்லை, விழுங்கித்தான் ஆகவேண்டும், இல்லையானால் முகம், சட்டை, பேண்ட் என புட்டு மயமாகிவிடும். அவருக்கென்ன கவலை. திரும்ப உடை மாற்றி, லேட்டாகும் அவஸ்தை எனக்குத்தானே. சில ஸ்கூப்கள் தாடை, முகமெங்கும் ஆக அப்படியே அதையும் ஸ்பூனால் வழித்து வாய்க்குள் திணிக்கப்பட்டது. குழந்தைகளுக்கு செரிலாக்கை குழைத்து திணிக்கும் அழகை பார்த்திருக்கிறீர்கள்தானே.. கன்னம், தாடையில் வழியும் செரிலாக்கை வழித்து திரும்பவும் ஊட்டிவிடுவார்கள். அதைப்போல நடந்துகொண்டிருந்தது எனக்கும், என் கதறலையும் பொருட்படுத்தாமல். “நேழமாச்சுதுமா, காலயிலயே மீழ்ழிங் இழுக்குது போவணும்”. பக்கத்திலிருந்து சுபா உய் உய்யென்று சிரித்துக்கொண்டிருந்தான். அதானே, ‘ரெண்டு பேரும் சேர்ந்து என்னை என்ன பாடு படுத்துறீங்க தினமும்’ என எண்ணிக்கொண்டிருப்பானாயிருக்கும்.

ஒருவழியாய் சம்பவம் முடிந்த பின் அப்படியே, முந்தானை என்றால் கூட பரவாயில்லை, நைட்டியிலேயே வாயைத் துடைத்துவிட்டு “போகலாம், அல்லது இங்கேயே இருக்கலாம்” என்றவர் திடீரென என்ன தோன்றியதோ, “இந்தச் சட்டையை போடக்கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன், மரியாதையா கழற்றிவிட்டு வேற போட்டுவிட்டு போங்கள்” என்று எச்சரிக்க, நான் நேரமானதை காரணம் காட்டி எஸ்கேப்பாக முயல, டம்ளரில் மிச்சமிருந்த காம்ப்ளான் துளிகள் என் சட்டையில் விசிறப்பட்டது. என் பிடிவாதம்தான் பெரிது என்று பல சமயங்களில் கேனை மாதிரி நான் நினைப்பதுண்டு. சட்டை வெளிறிப்போய்விட்டதாம், போடக்கூடாதாம். அது எனக்குப்பிடித்த வெள்ளைச் சட்டை. போச்ச்ச்… கோபப்பட்டுக்கொண்டிருக்க இப்போது நேரமில்லை.

பின்னர் ரமாவால் எடுத்துத்தரப்பட்ட சிவப்பும், ஊதாவும் கலந்த ஒரு நிறத்தில் ஒரு சட்டையை போட்டுக்கொண்டு “பச்சை, சிவப்பு, மஞ்சள் தமிழன் நானடா..” என்று பாடிக்கொண்டே அரைமணி நேரம் தாமதமாக ஆபீஸ் சென்றடைந்தேன்.

பி.கு :

என்ன திடீர்னு இப்படி ஒரு பதிவு? மேற்கூறிய நிகழ்ச்சியை இம்சை என்று புரிபவர்கள் புத்திசாலிகள். ஆஹா.. ரொமான்ஸ் என நினைத்துக் கொண்டு, நமக்கு எப்போ ‘பொண்ணு பார்க்கப்போறாங்களோ?’ என்று ஜொள்ளுபவர்களைப் பார்த்து நான் சிரிக்கிறேன்.

.

134 comments:

Mahesh said...

அருமையான, அட்டகாசமான... புலம்பல் !!

padma said...

gifted

kavitha said...

சூப்பர் யா.......

தராசு said...

//எனக்கு அப்புறம் எழுந்தாலும் நான் ரெடியாவதற்குள் ரமா கைங்கர்யத்தில் இவை ரெடியாகியிருக்கும்//

உனக்காக எந்திருச்சு செஞ்சு குடுக்கறாங்களே, அதை நெனச்சு சந்தோஷப் படு தல.

//அது ஆஹா.. மணாளன் சாப்பிடாமல் வேலைக்குப்போகிறாரே என்ற கரிசனமா அல்லது புட்டு வீணாகிப்போகுமே என்ற கவலையா என்று கண்டுபிடிக்கமுடியாது. //

அந்த ரெண்டாவது மேட்டர் தான் கரீக்டு.

Ganesh said...

:)

தமிழ் பிரியன் said...

\\\\ஆஹா.. ரொமான்ஸ் என நினைத்துக் கொண்டு, நமக்கு எப்போ ‘பொண்ணு பார்க்கப்போறாங்களோ?’ என்று ஜொள்ளுபவர்களைப் பார்த்து நான் சிரிக்கிறேன். .\\\\

அவங்களை எல்லாம் பார்த்தா பாவமா தான் இருக்கும்ல... எனக்கு கெக்கே பிக்கேன்னு சிரிப்பு வருது.. ;-))

தமிழ் பிரியன் said...

\\\\சில ஸ்கூப்கள் தாடை, முகமெங்கும் ஆக அப்படியே அதையும் ஸ்பூனால் வழித்து வாய்க்குள் திணிக்கப்பட்டது. குழந்தைகளுக்கு செரிலாக்கை குழைத்து திணிக்கும் அழகை பார்த்திருக்கிறீர்கள்தானே.. கன்னம், தாடையில் வழியும் செரிலாக்கை வழித்து திரும்பவும் ஊட்டிவிடுவார்கள். அதைப்போல நடந்துகொண்டிருந்தது எனக்கும்,\\\\\

அப்படியே கற்பனைக் குதிரையை ஓட்டிப் பார்க்கிறேன்.. நீங்களே அமுல் பேபி மாதிரி தான் இருப்பீங்க.. ;-))

RR said...

//என்ன திடீர்னு இப்படி ஒரு பதிவு? மேற்கூறிய நிகழ்ச்சியை இம்சை என்று புரிபவர்கள் புத்திசாலிகள். ஆஹா.. ரொமான்ஸ் என நினைத்துக் கொண்டு, நமக்கு எப்போ ‘பொண்ணு பார்க்கப்போறாங்களோ?’ என்று ஜொள்ளுபவர்களைப் பார்த்து நான் சிரிக்கிறேன்.//

The grass is always greener on the other side.

RR said...

// நீங்களே அமுல் பேபி மாதிரி தான் இருப்பீங்க.. ;-))//
ஆஹா.....இதெல்லாம் உங்களுக்கே அதிகமா தெரியல்ல? :-)

philosophy prabhakaran said...

திருமணம் செய்துகொள்ளாதவர்கள் சில சந்தோஷங்களை இழக்கிறார்கள்... ஆனால் திருமணமானவர்கள் பல சந்தோஷங்களை இழக்கின்றனர் நண்பரே...

பிரசன்னா said...

அந்த சைக்கிள்ல ஏற்லாமானே பயமா இருக்கு :)

சென்ஷி said...

:)

ஈரோடு கதிர் said...

//அரைமணி நேரம் தாமதமாக/

இதுல என்னவோ உள்குத்து இருக்கிற மாதிரி தெரியுது

MANO said...

very nice

mano

கார்க்கி said...

//நமக்கு எப்போ ‘பொண்ணு பார்க்கப்போறாங்களோ?’ என்று ஜொள்ளுபவர்களைப் பார்த்து நான் சிரிக்கிறே/

ஆவ்வ்வ்


நல்ல வேளை.. நான் கதை சொல்லியிருந்தால் ஒரு சூப்பர் பதிவு மிஸ் ஆயிருக்கும் தல :)

தத்துபித்து said...

சோழர் பரம்பரையில் மேலும் ஒரு M.L.A .

☀நான் ஆதவன்☀ said...

இதை ரொமான்ஸாக எடுத்துக்கொண்டு இனி ஆக வேண்டியகாரியங்களை பார்க்கச் செல்கிறேன் :)))

வானம்பாடிகள் said...

மனுசன் ஏக்கத்த என்னமால்லாம் எழுதி தீத்துக்க வேண்டியிருக்கு.ஹூஊஊம். இத படிச்சிட்டாவது ஊட்டிவிடுவாங்களான்னு நப்பாசை.:))

குசும்பன் said...

//டம்ளரில் மிச்சமிருந்த காம்ப்ளான் துளிகள் என் சட்டையில் விசிறப்பட்டது.//

பழைய படங்களில் டீ கிளாஸை கழுவி மேல ஊத்துவாய்ங்களே அதுமாதிரியா பாஸ்???

Vidhoosh(விதூஷ்) said...

:))

KVR said...

இந்த இடை பதார்த்தங்கள் (நோ ராங் மீனிங்ஸ் ப்ளீஸ்) என்னைக்கெல்லாம் செய்யப் போறாங்கன்னு முன்னாடியே தெரிஞ்சு வச்சிக்கிட்டு முதல் நாள் நைட்டே “நாளைக்கு ஒரு early meeting இருக்கு, சீக்கிரம் போகணும்”ன்னு பிட்டப் போட்டு வைங்க. எப்படியும் ஊட்டாம விடப் போறதில்லை, கொஞ்சம் அனுபவிச்சுச் சாப்பிடலாம்ல. வூட்டுக்காரம்மா ஊட்டிவிட்டுச் சாப்பிடல்லாம் போன பிறவில வரம் வாங்கிட்டு வந்திருக்கணும் சார் (ஹ்ம்ம் இங்கே அதெல்லாம் “அது ஒரு அழகிய கனாக்காலம்” ஆகிருச்சு)

//ஆஹா.. ரொமான்ஸ் என நினைத்துக் கொண்டு, நமக்கு எப்போ ‘பொண்ணு பார்க்கப்போறாங்களோ?’ என்று ஜொள்ளுபவர்களைப் பார்த்து நான் சிரிக்கிறேன். //

பட்டுத் தான் தெரிஞ்சிப்பேன்னு அடம் பிடிக்கிறவங்களைத் திருத்த முடியாது.

ஹ்ம்ம் சொல்ல மறந்துட்டேனே, once again welcome back. அடுத்தடுத்து என்னோட பேவரிட் ஐட்டம்ஸ் இடுகைகளாகப் போட்டதற்கு ஸ்பெஷல் நன்றி

ஆதிமூலகிருஷ்ணன் said...

Thanks to Mahesh, Padma, Kavitha, Ganesh, RR, Prasanna, senshi, Kathir, Mano, Thaththupithu, vidhoosh.!

@Tharaasu : நம்ப வீட்ல எப்பிடி?

@Tamilpriyan : இவ்ளோ நாள் எங்க போனீங்க தல?

@Prabaharan : நீங்கள் புதியவரா? நம்ப கொள்கை தெரியாம கமெண்டுறீங்களே? 'எச்சரிக்கை' கொஞ்சம் கிளிக் பண்ணுங்க.

@Karki : புரியலையே

@Adhavan : லூசுங்க.. எவ்வளவு சொன்னாலும் கேட்காதுங்க..

@Vanambadigal : கரெக்டா புடிச்சுட்டீங்களே.!

@Kusumban : டாய். என்னை அசிங்கப்படுத்துறதுன்னா என்னா மகிழ்ச்சி உனக்கு?

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி கேவிஆர், நாளைக்கு ஒரு சிறுகதை வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. (ரொம்ப நாளாச்சுல்ல) எஸ்கேப்பாகிவிடுங்கள்.! :-))

ஸ்ரீவி சிவா said...

பாஸ்...
உங்க பின்குறிப்பு புரிஞ்சு போச்சு பாஸ்.
நான் புத்திசாலி...
இருந்தாலும் அவ்வ்வ்வவ்வ்வ்வவ் :(

கார்க்கி said...

நேத்து கதை ஒன்னு கேட்டிங்க இல்ல? அதை சொல்லியிருந்தா அந்த புராஜெக்ட்ல மூழ்கி இதை எழுதாம விட்டுருப்பிஙக்ளொன்னு சொன்னேன் டைரடக்கர்

மோனி said...

ஹைய்யோ ஹைய்யோ
ஜொள்ளுபவர்களைப் பார்த்து
நான் எழுந்து - விழுந்து - நடந்து - உருண்டு - பறந்து - சிரிக்கிறேன்...

henry J said...

very nice......

Free Download File Recovery | Data Recovery | Image Recovery Software
Free Slide Show & Gallery Makers
Learn Typing
CINEMA TICKETS BOOKING Online
Free youtube Video Download
Free Web Design
Free Indian Language Typing Tool
Type anywhere in your language | Google Transliterate | Microsoft Indic Language
Free Download Google Talk | Windows Live Messenger | Skype Messenger | Yahoo Messenger
Learn Basic Maths, Algebra, Trigonometry, calculus
Online Free Ebooks
Free Antivirus Download
Search Rooms, Apartments
Free Health Tips

LK said...

thalla nalla kanavu kandu irukeenga.. supera irukku

thalaivan said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

Hello

you can register in our website http://www.thalaivan.com and post your articles

install our voting button and get more visitors

Visit our website for more information http://www.thalaivan.com

நேசமித்ரன் said...

:)

Substance boss substance !!

நர்சிம் said...

//ஒருவழியாய் சம்பவம் முடிந்த பின்//

ரைட்ட்ட்ட்டு

குசும்பன் said...

வணக்கம்
நண்பரே

எம் தலைவனின் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக உம் தலைவன் தளம் உங்களுக்கு அமையுமா அதை சொல்லும் முதலில்?

எம் தலைவனின் திறமைகள் காட்டாற்று வெள்ளம் போல யாராலும் அதை தடுக்க முடியாது.
எங்கள் தலைவன் தளத்தில் பிரசுரிக்கும் அனைத்துமே சிறந்த ஆக்கங்கங்கள்தான் அதை உமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் தளத்தை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.

நன்றி
ஆதி எனும் ஒரே தலைவன் குழுமம்
http://www.aathi-thamira.com

அதிஷா said...

நல்ல பதிவு நன்றி தலைவன்

புன்னகை said...

//ஒருவழியாய் சம்பவம் முடிந்த பின்//
இதப் போய் சம்பவம்னு சொல்றீங்க? எத்தனை அழகான நிகழ்வு? U agree or not, நீங்க குடுத்து வெச்சவரு! அக்காவை திருஷ்டி சுத்தி போட சொல்லுங்க!

Anonymous said...

:)

எம்.எம்.அப்துல்லா said...

மீசையில மண்ணு ஒட்டலை.

குசும்பன் said...

//இதப் போய் சம்பவம்னு சொல்றீங்க? எத்தனை அழகான நிகழ்வு? //

வாங்கியவனுக்குதானே தெரியும் அது சம்பவமா? இல்ல அழகான நிகழ்வான்னு. நல்லா செல்றாங்கப்பா டீடெயிலு!

குசும்பன் said...

//அக்காவை திருஷ்டி சுத்தி போட சொல்லுங்க!
//

போன வாரம் தான் சுத்தி சுத்தி போட்டாங்க அந்த வீக்கமே குறையில இதுல இன்னுமா?:(((

வெண்பூ said...

//
இந்தக் காலை உணவு பெரிய தொல்லையான ஒரு விஷயம்.
//

வீட்டுல‌ சாப்புடுற‌ எல்லா வேளை உண‌வுமே அப்ப‌டித்தான் ஆதி... :)

எம்.எம்.அப்துல்லா said...

////அக்காவை திருஷ்டி சுத்தி போட சொல்லுங்க!
//

அவங்க இந்தாளையே சுத்தி போட்டுருவாங்க.

குசும்பன் said...

very niceசோ நைஸ்

Free Download File Recovery | Data Recovery | Image Recovery Software
Free Slide Show & Gallery Makers
Learn Typing
CINEMA TICKETS BOOKING Online
Free youtube Video Download
Free Web Design
Free Indian Language Typing Tool
Type anywhere in your language | Google Transliterate | Microsoft Indic Language
Free Download Google Talk | Windows Live Messenger | Skype Messenger | Yahoo Messenger
Learn Basic Maths, Algebra, Trigonometry, calculus
Online Free Ebooks
Free Antivirus Download
Search Rooms, Apartments
Free Health Tips

********
எப்படின்னே உனக்குன்னு வர்ராய்ங்க?:)) இதுக்கு எல்லாம் ஒருமொக ராசி வேண்டுமோ???

எம்.எம்.அப்துல்லா said...

//வீட்டுல‌ சாப்புடுற‌ எல்லா வேளை உண‌வுமே அப்ப‌டித்தான் ஆதி... :)

//

ரேஷியோ அடிப்படையில இது கொஞ்சம்கூட தொல்லைங்குறாரு. ஏன்னா...ஏன்னா...ஏன்னா அண்ணந்தான் டெக்னிகல் மன்னனாச்சே.

எம்.எம்.அப்துல்லா said...

//எப்படின்னே உனக்குன்னு வர்ராய்ங்க?:)) இதுக்கு எல்லாம் ஒருமொக ராசி வேண்டுமோ???

//

அதே பதிலுதான். காரணம் அண்ணன் டெக்னிக்கல் மன்னன்.

என்ன டெக்னாலஜின்னு யாராவது கேட்டீங்க டரியலாக்கிருவேன் டரியலு.

குசும்பன் said...

//ஆதிமூலகிருஷ்ணன் said...
நன்றி கேவிஆர், நாளைக்கு ஒரு சிறுகதை வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.
//

ஆஹா போச்சுடா, ஒரு சிறுகதை எழுதிட்டு அதன் பிறகு வரும் மூனு பதிவில் இதோ நான் எழுதிய சிறுகதையில் என்று பேச ஆரம்பிச்சிடுவாரே:(((

வெண்பூ said...

//
ரேஷியோ அடிப்படையில இது கொஞ்சம்கூட தொல்லைங்குறாரு. ஏன்னா...ஏன்னா...ஏன்னா அண்ணந்தான் டெக்னிகல் மன்னனாச்சே.
//

அட‌, காலையில‌யாவ‌து ஆபிஸ் போறோம்னு சொல்லி ஊட்டியே விட்டாலும் அப்ப‌டி இப்ப‌டி த‌ப்பிச்சிக்க‌லாம், ஆனா ராத்திரி நேர‌த்துல‌ என்ன‌ செய்யுற‌து????

குசும்பன் said...

//ஏன்னா அண்ணந்தான் டெக்னிகல் மன்னனாச்சே.
//

செந்தில் ஒருபடத்தில் காலுக்கு இடையில் பாம் வெச்சிக்கிட்டு ஒன்னு இரண்டு மூனு சொல்லும் பொழுதே பாம் வெடிச்சிடுமே அப்ப சொல்லுவாரே டெக்னிக்கல் பால்ட் அதுமாதிரியே இதுவும் டெக்னிக்கலா அண்ணே?

வெண்பூ said...

//
ஆஹா போச்சுடா, ஒரு சிறுகதை எழுதிட்டு அதன் பிறகு வரும் மூனு பதிவில் இதோ நான் எழுதிய சிறுகதையில் என்று பேச ஆரம்பிச்சிடுவாரே:(((
//

அது ம‌ட்டுமில்லாம‌, அதுக்கு பின்னூட்ட‌ம் போட‌லைன்னா வேற‌ கோச்சுக்குவாரு.. அட்வான்சா எதுனா பின்னூட்ட‌ம் போடுற‌ ஆப்ஷ‌ன் இருக்காப்பா????

எம்.எம்.அப்துல்லா said...

//அட‌, காலையில‌யாவ‌து ஆபிஸ் போறோம்னு சொல்லி ஊட்டியே விட்டாலும் அப்ப‌டி இப்ப‌டி த‌ப்பிச்சிக்க‌லாம், ஆனா ராத்திரி நேர‌த்துல‌ என்ன‌ செய்யுற‌து????

//

புட் பாய்ஸன்னு சொல்லி பத்து நாள் தப்பிக்க வேண்டியதுதான் :)

குசும்பன் said...

//ஆனா ராத்திரி நேர‌த்துல‌ என்ன‌ செய்யுற‌து????
//

ஒரு வயசு பையன்கிட்ட கேட்கும் டவுட்டாய்யா இது?? வெண்பூ நீர் ஒரு மங்குனி என்பதை மணிக்கொரு முறை நிருப்பிக்கிறீர்:))))

எம்.எம்.அப்துல்லா said...

//அது ம‌ட்டுமில்லாம‌, அதுக்கு பின்னூட்ட‌ம் போட‌லைன்னா வேற‌ கோச்சுக்குவாரு //

அட கோவுச்சுக்கிட்டாலும் பரவாயில்லை. எங்கயாவது பார்த்தா மூஞ்சியத் தூக்கி வேற வச்சுகிறாரு.

வெண்பூ said...

//
புட் பாய்ஸன்னு சொல்லி பத்து நாள் தப்பிக்க வேண்டியதுதான் :)
//

ஃபுட் பாய்ச‌ன் ஆக‌லாம்.. ஆனா பாய்ச‌னே ஃபுட்டானா எங்க‌ போயி சொல்லுற‌து அப்துல்லா, எங்க‌ போயி சொல்லுற‌து?????

எம்.எம்.அப்துல்லா said...

//ஒரு வயசு பையன்கிட்ட கேட்கும் டவுட்டாய்யா இது??

//

என்னை பையன் என்று அறிவித்து மனம் குளிரச் செய்த சிறுவன் குசும்பனுக்கு நன்றி :)

வெண்பூ said...

//
என்னை பையன் என்று அறிவித்து மனம் குளிரச் செய்த சிறுவன் குசும்பனுக்கு நன்றி :)
//

ங்கா..ங்கா..... ங்கா..ங்கா.....

எம்.எம்.அப்துல்லா said...

//வெண்பூ நீர் ஒரு மங்குனி என்பதை மணிக்கொரு முறை நிருப்பிக்கிறீர்:))))

//

எல்லாம் அவர் உங்களிடம் கற்றதுதான் மன்னா!

குசும்பன் said...

//அது ம‌ட்டுமில்லாம‌, அதுக்கு பின்னூட்ட‌ம் போட‌லைன்னா வேற‌ கோச்சுக்குவாரு.. அட்வான்சா எதுனா பின்னூட்ட‌ம் போடுற‌ ஆப்ஷ‌ன் இருக்காப்பா????
///

ஆதி நீங்க வழக்கமாக எழுது சிறுகதையை விட இது வித்தியாசமாக இருந்தது!

ஆதியின் டச் கலக்கல்

ஆதி உங்களை தவிர இப்படி ஒரு சிறுகதையை யாரும் எழுத முடியாது!

ஆதி இப்படி அடிக்கடி சிறுகதை எழுதுங்கள்!

ஆதி விரைவில் புத்தகம் போட வாழ்த்துக்கள்! (இப்ப மட்டும் என்னா வீடு வீடா பேப்பரா போடுறார்?)

எம்.எம்.அப்துல்லா said...

//ஆதி நீங்க வழக்கமாக எழுது சிறுகதையை விட இது வித்தியாசமாக இருந்தது!

//


ஏன் பிரஞ்ச்சுல எழுதுனாரா??//

ஆதியின் டச் கலக்கல்

//


அவர் ஓவியரா? பெயிண்டரா??//ஆதி உங்களை தவிர இப்படி ஒரு சிறுகதையை யாரும் எழுத முடியாது!

//

அவ்வளவு கேவலம்


//ஆதி இப்படி அடிக்கடி சிறுகதை எழுதுங்கள்!

//

பலபேரை பழிவாங்க வேண்டி இருக்கு.அதுக்கெல்லாம் உங்க கதையைதான் படிக்க சொல்றேன்.

//ஆதி விரைவில் புத்தகம் போட வாழ்த்துக்கள்! (இப்ப மட்டும் என்னா வீடு வீடா பேப்பரா போடுறார்?)

//

இல்லை பேப்பரை வீடுவீடா போடுறாரா??

குசும்பன் said...

இன்னைக்கு அவரு பதிவை திறந்ததும் நம்ம பதிவுக்கு 100 கமெண்டா என்று சந்தோசத்தில் மவுசை உருட்டிக்கிட்டு கீழே வருவாரு, வந்து பார்த்தா மூனு மொன்னைங்க செஞ்ச வேலை இது என்றதும் அவர் மூஞ்சு எப்படி இருக்கும் என்று யோசிக்கிறேன்... எனக்கு சிப்பு சிப்பா வருது:)))))

எம்.எம்.அப்துல்லா said...

//எனக்கு சிப்பு சிப்பா வருது:)))))


//

அதுக்கு அப்புறம் அந்தாளு நம்மளை நினைச்சு வாயால சிரிக்க மாட்டான்.

வெண்பூ said...

//
வந்து பார்த்தா மூனு மொன்னைங்க செஞ்ச வேலை இது என்றதும் அவர் மூஞ்சு எப்படி இருக்கும்
//

எப்ப‌வும் போல‌தான்.... ஹி..ஹி.. அவ‌ரு ஃபேஸ் க‌ட் அப்ப‌டி... :)

எம்.எம்.அப்துல்லா said...

யோவ் வெண்பூ என்ன திடீர்னு சைலண்ட் ஆயிட்டீரு?? மதியம் உண்ட மயக்கம்???

வெண்பூ said...

//
ஆதி விரைவில் புத்தகம் போட வாழ்த்துக்கள்
//

"உங்க‌ள் ச‌ந்தோச‌த்தைத் தொலைக்க‌ நூறு வ‌ழிக‌ள்"

உள்ள‌ ஒரே மேட்ட‌ர் க‌ல்யாண‌ம்தான் இருக்கும்... :)

இராமசாமி கண்ணண் said...

ஹா. ஹா. நல்லா இருக்கு இந்த ரொமன்ஸ். என்ஜாய் மாடி.

வெண்பூ said...

//
ஹா. ஹா. நல்லா இருக்கு இந்த ரொமன்ஸ். என்ஜாய் மாடி.
//

ஆமாங்க‌, அவ‌ரு வீடு மாடில‌ தான் இருக்கு... :)

எம்.எம்.அப்துல்லா said...

//உள்ள‌ ஒரே மேட்ட‌ர் க‌ல்யாண‌ம்தான் இருக்கும்... :)

//


மேட்டரை நினைச்சுதான் கல்யாணம்.ஆனா அப்புறம் மேட்டர் இருக்காதுங்குறதை நல்லா விளக்கமா சொல்லுவாரு ஆதி அண்ணாத்த :))

குசும்பன் said...

//அவ‌ரு ஃபேஸ் க‌ட் அப்ப‌டி... :)//

படையப்பாவில் பெண்களை பற்றி ரஜினி சொல்வது போல் இவரு பேஸ் கட்டுக்கு சும்மா கும்மு கும்முன்னு கும்மனும் என்று தோனும் போல!

Joseph said...

ஆதி அண்ணா,
இது என்னைக்கு நடந்த சம்பவம்?
ஒரு நாள் மட்டும் நடந்துச்சா இல்ல டெய்லி நடக்குதா?

சீக்கிரம் பதில் சொல்லுங்க.

குசும்பன் said...

//இராமசாமி கண்ணண் said...
என்ஜாய் மாடி.///

கண்ட கண்ட இடத்தில் என் ஜாய் கூடாதுய்யா ராசா! ரூம்முக்குள்ளேயே கேமிரா வருது ஜாக்கிரதை:)))

வெண்பூ said...

//
ஆதி அண்ணா,
இது என்னைக்கு நடந்த சம்பவம்?
ஒரு நாள் மட்டும் நடந்துச்சா இல்ல டெய்லி நடக்குதா?
சீக்கிரம் பதில் சொல்லுங்க.
//

தின‌மும் ந‌ட‌க்கும், ஆனா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தினுசா... நாளைக்கு காலையில‌ எப்ப‌டி இருக்கும்னு க‌ணிக்க‌ முடிந்த‌வ‌ன் முக்கால‌மும் உண‌ர்ந்த‌ ஞானி... (ம்ஹீம் அவ‌ரு இல்லை)

எம்.எம்.அப்துல்லா said...

//என்ஜாய் மாடி.///

அப்படின்னா மேலேன்னு எடுத்துக்கலாமா??

அளவில்லா டவுட்டுடன்,
அப்துல்லா

குசும்பன் said...

//Joseph said...
சீக்கிரம் பதில் சொல்லுங்க.
//

எல்லா கமெண்டுக்கும் தனிதனியா பதில் சொல்லுவாறு:)))

எம்.எம்.அப்துல்லா said...

//ஒரு நாள் மட்டும் நடந்துச்சா இல்ல டெய்லி நடக்குதா //

சம்பவம் ஒருநாளு. டார்ச்சர் டெய்லி. யோவ் இதுக்கெல்லாம் என்ன கோனார் உரையா போட முடியும்?? அண்டர்வேர்???

எம்.எம்.அப்துல்லா said...

// நர்சிம் said...
//ஒருவழியாய் சம்பவம் முடிந்த பின்//

ரைட்ட்ட்ட்டு

//

நர்சிம் இதைத் தவிர வேற எதாவது கமெண்ட்டு போட்டு யாராவது பார்த்திருக்கீங்களா???

வெண்பூ said...

//
எல்லா கமெண்டுக்கும் தனிதனியா பதில் சொல்லுவாறு
//

ஆமாமா.. அதுவும் இன்னிக்கே ப‌தில் சொல்லுவாரு.. அத‌னால வீட்டுக்கு போகுற‌துக்கு நைட் ஒரு ம‌ணி ஆனாலும் ச‌ரி, வீட்டுல‌ பூரிக்க‌ட்டை, க‌ர‌ண்டி, துடைப்ப‌த்துல‌ அடி வாங்குனாலும் ச‌ரி, ப‌தில் சொல்லியே ஆவாரு...

வெண்பூ said...

//
நர்சிம் இதைத் தவிர வேற எதாவது கமெண்ட்டு போட்டு யாராவது பார்த்திருக்கீங்களா???
//

ரைட்டு...

எம்.எம்.அப்துல்லா said...

// padma said...
gifted

//

// kavitha said...
சூப்பர் யா.....

//


ஒரு மனுசன் கஷ்டப்பட்டா இந்த பொம்பளப் புள்ளையளுக்கு எவ்வளவு சந்தோசம் பாருங்க மக்களே!!

எம்.எம்.அப்துல்லா said...

//.. அத‌னால வீட்டுக்கு போகுற‌துக்கு நைட் ஒரு ம‌ணி ஆனாலும் ச‌ரி, வீட்டுல‌ பூரிக்க‌ட்டை, க‌ர‌ண்டி, துடைப்ப‌த்துல‌ அடி வாங்குனாலும் ச‌ரி, ப‌தில் சொல்லியே ஆவாரு...

//

ஆமா..ஆமா.. அவரு பெரிய மானஸ்தன். அடி வாங்குவாரே தவிர ஒருநாளும் அழுததில்லையே!!

வெண்பூ said...

//
ஒரு மனுசன் கஷ்டப்பட்டா இந்த பொம்பளப் புள்ளையளுக்கு எவ்வளவு சந்தோசம் பாருங்க மக்களே!!
//

அவ‌ங்க‌ எப்ப‌வுமே இப்ப‌டித்தான் எச‌மான்.. அடிச்சிகிட்டே இருப்பாங்க‌, இதுக்கெல்லாம் ப‌ய‌ந்தா குடும்ப‌ம் ந‌ட‌த்த‌ முடியுமா?

வெண்பூ said...

//
ஆமா..ஆமா.. அவரு பெரிய மானஸ்தன். அடி வாங்குவாரே தவிர ஒருநாளும் அழுததில்லையே!!
//

க‌ரிக்கிட்டு... அவ‌ரு புல‌ம்புவாரு, ஆனா அழ‌மாட்டாரு...

குசும்பன் said...

//ப‌தில் சொல்லியே ஆவாரு...//

சொல்லாவிட்டால் அதன் பிறகு கமெண்ட் வரவே வராதுன்னு நாம சொல்லியா அவரு புரிஞ்சுப்பாரு?:)))

வெண்பூ said...

//
திங்கவும் முடியாமல், எஸ்கேப்பாகவும் முடியாமல் பிரச்சினைக்குரியவை இவை.
//

எல்லா ஐட்ட‌முமே அப்ப‌டித்தானே... ஓ, ம‌த்த‌தெல்லாம் இவ‌ரே ச‌மைச்ச‌தா இருக்கும், இது ம‌ட்டும் வீட்டுல செய்வாங்க‌ போல‌...

வெண்பூ said...

//
சுபா சாப்பிடும் அதே கிண்ணத்தில் ஸ்பூனுடன் நமக்காக மேஜையில் காத்துக்கொண்டிருக்கும்
//

நானெல்லாம் வீட்டுல‌ ஏன் நாய் வள‌ர்த்துற‌து இல்லைன்னு இப்ப‌வாவ‌து புரிஞ்சா ச‌ரி....

எம்.எம்.அப்துல்லா said...

// தத்துபித்து said...
சோழர் பரம்பரையில் மேலும் ஒரு M.L.A

//

ஆதி சோழர் பரம்பரையில் மேலும் ஒரு அமைச்சர் :))

Joseph said...

//அவ‌ங்க‌ எப்ப‌வுமே இப்ப‌டித்தான் எச‌மான்.. அடிச்சிகிட்டே இருப்பாங்க‌, இதுக்கெல்லாம் ப‌ய‌ந்தா குடும்ப‌ம் ந‌ட‌த்த‌ முடியுமா? //

வெண்பூ பேசுற பார்த்தா அடி பலமா இருக்கும் போல.
ஹ்ம்ம் வீட்டுக்கு வீடு வாசபடிதான்

வெண்பூ said...

//
பச்சை, சிவப்பு, மஞ்சள் தமிழன் நானடா..”
//

"ஒரு சூறாவ‌ளி கிள‌ம்பிய‌தே" பொருத்த‌மா இருக்குமே...

குசும்பன் said...

//சோழர் பரம்பரையில் மேலும் /

1001 சோழர் பரம்பரை மாதிரியா பாஸ்?

எம்.எம்.அப்துல்லா said...

//சொல்லாவிட்டால் அதன் பிறகு கமெண்ட் வரவே வராதுன்னு நாம சொல்லியா அவரு புரிஞ்சுப்பாரு?:)))

//

யோவ் அவரு உன்னைய மாதிரி என்னைய மாதிரியா?? தாமிரபரணி தண்ணியக் குடுச்சு வளந்த மனுஷன். நாகரீகம் தெரிஞ்ச ஆளு.மதிச்சு இத்தனை பின்னூட்டம் போட்டுருக்கோம்.பதில் மரியாதைக்கி தனித் தனியா பதில் சொல்லுவாரு.

குசும்பன் said...

//தாமிரபரணி தண்ணியக் குடுச்சு வளந்த மனுஷன். //

மிக்சிங் ???

எம்.எம்.அப்துல்லா said...

//வெண்பூ பேசுற பார்த்தா அடி பலமா இருக்கும் போல.

//

சோசப் அங்கயெல்லாம் அடிதான். எனக்கு தலையில கல்லையே போட்டுற்றாய்ங்க.

வெண்பூ said...

//
வெண்பூ பேசுற பார்த்தா அடி பலமா இருக்கும் போல.
ஹ்ம்ம் வீட்டுக்கு வீடு வாசபடிதான்
//

ஜோச‌ப்பு... ஒன்னையெல்லாம் நென‌ச்சா என‌க்கு பாவ‌மா இருக்கு.. நாங்க எல்லாம் எவ்வ‌ள‌வு வாங்கிட்டும் எப்ப‌டி இருக்கோம்.. சிட்டி, செங்க‌ல்ப‌ட்டு, ச‌வுத் ஆற்காடு, நார்த் ஆற்காடு, எஃப் எம் எஸ் வ‌ரைக்கும் பாத்த‌விங்க‌.... ம்ம்ம்ம்.. தெரியாம‌ பேச‌க்கூடாது...

குசும்பன் said...

//வெண்பூ பேசுற பார்த்தா அடி பலமா இருக்கும் போல.
//

சண்டையில் கிழியாத சட்டை எங்க இருக்கும்?

எம்.எம்.அப்துல்லா said...

குசும்பன் said...
//தாமிரபரணி தண்ணியக் குடுச்சு வளந்த மனுஷன். //

மிக்சிங் ???

//

யோவ் லூசு.. சரக்குக்கே தாமிரபரணி தண்ணிதான் மிக்சிங்ன்னு சொன்னேன்.

எம்.எம்.அப்துல்லா said...

90 தாண்டிருச்சு. இனி ஒரு புள்ள டக்கு டக்குனு கமெண்ட் போடாது. 100 அடிக்க ரகசியமா பதுங்கிரும் :)

எம்.எம்.அப்துல்லா said...

93

எம்.எம்.அப்துல்லா said...

94

வெண்பூ said...

//
சண்டையில் கிழியாத சட்டை எங்க இருக்கும்?
//

எங்க‌யும் கிடையாது... ஜில்லுன்னு ஒரு காத‌ல் ப‌ட‌த்துல‌ வ‌டிவேலு செய்யுற‌ மாதிரி அடிச்சி முடிச்ச‌ உட‌னே ச‌ட்டை வேட்டிய‌ மாத்திட்டு த‌லைய‌ சீவிவிட்டு ப‌வுட‌ர் போட்டுகிட்டு கிள‌ம்பிட‌ வேண்டிய‌துதான்...

எம்.எம்.அப்துல்லா said...

95

வெண்பூ said...

நாங்க‌ எல்லாம் நூறு அடிக்க‌ என்ன‌ வேணும்னா செய்யுவோம்..

குசும்பன் said...

// எம்.எம்.அப்துல்லா said...
93
// நோ நம்பரிங்க! இட்ஸ் நாட் குட்:))

வெண்பூ said...

100

எம்.எம்.அப்துல்லா said...

98

வெண்பூ said...

அட‌ப்பாவிக‌ளா...

குசும்பன் said...

ஆமா இங்க டெண்டுல்கர் விளையாடுறாரு 100 அடிக்க பம்ம போறாய்ங்க!

வெண்பூ said...

//
வெண்பூ said...
அட‌ப்பாவிக‌ளா...
//

//
100 Comments
//

வெற்றி.. வெற்றி...

எம்.எம்.அப்துல்லா said...

ஹையா நான் 98 னு போட்ட பின்னூட்டம்தான் 100 :)))

டேய் அப்துல்லா! வருஷம் பல ஆனாலும் இன்னும் ஃபார்ம்லதாண்டா இருக்க :)

குசும்பன் said...

//வெண்பூ said...
நாங்க‌ எல்லாம் நூறு அடிக்க‌ என்ன‌ வேணும்னா செய்யுவோம்..
//

ஆதி 90 அடிச்சா என்னா வேணுமுன்னாலும் செய்வார்:)))

வெண்பூ said...

//
ஆமா இங்க டெண்டுல்கர் விளையாடுறாரு 100 அடிக்க பம்ம போறாய்ங்க!
//

குசும்பா.. அப்துல்லா புரிஞ்சுட்ட‌ அள‌வுக்கு நீயி என்ன‌ய‌ புரிஞ்சுக்க‌ல‌யே... :)

குசும்பன் said...

//டேய் அப்துல்லா! வருஷம் பல ஆனாலும் இன்னும் ஃபார்ம்லதாண்டா இருக்க :)
//

ஆமான்னே இன்னுமும் ஒருங்கா 1,2,3 கூட தெரியாம இருக்க::)

குசும்பன் said...

108 புள்ளையாருக்கு விசேசமான நம்பர்!

ஆதி டன்!

எம்.எம்.அப்துல்லா said...

//ஆதி 90 அடிச்சா என்னா வேணுமுன்னாலும் செய்வார்:)))

//


அவராவது 90 அடிச்சாதான் என்ன வேணும்னாலும் செய்வாரு. ஆனா வெண்பூ அண்ணே 90 ஐ மோந்தாலே என்ன வேணும்னாலும் செய்வாரு. தெர்யும்ல??

வெண்பூ said...

ந‌ல்லா பாருங்க‌ அப்துல்லா.. என்னோட‌ அட‌ப்பாவிக‌ளா க‌மென்ட்டுதான் 100... தெரிய‌லைன்னா ஹிபா பாப்பாட்ட‌ ஒண்ணு ரெண்டு மூணு எண்ணுற‌துக்கு க‌த்துகுங்க‌... ஹைய்யோ, ஹைய்யோ...

எம்.எம்.அப்துல்லா said...

//108 புள்ளையாருக்கு விசேசமான நம்பர்!

/

அப்ப வெண்பூவுக்கும் விசேஷமான நம்பராத்தான் இருக்கும் :))

வெண்பூ said...

//
ஆனா வெண்பூ அண்ணே 90 ஐ மோந்தாலே என்ன வேணும்னாலும் செய்வாரு
//

அட‌, 90ன்னு எழுதி அதை மோந்தாலே நானெல்லாம் ஃப்ளாட் ஆகிடுவேன்.. என்னைப்போயி ஆதிகூட‌ க‌ம்பேர் ப‌ண்ணி.... அப்துல்லா.. என்னை எங்கியோ கொண்டு போயிட்டீங்க‌ளே...

எம்.எம்.அப்துல்லா said...

ஹையோ வெண்பூ அண்ணே ஒழுங்க எண்ணுனே.வயசானதுல கேமராவும் அவுட்டா???

வெண்பூ said...

நோ.. நோ... திஸ் கும்மி ஒன்ல்லி ஃபார் கும்மியிங் ஆதி.. மீ கும்மிங் நெக்ஸ்ட் திரி ஓகே...

வெண்பூ said...

//
ஹையோ வெண்பூ அண்ணே ஒழுங்க எண்ணுனே.வயசானதுல கேமராவும் அவுட்டா???
//

இப்போது குசும்ப‌ன் தீர்ப்பு சொல்லுவார்...

அப்துல்லா: ஏன்யா உன‌க்கு தீர்ப்பு சொல்லுற‌துக்கு அவ‌ந்தானா கெட‌ச்சான்?

எம்.எம்.அப்துல்லா said...

அப்ப 100 வது கமெண்ட் யாரோடதுங்குற தீர்ப்பை யாரு சொல்லுவா???

Joseph said...

அப்து அண்ணா,
உங்களுக்கு தலையில கல்லு இல்ல மலையவே தூக்கி போட்டாலும் நான் கேட்க முடியாது பாருங்க. அத நான் நம்பவும் மாட்டேன் .

வெண்பூ said...

//
குசும்பன் said...
108 புள்ளையாருக்கு விசேசமான நம்பர்!

ஆதி டன்!
//

ஆதி ட‌ன் க‌ண‌க்குல‌ வெயிட் இருப்பாருன்னு சொல்றீங்க‌ளா குசும்பன்.. நோ.நோ.. சில‌ நூறு கிலோக்க‌ள்தான் இருப்பாரு...

எம்.எம்.அப்துல்லா said...

// Joseph said...
அப்து அண்ணா,
உங்களுக்கு தலையில கல்லு இல்ல மலையவே தூக்கி போட்டாலும் நான் கேட்க முடியாது பாருங்க. அத நான் நம்பவும் மாட்டேன் .

//:))))))))))

குசும்பன் said...

அப்துல்லாவின் 98ன்னு போட்டு இருப்பதுதான் 100வது கமெண்ட்!

வெண்பூ said...

ச‌ரிப்பா... போதும்.. ந‌ம்ம‌ ஆபாச‌ த‌லைவ‌ர் வ‌ந்து இந்த‌ 118 க‌மென்ட்டுக்கு த‌னித்த‌னியா ப‌தில் போட‌ட்டும்.. அப்புற‌மா நாம‌ க‌ன்டின்யூ ப‌ண்ண‌லாம்..

எம்.எம்.அப்துல்லா said...

// குசும்பன் said...
அப்துல்லாவின் 98ன்னு போட்டு இருப்பதுதான் 100வது கமெண்ட்!

//


தீர்ப்பு நன்றி நாட்டாமை

ஸ்வாமி ஓம்சைக்கிள் said...

உரையாடல் கவிதை போட்டியில் வெற்றி பெற்றவர்கள் எனது தேர்வு
http://omcycle.blogspot.com/2010/05/blog-post.html

எம்.எம்.அப்துல்லா said...

’’பிரேக்ஃபாஸ்ட் வித் ரொமான்ஸ்" என்ற இந்த காவியத்தை உலகப்படமாக்கி விடாமல் வெற்றிப்படமாக்கிய அனைவருக்கும் நன்றி.பை.பை.

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஸ்ரீவி, கார்க்கி (புரிந்துவிட்டது), மோனி, ஹென்றி, எல்கே, தலைவன் குழுமம், நேசமித்திரன், நர்சிம், குசும்பன், அதிஷா, புன்னகை, அம்மிணி, அப்துல்லா, வெண்பூ, இராமசாமி, ஜோஸஃப் மற்றும் ஸ்வாமி ஓம்சைக்கிள் (யாருபா அது சொல்லிருங்க, நம்மாளுங்க மாதிரிதான் தெரியுது).. அனைவருக்கும் நன்றி.

ஆதிமூலகிருஷ்ணன் said...

உண்மையில் பின்னூட்ட எண்ணிக்கையைப் பார்த்து ஷாக்காகி விட்டேன். திருப்பவும் கணேஷ் யாராவது கிளம்பிட்டாங்களான்னு.. அழிச்சுக்கூட தொலையமுடியாதேன்னு குப்புன்னு அழுகையே வந்துவிட்டது. கொஞ்சம் யாருன்னு பார்த்தபிறகுதான் மூச்சே வந்தது. :-)

என்ன தன்னால சேர்ந்த கூட்டமா? இல்ல போன்ல ஆள்புடிச்சி நடத்துனீங்களா? யாரு வேல இது.? எவ்ளோ நாளாச்சி இது மாதிரி விளையாடி? அது ஒரு கனாக்காலம்.! ஹூம்.

இந்த அழகில் நான் வந்து எப்படியெல்லாம் சிந்திப்பேன்னு வேற சிந்திச்சு கும்மியடிச்சுருக்கீங்க.? சரிதான்.

மூணு பேரும் நல்லாவே இருங்க..!

ஷர்புதீன் said...

:)

நாடோடி இலக்கியன் said...

ரசித்தேன்.

ஃபாஸ்ட் ரொமான்ஸ் படுசுவாரஸ்யம்.

பி.கு ஹா ஹா.

புதுகைத் தென்றல் said...

ஊருக்கு போனதால லேட்டா வந்து பாத்தா 128 கமெண்ட். ரமா செய்வதை ரசிச்சாலும் திருமணமாகதவர்களுக்கான் எச்சரிக்கைன்னு அதையே பதிவா போடுறீங்க. ம்ம்ம்

இரசிகை said...

:)

மங்களூர் சிவா said...

பின்னூட்டத்தை படிச்சி ரசிச்சு பதிவுல என்ன படிச்சேன்னே மறந்துட்டேன்!

Palay King said...

congrats to those three peoples..
i read all of theriy comments

nice..

then post too

அமுதா கிருஷ்ணா said...

அருமை..சூப்பர்...கலக்கல்..அட்டகாசம்..

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி ஷர்புதீன்.!
நன்றி இலக்கியன்.!
நன்றி தென்றல்.!
நன்றி இரசிகை.!
நன்றி மங்களூர்.!
நன்றி பாளை கிங்.!
நன்றி அமுதா.!

மீண்டும் அப்துல், குசும்பன், வெண்பூ கூட்டணிக்கு.. அரைமணி நேரம் கும்மியடிச்சு கடைசியில பதிவ டம்மியாக்கிட்டிங்களேய்யா.!